யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தமிழ் சிறி

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.

Recommended Posts

ADMK.jpg

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிய இணைப்பு விஞ்ஞாபனம் ஒன்றை கட்சியின் இணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் கே.பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், இந்திய மத்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் என்பன, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக உரிய அந்தஸ்த்தை வழங்குவதுடன், அதிகாரப் பகிர்வை துரிதமாக்கவும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

http://athavannews.com/இலங்கையில்-இடம்பெற்ற-போர/

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.

அடுத்த தேர்தலில் வென்றால்த் தான் செய்வார்களாம்.

இப்பவே இரண்டு பகுதியும் ஆட்சியில் தானே இருக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

வலியுறுத்திவிட்டு ஒரு ரீ அல்லது காபி சாப்பிட்டு விட்டு வருவதையே அதிமுக குறிப்பிட்டது. அந்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும்.

Share this post


Link to post
Share on other sites

இலங்கைத்தமிழர் பிரச்சனையும் தமிழ்நாட்டு  தேர்தல் அரசியலுக்கு துருப்புச்சீட்டு ஆகிவிட்டது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு