Jump to content

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

Recommended Posts

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

tourist-arrival-300x200.jpgவரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் வெற்றியைப் பொறுத்து, இதனை நீடிப்பதா- இல்லையா என்று முடிவு செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/03/25/news/37058

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்க லே கூட்டத்துக்கு நல்லா பின்பக்கம் காயுது என்று தெரியுது , மிகவிரைவில் புல் தின்பார்கள் 
வரி வரி என்று ஒருபக்கம், விலையேற்றம் ஒருபக்கம் ,மின்வெட்டு ஒருபக்கம் என்று  சனம் கொலைவெறியில்.... 
இது போதாது என்று திரும்பவும் சீனாவிடம் பெக்கிங் , போதாக்குறைக்கு  வாற சுற்றுலாப்பிரயாணிகளிடமும் பாலியல் துர்நடத்தை, நாடே நாறுதாம் என்று கேள்வி ...
ஓய் @தனி உண்மையா கேள்விப்பட்டதெல்லாம் .....?  EPF ,ETF இற்கும் வரி ஆரம்பித்திருக்கிறார்களாமே ,
செத்தானுகள் தனியார்துறை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இனி 24 மணியும் தடையற்ற

வெட்டில்லா  மின்சாரம் என  போன  கிழமை  அறிக்கை  ஒன்று  பார்த்த ஞாபகம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவையும் 35 டாலர் கட்டவேண்டி இருக்கே என்று மீரா கவலைப்பட்டார்.

இந்த 6 மாதத்துக்குள் போய்வந்துடுங்க சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு தடவையும் 35 டாலர் கட்டவேண்டி இருக்கே என்று மீரா கவலைப்பட்டார்.

இந்த 6 மாதத்துக்குள் போய்வந்துடுங்க சார்.

நன்றி ஈழப்பிரியன்.

இந்த வருடம் ஏற்கனவே 2 தடவை கட்டியாச்சு, பார்க்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

நன்றி ஈழப்பிரியன்.

இந்த வருடம் ஏற்கனவே 2 தடவை கட்டியாச்சு, பார்க்கலாம்....

மீரா கொழும்பில் நிற்கிற வேளையில் ஒருக்கா இமிகிரேசன் பக்கம் போய் மல்ரிப்பிள் விசாவைப்பற்றி ஆராயலாமே?
சிலவேளை அங்கே கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இனி 24 மணியும் தடையற்ற

வெட்டில்லா  மின்சாரம் என  போன  கிழமை  அறிக்கை  ஒன்று  பார்த்த ஞாபகம்??

ஊர் உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் கடன் எடுத்தும் நாட்டை சீர்செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள்.
இங்கே ஈழத்தமிழர்கள் மார்தட்ட முடியும்.
எங்களை பிரித்து விடுங்கள்.எமக்கு பத்து வருடங்கள் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

மீரா கொழும்பில் நிற்கிற வேளையில் ஒருக்கா இமிகிரேசன் பக்கம் போய் மல்ரிப்பிள் விசாவைப்பற்றி ஆராயலாமே?
சிலவேளை அங்கே கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

ஈழப்பிரியன், long term multiple விசா British passport ற்கு இல்லையாம்.

3 மாதம் தொடர்ச்சியாக (இலங்கையை விட்டு வெளியேறாது) இருந்தால் பிறப்பு சான்றிதழுடன் 1 வருட வதிவிட விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்க லே கூட்டத்துக்கு நல்லா பின்பக்கம் காயுது என்று தெரியுது , மிகவிரைவில் புல் தின்பார்கள் 
வரி வரி என்று ஒருபக்கம், விலையேற்றம் ஒருபக்கம் ,மின்வெட்டு ஒருபக்கம் என்று  சனம் கொலைவெறியில்.... 
இது போதாது என்று திரும்பவும் சீனாவிடம் பெக்கிங் , போதாக்குறைக்கு  வாற சுற்றுலாப்பிரயாணிகளிடமும் பாலியல் துர்நடத்தை, நாடே நாறுதாம் என்று கேள்வி ...
ஓய் @தனி உண்மையா கேள்விப்பட்டதெல்லாம் .....?  EPF ,ETF இற்கும் வரி ஆரம்பித்திருக்கிறார்களாமே ,
செத்தானுகள் தனியார்துறை 

எல்லா கோதாரிகளையும் ஆரம்பிக்குறானுகள் மாதம் 30000 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறானுகள் செலவு லட்சத்தை தாண்டும் போல் உள்ளது கேட்டால் பொருளாதார மாற்றமாம் இரவு தூங்கி எழும்பினால் எல்லா பொருளுக்கும் விலையேற்றம் என்ன செய்வது என்று புரியல முந்தி 1000 ரூபா மாத்தினால் ஓரளவு கைக்குள்ள பிரளும் இப்ப 5000 ரூபா மாத்தினால் கூட கைக்குள்ள ஒன்றும் நிற்குதில்லை 
 
21 hours ago, விசுகு said:

இனி 24 மணியும் தடையற்ற

வெட்டில்லா  மின்சாரம் என  போன  கிழமை  அறிக்கை  ஒன்று  பார்த்த ஞாபகம்??

ம்கும் பங்குனி வெயில் எல்லா பக்கமும் காய வைக்கிறது மண்டை சூடாகி முடியும் நரைக்கிறது இதுக்குள்ள செயற்கை மழையாம் என்று சொன்னாங்கள் செய்தியும் வந்தது பெய்விச்சாங்களாம் என்று ஆனால் மின் வெட்டு தொடர்கிறது 

8 hours ago, குமாரசாமி said:

ஊர் உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் கடன் எடுத்தும் நாட்டை சீர்செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள்.
இங்கே ஈழத்தமிழர்கள் மார்தட்ட முடியும்.
எங்களை பிரித்து விடுங்கள்.எமக்கு பத்து வருடங்கள் தேவையில்லை.

எங்களின்ற அரசியல் வாதிகளை ஒரு விலை பேசி எடுத்து விட்டு சொல்லுங்கள் 
எங்களுக்கு வேண்டாம் வேண்டுமென்றால் நீங்கள் அவர்களை வைத்துக்கொள்ளுங்கள் ஐந்து வருடம் போதும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.