Jump to content

அழியாத கோலங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழியாத கோலங்கள்.

புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று.  காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை.

வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன.

எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. 

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் மனதில் இட்ட அழிக்கமுடியாத கோலங்களில் இன்றுவரை தொடர்ந்துவருவது எனது தேசம். நினைத்தவிடத்து போய்த் தரிசிக்க முடியாத கடப்பாடுகளும், ஆற்றாமைகளும் என் தேசம் மீதான ஏக்கங்களை கூட்டினவேயன்றி அழிக்க முடியவில்லை. தெரிந்தவரில் எவர் போய்வரினும் வாஞ்சையுடன் ஊர்ச்செய்தி கேட்டறியத் துடிக்கும் மனது. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பேசத் துடிக்கும் உதடுகள், ஆசையுடன் ஊர்ப்பெயர் சொல்லி நினைவு மீட்டலுக்கு கணப்பொழுதில் தயாராகும் நினைவலைகள் என்று என் இளமைக்கால ஏக்கங்களை இப்போதாவது அடைந்துவிட காத்திருக்கிறேன்.

பணவசதியும், உயர் வாழ்க்கைத்தரமும், பேரும் புகழும் இவை எதுவுமே நிறைவைத் தருவதாக நான் நினைக்கவில்லை. எதுவில்லாத பொழுதும், நான் பிறந்த மண்ணும், ஓடித்திரிந்து அள்ளி அள்ளிப் பருகிய மண்வாசனையும், கூடவே விருப்பமுடன் சேர்ந்து பழக ஒரு சில மனிதர்களும் போதுமென்று நினைக்கிறேன்.

அந்நியனின் ஆக்கிரமிப்பில் எந்தேசம் கிடந்தழுதாலும் கூட, அதுமீதான எனது ஏக்கங்களும், தாபங்களும் அப்படியே இருக்க, மீண்டுமொருமுறை என்வாழ்க்கை ஆரம்பக் கோட்டிலிருந்து தொடங்காதா என்று அங்கலாய்க்கிறேன்.  எனது இளமைக்காலங்களில் நான் தவறவிட்ட என் தேசத்துடனான எனது வாழ்க்கையை எல்லாக் காலத்திற்குமாகச் சேர்த்து வாழக் காத்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே நினைவலைகளில்தான் மூன்று தசாப்தங்கள் நானும் உழன்றுகொண்டு இருந்து முப்பது நாளில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்தேன்.......!  😁

தொடருங்கள் ரஞ்சித் ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது.

யாராவது தேடல்களின் இறுதியைத் தொட்டுவிட்டால் அவன் தான் கடவுள்.
அதுவரை தேடி அலையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 வருடங்களிருக்கும்.  கடப்பாடுகளும், எச்சரிக்கைகளும் விட்டெறிந்து, தாயகம் செல்லத் தயாரான கணங்கள். இல்லாத சுதந்திரம் தேடி, நாள்குறித்து நான் முற்றாக்கிய எனது பயணம் முளையிலேயே முறிக்கப்பட்டு, அழுத்தங்களுடனான ஒரு செயற்கைத் "தாயக மீள்வாக " மாறியதை நான் பேசுவதில்லை.

பயணிக்குமுன்பே இடங்களும் ஆட்களும் தீர்மானிக்கப்பட்டு, வெறும் இயந்திரத்தனமாக, கண்கள் கட்டப்பட்ட குதிரைபோல முடிக்கிவிடப்பட்ட பொம்மைபோல அவசரமாகத் தெருக்களில் சுற்றிவந்த அந்த அவலத்தை நான் பேசுவதில்லை. 

நான் இதுவரை காத்திருந்த எனது தாயகத்தின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் வெறும் மூன்றே வாரத்தில், அவசரமாகக் காட்டி, இனிவேண்டாம் என்று சலிக்கவும் வைத்த அந்தப் பயணம் பற்றி நான் பேசபோவதில்லை. 

நான் ஏங்கித் தவிக்கும் எனது தாயகம் இன்னும் எனக்காகக் காத்திருப்பதாக நான் இன்றும் உணர்கிறேன்.

சுதந்திரமாக, அழுத்தமின்றி, நினைத்த நேரத்தில், விரும்பிய தாயகத்தின் முடுக்குகளைத் தரிசிக்க விரும்புகிறேன். 

பார்க்கலாம், நான் விரும்புவது இருக்கட்டும், தாயகம் என்ன நினைக்கிறதென்று !

28 minutes ago, ஈழப்பிரியன் said:

யாராவது தேடல்களின் இறுதியைத் தொட்டுவிட்டால் அவன் தான் கடவுள்.
அதுவரை தேடி அலையுங்கள்.

சரிதான், இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...ஆரம்பமே அசத்தலாய் இருக்கு 

 

Link to comment
Share on other sites

16 hours ago, ரஞ்சித் said:

இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. 

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.

நம்முள்ளே தேடிக்கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன என்பதை உணராமலேயே பலரது வாழ்க்கை வீணாகிறது. 

புலம்பெயர்ந்த நாட்டிற்கு இயைபாக்கமடைவதற்காக நாம் பெறுமதியாக மதித்தவற்றை (உதாரணமாக நமது கலாசாரம், வாழ்க்கை முறை) எல்லாம் இழந்து ஏதோ வாழ்வின் ஓட்டத்தோடு ஏனையோரைப் போல நாமும் ஓடுவோம் என்ற மனநிலையோடு தான் அநேகரின் வாழ்க்கை கழிகிறது.

விடாமுயற்சியுடன் தேடுகிறீர்கள் என்பதே ஓர் நல்ல ஆரம்பம்; 👍நிச்சயமாக கண்டறிவீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள், ரஞ்சித்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

நம்முள்ளே தேடிக்கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன என்பதை உணராமலேயே பலரது வாழ்க்கை வீணாகிறது. 

புலம்பெயர்ந்த நாட்டிற்கு இயைபாக்கமடைவதற்காக நாம் பெறுமதியாக மதித்தவற்றை (உதாரணமாக நமது கலாசாரம், வாழ்க்கை முறை) எல்லாம் இழந்து ஏதோ வாழ்வின் ஓட்டத்தோடு ஏனையோரைப் போல நாமும் ஓடுவோம் என்ற மனநிலையோடு தான் அநேகரின் வாழ்க்கை கழிகிறது.

விடாமுயற்சியுடன் தேடுகிறீர்கள் என்பதே ஓர் நல்ல ஆரம்பம்; 👍நிச்சயமாக கண்டறிவீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள், ரஞ்சித்! 😊

தேடல்கள் தொடர்வதென்றாலே, நாம் இன்னும் எம் வாழ்க்கையில் திருப்தியடையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது உடல் சார்ந்ததா, உளம் சார்ந்ததா என்றால் , இரண்டும்தான். இவை இரண்டுமே ஒருங்கே அமையப்பெறும்போது எமது தேடல்கள் நின்றுவிடவேண்டும். ஆனால், அப்படியில்லையே? தேடல்கள் நிற்கும் பொழுதில் வாழ்க்கையும் முற்றுப்பெற்றுவிடும். அல்லது, வாழ்க்கை முற்றுப்பெறும்பொழுது தேடல்களும் சமாதியாக்கப்பட்டு விடுகின்றன. 

தேடல்களின் விளைவாகவே வாழ்க்கை முன்னோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றது என்று நினைக்கிறேன். நாம் தேடுவது சிலவேளைகளில் 60 % ஆகவோ, 70 % ஆகவோ எமக்குக் கிடைக்கலாம். ஆனால், நிறைவாவதில்லை. 

இப்போதைக்கு எனது தேடல்கள் எனது தாய்தேசம் நோக்கியதாக இருக்கிறது. நீண்ட காலமாக அதைப் பிரிந்திருப்பதால் வந்த ஏக்கமாக அது இருக்கிறது. பார்க்கலாம் !

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

தேடல்கள் தொடர்வதென்றாலே, நாம் இன்னும் எம் வாழ்க்கையில் திருப்தியடையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது உடல் சார்ந்ததா, உளம் சார்ந்ததா என்றால் , இரண்டும்தான். இவை இரண்டுமே ஒருங்கே அமையப்பெறும்போது எமது தேடல்கள் நின்றுவிடவேண்டும். ஆனால், அப்படியில்லையே? தேடல்கள் நிற்கும் பொழுதில் வாழ்க்கையும் முற்றுப்பெற்றுவிடும். அல்லது, வாழ்க்கை முற்றுப்பெறும்பொழுது தேடல்களும் சமாதியாக்கப்பட்டு விடுகின்றன. 

தேடல் பற்றிய உரையாடல் மிகவும் சிக்கலானது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றைத் தேடித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. சிலவற்றுக்கு அன்றைய இரையைத் தேடுவதுடனே தேடல் முற்றுப் பெறுகிறது;  இவ்வாறே சிலவற்றுக்கு அன்பு, பாசம், பொருள், காணி, பூமி, கல்வி, பணம் எனப் பட்டியல் நீளும். எல்லாம் உணர்ந்த ஞானிகள் கூட உண்மை எது என தேடிக்கொண்டே இருப்பர். 

உலக வாழ்வில் நமது தேவைகள் நாளாந்தம் மாறிக்கொண்டே இருக்கும் போது நமது தேடலும் சிக்கலாகிறது.

புலம்பெயர் ஈழத்தமிழர் என்ற வகையில் நமக்கு இது மேலும் சிக்கலான விடயமாகிறது. இங்கு நாம் விரும்பி ஏற்காத வாழ்க்கையோடு ஒன்ற முடியாமலும், விடுபடமுடியாமலும் திணறும் போதும் மும்முரமான வாழ்வில் இதைப் பற்றிக் கணநேரம் தானும் யோசிக்கப் பலருக்கு நேரமில்லை; இன்னும் பலருக்கு இந்தச் சிக்கலுக்கு வெளியே வரவும் பயம் - status quo மனநிலையில் comfort zoneக்கு வெளியே வரத் தயங்குகிறார்கள். உதாரணமாக விசாவில் கற்க வந்தவனுக்கு பல்கலைக்கழக கட்டணத்தை, வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும், குடும்ப பாரத்தைச் சுமப்பவருக்கு சுமை தாங்கவும் உழைப்பதிலேயே நேரம் சரியாக இருக்கும் போது இவர்கள் வாழ்வில் உண்மையான தேடல் இருக்காது. அதற்காக அவர்கள் வாழ்வில் நிறைவடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை தானே?!

உலகத்தில் மிகச் சிலருக்கு அவர்கள் விரும்பியது எல்லாம் ஓரளவுக்குத் திருப்திகரமாகக் கிடைத்தும், இன்னும் சிலர் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாகவும் வாழப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் தேடல்கள் அவசியமில்லை என்பதே எனது கருத்து. எனினும், இந்த திருப்திகரமான நிலை கூட இன்றைய கணத்துக்குக் கணம் மாறி வரும் உலகில் எவ்வாறு நிரந்தரம் என்றும் தெரியவில்லை.

ஆதி மனிதராக நாம் காட்டில் வேட்டையாடிக்கொண்டு இருந்தபோது தேடல் முயற்சிகள் தற்போதய மனிதரின் முயற்சிகள் போல ஆழமில்லாமல், அற்பத்தனமாக இருந்திருக்கலாம்; எனினும் அன்றைய மனிதன் அனுபவித்த சுதந்திரத்தையும், மனநிறைவையும் விருத்தியடைந்த இன்றைய மனிதகுலம் பெறமுடியாதுள்ளது. எனவே இன்றைய உலகில் தேடல் மட்டுமல்ல தேடிப்பெற்றதை அனுபவிக்க, மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் துணிச்சலும், மனவுறுதியும் அவசியம். இல்லாவிடின் தேடல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும், அல்லது தேடலிலும் சலிப்பு ஏற்பட்டுப் பிடிக்காத வாழ்க்கையையே தொடரவேண்டிய நிலை தான் ஏற்படும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடமைகள், கடப்பாடுகள், சம்பிரதாயங்கள் என்று நாம் வரிந்துகொள்ளும் எவையுமே எமக்கு உண்மையான திருப்தியைத் தரக்கூடியவைதானா என்று அடிக்கடி கேட்கிறேன். இப்போதிருக்கும் பிணைப்புக்கள் எல்லாமே வெறும் செயற்கைதானா என்று அவ்வப்போது என்னத் தோன்றுகிறது. கண்ணிற்குத் தெரியாக் கட்டாயப்படுத்தல்கள் மூலம் வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளதுபோலக் கூடத் தோன்றுகிறது வேளைகளில். தொடர்ச்சியான அழுத்தமொன்று நெஞ்சிற்குள் இருந்துகொண்டு சுதந்திரமாக சுவாசிப்பதைத் தடுக்கிறது. 

இதெல்லாம் களைந்தெறிந்து புதியதாகப் பிறக்கலாம் என்றால், அதுவும் சாத்தியமில்லை என்று மனது சொல்கிறது. மனசாட்சியென்றும், சமூக அழுத்தமென்றும் பல காரணம் கூறிக்கொண்டே கூடவந்து தடுக்கிறது. கால்களில் பாரமேற்றி கைகள் இரண்டும் கட்டப்பட்டு வாழ்க்கை நீண்டுகொண்டு போவதுதான் நடக்கிறது. 

இதெல்லாம் மாறவேண்டுமெனில், ஆரம்பத்திலிருந்தே அழித்து அழித்து மீண்டும் புதிதாய் எழுதவேண்டும். அதற்குக் காலம் இடம்தரப்போவதில்லை. மீதமிருக்கும் காலங்களும் அரிதாகிக் கொண்டுபோவதும், கடந்துபோகும் காலத் துளிகளில் வாழ்க்கையை நனைக்கக் கூட சந்தர்ப்பங்கள் இன்றித் தவிப்பதும் மட்டுமே இப்போதைக்குச் சாத்தியம்.

இதற்கு ஒரே வழி, தொடர்ந்து தேடுவது. வாழ்க்கையினைப் பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு.  மீதமிருக்கும் ஒரு சில காலங்களையாவது இழுத்துச்செல்ல அது தேவை எனக்கு. 

பார்க்கலாம், வாழ்க்கை எனக்காக எதைச் சேகரித்து வைத்திருக்கிறதென்பதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ?? ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

பார்க்கலாம், வாழ்க்கை எனக்காக எதைச் சேகரித்து வைத்திருக்கிறதென்பதை. 

வாழ்க்கை உங்களுக்காக எதையும் சேர்த்து வைத்திருக்காது.
நீங்கள் தான் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கை உங்களுக்காக எதையும் சேர்த்து வைத்திருக்காது.
நீங்கள் தான் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

அதுவும் சரிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...நான் ஆறுதலாய் எழுதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ?? ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை

உது சரியில்லாத குணம் கண்டியளோ.......ஆரெண்டாலும் சமமாய் பாக்கோணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தைந்து வருடங்களின் பின் என் தாயகம் நோக்கி பயணிக்கையில் மனதுக்குள் இருந்த தேடல் அங்கு போய் எனது ஊரின் வெறுமையைப் பார்த்தபின் மிஞ்சியது ஏக்கம் மட்டுமே. மீண்டும் திரும்பாத அந்த வசந்த காலத்தை எண்ணி எண்ணியே எமது காலம் முடிந்து கொண்டிருக்கிறது. என்னதான் மீண்டும் கட்டப்பட்டாலும் எமது உறவுகளும் அந்த ஊரின் கலகலப்பும் என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் உள்வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற உண்மை இரண்டாம் முறையும் ஊருக்குப் போனபோது நிசமாகியது. திரும்ப அங்கு போய் குடியிருப்போம் என்ற எண்ணமும் நாளடைவில் கனவாகி விடும் என்றே தோன்றகிறது. வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் எமது வாழ்க்கை .....? நல்லதொரு நினைவு மீட்டல் ரஞ்சித் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

இருபத்தைந்து வருடங்களின் பின் என் தாயகம் நோக்கி பயணிக்கையில் மனதுக்குள் இருந்த தேடல் அங்கு போய் எனது ஊரின் வெறுமையைப் பார்த்தபின் மிஞ்சியது ஏக்கம் மட்டுமே. மீண்டும் திரும்பாத அந்த வசந்த காலத்தை எண்ணி எண்ணியே எமது காலம் முடிந்து கொண்டிருக்கிறது. என்னதான் மீண்டும் கட்டப்பட்டாலும் எமது உறவுகளும் அந்த ஊரின் கலகலப்பும் என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் உள்வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற உண்மை இரண்டாம் முறையும் ஊருக்குப் போனபோது நிசமாகியது. திரும்ப அங்கு போய் குடியிருப்போம் என்ற எண்ணமும் நாளடைவில் கனவாகி விடும் என்றே தோன்றகிறது. வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் எமது வாழ்க்கை .....? நல்லதொரு நினைவு மீட்டல் ரஞ்சித் தொடருங்கள்.

பலரது உணர்வுகளும் இவ்வாறு தான் உள்ளது!

விரும்பியோ அல்லது விரும்பாமலோ......தூரத் தூர விலகிப் போய்க்கொண்டிருக்கிறோம்!🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் உயிருடன் இருக்கும்வரை இந்த அங்கலாய்ப்பு  எம்மை விட்டு விலகாது. எமக்குப்பின் ஒருவேளை பிள்ளைகள் கியூபா மெக்சிக்கோ போவதுபோல விடுமுறையைக் கழிக்க ஒருவேளை தாயகம் நோக்கிப் பயணிப்பார்களோ என்னவோ அதுகூட நிச்சயமில்லை. இந்த உண்மையை ஜீரணிக்க கஸ்ரமாகத்தான் இருக்கிறது. கருத்துக்கு நன்றிகள் புங்கையூரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம்  காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா? இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது,          வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா?

பேசிச் செய்யப்படும் திருமணங்களில் ஆணினதும் பெண்ணினதும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது எதிர்பார்ப்புகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல், குடும்ப கெளரவம், மூத்த பிள்ளை மற்றவர்களுக்கு உதாரணம் ஆக இருக்க வேண்டும், சொந்தத்தில் முடிக்கவேண்டும், சொத்துடன் முடிக்க வேண்டும் என்கிற தம்பதியினரின் அந்நியொன்னியத்திற்குச் சிறிதுமே சம்பந்தமில்லாத காரணிகளால் உறவு மூன்றாம் தரப்பினரால் தீர்மானிக்கப்பட்டு, நாளடைவில் ஒத்துவராதென்று இருவரும் அல்லது இருவருள் ஒருவரோ தீர்மானிக்கும்போது உறவு முற்றுப்பெறுகிறது.

அப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன்? இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்?

ஆகக் காதல் என்பது வெறும்  பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும்  துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா?

தொடங்கப்பட்ட தலைப்பிற்கும் இங்கு நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை, ஆனாலும் ஒருமுறை உங்கள் கருத்தையும் கேட்டு வைக்கலாம் என்பதற்காக கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு பெண்ணிற்கான சமூக அந்தஸ்த்தென்பது தமிழரைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது? திருமண முறிவிற்குக் காரணமான ஆண்பற்றிய எந்த விமர்சனத்தையும் மும்வைக்காத எமது சமூகம், பெண்ணை மட்டுமே மொத்தக் காரணியாக்கி சாடுவது ஏன்? 

தனித்து வாழ எத்தனிக்கும் பெண்மீதான அழுத்தங்கள் எவை? ஊரிலிருக்கும் பல ஆண்களின் பார்வையில் ஒரு பண்டமாகத் தெரிவது முதல், ஊர்ப்பெண்களின் வாயில் நடத்தை கெட்டவள் எனும் அவலாக மாறும்வரை அவள் படும் அவஸ்த்தைகள் எவை? 

பொருளாதார ரீதியில் சுயமாக ஒரு பெண்ணினால் வாழமுடியும் என்பது சாத்தியமாகியபிறகு அவள் தனியாகவோ, விரும்பிய ஆணுடன் வாழ்வதில் என்ன தவறு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சமூகத்திற்குமாக ஒரு பெண் வாழும் வாழ்க்கை முழுமையானதா? 

இங்கே பெண்ணின் விருப்பு வெறுப்புகளோ, உணர்வுகளோ தேவையற்றதா? “என்னனவாக இருந்தாலும், நீதான் அனுசரிச்சுப் போகவேணும் பிள்ளை” என்று அவளின் துன்பங்களையோ உணர்வுகளையோ அறிந்துகொள்ள விரும்பாத, அறிந்தும் எதுவுமே செய்ய விரும்பாத பெற்றோர் இன்னமும் எம்மில் இருப்பது ஏன்? 

“நீ பேசாமல் இருந்தாலேயே எல்லா பிரச்சனையும் சரியாகும்” என்று கூறியே பெண்ணின் உணர்வுகளை மழுங்கடித்து ஆணாதிக்கத்திற்குள் தெரிந்தே தள்ளும் பெற்றோர் சகோதரர்கள் இன்னும் இருப்பது ஏன்?

இவைகளின் அழுத்தங்களால் ஒரு பெண் தனது விரும்பா வாழ்விலிருந்து வெளியே வருவதா அல்லது எவருமே தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்கிற விரக்தியில் மனநோயாளியாகி தனது வாழ்வையே முடித்துக்கொள்ளுவதா சரியானது?

புரிந்துகொள்ளமுடியாத, விருப்பமில்லாத வாழ்வொன்றிற்காக வாழ்வை முடித்துக்கொள்வதைக் காட்டிலும், சுயமாக, அழுத்தமில்லாத வாழ்வொன்று சாத்தியமென்பது எமது பெண்களுக்கு தெரிந்திருக்கிறதா?

இதைச் செய்வதற்கு அவர்களுக்குப் தடையாக இருப்பது எது? அப்படியொரு இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவைதான் என்ன பெண்ணிற்கு?

 

Link to comment
Share on other sites

10 hours ago, ரஞ்சித் said:

உறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம்  காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா? இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது,          வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா?

ஆண்-பெண் திருமண உறவு என்பது தனித்துவமான ஒன்று தான். எனினும் இதுவும் நட்பு மற்றும் உறவினர்களுடனான உறவு போல் ஒரு உறவு தான் என்று சிந்தித்தால் இந்த உறவையும் எப்படிக் கையாள வேண்டும் என்ற அடிப்படை எண்ணமாவது இருக்கும். மற்ற எந்த உறவுக்கும் அவசியமான புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, காருண்யம் ஆகிய பண்புகள் திருமண உறவின் வெற்றிக்கும் மிக அவசியமாக உள்ளன. இவை புறக்கணிக்கப்படுமிடத்து மற்ற உறவுகள் போல திருமண உறவும் விரிசலடைகிறது. 

சரியாக பொருத்தம் பார்க்கப்படாமல் செய்யப்பட்ட திருமணங்களும் விரிசலுக்குக் காரணம். இங்கு பொருத்தம் என்பது படிப்பு, குடும்பப்பின்னணி ஆகியவற்றில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு தனிநபர் சார்ந்த விடயங்களாக இருக்கலாம். ஜோதிடத்திலும் எனக்கு ஓரளவு நம்பிக்கை உண்டு, எனினும் அங்கும் பொருத்தம் சரியாகக் கணிக்கப்படுகிறதா என்று சொல்ல முடியாது. அது ஜோதிடர்களின் திறமையையும் பொறுத்தது.

எவ்வாறாயினும் ஒவ்வொரு திருமண உறவுக்கும் அதைச் சூழத் தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே பல கோணங்களில் ஆராய்தால் தான் தீர்வு கிடைக்கும். வாழும் சூழலின் அழுத்தங்களும் சுமுகமாக இருக்க வேண்டிய திருமணபந்தங்களுக்குச் சவாலாக இருக்கின்றன. இதனால் தான் சிலருக்கு இட, வேலை மாற்றங்கள் உறவுநிலை மேம்பட உதவியுள்ளன.

Link to comment
Share on other sites

11 hours ago, ரஞ்சித் said:

அப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன்? இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்?

ஆகக் காதல் என்பது வெறும்  பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும்  துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா?

'காதல் திருமணம் vs ஒழுங்குபடுத்தப்பட்ட திருமண' என்ற பார்வை திருமண உறவுகள் பற்றிய சிக்கல்களுக்குத் தீர்வாகாது; பட்டிமன்ற விவாதத்துக்கு வெறுமனே சுவாரஸ்யமான தலைப்பாக மட்டுமே உபயோகமாகலாம்!

காதலோ, பெரியார் நிச்சயித்ததோ திருமணம் என்ற உறவானது புதியதோர் உலகம்; திருமண உலகின் சவால்கள் காதலிக்கும் போது தெரிவதில்லை. காதலிக்காதோருக்கு இது இன்னமும் சவாலாக இருக்கும். எனினும் மேலே நான் குறிப்பிட்ட மனித உறவுகளுக்கு அவசியமான பண்புகளைக் கடைப்பிடித்தல் மட்டுமல்ல முடிந்தவரை சரியான துணையைத் தேர்ந்தெடுத்தலும் நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமாகும்.

காதல் என்பது பதின்ம வயதில் மட்டும் வரவேண்டிய ஒன்றல்ல. எனினும் பதின்ம வயதுக் காதலர்களில் நீடித்த மணவாழ்வை வாழ்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

காதல் என்பது அழகிய அட்டைப்படம் உள்ள புத்தகம் போன்றது. அட்டைப்படத்தின் அழகிற்காக மட்டும் வாங்கப்பட்ட புத்தகத்தை நீண்ட காலம் மனமொன்றிப் படிக்க முடியாமல் இருக்கலாம்.  ஆனால், அதன் உள்ளடக்கத்தைப் பொறுமையாக ரசித்துப்படித்து அது சொல்லவந்த விடயங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமையும். அதற்கு முதலில் நாம் விரும்பிய புத்தகத்தை வாங்க வேண்டும். அல்லது அதைப் பொறுமையாக வாசிக்க / புதியவற்றை அறிய ஆர்வத்துடன் இருக்க வேண்டும். நல்ல சூழலையும் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். நமது திருமண உறவும் ஓர் புத்தகம் வாசிக்கும் அனுபவம் போலத்தான்!😊

Link to comment
Share on other sites

11 hours ago, ரஞ்சித் said:

திருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு பெண்ணிற்கான சமூக அந்தஸ்த்தென்பது தமிழரைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது? திருமண முறிவிற்குக் காரணமான ஆண்பற்றிய எந்த விமர்சனத்தையும் மும்வைக்காத எமது சமூகம், பெண்ணை மட்டுமே மொத்தக் காரணியாக்கி சாடுவது ஏன்? 

தனித்து வாழ எத்தனிக்கும் பெண்மீதான அழுத்தங்கள் எவை? ஊரிலிருக்கும் பல ஆண்களின் பார்வையில் ஒரு பண்டமாகத் தெரிவது முதல், ஊர்ப்பெண்களின் வாயில் நடத்தை கெட்டவள் எனும் அவலாக மாறும்வரை அவள் படும் அவஸ்த்தைகள் எவை? 

பொருளாதார ரீதியில் சுயமாக ஒரு பெண்ணினால் வாழமுடியும் என்பது சாத்தியமாகியபிறகு அவள் தனியாகவோ, விரும்பிய ஆணுடன் வாழ்வதில் என்ன தவறு? 

நிறைய நல்ல பாரம்பரியங்களையுடைய நமது ஈழத்துக் கலாச்சாரத்தில் பெரும் சாபக்கேடான அம்சங்கள் தான் இவை. பொதுவாக நான் கலாச்சார மாற்றத்தை விரும்புவதில்லை; எனினும் இவ்வாறான அழுக்குகள் களையப்பட நமது சமூகத்தில் (புலத்திலும், வெளியிலும்) பெரும் கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும் - அதாவது நாம் எல்லோரும் கூட்டாக இது போன்ற விடயங்களில் நமது பார்வையை மாற்றியமைக்க வேண்டும். 

சாபக்கேடான சில பழமையான அம்சங்களில் ஊறிய மூத்தோரும், மூட நம்பிக்கையாகப் பின்பற்றும் ஏனையோரும் இந்த மாற்றங்களை ஏற்கத் தயங்குவர். எனினும், இந்த விடயங்களில் நம்மிடையே அடிப்படையான மனமாற்றம் இன்றி (தனிநபராகவோ/கூட்டாகவோ) பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் விடியல் கிட்டாது. அவர்கள் இவ்வாறான மாற்றங்களை அங்கீகரிக்கும் ஏனைய சமூகங்களுடன் தம்மை இணைத்துக்கொள்ளும் நிலைமையும் மாறாது / தவறுமில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.