• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Nathamuni

லண்டனுக்கு வந்த பெரும் சோதனை - MGR 

Recommended Posts

உருவ ஒற்றுமையும் நடன அசைவுகளும் பாராட்டைப் பெறுபவை. தாடையின் அருகில் சிறிது வேற்றுமை இருப்பதால் உதட்டசைவு மட்டும் பொருந்தி வரவில்லை. இருப்பினும் MGR ரசிகர்களை மகிழ்விக்கும் அளவு ஒற்றுமை அமைந்தது வியப்புதான். இதற்கு இவ்வளவு ஆய்வு அவசியந்தானா என்கிறீர்களா ? அதிகப்படியாகத் தெரிந்தால், Time pass என்று வைத்துக் கொள்ளுங்களேன் தோழர் ! இளம்பிராய நினைவுகளை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடிவதில்லை.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

 

 

இவரைக் கூட்டிக்கொண்டு வந்து தமிழ்நாட்டு தேர்தலில் கிராமம் கிராமமாக வானுக்கு மேல் ஏற்றி பிரசாரம் செய்தால் அந்தக்கட்சிக்கு நல்ல வாக்கு விழும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • உலகம் உன்னை கை கழுவினாலும்       நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்      முடியும் வரை முட்டி மோதி பாரு      ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே      நல்லவன் யாரு கெட்டவன் யாரு      உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு      நீ கூறு…      போனது போச்சி ஆனது ஆச்சி      போனது போச்சுது ஆனது ஆச்சிது      போடு… போடு… தூக்கி போடு      வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே      உலகம் உன்னை கை கழுவினாலும்…      தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே      உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே      பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே      அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே      உயிர் தானே போகும் போகட்டும் போடா      போனாலும் தப்பே இல்லை      கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்      போனது போச்சி ஆனது ஆச்சுது      போடு… போடு… துக்கி போடு      வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே      உலகம் உன்னை கை கழுவினாலும்…      உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே      உலகத்தில் உனக்காக மட்டும்      வாழ்ந்து செத்துவிடாதே      காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே      நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்      கறைந்துவிடாதே      மதயானை பாதம் மிதித்தாலும் கூட      சாகாமல் நீ வாழுவாய்      மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்      போனது போச்சு ஆனது ஆச்சுது      போடு… போடு… தூக்கி போடு      வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே      உலகம் உன்னை கை கழுவினாலும்…      
    • என்ன செய்ய நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான், சீனாக்காரன் கையை விட்டுவிட்டானே
    • அடையாளங்களை தொலைக்கும் தமிழன்! அடையாளங்களை தொலைக்கும் தமிழன்! வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது. நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். புதிய நாகரிகம் நல்லதுதான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன். இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியைதான். தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில்தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது. குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், நாமோ நவீன காங்கீரிட்  கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்? அதனால்தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது. கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.     நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும். நாம்  உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது. பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே  பருகுகிறோம். இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது. முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட  நாம் பாதுகாப்பது இல்லை. வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று  புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும்தான். இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என  சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.   இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம். நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்!   https://www.vikatan.com/oddities/miscellaneous/49522-