Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
சமீர் யாஸ்மி பிபிசி
ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டி பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதைபடத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் தனியார் விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பான வளர்ச்சியுடன் இயங்கி வந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஆனால், அந்நிறுவனத்தின் சமீபத்திய வீழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணத்தை தொடங்கியபோதே சந்தையை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தது. உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை பரந்து விரிந்துள்ள அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவைகளுக்கே சவால் விடும் வகையில் உலக தரம் வாய்ந்த பயண அனுபவத்தை இந்நிறுவனம் வழங்கியது என்று கூறலாம்.

கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, படிப்படியாக, அதே சமயத்தில் சீரான வளர்ச்சியை கண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் சர்வதேச விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நிறுவனம் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் இன்று செயல்பட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், உள்நாடு மட்டுமின்றி பன்னாட்டு விமான பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

விமான குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரட்ட முடியாததால், தான் பயன்படுத்தும் 119 விமானங்களில் மூன்றில் இரண்டு விமானங்களின் செயல்பாட்டை ஜெட் ஏர்வேஸ் நிறுத்தியது.

மீட்பு முயற்சிகள்

ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டி பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதைபடத்தின் காப்புரிமை Getty Images

மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஜெட் ஏர்வேஸின் பயணம் முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான நிறுவனமாக இருந்தபோதிலும், அதன் செயல்பாட்டை உறுதிசெய்வதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைளை எடுத்து வருகிறது. பொருளாதார சிக்கலிலிருந்து ஜெட் நிறுவனத்தை மீட்பதற்குரிய திட்டத்தை அளிக்குமாறு மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரியுள்ளது.

இந்திய மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 23,000 ஊழியர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தை சரிவு பாதையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முயற்சிக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், தங்களது மீட்பு திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, அது பலனளிக்காது என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஏர் இந்தியாவின் முன்னாள் தலைவரான ஜிதேந்தர் பார்கவா, மோசமான பொருளாதார நிலையில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்பதற்குரிய முதலீட்டாளர்களை கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்.

"லாபம் கிடைக்காது என்று தெரிந்து, யார் முதலீடு செய்வார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டி பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதைபடத்தின் காப்புரிமை Reuters

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ள அபு தாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிஹாட் விமான நிறுவனத்திடம் எஸ்பிஐ வங்கி ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளது.

அதாவது, எதிஹாட் நிறுவனத்தை மேலும் ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்றுவிட்டு இந்த தொழிலிலிருந்து விடுபட விரும்புவதாக அந்நிறுவனம் கூறிவிட்டது.

இருப்பினும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது எதிஹாட் நிறுவனத்திற்கு ஜெட் ஏர்வேஸ் இன்னமும் சிறந்த முதலீடாக உள்ளதாக விமானத்துறை வல்லுனரான மகந்தீஷ் சபாரட் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து வரும் 2024ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்று கருதப்படும் சூழ்நிலையில், எதிஹாட்டின் முதலீடு அந்நிறுவனத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும் என்று அவர் கூறுகிறார்.

"உடனடியாக பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, நிறுத்தப்பட்ட விமானங்களை இயக்க தொடங்கினால் ஜெட் நிறுவனத்தின் நிலைமை பழைய நிலையை அடையும். தற்போதைய சூழ்நிலையில், எதிஹாட் நிறுவனம்தான் அதற்கு ஏற்புடையதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

பிரச்சனைக்கான காரணம் என்ன?

நரேஷ் கோயல்படத்தின் காப்புரிமை Getty Images Image caption நரேஷ் கோயல்

எதிஹாட் ஏர்லைன்ஸ் உள்பட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க கூடிய நிறுவனங்கள் தனது செயல்பாட்டிலிருந்து பின்வாங்குவதற்கான முக்கிய காரணமாக அந்நிறுவனத்தின் நிறுவன தலைவர் பார்க்கப்படுகிறார்.

நரேஷ் கோயல் தனது கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனம் செல்வதை விரும்பவில்லை.

ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சி தொடங்கியபோதே எதிஹாட் நிறுவனம் மேலதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருந்ததாகவும், ஆனால் நரேஷ் தனது பதவியிலிருந்து விலகுவதற்கு மறுக்கவே அது பின்வாங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், நரேஷ் குடும்பத்தினருக்கு ஜெட் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"எந்த சூழ்நிலையிலும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தனது கையில் வைத்திருப்பதற்கு நரேஷ் விரும்புகிறார். இதற்கு முன்னர், இதே போன்று ஜெட் நிறுவனம் பொருளாதார பிரச்சனையில் சிக்கியபோதும், தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக கைகூடிய உதவிகளை அவர் புறக்கணித்துவிட்டார்" என்று பெயர் வெளியிட விரும்பாத அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து நரேசும், அவரது மனைவியும் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களும் வலியுறுத்தி வருவதாக பல்வேறு ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தனது பதவியிலிருந்து நரேஷ் விலகினால், ஜெட் நிறுவனத்தின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் முழு கட்டுப்பாட்டை தங்களது கையில் வைத்துக்கொண்டு தொழில்ரீதியாக செயல்பட விரும்புகின்றனர்" என்று பார்கவா கூறுகிறார்.

ஜெட் ஏர்வேஸின் எழுச்சியும், ஏர் இந்தியாவின் வீழ்ச்சியும்

இந்தியாவில் தனியார் முதலீடுகளுக்கான கதவுகள் திறக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்கு பிறகு, அதாவது 1993ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

அதே நேரத்தில், மேலும் நான்கு நிறுவனங்கள் விமான சேவையில் இறங்கிய நிலையில், ஜெட்டை தவிர்த்து எவராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், ஒருபுறம் இந்திய விமானத்துறையில் புதிய உயரங்களை தொட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவையே விஞ்சியது.

ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டி பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதைபடத்தின் காப்புரிமை Getty Images

அதே சமயத்தில், மோசமான வாடிக்கையாளர் சேவை, தவறான முடிவுகள், அரசுகளின் தவறான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக ஏர் இந்தியா வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

இந்நிலையில், ஜெட் நிறுவனத்திற்கு உண்மையான போட்டி, 2000ஆவது ஆண்டின் மத்திய பகுதியில் தொடங்கப்பட்ட குறைந்த விலை விமான சேவை நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட்டால் ஏற்படுத்தப்பட்டது.

ஜெட் ஏர்வேஸோடு ஒப்பிடுகையில், உணவுகளை வழங்காது, அடிப்படை வசதிகளை மட்டும் அளித்த புதிய விமான சேவை நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலையில், விமான பயணத்தை பயணத்தை சாத்தியமாக்கியது.

"இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகியற்றோடு ஒப்பிடுகையில் ஜெட் ஏர்வேஸின் விமானங்களை இயக்குவதற்கான செலவு மிகவும் அதிகமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் போட்டியை சமாளிக்கும் வகையில் விலையை குறைத்த ஜெட் நிறுவனம் தனது லாபத்தை இழக்க தொடங்கியது" என்று கூறுகிறார் பார்கவா.

மற்ற தனியார் விமான சேவை நிறுவனங்கள் அளித்த போட்டி ஒருபுறமிருக்க, நிலையற்ற கச்சா எண்ணெய் விலை, வீழ்ச்சியை கண்ட சர்வதேச அளவிலான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை ஜெட் நிறுவனத்திற்கு மேலதிக பிரச்சனைகளை ஏற்படுத்தியது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து தொடர்ந்து கடன்களை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அதற்கிடைப்பட்ட நேரத்தில், இண்டிகோ நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சந்தையை தன்பக்கம் இழுக்க தொடங்கியது.

நிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்க, கடந்த ஆண்டு ஜெட் ஏர்வேஸ் மோசமான கட்டத்திலிருந்து படு மோசமான கட்டத்தை அடைந்தது. விமான சேவை துறையில் முக்கிய கூறுகளாக அந்த நாட்டின் பண மதிப்பும், கச்சா எண்ணெய் விலையும் உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு கச்சா எண்ணெய் விலை $80 அடைந்த அதே நேரத்தில், சர்வதேச அளவிலான இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீத சரிவை சந்தித்தது ஜெட்டுக்கு அழிவை ஏற்படுத்த தொடங்கியது.

கடந்த காலத்தை போன்று, சரிவுகளிலிருந்து ஜெட் ஏர்வேஸ் மீண்டு வருமா அல்லது வீழ்ந்து போகுமா என்பது விரைவில் தெரிய வரும்

https://www.bbc.com/tamil/india-47680738

Edited by நிழலி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நண்பர் இன்று அழைத்தார்.

மச்சான், கொழும்பு டிக்கெட் பார்த்தேன்.... ஸ்ரீலங்கன் £834...

ஜெட் £502.... மும்பாய் ட்ரான்சிட்.... £300 சேவிங்.... புக் பண்ண போறன்..... முந்தி ஒருக்கா போனாய் எல்லோ ... எப்படி?

மச்சி.... எலி கோவணத்தோட போகுது.... இவ்வளவு மலிவா போகாது.... கொஞ்சம் பொறு... 

வலையில் செக் பண்ணினேன்.

அடோய்... அந்த பக்கமே தலை வச்சு படாதே... நியூசில் அடிபடுகுது.... கொண்டு போவாங்களோ தெரியாது.. கொண்டு போனாலும், திருப்பி கொண்டு வருவினமோ தெரியாது...

நண்பர் £502 சேமித்து குறித்து மகிழ்ந்தார்.

இப்படித்தான் ஒருமுறை கனடா போக டிக்கெட் பார்த்தேன்..... பயங்கர விலை.... விடுமுறை காலம் வேற...

ஒரு airline..... பார்த்தேன் விலை £899..... £700.... £600.... £400... மணித்தியாலத்துக்கு ஒருமுறை குறைகிறது....

இதுவே போதும்.... இதுக்குமேல குறைந்தால்.... நமக்கே தாங்காது என்று மூன்று டிக்கெட்டை புக் பண்ணினால், காசு போட்டுது.... confirmation வரக்காணம் .

இதென்ன கோதரியப்பா..... எண்டு வீடு போய், டீவியை போட .... அடப்பாவிகளா.... கொம்பனி இழுத்து மூடியாச்சு..

இணையத்தில் செக் பண்ணினால் உடனேயே ஒரு குரூப் ஆரம்பித்து ஆலோசனை தருகிறார்கள். இன்று வாங்கின ஆக்கள், உங்கள் வங்கிக்கு பேசி, நிலைமையை சொல்லி, அந்தப் பக்கம் இழுத்து மூடியாச்சு.... சட்டப்படி யாரும் இப்ப உன்னிடம் இருந்து காசு கிளைம் பண்ண முடியாது. சேவை வழங்க முடியாத நிலையில் இருப்பதால், எனது காசை, அங்கால பக்கம் கொடுக்காம, நிறுத்து என்று சொல்லுங்கள் என்றார்கள்.

ம்...ம்ம்... இருந்தாலும்.... எல்லாம் முடித்து, பணம், கணக்கில் வர, 2 மாதம் ஆகியது.

இந்த அனுபவமே, எனது நண்பர், என்னை தொடர்பு கொள்ள காரணம்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இதென்ன கோதரியப்பா..... எண்டு வீடு போய், டீவியை போட .... அடப்பாவிகளா.... கொம்பனி இழுத்து மூடியாச்சு..

நாதம் சில தரமான கடனட்டை அமைப்புகள் இதை பெறுப்பெடுக்கின்றன.

அடுத்து ஏஜென்ட் மூலம் ஒரு ரிக்கட் எடுக்கும் போது இடைத்தங்கல் 8 மணிநேரத்துக்கு மேலாக என்றால் கொட்டல் வசதி செய்து கொடுக்கிறார்கள்.
இதுவே இணையத்தில் எத்தனை மணிநேரம் இடைத்தங்கல் என்றாலும் அந்த வசதி இல்லை.
இதன் நுணுக்கங்கள் யாருக்காவது தெரியுமா?

Link to post
Share on other sites
On 3/25/2019 at 8:02 PM, ஈழப்பிரியன் said:

அடுத்து ஏஜென்ட் மூலம் ஒரு ரிக்கட் எடுக்கும் போது இடைத்தங்கல் 8 மணிநேரத்துக்கு மேலாக என்றால் கொட்டல் வசதி செய்து கொடுக்கிறார்கள்.
இதுவே இணையத்தில் எத்தனை மணிநேரம் இடைத்தங்கல் என்றாலும் அந்த வசதி இல்லை.
இதன் நுணுக்கங்கள் யாருக்காவது தெரியுமா?

நான் பயணங்களை விரும்புபவன் + அடிக்கடி பயணிப்பவன் 

உதாரணத்திற்கு 2018 இல் நான் 11 நாடுகளிற்கு பயணித்திருந்தேன்.

கடைசி 20 வருடங்களில் ட்ராவல் ஏஜென்சி பக்கம் தலை வைத்ததே இல்லை. அனைத்துமே இன்டர்நெட் மூலமாகத்தான் நடைபெறும் - இதுவரை பிழைத்ததில்லை.

மிகுதி உங்களின் கவனத்திற்கு ......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

நான் பயணங்களை விரும்புபவன் + அடிக்கடி பயணிப்பவன் 

உதாரணத்திற்கு 2018 இல் நான் 11 நாடுகளிற்கு பயணித்திருந்தேன்.

கடைசி 20 வருடங்களில் ட்ராவல் ஏஜென்சி பக்கம் தலை வைத்ததே இல்லை. அனைத்துமே இன்டர்நெட் மூலமாகத்தான் நடைபெறும் - இதுவரை பிழைத்ததில்லை.

மிகுதி உங்களின் கவனத்திற்கு ......

எனது கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.
நானும் இன்ரநெட் மூலமாகத் தான் ரிக்கட் எடுக்கிறேன்.(அதிகம் பயணிப்பதில்லை)

உதாரணமாக இன்ரநெட்டின்மூலமாக ரிக்கட் எடுக்கும் போது எவ்வளவு இடைத்தங்கல் வந்தாலும் கொட்டல் வசதி எடுக்க முடிவதில்லை.

ஆனால் ஏஜென்ட் மூலம் ரிக்கட் எடுக்கும் போது 8-10 மணி நேரம் இடைத்தங்கல் என்றாலே கொட்டல் வசதி செய்து கொடுக்கிறார்களே எப்படி?

Link to post
Share on other sites
4 minutes ago, ஈழப்பிரியன் said:

மன்னிக்கவும் 

8-10 மணி இடைத்தங்கலில் நான் பயணிப்பதில்லை.

இடைத்தங்கலைப் பார்த்தே நான் டிக்கெட் எடுப்பது வழக்கம்.

ஆனால் ஒரு முறை விமானம் பிந்தியதால் தொடர் விமானத்தை பிடிக்க முடியாமால் போனபோது இடைத்தங்கலுக்கு ஹோட்டலும் துபாயை சுற்றிவர ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள் எமிரேட்ஸ் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் 

8-10 மணி இடைத்தங்கலில் நான் பயணிப்பதில்லை.

இடைத்தங்கலைப் பார்த்தே நான் டிக்கெட் எடுப்பது வழக்கம்.

ஆனால் ஒரு முறை விமானம் பிந்தியதால் தொடர் விமானத்தை பிடிக்க முடியாமால் போனபோது இடைத்தங்கலுக்கு ஹோட்டலும் துபாயை சுற்றிவர ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள் எமிரேட்ஸ் 

பறவாயில்லை ஜீவன்.
இன்ரநெட் மூலமாக எடுக்கும் அனேக விலை குறைந்த ரிக்கட் ஓரிரு மணிநேர இடைத்தங்கல் அல்லது கூடியநேர இடைத்தங்கல்.இங்கே தான் சிக்குப்படுகிறோம்.
விமானத்தைத் தவறவிட்டால் கொட்டல் தருபவர்கள் கூடுதலான இடைத்தங்கலுக்கு கொட்டல் தர முடியாதிருப்பது ஏன்?

Link to post
Share on other sites
1 minute ago, ஈழப்பிரியன் said:

பறவாயில்லை ஜீவன்.
இன்ரநெட் மூலமாக எடுக்கும் அனேக விலை குறைந்த ரிக்கட் ஓரிரு மணிநேர இடைத்தங்கல் அல்லது கூடியநேர இடைத்தங்கல்.இங்கே தான் சிக்குப்படுகிறோம்.
விமானத்தைத் தவறவிட்டால் கொட்டல் தருபவர்கள் கூடுதலான இடைத்தங்கலுக்கு கொட்டல் தர முடியாதிருப்பது ஏன்?

நீங்கள் அந்த ஏர் லைன்ஸ் மூலமாக டிக்கெட்டை எடுத்தால் சிலவேளை இது சாத்தியமாகலாம். ஆனாலும் இது நீங்கள் எடுத்த முடிவு (அதாவது பல மணி நேர இடைத்தங்கல் ) அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்பது எனது கருத்து. அதை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

எனக்கு தெரியாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.
நானும் இன்ரநெட் மூலமாகத் தான் ரிக்கட் எடுக்கிறேன்.(அதிகம் பயணிப்பதில்லை)

உதாரணமாக இன்ரநெட்டின்மூலமாக ரிக்கட் எடுக்கும் போது எவ்வளவு இடைத்தங்கல் வந்தாலும் கொட்டல் வசதி எடுக்க முடிவதில்லை.

ஆனால் ஏஜென்ட் மூலம் ரிக்கட் எடுக்கும் போது 8-10 மணி நேரம் இடைத்தங்கல் என்றாலே கொட்டல் வசதி செய்து கொடுக்கிறார்களே எப்படி?

இது குறித்து முன்னரும் விலாவாரியாக விவாதித்திருக்கிறோம்.

ஏஜெண்சி காரர்கள், சும்மா குந்திப் பிடிச்சுக்கொண்டிருக்க வியாபாரம் செய்யவில்லை என்பதை முதலில் புரிந்து மேலே போவோம்.

ஏஜெண்சி காரரிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தின் குறைந்தது 1/3 பகுதியை நீங்கள் இணையம் மூலம் முயன்றால் சேமிக்க முடியும்.

அவர் உங்களிடம் பணத்தினை வாங்கி, ஹோட்டல் எல்லாம்  புக் பண்ணி, ஏதோ , விமான நிறுவனம் அந்த வசதியினை தருவது போல காட்டிக் கொள்வார்.

நீங்கள் லண்டன் ஊடாக, நியூயோர்க்கில் இருந்து கொழும்பு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இடையே லண்டனில் இரண்டு நாட்கள் தங்கி போக வேண்டும் என்றால், stopover charges என்று அறவிடுவார்கள், அப்படி ஒன்று இல்லாமலே. 

கனடா காரர்கள் இப்படி அதிகமாக கொடுக்கிறார்கள். aircanada, srilankan.... அங்க ஏறி, இங்க இறங்கவேண்டும் எண்டால், அள்ளி, கொடுக்கத்தான் வேணும்.

நீங்கள் இணையத்தில் புக் பண்ணினால், norweigianair மலிவாக லண்டன் கொண்டு வரும். பின்னர் உங்கள் நண்பருடன் இரண்டு நாள்.

அங்கிருந்தவாறே இணையத்தில் புக் பண்ணினால், gulfair, omanair, quatarair கொழும்புக்கு, ஸ்ரீலங்கனிலும் பார்க்க £300 குறைவாக கொண்டு போகும்.

நீங்கள் கொஞ்சம் புகுந்து விளையாடினால், 1/2 வரை மிச்சம் பிடிக்கலாம்.

லண்டனில் பழைய பெருச்சாளி ட்ராவல் ஏஜென்ட் Time ட்ராவல்.

போனமாதம் சந்தித்தபோது கேட்டேன்.... எப்படி வியாபாரம்?

எனெத்தை சொல்லுறது, சனம் இன்டர்நெட் எண்டு திரியுது.... எங்க வரப்போகுது எண்டு அழுத்துக் கொண்டார்.  

Edited by Nathamuni
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

ஏஜெண்சி காரர்கள், சும்மா குந்திப் பிடிச்சுக்கொண்டிருக்க வியாபாரம் செய்யவில்லை என்பதை முதலில் புரிந்து மேலே போவோம்.

 ஏஜெண்சி காரரிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தின் குறைந்தது 1/3 பகுதியை நீங்கள் இணையம் மூலம் முயன்றால் சேமிக்க முடியும்.

அவர் உங்களிடம் பணத்தினை வாங்கி, ஹோட்டல் எல்லாம்  புக் பண்ணி, ஏதோ , விமான நிறுவனம் அந்த வசதியினை தருவது போல காட்டிக் கொள்வார்.

நான் வாங்கிய அதே பணத்துக்கு எனது நண்பர் அதே ரிக்கட்ரை வாங்கி இடைத்தங்கல் அவர் கேட்காமலே ஏஜென்ட்காரன் கொட்டல் போட்டு கொடுக்கிறானே  எப்படி?
இது நடந்து 3 வருடம்.இன்னமும் சரியான தகவல் பெற முடியவில்லை.
தகவலுக்கு நன்றி நாதம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் வாங்கிய அதே பணத்துக்கு எனது நண்பர் அதே ரிக்கட்ரை வாங்கி இடைத்தங்கல் அவர் கேட்காமலே ஏஜென்ட்காரன் கொட்டல் போட்டு கொடுக்கிறானே  எப்படி?
இது நடந்து 3 வருடம்.இன்னமும் சரியான தகவல் பெற முடியவில்லை.
தகவலுக்கு நன்றி நாதம்.

உங்களிடம் மொத்தமாக வாங்கிற காசுக்கு, ஒரு $50 க்கு ஒரு ஹோட்டல் டிக்கெட் போட்டு தருவது, ஏஜெண்சி கெட்டித்தனம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீங்கள் லண்டன் ஊடாக, நியூயோர்க்கில் இருந்து கொழும்பு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 இடையே லண்டனில் இரண்டு நாட்கள் தங்கி போக வேண்டும் என்றால், stopover charges என்று அறவிடுவார்கள், அப்படி ஒன்று இல்லாமலே. 

கனடா காரர்கள் இப்படி அதிகமாக கொடுக்கிறார்கள். aircanada, srilankan.... அங்க ஏறி, இங்க இறங்கவேண்டும் எண்டால், அள்ளி, கொடுக்கத்தான் வேணும்.

நீங்கள் இணையத்தில் புக் பண்ணினால், norweigianair மலிவாக லண்டன் கொண்டு வரும். பின்னர் உங்கள் நண்பருடன் இரண்டு நாள்.

 அங்கிருந்தவாறே இணையத்தில் புக் பண்ணினால், gulfair, omanair, quatarair கொழும்புக்கு, ஸ்ரீலங்கனிலும் பார்க்க £300 குறைவாக கொண்டு போகும்.

 நீங்கள் கொஞ்சம் புகுந்து விளையாடினால், 1/2 வரை மிச்சம்

நாதம் அமெரிக்கா கனடாவிலிருந்து போகிறர்கள் நீங்கள் சொல்லுவது போல பயணிக்க முடியாது.ஏனென்றால் இங்கிருந்து போகும் போது கொழும்புக்கு ஒரே ரிக்கற் போட்டால் 50 இறாத்தல் எடை கொண்ட 2 பொதிகள் கொண்டு போகலாம்.ஆனால் ஐரோப்பாவிலிருந்து போகிறவர்கள் அப்படி கொண்டு போகலாமோ?ஒரு பொதி தான் கொண்டு போகலாம் என்றே எண்ணுகிறேன்.

2 hours ago, Nathamuni said:

எனெத்தை சொல்லுறது, சனம் இன்டர்நெட் எண்டு திரியுது.... எங்க வரப்போகுது எண்டு அழுத்துக் கொண்டார்.  

உண்மை தான் ஏஜென்சிகாரர் பாடு திண்டாட்டம் தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் அமெரிக்கா கனடாவிலிருந்து போகிறர்கள் நீங்கள் சொல்லுவது போல பயணிக்க முடியாது.ஏனென்றால் இங்கிருந்து போகும் போது கொழும்புக்கு ஒரே ரிக்கற் போட்டால் 50 இறாத்தல் எடை கொண்ட 2 பொதிகள் கொண்டு போகலாம்.ஆனால் ஐரோப்பாவிலிருந்து போகிறவர்கள் அப்படி கொண்டு போகலாமோ?ஒரு பொதி தான் கொண்டு போகலாம் என்றே எண்ணுகிறேன்.

உண்மை தான் ஏஜென்சிகாரர் பாடு திண்டாட்டம் தான்.

50lbs = 22.6796kg.

Gulf Air = 23kg * 2 bags + Cabin bag

Sri Lankans = 40kg + Cabin bag

Emirates = 45kg + Cabin bag

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Emirates = 45kg + Cabin bag

என்னது 45கிலோவா?????😵       இது எப்ப தொடக்கம்? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

என்னது 45கிலோவா?????😵       இது எப்ப தொடக்கம்? 

https://gulfnews.com/business/aviation/emirates-offers-up-to-45-kilos-free-baggage-allowance-on-30-destinations-1.2157681

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஐயோ எங்களை பேக்காட்டிப்போட்டாங்களடி பாக்கியம்.....பேக்காட்டிப்போட்டாங்களடி பாக்கியம்.....☹️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஐயோ எங்களை பேக்காட்டிப்போட்டாங்களடி பாக்கியம்.....பேக்காட்டிப்போட்டாங்களடி பாக்கியம்.....☹️

உதார்உது புதுசா பாக்கியம்.
என்ன சின்னவீடோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உதார்உது புதுசா பாக்கியம்.
என்ன சின்னவீடோ?

குடும்பத்துக்கை றபிள் பண்ணுறதுக்கெண்டே FBI  ரேஞ்சிலை கொஞ்சப்பேர்   கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு திரியுறாங்களப்பா....:cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நான் வாங்கிய அதே பணத்துக்கு எனது நண்பர் அதே ரிக்கட்ரை வாங்கி இடைத்தங்கல் அவர் கேட்காமலே ஏஜென்ட்காரன் கொட்டல் போட்டு கொடுக்கிறானே  எப்படி?
இது நடந்து 3 வருடம்.இன்னமும் சரியான தகவல் பெற முடியவில்லை.
தகவலுக்கு நன்றி நாதம்.

ஏஜென்சிகளிடம் நீங்கள் டிக்கெட்டை மலிவாக பெற்றுக்கொள்ள முடியும் 
விமான டிக்கெட் மட்டும் அல்ல எதுவுமே முகவரிடம் மலிவுதான் காரணம் 
நீங்கள் நேரடியாக குறித்த விமான சேவையின் தளத்தில் வாங்கும்போது 
அவர்கள் மற்றைய விமான சேவையுடன் போட்டிபோடும் விதமாக தமது 
விலையை ஏற்கனவே தீர்மானித்து இருப்பார்கள் அந்த விலையில் மட்டுமே 
பெற்றுக்கொள்ள முடியும். 
விமான சேவைகள் குறித்த சேவையில் உதாரணத்துக்கு நியூ யோர்கில் இருந்து 
துபாய் ஊடாக கொழும்பு என்ற ரூட்டில் எவ்ளவு இருக்கைகள் விற்பனையாகிறது 
என்பதை கணக்கெடுத்து கொள்வார்கள் பின்பு தமது செலவு என்ன எத்தனை 
டிக்கெட் வித்தால் லாபம் என்பதையும் கணக்கு எடுத்து 

ஒரு விமானத்தின் 20-30% இருக்கைகளை முகவரிடம் கொடுத்துவிடுவார்கள் 
முகவருக்கு தமது விலையிலும் இருந்து 30% கழிவுகளித்தான் அநேகமாக கொடுப்பார்கள் 
இந்த எக்ஸிபிடீயா  ப்ரைஸ்லைன்  சீப்டிக்கெட் போன்ற இணைய வழி விற்பனையாளர்கள் 
மற்றும் டிக்கெட் ஏஜெண்சிகளிடம் கொடுபார்கள் .

இங்கு முகவருக்கு விமானசேவையிலும் குறைந்த விலையில் விற்று எப்படி லாபம் வருகிறது என்றால் 
அவர்கள் 30% கழிவில் பெற்று உங்களுக்கு 15% வீத கழிவில் தருவார்கள். தவிர அரசுக்கு கட்ட வேண்டிய 
வரிப்பணத்தை வேறு ஒரு நாட்டில் ஒரு கிளையை திறந்து அதுதான் கெட் ஆபிஸ் என்று  ஏய்த்து விடுவார்கள் 

பயணியாக உங்களுக்கு வரும் லாப நஸ்டம் 
விமானசேவை உங்களுக்கு அதிகுறைந்த சேவையே வழங்கும் 
வேறு திகதிக்கு மாற்றுவது  இருக்கைகளை மாற்றுவது அல்லது 
இனொரு வகுப்புக்கு  (first .. business class  economy flex class  ...Upgrade .) அப்கிரேட் பண்ணுவது போன்ற சலுகைகள் இருக்காது 

இதில் கோட்டெல் விடயம் எப்படி வருகிறது என்றால் ......
எல்லா முறை நீங்கள் டிக்கெட் வாங்கும்போதும் கிடைக்காது ஒவ்வரு விமான சேவைக்கும் 
அந்ததந்த விமான கப்களில் (airlines hub) அல்லது அவர்களின் பட்னர் விமான சேவையின் கப்களில் அந்த விமான நிலைய 
அண்மித்து சில கோட்டல்களில் ஒரு குறிப்பிட்ட அளவு அறைகளை காண்ட்ராக்ட் செய்து கொள்வார்கள் 
இது விமான சேவை முகவருக்கு 30% இருக்கைகளை கொடுப்பதுபோல 
கோட்டல்களும் அவர்கள் சொந்த கணக்கை பார்த்து விமான சேவை களுக்கு 20-30% அறைகளை கொடுத்து விடுவார்கள்.

இப்போ நீங்கள் இன்று டுபாயில் இறங்கினால் இன்று போகும் விமானத்தில் முகவருக்கு 
ஒதுக்கிய இருக்கைகளை காட்டியும் ஒரு வேளை நாளை செல்லும் விமானத்தில் கூடுதல் இருக்கைகள் 
இருந்தால் உங்களை கோட்டலில் போடுவதை அவர்கள் ஒரு லாபமாகவே பார்க்கிறார்கள் 
எப்படி என்றால் ...... எல்லா விமான சேவையிலும் ஒரு 5 இருக்கைகள் இறுதிநேர விற்பனைக்கு இருக்கும் 
இது ஏதாவது அவசரமாக செல்ல எத்தனிப்பவர்கள்  வியாபாரிகள் முதலாளிகள் போன்றவர்கள் இன்றே போகவேண்டும் என்பார்கள் அவர்களுக்கு சராசரியாக 160% விலையில் டிக்கெட்டை விற்பார்கள் 
அது தவிர உங்கள் விமான பயணம் நேரம் குறையும்போது அதன் விளையும் கொஞ்சம் கூடும் 

இதுவே நீங்கள் ஒருநாள் டுபாயில் நின்று போக போகிறேன் 
என்று கேட்டீர்கள் என்றால் (நேரடியாக விமான சேவையிடம்) 
உள்ள விலையிலும் ஒரு $1000 கூடுதலாக சொல்வார்கள்.

Supply& Demand = Price 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதுவே நீங்கள் ஒருநாள் டுபாயில் நின்று போக போகிறேன் 
என்று கேட்டீர்கள் என்றால் (நேரடியாக விமான சேவையிடம்) 
உள்ள விலையிலும் ஒரு $1000 கூடுதலாக சொல்வார்கள்.

உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி மருது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடீ.....ஆத்தாடி!

இதுக்குள்ள இம்புட்டு விசயம் இருக்கெண்டு...இண்டைக்குத் தான் தெரியும்.!😀

தகவலுக்கு நன்றி....மருதர்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

ஏஜென்சிகளிடம் நீங்கள் டிக்கெட்டை மலிவாக பெற்றுக்கொள்ள முடியும் 
விமான டிக்கெட் மட்டும் அல்ல எதுவுமே முகவரிடம் மலிவுதான் காரணம் 
நீங்கள் நேரடியாக குறித்த விமான சேவையின் தளத்தில் வாங்கும்போது 
அவர்கள் மற்றைய விமான சேவையுடன் போட்டிபோடும் விதமாக தமது 
விலையை ஏற்கனவே தீர்மானித்து இருப்பார்கள் அந்த விலையில் மட்டுமே 
பெற்றுக்கொள்ள முடியும். 

மருதர், நீங்கள் சொல்வது பழைய வியாபார மாடல்.

ஏஜெண்சி  ஒருபோதும் உங்களுக்கு அந்த பெரிய கழிவினை தராது. அவர்கள் அங்கேயும் கழிவை வாங்கி, மேலதிகமாக உங்களிடமும் பிடுங்கவே வியாபாரம் செய்தார்கள். Insurance போன்ற தேவை இல்லாத விசயங்களை தலையில கட்டி விடுவார்கள்.

உங்களுக்கு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் இன்சூரன்ஸ் கொம்பனிக்கு பணம் செலுத்தாமல் தாங்களே வைத்துக் கொள்வார்கள். அப்படி ஏதாவது நடந்து, நீங்கள் தொடர்பு கொண்டால், அந்த வேலையாள், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அறிவிக்க மறந்து விட்டார், இப்போது வேலையில் இல்லை. என்ன செய்வது என்று கதை விடுவார்கள்.

உங்களுக்கு தந்த ரசீது தான், இன்சூரன்ஸ் டாக்குமென்ஸ் என்று சுத்திய பல ஏஜெண்சிகளினால், சட்டம் இறுகியது வேறு கதை. 

ஒரு ஏஜெண்சி, மாதத்துக்கு எவ்வளவு சீட் புக் பண்ணுகிறார்கள் என்று கணக்கிட்டு, அதற்குரிய வகையில் 'கமிஷன்' பேசிக் கொள்வார்கள்.

இதன் காரணமாகவே, ஸ்ரீலங்கன், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் ஒரு போதும் லாபத்தில் இயங்கவில்லை. மேலும், எமிரேட்ஸ் கீழ் லாபத்தில் இயங்கிய ஸ்ரீலன்கனை உடன்படிக்கை முறித்து, கைத்தடியிடம் கொடுத்தார் மகிந்தா, இந்த ஏஜெண்சி கமிஷன் காரணமாகத் தான்.

சில வருடங்களுக்கு முன்னர் நான் மேலே சொன்ன time ட்ராவல் நிறுவனத்தில் ஒரு டிக்கெட் கேட்டிருந்தேன். £620 சொன்னார்கள். அதே டிக்கெட் travel pack என்னும் பெரிய நிறுவனத்தில் வேலை செய்த நண்பர் மூலம் £400 க்கு வாங்கினேன். (என்ன, ஒரு ஹாலிடே package ஆக தந்து, கொழும்பில் இறங்கி, உன் வழியே போ என்றார்). 

டிக்கெட் வாங்கவில்லை என்று திரத்திய time travel க்கு இந்த விலை சொல்லப் பட்ட போது, அவர் மேலும் இரண்டு தமிழ் genral sales agency உடன் சேர்ந்து ஸ்ரீலங்கனுடன் பேசிய போது, தெளிவாக, அந்த நிறுவனம் மாதம் 6000 இருக்கைகளை பதிவதால் கூடுதல் கமிசன் பெறுகிறார்கள். நீங்கள் தனித்தனியே, மாதம் 100, 200 என்றால் விலை அப்படித்தானே வரும் என்றார்கள்.

மேலே சொன்ன மகிந்தா கைத்தடி, இந்த சிறிய, பெரிய ஏஜென்சிகளுக்கு, மேலே, ஒரு பெரிய ஏஜென்சியாக அமர்ந்து, சகல இருக்கைகளும் அவருக்குள்ளாகவே போனது போல, அரசியல் செல்வாக்குடன் செட்டப் செய்து, மிக பெரிய கமிஷனை வாங்கி, பங்கு போடுவார்கள். இதுவே ஸ்ரீலங்கன் வீழ்ந்த கதை.

இப்போது பல விமான நிறுவனங்கள் இன்டர்நெட் மொடலுக்கு போய் விட்டன. இந்த இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக வியாபாரம் செய்வதால் இரு பகுதியும் பயன் பெறுகின்றன. பிரிட்டனில், EasyJet இந்த நேரடி வியாபாரம் மூலம் ஒரு வெற்றிகரமான நிறுவனம். இன்னொரு நிறுவனம் ryan air. Norweyian Air  அடுத்த உதாரணம்.

பெரிய ஏஜெண்சிகள், தமது மொடலை package ஹொலிடேக்கு மாத்தி விட்டன. சிறியது வியாபாரத்தில் இல்லை.

London, Heathrew  டெர்மினல் 5 புரொஜெக்ட்டில் வேலை செய்த அனுபவத்தில் இருந்து இந்த பொதிகள் தொலைந்து போவது குறித்து சொல்ல வேண்டும்.

பொதிகள் கையளிக்கப்பட்டதும், ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு கன்வேயர் பெலிட்டில் அனுப்பிடப்படும்.

உள்ளே போய் பார்த்திருக்கிறேன். ஸ்பெஷல் பாஸ் வேண்டும். உள்ளே மிகவும் பாழடைந்த கட்டிடம் போல இருக்கும். இப்படி இருக்கிறதே என்று வியந்தேன். சுவர்களில் grafiti கிறுக்கல்கள், அது வேறு உலகம்.....

அங்கே தனியே பொதிகள் ஸ்கேனிங், நாய்கள் மோப்பம் என்று பல விசயங்கள் நடக்கும்.

உள்ளே இந்த பெலிட்டின் ஒவொரு முனைவிலும், ஸ்கேனர் இருக்கும். இந்த ஸ்கேனர் அந்த ஸ்டிக்கரினை ஸ்கேன் பண்ணி, அதற்குரிய பெல்ட்டிக்கு திருப்பி விடும். அதோடு, அந்த பொதியின் அடையும் இடமான விமானத்துக்கு செல்ல எடுக்கும் நேரத்தினை கணக்கிட்டு, 3 பகுதிக்கு தகவலை அனுப்பும் (இதுதான் எனது ப்ராஜெக்ட்). ஒன்று handlers, அடுத்தது airline, அடுத்தது விமான நிலைய நிர்வாகிகள்.

குறித்த ஒரு பொதியின், பழைய ஸ்ட்ரிக்கர் கவனிக்காமல், பொதியில் இருந்தால், இந்த ஸ்கேனர் சிலவேளை, வேறு எங்கோ அனுப்பி விடும்.

அதை தேடித் கண்டு பிடித்து, குறித்த விமானத்துக்கு கொண்டு போக எடுக்கும் நேரத்தினை கணக்கிட்டு, இவ்வளவு நேரம் எடுக்கும் என மேலே சொன்ன மூன்று பகுதிக்கும் அறிவிக்கப்படும்.

விமானம், தனக்குரிய slot இல் இருக்கும் நேரத்துக்கு மட்டும் பணம் செலுத்தி இருக்கும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிசத்துக்கும், விமான நிலையம் பணம் அறவிடும். உதாரணமாக £3,000 என்று வைத்துக்கொள்வோம்.

தவறிய இரண்டு பொதிகள் வர மேலதிகமாக மூன்று நிமிடங்கள். ஆகவே £9,000 மேலதிக கட்டணம்.

இந்த இரண்டு பொதிகளை அப்படியே விட்டு விட்டு கிளம்பினால், பயணிக்கு குறைந்தது £1000, கூடியது £2,000. சேமிப்பு £7,000 முதல் £8,000 வரை.

இப்போது புரிகிறதா, ஏன் பொதிகள் வருவதில்லை என?

அதேவேளை, தவறிய பொதிகள் எண்ணிக்கை 12 ஆயின், விமானம் நின்று அவற்றினை எடுத்து செல்லும். ஏனெனில் அது லாபமானது.

இந்த மிக முக்கிய ப்ரொஜெக்ட் மூலம், பொதிகள் இல்லாமலே விமானங்கள் கிளப்புவதையும், பொதிகளுக்காக காத்திருந்தது கிளம்புவதையும் முடிவு செய்ய வாய்ப்பு கிடைத்தது.

மிக முக்கியமான மருந்துகளை கைப்பையிலேயே கொண்டு போக வேண்டும்.

Edited by Nathamuni
 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

ப்போது புரிகிறதா, ஏன் பொதிகள் வருவதில்லை என?

அதேவேளை, தவறிய பொதிகள் எண்ணிக்கை 12 ஆயின், விமானம் நின்று அவற்றினை எடுத்து செல்லும். ஏனெனில் அது லாபமானது.

இந்த மிக முக்கிய ப்ரொஜெக்ட் மூலம், பொதிகள் இல்லாமலே விமானங்கள் கிளப்புவதையும், பொதிகளுக்காக காத்திருந்தது கிளம்புவதையும் முடிவு செய்ய வாய்ப்பு கிடைத்தது.

மிக முக்கியமான மருந்துகளை கைப்பையிலேயே கொண்டு போக வேண்டும்.

டிக்கெட் முகவர்கள் என்ன சிரமதான பணியாகவா வியாபாரம் செய்கிறார்கள்?
அவர்களும் பணம் பார்க்கத்தான் வியாபாரம் செய்கிறார்கள் 
சுத்துமாத்து பின் காணாமல் போதல் ஆஃபீஸ்களை பூட்டி விட்டு ஓடுதல் எல்லாம் 
நடக்குதுதான். ஆனாலும் நேர்மையாக வேலை செய்தால் கூடுதல் வாடிக்கையாளர்களை 
பெற்று கூடிய லாபம் பெற வாய்ப்பு உள்ளது. ஒரு டிக்கெட்டில் 15% லாபம் பெற முடியும் என்றால் 
அது பெரிய தொகை அதில் ஒரு முகவர் மற்றும் விமான சேவை இரண்டுமே லாபம் பெறலாம். 

முகவர்களும் எவ்வளவுக்கு எவ்ளவு விளம்பரம் செய்கிரார்களோ 
அவர்கள் அவ்வளவுக்கு லாபம் அடைய வாய்ப்பு உண்டு.

நேரடியாக விமானங்கள் முகவர்கள் இல்லாமல் டிக்கெட் வித்து 
முழு இருக்கைகளையும் நிறப்பி  கொண்டு போவது என்பது சாத்தியம் 
இல்லை என்பதால்தான் 30% தள்ளுபடியில் முகவரிடம் கொடுக்கிறார்கள் 

நீங்கள் பிரிடிஷ் ஏர்வேய்ஸ் இணையத்துக்கு போனால் 
அவர்கள் எங்கு போகிறார்களோ அங்குதான் டிக்கெட் வாங்க முடியும் 
அல்லது அவர்கள் பாட்னர் ஏயர்லைன்ஸ் ஊடக தொடரவேண்டும் 
லண்டனில் இருக்கும் எத்தனை பேருக்கு பிரிடிஷ் ஏயர்வெய்ஸ் எங்கு எங்கு போகிறது 
என்பது தெரியும்? 
இதனால்தான் பயணிகள் முகவரிடம் போகிறார்கள் இதுவே நீங்கள் 
எஸ்சிப்பீடியா இணையத்துக்கு போனால் எங்கு போக போகிறீர்களோ அங்கு 
எந்த விமான சேவையில் டிக்கெட் மலிவாக இருக்கிறது என்பதை காட்டுகிறது 
ஒரே தளத்தில் எல்லா விபரமும் வருகிறது.

ஈஸிஜெட் ரைன்எயர் போன்றவை ஐரோப்பியா வுக்குள் மலிவு விலையில் 
சேவை வழங்குபவர்கள் இவர்களுக்கு இனி பெரிதாக விளம்பரம் தேவை இல்லை 
ஐரோப்பாவில் விமான பயணம் செய்யும் அனைவருக்குமே ஈஸிஜெட் பற்றி தெரியும் 
ஆதலால் அவர்கள் தமது சொந்த இணையம் ஊடகாவே செயல்பட முடிகிறது 

இப்படி பிரிடிஷ் ஏயர்வெய்சால் செயல்பட முடியாது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தன்னிச்சையாகவே செயல்பட்டது  தமது வாடிக்கையாளர்களுக்கு 
கொடுக்கும் சிறந்த உபசரிப்பால் கவர்ந்து இழுத்தது . அவர்கள் டிக்கெட்டும் அதிகமான விலை 
கூடுதலாக வியாபாரிகளை குறிவைத்தே அவர்கள் செயல்பட்டார்கள் 
10-15 வருடம் முன்பு ஸ்டார் அலையென்ஸ் உடன் சேர்ந்து கொண்டார்கள்.  

உங்களுக்கு நான் சொல்லி தெரிய தேவை இல்லை ...
ஞாபகம் ஊட்ட கூறுகிறேன் வியாபாரத்தில் இரண்டு விதம் உண்டு 
ஒன்று கூடுதல் பொருட்களை குறைந்த லாபத்தில் விற்பது 
மற்றது மிகவும் குறைவான பொருட்களை கூடிய லாபத்தில் விற்பது 
சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் இரண்டாவது விதம்.

ஏயர்லைன்ஸ் இல்லை உலகில் அனைத்து வியாபாரமும் முகவர் மூலம் 
கமிஷன் ஊடாகவே வெற்றி பெருகிறது 
நீங்கள்தான் லீலா கறிமிளகாய் தூள் முதலாளி என்றால். ஐரோப்பாவில் கனடாவில் 
பல இறக்குமதி யாளர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் சொல்வீர்கள் ஒரு வருடத்தில் 
நீங்கள் 1  கிலோ போத்தல் 10000 எடுத்தால் உங்களுக்கு $2க்கு ஒரு போத்தல் தருகிறேன் என்று. இல்லை என்றால் ஒரு போத்தல் $3 என்று 
இறக்குமதியாளர் 10 000 போத்தல் வாங்கி விநியோகித்தால் ஒரு போத்தலில் $1 லாபம் பெறலாம்.
10 000 போத்தல் இறக்குமதி செய்பவன் $3க்கு விற்க முடியும் .... $3க்கு வாங்குபர் அதுக்கு அதிகமாகவே 
விற்க வேண்டும். 
உங்களுக்கு இதில் பெருத்த லாபம் உண்டு உங்களுக்கு ஒரு வருடத்தில் எவ்வளவு தயாரிக்க வேண்டும் 
என்பது இப்போதே தெரியும் ஆதாலால் அதற்க்கான மூல பொருட்களை இப்படி ஒட்டுமொத்த கொள்வனவில் 
லாபம் பெறலாம் ... விளம்பரம் தேவை இல்லை அதை இறக்குமதியாளர் பார்த்து கொள்வார். 
இப்படி இருவருமே லாபம் அடையலாம் என்பதால்  முகவர் மூல வியாபாரம் தொடரும். 

எமிரேட்ஸ்  ஸ்ரீலங்கன் விடயம் வித்தியாசம் ஆனது 
எந்த விமான சேவையும் சொந்தமாக விமானம் வாங்குவது இல்லை 
எமிரேட்ஸ் மட்டும்தான் வாங்குகிறது இப்போ எதியாடும் வாங்குகிறது 
மற்ற விமான சேவை எல்லாம் வங்கிகள் ஊடாக லீசிங் செய்யப்படுகிறது .. எமிரேட்ஸ் தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் அது அரபு ராஜ்ஜியத்தின் ஒரு சப்சிடியறியாகும் எதிர்கால லாப நோக்கில் 
அரசுதான் முதலீடு செய்கிறது ... சிறிலங்கன் அவர்களுடன் இருக்கும்போது விமானங்கள் 
அவர்கள் வாங்கி கொடுத்தார்கள் வட்டி லாபம் .. இப்போ வட்டி மதம் மாதம் கட்டுவது என்றால் 
அவ்வளவு லாபமும் பெறவேண்டும். எமிரேட்ஸுக்கும் அமெரிக்க விமான சேவைகளுக்கும் இதானால் 
எப்போதும் சண்டை துபாய்க்கு இப்போது அமெரிக்க விமானங்கள் செல்வது இல்லை எமிரேட்ட்ஸ் இங்கு நான்கு ஏர்போட்டுக்கு வருகிறார்கள் 7க்கு செல்ல அனுமதி கேட்டு இப்போதும் பெண்டிங்கில் இருக்கிறது 

பொதிகள் விடயம் ...
ஒவ்வரு நாட்டு வான்பரப்பு சட்டதிட்ட்ங்கள் வேறு வேறானவை 
இங்கு அமெரிக்காவில் வேறுமாதிரி.  பொதிகள் தொலைய வேறு  வேறு காரணிகள் உண்டு 
இப்போ சீர்படுத்த படுகிறது நான் வேலை செய்யும் டெல்டா விமான சேவையில் நீங்கள் 
உங்கள் ஸ்மார்ட் போனில் உங்கள் பொதியை ட்ராக் செய்துகொள்ளலாம். அநேகமாக எல்லா 
விமான சேவையிலும் இந்த வசதி இருக்கும் என்று நம்புகிறேன்.

வெளிநாட்டு பயணம் என்பதில் ஒரு சிக்கல் உண்டு பொதி விடயத்தில் 
பயணிகள் இல்லாமல் பொதிகள் அனுப்ப முடியாது அப்படி ஏதும் அங்கு நடந்ததை நீங்கள் 
வேறு விதமாக புரிந்து கொண்டீர்களோ தெரியவில்லை அப்படி அனுப்பினால் அந்த நாடு நிறைய 
அபதாரம் குறித்த விமான சேவைக்கு அறவிடும். நீங்கள் மட்டு மட்டான நேரத்தில் பாக்கை செக்பண்ணிவிட்டு  விமானத்துக்கு ஓடினால் .... நீங்கள் விமானத்தில் ஏறும் மட்டும் 
உங்கள் பொதியை ஏற்ற மாட்டார்கள் (வெளிநாட்டு பயணம் என்றால்). நீங்கள் ஏற்கனவே அங்கு சென்று அடைந்து  இருந்தால் இங்கிருக்கும் பொதியை உங்களிடம் அனுப்ப முடியும். 

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

நன்றி மருதர்.

நீங்கள் சொல்வது பயணிகள் இல்லாமல் பொதிகள் ஏற  முடியாது என.

நான் சொன்னது, பயணிகள் ஏறிய பின்னும் பொதிகள் ஏறாதது.

மேலும், இப்போது ebookers.com, xpedia போன்ற இன்டர்நெட் முகவர் தளங்களே உள்ளன. முன்னர் போல high street முகவர்கள் இல்லையே.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் விடும் ஊழியர்கள்..ஸ்கூல் பீஸ், இஎம்.ஐ என்ன பண்ணுவது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கதறல்

Edited by Nathamuni
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சார்லி ஹேப்டோாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெறுக்கத்தக்க தாக்குதல்: எர்டோகன் கண்டனம் தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸின் சார்லி ஹேப்டோ பத்திரிக்கை துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேலிச்சித்திரத்திற்கு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு வெறுக்கத்தக்க தாக்குதல் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததன் பின்னணியில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்ட பின்னர் 2011ஆம், 2015ஆம் மற்றும் 2020ஆம் ஆகிய ஆண்டுகளில் அந்த பத்திரிக்கை அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்ட் உட்பட பத்திரிக்கை ஊழியர்கள் 12பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவரை அப்துல்லாக் அன்சோரோவ் என்ற இளைஞர் படுகொலை செய்தார். ஏற்கனவே கிரேக்கம்- துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், விரிவுரையாளரின் படுகொலைக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் இருநாடுகளுக்கிடையேயான மோதலை அதிகரிக்க செய்துள்ளது. http://athavannews.com/துருக்கி-ஜனாதிபதியை-சர்ச/
  • பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்! ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அணு உலை அமைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உலை அமையும் இடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது. இதையடுத்து அணு உலை கட்டும் பணிகள் கைவிடப்பட்டது. இந்தநிலையில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாதன்ஸ் நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இதுகுறித்து ஈரான் தரப்பில் உடனடியாக என்ற கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. http://athavannews.com/பூமிக்கு-அடியில்-புதிய-அ/
  • வடமராட்சி கொரோனா நோயாளி சென்று வந்த இடங்கள் அறிவிப்பு! பருத்தித்துறை – கீரிமலைக்கான 763ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்தில் கொரோனா தொற்றாளர் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்களுக்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்டு வடமராட்சி, பொலிகண்டி பிரதேசத்தில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த தொற்றாளரிடம் சுகாதாரப்பிரிவினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அவரது பயண வழித்தடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர் பேலியகொடை மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர்,   https://newuthayan.com/வடமராட்சி-கொரோனா-நோயாளி/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.