Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"

தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன்

"நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்"

கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு  அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை  மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான்.

"இப்ப ஏன் கோவப்படுறீயள் "

"நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது "

"உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்"

"அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்"

"உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை "

"இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்"

"ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது"

"சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்"

ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு  புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள்  மீது காட்டினால்.

 

குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள்.

"எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ"

"என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்"

"அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் "

"20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான்  கொண்டு போகலாம்"என்றாள்

உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும்  7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு

சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான்.

"ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம்

"அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்"

"இப்பவே  எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது

"அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே"

"ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்"

" சூவிட் அப்பாவல்லோ"

 

இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்)  கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம்.

"இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா  வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா  ஒன்று இரண்டு வாங்கினீரோ"

"ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு"

"சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க"

"உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா"

"சும்மா கேட்டனான் அடிஆத்த"

விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான்.

 

கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... .

 

பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும்

எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை  காட்டினார்கள்.

 

வெளியே அவனது சகோதரி  தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள்.

"மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்"

நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்"

"மாமி ,மாமா சொன்னது கேட்டதே"

"ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்"

"டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ"

"இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ"

"முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை"

"மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா"

என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில்.

சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்..

"மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே"

"ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்'

"அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்"

" அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ"

"இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே"

 

" ம்ம்ம்ம் ..."

அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி.

மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை

எல்லோருக்கும் ‍‍ஹாய் ‍ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர்.

வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர்.

முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள்

 

 சுரேசுக்கு  கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது.

"உங்களுக்கு  முல்லை தீவில்  யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ"

"இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்"

"இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன"

"ஒம் ஓம்  ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்"

 

அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு

வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார்.

"டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே"

"ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்"

அவ‌னுக்கு ஒரு நிமிடம்  கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது

 

தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்...😀

இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்😁

 

 

 

 

 

 

.

 

 

 • Like 11
Link to comment
Share on other sites

 • Replies 50
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

putthan

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்க

putthan

"கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே" அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள். "அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே " "அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என

ரதி

எனக்கும்  என்னவோ புத்தன் முடிவை வேண்டும் என்று மாத்தி எழுதின மாதிரி தெரியுது. பெருமாள்,எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்...வந்தால் 72ம் ஆண்டின் தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம் 😃  

 • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ புத்தன் கலா டீச்சர் உப்ப எப்படி இருக்கிறா 😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்😁

 

கலாவோடு கதைத்த பின் தான் தெரியும்.

13 hours ago, putthan said:

அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

இங்கேயும் உதே நிலமை தான்.
மேடின் அமெரிக்கா என்ற சாமானோ உடுப்போ வாங்குவதென்றால் முத்துக் குளிக்க வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனை எண்டால் நாங்கள் நம்பிவிடுவமாக்கும் புத்தன் ???😀

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாவும் கற்பனை எண்டால் நாங்கள் நம்பிவிடுவமாக்கும் புத்தன் ???😀

இல்லை........ புத்தன் தன்ரை பக்கத்து வீட்டு பெடியன்ரை கதையை சொல்லுறாரெண்டு நான் நினைக்கிறன்..😃

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மேடின் அமெரிக்கா என்ற சாமானோ உடுப்போ வாங்குவதென்றால் முத்துக் குளிக்க வேண்டும்.

ஜேர்மனியிலை இருக்கிற  என்ரை கூட்டு நமசிவாயம்......தான் சிலோனுக்கு கனகாலத்துக்குக்கு போறன் எண்டு சொல்லிப்போட்டு  இஞ்சை உள்ள மலிவு கடையளிலை 2,3,4,5 ஈரோக்களுக்கு ரீ சேட்டு களிசான் எல்லாம் கிலோக்கணக்கிலை வாங்கி கட்டிக்கொண்டு போனாராம்......அங்கை கொண்டுபோய் பந்தா காட்டி விளாச வெளிக்கிடத்தான் தெரிஞ்சுதாம்....எல்லாம் மேட் இன் சிறிலங்கா எண்டு.....

எனவே புலம் பெயர்ந்த மக்காள் அவதானம்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் மேட் இன் சிறிலங்கா எண்டு.....

இங்கு சகல உடுப்புகளும் ஆசியா அல்லது தென் அமெரிக்க நாடுகளில்  தைத்தவையே.

அதனால தான் நாங்களும் வாங்கி போடக் கூடிய மாதிரி உள்ளது.
இல்லையெண்டால் வேட்டி சால்வையோடு தான் திரியோணும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாவம்...சுரேஸ்..!

சிட்னியில இருந்தும்...வெறும் சிறி  லங்கன் வாழ்க்கை தான் வாழுறான் போல கிடக்குது!

வாற நேரம் ஒரு ஈஸி செயார் ஒண்டயும்...வாங்கிக் கொண்டு வரச்சொல்லி...அவனிட்டைச் சொல்லி விடுங்கோ...புத்தன்!

கதை தொடரட்டும்....!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கலாவுடனான சந்திப்பை எதிர்பார்த்து நாமும் ஆவலாயுள்ளோம். தொடருங்கள் புத்தன். 🙂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுரேசின் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது. கலாவைச் சந்தித்தபின் மனசியிடம் அடி வாங்காமல் பார்த்தக் கொள்ளவும்..தொடருங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் கலா காதல் கதையை தெரியாட்டி தலை வெடிச்சிடுமே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மல்லிகை வாசம் said:

கலாவுடனான சந்திப்பை எதிர்பார்த்து நாமும் ஆவலாயுள்ளோம். தொடருங்கள் புத்தன். 🙂

தொடராது......கலாவுக்கு சீலை குடுக்குறதோடை கதை முடியும்.😎

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 6:23 AM, ரதி said:

எழுதுங்கோ புத்தன் கலா டீச்சர் உப்ப எப்படி இருக்கிறா 😎

அமைதி அமைதி ,வருவா  சுரேஸின் யாழ் அழகி

On 4/1/2019 at 8:39 AM, ஈழப்பிரியன் said:

 

இங்கேயும் உதே நிலமை தான்.
மேடின் அமெரிக்கா என்ற சாமானோ உடுப்போ வாங்குவதென்றால் முத்துக் குளிக்க வேண்டும்.

உலகம் பூராவும் உந்த நிலைதான் ..போல கிட‌க்கு.....

On 4/1/2019 at 8:49 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாவும் கற்பனை எண்டால் நாங்கள் நம்பிவிடுவமாக்கும் புத்தன் ???😀

நம்ப வேணும்  சுரேஸை என்க்கு நல்லா தெரியும்

On 4/1/2019 at 9:03 AM, குமாரசாமி said:

இல்லை........ புத்தன் தன்ரை பக்கத்து வீட்டு பெடியன்ரை கதையை சொல்லுறாரெண்டு நான் நினைக்கிறன்..😃

உங்களுக்கு தான் விசயம் விளங்கியிருக்கு...

On 4/1/2019 at 1:46 PM, புங்கையூரன் said:

பாவம்...சுரேஸ்..!

சிட்னியில இருந்தும்...வெறும் சிறி  லங்கன் வாழ்க்கை தான் வாழுறான் போல கிடக்குது!

வாற நேரம் ஒரு ஈஸி செயார் ஒண்டயும்...வாங்கிக் கொண்டு வரச்சொல்லி...அவனிட்டைச் சொல்லி விடுங்கோ...புத்தன்!

கதை தொடரட்டும்....!

அடுத்த முறை போயிட்டு வரும் பொழுது வாங்கி கொண்டு வந்து கொடுத்தால் போச்சு.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மல்லிகை வாசம் said:

கலாவுடனான சந்திப்பை எதிர்பார்த்து நாமும் ஆவலாயுள்ளோம். தொடருங்கள் புத்தன். 🙂

சந்திப்போம் ...ச‌ந்திப்போம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கதையைப் போடுங்கோ முதல்ல புத்தன்😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavallur Kanmani said:

சுரேசின் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது. கலாவைச் சந்தித்தபின் மனசியிடம் அடி வாங்காமல் பார்த்தக் கொள்ளவும்..தொடருங்கள்

மனிசி டிவோர்ஸ் பண்ணாமல் இருந்தாலே பெரிய காரியம்

19 hours ago, ஏராளன் said:

சுரேஸ் கலா காதல் கதையை தெரியாட்டி தலை வெடிச்சிடுமே!

தெரிஞ்ச‌ பிறகு திட்டக்கூடாது

3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையைப் போடுங்கோ முதல்ல புத்தன்😄

😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்தன்
நானும் இந்த கதையை தொடர்ந்து  படித்துக்கொண்டு வருகிறேன் .முதல் பாகமும் படித்தேன். கலாவை சந்திக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றி விடவேண்டாம் 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கலாவுக்கு எப்பவோ ஒர் நாள் றூட் போட்ட டையரி மனிசிட்ட இன்னும் சிக்கவில்லை போல  சாறி கொடுக்க சொறி(sorry) என்றவளா? அல்லது வாங்கினாளா கலா என்கிற நிலா

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கலாவைத் தேடிச் சென்ற சுரேஷிற்கு என்னவாயிற்று என்று ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். 🙂

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கை புத்தனையும் கானவில்லை கலாவையும் கானவில்லை.எனக்கு கையும் ஓடுதில்லை காலும் ஓடுதில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே"

அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள்.

"அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே "

"அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என்னோட படிச்சவா"

"உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று சொல்ல வாறீயள் அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"

"கி கி எனக்கு  ஐம்பத்தெழு அவவுக்கும் அந்த வயசு தான் இருக்கும்"

"அப்ப அவ ரிட்டையர் ப‌ண்ணிபோட்டு நேர்ஸிங்கோமில் தான் இருப்பார்  வெளிநாட்டுக்காரர் போல மினிக்கிக்கொண்டு திரியமாட்டினம்"

சிரித்தபடியே கூறினாள்.எல்லோரும் அவளது கிண்டலையும் கேலியையும் ர‌சித்தனர்

. அங்கு படிப்பிக்கும் யாழ்ப்பாணத்தார் எல்லாம் ஐம்பது வயசுக்குள் தான் இருப்பினம் அவர்களிடம் கேட்டு பார்க்கலாம் ,கலாவின் முழுப்பெயர் என்ன என்று தெரியுமோ என‌ கேட்டாள்

"கலாதேவி ..அப்பாவின் பெயர் விஸ்வலிங்கம்,அம்மாவின்  பெயர் பூபதி இருவரும் டீச்சர்மாரக இருந்தவை பிறகு விஸ்வலிங்கம் அதிபராக இருந்தவர் ....புருசனின்ட பெயர் தெரியவில்லை"

"நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு  யாழ்ப்பாணத்தாரிட்ட கேட்டு பார்ப்போம்"

மாலை பாடசாலையால்  திரும்பிவந்தவள் சொன்னாள் அங்கு கலாவை தெரிந்தவர்கள்

 

 

 

ஒருத்தரும் இல்லை என்று.

 

வற்றாப்பளை அம்மன் கோவில் ,ஊற்றங்கரை பிள்ளையார் கோவில் என்று எங்கு போனாலும் அவன் கலாவை தேடாமல் இல்லை..

நாலு நாட்கள் முல்லை மண்னை தரிசனம் செய்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி கலாவின் நினைவுகளுடன் பயணமானான்.சகல வாகனங்களும் பூனகரி பாலத்தினூடாகவே செல்கின்றன‌,  .ஆனையிறவு பாதையை தவிர்க்கின்றனர் பல காரணங்களை சொல்லுகின்றனர்.

பூனகரியோ,கிளாலியோ ஆனையிறவோ எதுவும் மனதில் நிற்கவில்லை கலாவின் நினைவை தவிர....

பருவங்களின் கோளாறுகளை நினைத்தபடி மனைவியை திரும்பி பார்த்தான் அவளும் இயற்கையை ரசித்தபடியிருந்தாள் .

"என்னப்பா எதாவது பழைய ஞாபகங்களை இரைமீட்கின்றீரோ"

"உங்களை மாதிரி கற்பனையில நான் இருக்க முடியோ எங்களுக்கு எவ்வளவு வேலை கிடக்கு ஊருக்கு போய் அடுத்து என்ன செய்ய வேணும் என்று யோசிக்கிறேன்"

"உதுக்கு போய் தலையை உடைக்கிறீர் நான் ஏற்கனவே பிளான் போட்டிட்டேன்"

"டவுனுக்கு 12 மணிக்கு போய்விடுவோம் அவையளின்ட வீட்டை சமான்களை வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கன்ட ஊர் கோவிலுக்கு போவம்,அப்படியே இரண்டு மூன்று என்ட் பெடியள் இருக்கிறாங்கள் பார்த்து போட்டு வருவம்"

"கோவிலுக்கு போனால் வீட்டை திரும்பி வரவேணும் யாரின்ட வீட்டையும்போககூடாது'

"வெளிக்கிட்ட இடங்களில்  உதுகள் ஒன்றையும் பார்க்க ஏலாது'

தொடர்ந்து பேச்சைகொடுக்காமல் இருந்து விட்டாள் வீடு போய்ச் சேரும்வரை.

சுரேஸ் நினைத்தபடி 12 ம‌ணிக்கு முதலே உறவினர் வீட்டை வந்து சேர்ந்தனர் .ஒரு மணிக்கு கோவில் பூட்டி போடுவார்கள் பிறகு ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள் என உறவினர் சொன்னதும் சுரேஸ் தனது திட்டம் பிழைத்து விட்டதே என கவலைப் பட்டான்.

 

அடுத்த நாள் கோவிலுக்கு போனார்கள் அங்கும் கலா வருவாளா என

ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான். கோவில் தரிசனம் முடித்து விட்டு கலா வாழ்ந்த பழைய வீட்டுக்கு  நேராக சென்றான் .அவனை யாழ்நக‌ரின் காவல் தெய்வங்கள்  ஆரவாரம் பண்ணி வரவேற்றன.

"அவளை போய் பார்க்கிற சுதியில உந்த நாய்களின்ட கடிவாங்கி போடாதையுங்கோ"

"நாயின்ட கடியை விட உம்மட கத்தல் தான் பயமா இருக்கு"

என்று சொல்லிய படி ,திறந்திருந்த படலையை  மூடிய பின்பு வீட்டுக்காரார் என குரல் கொடுத்தான் .

ஒம் வாரன் யாரது என்று கேட்டபடியே வீட்டுக்கார அம்மா வந்தார்.

"அதிபர் விஸ்வலிங்கத்தின்ட வீடு இது தானே"

" இல்லை தம்பி அவையளிட்ட இந்த வீட்டை நாங்கள் வாங்கி போட்டோம்"

" அவையள் இப்ப எங்க இருக்கினம் என்று தெரியுமோ அம்மா"

" ஐந்தாறு வீடு தள்ளித்தான் இருக்கினம்"

" சரியா விலாசத்தை சொல்லுங்கோ வீட்டு நம்பர் என்ன என்று சொல்ல முடியுமோ"

"இங்க அங்க‌த்தைய மாதிரி நம்பர்கள் இல்லை , ஐந்தாவது வீடு ,கலா பவனம் என்று போர்ட் போட்டிருக்கு..."

ஊர்சனம் எப்படித்தான் வெளிநாட்டுக்காரரை    கண்டு பிடிக்குதுகளோ தெரியவில்லை என நினைத்த படி மனைவியிடம்  ஒடிப்போய்  சொன்னான்

"இஞ்சாரும் இவள் கலா ஐந்தாவது வீடு தள்ளித்தான் இருக்கிறாளாம்,ஒருக்கா டக்கெண்டு பார்த்திட்டு போவம் வாரும்"

அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ,தம்பி வானை எடும், ஐந்தாவது வீட்டடியில்  நிற்பாட்டும்"

"நீர் வானுக்குள் இருக்கப்போறீரோ ,அல்லது உள்ள வாறீரோ"

 

"நானும் வாரன் ,என்ன வெறும் கையோடய போரது"

"ஒரு சீலையை கொண்டு வந்திருக்கலாம்"

" என்னது சீலையையோ....நான் பார்த்து பார்த்து வாங்கி வைக்க நீங்கள் உங்கன்ட பழசுக்கு .....வாயில வருது"

அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் வாய் தடுமாறி மனதில் இருந்த எண்ணத்தை உளறினதை..

. "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்"

கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது....

கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

 

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "

"எந்த சுரேஸ்'" என யோசிக்க தொடங்கினாள்

"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ்."

"கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்"

கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது....

கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

 

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "

"எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ்

"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்"

"நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ"

"இவா என்ட வைவ்"

இருவரும் ‍ஹலோ சொல்லி கொண்டனர்

"என்ட அம்மா போன வருடம் தவறிப்போயிட்டா"

"சோறி டு கெயர்"

 

 உங்களை கண்ட ஞாபகமா இருக்கு ஆனால் முகம் நினைப்பில வருதில்லை உங்களுடன் படிச்ச வேறு போய்ஸின்ட பெயர் சொல்லுங்கோ...

"குகன் ,விமல்,ராஜ்,...சுதாவை தெரியும் தானே"

"ஓமோம் அவள் லண்டனிலிருப்பதா கேள்விப்பட்டேன்"

"போனவ‌ருடம் சுதா அவுஸ்ரேலியா வந்தவர் நானும் குகனும் மீட் பண்ணினனாங்கள்

"விமல் லோட அதிகம் நீங்கள் தானே சைக்கிளில் வாரனீங்கள் விமல் இப்ப என்ன செய்கின்றார்"

 

" ஓமோம் நான் தான்'

"இப்ப ஞாபகம் வருகின்றது"

"விமல் எங்க இருக்கின்றார்"

"நாங்கள் 72 கிளப் என்று வட்சப் வைச்சிருக்கிறோம் அதில் நீங்கள் ஜொன்ட் பண்ணுங்கோவன்"

"விமலும் அந்த வட்சப் குறூப்பில் இருக்கின்றாரோ"

" ஒமோம் கனடாவில் இருக்கின்றான்"

"அதென்ன 72 கிளப்"

"72 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படிக்கதொடங்கினோம் அது தான்"

"விமலுடன் கதைத்தால் நான் விசாரித்ததாக சொல்லுங்கோ"

 

"வட்சப்பில் ஜொன்ட் பண்ணினால் எல்லோருடனும் நீங்களும் கதைக்கலாம்

"‍ஹஸ்பனிட்டதான் நல்ல போன் இருக்கு அவர் வந்த பிறகு கேட்டு சொல்லுறேன்...

தேனீரும் சிற்றூண்டியும் அருந்திவிட்டு  விடைபெற்றனர்.

அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்

"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"

"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

 கலாவின் பக்கத்துவீட்டு ரேடியோவிலிருந்து 

"

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 • Like 4
 • Haha 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்காரியின் நக்கலிலையே மிச்ச வாழ்க்கை போகபோது சுரேசிற்கு.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கதவை தட்டி ஹலோ டீச்சர் நான்தான் சுரேஷ் ஞாபகம் இருக்கா என்று கேட்பதற்கு ஆன செலவு 5000 டொலர்.....!  👍

நல்ல சுவாரஸ்யமான கதை புத்ஸ்.....!   😁 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "

"எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ்

"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்"

"நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ"

இந்த இடத்தில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... 😃😀🤣 ஒருகாலத்தில் கதாநாயகன் ஜோடியாக நடித்த நடிகைகள் எல்லாம் பின்னாளில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமை இதனால் தானோ! 

 • Like 1
Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இங்கே அனேக தொழில்கள் தர்மத்தின் படி நடைபெறுகிறதா என்பது சந்தேகமே. வரி ஏய்ப்பு செய்வோர், வரிகள் தொடர்பான அறிவு/அனுபவம் இல்லாதவர்களை ஏய்க்கும் கணக்காளர்கள், கிட்னி களவெடுக்கும் வைத்தியர்கள், பாடசாலையில் ஒழுங்காக படிப்பு சொல்லிக்கொடுக்காமல் தனது தனியார் வகுப்பிற்கு வரச்சொல்லும் ஆசிரியர்கள், தொழிநுட்ப அறிவை வைத்து அப்பாவி மனிதர்களை ஏமாற்றும் IT வல்லுனர்கள், .. என எடுத்துக்காட்டுகள் அதிகம். ஆனால் வக்கீல்களின் நிலையை தனித்து குறை கூறுவது சரியென படவில்லை.  வக்கீல்களும் அவர்களுடைய தொழில் தர்மத்திற்கு ஏற்ப கட்டுப்பட்டே தொழில் புரிகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதடுவதை தவிர கோர்ட்டிற்கு வெளியே வந்து தனிப்பட்ட ரீதியில் அந்த நபரை ஆதரிக்கப் போவதில்லை. இன்னொரு வழக்கு வரும் பொழுது நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள். Legal Aid போன்ற வசதிகள் அனேக நாடுகளில் உள்ளது. அதில் பல சட்ட வல்லுனர்கள், அரசின் உத்தரவுப்படி வக்கீல் வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவருக்காகவும் வாதாடுவார்கள், நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.  இங்கே பிரச்சனை, இந்த மாதிரி சீர்கேடுகள் அதிகரித்து வருவதை எப்படி தடுப்பது என்பதே!. எமது கலாச்சாரத்தில் ஊறி இருக்கும் “மற்றவர்கள் என்ன சொல்வார்களே”எனப் பயந்து இந்த மாதிரி செயல்களை மறைப்பதையும்,  வெளியே கொண்டு வராமல் இருப்பதையும் குறைக்கவேண்டும். சரியான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். முக்கியமாக வீட்டிலிருந்தே மாற்றங்கள் வரவேண்டும்.  
  • ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன சாதிக்க முடியும்? பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டம் என்ன போன்ற கேள்விகளுடன், பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை இந்த வாரம் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான ஒரு பகுதியை இலக்கு வாசகர்களுக்குத் தருகிறோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...
  • தவறியும், தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களை அடக்கியொடுக்க பெற்ற கடனே, இந்த நிலைக்கு காரணம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
  • மிருகங்கள் மற்றும் பறவைகள் தனது போக்கிலேயே போகின்றன. எந்த மனமாற்றமும் கொண்டிடாது. ஆனால் மனிதர்களின் மனமோ….வினாடிக்கு வினாடி மாறக்கூடியது. தாவக்கூடியது. மனிதன் மட்டும் ஏன் குருடு, செவுடு, நொண்டி, மூளைவளர்ச்சி இன்மை இன்னும் பல குறைபாடுடன் பிறக்கிறான்? விலங்குகள் பறவைகள் அவ்வாறு பிறப்பது இல்லை ஏன்? மற்ற விலங்குகளை ஒப்பிடும்போது இந்தப் பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்தது முதுகுவலி யும் கழுத்து வலியும் தான் ஏனென்றால் உண்மையில் மற்ற உயிரினங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன மனிதன் மட்டுமே அதை பெற தவறிவிட்டான் எவ்வளவு குளிர் அடித்தாலும் ஆடு மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கு கம்பளி ஆடை கம்பளி போர்வைகள் தேவைப்படுவதில்லை ஆனால் மனிதர்களுக்கு தேவை பரிணாம வளர்ச்சியில் இயற்கைக்கு ஏற்ப நாம் நம்மை பரிணமித்து கொள்ளவில்லலை ஒரு சிம்பன்ஸி சமைக்கப்படாத உணவை சாப்பிட 5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது ஆனால் மனிதனுக்கு சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ள ஒரு மணி நேரமே போதுமானதாக உள்ளது.  மனிதர்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் விலங்குகள், பறவைகள் ஏதேனும் உள்ளதா? மனிதர்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் விலங்குகள், பறவைகள் உள்ளதா? மனிதர்களைப் போல?  அவற்றை பற்றியே இந்த பதிவு.... ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் உயிரினங்களில் பறவைகளும் உள்ளன! பாலூட்டிகளும் உள்ளன! பாலூட்டிகளில் மிகவும் குறைவான குறிப்பிடத்தக்க விலங்குகள் மட்டுமே உள்ளன. எனவே, பாலூட்டிகளை பற்றி பதிவின் முடிவில் பார்ப்போம். முதலில் பறவைகளிலிருந்து. பறவைகள் பறவைகளில் சுமார் 90 சதவிகித பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் குணம் கொண்டவை. ஆனால், அவை வாழ்நாள் முழுவதும் ஒரு துணையுடன் மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடும் என்று அர்த்தமல்ல. இவற்றை மோனாகாமி (Monogamy) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அவற்றில் இரு வகையான மோனோகாமிகள் உள்ளன. 01. சமூகத்துக்காக ஒன்றாக வாழும் பறவைகள்: சமூக சார்ந்து வாழும் பறவைகள் தங்கள் குஞ்சுகளை வளர்க்க உதவும் ஒரு "துணை" யைத் தேர்ந்தெடுக்கின்றன. பெண்கள் சில நேரங்களில் மற்ற ஜோடிகளின் கூடுகளில் முட்டையிடுவார்கள். மற்ற பறவைகளுடன் அவை இனச்சேர்க்கை செய்யும். ஆனால், இந்த வகையில் ஜோடி பறவைகள் ஒர் குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இணைந்து வாழும். பின்னர் வேறொரு துணையை தேடிக்கொள்ளும். பெரும்பாலான பறவைகள் சமூக ரீதியாக ஒரே மாதிரியானவை. 02. இனச்சேர்க்கைக்காக ஒன்றாக வாழும் பறவைகள்: பாலியலுக்காக ஒன்றாக வாழும் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் ஒரு துணையுடன வாழ்கின்றன. பின்னர் இனச்சேர்க்கை முடிந்த பின்னரும் சில ஜோடி பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடனே வாழ்கின்றன சில சமயங்களில் ஜோடி பறவைகள் பெற்றோர்களுடனும் ஒன்றாக வாழ்கிறது. அரிதாகவே அவர்கள் மற்ற பறவைகளுடன் அவைகள் இனைச் சேருவார்கள். அப்படி, இப்பூமியில் எந்தெந்த பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழ்கிறது என்பதை பார்ப்போம். 01. பேசாத அன்னப் பறவைகள் (Mute Swan) 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.   ஜோடி அன்னப்பறவைகள் ஒருவருக்கொருவர் தங்கள் நீண்ட கழுத்தை வளைத்து, இதய வடிவத்தை உருவாக்கி "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தொடர்புகொள்வது போல இருக்கும். அன்னப்பறவைகள் சமூக ரீதியாக மட்டுமே ஒன்றாக துணையுடன் வாழ்கின்றன. 02. ஆமை புறாக்கள் (Turtle Dove) பொதுவாக ஆமை புறாக்களும் மற்றும் காதல், அன்பு நம்பகத்தன்மை, ஒற்றுமை போன்ற அடையாளங்களாகக் கருதப்படுகிறது. ஆமை புறாக்கள் சமூக ரீதியாக மட்டுமே ஒன்றாக துணையுடன் வாழ்கின்றன. அவைகள் பாலியல் ரீதிக்காக ஒன்றாக வாழ்பவை அல்ல! 03. பனி ஆந்தைகள் (Snowy Owls) பனி ஆந்தைகளின் ஜோடிகள் வாழ்நாள் முழுவதும். ஒன்றாகவே வாழ்கின்றன. அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை தேய்த்து அன்பை வெளிப்படுத்துக்கின்றனர். ஒருவருக்கொருவர் அன்பை பொழியும் ஜோடிகளாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும். ஒன்றாகவே வாழ்ந்தாலும் இதற்கு ஒரு விதிவிலக்கு இருக்கிறது. அது உணவிற்க்காக நிகழ்கிறது, இந்த நிகழ்வில் இரண்டு பெண் ஆந்தைகள் ஒரு ஆணுடன் இனப்பெருக்கம் செய்கிறது.   04. கருப்பு பிணந்திண்ணி கழுகுகள் (Black vultures) இந்த பிணந்திண்ணி கழுகுகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் மிகப் பெரிய நம்பிக்கைக்குரியவர்களாக உள்ளன. அவைகள், பெரிய விசுவாசிகளாக இருக்கிறார்கள், ஒரு கழுகு அதன் துணையை ஏமாற்றி வேறோரு துணையுடன் பாலியலுக்காக இனச்சேருவது என்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. ஒருவேளை, அப்படி நிகழ்ந்தால் ஏமாற்றுக்கார கழுகினை அதன் சக கழுகுகளின் ஒரு குழுவால் தாக்கப்படுகிறது. கழுகுகள் மத்தியில் மோசடி மிகவும் அரிதானது என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.   05. ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி (Scarlet Macaw) ஸ்கார்லெட் மக்கா என்பது நியோட்ரோபிகல் கிளிகளின் குழுவிற்கு பெரிய கிளி வகை. மெக்ஸிகோ மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்விடம் உள்ளன. ஸ்கார்லெட் மக்கா ஆறுகளுக்கு அருகிலுள்ள மழைக்காடுகள், வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கிறது. இந்த கிளிகள் வாழ்க்கை துணையாக இருக்கும் கிளியோடு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் இனச்சேர்க்கை செய்கிறனர். சில கிளிகள் சில நேரங்களில் இனப்பெருக்க காலம் வரை தனித்தனியாக வாழ்வதாக அறியப்படுகிறது, பெரும்பாலும் ஜோடி கிளிகள் ஒன்றாக இருப்பதை விரும்புகிறார்கள். அதே சமயம் இந்த கிளிகள் குடும்ப வாழ்க்கையை மதிக்கின்றன, எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பை பொழியும் கிளிகளாக இருக்கிறது. ஒரு கூட்டில் ஒரு நேரத்தில் இரண்டு முதல் நான்கு குஞ்சுகளை வளர்க்கிறார்கள். தாய், தந்தை இருவரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள், முட்டைகளை அடைகாப்பதில் இருந்து குடஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன. மேலும் அவைகளின் குஞ்சுகள் தனியாக சுதந்திரமாக வாழ முடியும் வரை மீண்டும் தாய் தந்தை இனச் சேர்ககை செய்வதில்லை, இது இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம். 06. வழுக்கை கழுகுகள் (Bald Eagles) வழுக்கை கழுகுகள் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக ஒரே துணையுடன் வாழ்கிறது. ஆனால், இரண்டு நிபந்தனைகளுடன். இரு ஜோடியுமே சேர்ந்து சந்ததிகளை உருவாக்க முடியாவிட்டால், அவைகள் பிரிந்து மற்றொரு துணையைத் தேடுகிறது.  ஜோடியில் ஒரு ஜோடி இறந்தால், மற்றொரு ஜோடி ஒரு புதிய துணையை ஏற்க தயங்காது.  ஜோடி ஒன்றாக வாழ்ந்து இனச்சேர்கை செய்து பின்னர் பிரிந்தால் மீண்டும் அந்த ஜோடி ஒரு போதும் இணைச் சேராது. மேலும், வழுக்கை கழுகுகளை முற்றிலும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருத்தி என்று வாழும் பறவையாக கருதப்படுவதில்லை.   07. கூகை ஆந்தை (Barn owl) ஆந்தைகளிலே மிகவும் அழகான ஆந்தை எது என்று கேட்டால் கூகை ஆந்தை கூறலாம். மிகவும் சாதுவானதும் கூட… ஆர்டிக், அண்டார்டிகாவைத் தவிர, உலகம் முழுவதும் வாழ்கின்றன. கூகை ஆந்தைகள் பறக்கும்போது இறக்கைகளிலிருந்து ஒலி எழுவதில்லை. அழகிற்காகவும், அமைதியான குணத்திற்காகவும் இதனை மேற்கத்திய நாடுகளில் இதனை வீடுகளில் செல்ல பறவையாக வளர்க்கிறார்கள். கூகை ஆந்தைகள் சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய குறுகிய ஆயுட்காலம் கொண்ட ஆந்தை. ஆனால், அந்த நேரத்தை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்கள். கூகை ஆந்தைகள் இனப்பெருக்க காலத்திற்கு வெளியே கூட தங்கள் துணையுடன் பாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவைகள் ஒருவருக்கொருவர் சாய்ந்து, கன்னத்தில் தேய்த்தல் மூலம் அன்பை வெளிபடுத்துக்கின்றனர். அவர்களின் வெள்ளை இதய வடிவிலான முகங்கள் தோற்றத்திற்கு மட்டுமல்ல. அதன் உள்ளத்திற்கும் தான். 08. அல்பட்ரோஸ் (Albatrosses) அல்பட்ரோஸ் ஒரு கடற்பறவை ஆகும். பெரும்பாலான அல்பாட்ரோஸ்கள் அண்டார்டிகாவிலிருந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரையிலான தெற்கு அரைக்கோளத்தில் காணப்படுகின்றன. உலகிலே மிக நீளமான இறக்கை கொண்ட பறவை என்ற பெருமையை கொண்டுள்ளது. (அதன் இறக்கையின் நீளம் 6.5 முதல் 11.4 அடி வரை வளரும்) அல்பட்ரோஸ்க்கு வெறும் இறக்கை மட்டும் நீளம் அல்ல அன்பிலும் அரவணைப்பிலும் துணையுடன் வாழும் காலமும் கூட நீளமே.. அல்பட்ரோஸ் பறவை சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தேடுத்தால் பல வருடங்கள் கூட ஒன்றாக வாழும். அல்பட்ரோஸ், ஒரு துணையை கண்டுபிடிக்கவும் துணையை கவரவும் வித்தியமாக நடன அசைவுகள் செய்கின்றன. ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்துவமான ஒரு நடனம் அமைப்பை கொண்டுள்ளன. அல்பாட்ரோஸ்கள் துணையுடன் மிகக் குறைந்த நேரத்தை ஒன்றாக செலவிடுகின்றன. அல்பாட்ரோஸ்கள் தங்கள் வாழ்க்கையை 80% க்கும் அதிகமாகமான நேரத்தை கடலில் தனிமையில் கழிக்கின்றன. இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே நிலத்திற்கு வருகின்றன. ஆனால், அவைகள் ஒன்றாக இருக்கும் நேரம் பாசத்தாலும், அரவணைப்பிலும் நிறைந்திருக்கும்.   பாலூட்டிகள் 09. சாம்பல் ஓநாய்கள் சாம்பல் ஓநாய்கள் கூட்டமாக சமுகம் சார்ந்த வாழக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான பெரியநாய் இனமாகும். வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றன. அவைகள், சமூக அமைப்பு மற்றும் நடத்தை விதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 6 முதல் 10 வரை உறுப்பினர்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு குடும்பத்தில் 30 வரை கூட உறுப்பினர்கள் இருக்கிறது. ஒரு கூட்டத்தின் தலைவர்கள் ஒரு ஆண் ஓநாய் மற்றும் ஒரு பெண் ஓநாய். இந்த இரண்டு ஓநாய்களும் கூட்டத்தில் உள்ள மற்ற அனைத்து ஓநாய்களையும் விட ஆதிக்கம் செலுத்துகின்றன. கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இனப்பெருக்கம் செய்து சந்ததியினரை உருவாக்கின்றனர். மேலும், அவை இரையை கொல்லப்படும்போது தலைவன், தலைவியே முதலில் சாப்பிடுகின்றன. இந்த ஜோடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது. இந்த சாம்பல் ஓநாய்கள் தங்கள் துணைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். ஒருபோதும் முறை தவறி நடப்பதில்லை. நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் துணைகளுக்கு உண்மையாகவே இருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழும் சிறந்த பாலூட்டி ஆகும்.   10. கிப்பன் (Gibbon) கிப்பன் ஓர் சிறிய ரக மனித குரங்குகள். கிப்பன்கள் பெரிய மனித குரங்குகளிலிருந்து வேறுபடுகின்றன. வடகிழக்கு இந்தியாவில் தொடங்கி தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில், சீனாவிலிருந்து மலாய் தீபகற்பம், பர்மா மற்றும் வடக்கு சுமத்ரா வரை கிப்பன்கள் வாழ்கின்றன. பெரும்பாலும், வெப்பமண்டல மழைக்காடுகளில் கிப்பன்கள் தங்களது இருப்பிடத்தை கொண்டு உள்ளது. கிப்பன்கள் மிகவும் அறிவார்ந்த மனித குரங்குகள். மேலும், அவர்கள் பல்வேறு ஒலி எழுப்பி வழியாக அவைகளுக்குகிடையே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த சிறிய மனித குரங்குகள் மனிதர்களின் உறவுகளை பிரதிபலிக்கும் உறவுகளைக் கொண்டுள்ளன. கிப்பன்கள் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட நிலையான குழுக்களாக வாழ்வதாக கருதப்படுகிறது. அதில் தம்பதிகள் ஏமாற்றுகிறார்கள், பிரிந்து செல்கிறார்கள், “மறுமணம் செய்து கொள்கிறார்கள். பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் ஒரு டூயட் பாடுகின்றன. ஆணும் பெண்ணும் இணக்கமாக இருக்கிறன. ஒன்றாக இருக்கும் கிப்பன் ஜோடிகளுக்கு, அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகின்றன. மேலும், தங்கள் குட்டிகளை வளர்க்க இரு கிப்பன்களும் சமமாக உதவுகிறன. _____________________________________________________________________________________ மனிதனுக்கு ஏன் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது? இறைவன் எழுதிய அழகான மென் பொருள் தான் பிரச்னை. பிரச்னை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை. ஒரு பறவையிடம் கண்ட விசித்திரமான விஷயங்கள்    🤔 ஒரு பறவை இடத்தில் கண்ட விசித்திரமான விஷயம் என்னவென்றால் அது வெகு இயல்பாக இருக்கிறது.. (அன்றும், இன்றும், என்றென்றும்) 🤗 நம் மனிதர்களைப்போல குணம் மாறவில்லையே இதுவே விசித்திரம் தானே ! !! முக்கியமா புறாக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் தன் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிவது.. தன் இருப்பிடத்திற்கு வந்து சேருகிறது. அதுமட்டுமில்லை எல்லாம் பறவைகளும் அப்படித்தன் போல ஏன் இந்த மனிதன் மட்டும்தான் பாரம்பரியத்தை மறுக்கிறான்??? 🤔நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது தன்னிடம் எதுவும் இல்லை என்றாலும் கூட.. . ஒரே ஒரு மூலதனமாக இருக்கும் சிறகுகளை வைத்து மேலே பறக்கிறது.. தன் உணவைத் தேடுகிறது.   பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்1 வருடம்   மனிதர்கள் இறந்தால் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வார்கள் என்றால் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் இறந்தால் எங்கே செல்லும்? விலங்குகள், பூச்சிகள், பறவைகள் மட்டும் தானா? ஏன், செடி, கோடிகளுக்கு உயிர் இல்லையா? மாணிக்கவாசகப் பெருமான் தனது சிவபுராணத்தில் கீழ்கண்ட பிறவிகளை பட்டியலிடுகிறார்: புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் *விருகமாகி = மிருகமாகி என்பதன் திரிபு. இதை மிருகங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். நமது கர்மவினைக்கேற்ப பிறவிகள் அமைகின்றன. ஒவ்வொரு பிறவிக்கும் அதற்கேற்ற அறிவுடன் இறைவன் படைக்கிறார். ஆறாம் அறிவுள்ள மனிதனைத் தவிர்த்து.   மிருகங்கள் மிரட்டுவதற்காக பல்லை காட்டுகின்றன, ஆனால் மனிதர்கள் நட்புணர்ச்சிக்காக பல்லை காட்டுகின்றனர்? ஏன் இந்த வேறுபாடு?   இதில் எந்த வேறுபாடும் இல்லை. மிருகங்கள் பல்லை காட்டுவதில்லை சீறும், ஆனால் மகிழ்ச்சியையும் மனிதன் பல்லை காட்டி தான் வெளிப்படுத்த முடிகிறது. அந்த வகையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த தனி தனி முறைகளை கொண்டுள்ளது. நாய் வாலை ஆடிக்கொண்டே குழைந்து வந்து மூக்கால் முட்டியும், நக்கியும் வெளி படுத்தும், பூனை தன் முழு உடலையும் உரசி வெளிப்படுத்தும். மனித இனத்தை போன்று மிருகங்கள் மற்றும் பறவை இனங்களில் திருநங்கை உயிரினங்கள் உள்ளதா? இதில் சந்தேகமே வேண்டாம்! விலங்குகளிலும் உண்டு. இயற்கையில் உயிரினங்கள் என பொதுவாக எடுத்துக்கொண்டால் பாலினம் நிறவுறுக்கள்(Chromosome) மூலமாக மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன.  நிறவுறு கோட்பாடு(Chromosome Theory) பலவினப்புணரியுண்மைகோட்பாடு (Heterogamy Theory) மரபணு சமநிலைக் கோட்பாடு(Genic Balanced Theory) இயக்குநீர் கோட்பாடு(Hormone Theory) ஃப்ரீமார்டின்(கால்நடைகளில் மட்டுமே நடைபெறும்) சூழ்நிலையின் அடிப்படையில் பாலினம் நிர்ணயித்தல் கோட்பாடு ஆண் ஹாப்ளாய்டி கோட்பாடு(பூச்சிகளில் மட்டும்)   மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் புதிதாக ஏதேனும் சாகசங்கள் செய்ய பிடிக்குமா? கற்றுக்கொண்டே இருந்தால் மட்டுமே எவ்வித உயிரினமாயினும் இவ்வுலகில் வெற்றி காண இயலும். கற்றலின் போது மனிதர்கள் கற்றுத்தராத பல புதிய சாகசங்களைப் புரிகின்றன விலங்குகள். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வினைக் காணலாம். ஒரு கடல்வாழ் உயிரினக் காட்சி சாலையில் (marine aquarium) உள்ள டால்ஃபின்களுக்கு (நீர்வாழ் பாலூட்டிகள்) பயிற்சி அளித்துள்ளனர். அதாவது காகிதங்களைத் தண்ணீருக்குள் போட்டு விடுவர். மூழ்கும் காகிதங்களை எடுத்து வரும் டால்ஃபின்களுக்கு மீன் வழங்கப்படும். பொதுவாக உயிரினங்களைப் பழக்க அவற்றிற்குண்டான உணவுப்பொருட்களைத் தருவது பொதுவான செயல்பாடு என்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லையே எனலாம்.   மூளைக்கும் மனதிற்கும் தொடர்பு உண்டா? மூளை கண்ணால் காணக்கூடியதாக உள்ளது. மனம் கண்ணால் காணமுடியாதது மட்டுமன்றி "மனதாலும்" நினைத்து பார்க்க முடியாததாக உள்ளது மனது பற்றிய சாஸ்திரம் மூளை பற்றிய சாஸ்திரம் போல பல நூறு மடங்கு பெரியது மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் செய்தல் போன்றவை மூலம் பயிற்சி அளிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மூளையில் கண்கூடாக தெரிகிறது. இறுதியில் இணைத்துள்ள படத்தில் காணலாம். மனம் ஆற்றல் கொண்டது என்றால் அதற்கான பல தடயங்கள் மூளையில் காணப்படும். மூளையின் பின் பகுதியில் உள்ள முகுளம் (modulla oblangata ) விண்ணிலிருந்து வரும் அலைகளை கிரகித்து கொள்ளும் ஒரு கிரகிப்பாளர் ( receiver ) ஆக செயல்படுகிறது. துவக்குவது மனம் செயல்புரிவது மூளை   மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதனைப் போல ஞாபகசக்தி உண்டா? மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதனைப்போல ஞாபக சக்தி உண்டா? சற்றும் யோசிக்கும் விதமான கேள்விதான். எளிதாக பதில் அளிக்க வேண்டுமானால் மூளை என்ற ஒன்று இருக்கும் அனைத்து உயிரிக்கும் ஞாபக சக்தி என்ற ஒன்று இருக்கும். ஆனால் சில விலங்குகளில் அவை தனித்தன்மை பெற்றிருக்கும். உதாரணமாக பெரிய பாலூட்டிகளில் யானையை எடுத்துக்கொள்ளலாம். பாலூட்டிகளிலேயே அதிக ஞாபக சக்தி கொண்டதென்றால் அது யானை ஆகும். இன்னும் சில பாலூட்டிகளும் இருக்கின்றன. எதனால் இந்த பாலூட்டிகளுக்கு ஞாபக சக்திஉள்ளது என்று கூறுகிறோம் என்பதையும் இந்த பதிவில் காணலாம். பறவைகளை நாம் எடுத்துக் கொள்வோமானால் அவற்றில் ஞாபக சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு  சில பொதுவான விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் சாதாரண உடல் வெப்பநிலை என்ன? விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவான சராசரி உடல் வெப்பநிலை 98.6 ° F. இது சிலநேரங்களில் வேறுபடலாம். பிற பாலூட்டிகளின் வெப்பநிலை 97 ° F முதல் 104 ° F வரை இருக்கும். பறவைகள் சராசரியாக 105 ° F உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ளன. மீன்கள் குளிர் இரத்தம் கொண்டிருப்பதால் அவை நீந்தக்கூடிய நீரில் இருக்கும் வெப்பநிலையைக் கொண்டிருக்கும் உதாரணத்திற்கு 40 ° F நீரில் நீந்திய ஒரு மீன் உடல் வெப்பநிலை 40 ° F க்கு மிக அருகில் இருக்கும். 60 ° F நீரில் உள்ள அதே மீன் உடல் வெப்பநிலை 60 ° F க்கு அருகில் இருக்கும். பெரும்பாலும் பறவைகள் மற்றும் பாலூட்டிகளாக இருக்கும் சூடான இரத்தம் கொண்ட விலங்குகள், எப்பொழுதும் நிலையான உடல்   உங்கள் தலையில் கூடு கட்டப் பார்க்கும் கவலை என்ற பறவையிடம் இருந்து எப்படி தப்புவீர்கள்? நிறைய முறை கூடி கட்டி சரணாலயமாக கூட இருந்துள்ளது. கவலை அடைவதெல்லாம் இயற்கை. நம் தலையில் கவலை என்ற பறவை கூடு காட்டுகிறது என்றால் நாம் தானே அதற்கு இடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம். அதாவது நாம் அந்த அளவிற்கு பலவீனமாக உள்ளதாக அர்த்தம். எல்லாவற்றையும் சமாகவே பார்க்கவேண்டும். எதுவுமே நிரந்தரம் இல்லை. கவலையோ இன்பமோ குறிப்பிட்ட காலத்திற்கு இருந்து விட்டு நம்மை விட்டு விலகி விடும். இந்த எண்ணம் கொண்டிருந்தால் கவலையே நம்மிடம் வராது. அப்படியே வந்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன். என் மாமா பிள்ளைகள் தான் எனக்கு முதல் மருந்து. பொதுவாக எல்லோருக்குமே குழந்தைகளை பார்த்தால் மனம் கவலைகளை மறந்து அமைதி மனதின் சிதறிய எண்ணங்களை எவ்வாறு ஒன்று திரட்டலாம்? இதை இரண்டு விதமாக செய்யலாம்… எண்ணத்தின் சிதறல்கள் பின் ஓடி ஒற்றை வேரை பிடித்திட அவை ஒன்றுபடும் உங்களுக்கு மிகவும் பிடித்த செயலை செய்வதின் மூலம்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் இருக்கிறது என்பது உண்மையா? மிருக நிலையிருந்து மனிதனாக மாறியவர் தானே மனிதன் விலங்குகளுடன் ஒப்பிடும்போது நம்மை "மனிதனாக" ஆக்குவது எது? நாணம் யோசிக்கும் திறன். புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? சமீபத்தில் நடந்த சம்பவம். ஸோமோடோ டெலிவரி செய்பவர் தன்னை தாக்கியதாக வைரலான வீடியோ. இப்போலாம் தும்மல் வந்தா கூட வீடியோ எடுத்து போட்டுடறாங்க. அதையும் என்ன ஏதுன்னு தெரியாமல் வைரலாகிடுறாங்க. நமக்கே தெரியும் டெலிவரி பண்ண வரவங்கலாம் எவ்வளவு பொறுமையா நடந்துப்பாங்கன்னு. ஏன்னா ஒரு சின்ன கம்ப்ளென்ட் கூட அவங்களுக்கு வேலை போக காரணமாயிடும். அப்படியிருக்கும் போது தன்னை அடிச்சதா புகார் பண்ணி வீடியோ வெளியிட்டு ஒருத்தவங்க வாழ்க்கையை கெடுக்குறதுல என்ன தான் சந்தோஷமோ தெரியலை. எப்பவுமே ஒரு பக்க கதையை கேட்டு பொங்குற நம்ம மக்களுக்கு. அந்த டெலிவரி செய்ய வந்தவர் பக்க கதையை கேட்டோன தான் முழு உண்மையும் புரியுது. குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? அழகாக ‌‌selfie- க்கு குடும்பதுடன் போஸ் கொடுப்பது #அறிவியல் வளர்ச்சி     விலங்குகள் மனிதர்களைப் போன்று சிந்திக்குமா? விலங்குகளும் சிந்திக்கின்றன ஆனால் மனிதனைவிட அதிகமான சிந்தனையிருக்குமானால் என்றோ உயிரியியலில் மனிதர்களுக்கு மேற்படியில் இருந்திருக்கும். ஆனால் எல்லாவிலங்குகளும் சிந்திக்கின்றனவா என்பது சந்தேகம்தான். தன்னுடன் வந்தவர்கள் பொறியில் மாட்டிக்கொண்டாலும், உணவே முக்கியமென அடிப்படை தேடலிலுள்ள எலிகள், இதில் 99% மனமே இல்லையென லாம். காகங்களுக்கு சிலகாலம் உணவினை தொடர்ந்து அளிக்கும்போது இவனை கண்டால் அதன் கரைதலில் வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றேன், மேலும் கீழே U வடிவ குழாயிலிருந்து உணவினை எடுத்து உண்ணும்போது, காகமானது முந்தைய செயலினால் விளைந்த வினையின் விடையை நினைவில்கொண்டு இது சரியா, இது தவறா என சிந்திக்கும்போது      உண்மையில் விலங்குகள் மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கும்? தாங்களும் வாழாமல், அவனுக்குச் செல்லப்பிராணிகளாகிய படைக்கப்பட்ட எங்களையும் கொடுமைப்படுத்திச் சாகடிக்கிறான். இவனுக்கு எதுக்கு ஆறறிவு என்று தான் திட்டும். மனிதர்களை போலவே பறவைகளும் விலங்குகளும் தங்களுக்கு என்று ஒரு பாசைகளை வைத்து பேசிக்கொள்ளுமா? எ.கா: குரங்குகள் பேசிக்கொள்வதை பார்த்துள்ளேன். ஒரு ஆங்கில மேற்கோள். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். தங்களது தேவைக்கேற்ப சங்கேத ஒலிகளை எழுப்பும் திறமை எல்லா பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் உண்டு. அவர்களை கூர்ந்து கவனித்தால் வித்தியாசங்களை உணரலாம், ஆனால் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆபத்தை உடனடியாக பறவைகள் உணர்ந்து, தெரிவித்து தங்களை காத்துக் கொள்ள பறந்து விடுவர். புலிகள் எதிரிகளைக்கண்டு உறுமுவதற்கும் தன் துணையை அழைப்பதற்கும் வேறுபாடு இருக்கும். தங்களது பலவிதமான தேவைகளை அவர்கள் தங்கள் குரல் மூலமே பூர்த்தி செய்து கொள்கின்றனர். எழுத்தில்லா மொழிகள்! மனிதன் தன் பிள்ளைகளை நேசிக்கும் அளவிற்க்கு எந்த விலங்கு (அ) பறவை அதன் குட்டிகளை நேசிக்கிறது? முதலில் பதிலளிக்கப்பட்டது: மனிதன் தன் பிள்ளைகளை நேசிக்கும் அளவிற்க்கு எந்த விலங்கு(அ) பறவை அதன் குட்டி களை நேசிக்கிறது? இக்கேள்வி என்ன பதிலை எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகத்தெரியவில்லை.மனிதர்களைப்போல் எப்போதுமே தன் பிள்ளைகளைப்பராமரிப்பதுபற்றியா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நன்கு பராமரித்துவிட்டு பின்பு பிரிந்து சென்றுவிடும் உயிரினங்கள் பற்றியா?   மிருகங்கள் பேசினால் மனிதர்களிடம் என்ன சொல்லும்? ஏனப்பா ,நீங்களெல்லாம் தவறு செய்துவிட்டு எங்கள் பெயரை கொண்டு திட்டுறீங்க ? எங்களை ஏன் அவமானப்படுத்துறீங்க ? என்று கேட்கும். நாயே , எருமை மாடே பன்றி கழுதை குரங்கே என்றெல்லாம் திட்டவைத்து எங்களை தரமிறக்காதீர்கள் என்று கூறும் . இதனை பார்த்தபிறகும் நம்பமுடியுமா ? அல்லது குரங்கே !என்று யாரையேனும் திட்ட முடியுமா ? மிருகங்கள் வாழும் காடுகளில் மனிதர்கள் இடையூறு செய்தால் மிருகங்கள் எங்கே செல்லும்? உங்களை பாராட்டியே தீர வேண்டும். அவைகளுக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை உள்ளது என்பதை மறந்து மனிதன் சுயநலமாக செயல்படுகிறான். ஒரு சுனாமியில் நாம் நிலை குலைந்து போகிறோம் மீன்களுக்கு தினம் தினம் சுனாமி. யார் சிந்திப்பது ? சமீபத்தில் உங்கள் கவனத்தை ஈர்த்த பறவை எது? பள்ளியில் பூத்திருக்கும் கலியாணமுருங்கைகள். மாலை மூணு மணி அளவில் வரும் தேன்சிட்டுகள். கட்டைவிரல்பெரியது. மயிலிறகு நிறம்.பயங்கரசத்தம். சின்ன மூர்த்தி பெரிய கீர்த்தி. கடவுள் நம்பிக்கைக்கும் மத நம்பிக்கைக்கு இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கடவுள் நம்பிக்கைக்கு மதம் வேண்டாம். மத நம்பிக்கைக்குக் கடவுள் கட்டாயம் இல்லை. மனிதர்கள் விலங்குகளை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள்? ஏர் இழுக்கச் செய்து, வண்டி இழுக்கச் செய்து, பொதிசுமக்கச் செய்து, வித்தைகள் காட்டச் செய்து, அவற்றின் குட்டிகளுக்குரிய பாலைக் கறந்து, அவற்றைக் கொன்று புலாலாக்கி உண்டு, எனப் பல வகைகள்! பறவைகள் பற்றிய எந்த சில உண்மைகள் உங்களை பயப்பட வைக்கும்? பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் பயங்கள் ஒரு விதம் அனைத்துமே தனி விதம் 1: கொக்கி குமாரு தெரியுமா உங்களுக்கு, அதாங்க நம்ம கருடன் (பால்ட் ஈகில் bald eagle) அது நினைச்சா நம்ம கைப்புள்ள அதோட நகத்த கொக்கிப் போட்டு மேல இருந்து கீழ வரைக்கும் கொண்டு வர முடியும். அதால நம்மளோட எலும்புகளும் முழிக்க முடியாது ஆனா நாம ரத்தம் சிந்திய செத்துருவோம். அதோட கை நகப்புறி நம்மளோட பிடியை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என அதுக்கு அவ்வளவு பெரிய வளைந்த நகங்கள் இருக்கு. வடகலை, தென்கலை வேறுபாடு என்ன? ஒற்றுமை என்ன? இரண்டு முக்கிய வேறுபாடுகள்: தெய்வம் என்பது லக்ஷ்மீ-நாராயண ஜோடி- வடகலை; தெய்வம்-நாரணன் மட்டுமே, லக்ஷ்மி துணைவி-தென்கலை; தெய்வத்தைச் சரண்புகுவது பக்தன் பொறுப்பு-வடகலை; பக்தனைத் தன் சரணத்தில் விழச் செய்வது தெய்வத்தின் பொறுப்பு-தென்கலை ஒற்றுமை: ஶ்ரீவைணவம் பறவை யாரையும் காயப்படுத்துமா? நான் சிறுவனாக இருந்த போது என்னை இருமுறை அண்டக் காகம் நடு மண்டையில் குத்தி (அ) கொட்டி இருக்கிறது. நல்ல வலி. 5 நிமிடத்தில் சரியாகி விட்டது. மனிதனின் குணங்கள் எத்தனை? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். அன்பு ஆசை இறுக்கம் ஈர்ப்பூ உற்சாகம் ஊக்கம் எளிமை ஏக்கம் ஐயம் ஒழுக்கம் ஓதல் ஔடதம் ஃகணம். நிர்வகிக்க திறனற்றால் நிர்க்குமாம் பூலோகம். என்மீது போடப்பட்டகோடுகளை அழியுங்கள் கதறுகிறது பூமீ மனிதர்களைப்பார்த்து… தவளை தன் வாயால் கெடும் என சொல்வது ஏன் ? தவளை தன் தகவல் தொடர்புகளை சத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. அதிகமாக இனப்பெருக்க காலத்தில் தன் இணையுடன் கூடுவதற்காக ஒருவித சத்தத்தை எழுப்புகிறது. இந்த சத்தத்தை கொண்டு பாம்பு தவளை இருக்கும் இடத்தை எளிதாக கண்டு கொண்டு அதனை வேட்டையாடுகிறது. இதையே முன்னோர்கள் பழ மொழியாக கூறி வைத்தனர் இப்படி வச்சுக்கலாம். பாம்புக்கு காது கிடையாது எனில் 'தவளை எப்படி தன் வாயால் கெடும்" சொல்லுங்க.?பிளீஸ் சராசரி மனிதன் நினைப்பதை விட எந்த விலங்கு ரொம்ப பெரியது? இராமாயண விவரிப்புப்படிக் காண்கையில் கும்பகருணனுக்கு மாட்ட விலங்கு தயாரித்தால் அதுதான் பஎரியதாக இருக்கும் என எண்ணுகிறேன்!  பேராசிரியராக பணியற்றியவர் (1972–தற்போது வரை)1 வருடம்   தொடர்புடையது மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் மனிதனுக்கு கட்டுப்படுவது அன்பினாலா? அப்படியென்றால் அறிவு அந்த உயிரினங்களை உங்களுக்கு கட்டுப்படுத்தாதா? விளக்க முடியுமா? அறிவினால் அவைகள்எவ்வாறு வெவெறு சமயங்களில் நடந்து கொள்கின்றன ஏன்பதி புறிந்துக்கொள்ளமுடியும். ஆன்பினால் அவைகளை தன்வயப்படுத்திகாட்டுப் படுத்த முடியும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.