Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"

தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன்

"நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்"

கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு  அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை  மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான்.

"இப்ப ஏன் கோவப்படுறீயள் "

"நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது "

"உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்"

"அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்"

"உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை "

"இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்"

"ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது"

"சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்"

ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு  புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள்  மீது காட்டினால்.

 

குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள்.

"எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ"

"என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்"

"அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் "

"20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான்  கொண்டு போகலாம்"என்றாள்

உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும்  7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு

சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான்.

"ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம்

"அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்"

"இப்பவே  எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது

"அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே"

"ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்"

" சூவிட் அப்பாவல்லோ"

 

இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்)  கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம்.

"இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா  வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா  ஒன்று இரண்டு வாங்கினீரோ"

"ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு"

"சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க"

"உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா"

"சும்மா கேட்டனான் அடிஆத்த"

விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான்.

 

கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... .

 

பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும்

எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை  காட்டினார்கள்.

 

வெளியே அவனது சகோதரி  தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள்.

"மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்"

நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்"

"மாமி ,மாமா சொன்னது கேட்டதே"

"ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்"

"டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ"

"இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ"

"முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை"

"மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா"

என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில்.

சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்..

"மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே"

"ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்'

"அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்"

" அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ"

"இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே"

 

" ம்ம்ம்ம் ..."

அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி.

மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை

எல்லோருக்கும் ‍‍ஹாய் ‍ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர்.

வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர்.

முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள்

 

 சுரேசுக்கு  கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது.

"உங்களுக்கு  முல்லை தீவில்  யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ"

"இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்"

"இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன"

"ஒம் ஓம்  ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்"

 

அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு

வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார்.

"டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே"

"ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்"

அவ‌னுக்கு ஒரு நிமிடம்  கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது

 

தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்...😀

இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்😁

 

 

 

 

 

 

.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ புத்தன் கலா டீச்சர் உப்ப எப்படி இருக்கிறா 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்😁

 

கலாவோடு கதைத்த பின் தான் தெரியும்.

13 hours ago, putthan said:

அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

இங்கேயும் உதே நிலமை தான்.
மேடின் அமெரிக்கா என்ற சாமானோ உடுப்போ வாங்குவதென்றால் முத்துக் குளிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனை எண்டால் நாங்கள் நம்பிவிடுவமாக்கும் புத்தன் ???😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாவும் கற்பனை எண்டால் நாங்கள் நம்பிவிடுவமாக்கும் புத்தன் ???😀

இல்லை........ புத்தன் தன்ரை பக்கத்து வீட்டு பெடியன்ரை கதையை சொல்லுறாரெண்டு நான் நினைக்கிறன்..😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மேடின் அமெரிக்கா என்ற சாமானோ உடுப்போ வாங்குவதென்றால் முத்துக் குளிக்க வேண்டும்.

ஜேர்மனியிலை இருக்கிற  என்ரை கூட்டு நமசிவாயம்......தான் சிலோனுக்கு கனகாலத்துக்குக்கு போறன் எண்டு சொல்லிப்போட்டு  இஞ்சை உள்ள மலிவு கடையளிலை 2,3,4,5 ஈரோக்களுக்கு ரீ சேட்டு களிசான் எல்லாம் கிலோக்கணக்கிலை வாங்கி கட்டிக்கொண்டு போனாராம்......அங்கை கொண்டுபோய் பந்தா காட்டி விளாச வெளிக்கிடத்தான் தெரிஞ்சுதாம்....எல்லாம் மேட் இன் சிறிலங்கா எண்டு.....

எனவே புலம் பெயர்ந்த மக்காள் அவதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் மேட் இன் சிறிலங்கா எண்டு.....

இங்கு சகல உடுப்புகளும் ஆசியா அல்லது தென் அமெரிக்க நாடுகளில்  தைத்தவையே.

அதனால தான் நாங்களும் வாங்கி போடக் கூடிய மாதிரி உள்ளது.
இல்லையெண்டால் வேட்டி சால்வையோடு தான் திரியோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்...சுரேஸ்..!

சிட்னியில இருந்தும்...வெறும் சிறி  லங்கன் வாழ்க்கை தான் வாழுறான் போல கிடக்குது!

வாற நேரம் ஒரு ஈஸி செயார் ஒண்டயும்...வாங்கிக் கொண்டு வரச்சொல்லி...அவனிட்டைச் சொல்லி விடுங்கோ...புத்தன்!

கதை தொடரட்டும்....!

Link to comment
Share on other sites

கலாவுடனான சந்திப்பை எதிர்பார்த்து நாமும் ஆவலாயுள்ளோம். தொடருங்கள் புத்தன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேசின் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது. கலாவைச் சந்தித்தபின் மனசியிடம் அடி வாங்காமல் பார்த்தக் கொள்ளவும்..தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் கலா காதல் கதையை தெரியாட்டி தலை வெடிச்சிடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மல்லிகை வாசம் said:

கலாவுடனான சந்திப்பை எதிர்பார்த்து நாமும் ஆவலாயுள்ளோம். தொடருங்கள் புத்தன். 🙂

தொடராது......கலாவுக்கு சீலை குடுக்குறதோடை கதை முடியும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 6:23 AM, ரதி said:

எழுதுங்கோ புத்தன் கலா டீச்சர் உப்ப எப்படி இருக்கிறா 😎

அமைதி அமைதி ,வருவா  சுரேஸின் யாழ் அழகி

On 4/1/2019 at 8:39 AM, ஈழப்பிரியன் said:

 

இங்கேயும் உதே நிலமை தான்.
மேடின் அமெரிக்கா என்ற சாமானோ உடுப்போ வாங்குவதென்றால் முத்துக் குளிக்க வேண்டும்.

உலகம் பூராவும் உந்த நிலைதான் ..போல கிட‌க்கு.....

On 4/1/2019 at 8:49 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாவும் கற்பனை எண்டால் நாங்கள் நம்பிவிடுவமாக்கும் புத்தன் ???😀

நம்ப வேணும்  சுரேஸை என்க்கு நல்லா தெரியும்

On 4/1/2019 at 9:03 AM, குமாரசாமி said:

இல்லை........ புத்தன் தன்ரை பக்கத்து வீட்டு பெடியன்ரை கதையை சொல்லுறாரெண்டு நான் நினைக்கிறன்..😃

உங்களுக்கு தான் விசயம் விளங்கியிருக்கு...

On 4/1/2019 at 1:46 PM, புங்கையூரன் said:

பாவம்...சுரேஸ்..!

சிட்னியில இருந்தும்...வெறும் சிறி  லங்கன் வாழ்க்கை தான் வாழுறான் போல கிடக்குது!

வாற நேரம் ஒரு ஈஸி செயார் ஒண்டயும்...வாங்கிக் கொண்டு வரச்சொல்லி...அவனிட்டைச் சொல்லி விடுங்கோ...புத்தன்!

கதை தொடரட்டும்....!

அடுத்த முறை போயிட்டு வரும் பொழுது வாங்கி கொண்டு வந்து கொடுத்தால் போச்சு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மல்லிகை வாசம் said:

கலாவுடனான சந்திப்பை எதிர்பார்த்து நாமும் ஆவலாயுள்ளோம். தொடருங்கள் புத்தன். 🙂

சந்திப்போம் ...ச‌ந்திப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் போடுங்கோ முதல்ல புத்தன்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavallur Kanmani said:

சுரேசின் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது. கலாவைச் சந்தித்தபின் மனசியிடம் அடி வாங்காமல் பார்த்தக் கொள்ளவும்..தொடருங்கள்

மனிசி டிவோர்ஸ் பண்ணாமல் இருந்தாலே பெரிய காரியம்

19 hours ago, ஏராளன் said:

சுரேஸ் கலா காதல் கதையை தெரியாட்டி தலை வெடிச்சிடுமே!

தெரிஞ்ச‌ பிறகு திட்டக்கூடாது

3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையைப் போடுங்கோ முதல்ல புத்தன்😄

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்
நானும் இந்த கதையை தொடர்ந்து  படித்துக்கொண்டு வருகிறேன் .முதல் பாகமும் படித்தேன். கலாவை சந்திக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றி விடவேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாவுக்கு எப்பவோ ஒர் நாள் றூட் போட்ட டையரி மனிசிட்ட இன்னும் சிக்கவில்லை போல  சாறி கொடுக்க சொறி(sorry) என்றவளா? அல்லது வாங்கினாளா கலா என்கிற நிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ஹ்ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

Link to comment
Share on other sites

கலாவைத் தேடிச் சென்ற சுரேஷிற்கு என்னவாயிற்று என்று ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை புத்தனையும் கானவில்லை கலாவையும் கானவில்லை.எனக்கு கையும் ஓடுதில்லை காலும் ஓடுதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே"

அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள்.

"அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே "

"அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என்னோட படிச்சவா"

"உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று சொல்ல வாறீயள் அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"

"கி கி எனக்கு  ஐம்பத்தெழு அவவுக்கும் அந்த வயசு தான் இருக்கும்"

"அப்ப அவ ரிட்டையர் ப‌ண்ணிபோட்டு நேர்ஸிங்கோமில் தான் இருப்பார்  வெளிநாட்டுக்காரர் போல மினிக்கிக்கொண்டு திரியமாட்டினம்"

சிரித்தபடியே கூறினாள்.எல்லோரும் அவளது கிண்டலையும் கேலியையும் ர‌சித்தனர்

. அங்கு படிப்பிக்கும் யாழ்ப்பாணத்தார் எல்லாம் ஐம்பது வயசுக்குள் தான் இருப்பினம் அவர்களிடம் கேட்டு பார்க்கலாம் ,கலாவின் முழுப்பெயர் என்ன என்று தெரியுமோ என‌ கேட்டாள்

"கலாதேவி ..அப்பாவின் பெயர் விஸ்வலிங்கம்,அம்மாவின்  பெயர் பூபதி இருவரும் டீச்சர்மாரக இருந்தவை பிறகு விஸ்வலிங்கம் அதிபராக இருந்தவர் ....புருசனின்ட பெயர் தெரியவில்லை"

"நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு  யாழ்ப்பாணத்தாரிட்ட கேட்டு பார்ப்போம்"

மாலை பாடசாலையால்  திரும்பிவந்தவள் சொன்னாள் அங்கு கலாவை தெரிந்தவர்கள்

 

 

 

ஒருத்தரும் இல்லை என்று.

 

வற்றாப்பளை அம்மன் கோவில் ,ஊற்றங்கரை பிள்ளையார் கோவில் என்று எங்கு போனாலும் அவன் கலாவை தேடாமல் இல்லை..

நாலு நாட்கள் முல்லை மண்னை தரிசனம் செய்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி கலாவின் நினைவுகளுடன் பயணமானான்.சகல வாகனங்களும் பூனகரி பாலத்தினூடாகவே செல்கின்றன‌,  .ஆனையிறவு பாதையை தவிர்க்கின்றனர் பல காரணங்களை சொல்லுகின்றனர்.

பூனகரியோ,கிளாலியோ ஆனையிறவோ எதுவும் மனதில் நிற்கவில்லை கலாவின் நினைவை தவிர....

பருவங்களின் கோளாறுகளை நினைத்தபடி மனைவியை திரும்பி பார்த்தான் அவளும் இயற்கையை ரசித்தபடியிருந்தாள் .

"என்னப்பா எதாவது பழைய ஞாபகங்களை இரைமீட்கின்றீரோ"

"உங்களை மாதிரி கற்பனையில நான் இருக்க முடியோ எங்களுக்கு எவ்வளவு வேலை கிடக்கு ஊருக்கு போய் அடுத்து என்ன செய்ய வேணும் என்று யோசிக்கிறேன்"

"உதுக்கு போய் தலையை உடைக்கிறீர் நான் ஏற்கனவே பிளான் போட்டிட்டேன்"

"டவுனுக்கு 12 மணிக்கு போய்விடுவோம் அவையளின்ட வீட்டை சமான்களை வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கன்ட ஊர் கோவிலுக்கு போவம்,அப்படியே இரண்டு மூன்று என்ட் பெடியள் இருக்கிறாங்கள் பார்த்து போட்டு வருவம்"

"கோவிலுக்கு போனால் வீட்டை திரும்பி வரவேணும் யாரின்ட வீட்டையும்போககூடாது'

"வெளிக்கிட்ட இடங்களில்  உதுகள் ஒன்றையும் பார்க்க ஏலாது'

தொடர்ந்து பேச்சைகொடுக்காமல் இருந்து விட்டாள் வீடு போய்ச் சேரும்வரை.

சுரேஸ் நினைத்தபடி 12 ம‌ணிக்கு முதலே உறவினர் வீட்டை வந்து சேர்ந்தனர் .ஒரு மணிக்கு கோவில் பூட்டி போடுவார்கள் பிறகு ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள் என உறவினர் சொன்னதும் சுரேஸ் தனது திட்டம் பிழைத்து விட்டதே என கவலைப் பட்டான்.

 

அடுத்த நாள் கோவிலுக்கு போனார்கள் அங்கும் கலா வருவாளா என

ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான். கோவில் தரிசனம் முடித்து விட்டு கலா வாழ்ந்த பழைய வீட்டுக்கு  நேராக சென்றான் .அவனை யாழ்நக‌ரின் காவல் தெய்வங்கள்  ஆரவாரம் பண்ணி வரவேற்றன.

"அவளை போய் பார்க்கிற சுதியில உந்த நாய்களின்ட கடிவாங்கி போடாதையுங்கோ"

"நாயின்ட கடியை விட உம்மட கத்தல் தான் பயமா இருக்கு"

என்று சொல்லிய படி ,திறந்திருந்த படலையை  மூடிய பின்பு வீட்டுக்காரார் என குரல் கொடுத்தான் .

ஒம் வாரன் யாரது என்று கேட்டபடியே வீட்டுக்கார அம்மா வந்தார்.

"அதிபர் விஸ்வலிங்கத்தின்ட வீடு இது தானே"

" இல்லை தம்பி அவையளிட்ட இந்த வீட்டை நாங்கள் வாங்கி போட்டோம்"

" அவையள் இப்ப எங்க இருக்கினம் என்று தெரியுமோ அம்மா"

" ஐந்தாறு வீடு தள்ளித்தான் இருக்கினம்"

" சரியா விலாசத்தை சொல்லுங்கோ வீட்டு நம்பர் என்ன என்று சொல்ல முடியுமோ"

"இங்க அங்க‌த்தைய மாதிரி நம்பர்கள் இல்லை , ஐந்தாவது வீடு ,கலா பவனம் என்று போர்ட் போட்டிருக்கு..."

ஊர்சனம் எப்படித்தான் வெளிநாட்டுக்காரரை    கண்டு பிடிக்குதுகளோ தெரியவில்லை என நினைத்த படி மனைவியிடம்  ஒடிப்போய்  சொன்னான்

"இஞ்சாரும் இவள் கலா ஐந்தாவது வீடு தள்ளித்தான் இருக்கிறாளாம்,ஒருக்கா டக்கெண்டு பார்த்திட்டு போவம் வாரும்"

அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ,தம்பி வானை எடும், ஐந்தாவது வீட்டடியில்  நிற்பாட்டும்"

"நீர் வானுக்குள் இருக்கப்போறீரோ ,அல்லது உள்ள வாறீரோ"

 

"நானும் வாரன் ,என்ன வெறும் கையோடய போரது"

"ஒரு சீலையை கொண்டு வந்திருக்கலாம்"

" என்னது சீலையையோ....நான் பார்த்து பார்த்து வாங்கி வைக்க நீங்கள் உங்கன்ட பழசுக்கு .....வாயில வருது"

அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் வாய் தடுமாறி மனதில் இருந்த எண்ணத்தை உளறினதை..

. "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்"

கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது....

கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

 

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "

"எந்த சுரேஸ்'" என யோசிக்க தொடங்கினாள்

"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ்."

"கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்"

கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது....

கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

 

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "

"எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ்

"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்"

"நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ"

"இவா என்ட வைவ்"

இருவரும் ‍ஹலோ சொல்லி கொண்டனர்

"என்ட அம்மா போன வருடம் தவறிப்போயிட்டா"

"சோறி டு கெயர்"

 

 உங்களை கண்ட ஞாபகமா இருக்கு ஆனால் முகம் நினைப்பில வருதில்லை உங்களுடன் படிச்ச வேறு போய்ஸின்ட பெயர் சொல்லுங்கோ...

"குகன் ,விமல்,ராஜ்,...சுதாவை தெரியும் தானே"

"ஓமோம் அவள் லண்டனிலிருப்பதா கேள்விப்பட்டேன்"

"போனவ‌ருடம் சுதா அவுஸ்ரேலியா வந்தவர் நானும் குகனும் மீட் பண்ணினனாங்கள்

"விமல் லோட அதிகம் நீங்கள் தானே சைக்கிளில் வாரனீங்கள் விமல் இப்ப என்ன செய்கின்றார்"

 

" ஓமோம் நான் தான்'

"இப்ப ஞாபகம் வருகின்றது"

"விமல் எங்க இருக்கின்றார்"

"நாங்கள் 72 கிளப் என்று வட்சப் வைச்சிருக்கிறோம் அதில் நீங்கள் ஜொன்ட் பண்ணுங்கோவன்"

"விமலும் அந்த வட்சப் குறூப்பில் இருக்கின்றாரோ"

" ஒமோம் கனடாவில் இருக்கின்றான்"

"அதென்ன 72 கிளப்"

"72 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படிக்கதொடங்கினோம் அது தான்"

"விமலுடன் கதைத்தால் நான் விசாரித்ததாக சொல்லுங்கோ"

 

"வட்சப்பில் ஜொன்ட் பண்ணினால் எல்லோருடனும் நீங்களும் கதைக்கலாம்

"‍ஹஸ்பனிட்டதான் நல்ல போன் இருக்கு அவர் வந்த பிறகு கேட்டு சொல்லுறேன்...

தேனீரும் சிற்றூண்டியும் அருந்திவிட்டு  விடைபெற்றனர்.

அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்

"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"

"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

 கலாவின் பக்கத்துவீட்டு ரேடியோவிலிருந்து 

"

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்காரியின் நக்கலிலையே மிச்ச வாழ்க்கை போகபோது சுரேசிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதவை தட்டி ஹலோ டீச்சர் நான்தான் சுரேஷ் ஞாபகம் இருக்கா என்று கேட்பதற்கு ஆன செலவு 5000 டொலர்.....!  👍

நல்ல சுவாரஸ்யமான கதை புத்ஸ்.....!   😁 

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "

"எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ்

"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்"

"நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ"

இந்த இடத்தில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... 😃😀🤣 ஒருகாலத்தில் கதாநாயகன் ஜோடியாக நடித்த நடிகைகள் எல்லாம் பின்னாளில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமை இதனால் தானோ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.