Sign in to follow this  
கிருபன்

‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா?

Recommended Posts

‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா?

எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 12:14 Comments - 0

‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது.   
1971இல் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கத்தை கையிலெடுத்து, அமோக வெற்றியைப் பெற்றார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நின்ற இந்திரா காந்தி. பிறகு ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்கத் தொடங்கியது.   
பாரதிய ஜனதாக் கட்சி போன்ற வலுவான தேசியக் கட்சி ஒன்று, அப்போது களத்தில் இல்லாத சூழல், மாநிலக் கட்சிகள் ஆங்காங்கே தலைதூக்கி, வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த நேரம். ஆனாலும், இந்திரா காந்தியின் ‘கரிப் கட்டோ’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம், இந்தியத் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை, இப்போதுள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.  

நாடு, சுற்றுப்புறச் சூழல் சவால்களைச் சந்தித்துள்ளது. பூமி வெப்பமயமாகும் பிரச்சினைகள், உலக அளவில் வெகு தீவிரமாகப் பேசப்படுகிறது. ‘ரபேல் ஊழல்’ என்று, ஒருபுறம் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது. வேலைவாய்ப்பு இல்லை என்றும், 45 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற வேலைவாய்ப்பின்மை, இப்போது நாட்டில் தலையெடுத்து விட்டது என்றும் எதிர்க்கட்சிகள் ஆய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி, காட்டமான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.   

ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளி நிற்கும் வகையில், ராகுல் காந்தி அறிவித்துள்ள ‘வறுமை ஒழிப்புத் திட்டம்’, இப்போது முன்னணியில் நிற்கிறது. இப்படியொரு, ‘சிக்சர்’ அடிப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது, பிரதமர் நரேந்திர மோடியின், ‘விவசாயிகளுக்கு வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் பணம் வழங்கும் திட்டம்’ ஆகும்.   

தனது அரசாங்கத்தின், கடைசி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ‘நாருடன் சேர்ந்த மலரும் மணம் வீசும்’ என்பது போன்ற சூழ்நிலையை, பா.ஜ.கவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பிரதமரும், பா.ஜ.க தலைவர்களும் தங்களது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக, விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய்த் திட்டத்தை முன் வைத்தார்கள். இதன் பிறகு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் என்பவை பா.ஜ.கவின் தேர்தல்க் களத்துக்கு உதவிடும் யுக்தியாக அமைந்தாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு, வேலை வாய்ப்பில் பத்து சதவீத இட ஒதுக்கீடு என்று, அறிவிப்புகளைக் காங்கிரஸ் கட்சி விடுத்தது.   

பா.ஜ.கவின் இந்த அறிவிப்புத் தாக்குதலை, சற்றும் எதிர்பாராத ராகுல் காந்தி, அதை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும், பா.ஜ.கவுக்கே அதன் பலன் போய்ச் சேரும் என்ற நிலை ஏற்பட்டது.  

இந்நிலையில்தான் காங்கிரஸ் சற்று விழித்துக் கொண்டது. ஏதாவது ஒரு முழக்கத்தின் மூலம், பா.ஜ.க பெற்ற வாங்கு வங்கிப் பலனைத் திசைதிருப்ப வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து, விடப்பட்ட ஏவுகணைதான், இந்த ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளுக்கு, வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய்” என்ற திட்டம்.   

ஆகவே, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ‘மீண்டும் இந்திரா காந்தியின் முழக்கம்’ என்றே, இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 48 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திரா காந்தி நாட்டுக்குக் கொடுத்த ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம், இன்றைக்கு அவரது பேரன் ராகுல் காந்திக்கு, கை கொடுத்திருக்கிறது.   

இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில், பா.ஜ.க தலைவர்களும் ஏன் பிரதமருமே, முன்னோக்கி வைத்த காலை, ஓரடி பின் எடுத்து வைத்து நிற்க வேண்டிய, அபாயச் சங்குச் சத்தத்தை எழுப்பி விட்டது. “அதெல்லாம், இத்திட்டம் சாத்தியமில்லை” என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி சொன்னாலும், ராகுல் காந்தியின் தேர்தல் வியூகத்தை, ‘சாயம் வெளுக்க’ வைக்க வேண்டும் என்று, அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்கள். கண்ணுக்குத் தெரிந்தவரை, உடனடியாக எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.   

திடீரென்று, மார்ச் 27ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே பரபரப்பு. பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போகிறார் என்பதுதான் அந்தப் பரபரப்பு. இதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் திகதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அறிவிக்கப்பட்டதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. 

ஆகவே, இந்தமுறை என்ன அறிவிப்பு செய்யப் போகிறார் என்று, நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், “குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்த செயற்கைக்கோளை, ஏவுகணை மூலம் துல்லியமாகத் தாக்கி, வெற்றி கண்டுள்ளோம். இதற்கு முன்னர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டும்தான்’ என்றார் பிரதமர்.   

இந்த அறிவிப்பு, பாதுகாப்பு விடயத்தில் பா.ஜ.க எவ்வளவு அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்தாக்குதல்களை எதிர்க்கட்சிகள் தொடங்கி விட்டன. “இந்தியாவுக்கு இந்தத் தகுதி, முன்பே இருக்கிறது. பிரதமர் சொல்வது ஒன்றும் புதிதல்ல” என்று சில செய்திகள் வௌிவந்தன.  

“இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்ததே, பிரதமராக இருந்த மன்மோகன்சிங்தான். காங்கிரஸ் திட்டத்துக்கு மோடி சொந்தம் கொண்டாடுவதா” என்ற கேள்விகள் எழுந்தன.   

இப்படி சமூக வலைத்தளங்களில் நையாண்டிச் செய்திகளும் நீச்சல் அடிக்கத் தொடங்கின. ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், ஒரு சில நாள்கள், ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்புத் திட்ட அறிவிப்பைத் திசை திருப்பியிருக்கிறது என்றே திருப்தி அடைந்ததாகக் கருத முடிகிறது. உத்தர பிரதேச பிரசாரத்தில் கூட, “நாட்டின் பாதுகாப்புக்கு நான் காவலாளி” என்ற ரீதியில் பிரதமர் உரையாற்றி இருக்கிறரார்.  

அதேநேரத்தில், இந்த 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல், வித்தியாசமான திருவிழாக் காட்சிகளைக் காண்கிறது. மாநிலங்களில் உள்ள கட்சிகள் கூட, ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்புத் திட்டத்தை வரவேற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்று, “ஜூன் மூன்றாம் திகதிக்குப் பிறகு, இந்தியாவில் அமையும் ஆட்சியில், ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள்” என்ற நிலை உருவாகும் என்று, தேர்தல் பிரசாரத்திலேயே அறிவித்துள்ளார்.   

இதற்குப் போட்டியாக, ஏற்கெனவே அ.தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு, மாதம் 1,500 ரூபாய் கொடுக்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படும் என்று அறிவித்து, அதற்கு ‘அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது.   

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகு, 48 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்தலில் பயன்படுத்திய, ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் பயன்படுத்தப்படுவது வருத்தமான ஒன்று என்றாலும், இதில் இன்னொரு ‘கவர்ச்சித் திட்டம்’ இருக்கிறது.  

கடந்த ஐந்தாண்டு கால, பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் அவ்வளவு தூரம் ஏழைகள் உருவாகி விட்டார்கள் என்றதொரு தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. பிரதமர் மோடியை ‘கோர்ப்பரேட் ஆட்சி’ நடத்தியவர் என்று, இதுவரை குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முழக்கத்தின் மூலம், ‘கோர்ப்பரேட் ஆட்சி’யால் இன்றைக்கு சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்று, நாட்டு மக்கள் மத்தியில், தேர்தல் செய்தியொன்றைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டது.   

இதை முறியடிக்கும் வல்லமை, பா.ஜ.க தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள், “நாட்டின் பாதுகாப்புக்கு நாங்கள் தான் சாதனைகள் புரிந்தோம். எங்கள் கையில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது” என்ற முழக்கத்தை மட்டும்தான் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதனால், களத்தில் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் பின்னுக்குப் போய்விட்டதாக உணர முடியவில்லை.  

அதேசமயத்தில் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸின் இந்த முழக்கத்தைத் தூள் தூளாக்கும் பேச்சுத் திறமை இருக்கிறதா என்று கேட்டால், அது, 2014இல் இருந்த பிரதமர் வேட்பாளராக இருந்த மோடிக்கு இருந்தது. ஆனால், 2019இல் பிரதமராக இருக்கும் மோடிக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.   

ஏனென்றால், அந்த அளவுக்கு மோடியின் நன்மதிப்பைக் காயப்படுத்துவதில், காங்கிரஸ் கட்சி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்ற மாநில அரசியல் தலைவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். 

இந்த வெற்றி, தேர்தல் வெற்றியாக மாறுமேயானால், பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்பது கேள்விக் குறியாகிவிடும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் குறைத்து மதிப்பிட்டு விடவும் முடியாது.   

கடைசி ஆயுதமாக, எதைக் கையில் வைத்திருக்கிறார்கள்? அந்த ஆயுதத்தை, எப்போது பிரயோகித்து, தேர்தல்க் களத்தைத் தங்களது வெற்றிக் களமாக மாற்றப் போகிறார்கள் என்பதை, இன்னும் சில வாரங்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திராவின்-முழக்கம்-தேர்தல்-களத்தைத்-திசை-திருப்புமா/91-231547

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கூட்டமைப்பே இந்தியாவின் கைப்பொம்மையாக உள்ளது இதற்குள் இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது எப்படி நடக்கும்? 😀 நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், கூட்டமைப்பு சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொண்டால் இந்தியா தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச முன்வரலாம் என்று. சீனாவும் எம்மை அழித்த நாடு தான்.
  • அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் ,  இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் / அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் , இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் / உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் /  சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி /  இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா 
  • உங்களுக்கெல்லாம் ரெம்ப வயதாகி விட்டது என்று நினைக்கிறன். விசில் சத்தமும் கூச்சலும் இல்லாமல் பார்க்கிற படம் உப்பில்லாத கஞ்சி மாதிரி. (திரையை கிழிப்பதெல்லாம் ஓவர்தான்). வரிசையில் நீந்தி நெளிஞ்சு போய் டிக்கட் எடுத்து கிழிஞ்ச சேர்ட்டுடன் கலரிக்குள் போய் நின்று கொண்டு பஸ்ட் கிளாஸையும், பால்கனியையும் ஒரு பூச்சியை பார்ப்பதுபோல் பார்த்து விட்டு திரும்பும் கம்பீரம்......எல்லாம் இங்கே கிடைப்பதில்லை என்பது எனக்கு மனவருத்தம்தான்......!   😥
  • எங்கள் கைகளில் எதுவுமிருந்தால்தான் இந்தியாவைக்கண்டு பயப்படுவினம்  பயப்படவேண்டும் அவர்களிடமிருந்து நாம் எதுவுமே பெற்றதுமில்லை இனிமேல் பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை . எம்மை இன்னமும் அழிவுக்குக்த்தான் கைகோர்த்து அழைத்துச்செல்வார்கள் அது இன்னுமொரு முள்ளிவாய்க்காலைவிட மிகவும் மோசமாக இருக்கும்.  சுமந்திரன் சம்பந்தன் தாங்கிப்பிடித்த மைத்திரி கூட்டம்தான் இப்போ சவேந்திரசில்வாவை தளபதியாக்கியிருக்கு. இங்கு கருத்தெழுதும் அனைவரும் ஏந்தான் இந்தியாவைக்கண்டு பயப்படுகிறியள் எனத் தெரியவில்லை. அட எங்கள் கைகளில் இழப்பதற்கு எதுவுமில்லை நாம் ஏன் பயப்பட வேண்டும், ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய சித்தாந்தத்துடன் எமது அரசியலை முன்னெடுத்துச்செல்லவேண்டும் அதில் இந்தியாவைப் புறந்தள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்படல்வேண்டும். அனைத்துத் தளங்களிலும் மேற்கூறிய விடையத்தை விவாதப்பொருளாக்கவேண்டும்.
  • நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி! பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்தே இன்று (வியாழக்கிழமை) அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை. தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் திரும்பி செல்ல நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேபோல் வவுனியாவிலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் மாத்திரம் இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தூர இடத்திலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் வந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதேபோல அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மலையக மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கென வருகை தந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், வைத்தியசாலையின் தாதிமார்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். http://athavannews.com/நாட்டின்-அனைத்து-வைத்திய/