• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

Recommended Posts

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. 

மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 இலங்கை இராணுவத்தினர் பங்குபற்றினர்.

இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று இலங்கை இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படை விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

air.jpg

மித்திர சக்தி பிராந்தியத்தில் நடத்தப்படுகின்ற இராணுவத்திற்கு இராணுவம் எனும் ரீதியிலான பெரும் இரு தரப்பு பயிற்சியாகும்.

முன்னைய பயிற்சி நடவடிக்கைகளின் வெற்றியின் அடிப்படையில் மித்திர சக்தி அண்மையில் ஒரு படைக் குழு என்ற மட்டத்திலிருந்து ஒரு முழுமையான படைப்பிரிவு மட்டத்திலான ஈடுபடுதல் எனும் நிலைக்கு முன்னேற்றப்பட்டுள்ளது.  

இந்தப் பயிற்சியானது இரு தரப்பு இராணுவத்திற்கும் இடையில் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை மேம்படுத்துவதற்கும் மற்றும் தொழில்சார் ரீதியான மதிப்பு, தனிப்பட்ட ரீதியான பிணைப்பு மற்றும் பரந்த பயிற்சி இடைத் தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் ஏற்கெனவே உள்ள சுமுக உறவை கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பை அளிப்பதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குறித்த பயிற்சி நாடுகளுக்கிடையிலான பயங்கரவாதத்தைக் கையாளுதல், கூட்டு மூலோபாய செயலாற்றல் மற்றும் போர்த் திறன்களைக் உருவாக்குதல் என்பவற்றுக்கான ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும். 

இரண்டு இராணுவங்களினாலும் பின்பற்றப்படும் சிறந்த நடை முறைகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒவ்வொருவரினதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றுக்கான ஒரு சிறந்த தளத்தையும் வழங்கும். 

பயங்கரவாதம் மற்றும் ஏனைய பொதுவான அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கெதிராக பயனுறுதியான வகையில் போராடுவதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளினதும் விருப்பங்களையும் இப்பயிற்சியின் போது முன்னெடுக்கபடவுள்ளது.

இந்த வருடம் பயிற்சியின் பரப்பெல்லை கணிசமான வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் காலாட்படை அடிப்படையிலான நிகழ்வுகளிலிருந்து, பீரங்கிப் படை, பொறியியலாளர் பிரிவு, சமிக்ஞைப் பிரிவு, இராணுவ மருத்துவப் பிரிவு மற்றும் விசேட படையணி ஆகிய மட்டங்களிலிருந்தும் பங்குபற்றுவர்.  

இப்பயிற்சி தியத்தலாவையில் நடத்தப்படுவதுடன் அங்கு இலங்கை இராணுவத்தின் கெமுனு வோட்ச் படைப்பிரிவு, இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் பிரிவு, பொறியியலாளர்கள், சமிக்ஞைப் பிரிவு போன்ற பிரிவின் படையுறுப்பினர்களுடன் பங்குபற்றும். பயிற்சி விரிவுரைகள், செய்முறை விளக்கங்கள், சிறிய அணி மூலோபாய செயற்பாடுகள், தொடர்பாடல் ஒருங்கிணைப்பு, சுடுகலன் பயிற்சிகள் மற்றும் மனிதநேய உதவி, அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என்பவற்றின் சம்பந்தப்படுத்தல்களுடன் இடம்பெறவுள்ளது.

பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் கலந்தவையாக இருக்கும் என்பதுடன் அவை இரண்டு இராணுவங்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளுதல், பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களின் மீள் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிணைப்பு, நட்பு மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றைக் கடடியெழுப்புவதல் என்பவற்றுக்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/52680

Share this post


Link to post
Share on other sites

120 இந்திய இராணுவத்தினருடன் கட்டுநாயக்க வந்த இந்திய விமானப்படை விமானம்

 

IAF-IL76-300x201.jpgசிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து நடத்தவுள்ள கூட்டுப் பயிற்சிக்காக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும் “மித்ரசக்தி“ என்ற கூட்டுப் பயிற்சியின் ஆறாவது கட்டம் இன்று தியத்தலாவவில் ஆரம்பமாகவுள்ளது.

ஏப்ரல் 8ஆம் நாள் வரை தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் உள்ளிட்ட 120 படையினரும், சிறிலங்கா இராணுவத்தின் கெமுனு காவல்படையின் 120 படையினரும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் பிகார் ரெஜிமெட்டின் 1 ஆவது பற்றாலியனைச் சேர்ந்த  120 இந்திய இராணுவத்தினரை ஏற்றிய, இந்திய விமானப்படையின் IL-76 விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக, கேணல் பார்த்தசாரதி ராய், கேணல் சோம்பித் கோஷ், மேஜர் புஜம் மான்ஹாஸ், மேஜர் றோகித் குமார் திரிபாதி ஆகிய அதிகாரிகளும் சிறிலங்கா வந்துள்ளனர்.

IAF-IL76.jpghttp://www.puthinappalakai.net/2019/03/26/news/37070

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • 2020ஆம் கல்வியாண்டில் 83 ஆயிரம் மாணவர்கள் பல்கலையில் உள்ளீர்ப்பு உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன  
    • மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு விசேட அலகு ஆரம்பம் -எஸ்.குகன் இந்தியாவிலிருந்து மீளத் திரும்பி தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நலன் கருதி, தென்மராட்சி பிரதேச செயலகத்தில் விசேட அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அலகு, பிரதேச செயலகத் திட்டமிடல் கிளை அலகில் இயங்குகின்றது. 021-2271014 / 0766363131 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென, பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மீளக்குடியமர்ந்துள்ள-மக்களுக்கு-விசேட-அலகு-ஆரம்பம்/71-242465
    • என்.ராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எம். ஏ. சுமந்திரன் வந்த பின்னரே, அக்கட்சிக்குள் இருந்த அங்கத்துவக் கட்சிகள் சீர்குலைந்ததாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரன் என்பவர் எங்கிருந்தோ வந்து, திடீரென்று கூட்டமைப்பின் நுழைந்தாரெனவும் அதன் பின்னர் மாவை சேனாதிராஜா தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டாரெனவும் கூறினார். தலைமைப் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்லவெனத் தெரிவித்த அவர், அதை சரியாக வழிநடத்த தெரியாத ஒருவர்தான், தலைமைப் பதவி வகிக்கின்றாரெனவும் குற்றஞ்சாட்டினார். ஆரம்பகாலத்தில், அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டணியில் இருந்து செய்யப்பட்டனரென, சுமந்திரன் கூறியிருப்பதாகவும் ஆனால், வரலாறு தெரியாதவர்கள், மீண்டும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இப்போது கோரிக்கையை முன்வைக்கிறார்களெனவும், ஆனந்தசங்கரி கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கடசகள-சரகலநதமகக-சமநதரன-கரணம/71-242468
    • எண்களுக்கு பெயர்ப் பலகைதான் முக்கியம். அது தமிழில் இருந்தால், அது போதும் எங்களுக்கு .
    • இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைமைகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே விரைவில் இது குறித்தும் நாம் நடவடிக்கைகளை எடுப்போம் .  மேலும் மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கும்  நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், எங்களது ஒத்துழைப்புக் காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா உருவாக்குவதற்கு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம்.  எனவே மலையகத்துக்கும் வடக்குக்குமான தொடர்பு ஆழமானது. இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைபுக்குள்  எந்தவிமானப் பிளவுகளும் இல்லை என்றார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு மற்றும் பங்காளிக்கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இம்முறை தேர்தல் நகர்வுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியூகங்கள் எவ்வாறு உள்ளதென வினவியமைக்கு அவர் இதனைக் கூறினார்.  https://www.virakesari.lk/article/71101