Sign in to follow this  
பிழம்பு

மதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து

Recommended Posts

ஸ்டீபன் டௌலிங் பிபிசி
 
 •  
மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு புகைப்பட கலைஞரான நான் சில ஆண்டுகளுக்கு முன்னர், டென்மார்க்கில் நடைபெற்ற கார் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டேன்.

அந்நாட்டிலுள்ள மோன் என்னும் தீவில் நடைபெற்ற கண்காட்சி முடிவடைந்தவுடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சில கோப்பை மதுபானம் என நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அன்றைய இரவை சாய்வு நாற்காலி ஒன்றில் படுத்துக்கொண்டு பொதுவெளியிலேயே கழிப்பது என்று முடிவெடுத்தேன்.

மறுநாள் காலையில் எனக்கு மூன்று புதிய படிப்பினைகள் கிடைத்தன.

 • கோடைக்காலத்தில் டென்மார்க்கில் மிக அதிகளவிலான கொசுக்கள் இருக்கும்.
 • கொசுக்களால் சாய்வு நாற்காலியின் அமைப்பையும், நமது சட்டையையும் மீறி கடிக்க முடியும்.
 • நாம் மதுபானம் குடித்துவிட்டு தூங்குவது என்பது, கொசுக்களுக்கு இரவு உணவுக்கான அழைப்பை விடுத்துவிட்டு தூங்குவதற்கு சமம்.

ஆம், அந்த ஒரே இரவில் கொசுக்கள் என்னுடைய முதுகை பதம்பார்த்து விட்டன. இதுபோன்ற அனுபவத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

மதுபானத்திற்கும், கொசு கடிப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று தேடிப்பார்த்தபோது, அதுதொடர்பாக கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்கா கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் சஞ்சிகையில் கட்டுரை உள்ளது குறித்து தெரியவந்தது.

ஒருவர் மதுபானம் குடித்திருந்தால் அவர் கொசு கடிகளுக்கு உள்ளாவது ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், மதுபானம் குடித்திருப்பவர்களை மட்டும் கொசுக்களால் எப்படி கண்டறிய முடிகிறது என்ற கேள்விக்கு பலராலும் தெளிவுற பதிலளிக்க முடியவில்லை.

மனிதர்கள் மூச்சு விடும்போது வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்டோனால் ஆகியவற்றை முதலாக கொண்டே கொசுக்கள் ஒருவரை கண்டறிந்து கடிக்கிறது என்பது நமக்கு தெரிந்ததே.

மேற்கண்ட கேள்விக்கான பதில் நம்மை சமாதானப்படுத்தாத நிலையில், மதுபானம் குடித்திருந்த ஒருவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற மற்றொரு கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அமெரிக்காவின் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் தான்யா டாப்கே, " மதுபானம் குடித்திருந்த ஒருவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் மதுபானம் குடித்தவரின் ரத்தத்தில் மதுபானத்தின் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும். அந்த நபரின் ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

இதே கேள்விக்கு விடையளிக்கும் வகையில், பாப்புலர் சயின்ஸ் என்னும் இதழில் அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூச்சியியல் துறை பேராசிரியர் கோபி ஸ்சால் எழுதிய கட்டுரையில், "சுமார் 10 கோப்பை அளவு மதுபானத்தை குடித்த ஒருவரது இரத்தத்தில் 0.2 சதவீதம் அளவிற்கு மதுபானம் இருக்கும். ஆனால், அந்த நபரது ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கு அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை" என்று கூறுகிறார்.

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?படத்தின் காப்புரிமை Getty Images

துளியளவு மதுபானம் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதற்கு அதன் பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ரத்தத்தை தவிர்த்து ஏதாவது திரவத்தை கொசு குடிக்கும் பட்சத்தில், அது நேரடியாக அதன் செரிமான மண்டலத்துக்கு சென்று நொதித்தல் வினைக்கு உட்படுவதால், திரவங்கள் பூச்சியின் மத்திய நரம்பு மண்டலத்தை அடைவதில்லை என்று கருதப்படுகிறது.

"கொசுக்கள் மட்டுமின்றி அனைத்து விதமான பூச்சிகளும் குடிக்கும் சாறுகள் நேரடியாக அதன் உடல் முழுவதும் பரவுவதில்லை. பூச்சிகளின் செரிமான மண்டலத்தில் நடைபெறும் நொதித்தல் நிகழ்வின்போது மதுபானம், பாக்டீரியா உள்ளிட்ட தீமை விளைவிப்பவை தனியே வெளியேற்றப்படுகிறது" என்று கூறுகிறார் லண்டனிலுள்ள நேச்சுரல் ஹிஸ்டோரி மியூசியத்தின் மூத்த அதிகாரியான எரிக்கா மெக்அலிஸ்டர்.

"மது அருந்தியவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பழ ஈக்களில் வெளிப்படையாக மாற்றத்தை காண முடிகிறது. எனினும், அதிகளவு சகிப்புத்தன்மையை கொண்டிருக்கும் பழ வண்டுகள், மதுபானம் கலந்த திரவத்தை குடித்தவுடன், மிகுந்த உற்சாகத்தை அடைகின்றன" என்று அவர் மேலும் கூறுகிறார்.

மதுபானத்தை தவிர்த்து 'ஏ' இரத்த வகையை கொண்டிருப்பவரைவிட, 'ஓ' இரத்த வகை கொண்டிருப்பவர் கொசுக்களால் கடிபடுவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அதிக உடல் வெப்பத்தை கொண்டிருப்பவர், கர்ப்பமாக உள்ளவர், அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுபவர் ஆகியோரை கொசு அதிகளவில் கடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/science-47679362

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, பிழம்பு said:
ஆனால், மதுபானம் குடித்திருப்பவர்களை மட்டும் கொசுக்களால் எப்படி கண்டறிய முடிகிறது என்ற கேள்விக்கு பலராலும் தெளிவுற பதிலளிக்க முடியவில்லை.

இது தெரியாதா❓.... வெறி சிம்பிள்.😝
மதுபானம் குடித்தவரின், வாயிலிருந்து... அழுகிய பழ வாசனை வரும்.
அது.. கொசுவுக்கு, சிவப்பு கம்பளம் விரித்த மாதிரி... பிடித்த வாசனை.
பிறகென்ன... ஊரில் உள்ள கொசுவுக்கு எல்லாம் நியூஸ் போய்... ஒரேயடியாய், கடித்து குதறி விட்டுடும். :grin:

Share this post


Link to post
Share on other sites

பின்னிரவு வேளைகளில்....ஒரு அரை பியரை அடிச்சுப் போட்டு....ஒரு சாய்மனைக் கதிரையில் சாய்ந்த படி....கொசுக்கள் பாடுவதைக் கொஞ்ச நேரம் அவதானிக்கவும்!
அந்த இசையில் உள்ள ஆரோகணம்.....அவரோகணம் என்பவற்றையும் கவனிக்கவும்!
எவ்வளவு....அழகிய இசையை......அவை இலவசமாகத் தருகின்றன என்று புரியும்!
முழு பியரையும்....முடிக்கக் கூடாது!
முடித்தால் சங்கீதம்......விளங்காது...!😯

gettyimages-56802984-50_custom-da070d56b

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கொசுவுக்கு தெரியும் தான் எதை குடிக்க வேண்டும் எதைக் குடிக்க கூடாதென்று.அதன் உணவே இரத்தம்தான், ஆறு லிட்டர் இரத்தத்தில் ஒரு துளி அது குடித்தால் குறைந்தா  போய் விடுவோம்.....!   😁

Share this post


Link to post
Share on other sites

கொசுவாலை பிரச்சனை வந்தால் ஓரளவுக்கு தாங்கலாம்.......ஆனால் வீட்டிலை இருக்கிற பெரிய கொசுக்களின்ரை நொய்....நொய்  எண்ட சத்தம் தாங்கேலாமல் கிடக்கப்பா...

k-2.jpg

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உண்மை தான் கோசான். கவனமான இருக்க வேணும். போட்டு தள்ளுதல், ஆளை தூக்குதல் எல்லாம் தமிழரின் கலாச்சாரம் என்று அதை பாதுக்காக்க வேணும் என்று நினைக்கிற ஆட்கள் இருக்கேக்குள்ள கவனமா இருக்கிறது நல்லது தான். 
  • ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி எனும் திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை முகப்புத்தகத்தில் பகிர்வதுபோன்று யாழ் கருத்துக்களத்தில் பதிவதைத் தவிர்க்கவேண்டும். 
  • ச‌த்தியாமாய் நானும் நினைக்க‌ வில்லை இப்ப‌டி ந‌ட‌க்கும் என்று , 2009ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் இணைய‌த‌ள‌த்துக்கை போக‌ இவ‌ள‌வு இட‌த்தையும் குறுகிய‌ நேர‌த்துக்குள் இழ‌ந்து விட்டோமா என்று ,  2009ம் ஆண்டு நான் ஒழுங்காய் தூங்க‌ வில்லை விசுகு அண்ணா , சாப்பிட்ட‌ சாப்பாட்டுக்கையே என்ர‌ க‌ண்ணீர் விழுந்த‌து , மிக‌வும் ஒரு மோச‌மான‌ ஆண்டு 2009 , ப‌ல‌ர் ம‌ன‌ நோயாளி ஆகின‌வ‌ர்க‌ள் , அதில் யாழில் ஒரு உற‌வும் , அத‌ அவ‌ரே சொன்னார் ,  ப‌ழைய‌ ப‌டி மீண்டு எழுவ‌து கொஞ்ச‌ம் க‌ஸ்ர‌ம் , சிங்க‌ள‌வ‌னிட‌ம் க‌தைச்சு பேசி த‌மிழ‌ர்க‌ளுக்கு தீர்வு வாங்குவ‌து என்ப‌து எம் த‌லையில் நாம் ம‌ண் அள்ளி போடுவ‌துக்கு ச‌ம‌ம் , எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும்  புல‌ம் பெய‌ர் நாட்டில் பென்ச‌ன் எடுத்த‌வை ஊருக்கு போக‌வே விரும்ப‌ மாட்டின‌ம் , 2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ , போராளிக‌ள் செக் ப‌ண்ணி போட்டு தான் உள்ள‌ விடுவின‌ம் , 2004ம் ஆண்டு என‌து ம‌ச்சாளின் இர‌ண்டு தோழிக‌ள் , ம‌ச்சாளையும் என்னையும் வ‌வுனியாவில் வ‌ந்து பார்த்த‌வை , பென் போராளிக‌ள் சீர் உடையில் , கையில் ஆயுத‌ம் ஒன்றும் இல்லை , அவை கூட‌ நின்று புகைப் ப‌ட‌ம் எடுத்தேன் , அந்த‌ ப‌ட‌ங்க‌ள் எங்கை என்று என‌க்கே தெரியாது , தேவை இல்லா ப‌ட‌ங்க‌ள் நிறைய‌ இருக்கு பெண் போராளிக‌ளுட‌ன் எடுத்த‌ ப‌ட‌த்தை காணும் 😉 பெண் போராளிகளின் பொறுமை அட‌க்க‌ ஒடுக்க‌ம் , அன்பு ப‌கிர்ந்து கொள்ளுவது எல்லாம் த‌னி அழ‌கு அண்ணா ,  ம‌ச்சாள் அறிமுக‌ம் செய்து வைச்சா நானும் கொஞ்ச‌ நேர‌ம் ம‌ன‌ம் விட்டு க‌தைச்சேன் ,  அந்த‌ நாளை நினைச்சு பார்க்கையில் அதுங்க‌ளை காக்க‌ த‌வ‌றி விட்டோம் என்று நினைப்ப‌து உண்டு , த‌மிழ் நாட்டு பின‌ம் தின்னி அர‌சிய‌ல் வாதிக‌ள் மேல் எவ‌ள‌வு அசிங்க‌மான‌ சொர்க்க‌ல‌ பாவிச்சாலும் ஆத்திர‌ம் அட‌ங்காது 
  • எனிமேல் பட்டு இந்த பார்டிவளிய போய் டயட் கோக்கை குடிச்சிட்டு சாணி மிதிப்பதை நிப்பாட்டோணும்😂. நாளைகே மனிசி போட்டுத்தள்லீட்டு வீடியோவ லீக் பண்ணி எஸ்கேப் ஆகிவிடும்.
  • த‌மிழ் சிறி அண்ணா , குமார‌சாமி  தாத்தா , நெடுங்கால‌போவான் அண்ணா , இவ‌ர்க‌ள் மூன்று பேரும் யாழின் தூன்ங்க‌ள் , இவை இல்லை என்றால் யாழ் எப்ப‌வோ காணாம‌ல் போய் இருக்கும் ,  த‌மிழ் சிறி அண்ணாவுக்கும் ஆசை தாத்தாவுக்கும் வாத்துக்க‌ள் , தொட‌ர்ந்து உங்கள் ப‌திவுக‌ளை எழுதுங்கோ , 15வ‌ருட‌மாய் யாழில் தொட‌ர்ந்து எழுதும் குசா தாத்தா தான் கிங்கூ 💪 /