Jump to content

தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார்

பிரபல தமிழ் திரை இயக்குநர் மகேந்திரன் காலமானார்

மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக‌ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த 'பேட்ட' திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் மிகவும் சிலாகிக்கப்பட்ட திரைப்படமான 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் மகேந்திரன் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்களில் மகேந்திரனின் இயக்கும், ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது மகனான ஜான் மகேந்திரனும் சச்சின் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-47781942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலஞ் சென்ற இயக்குனர் மகேந்திரன் அவர்களின் திரைப்படங்கள்......என்றும் மறக்க முடியாதவை.
அன்னாரின் மறைவிற்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக‌ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்பலோக்கு போகேக்கையே யோசிச்சனான்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்களை தந்தவர்.. 

உதிரிப்பூக்கள் இன்னமும் மனதிலிருந்து அகலாத படம்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

rose_carnation_spray_standard_red_960x536_default.jpg

 

Link to comment
Share on other sites

அண்மையில் தான் அவரது நெஞ்சத்தைக் கிள்ளாதே, முள்ளும் மலரும், ஜானி ஆகிய முத்தான திரைப்படங்களைப் பார்த்து ரசித்தேன். யதார்த்த சினிமாவை 70, 80களிலேயே நமக்குத் தந்தவர். அஞ்சலிகள் ஐயா... 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்’ - ஆச்சர்ய இயக்குநர்

'சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்'படத்தின் காப்புரிமை TWITTER

தமிழ் திரையுலகில். ஏராளமான வெற்றி படங்கள் வெளிவந்து இருந்தாலும் திருப்புமுனை திரைப்படங்கள் அல்லது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் சில மட்டுமே.

 

ரசிகர்கள் என்றும் கொண்டாடும் அப்படிப்பட்ட திரைப்படம்தான் செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் காலமான இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படம்.

1979-ஆம் ஆண்டு தமிழில் வந்த திரைப்படங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் உதிரிப்பூக்கள்.

 

சரத்பாபு, அஸ்வினி நடித்த இந்த திரைப்படத்தில் விஜயன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஃபார்முலாக்களை உடைத்தவர்

தமிழ் திரையுலகில் படம் வெற்றி பெற என சில ஃபார்முலாக்கள் உள்ளன. அவற்றை எல்லாம் உதிரிப்பூக்கள் படம் மூலம் மகேந்திரன் மாற்றிக்காட்டினார்.

'முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி பேசும் 'கெட்ட பையன் சார் இந்த காளி' வசனத்தை வேறு யாரும் பேசியிருந்தால் இந்த அளவு தாக்கம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியாது.

பிரபல தமிழ் திரை இயக்குநர் மகேந்திரன் காலமானார்

பொதுவாக தங்கள் திரைப்படங்களில் பிரபல கதாநாயகர்களின் புகழ்பாட பல வசனங்களை இயக்குநர்கள் சேர்ப்பது வழக்கம். மகேந்திரனின் திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சியமைப்புகளை நாம் காணமுடியாது.

உதிரிப்பூக்கள் தவிர ரஜினிகாந்த் நடித்த முள்ளும்மலரும் மற்றும் ஜானி ஆகியவை மகேந்திரனுக்கு மிகவும் பெயர் வாங்கித் தந்தவை.

ஜானி படத்தில் ஒரு பாடகியாக தோன்றும் ஸ்ரீதேவியை மகேந்திரன் உருவகப்படுத்தியிருப்பதுபோல மிக சில இயக்குநர்களே அவரை காட்டியிருப்பர்.

இன்றும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனனில் ஜானி திரைப்பட பாடல் ஒன்று ஓலித்து கொண்டிருக்கும்.

என்றும் தித்திக்கும் இந்த பாடல்களை பாடியது சைலஜா, ஜென்சி, ஜானகி ஆகியோர்தான் என்றாலும் காட்சிப்படுத்தியதும், உருவாக்கியதும் மகேந்திரன் தானே.

'சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்'படத்தின் காப்புரிமை TWITTER

இதுபோல மகேந்திரனின் இலக்கியத்தில் வெளிவந்த மற்றொரு முக்கிய திரைப்படம் நெஞ்சத்தை கிள்ளாதே. மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை குவித்த திரைப்படம் நெஞ்சத்தை கிள்ளாதே.

''மகேந்திரன் போல ஒரு இயக்குநர் மிக அபூர்வம். மிகவும் வெற்றிகரமான இயக்குநராக செயல்பட்ட காலத்தில் அவர் நினைத்திருந்தால் ஏராளமான படங்களை இயக்கி இருக்கலாம். ஆனால், தரமான படங்களை தருவது மட்டுமே அவரின் கோட்பாடாக இருந்தது. சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்'' என்கிறார் மகேந்திரனின் திரைப்பட ரசிகரும், தமிழ் சினிமா ஆர்வலருமான பிரபாகரன்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-47782321

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                    Résultat de recherche d'images pour "bouquet de fleurs funerals"

                                                                          ஆழ்ந்த இரங்கல்கள்.........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறப்பான இயக்குனர், இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் படங்களைத் தந்த  இயக்குநர் மகேந்திரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த திரைப்படங்களை தந்த மகேந்திரன் ஐயாவிற்கு என் அஞ்சலிகள்.

 

 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள். சிறந்த வசனகர்த்தா என்பதற்கு தங்கபதக்கம் போன்ற படங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

போர்க்காலத்தில் வன்னிக்கும் சென்றவர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.