• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

வழியால் ஒரு பறவை.. விரிக்கும் அதன் சிறகை..!

Recommended Posts

Picture1.jpg

பிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரத்தின் சன்டோஸ் டுமொன்ட் விமான நிலையத்திற்கு வடிவமைக்கபட்ட விமான தரவிறக்க வழி முறையானது(Landing approach) மிகுந்த ஆபத்தானதும், விமானிகளுக்கு மிகுந்த சவால் நிறைந்ததுமாகும்.

அதே நேரத்தில் விமானம் மலைக்குன்றுகளருகே வட்டமடித்து கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் மீது இறங்கி ஓடுபாதையை அணுகும் முறை கண்கொள்ளா காட்சியாகும்.

ரசிப்பீர்கள்தானே:innocent:

 

சில காணொளிகள்..

 

 

 

 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இருந்தாலும் இப்போது இருக்கும் தேர்தல் நடைமுறையினால் 2 / 3 பெற்றுக்கொள்ளுவது மிகவும் கடினம்। சிங்களவர்கள் பெருவாரியாக வாக்களித்தாலும் இது முடியாது। எனவே அரசும் எதிர்க்கட்சியும் சேர்ந்து முதலில் தேர்தல் சடடத்தை மாற்ற வேண்டும்। அப்படி செய்தால் மலையக தமிழ் கட்சிகளையும், முஸ்லீம் கட்சிகளையும் அது பாதிக்கும்। இனப்பிரச்சினையை  பொறுத்தவரையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து தீர்க்கும்போதுதான் அது நிலையான தீர்வாகவும் , முழுமையான தீர்வாகவும் அமையும்। இல்லாவிட்டால் அரசிய இலாபத்துக்காக அதை பயன்படுத்துவார்கள்। 
    • நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது। யாரிடம் பிரதேசவாதம் ஊறியிருக்கிறது என்று இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்। நீங்கள் சொல்லுகிற மக்கள் வன்னி தமிழர்களையோ, கிழக்கு தமிழர்களையோ தமிழர்களாக நினைப்பதில்லை। யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு  மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்। கடந்தகாலங்களில் எப்படியும் யாழ்ப்பாண அதிகாரிகளே வன்னி , கிழக்கில் முதன்மை உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்। வன்னி கிழக்கு பிரதேசத்தவர்கள் அப்படியான பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பியதே இல்லை।  உங்களுக்கு உதாரணத்துக்கு சிலவற்றை சொல்லுகிறேன்। மட்டுவில் அரச அதிபராக திரு மோனகுருசாமி அவர்கள் இருந்தார்கள்। அவர் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்க இருந்ததால் சிலருக்கு அதில் விருப்பமிருக்கவில்லை। எனவே புலிகள் மூலமாக காய் நகர்த்தினார்கள்। இறுதியாக அவர் காயப்பட்டு செயட்பட முடியாமல் போனது। இவர் எனது ஆசிரியராகவும் இருந்தார்। பின்னர் SLAS பரீட்ச்சை மூலமாக நிர்வாக  சேவைக்குள் உள்ளேற்கப்படடார்।  வேறு சில காரணங்களை கூறினாலும் அவர் மடடக்களப்பை சேர்ந்தவர் என்பதுதான் முக்கிய காரணம்। அடுத்தது வவுனியாவில் அந்த நாட்களில் ஒரு சங்கம் இருந்தது। அதுதான் யாளகற்றி சங்கம்। யாழ்பாணத்தவரை அங்கிருந்து அகற்றுவது। இவர்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள மக்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது। இருந்தாலும் அது சரியோ பிழையோ என்று சொல்லமாடடேன் , நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்। அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல் போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள் । இவர்மீது பிழையான குற்றச்சாட்டுக்களை வைத்து மரணதண்டனை நிறைவேற்ற புலிகளை கங்காரு நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட்து। அந்த நீதிமன்றில் ஐந்து பேர் இருப்பார்கள்। அவரர்களுக்கு தலைமை நீதிபதியாக அப்போது சலீம் (இயக்க பெயர்)என்னும் புலிதான் இருந்தார்। அங்கு இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்ததாம் ஐந்தாவது இருப்பவரின் கைகளில்தான் முடிவு இருந்தது,  இப்போது இவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை ) அதட்கு எதிராக வாக்களித்துவிடடார்। அவர் அரச அதிபருக்கு தெரிந்தவரும்  , அறிந்தவருமாக இருந்தபடியால்  அதட்கு சம்மதிக்கவில்லை ।  இல்லாவிடடால்  மண்டையில்  போட்டிருப்பார்கள் । இத்துடன்  விடவில்லை। அவரது சாரதிக்கு  பணம்  கொடுத்து  புலிகள்மூலமாக  குண்டுகளை  அவரது வாகனத்தில்  கொழும்புக்கு  அனுப்பி  சதி செய்தார்கள் । இருந்தாலும் இறைவன்  தன்னை  காப்பாற்றியதாக  கூறினார்  । அவர் இரண்டு மாதம்  போலீஸ்   காவலில்  இருக்க  நேரிட்ட்து । அதன்  பின்னர் இது   வரைக்கும்  யாழ்ப்பாணத்தவரே  அந்த கதிரையில்  அமர்ந்திருக்கிறார்கள் । மன்னாரில்  எத்தனையோ  தகுதியானவர்கள்  இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம்  கொடுக்கப்படவில்லை ।இப்போது இவர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆலோசகராக கடமை புரிகிறார்।  இதைப்போல இன்னும் எத்தனையோ எழுதலாம்। இனியாவது யார் பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்। இங்கு நான் பெயர்கள் குறிப்பிடடதான் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதட்கே।  மத்தபடி சம்பந்தனோ, சுமந்திரனோ, விக்கியோ  எவர் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்।   நான் பிரதேசவாதம் பேசவில்லை।இருந்தாலும் நீங்கள் சுயநலவாதிகளாக இருக்கும்போது நாங்கள் பிரதேசவாதம் பேசுவதில் தவறில்லை।    
    • நீதியரசர் விக்கி ஐயாவுடன் இணையலாமே? இல்லாவிட்டால் கஜேந்திரன் ஐயாவுடன் இணையலாம்।
    • அப்படி எல்லாம் ஒன்றுமில்லை। ஒரு பெண் தான்தான் அவரை கொலை செய்ததாகவும் அதட்கான காரணத்தையும் கூறி உள்ளார்। என்னத்தை சொல்ல।