-
Topics
-
Posts
-
பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும்,மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார், பிரெக்சிட்டை நிறைவேற்றினால் நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம் ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/70893
-
யாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழாவை வடக்கு, கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அங்கு அந்த நிகழ்வை பெரிய அளவில் இல்லாமல் சுருக்கமாகச் செய்ய இருக்கிறோம் என யாழில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-எதிர்வரும்-18-ஆம்-தி/
-
இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது-இந்திய மத்திய அரசு 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/இந்தியாவிலுள்ள-இலங்கையர/
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
புலவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂 -
By Vankalayan · Posted
இது ஒரு நல்ல முன்னேற்றம். கடந்த அரசாங்கத்தின் செயட்பாட்டினால் கிடைத்த பரிசு. ஆனால் இந்த அரசாங்கத்தின் செயட்பாடுகளை பொறுத்தே இனிவரும் காலங்களில் இதன் முன்னேற்றத்தை அறியலாம்.
-