• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

ஒரு நாளில் நாம் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?

Recommended Posts

 
முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்று பல ஆண்டுகளாக வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.

 

இதற்கு பதில், நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. JAMA மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட புதிய மருத்துவ ஆய்வு இதனை கண்டுபிடித்துள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிகளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

விகிதாச்சார அபாயங்கள்

17 ஆண்டுகளில் 30,000 பேர் பங்கேற்ற ஆறு ஆய்வுகள் செய்யப்பட்டன.

நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் எடுத்துக் கொள்வது, இதய நோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் அளவிற்கும், முன்கூட்டியே மரணம் ஏற்படுவதை 18 சதவீதம் அளவிற்கும் உயர்த்தியதாக ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

முட்டைகளை பொறுத்தவரை, ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் எடுத்துக்கொண்டால், இருதய நோய் ஏற்படும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிப்பட்டுள்ளது. அதே போல, இது முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் 8 சதவீதம் அதிகமாக உள்ளது.

முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது மேற்கூறப்பட்ட இரண்டு நோய்கள் ஏற்படும் அபாயத்தை 27 மற்றும் 34 சதவீதம் அதிகமாக்குகிறது.

இந்த ஆய்வானது, வயது, உடற்பயிற்சி நிலைகள், புகையிலை பயன்பாடு அல்லது ரத்த அழுத்தம் போன்ற எதையும் கணக்கில் எடுக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டது.

"இரண்டு நபர்கள் ஒரே மாதிரியான உணவு முறையை எடுத்துக்கொண்டு, அதில் முட்டைகள் எடுத்துக் கொள்வது மட்டும் வேறு மாதிரியாக இருந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்கிறார் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பிரிவின் இணை ஆசிரியர் நொரினா ஆலென்.

முந்தைய ஆய்வுடன் முரண்பாடு

முட்டைகள் எடுத்துக் கொள்வதற்கும், இதய நோய்க்கான அபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்ட முந்தைய ஆய்வுடன் இந்த புதிய ஆய்வு முரண்படுகிறது.

ஆனால், முந்தைய ஆய்வுகளில் குறைந்த வேறுபட்ட மாதிரிகளே இருந்தது என்றும், குறுகிய காலம் மட்டுமே அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்றும் ஆலென் கூறுகிறார்.

எனினும், தங்கள் ஆய்வுகளில் சிறு தவறுகள் இருக்கலாம் என் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

சரி. நாம் எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?

இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட ஆலென், ஒரு வாரத்திற்கு மூன்று முட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது என்கிறார்.

அதுவும், முட்டையின் வெள்ளைக்கருவை உண்ணுமாறு முட்டை பிரியர்களுக்கு அவர் பரிந்துரைக்கிறார்.

"முட்டை சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் என்று நான் கூறவில்லை. சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்."

இந்த ஆய்வு அமெரிக்கர்களை வைத்து எடுக்கப்பட்டது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

உலகில் அதிகம் முட்டைகள் எடுத்துக் கொள்ளும் நாடுகள்(Source: சர்வதேச முட்டை ஆணையம், 2015)  
நாடுகள் தனிநபர்கள்முட்டை எடுத்துக் கொள்ளும் அளவு
மெக்ஸிகோ 352
மலேஷியா 342
ஜப்பான் 329
ரஷ்யா 285
அர்ஜெண்டினா 256
சீனா 254.8
அமெரிக்கா 252
டென்மார்க் 245

அதிகம் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் 252 முட்டைகளை எடுத்துக் கொள்கிறார்.

https://www.bbc.com/tamil/science-47697857

Edited by பிழம்பு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கீழடி பொருட்களை ஆய்வு செய்ய மேலும் 3 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம்..! கீழடி பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கீழடி பொருட்கள் குறித்த ஆய்வுகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசு கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் நாளை (19-02-2020) கீழடியில் 6வது அகழாய்வு பணியையும் தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடி அகழ்வாராய்ச்சியை தீவிரமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அன்சியண்ட் டிஎன்ஏ (Ancient DNA) ஆராய்ச்சி குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ள நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம், பூனே டெகான் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக தயார் நிலையில் இருப்பதாக மதுரை காமராஜர் பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மானஸா என்ற ஆராய்ச்சியாளர் கீழடியில் கிடைக்கப்பெற்ற அன்சியண்ட் DNA தொல்லியல் பொருளை பூனேவில் உள்ள டெக்கான் ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அதனுடைய முடிவுகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் ரூசா அமைப்பின் சார்பில் ரூ. 34 கோடி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் ரூ. 2 அல்லது 3 கோடி கீழடி அகழ்வாராய்ச்சிக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். இந்த வருடம் மார்ச் மாதம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கும் எனவும், அதற்காக 20,000 சதுர அடி கொண்ட பிரத்தியேக கட்டிடம் ஆராய்ச்சிக் கூடமாக செயல்பட தயாராக உள்ளதாகவும் துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார். https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/18/2/2020/three-more-foreign-universities-showed-interest-test?fbclid=IwAR2FzFJprHzbS6Mr98I1cWZKFYQKeT18-RGOUKBShm0MGZ7hELupB9NZZM8
  • எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்' உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்  இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பி-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார்  கூறுகையில், "வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்" எனத் தெரிவித்தார். https://tamil.asianetnews.com/india/seat-reserved-for-lord-siva--q5w1bz
  • ஆனால், அன்று எம்மவர்கள் படுகொலைகளை நிறுத்த ஒரு பெருந்தெருவை மறித்த பொழுது, சட்டம் வேகமாக பலமாக பாய்ந்தது.
  • இலங்கையில் மீண்டும் கை கோர்த்த மஹிந்த - மைத்திரி: சஜித் - ரணில் தரப்பு தொடர்ந்து இழுபறி படத்தின் காப்புரிமை Getty Images ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த புதிய கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இந்த கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் சின்னமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னமான தாமரை மொட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்தர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டமைப்பில் 9 கட்சிகள் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.   படத்தின் காப்புரிமை Sajith/ Twitter ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். யானை அல்லது அன்னம் சின்னத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தாம் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்பின் தலைவராக சஜித் பிரேமதாஸவும் செயற்பட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது. எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கிறார். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் இதயம் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். எனினும், அந்த சின்னத்திற்கு மற்றுமொரு கட்சி உரிமை கோரியுள்ளது. தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியே இதயம் சின்னத்திற்கான உரிமையை கோரியுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-51542383