Jump to content

கோடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோடுகள் 

ஒன்பதின்  வைகாசி

வைகாசியில்  அவனொருவன்  பெற்றது   ஒளி

 ஒளி அணைந்ததும் அதே   வைகாசி - எங்கள் வீடுகளில்

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து  மூன்றாம்

மாப்  புளிப்பது  தோசையின்  நலம்  நாடி 

அணைத்த  உலை - மீண்டும்  கொதிக்க  விறகை  தள்ளும்   நண்பா  நன்றி 

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

இரு  கோடுகள்   சமன்  செய்    பாதைகள்   பல 

கோடொன்றை  சற்றே  நீட்டினால்  எல்லோரும்  நலமே 

மறு  கோட்டின்   நுனியை  சற்றே  தட்டினாலும்  முடிவு  ஒன்றே 

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

ஒன்பதின்   வைகாசி , நண்பன்  ஒருவனின்   தொலைபன்னி  அழைப்பு 

வேண்டும்  எனக்கு  ஆட்கள் பத்தும் ஆண்டுகள் சிலவும்

பறந்து  சென்று  கோட்டைத்  தட்டுவதே  சால  சிறப்பு  

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

வல்லூறுகள்  மீண்டும்  வட்டமிடத்  தொடங்கி  விட்டன

பீனிக்ஸ்     பறவையில்   மீண்டும்   ஒரு  உயிர்த் துடிப்பு 

உலை  கொதிக்கவும்  விறகுகள்  ஒரு பக்கம்   

இன்னமும்  ஏற்றவில்லை நாம்-  கையில்  அரிசியுடனும்  நெஞ்சில்  தீயுடனும்  

 

 

26 March 2019 …..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசியில் அவனொருவன் பெற்ற ஒளியின் பெயராலே 

எம் வீட்டுத் தீபங்களின் ஒளி அணைக்கப் படுகிறது.

காத்திருப்போம் ஒரு புயலுக்காய் 

எம் இல்லங்களிலும் ஒளி சிறக்கும்......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.