Jump to content

வட கிழக்கு லண்டனில் தமிழ் கடைக்காரர் கொலை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ravi Katharkamar was stabbed at his newsagents in Pinner, north-west London.

கடந்த சனியன்று காலை தனது கடையினை திறக்க காலை 5:30 க்கு வந்த ரவிக்குமார் என்ற தமிழர், வட கிழக்கு லண்டன் பின்னர் என்ற இடத்தில் குத்திக் கொல்லப் பட்டுள்ளார்.

£10 சொச்சம் சில்லறைக்காசுக்காக நடந்த தேவை இல்லாத கொலை என்று தெரிய வருகிறது. கல்லாப்பெட்டியை தூக்கி கொண்டு கொலையாளி ஓடி விட்டார். இது தொடர்பாக நடந்த இழுபறியில் தான் கொலை நடந்து இருக்கிறது.

அந்த இடத்தில 20 வருடமாக கடை வைத்திருந்தார் அவர்.

கடந்த திங்களன்று, பஸ்ஸில் பயணித்த போது, அந்த வீதி மூடப் பட்டிருந்ததால், பஸ் வேறு வழியில் திரும்பியது. கேட்ட போது, பஸ் டிரைவர்,  'An Idiot, killed an Idoit' என்று  சிம்பிள் ஆக சொன்னார்.

முதலில் அர்த்தம் புரியவில்லை. இனவாதமோ என்று கூட தோன்றியது. பின்னர், தீர்க்கமாக பார்த்து விட்டு சொன்னார், எவ்வளவு பணம் கல்லாவில் இருக்கிறது என்று கொலையானவருக்கு தெரிந்திருக்கும் அல்லவா. வெறும் £10 பவுனுக்காக தனது வாழ்வினை இழப்பது மடமை அல்லவா.... கொண்டு போய் தொலை என்று சொல்லி தன்னை காக்காமல், ஏன் மோதலுக்கு போனார்?, என்றார்.

இப்போது  பாருங்கள், ஒரு குடும்பம், தந்தையை, கணவனை இழந்து நிக்கிறதே என்றார் .

உண்மை தானே!

பிரித்தானியா முழுவதும் கடை வைத்து இருக்கும் தமிழர்கள் நிறைந்து உள்ளனர். கடையின் முன்னே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். "வாடிக்கையாளர்கள் 'மொபைல் போன் மூலம், கனெக்ட் மட்டை மூலம் pay பண்ணுவதால், எம்மிடம் £10 - £20 மேல் கல்லாவில் இல்லை".

வருபவர்கள் அது தெரிந்தும் வந்தால், கொடுத்து அனுப்பி விடுங்கள்.

அவரது வாடிக்கையாளரான  வெள்ளையர், இறந்தவருக்கான ஒரு fund raising முயல்வு ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

****

இன்று ஒருவர் கைதாகி உள்ளார்.

https://www.itv.com/news/2019-03-28/man-arrested-after-shopkeeper-killed-in-pinner-stabbing/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இதேபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இத்த்கை 5, 10 பவுண்களில் பிரச்சினை வரும்போது தூக்கி கொடுத்து விட்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பிரித்தானியா முழுவதும் கடை வைத்து இருக்கும் தமிழர்கள் நிறைந்து உள்ளனர். கடையின் முன்னே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். "வாடிக்கையாளர்கள் 'மொபைல் போன் மூலம், கனெக்ட் மட்டை மூலம் pay பண்ணுவதால், எம்மிடம் £10 - £20 மேல் கல்லாவில் இல்லை".

100 பவுண் ஆக இருந்தாலும் நாளை உழைக்கலாம்.இன்சூரன்சில் எடுக்கலாம் .இப்போ ஆளே இல்லை.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...உதைத் தான் விதி😕 என்பது...களவெடுத்தவனுக்குத் தெரியாது கல்லாவில் எவ்வளவு இருக்குது என்று 😧ஆனால் இவருக்குத் தெரியும் தன்ட கல்லாவில் எவ்வளவு காசு இருக்குது என்று  😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

வட கிழக்கு லண்டன்

வடமேற்கு Greater London. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

வடமேற்கு Greater London. 

yes... Middlesex (Greater London is correct but not greatly used)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை கொள்ளை அடிப்பதை குறிக்கோளாக உள்ளவன் மாலைப்பொழுதில் தானே வருவான்? அதிகாலையில் வருவானா?

என்னமோ? 

அன்னாருக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பணத்தை கொள்ளை அடிப்பதை குறிக்கோளாக உள்ளவன் மாலைப்பொழுதில் தானே வருவான்? அதிகாலையில் வருவானா?

என்னமோ? 

அன்னாருக்கு அஞ்சலிகள்.

தூள்.... காலையா, மாலையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

தூள்.... காலையா, மாலையா?

அந்த வசனத்துக்கு பின்னணி இசை....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பணத்தை கொள்ளை அடிப்பதை குறிக்கோளாக உள்ளவன் மாலைப்பொழுதில் தானே வருவான்? அதிகாலையில் வருவானா?

என்னமோ? 

அன்னாருக்கு அஞ்சலிகள்.

இந்த கொலை  கல்லாவில் இருந்த £10க்காக நடக்கவில்லை என்றும் இந்தக் கள்ளன் கடையில் இருந்த மதுபானங்களை களவெடுக்க முயற்சித்ததாகவும் அதை தடுக்கும் போதே கொலை நடந்ததாகவும் கதைக்கினம்...எது எப்படி இருந்தாலும் போன உயிர் திரும்பி வருமா?...  Pinner போன்ற வசதி கூடிய இடத்தில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியான விடயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்நாள் இரவு மதுபான விற்பனை தொடர்பில் இரு வெள்ளை இனத்தவருடன் வாக்குவாதம் ஏற்ப்பட்ட்தாகவும் காலையில் அவர் கடையைத் திறக்கும்போது வந்து குத்திவிட்டு ஓடியதாகவும் யாரும் பார்க்காத இடததில் விழுந்து கிடந்ததால் இரத்தப்பெருக்கு ஏற்பட்டு மரணம் என்றும் கதைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2019 at 9:21 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முதல்நாள் இரவு மதுபான விற்பனை தொடர்பில் இரு வெள்ளை இனத்தவருடன் வாக்குவாதம் ஏற்ப்பட்ட்தாகவும் காலையில் அவர் கடையைத் திறக்கும்போது வந்து குத்திவிட்டு ஓடியதாகவும் யாரும் பார்க்காத இடததில் விழுந்து கிடந்ததால் இரத்தப்பெருக்கு ஏற்பட்டு மரணம் என்றும் கதைக்கிறார்கள்.

மப்புக் கோஸ்ட்டிகள், காலை 5 மணிக்கு அலார்ம் வைத்து ஒழும்பி, கொலை செய்யவா வருவினம்?

மப்பு முறியவே பகல் ஆகியிடுமே.

காசுக்கு தான் களவு எண்டு போலீஸ் சொல்லுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விப்படத்தைச் சொன்னேன். போக காலை ஆறு மணிக்கு நான் நடக்கும்போது பல இளசுகள் பியர் போத்திலோடு அரை வெறியோடு வருவதை பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மப்புக் கோஸ்ட்டிகள், காலை 5 மணிக்கு அலார்ம் வைத்து ஒழும்பி, கொலை செய்யவா வருவினம்?

மப்பு முறியவே பகல் ஆகியிடுமே.

காசுக்கு தான் களவு எண்டு போலீஸ் சொல்லுது.

மப்புகள் நித்திரைக்கு போறதே காலை எட்டு இல்லை ஒன்பது மணிக்குத்தான்.....
விடியப்பறம் 4/5 மணி எண்டது மப்புகளின் அகோர உச்சக்கட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

மப்புகள் நித்திரைக்கு போறதே காலை எட்டு இல்லை ஒன்பது மணிக்குத்தான்.....
விடியப்பறம் 4/5 மணி எண்டது மப்புகளின் அகோர உச்சக்கட்டம். 

சீ... சீ.... இங்க தண்ணி வார்க்கும் பப்கள் 11 மணிக்கு தான் கடைசி தண்ணி....

Off licence கடைகளில், தண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு போய் குடிக்கலாம். அதுவும் 11 மணி க்கு பிறகு விக்கஏலாது.

11 மணிக்கு பிறகும் கடை திறந்திருந்தால், தெரிஞ்ச ஆக்கள் எண்டால், ரகசியமாக விப்பினம்.

அதால 5 மணிக்கு எழுப்பி வாரது எல்லாம்..... சோம்பேறி வெள்ளையளுக்கு சரி வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

சீ... சீ.... இங்க தண்ணி வார்க்கும் பப்கள் 11 மணிக்கு தான் கடைசி தண்ணி....

Off licence கடைகளில், தண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு போய் குடிக்கலாம். அதுவும் 11 மணி க்கு பிறகு விக்கஏலாது.

11 மணிக்கு பிறகும் கடை தெரிந்திருந்தால், தெரிஞ்ச ஆக்கள் எண்டால், ரகசியமாக விப்பினம்.

அதால 5 மணிக்கு எழுப்பி வாரது எல்லாம்..... சோம்பேறி வெள்ளையளுக்கு சரி வராது. 

கள்ளர் காடையளுக்கு ஏது சட்டம்? வீட்டிலிருந்து குடித்து விட்டு ஊர் அடங்க வெளியில் வருவார்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கள்ளர் காடையளுக்கு ஏது சட்டம்? வீட்டிலிருந்து குடித்து விட்டு ஊர் அடங்க வெளியில் வருவார்கள்.:grin:

உதுகள், மப்புக் கோஸ்டிகள்... ஓர் டிசிபிலின்  இல்லாதவர்கள்..... 

முன்னாள் லண்டன் மேயர், கென் லிவிங்ஸ்டன் சொன்னார்..... ஆங்கில பெடியளே.... வேலை... இல்லை என்று கத்துகிறீர்கள்.... நீங்கள்... போர்வைக்குள்ளால வெளிய வரேக்க.... ஈஸ்டர்ன் ஐரோப்பியன் வேலையில் லஞ்ச் முடிச்சு இருப்பான்....

அதான் சொல்லுறன்.....சுமே அக்கா சொன்னமாதிரி பிளான் பண்ணி வந்திருப்பார்கள் எண்டது பிழையா இருக்கும்.

கடை திறக்கிறதை பார்த்து.... ஒரு மப்பு ட்ரை பண்ணுவம் எண்டு வந்திருக்கும்.... பிழைச்சு போட்டுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.