• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினை வேந்தல் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.          http://valampurii.lk/valampurii/content.php?id=19892&ctype=news  
    • இவையெல்லாம் பழையவை, கம்பெனிகளுக்கும், சொறி சிங்கள அரசுக்கும் இடையேயான பிரச்சனைகள். தீர்வுகளும் உண்டு. மைத்திரியின் 10 வருடம், 2.4 பில்லியன் கதையை, அப்படியே black-and-white ஆகவே உள்வாங்கி விட்டீர்கள். சுருக்கமாக, சீன அரசு இப்பொது நேரடியாக தலை இட்டு, கடனையும்  ரத்து செய்து விட்டு, சிங்களத்துக்கு தாமரை கோபுரத்தை கையளிப்பதை தடுத்து இருக்கிறது. இழப்பீடும்  ஒப்பந்தப்படி சிங்களம் செலுத்த வேண்டும் அது தான், சிங்கள அரசு அறிக்கை, இந்த  10 வருடம், 2.4 பில்லியன். ஆயினும் நம்ப முடியாது. ஏனெனில், கடன் ரத்து என்பது, உடனடியாக முதலும், முழுவட்டியும் கட்டப்பட வேண்டும், அத்துடன் இழப்பீடும் அதன் வட்டியும் . அத்துடன், தாமரை கோபுரம், சீனாவின் signal  intelligence post. எனவே, அதை forefeit பண்ணுவது சீனாவின் கைகளில். தாமரை கோரத்தை பொறுத்தவரையில், சிங்கள அரசின் கைகளில் ஒன்றுமே இல்லை.
    • அமெரிக்காவின் சனாதிபதிக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்கும் சனநாயக கட்சியின் அடம் ஷிப்ட் இன்று பலராலும் பார்க்கப்படும் ஒரு அரசியல்வாதி. இன்று ஒரு முக்கியமான உரையை விசாரணையின் முடிவில் நிகழ்த்தினார்.  மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராயும் தேசப்பற்றுடனும் பேசினார் இந்த முன்னை நாள் சட்டவல்லுநர்.   
    • Friday, November 22, 2019 - 6:00am மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்காவின் அந்த முடிவும், அறிவிப்பும் எங்களை வருத்தமடையச் செய்துள்ளது. ஐ.நாவைப் பொறுத்தவரை, பாலஸ்தீன விவகாரத்தில் பாதுகாப்புச் சபை மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களையும் உறுதியாகப் பின்பற்றும்.       பலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே அந்த தீர்மானங்களின் அடிப்படையில் நிலைத்த அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா உறுதியுடன் இருக்கிறது என்றார் அவர். இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967 ஆம் நடந்த ‘6 நாள்’ போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளில், தங்கள் நாட்டு யூதர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது. இந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நாவும், அவை 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது. இந்தச் சூழலில், மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ திங்கட்கிழமை அறிவித்தார். அந்தக் குடியிருப்புகள் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானவை என்று கூறி வருவதால் எந்தப் பலனும் இல்லை. அந்த நிலைப்பாட்டால் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் அமெரிக்க அரசு இந்த முடிவுக்கு வந்ததாக அவர் விளக்கமளித்தார். இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற தனது நிலைப்பாட்டில் அமெரிக்காவின் அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தற்போது ஐ.நா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது https://www.thinakaran.lk/2019/11/22/வெளிநாடு/44240/அமெரிக்காவின்-நிலைப்பாட்டுக்கு-ஐநா-பொதுச்-செயலாளர்-வருத்தம்