யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும்

Recommended Posts

அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும்

மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:13 Comments - 0

‘நல்லாட்சி’ என்ற அடைமொழியுடன் ஆட்சிக்கு வந்த, ஒன்றிணைந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம், முடிவடையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், மீண்டும் அரசமைப்புத் திருத்தம்; அதனூடான இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டம், அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுகள் சூடுபிடித்திருக்கின்றன.   
இவ்வாறிருக்கையில், அரசமைப்புத் தொடர்பாக, மேலோட்டமாகவே கவனம் செலுத்தி வந்த முஸ்லிம் சமூகம், தற்போது கூடிய கரிசனை காட்டத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது.   

இலங்கை முஸ்லிம்கள், ஒரு நாளும் தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் அல்லர். இரண்டு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றோ, அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றோ, போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் இல்லை. பிரிக்கப்படாத நாட்டில், எல்லா இனங்களுடனும் சௌஜன்யத்தோடு வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.   

முஸ்லிம்கள் மீது, தமிழ் ஆயுதக் குழுக்கள் பல்வேறு அநியாயங்களை மேற்கொண்ட வேளையிலும், இனவாதச் சக்திகள் நெருக்குவாரப்படுத்திய சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் பொதுவாகப் பொறுமையைக் கடைப்பிடித்து வந்ததை மறுக்க முடியாது.   

பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கூறியிருந்ததைப் போல, இந்த நாட்டில், ஆயுதத்தை நாடாத ஓர் இனமாகவே முஸ்லிம்கள் இருப்பதற்கும், மேற்சொன்ன மனோநிலையே காரணம் எனலாம்.   

ஆனால், அரசியல் அதிகாரமோ, ஆட்சி அதிகாரமோ அன்றேல், ஆயுத ரீதியான மேவுதல்களோ அளவுகடந்து போகின்றன என, முஸ்லிம்கள் கருதும் சந்தர்ப்பங்களில், சற்றுக் காலம் தாமதித்தேனும், அது விடயத்தில் எச்சரிக்கையுடன் செயற்படுவதும், தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளது.   

வேறெந்தச் சமூகமும், தமது அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, முஸ்லிம்கள் குறுக்கே நின்றவர்கள் எனச் சொல்ல முடியாது.   

ஆனால், யாருக்காவது கிடைக்கின்ற வரப்பிரசாதங்கள், முஸ்லிம்களின் அபிலாஷைகளைக் கேலிக்குள்ளாக்குமானால், முஸ்லிம்களின் பங்கு மறுதலிக்கப்படுமாயின், முஸ்லிம் சமூகம் பாராமுகமாக இருக்கும் என்று, தப்புக் கணக்குப் போடவும் முடியாது.   

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இவ்வரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அரசமைப்பு மறுசீராக்கம் பற்றியே பேசி வருகின்றது. இதற்கான இடைக்கால வரைபு, முன்னரே சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவதில், நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.  

இவ்வாறிருக்கையில், அடுத்த தேர்தலுக்கு முன்னராவது, அதைச் செய்தாக வேண்டும் என்ற உள்ளெண்ணத்தோடு, இப்போது அரசமைப்பு மறுசீரமைப்புக்கான கோவைகள், தூசுதட்டி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.   

கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதிகாரப் பகிர்வு குறித்து, தனியாக ஆராயப் பொதுவான இணக்கம் காணப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பில், தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

அதன்படி, இலங்கையில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக, ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான ஒரு குழுவை, அரசாங்கம் நியமித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏககாலத்தில், இந்த நகர்வை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.   

நான்கு பேர் கொண்ட இவ்வுயர் மட்டக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சரத் அமுனுகம, டிலான் பெரேரா, அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.   

அதாவது, 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் சமூகத்தின் சார்பில், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது இக்குழுவில், பெயருக்கேனும் உள்ளடக்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தின் அவதானத்தைப் பெற்றுள்ளது.   

இதன்மூலம், அதிகாரப் பகிர்வு என்பது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விவகாரமே தவிர, முஸ்லிம்களோ அல்லது ஏனைய இனங்களுக்கோ இதில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று, அவர்கள் சொல்ல முற்படுகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.  

நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற அரசமைப்பில் காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதிலும் முற்றாகப் புதிய யாப்பு நிறைவேற்றப்படுவதிலும் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தேர்தல் முறைமை, இனப்பிரச்சினைத் தீர்வின் அடிப்படை, அதிகாரப் பகிர்வு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான முன்மொழிவு உள்ளிட்ட சில விடயதானங்களில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கின்றனர்.   

வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மீண்டும் இணைக்கப்படுவதை நியாயபூர்வமாக எதிர்க்கின்ற முஸ்லிம்கள், வேறு அடிப்படைகளில் தமிழர்களுக்குத் தீர்வுப் பொதி வழங்குவதில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் வாழ்கின்ற ஆட்புலப் பிராந்தியத்தை உள்ளடக்கியதான ஒரு தீர்வு, அதிகாரப்பகிர்வு, அதிகாரப் பிரிப்பு வழங்கப்படுமாயின், அதில் முஸ்லிம்களுக்குரிய பங்கு கிடைத்தேயாக வேண்டும் என்று தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.   

குறிப்பாக, உத்தேச அரசமைப்பு மறுசீரமைப்பு, ஒரு தரப்புக்குச் சாதமாக நடைபெறுவதாகக் கூறப்பட்டமை, இடைக்கால அறிக்கையின் மயக்கமான வார்த்தைப் பிரயோகங்கள், தமக்கு அநியாயம் இழைக்கப்படலாம் என்ற உள்ளுணர்வை முஸ்லிம்களுக்குக் கடந்த பல வருடங்களாகவே ஏற்படுத்தியிருந்தன.   

இவ்வாறான பின்னணியில், அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆராயும் குழுவிலும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் உள்ளடக்கப்படாமை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மேலும் சந்தேகத்தை விதைத்திருக்கின்றது.   

தமிழர்கள் கோரிக்கைகளை முன்வைத்து, பல தசாப்தங்களாகப் போராடினார்கள். எனவே, அவர்களுக்குத் தீர்வு கிட்ட வேண்டும் என்பதில், இருவேறு அபிப்பிராயங்கள் கிடையாது.   

ஆயினும், இலங்கையில் இனப் பிரச்சினை என்பது, தனியே தமிழர்களுக்கும் அரசாங்கத்துக்கும் அல்லது புலிகளுக்கும் இராணுவத்துக்கும் உரித்தானதும் தொடர்புபட்டதுமான விவகாரம் அல்ல. மாறாக, இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லா இனங்களுடனும் தொடர்புபட்டது.   

குறிப்பாக, முஸ்லிம் சமூகமும் சிங்கள மக்களில் ஒரு பகுதியினரும் தென்பகுதித் தமிழ் மக்களும் கூட, இனப்பிரச்சினையால் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கின்றனர் என்ற அடிப்படையில், அதிகாரப் பகிர்வோ அல்லது வேறு எந்தத் தீர்வுத்திட்டமோ எதுவானாலும் அது இலங்கையில் வாழும் எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்வதாக இருப்பது மிக முக்கியமாகும். எனவே, தம்மைத் திருப்திப்படுத்தாத பொதியை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்.   

தேசிய அளவில், முக்கியத்துவமிக்க துறைகளின் அதிகாரம், மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அல்லது மாகாண ரீதியாக, முக்கியமான துறைகளின் அதிகாரம், அக்குறிப்பிட்ட மாநில அரசாங்கத்துக்கும், அரசமைப்பு ரீதியாகப் பகிர்ந்து அளிக்கப்படுவதற்கான ஓர் ஏற்பாட்டை, அதிகாரப்பகிர்வு என்று சொல்கின்றார்கள்.   

அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான ஓர் ஏற்பாடாகவே, சமஷ்டி முறையும் உள்ளது. சமஷ்டியைப் பொறுத்தமட்டில், முழுமையானதும் பகுதி அளவிலானதுமான சமஷ்டிகள், பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன.   

ஆனால், இலங்கையில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், ‘ஒருமித்தநாடு’, ‘ஏக்கிய ராஜிய’ என்ற சொற்பிரயோகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது உண்மையில், சமஷ்டியின் தன்மைகளைக் கொண்டுள்ளதாக, அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.   

அந்த அடிப்படையில், இலங்கையில் அதிகாரப் பகிர்வு, பொதுவில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும், குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் எந்தளவுக்கு நன்மையளிக்கும் என்பதே, இன்று நம்முன் வைக்கப்பட்டிருக்கின்ற வினாவாகும்.   

சுமஷ்டி என்று வரும் போது, மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையில், ஓர் அதிகாரச் சமநிலை காணப்படும். அது முழுமையான சமஷ்டி முறைமை என்றால், மாநிலத்துக்கு எந்தெந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதோ, அதில் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது.   

இந்நிலையில், இலங்கையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த மற்றெல்லா மாகாணங்களிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே வாழ்கின்றார்கள். எனவே, பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்பட்டால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.   

மாகாண அரசுகளுக்கு அதிகாரம் பகிரப்பட்டால் சிலவேளை, இணைந்த வடக்கு, கிழக்கில் அல்லது இணையாத கிழக்கில், முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்கலாம். வேறெங்கும் முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என்றால், முஸ்லிம்கள் இதனை ஆதரிக்கவே முடியாது என்று அரசியல் ஆய்வாளர்கள் அழுத்தமாகக் கூறுகின்றனர்.  

அப்படியாக, சமஷ்டியின் தன்மையுடன் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுமாயின், சிலவேளை இணைந்த வடக்கு, கிழக்கு உட்பட, எல்லா இடங்களிலும் அதிகாரம் பெறும் இனத்தால் ஆளப்படும் சமூகமாகவே முஸ்லிம்கள் இருப்பார்கள் என்பது உண்மையான கணிப்பு என்றால், அது இலேசுப்பட்ட விவகாரமல்ல.   

ஓர் அரசாங்கத்தின் கீழேயே, இந்தப் பாடுபடும் முஸ்லிம்கள், அதிகாரம் பகிரப் பெற்ற பல மாநில அரசாங்கங்களின் கீழ் வாழும் நிலை என்பது, நிச்சயம் இதைவிடப் பாரதுரமானதாகவே இருக்கும்.   

எனவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தையும் வழக்கம் போல கண்மூடித்தனமாக ஆதரிக்காமல், அதன் உள்ளடக்கங்களால் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை ஆராய வேண்டும். 

அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்கம், முஸ்லிம்களையும் தென்னிலங்கைத் தமிழ் மக்களையும் காலாகாலத்துக்கும் ஆளப்படும் மக்கள் கூட்டமாக மாற்றிவிடக் கூடாது.    

யாருக்கு அதிகாரம்?

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரப்பகிர்வு என்ற விடயத்துக்கு,  முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாக, அரசாங்க ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன.   

உண்மையில், ஆட்சியில் இம்முறை, முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல், இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  

முஸ்லிம் கட்சித் தலைவர்களும் ஏனைய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களும் இம்முறை ஆட்சியில் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்ற முன்மொழிவுகளை ஆதரிக்க வேண்டிய தர்மசங்கடம் இருக்கலாம்.  

முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், எந்தவொரு திட்டத்திலும் தமது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகத் தன்மைகள் குறித்து, கவனம் செலுத்த வேண்டியது, அதைவிட முக்கியமானது.   

அந்தவகையில், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கூறுகின்ற விடயங்களில், கவனம் செலுத்த வேண்டியுள்ளது.   

இந்த அரசமைப்பில் முன்மொழியப்படும் அதிகாரப்பகிர்வை, முஸ்லிம்கள் பார்க்க வேண்டிய கோணம், ஏனைய சமூகங்களில் இருந்து வேறுபடுகின்றது. தமிழர்களுக்குச் சில பகுதிகளில் ஆள்வதற்கு அதிகாரம் கிடைக்கும்; சிங்கள மக்களுக்குப் பல மாகாண அரசாங்கங்களில் அதிகாரம் கிடைக்கும்.   

இந்நிலையில், முஸ்லிம்கள் ஆளப் போகின்றவர்களா, இல்லை ஆளப்படுகின்றவர்களாக இருக்கப் போகின்றார்களா என்பதைப் பொறுத்தே, இந்த அதிகாரப் பகிர்வைப் பார்க்க முடியும்.   

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசமைப்பும் அதனூடான அதிகாரப் பகிர்வும் நடைமுறைக்கு வருமாயின், முஸ்லிம்கள் பல்வேறு வழிகளிலும் இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்ற அதேநேரத்தில், பரவலாக அடக்கி ஆளப்படும் சமூகமாக மாற்றப்படுவார்கள் என்று, சட்ட முதுமானியும் அரசியல் ஆய்வாளருமான வை.எல்.எஸ். ஹமீட், அண்மைக் காலமாகத் தெரிவித்து வருகின்றார்.   

அவரது கருத்தின்படி, மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படப் போகின்றது என்றால், அந்த ஆட்புலத்தில், பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்கள், அதைப் பயன்படுத்தி ஆளப் போகின்றார்கள் என்றால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற ஏழு, எட்டு மாகாணங்களில் ஆளப்படுகின்றவர்களாக இருப்பார்கள்; அவர்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் குறையும்.   

அத்துடன், நாட்டில் வாழ்கின்ற சுமார் 25 சதவீதமான சிறுபான்மையினரில் எட்டு சதவீதமானோர் மாத்திரமே ஆள்கின்ற சிறுபான்மையாக இருப்பார்கள். மீதமுள்ள 17.2 சதவீதமான சிறுபான்மையினர் ஆளப்படப் போகின்றவர்களாக இருப்பார்கள் என்று, அவர் கூறும் புள்ளிவிவரமும் குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, ஒன்றாக இருந்த ஒரு நாடு, பல அரசாங்கங்களாகப் பிரிவடைகின்ற சமஷ்டியும் உள்ளது. அதேபோல், பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நாட்டை உருவாக்கி, அந்த அரசாங்கம் சமஷ்டி முறையில் இயங்குவதும் உள்ளது. இரண்டாவது வகையிலான நாடுகளுக்கு, அரசமைப்பில் மறுக்கப்பட்டிருந்தால் தவிர, தனியாகப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கும்.   

ஆனால் எவ்வகையான சமஷ்டியைக் கொண்ட நாடாக இருப்பினும், சுயநிர்ணயம் என்ற விடயத்தைப் பயன்படுத்தி, பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகின்றது.   

எனவே, ஒருமித்த நாடு என்ற சொல், மறைமுகமான உள்ளர்த்தங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை, முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர் என்பது கவனத்துக்குரியது.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அதிகாரப்-பகிர்வும்-முஸ்லிம்-சமூகமும்/91-231234

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • சிறுபான்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பான்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா ?   -எம்.ரீ. ஹைதர் அலி -சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாராஎன்ற சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ.வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது என்கின்ற ஆதாரமற்ற மிகப்பெரும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ.வீ. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாத்த்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதாரபூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர் நீதியரசர் என்கின்ற பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபாண்மை மீது இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.21/4 தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான அபாண்டமான கருத்துக்கள் முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப் பார்வையை மேலும் அதிகரிக்கும் விதமாக மாறியுள்ளது.நாட்டில் பேரினவாதம் சிறுபாண்மைகளை ஓரம்கட்டி தனிச் சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஒரு பன்சலையினூடாக ஒரு ஆயிரம் வாக்கு என்ற முன்னெடுப்புக்களை முன்னெடுத்து 7,000,000 பேரின் வாக்கினால் நாட்டினுடைய தலைவரை தேர்வு செய்ய முயற்சிக்கும் மிக ஆபத்தான சூழலில் சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை சீ.வீ. வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து வெளியேற்றப்படும் அந்தநாளில் புரிந்துகொள்வார்.ஆக மொத்தத்தில் சீ.வீ. அவர்கள் இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இன நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்ற நல்ல சிந்தனையுடன் எதிர்காலத்தில் பயணிக்க சிறுபான்மை சமூகம் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2019/07/scv.html  
    • மனுஸ் தீவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பபுவா நியூ­கி­னியின் பிர­தமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை மீளக்குடி­ய­மர்த்த காலவரை­ய­றை­யொன்றை நிர்ணயிக்க அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  மராபி இரு மாதங்­க­ளுக்கு முன்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் வெளி­நாடு ஒன்­றுக்கு விஜயம் செய்­வது இதுவே முதல் தட­வை­யாகும். அவர்  அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான இந்த விஜ­யத்தின்போது அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்­கட்சித் தலைவர் அந்­தோனி அல்பானிஸ் மற்றும் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொண்டார். அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது நாட்­டுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக வரும் புக­லி­டக்­கோரிக் கை­யா­ளர்கள் அனை­வ­ரையும் மனுஸ் மற்றும் நவுறு தீவுக்கு அனுப்பும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றது. அந்தக் கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ஆறா­வது ஆண்டு தினம் கடந்த வெள் ளிக்­கி­ழ­மை­யாகும்.  இந்­நி­லையில் இத­னை­யொட்டி நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்­கி­ழமை மற்றும் அத ற்கு முதல் நாளான சனிக்­கி­ழமை ஆகிய தினங்­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­வெங்கும் எதி ர்ப்பு ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லங்கள் நடத்­தப்­பட்­டன. பபுவா நியூ­கி­னி­யி­லுள்ள புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களில் பலர் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள நிலையில் சுமார் 450 புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அங் குள்ள மோச­மான நிலைமைகள் காரண மாக அவர்கள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்து வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் மேலும் 350 புகலிடக்கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் உள்ளனர்.   https://www.virakesari.lk/article/60987  
    • ' நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட  திருமணம் ' - வீ.தனபாலசிங்கம் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும்  போக்குகளுக்கு சிங்கள - பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான  காரணிகளில் சிங்கள - பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்ந்த புதியதொரு தோற்றப்பாடல்ல, பல தசாப்தங்களாக இருந்துவருகிற ஒன்றுதான்.ஆனால், அதன் அண்மைக்கால வெளிப்பாடுகள் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் ஆரோக்கியமான அரசியல் சிந்தனைப்போக்குகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து பலமான ஐயத்தை கிளப்புகின்றன. தான்தோன்றித்தனமாக செயற்படுகின்ற பிக்கு ஒருவர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்து சட்டரீதியாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாகாண ஆளுநர்களையும் அமைச்சர்களையும் பதவிவிலகச் செய்யமுடிகிறது. குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் அந்த பதவிவிலகல்கள் இடம்பெறவில்லையானால் நாடு பூராவும் ' களியாட்டம் ' நடப்பதை எல்லோரும் பார்ப்பீர்கள் என்று பகிடிவிட்டு குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும் என்று தலதா மாளிகைக்கு முன்பாக பொலிசாருக்கு முன்னால் நின்று துணிச்சலுடன்வேறு ஒரு பிக்குவால்  கூறக்கூடியதாக இருக்கிறது ; திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடியை ஏந்திய கூட்டத்தினர் மத்தியில் நின்றுகொண்டு இலங்கையில் சிங்களவர்களை மாத்திரம் கொண்ட அரசாங்கம் அமையவேண்டும் என்று அவரால் பிரகடனம் செய்யமுடிகிறது. எந்த விதமான வன்முறையையும் ஏற்றுக்கொள்ளாத பௌத்த தர்மத்தைப் போதிக்கின்றவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கின்ற இந்த பிக்குமாரின் பேச்சுக்களில் முற்றிலும் வன்முறைத்தொனியே   தெறிப்பதைக்  காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் எச்சரிக்கை செய்து  " உத்தரவுகளையும் " கூட அடிக்கடி பிக்குமார் பிறப்பிக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு முகெலும்பு இருக்கிறதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.கண்ணியமாக  நடந்துகொள்ளாத பிக்குமாரின் செயற்பாடுகளைக்கூட கண்டிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வருவதில்லை. விதிவிலக்காக  துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எந்த அரசியல்வாதியும் பிக்குமாரின் தவறுகள் என்று எதையாவது குறிப்பிட்டுவிட்டால் மன்னிப்புக்கேட்கும் வரை அவரை ஓய்வாக இருக்கவிடமாட்டார்கள்.பிக்குமாரில்  குறிப்பிட்ட சில பிரிவினரின் தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டினால், அதை முழு மகாசங்கத்தையும் அவமதிக்கும் செயலாக அர்த்தப்படுத்தும் விபரீதப்போக்கு ஒன்றையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பிக்குமாரில் எந்தப்பிரிவினரையும் எந்தக் காரணத்துக்காகவும்  தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் அரசியல் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.  வன்முறையைத் தூண்டுகின்ற  பிக்குமாரின் பிரசாரங்களையும்  செயற்பாடுகளையும் பௌத்த உயர்பீடங்களும் கண்டிப்பதில்லை.  இத்தகைய பிக்குமாரின் போக்குகளை விரும்பாத பிரிவினர் பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் கணிசமானளவில் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால், அவர்கள் பகிரங்கமாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முன்வரமுடியாத அளவுக்கு பேரினவாதம் மலைபோல் உயர்ந்துநிற்கிறது. கெடுதி செய்பவர்களினால் அல்ல அந்த கெடுதிகளுக்கு எதிராக எதையும் செய்யவோ பேசவோ முன்வராதவர்களினாலேயே உலகம் மக்கள் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக இருக்கிறது என்ற ஒரு மேதையின் கூற்று இங்கு நினைவுக்கு வருகிறது. இலங்கையில் காவியுடை பௌத்தர்களினால் எப்போது போற்றிமதிக்கப்படுகிறது. ஆனால்,கிறிமினல் செயல்களில் ஈடுபடுகின்ற பேர்வழிகள்  அந்த காவியுடைக்குள் தங்களை மறைத்துக்கொள்வதையும் எவரும் மறுக்கமுடியாது.ஒரு பௌத்தபிக்குவே தனது காவியுடைக்குள் கைத்துப்பாக்கியை மறைத்துவைத்துக்கொண்டுவந்து பிரதமர் ஒருவரைச் சுட்டுக்கொன்றார் என்பது வரலாறு. சொல்லப்போனால், இலங்கையில் பௌத்தமதம் ஒரு அரசியல் மதமாகவே விளங்குகிறது. அரசியலில் தங்களுக்கு செல்வாக்கான அந்தஸ்து ஒன்று வேண்டும் என்று பிக்குமார் நாட்டம் கொள்வதே இலங்கையில் உள்ள பிரச்சினை. புராதன காலத்தில் பௌத்தபிக்குமார் மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள் என்பதை சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இன்றைய யுகத்திலும் அவர்கள் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆலோசனை கூற வலிந்து முன்வருகிறார்கள். அதுபோக, அவர்கள் நேரடியாகவே அரசியலுக்கு வந்தும் விட்டார்கள். காவியுடையுடன் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் அவர்கள் கட்சி  அரசியலுக்குள் பௌத்தமதத்தைக் ெகாண்டுவந்து நீண்டகாலமாகிவிட்டது. பிக்குமார் நேரடி அரசியலில் ஈடுபடுவதென்பது புத்தரின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானது என்ற போதிலும், அவர்கள் அரசியலில் இறங்குவதைத் தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியவில்லை.  அரசியலுக்கும் மதத்துக்கும் இடையிலான ' திருமணம் ' சொர்க்கத்தில் அல்ல, நரகத்திலேயே தீர்மானிக்கப்பட்டது என்று அண்மையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்தார்.நவீன  இலங்கையில் இந்த ' நரகத் திருமணத்தை ' ஏற்பாடு செய்து நடத்திவைத்தவர் தனது செயலினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய மாபாதக விளைவுகளை தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கக்கூடிய  அறிவும் புலமையும் நிறைந்த ஒரு மனிதரே.அவர் ஒன்றும் வீரவன்சவையோ ஞானசாரவையோ போன்றவரல்ல. மொழியறிவு மட்டுப்பாடு காரணமாக உலக  வரலாற்றை தெரிந்துகொள்ளமுடியாதவரும் அல்ல. பிரபலமானவராக வரவேண்டும் என்பதற்காக மததை அரசியலுக்கு  பயன்படுத்தவேண்டிய அவசியத்தைக் கொண்ட அநாமதேயமும் அல்ல.இருந்தாலும் அவர் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகவேண்டும் என்பதற்காக சிங்கள -- பௌத்தம் என்ற ஆயுதத்தை வேண்டுமென்றே கையில் எடுத்தார்.  எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் எழுச்சியும் வீழ்ச்சியும்  அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கையாக அமைகின்ற ஒரு ' நீதிக்கதை' போன்றதாகும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தக் கதையை தென்னிலங்கையின் எந்த அரசியல் தலைவரும் விரும்பிப் படிக்கவில்லை. அவரைப் போன்றே பிறகு வந்த அரசியல் தலைவர்களும் பிக்குமாரை தங்களது அரசியலுக்கு தாராளமாகப் பயன்படுத்தினார்கள். இன்று இறுதியாக " அரசியல்வாதிகளே, நீங்கள்பேசாமல் இருங்கள் நாங்கள் ஆட்சிசெய்கிறோம் " என்று பிக்குமார் பிரகடனம் செய்கின்ற நிலை வந்துவிட்டது. சில மாதங்களில் முக்கியமான தேர்தல்கள் வரவிருக்கின்றன. தங்களது எதிர்கால வாய்ப்புக்களுக்காக மேலும் கூடுதலான அளவுக்கு அரசியல்வாதிகள் பிக்குமாரையும் மதத்தையும் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுவார்கள். தனக்கு இரண்டாவது பதவிக்காலத்தை பெற்றுக்கொள்ளும் பிரயத்தனத்தில் மதத்தைப் பயன்படுத்தும் எண்ணத்துடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவாசம் அனுபவித்த பொதுபல சேனாவின் ஞானசார தேரோவுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். அத்துரலிய தேரோவின் மிரட்டலுக்கு பணிந்தது உட்பட பல காரியங்கள் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எந்தவிதமான தீவிரவாத்துக்கும் எதிராக துணிந்துநிற்கும் உத்தேசம் தனக்கு இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல சைத்தியாக்களை நிர்மாணிக்கப்போவதாக சஜித் பிரேமதாச அளித்திருக்கும் உறுதிமொழி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான தனது முயற்சிகளில் மதம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர் தன்னை ஒரு நவீன துட்டகைமுனுவாக - சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் மாதங்களில் அரசியலில் மதம் என்ற ஆயுதம் மிகவும் ஆபத்தானமுறையில் பயன்படுத்தப்படப்போகிறது. நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் விளைவு !   https://www.virakesari.lk/article/60904  
    • விசேட விமானம் மூலம் இலங்கையர்களை திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா   அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை  கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக  இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன்  புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என  தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்  பீட்டர் டட்டன் இதனை உறுதி செய்யாத அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயலும் எவரையும் நாடு கடத்துவோம் என அவரது அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து பதிலளிப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றிவருகின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் எவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு அல்லது அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைப்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இறைமையுள்ள எல்லைகள் என்ற எங்கள் நடவடிக்கையின் காரணமாக  எந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒரிருதினங்களிற்கு முன்னர் இந்த படகை அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் தேர்தல்கள் இடம்பெற்ற பின்னர் அந்த நாட்டை நோக்கி பயணித்த வேளை தடுக்கப்பட்ட மூன்றாவது படகு இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/60992
    • தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் - விக்னேஸ்வரன்   அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுப்­பதும் எமது நிலையை உல­க­றியச் செய்து எமது நாட்டின் தலை­வர்­களை வெட்கித் தலை­கு­னிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்­ப­டுத்­து­வ­துமே எமது குறிக்­கோ­ளாக இரு க்க வேண்டும். அத்­துடன் கட்சி சார் செயற்­பா­டு­க­ளிலும், தமிழ்த் தேசி­யத்தைப் பலப்­ப­டுத்தும் பணி­யிலும் கொள்கை ஒரு­மைப்­பாடு கொண்ட அனை­வ­ரையும் எம்­மோடு பய­ணிக்க அன்­பு­ரி­மை­யுடன் அழைத்து நிற்­கின்றேன். தன்­னாட்சி - தற்­சார்பு - தன்­னி­றைவே எமது தாரக மந்­தி­ரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ளரும் முன்னாள் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் மட்­டக்­க­ளப்பு மாவட்டப் பணி­மனைத் திறப்பு விழா நேற்று மாமாங்கம் சோம­சுந்­தரம் சதுக்­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு பணி­ம­னை­யினை திறந்­து­வைத்­த­ பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; மட்­டக்­க­ளப்பில் தமிழ் மக்கள் கூட்­ட­ணி க்கு மக்கள் தொடர்பு பணி­மனை ஒன்றை உரு­வாக்க உத­விய சக­ல­ருக்கும் முதற்கண் என்­னு­டைய நன்­றி­ய­றி­தல்கள் உரித்­தா­குக. இது சம்­பந்­த­மாக எமது நிர்­வா­கத்­திற்குப் பொறுப்­பான இணை உப­செ­ய­லாளர் சோம­சுந்­தரம் எடுத்­துக்­கொண்ட முயற்­சிகள் பாராட்­டப்­பட வேண்­டி­யவை. மாமாங்கப் பிள்­ளை­யாரின் கொடி ஏறி­மு­டிய எமது கொடியும் ஏற்­றப்­பட்­டுள்­ளது.  அதா­வது, எமது பணி­மனை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்நாள் தொடக்கம் தேவைகள் இருக்கும் எம்மக்­களும் எம்­முடன் சேர்ந்து அர­சி­யலில் பய­ணிக்க விரும்பும் எம் மக்­களும் இங்­கு­வந்து எமது செயற்­குழு அங்­கத்­த­வர்­களைச் சந்­தித்துச் செல்­லலாம். அவர்­க­ளுக்கு எம்­மா­லான உத­வி­களை நாம் புரிய கட­மைப்­பட்­டுள்ளோம்.  நிதி நெருக்­க­டிகள் இருந்­தாலும் அவற்றை சமா­ளிக்கக்கூடி­ய­வர்கள் எமது கட்சி உறுப்­பி­னர்கள். எமது உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­காகப் பல தசாப்­தங்­க­ளாக நாம் போராடி வரு­கின்றோம். சொல்­லொண்ணாத் துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் தாங்கி மாபெரும் இன­வ­ழிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யாக இன நீதி மறுக்­கப்­பட்டு சொந்த மண்­ணி­லேயே அடி­மை­க­ளாக வாழ்ந்து வரு­கின்ற துயர் நிலையைக் கொண்­ட­வர்­க­ளாக நாம் வாழ்ந்து வரு­கின்றோம்.  ஆரம்ப காலங்­களில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் எம்­முடன் இணைந்தே போரா­டி­னார்கள். என்­னுடன் சட்டக் கல்­வி­பெற்ற அக்­கால சட்­ட­மா­ண­வ­ரான காலஞ்­சென்ற மஷூர் மௌலானா ஒரு காலத்தில் தந்தை செல்­வாவின் வலது கர­மாக திகழ்ந்தார். நண்பர் அஷ்ரப்கூட தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் சேர்ந்தே தமது அர­சியல் பணியை ஆரம்­பித்தார். இன்று எம்­மி­டை­யே­யான ஒற்­றுமை, புரிந்­து­ணர்வு யாவும் தேய்ந்து வரு­கின்­றதை காண்­கின்றேன். சுய­நலம் எம்மை பிள­வு­ப­டுத்­தி­யுள்­ளதைக் காண்­கின்றேன். மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலான தமி­ழர்­களின் ஆயுதம் தழு­விய உரிமை மீட்புப் போராட்டம் 2009 மே மாதத்­தோடு மௌனி க்­கப்­பட்டு இவ்­வாண்­டோடு பத்­தாண்­டு கள் நிறை­வு­பெ­று­கின்­றன. இந்­நி­லை­யி லும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழி­வுகள் முன்­வைக்­கப்­ப­டா­மலும், இனப்­ப­டு­கொ­லைக்­கான நீதி, போர்க்­குற்ற விசா­ரணை, வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான நீதி,  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை, இரா­ணு­வத்தின் பிடியிலுள்ள காணிகள் விடு­விப்பு, போர் முடிந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யே­றுதல் போன்ற பல விட­யங்­களில் ஆட்சி அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் சற்­றேனும் கவனம் செலுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.  தனிப்­பட்ட நன்­மைகள் எம்­ம­வரும் அது­பற்றி அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுக்க வேண்டும் என்ற மனோ நிலையில் இல்லை. தமது தனிப்­பட்ட நன்­மை­க­ளையே தமது பத­வி­களை வைத்து பெற்­று­வர எத்­த­னித்­துள்­ளார்கள். இதன் விளை­வா­கவே கொள்­கையில் உறு­தி­யோடு, இன விடு­த­லையை முதன்­மைப்­ப­டுத்தி, நீதியின் வழி நின்று செய­லாற்ற தமிழ் மக்கள் கூட்­டணி என்­கின்ற கட்­சியை நிறுவ வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மா­கிற்று. உங்கள் அனை­வ­ரதும் அய­ராத உழைப்பும், ஒத்­து­ழைப்பும், பொறு­மை­யுமே எமது கட்­சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வல்­லன. மதிப்­புக்­கு­ரிய மட்­டக்­க­ளப்பு வாழ் மக்­களே, வட கிழக்கு மாகாண தமிழ் மக்­களின்  உரி­மை­களை வென்­ற­டுப்­ப­தற்­கான தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதி­யான செயற்­பா­டு­களில் மட்­டக்­க­ளப்பு மக்கள் முழு­மை­யான அளவில் பங்­கு­பற்றி எம்மை பலப்­ப­டுத்­து­வார்கள் என்று நான் நம்­பு­கிறேன். எமது மக்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை திட்­ட­மி­டப்­பட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் பீனிக்ஸ் பறவை போல புத்­து­யிர்­பெற்று இன்­றைய தமிழ் மக்­களின் அர­சியல் போராட்­டத்தின் முது­கெ­லும்­பாக எம் மக்கள் செயற்­பட்டு வரு­வதைக்கண்டு நான் வியப்­ப­டைந்­துள்ளேன்.  போராட்­டங்கள் வீண்­போ­காது பல வரு­டங்­க­ளாக வீதி­களில் நின்று எம் மக்கள் பற்­று­று­தி­யுடன் மேற்­கொண்­டு­வரும் பல்­வேறு போராட்­டங்­களைக் கண்­டு­கொண்­டுதான் இருக்­கின்றேன். அத்­துடன் கண்டு நான் உள்­ளக்­கி­ளர்ச்சி அடைந்­தி­ருக்­கின்றேன். உதா­ர­ணத்­திற்கு திரு­கோ­ண­ம­லையில் ஆளுநர் மாளி­கைக்கு முன்­பாக இன்றும் காணா­மற்­போ­னோரின் உற­வி­னர்கள் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். உங்கள் போராட்­டங்கள் ஒரு­போதும் வீண் போகாது. உங்கள் போராட்­டங்­க­ளுக்­கான எம்­மா­லான உத­வி­களை வழங்கும் வகை­யிலும் உரி­மை­களை வென்­ற­டுப்­ப­தற்­கான எமது செயற்­பா­டு­க­ளுக்கு உங்­களின் உத­விகள் மற்றும் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லுமே இன்று இந்தப் பணி­மனை திறந்­து­வைக்­கப்­ப­டு­கி­றது.  பல கஷ்­டங்கள் மத்­தியில் இந்தப் பணி­ம­னையை திறந்­து­வைத்து எதிர்­கா­லத்தில் சிறந்த முறையில் மக்கள் சேவை ஆற்­று­வ­தற்­கான பல்­வேறு திட்­டங்­களை எம்­ம­வர்கள் வகுத்­தி­ருக்­கின்­றார்கள்.  மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் எமது இந்தப் பணி­ம­னை­யுடன் இணைந்து எமது மக்­களின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார மற்றும் கலா­சார ரீதி­யான அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வார்கள் என்று நான் எதிர்­பார்க்­கின்றேன்.  அத்­துடன் இந்­நி­கழ்­விலும், கட்சி சார் செயற்­பா­டு­க­ளிலும், தமிழ்த் தேசி­யத்தைப் பலப்­ப­டுத்தும் பணி­யிலும் எம்­மோடு பய­ணிக்க அனை­வ­ரையும் அன்­பு­ரி­மை­யுடன் அழைத்து நிற்­கின்றேன். ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் தீர்­மா­னத்­தினை நிறை­வேற்­றாமல் பல்­வேறு ஏமாற்று வழி­மு­றை­களை இலங்கை அர­சாங்கம் கையாண்டு ஏமாற்­றி­வந்த நிலை யில் அவற்­றுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக உண்மை நிலை­மை­களை எடுத்­துக்­கூறி எம்மக்கள் நேர்­கொண்ட போராட்­டங்­களும் அர­சியல் செயற்­பா­டு­க­ளுமே  ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் சில சாத­க­மான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன.   இலங்­கையில் என்ன நடை­பெற்­று­வ­ரு­கின்­றன, உண்மை நிலைமை என்ன, மக்­களின் உணர்­வுகள் என்ன என்­பவை பற்றி எல்லாம் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு எட்­டி­யி­ருக்­கின்­றது என்­ப­தையே மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.  ஐ.நா.வின் கோரிக்கை அதா­வது, போர்­க்குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­யான உள்­ளக விசா­ரணை நடை­பெ­ற­வில்லை என்­பதால் போர்க்­குற்றம் மற்றும் ஏனைய குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்­களை விசா­ரணை செய்து வழக்கு தொடரும் நட­வ­டிக்­கை­களை உறுப்பு நாடுகள் மேற்­கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரி­மை­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையில் உறுப்பு நாடு­க­ளுக்கு பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றது.  சித்­தி­ர­வதை, வலிந்து காணாமல் செய்­யப்­ப­டுதல், போர்­க்குற்­றங்கள் அல்­லது மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் ஆகி­ய­வற்றை குறிப்­பாக சர்­வ­தேச நியா­யா­திக்க கோட்­பா­டு­க­ளுக்கு அமை­வாக விசா­ரணை செய்து வழக்கு தொடர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன், இலங்­கையில் மனித உரி­மை­களை கண்­கா­ணிப்­ப­தற்கும், ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர், மனித உரி­மைகள் சபை, மற்றும் ஏனைய மனித உரி­மைகள் பொறி­மு­றைகள் ஆகி­ய­வற்றின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்றும் பொருட்டும் ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்­துக்கு அழைப்பு விடுக்­க­வேண்டும் என்றும் பரிந்­து­ரைத்­துள்­ளது. எமது தீர்­மானம்  கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேர­வையில் ஒரு தீர்­மா­னத்­தினைக் கொண்­டு­வந்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் உட்­பட சம்­பந்­தப்­பட்ட பல தரப்­புக்­க­ளுக்கும் நாம் அனுப்­பிய தீர்­மா­னத்தில் இந்த விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யி­ருந்தோம். இவை கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றமை மகிழ்ச்சி அளிக்­கின்­றது. அவர்­களின் இந்தப் பரிந்­து­ரை­களை நாம் வர­வேற்­கின்றோம். அதே­வேளை, இலங்கை விட­யத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என்றும் நாம் எமது தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்தி இருக்­கின்றோம்.  அண்­மையில் அமெ­ரிக்க அர­சாங்க அலு­வ­லர்கள் என்னை சந்­திக்க வந்­த­போதும் நான் இதை வலி­யு­றுத்­தினேன்.  ஐ.நா மனித உரி­மைகள் சபையின் தீர்­மா­னத்­தினை இலங்கை நிறை­வேற்­று­வ­தற்கு தவறி இருக்கும் நிலையில் இந்த விட­யத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழுவும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.  இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை விசேட பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனப் பல தமிழ்க் கட்சிகள்  கூட்டாக வலி யுறுத்தியுள்ளன. ஆகவே எமது இந்த வலியு றுத்தல்கள் நடைமுறைக்கு வரும் வகை யில் இங்குள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமது அரசியல், ராஜ தந்திர செயற்பாடுகளை வகுத்து செயற் படவேண்டும்.  அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்ப தும் எமது நிலையை உலகறியச் செய்து எமது நாட்டின் தலைவர்களை வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்படுத்துவதுமே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அத்துடன் கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணி யிலும் கொள்கை ஒருமைப்பாடு கொண்ட அனைவரையும் எம்மோடு பயணிக்க அன் புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன். தன் னாட்சி - தற்சார்பு - தன்னிறைவே எமது தாரக மந்திரங்கள் என்றார்.   https://www.virakesari.lk/article/60991