Jump to content

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. 

மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 இலங்கை இராணுவத்தினர் பங்குபற்றினர்.

இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று இலங்கை இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படை விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

air.jpg

மித்திர சக்தி பிராந்தியத்தில் நடத்தப்படுகின்ற இராணுவத்திற்கு இராணுவம் எனும் ரீதியிலான பெரும் இரு தரப்பு பயிற்சியாகும்.

முன்னைய பயிற்சி நடவடிக்கைகளின் வெற்றியின் அடிப்படையில் மித்திர சக்தி அண்மையில் ஒரு படைக் குழு என்ற மட்டத்திலிருந்து ஒரு முழுமையான படைப்பிரிவு மட்டத்திலான ஈடுபடுதல் எனும் நிலைக்கு முன்னேற்றப்பட்டுள்ளது.  

இந்தப் பயிற்சியானது இரு தரப்பு இராணுவத்திற்கும் இடையில் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை மேம்படுத்துவதற்கும் மற்றும் தொழில்சார் ரீதியான மதிப்பு, தனிப்பட்ட ரீதியான பிணைப்பு மற்றும் பரந்த பயிற்சி இடைத் தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் ஏற்கெனவே உள்ள சுமுக உறவை கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பை அளிப்பதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குறித்த பயிற்சி நாடுகளுக்கிடையிலான பயங்கரவாதத்தைக் கையாளுதல், கூட்டு மூலோபாய செயலாற்றல் மற்றும் போர்த் திறன்களைக் உருவாக்குதல் என்பவற்றுக்கான ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும். 

இரண்டு இராணுவங்களினாலும் பின்பற்றப்படும் சிறந்த நடை முறைகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒவ்வொருவரினதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றுக்கான ஒரு சிறந்த தளத்தையும் வழங்கும். 

பயங்கரவாதம் மற்றும் ஏனைய பொதுவான அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கெதிராக பயனுறுதியான வகையில் போராடுவதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளினதும் விருப்பங்களையும் இப்பயிற்சியின் போது முன்னெடுக்கபடவுள்ளது.

இந்த வருடம் பயிற்சியின் பரப்பெல்லை கணிசமான வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் காலாட்படை அடிப்படையிலான நிகழ்வுகளிலிருந்து, பீரங்கிப் படை, பொறியியலாளர் பிரிவு, சமிக்ஞைப் பிரிவு, இராணுவ மருத்துவப் பிரிவு மற்றும் விசேட படையணி ஆகிய மட்டங்களிலிருந்தும் பங்குபற்றுவர்.  

இப்பயிற்சி தியத்தலாவையில் நடத்தப்படுவதுடன் அங்கு இலங்கை இராணுவத்தின் கெமுனு வோட்ச் படைப்பிரிவு, இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் பிரிவு, பொறியியலாளர்கள், சமிக்ஞைப் பிரிவு போன்ற பிரிவின் படையுறுப்பினர்களுடன் பங்குபற்றும். பயிற்சி விரிவுரைகள், செய்முறை விளக்கங்கள், சிறிய அணி மூலோபாய செயற்பாடுகள், தொடர்பாடல் ஒருங்கிணைப்பு, சுடுகலன் பயிற்சிகள் மற்றும் மனிதநேய உதவி, அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என்பவற்றின் சம்பந்தப்படுத்தல்களுடன் இடம்பெறவுள்ளது.

பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் கலந்தவையாக இருக்கும் என்பதுடன் அவை இரண்டு இராணுவங்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளுதல், பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களின் மீள் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிணைப்பு, நட்பு மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றைக் கடடியெழுப்புவதல் என்பவற்றுக்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/52680

Link to comment
Share on other sites

120 இந்திய இராணுவத்தினருடன் கட்டுநாயக்க வந்த இந்திய விமானப்படை விமானம்

 

IAF-IL76-300x201.jpgசிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து நடத்தவுள்ள கூட்டுப் பயிற்சிக்காக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும் “மித்ரசக்தி“ என்ற கூட்டுப் பயிற்சியின் ஆறாவது கட்டம் இன்று தியத்தலாவவில் ஆரம்பமாகவுள்ளது.

ஏப்ரல் 8ஆம் நாள் வரை தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் உள்ளிட்ட 120 படையினரும், சிறிலங்கா இராணுவத்தின் கெமுனு காவல்படையின் 120 படையினரும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் பிகார் ரெஜிமெட்டின் 1 ஆவது பற்றாலியனைச் சேர்ந்த  120 இந்திய இராணுவத்தினரை ஏற்றிய, இந்திய விமானப்படையின் IL-76 விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக, கேணல் பார்த்தசாரதி ராய், கேணல் சோம்பித் கோஷ், மேஜர் புஜம் மான்ஹாஸ், மேஜர் றோகித் குமார் திரிபாதி ஆகிய அதிகாரிகளும் சிறிலங்கா வந்துள்ளனர்.

IAF-IL76.jpghttp://www.puthinappalakai.net/2019/03/26/news/37070

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.