• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • #மாயப்பெருநிலம் கிண்டிலின் உதவியினால் வாசித்து முடித்தாயிற்று வாசித்து முடிக்கும் வரையிலும் உண்மையில் மிக விறு விறு ப்பா இருந்தது அதுவும் அந்த போலியானவர்களின் கையில் போய்ச்சேர்ந்துவிடுமோ, இவர்களை இலகுவாக  நம்பி விட்டாரே  பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்ற தவிப்பு இருந்து கொண்டே வந்தது. நம்பர் 002 உண்மையில் இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அநேகமானவர்களிடம் இருப்பது போல் பேராசிரியரிடமும் இருந்ததில் வியப்பு இல்லை.  எங்களவர்கள் எழுதும் கதைகளில் போராட்டத்தின் இழப்புகள்  சார்ந்த ஒருவித சோக இழையோடும் கதைகள் அதிகமாக வந்திருக்கின்றன அல்லது நான் படித்திருக்கிறேன் அவற்றுடன் ஒப்பிடும் போது இப்படியான கதைகள் புதிய களத்தினை திறந்து வைத்திருக்கின்றது எனலாம்.. கதாசிரியர் இடையிடையே சில வரலாற்று கதைகளையும் (கொடு/தொடு)த்திருக்கிறார் ஆபுத்திரன் கதை,நயினாதீவின் பழைய வரலாறு..பல்லவ குலத்தோன்றல் இளந்திரையன் கதை என்பன குறிப்பிடத்தக்கவை.. அவற்றில் ஒன்று  ************************"*""******* கண்ணகியின் / கண்ணகை ( சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகையே தான்) தந்தை மாநாய்க்கன் மரக்கலம் வைத்து நெடுந்தூரம் சென்று வணிகம் செய்யும் வணிகர் குழு தலைவன். ஒருமுறை பூம்புகாரில் இருந்து விலையுயர்ந்த பொருட்களுடன் கீழ் நாடுகள் நோக்கி பயணம் மேற்கொண்டார். மரக்கலம் இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள்காலை ஒரு தீவை நெருங்கியது.சிறிது இளைப்பாறிச்செல்லலாம் என கரை ஒதுங்கினர். கரை அருகே கடலுக்குள் இரண்டு பாறைகள் ஒரு பாறையில் நாகம் ஒன்று சீறிக்கொண்டிருந்தது.மற்றைய பாறையில் கருடன் ஒன்று அதை கொத்தி தின்ன தருணம் பார்த்திருந்தது. அந்தப்பாம்பு தினமும் புளியந்தீவுப்பகுதியிலிருந்து நீந்தி வந்து இத்தீவில் உள்ள நாகர்குல பெண்தெய்வத்தை வழிபட்டு வந்தது இன்றும் அப்படி வரும்  போது தான் கருடனிடம் மாட்டி கொண்டுவிட்டது .  அதைக்கண்ட மாநாய்க்கன் நாகதேவியை வழிபடச்செல்லும் பாம்பை கொல்ல வேண்டாம் என கருடனைக் கேட்கிறான் அப்போது கருடன் உனக்கு நாகதேவி மேல் அவ்வளவு பற்று இருக்குமானால் நீ கொண்டு வந்த பொருட்கள் எல்லவற்றையும் இந்த கோவிலுக்கு கொடுத்து விடு நான் பாம்பை விட்டு விடுகிறேன் என கூறியது.மாநாய்கனும் ஒப்பு கொண்டு அப்படியே செய்கிறான்  அப்படி மாநாய்க்கன் கொடுத்த செல்வத்தால் கட்டபட்டது தான் நயினை நாகபூசனி அம்மன் கோவில் மாநாய்க்கனால் கோவில் கட்டப்பட்டதாலும் அக்கோயிலில் நயினார் பட்டர் எனும் பூசாரி பூசை செய்த்தாலும் இத்தீவிற்கு நயினா தீவு என பெயர் வந்தது  ************************************* சீமானை வஞ்சகமில்லாமல் வைச்சு செய்திருக்கிறார். ஆடிட்டர் நந்தா எனும் பாத்திரத்தில் உலவ விட்டு 😄  முப்பாட்டன் முருகன் மாயோன் ஆகியோர் இடைக்கிடை வந்து போகின்றனர்.  கிரண்பேடியையும் வாரி இருக்கிறார்.. "திராவிடத்தால்விழுந்தோம்"  "இலவசத்தால் விழுந்தோம்" எனும் வாக்கியங்கள் மீது உள்ள வெறுப்பையும் காட்டி செல்கிறார் கதை சுருக்கம் போராட்டத்தின் இறுதி காலங்களில் 40கிலோ தங்கம் தமிழகத்திற்கு கடத்தப்பட்டு அங்கு விற்கப்பட்டு அங்கிருந்து பணம் அப்போதைய பொறுப்பானவருக்கு மாற்றப்படுகிறது அவர் அந்த பணத்தினை பிட் கொயினாக மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார் அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினை திறப்பதற்கான குறிச்சொல்  குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும் அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன்   அவரை நம்ப வைத்து அவரிடமிருந்து அவற்றை திருட ஒரு சிலர் திட்டம் போடுகிறார்கள்.. பேராசிரியர் ஏமாந்தாரா அந்தப்பணம் என்னவானது படியுங்கள்  கிண்டிலி்ல் 0.99$
    • அரசியல் அறிவு என்பது தாமாக வளர்த்துக்கொள்வது. அதை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களுக்கே விளங்கப்படுத்தலாம். உங்களுக்கு விளங்கிக்கொள்ளும் தன்மை இருந்தால் இந்த திரி உங்களுக்கு உதவலாம். https://yarl.com/forum3/topic/234083-ஆட்டத்தை-அடியோடு-மாற்றி-விட்ட-214/ கெஹெலிய ரம்புக்வெல தமது அரசு ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடனான MCC, SOFA உடன்படிக்கைகளை பரிசீலனை செய்து இரு நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் கையெழுத்திடுவோம் எனவும் கூறினார். மகிந்த ஆட்சியின் போது மகிந்த தான் MCC கொடையை தமக்கு தரும்படி அமெரிக்காவை கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோத்தபாய வந்தால் சீனாவை முற்றாக வெளியேற்றுவார் என நான் கூறவில்லை. அமெரிக்காவோ இந்தியாவோ வழங்காத பணத்தை சீனா வழங்கும் போது சீனாவிடம் பணம் வாங்கி அபிவிருத்திகளை செய்வார்கள். சீனா ஏற்கனவே உள்ளே தான் உள்ளது. 2015 மைத்திரி ஜனாதிபதியாக வந்ததும் சீன அபிவிருத்திகளை நிறுத்தினார். பின் தானே ஒன்றொன்றாக முன்னெடுக்க தொடங்கினார்.  தாமரைக்கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது. அபிவிருத்தி முழுமையாகாத நிலையில் அது திறந்து வைக்கப்பட்டது. அபிவிருத்தி தொடர்கிறது. மைத்திரி தாம் கடனை திருப்பி செலுத்திக்கொண்டிருக்கிறோம் என கூறியிருந்தார். திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை வந்தால் அதையும் குத்தகைக்கு கொடுக்க யோசிக்கலாம்.
    • கோட்டபாய கை கட்டி பணிவது போல் படம் உள்ளது ஆனால் ஜெய்சங்கருக்கு முகம் சரியில்லை.  அவர்களின் சஜித் கணக்கு பிழைச்ச கோவம்.
    • ஏலவே அதளபாதளத்தில் கிடக்கும் சொறீலங்காவின் பொருளாதாரம் மீள வழியைக் காணம். இதில கோத்தா வரவு வேற.  பிரதான கடன் வழங்கும் நாடுகள்... கோத்தாவின் வரவை எச்சரிக்கையுடனேயே பார்க்கின்றன. எனி கோத்தாவுக்கு வாக்குப் போட்டோர்.. பாணும் சாப்பிட முடியாது. மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் யுகத்துக்குப் போய் இலைக்கஞ்சி தான் குடிக்க வேண்டும். இனவாதத்திற்கு சிங்கள மக்கள் வாக்களித்துக் கொண்டே வந்தால்.. அவர்கள்.. மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தொடர்ந்து வாழ நேரிடும். மிக விரைவில்.. சிங்களவர்களின் கையில் 10 ஆயிரம் ரூபா நோட்டுப் புழங்கினாலும்.. ஆச்சரியமில்லை. சிம்பாபேக்கு ஒரு முகாபே போல்.. சொறீலங்காவுக்கு ஒரு ராஜபக்ச குடும்பம். நவீன உலக ஒழுங்கில் நவீனமாக.. லிபரலாகச் சிந்திக்க மறுப்பின்..  சிங்களம்.. அதன் இனவெறிக்கு அதுவே பலியாகும் நாள் தொலைதூரத்தில் இல்லை.  ---------------------------------------------------- https://www.bbc.co.uk/news/world-africa-50454812
    • சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன் சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள்  உடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்தேசிய உணர்வுடன் அனைவரும் துணிவுடன் பயணிக்கவேண்டும் பயணித்து எமது இனத்தினுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இந்தத் தேர்தலில் நாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம். இந்த இலங்கைத் தீவில் சிறுபான்மை தேசிய இனங்கள் ஆகிய நாங்கள் பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோருகிறோம் என்பதுமாகும்  இதைப் புரிந்து கொண்டு புதிதாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதி செயற்படுவார் எனவும் எண்ணுகின்றேன் என்றார். இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/69317