Jump to content

யாழில் மரண வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. 

vaalvettu.jpg

யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான நாகராசா நிதர்சன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார். 

அளவெட்டியில் உள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு மரண சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த நான்கு பேர் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு கைக் கோடரி , வாள் என்பவற்றுடன் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் இருந்த சங்கிலி , பெண்களின் தோடுகள் என்பவற்றை அபகரித்ததுடன் , ஒருவரை வெட்டி காயப்படுத்தினர். 

கொள்ளையிட்ட பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும் போது , வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் திறப்பை வாள் முனையில் பறித்து மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டு சென்றனர். 

குறித்த கொள்ளை கும்பல் தப்பி செல்லும் போது வீட்டில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பிய போதும் , அயலவர்கள் உயிரிழந்தவரின் இழப்பை தாங்க முடியாது கதறி அழுகிறார்கள் என நினைத்து உடனே உதவிக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அறிவிக்க ப்பட்டத்தை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/52629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அறிவிக்க ப்பட்டத்தை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அவைக்கு பங்கு போனால் சரிதானே .

Link to comment
Share on other sites

இழவு வீட்டில் வந்து கொள்ளையடிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணமும் மாறி வருவது கவலை அளிக்கின்றது. சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் என்பன போன்றன இதனை வெறுமனே இது கிரிமினல் குற்றங்கள் என்ற அளவில் அணுகாமல் அடிப்படையான பிரச்சனைகளை பற்றி இனியாவது விவாதித்து தீர்வுகளை காணவேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ புலம்பெயர் சமூகம் கொடுக்கும் பணம் வர்க்க பிரச்சனைகளை தோற்றுவித்து, பணம் மட்டுமே முக்கியமான ஒன்று என்ற எண்ணத்தை தோற்றுவித்துக் கொண்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

18 minutes ago, நிழலி said:

இழவு வீட்டில் வந்து கொள்ளையடிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணமும் மாறி வருவது கவலை அளிக்கின்றது. சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் என்பன போன்றன இதனை வெறுமனே இது கிரிமினல் குற்றங்கள் என்ற அளவில் அணுகாமல் அடிப்படையான பிரச்சனைகளை பற்றி இனியாவது விவாதித்து தீர்வுகளை காணவேண்டும்.

இது யாழ்பாணத்தானின் அடி மனநிலை. இங்கிருந்து தோன்றிய இயக்கங்கள் கொள்ளைகளிலும் கொலைகளிலும் ஈடுபடும்போது வாயடைந்திருந்த அல்லது வாயடைக்கப்பட்ட சமூகம் இது . 

வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.

அன்று இதற்கு சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் என்பன போன்றன எதிராக குரல் கொடுத்தபோது அதற்கு மரணத்தை பரிசாக கொடுத்தவர்கள், இன்று நியாயத்தை தேடுவது நகைப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

அன்று இதற்கு சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் என்பன போன்றன எதிராக குரல் கொடுத்தபோது அதற்கு மரணத்தை பரிசாக கொடுத்தவர்கள், இன்று நியாயத்தை தேடுவது நகைப்பானது.

ஜீவன் 
சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே தான் நிற்கிறீர்கள்.வெளியே வரவேமாட்டீர்களா?

Link to comment
Share on other sites

1 minute ago, ஜீவன் சிவா said:

யாழ்ப்பாணத்தில் இருந்து தோன்றிய இயக்கங்களில் அனேகமான இயக்கங்கள் தங்கள் ஆரம்ப காலங்களில் வங்கி கொள்ளைகள் மற்றும் கடும் செல்வந்தர்களை கடத்தி பணம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் ரெலோ தவிர பெரும்பாலனானவை சாதாரண மக்களிடம் சென்று கொள்ளை அடித்தது கிடையாது. நான் பிறந்து வளர்ந்த அதே மண்ணில் அதே காலத்தில் தான் இந்த இயக்கங்கள் தோன்றி வளர ஆரம்பித்து இருந்தமையால் இதை என் அனுபவத்தின் ஊடகாவே சொல்ல முடிகின்றது.

இந்த இயக்கங்களில் பின்னாளில் விடுதலை புலி போராளிகளும் தலைமையும் செய்த மகத்தான அளப்பரிய தியாகங்கள், அர்ப்பணிப்புகள், உயிர்கொடைகள்  போன்றனவற்றிற்கு இதே சமூகவியலாளர்களும், பொது அமைப்புகளும், பல்கலைக்கழக சமூகமும் கொடுத்த ஆதரவு என்பன மலைக்க வைக்கும் அளவுக்கு இருந்தையும் இதனால் அரசின் எடுபிடிகளான ஒட்டுக் குழுக்கள், அரச புலனாய்வு உறுப்பினர்கள் போன்றவர்களால் வகை தொகையின்றி சுட்டுக் கொல்லப்பட்டதையும் நாம் மறக்கவில்லை. அன்று அவர்கள் செய்த அதே அளவான பங்களிப்பை இன்றும் கொடுப்பார்களானால் இன்றிருக்கும் சமூக பிரச்சனைகள் பலவற்றை தீர்க்க முடியும்

Link to comment
Share on other sites

37 minutes ago, நிழலி said:

யாழ்ப்பாணத்தில் இருந்து தோன்றிய இயக்கங்களில் அனேகமான இயக்கங்கள் தங்கள் ஆரம்ப காலங்களில் வங்கி கொள்ளைகள் மற்றும் கடும் செல்வந்தர்களை கடத்தி பணம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் ரெலோ தவிர பெரும்பாலனானவை சாதாரண மக்களிடம் சென்று கொள்ளை அடித்தது கிடையாது. நான் பிறந்து வளர்ந்த அதே மண்ணில் அதே காலத்தில் தான் இந்த இயக்கங்கள் தோன்றி வளர ஆரம்பித்து இருந்தமையால் இதை என் அனுபவத்தின் ஊடகாவே சொல்ல முடிகின்றது.

இந்த பொய்களுக்காக நான் இன்றும் வெட்கப்படுகின்றேன் 

41 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜீவன் 
சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே தான் நிற்கிறீர்கள்.வெளியே வரவேமாட்டீர்களா?

நிச்சயமா வரமாட்டேன் 

மக்களை கொலை செய்து இன்றும் புனிதர்கள் போல நடிக்கும் அவர்களின் தோலை உரிக்காமல் விடவே மாட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜீவன் 
சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே தான் நிற்கிறீர்கள்.வெளியே வரவேமாட்டீர்களா?

அவர்  எப்பொழுதும் வெளிய  தானே  நிற்கிறார்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணவீட்டில் கொள்ளையடிக்கும் அளவிற்கு கல்நெஞ்சக்காரர்கள் பெருகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

மரணவீட்டில் கொள்ளையடிக்கும் அளவிற்கு கல்நெஞ்சக்காரர்கள் பெருகிவிட்டார்கள்.

தலைவன்  எப்படியோ

மக்கள்  அவ்வழி  தானே  அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தலைவன்  எப்படியோ

மக்கள்  அவ்வழி  தானே  அண்ணா?

இதைத்தான் நானும் எழுத நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:

மக்களை கொலை செய்து இன்றும் புனிதர்கள் போல நடிக்கும் அவர்களின் தோலை உரிக்காமல் விடவே மாட்டேன். 

இல்லாதவர்களின் தோலை உரிப்பதை விட இன்னும் தலைவர்களாக இருக்கிறார்கள் அவர்களின் தோலை உரித்தெடுங்கள்.நாங்களும் ஆதரவு தாறோம்.

5 minutes ago, விசுகு said:

தலைவன்  எப்படியோ

மக்கள்  அவ்வழி  தானே  அண்ணா?

2 minutes ago, குமாரசாமி said:

இதைத்தான் நானும் எழுத நினைத்தேன்.

உண்மை தான்.

Link to comment
Share on other sites

30 minutes ago, விசுகு said:

தலைவன்  எப்படியோ

மக்கள்  அவ்வழி  தானே  அண்ணா?

🤣🤣🤣

உண்மைதான் 

அதைத்தான் இப்பவும் பாக்கிறமே.

முடிந்தால் என்னையும் முழுமையாக தடை செய்து கொண்டாடுங்கள் 

கேவலமான உங்களின் நடவடிக்கைகைகள் 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

🤣🤣🤣

உண்மைதான் 

அதைத்தான் இப்பவும் பாக்கிறமே.

முடிந்தால் என்னையும் முழுமையாக தடை செய்து கொண்டாடுங்கள் 

கேவலமான உங்களின் நடவடிக்கைகைகள் 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

உங்களுக்கு  கருத்தாடலில்  தடுமாற்றமும்

ஒருவரை பழி தீர்க்கணும் என்ற  வெறியும் இருக்கிறதே தவிர

உண்மையை தேட

அறிய  எந்த  எத்தனிப்பும் இல்லை

மேலே  ஒரு  பொறி  தான் வைத்தேன் மாட்டிக்கொண்டீர்கள்

தாயகத்தில்   பிரபாகரனை  எவரும் தலைவனாக கொண்டாடுவதில்லை  என்று தொடர்ந்து  எழுதிக்கொண்டே

இன்றும்  அவர்  தான்  தமிழர்களின்  தலைவர்  என்பதை  இங்கே ஒப்புக்கொள்கிறீர்கள்

மக்கள்  புத்திசாலிகள்  என்பதை  காவியபடி

அவர்களது  தற்போதைய  தலைவர்களை ஓரம்   கட்டுகிறீர்கள்

Link to comment
Share on other sites

11 minutes ago, ஏராளன் said:

அப்படி என்றால் இலங்கை அரசையும் அவர்களது படைகளையும் புனிதர்கள் என்றா சொல்கிறீர்கள்?!
1948 இல் இருந்து தமிழர்களுக்கு செய்தவை எல்லாம் மறப்போம் மன்னிப்போம்! போராட போன இயக்கங்கள் மட்டும் கொடிய பயங்கரவாதிகளா?

இல்லை 

ஆனால் எமக்கு போராட ஆயிரம் காரணங்கள் அன்றும் இருந்தது இன்றும் இருக்குது 

ஆனால் எமக்காக போராடப்போன ஆயிரக்கணக்கானவர்களையும் கொன்றொழித்தது மட்டுமில்லாமல், பிழையான பாதையில் போராட்டம் செல்கின்றது என்று சொன்ன + போராடிய அனைத்து போராளிகளையும், அறிவுஜீவிகளையும்  அழித்து, முடிவில் மக்களையே அழித்த (வேறு வழி இல்லை) ஒரு படுபாதகதர்களைப் பற்றித்தான் நான் சொல்கின்றேன்.

இன்னமும் துதிபாடுவதில் பலனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இல்லை 

ஆனால் எமக்கு போராட ஆயிரம் காரணங்கள் அன்றும் இருந்தது இன்றும் இருக்குது 

ஆனால் எமக்காக போராடப்போன ஆயிரக்கணக்கானவர்களையும் கொன்றொழித்தது மட்டுமில்லாமல், பிழையான பாதையில் போராட்டம் செல்கின்றது என்று சொன்ன + போராடிய அனைத்து போராளிகளையும், அறிவுஜீவிகளையும்  அழித்து, முடிவில் மக்களையே அழித்த (வேறு வழி இல்லை) ஒரு படுபாதகதர்களைப் பற்றித்தான் நான் சொல்கின்றேன்.

இன்னமும் துதிபாடுவதில் பலனில்லை.

நீங்கள் மட்டும் அப்படி நினைத்துக் கொள்ளலாம், உண்மைகள் தெரிந்தவர்கள் உங்கள் கருத்து மட்டும் சரி என்று ஒத்துக்கொள்ளணும் என்று ஏன் எதிர்பார்க்கிறீங்க?

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் என்பன போன்றன இதனை வெறுமனே இது கிரிமினல் குற்றங்கள் என்ற அளவில் அணுகாமல் அடிப்படையான பிரச்சனைகளை பற்றி இனியாவது விவாதித்து தீர்வுகளை காணவேண்டும்.

ஆனால் நிழலி  போன்றவர்கள் எதுவுமே தெரியாதது போல மறுபடியும் சமூகவியலாளர்கள், பலகலைகழக சமூகம், பொது அமைப்புகள் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்கள்  - என்பதிற்கான கோபம் இது.

தலைவன் எவ்வழி 

ஆயுதமுனையில் வளர்க்கப்பட்ட மக்களும் அவ்வழியே.

2 minutes ago, ஏராளன் said:

நீங்கள் மட்டும் அப்படி நினைத்துக் கொள்ளலாம், உண்மைகள் தெரிந்தவர்கள் உங்கள் கருத்து மட்டும் சரி என்று ஒத்துக்கொள்ளணும் என்று ஏன் எதிர்பார்க்கிறீங்க?

நான் என்றுமே எனது கருத்து மட்டுமே சரி என்று சொன்னதில்லை 

ஆனால் தோத்துப்போன கருத்துக்கள் பிழை என்று ஒரு கள உறவு எழுதும்போது அதை தணிக்கை செய்யாமல் இருந்தாலே யாழ் உருப்படும் என்று சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

Quote

தலைவன் எவ்வழி 

ஆயுதமுனையில் வளர்க்கப்பட்ட மக்களும் அவ்வழியே

பிரபாகரன் போன்றோரை வளர்த்ததே  தமிழர் விடுதலை கூட்டணி தான். அவர்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்??

Quote

ஆனால் தோத்துப்போன கருத்துக்கள் பிழை என்று ஒரு கள உறவு எழுதும்போது அதை தணிக்கை செய்யாமல் இருந்தாலே யாழ் உருப்படும் என்று சொல்கின்றேன்

. தோத்துப்போன கருத்து என்று சொல்ல நீங்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரி மரண வீட்டில் கொள்ளை ..
யாழில் இப்படி ஒரு கேவலம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை.

எந்த திரியை திறந்தாலும் ...
வந்து வாந்தி எடுப்பதை 

தடை செய்யுங்கள் 
கருத்தை வெட்டுகிறார்கள் 
அச்சோ பூச்சோ என்பது நியாயப்படுத்த போவதில்லை.

நிர்வாகத்தினர் !
தயவு செய்து உரியவரை 
ஒரு தனி திரி திறந்து முடியுமானவரை எழுத சொல்லுங்கள் 
யாரும் வாசித்து வளமுற நினைத்தால் சென்று வாசிப்பார்கள் 

இப்படி திரிக்கு திரி புலிவாந்தி எடுப்பதால் 
அதுக்கு பலரும் எதிர் கருத்து எழுத போக 
தலைப்பு அளவெட்டியில் 2019இல் இருக்கு 

கருத்துக்கள் 1980களில் இருக்கு 
இது ஒரு கருத்து களத்துக்கு பார்வையாளர் வருவதை 
குறைந்துகொண்டே இருக்கும். 

இயக்கங்கள் தொடங்கு முன்பு 
சாதியை சொல்லி வெட்டி திரிந்தார்கள் 
அதுக்கு சங்கிலியனா அல்லது பண்டாரா வன்னியனா காரணம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று ஒரு அமெரிக்க கொழும்பு தூதரக செய்தி பற்றி 
கூகிளில் தேடினேன் 

இந்த செய்தியும் வருகிறது 
இதை கொழும்பு அமெரிக்க தூதரகம் 
அமெரிக்க அரசுக்கு அறிவித்து இருக்கிறது 

இதை பற்றி தமிழ் ஊடகங்கள் பெரிதாக எழுதுவதில்லை 
இது ஒரு திதிட்டமிட்ட ஒரு காங் போன்ற குழு பின்னால் இருக்க 
சாத்தியம் இருக்குமா? 
அல்லது தனி தனி நபர்கள் இப்படி துணிந்து செய்கிறார்களா?

S E C R E T SECTION 01 OF 06 COLOMBO 000728 

SIPDIS 

SIPDIS 

DEPARTMENT FOR SCA/INS
MCC FOR S GROFF, D TETER, D NASSIRY AND E BURKE 

E.O. 12958: DECL: 05/18/2017
TAGS: PGOV PREL PTER PHUM MOPS CE
SUBJECT: SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY
FACTIONS' HUMAN RIGHTS ABUSES 

REF: A. COLOMBO 591
     ¶B. COLOMBO 561
     ¶C. COLOMBO 463
     ¶D. COLOMBO 460
     ¶E. 2006 COLOMBO 2056
     ¶F. 2006 COLOMBO 1896
     ¶G. 2005 COLOMBO 2157
     ¶H. 2004 COLOMBO 1219 

Classified By: Ambassador Robert O. Blake, Jr., for reasons 1.4(b, d) 

¶1.  (S) SUMMARY:  Allegations of government complicity in
crimes committed by organized paramilitary groups have
mounted in the last year.  Paramilitaries such as the
Liberation Tigers of Tamil Eelam (LTTE)-breakaway Karuna
group and Eelam People's Democratic Party (EPDP) have helped
the Government of Sri Lanka (GSL) to fight the LTTE, to
kidnap suspected LTTE collaborators, and to give the GSL a
measure of deniability.  The GSL, which denies any links to
paramilitary groups, has recently touted its efforts to
improve its human rights record, such as the re-publication
of procedures on arrests and detentions and the appointment
of a "One-Man Commission" to investigate reported
disappearances (ref C).  However, these efforts so far appear
aimed more at improving Sri Lanka's image abroad and have yet
to produce concrete improvements in the human rights
situation.  Outside the capital, the incidence of human
rights abuses has continued, including extrajudicial
killings, abductions, child trafficking, extortion, and
prostitution.  President Rajapaksa's government, strapped for
cash, has cut direct payments to paramilitaries initiated by
former President Kumaratunga and instead turns a blind eye to
extortion and kidnapping for ransom by EPDP and Karuna.
While many of the charges against the government have been
made in public fora, a growing number of trusted Embassy
contacts, often at personal risk, have described in detail
the extent of the GSL's involvement with paramilitary groups.
 END SUMMARY.
Child Trafficking
----------------- 

¶17.  (S)  On March 26, Mr. Stephen Sunthararaj (strictly
protect), Coordinator for the Child Protection Unit of World
Vision in Jaffna, said he believes that EPDP is operating
child trafficking rings in Jaffna with a base on Delft
island, which the EPDP "owns."  Sunthararaj explained that
because of the large number of widows in Jaffna, men
associated with the EPDP, often from neighboring villages,
are used to seduce women with children, especially girls,
with the promise of economic protection.  After establishing
a relationship, the men then take the children, sometimes by
force and sometimes with the promise that they will be
provided a better life.  The children are sold into slavery,
usually boys to work camps and girls to prostitution rings,
through EPDP's networks in India and Malaysia.  Sunthararaj
maintains that children are often smuggled out of the country
with the help of a corrupt Customs and Immigration official
at Bandaranaike International Airport in Colombo. 

¶18.  (S) Sunthararaj's story was partially verified by
Government Agent Ganesh, who stated that the EPDP works in
concert with the Sri Lanka Army (SLA) to operate Tamil
prostitution rings for the soldiers.  Ganesh stated that
young women were taken and forced to have sex with between
five and ten soldiers a night.  Sometimes they are paid
approximately a dollar for each "service."  The young women's
parents are unable to complain to authorities for fear of
retribution and because doing so would ruin the girls'
reputation, making it impossible for them ever to marry.
Families have begun arranging marriages for their daughters
at a very young age in the hopes that the EPDP and soldiers
will be less likely to take them.  In addition to trafficking
in children, Sunthararaj detailed how the EPDP operates an
illicit alcohol smuggling ring using child "mules."
Blake
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூலம் வைக்கிலீக்ஸ் 

WikiLeaks: EPDP Sold Jaffna Children: Girls To Prostitution Rings And Boys To Slavery

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

ஜீவன் 
சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே தான் நிற்கிறீர்கள்.வெளியே வரவேமாட்டீர்களா?

எப்பிடி வெளியில வாறது? வெளியே வந்தால் பொது அறிவையாவது  பாவித்தேல்லோ கருத்து எழுதவேணும். அதுதான் எங்களுக்கு அடிச்சுப்போட்டாலும் வராதே.  என்ன செய்ய இப்படியே எழுதி மிச்ச காலத்தையும் ஓட்ட வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

இன்று ஒரு அமெரிக்க கொழும்பு தூதரக செய்தி பற்றி 
கூகிளில் தேடினேன் 

இந்த செய்தியும் வருகிறது 
இதை கொழும்பு அமெரிக்க தூதரகம் 
அமெரிக்க அரசுக்கு அறிவித்து இருக்கிறது 

இதை பற்றி தமிழ் ஊடகங்கள் பெரிதாக எழுதுவதில்லை 
இது ஒரு திதிட்டமிட்ட ஒரு காங் போன்ற குழு பின்னால் இருக்க 
சாத்தியம் இருக்குமா? 
அல்லது தனி தனி நபர்கள் இப்படி துணிந்து செய்கிறார்களா?

S E C R E T SECTION 01 OF 06 COLOMBO 000728 

SIPDIS 

SIPDIS 

DEPARTMENT FOR SCA/INS
MCC FOR S GROFF, D TETER, D NASSIRY AND E BURKE 

E.O. 12958: DECL: 05/18/2017
TAGS: PGOV PREL PTER PHUM MOPS CE
SUBJECT: SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY
FACTIONS' HUMAN RIGHTS ABUSES 

REF: A. COLOMBO 591
     ¶B. COLOMBO 561
     ¶C. COLOMBO 463
     ¶D. COLOMBO 460
     ¶E. 2006 COLOMBO 2056
     ¶F. 2006 COLOMBO 1896
     ¶G. 2005 COLOMBO 2157
     ¶H. 2004 COLOMBO 1219 

Classified By: Ambassador Robert O. Blake, Jr., for reasons 1.4(b, d) 

¶1.  (S) SUMMARY:  Allegations of government complicity in
crimes committed by organized paramilitary groups have
mounted in the last year.  Paramilitaries such as the
Liberation Tigers of Tamil Eelam (LTTE)-breakaway Karuna
group and Eelam People's Democratic Party (EPDP) have helped
the Government of Sri Lanka (GSL) to fight the LTTE, to
kidnap suspected LTTE collaborators, and to give the GSL a
measure of deniability.  The GSL, which denies any links to
paramilitary groups, has recently touted its efforts to
improve its human rights record, such as the re-publication
of procedures on arrests and detentions and the appointment
of a "One-Man Commission" to investigate reported
disappearances (ref C).  However, these efforts so far appear
aimed more at improving Sri Lanka's image abroad and have yet
to produce concrete improvements in the human rights
situation.  Outside the capital, the incidence of human
rights abuses has continued, including extrajudicial
killings, abductions, child trafficking, extortion, and
prostitution.  President Rajapaksa's government, strapped for
cash, has cut direct payments to paramilitaries initiated by
former President Kumaratunga and instead turns a blind eye to
extortion and kidnapping for ransom by EPDP and Karuna.
While many of the charges against the government have been
made in public fora, a growing number of trusted Embassy
contacts, often at personal risk, have described in detail
the extent of the GSL's involvement with paramilitary groups.
 END SUMMARY.

Child Trafficking
----------------- 

¶17.  (S)  On March 26, Mr. Stephen Sunthararaj (strictly
protect), Coordinator for the Child Protection Unit of World
Vision in Jaffna, said he believes that EPDP is operating
child trafficking rings in Jaffna with a base on Delft
island, which the EPDP "owns."  Sunthararaj explained that
because of the large number of widows in Jaffna, men
associated with the EPDP, often from neighboring villages,
are used to seduce women with children, especially girls,
with the promise of economic protection.  After establishing
a relationship, the men then take the children, sometimes by
force and sometimes with the promise that they will be
provided a better life.  The children are sold into slavery,
usually boys to work camps and girls to prostitution rings,
through EPDP's networks in India and Malaysia.  Sunthararaj
maintains that children are often smuggled out of the country
with the help of a corrupt Customs and Immigration official
at Bandaranaike International Airport in Colombo. 

¶18.  (S) Sunthararaj's story was partially verified by
Government Agent Ganesh, who stated that the EPDP works in
concert with the Sri Lanka Army (SLA) to operate Tamil
prostitution rings for the soldiers.  Ganesh stated that
young women were taken and forced to have sex with between
five and ten soldiers a night.  Sometimes they are paid
approximately a dollar for each "service."  The young women's
parents are unable to complain to authorities for fear of
retribution and because doing so would ruin the girls'
reputation, making it impossible for them ever to marry.
Families have begun arranging marriages for their daughters
at a very young age in the hopes that the EPDP and soldiers
will be less likely to take them.  In addition to trafficking
in children, Sunthararaj detailed how the EPDP operates an
illicit alcohol smuggling ring using child "mules."

Blake
 
புலியெதிர்ப்புவாதிகளால் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு, புலிகள் போலவே தமிழினத்திற்காக போராட புறப்பட்டவர்களைக் கொன்றது, அழித்தது, இயங்கவிடாமல்ப் பண்ணியது........அல்லது செயலிழக்கச் செய்தது.

என்னிடம் உள்ள கேள்வி என்னவென்றால், தமிழ் மக்களுக்காகப் போராட புறப்பட்டவர்கள் எப்படி அதே தமிழ் மக்களின் பெண்பிள்ளைகளை சிங்கள எதிரிக்கு இரையாக்கவும், ஆண்பிள்ளைகளை அடிமைகளாக விற்கவும் செய்தார்கள் என்பதுதான்.

ஆக, இவர்களைப் புலிகள் அழித்ததும், இயங்கமுடியாமல்ப் பண்ணியதும் சிலருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது என்றால், இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக இவர்களின் நிலைப்பாடு என்ன? புலிகளுக்கு எதிராக இருப்பதால், இது எல்லாமே ஒரு பிரச்சினையில்லை என்பதா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.