யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ரஞ்சித்

அஷ்வினுக்கு எதிராக பொங்கும் ட்விட்டர்..!- ஐபிஎல் சர்ச்சை

Recommended Posts

ஜோஷ் பட்லரை சூட்சுமமாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டு, சட்டம் பேசும் ரவிச்சந்திரன் அஷ்வின்

தற்போது நடைபெற்று வரும் இந்திய ஐ. பி. எல் போட்டிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியும் மோதின. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 184 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்த்தான் அணி, 3 விக்கெட்டுகளுக்கு 148 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையின் இருந்தபொழுது, பந்துவீசச் சென்ற இந்திய சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், கோட்டிற்கு வெளியே ஓடுவதற்கு ஆயத்தமாக நின்றிருந்த ஜோஷ் பட்லரை, மிகவும் சூட்சுமமான முறையில் ரண் அவுட் ஆக்கி, ராஜஸ்த்தான் அணியின் பின்வரிசை ஆட்டக் காரர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்ததன்  மூலம் பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

அஷ்வின் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தது கிரிக்கெட் விதிமுறைகளின்படி, முறையானது என்றாலும் கூட, ஆட்டத்தின் கண்ணியம் காத்தல் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக இருக்கும்பொழுது அஷ்வின் கபடமாகவே பட்லரை ஆட்டமிழக்கச் செய்ததாகப் பலரும் கூறுகிறார்கள்.

பந்துவீசுவது போன்று பாவனை செய்துவிட்டு, துடுப்பாட்டக்காரர் கோட்டிற்கு வெளியே தனது மட்டையை எடுக்கும்வரை பார்த்திருந்துவிட்டு, கபடத்தனமாக விக்கெட்டினை அடித்து ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் அஷ்வின். இதனை சற்றும் எதிர்பார்த்திராத பட்லர், ஆட்ட நடுவரைப் பார்த்து இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று வாதிட்டாலும் கூட, மூன்றாம் நடுவரின் தீர்ப்பின் மூலம் பட்லர் ஆட்டமிழந்தவராகக் கணிக்கப்படுகிறார். கடும் கோபம் கொண்ட பட்லர் அஷ்வின் மீதும், நடுவர் மீதும் வசைமாரி பொழிந்துவிட்டு வெளியேறிவிடுகிறார். அவரைத்தொடர்ந்து ராஜஸ்த்தான் அணியின் ஏனைய துடுப்பாட்டக் காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 14 ஓட்டங்களால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.

ஆட்ட முடிவின்போது பத்திரிக்கையாளர்கள் ஆட்டத்தின் கண்ணியம் மீறப்பட்டது தொடர்பாக அஷ்வினிடம் வினவியபோது, விதிமுறைகளில் இருக்கிறதைத்தான் நான் செய்தேன், இதில் தவறேதுமில்லை. விதிமுறை விதிமுறைதான், இங்கே கண்ணியம் என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று அலட்சியமாகப் பதிலளித்தார். இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டியொன்றில், பாக்கிஸ்த்தானிய வீரர் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யும் சந்தர்ப்பம் இருந்தும் மேற்கிந்திய பந்துவீச்சாளர் கேட்னி வோல்ஷ், துடுப்பாட்டக் காரரை மீண்டும் கோட்டிற்குப் பின்னே வாருங்கள் என்று அழைத்து, விளையாட்டைத் தொடர்ந்ததும், அவ்வாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்விகண்டதும் நினைவிருக்கலாம். இதுபற்றி அஷ்வினிடம் பத்திரிக்கையாளர் வினவியபோது, அது அவரது விருப்பம். இது எனது விருப்பம். ஆட்கள் எல்லோரும் ஒரே மாதிரியல்லவே என்று பதில்க் கேள்வி கேட்டுள்ளார்.

அஷ்வின் இவ்வாறு முன்னர் பல தடவைகள் கபடத்தனமாக துடுப்பாட்டக் காரரை ஆட்டமிழக்கச் செய்ததை ஒத்துக்கொள்ளும் இந்திய அணி வீரர்கள், ஒருமுறை இலங்கை அணித் துடுப்பாட்டகாரர் திரிமானவை கபடமாக ஆட்டமிழக்கச் செய்த அஷ்வினின் கபடத்தனத்தைக் கடிந்துகொண்ட அப்போதைய தலைவர் ஷேவாக், திரிமானவை மீண்டும் துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு அழைத்தது நினைவிருக்கலாம். 

பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் இது தொடர்பாகக் கருத்துக் கூறும்போது, அது அஷ்வினின் முடிவு, அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது இந்த நடவடிக்கை காட்டியிருக்கிறது, இது ஏனைய அணி வீரர்களின் முடிவல்ல. நாம் இங்கே வந்திருப்பது நேர்த்தியான முறையில் விளையாடி, கண்ணியத்துடனும், மகிழ்ச்சியாகவும் ரசிகர்களை குஷிப்படுத்தத்தான் என்று மறைமுகமாக அஷ்வினின் கபடத்தனத்தைச் சாடியுள்ளார்.

அவ்வாறே ராஜஸ்த்தான் அணித்தலைவர் ரகானேயும், துரதிஷ்ட்டவசமாக நாம் இவ்விடயங்கள் பற்றிப் பேசமுடியாது. ஆட்ட நடுவர்கள் இதனைக் கவனிக்கட்டும். இவையெல்லாம் ஆட்டத்தின் பகுதியென்று ஏற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் நாம் செய்யவேண்டியதென்று கூறியிருக்கிறார்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

20 ஓவர் போட்டிகளில் ஒவ்வொரு ஓட்டங்ளும் பெறுமதியானது.
அதே மாதிரி
ஒவ்வொரு அவுட்டும் பெறுமதியானது.
ஆனபடியால் அஸ்வின் செய்தது சரியே.

Share this post


Link to post
Share on other sites

இங்கே நான் தொடங்கப்பட்ட தலைப்பு முற்றாக நீக்கப்பட்டு, நான் இணைத்த செய்தியும் அகற்றப்பட்டு, நான் இணைக்காத ஆனால் அது தொடர்பான செய்திக்குறிப்பொன்று என்னுடைய பெயரில் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கிறதென்று யாராவது அறியத்தர முடியுமா?

ஏனென்றால், நான் இங்கே இணைத்தது இன்னொரு இடத்திலிருந்து வெட்டி ஒட்டியதை அல்ல. போட்டியைக் கண்டு நான் எழுதியது.

Share this post


Link to post
Share on other sites

எல்லோரும் ஜென்டில்மேன்களாக இருந்தால், கீப்பர் கேட்ச்களுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்யவேண்டிய தேவையே இருக்காதே! எத்தனை பேட்ஸ்மேன்கள் அம்பயர் அவுட் சொல்லும் முன் வெளியேறியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் விளையாடிய இந்த விளையாட்டில் சச்சின், கில்கிறிஸ்ட் என மிகச் சொற்ப உதாரணங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

`அஷ்வின் செய்தது சரியா தவறா’ என்ற வாதம்தான் நேற்றிரவில் இருந்து ஒவ்வொருவராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜாஸ் பட்லரை `மன்கடட்’ முறையில் அவர் வெளியேற்ற, `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ பாதிக்கப்பட்டுவிட்டது என்று பலரும் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.சி.சி நடத்திய ஒரு ஆன்லைன் கருத்துக்கணிப்பில் 72 சதவிகிதம் பேர் அதைத் தவறு என்று சொல்லியிருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களோடு, இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினைக் குறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஐ.சி.சி விதியின்படி இது சரிதான் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆக, என்ன முடிவுக்குதான் வருவது? 

`கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம்’ என்று சொல்பவர்கள், அதில் இருக்கும் உண்மையை முழுதாக உணர்ந்தாலே, இவ்வளவு எமோஷன் ஆகத் தேவையிருக்காது. இந்த `மன்கடட்’ முறையில் ஒரு பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம் என்ற விதி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? பௌலர் பந்துவீசுவதற்கு முன், பேட்ஸ்மேன்கள் பல அடி முன் சென்றுவிடுகிறார்கள் என்பதனால்தானே! பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை அவமதித்ததால் உருவாக்கப்பட்டதுதான் இந்த விதி. இருக்கும் விதியின்படி செயல்பட்ட ஒரு பௌலர் மட்டுமே இன்று குற்றவாளியாகத் தெரிவதன் காரணம் என்ன?

ஸ்டம்பிங்

 

இந்த ரன் அவுட்டை விட்டுவிடுவோம். விக்கெட் கீப்பர்கள் இதுவரை புத்திசாலித்தனமாக ரன் அவுட் செய்ததையெல்லாம் நாம் பெரிதுபடுத்தாதது ஏன்? எத்தனை முறை பேட்ஸ்மேன்கள், கிரீசிலிருந்து காலை எடுப்பதற்குக் காத்திருந்து தோனி ஸ்டம்பிங் செய்திருக்கிறார். எத்தனை கீப்பர்கள், பௌலரை வைட் வீசச்சொல்லி ஸ்டம்பிங் செய்திருக்கின்றனர். முதல் ஐ.பி.எல் தொடரில், லட்சுமி ரத்தன் சுக்லாவை தோனி ரன் அவுட் செய்ததும் இதைப் போன்றதுதான். அதையெல்லாம் கீப்பர்களின் புத்திசாலித்தனமாக ஏற்றுக்கொண்டவர்கள், இப்போது கேம் ஸ்பிரிட் என்ற கொடி பிடிப்பது ஏன்?

பேட்ஸ்மேன்கள், பேலன்ஸ் மீறி கிரீசிலிருந்து கால் எடுக்கும்வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்வதும், ஓடிவரும் பேட்ஸ்மேனின் பேட், கிரீசைத் தொட்டுவிட்டு மேலெழும்போது ரன் அவுட் செய்வதும் எந்த வகையில் கேம் ஸ்பிரிட்? அது தவறு என்பதை உணர்ந்துதானே `பந்து ஸ்டம்பைத் தாக்கும் முன் பேட்ஸ்மேன் ஒருமுறை கிரீஸை ரீச் ஆகியிருந்தால் போதும். காலோ, பேட்டோ தரையைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அது ஜென்டில்மேன் ஆட்டம் இல்லை என்பதால் ஏற்படுத்தப்பட்ட விதிதானே இது. பின்னர், ஏன் இதுவரை நாம் அதைப் பெரிதுபடுத்தவில்லை?

பாடி லைன் அட்டாக்

கிரிக்கெட் ஆரம்பகாலத்திலிருந்து ஜென்டில்மேன்களின் கேமாக மட்டும்தான் இருக்கிறதா. அதுவும் இல்லைதானே! பௌன்சர் என்ற விஷயமே கேம் ஸ்பிரிட்டை மீறிய `பாடி லைன்’ பந்துவீச்சிலிருந்து வந்ததுதானே! 1932-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியின் டாப் பேட்ஸ்மேன்களை சமாளிக்க, உடலைக் குறிவைத்தே தொடர்ந்து பந்துவீசினார்கள் இங்கிலாந்து பௌலர்கள். அதன் பிறகுதான் ஓவருக்கு இத்தனை பௌன்சர்கள்தான் வீச வேண்டும் என்று விதி ஏற்படுத்தினார்கள். இப்படிப் பல்வேறு தருணங்களில் கேம் ஸ்பிரிட் என்பது கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

எத்தனையோ பொய்யான பிம்பங்களின் வழியாகத்தான் நாம் உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் `கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் கேம்’ என்பது. பௌலர்கள் ரிவர்ஸ் ஸ்விங்குக்காகப் பந்துகளைச் சேதப்படுத்தியது, பேட்ஸ்மேன்கள் அதிக எடைகொண்ட பேட்களைப் பயன்படுத்தியது, கடைசிப் பந்தில் அண்டர் ஆர்ம் பால் வீசியது, பேட்ஸ்மேன் சதமடிக்க ஒரு ரன் இருக்கும்போது நோ பால் வீசியது என எப்போதுமே இது முழு ஜென்டில்மேன் கேமாக இருந்ததில்லை. சிலர் மட்டும் முழுமையான ஜென்டில்மேன்களாக விளையாடியிருக்கிறார்கள். சிலர் அந்தப் பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போக, விளையாட்டில் இன்று அப்படியான குணத்தை எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லோரும் ஜென்டில்மேன்களாக இருந்தால், கீப்பர் கேட்ச்களுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்ய வேண்டிய தேவையே இருக்காதே! எத்தனை பேட்ஸ்மேன்கள் அம்பயர் அவுட் சொல்லும் முன் வெளியேறியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் விளையாடிய இந்த விளையாட்டில் சச்சின், கில்கிறிஸ்ட் என மிகச் சொற்ப உதாரணங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

ஜென்டில்மேன்ஸ் கேம்?

விளையாட்டைப் பொறுத்தவரை ஒருவன் தன் எதிராளியை `deceive’ செய்ய வேண்டும். அதாவது ஏமாற்ற வேண்டும். பெனால்டி அடிக்கச் செல்பவன் கோல்கீப்பரை ஏமாற்ற வேண்டும். செட்டராக நிற்பவன், டிராப் போடுவதுபோல் எதிரணி செட்டரை ஏமாற்ற வேண்டும். பேட்ஸ்மேன், பௌலரை ஏமாற்ற வேண்டும். பௌலர், பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும். வெற்றி பிரதானமாகும்போது இவைதான் அதற்கு வழிவகுக்கும். வலது கை பேட்ஸ்மேனுக்கென லென்த், லைன் அனைத்தையும் பிளான் செய்து அந்த பௌலர் வீசும்போது, பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேன் ஸ்விட்ச் ஹிட் ஆடுவது deception தான். ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் இடத்தில் எப்படி அது ஜென்டில்மேன்களின் கேமாக இருக்கும்? 

அஷ்வின் விஷயத்தில் வெளிநாட்டு வீரர்கள் அவரைக் குற்றம் சொல்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், `அஷ்வினால் இந்திய கிரிக்கெட்டின் பெயர் கெட்டுவிட்டது’ என்று சொல்பவர்களுக்கு ஒரு விஷயம்... அஷ்வின் மனைவி சோசியல் மீடியாவில் பகிர்ந்த அவரின் மகளின் புகைப்படத்துக்குக் கீழே `உன் தந்தை மோசடிக்காரன்’ என சில இந்தியர்கள் கமென்ட் போடுகிறார்கள். இவர்களுக்குத்தான் எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. `மன்கடட்’ என்ற இந்தப் பெயரே இந்திய வீரர் வீனூ மன்கட் முதல்முறையாகச் செய்ததால் வந்ததுதான் என்று இவர்களுக்குத் தெரியாதா? 1992-ம் ஆண்டு, மொத்த தேசமும் பாரபட்சமின்றி கொண்டாடும் கபில் தேவ்கூட இப்படி ஒரு தென்னாப்பிரிக்க வீரரை அவுட்டாக்கியுள்ளாரே! அப்போதெல்லாம் பாழாகாத, சூதாட்டப் புகார்களில் பாழாகாத இந்தியக் கிரிக்கெட்டின் பெயர்தான் இப்போது பாழாகிவிடப்போகிறதா?

அஷ்வின்

இங்கு `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’தான் முக்கியம் என்று சொல்பவர்களில் வெற்றியைப் பிராதனப்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. அணி தோல்வியடைந்தால் வீரரின் வீட்டைத் தாக்குபவர்கள் அதிகம். இங்கு வெற்றியின் அடிப்படையில் மட்டுமே வீரர்களை மதிப்பிடும் மனநிலை கொண்டவர்கள் அதிகம். ஒரு டெஸ்ட் மேட்ச்சின் மூன்று நாள்கள் உயிரைக் கொடுத்து களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனைவிட, டி-20 போட்டிகளில் அரை மணி நேரம் களத்தில் நின்று சில சிக்சர்கள் அடிப்பவர்களை மட்டும் கொண்டாடுபவர்கள் அதிகம். விடிய விடிய காத்துக்கிடந்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் இருப்பது டி20-க்கா அல்லது டெஸ்ட் போட்டிக்கா. இங்கு கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீதான பார்வையே ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசமாகத்தானே இருக்கிறது வெற்றியை மட்டும் பிராதனப்படுத்தும் இடத்தில் கேம் ஸ்பிரிட் எங்கிருந்து வருகிறது.

 

https://www.vikatan.com/news/sports/153391-does-spirit-of-the-game-exist-in-cricket.html

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ரஞ்சித் said:

இங்கே நான் தொடங்கப்பட்ட தலைப்பு முற்றாக நீக்கப்பட்டு, நான் இணைத்த செய்தியும் அகற்றப்பட்டு, நான் இணைக்காத ஆனால் அது தொடர்பான செய்திக்குறிப்பொன்று என்னுடைய பெயரில் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கிறதென்று யாராவது அறியத்தர முடியுமா?

ஏனென்றால், நான் இங்கே இணைத்தது இன்னொரு இடத்திலிருந்து வெட்டி ஒட்டியதை அல்ல. போட்டியைக் கண்டு நான் எழுதியது.

ரஞ்சித்,

நுணா மேலதிக தகவல்களை இணைக்க முற்படும் போது தவறுதலாக உங்கள் பதிவை எடிட் பண்ணி அதன் மேல் ஒட்டி விட்டார் என நினைக்கின்றேன். நான் மீண்டும் இணைத்துள்ளேன்....சரி பார்க்கவும்

அத்துடன் முக்கியமாக உங்களின் சுய ஆக்கம் எனில் உங்கள் பெயரை இறுதியில் போட மறக்க வேண்டாம். மூலம் குறிப்பிடுதல் அவசியம்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

ரஞ்சித்,

நுணா மேலதிக தகவல்களை இணைக்க முற்படும் போது தவறுதலாக உங்கள் பதிவை எடிட் பண்ணி அதன் மேல் ஒட்டி விட்டார் என நினைக்கின்றேன். நான் மீண்டும் இணைத்துள்ளேன்....சரி பார்க்கவும்

அத்துடன் முக்கியமாக உங்களின் சுய ஆக்கம் எனில் உங்கள் பெயரை இறுதியில் போட மறக்க வேண்டாம். மூலம் குறிப்பிடுதல் அவசியம்.

விளக்கத்திற்கு நன்றி நிழலி

Share this post


Link to post
Share on other sites

அஷ்வினின் டெலிவரி stride இலேயே தெளிவாக தெரிகிறது இது முன்பே திட்டமிட்டு செய்ததென்று . சும்மா instinctive என்று புலுடா விடுகிறார். 

Share this post


Link to post
Share on other sites

கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு விளையாட்டு.இரண்டு நடுவர்கள் பத்தாது என்று மூன்றாவதாகவும் ஒரு நடுவர் இருக்கிறார்.அவர் தீர்க்கமாய் பார்த்துதான் அவுட் கொடுக்கிறார். இதுக்கு மேல் ஜெண்டில்மேன் என்று கத்துவதெல்லாம் வேலைக்காவாது. அப்படியென்றால் பவுலரின் கையை விட்டு பந்து கடந்தபின் இவர் கிரீஸைத் தாண்ட வேண்டும்.அதுதான் ஜெண்டில்மேனுக்கு அழகு. எல்லோரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை போலர் தவறவிட்டால் பேட்மேன் விளாசிக்கொண்டே இருப்பார். சம்பளம் குடுப்பவரிடம் யார் திட்டு வாங்குவது, இனிமேல் பாட்ஸ்மன் பொறுப்புடன் விளையாட வேண்டும்.....விளையாடுவார்கள், முக்கியமாய் அஸ்வின் பந்து போடும்போது....!  🙂

Share this post


Link to post
Share on other sites

அஸ்வினை தமிழன் என்று சொல்வதே அவமானம் 🤯

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

அஸ்வினை தமிழன் என்று சொல்வதே அவமானம் 🤯

ஏன் அஸ்வினுடன் என்னதான் பிரச்சனை?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு