Jump to content

துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகப பணம், அனைத்தும் 200 ரூபாய் கட்டுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகப பணம், அனைத்தும் 200 ரூபாய் கட்டுகள்

துரைமுருகன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம்'

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளர்கள், உதவியாளர் உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான டி.எம்.கதிர்ஆனந்த்தின் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இவர்களுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, பள்ளி ஆகியவை காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் உள்ளன.

இந்நிலையில், துரைமுருகன், கதிர்ஆனந்தின் வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜயதீபன் தலைமையில் வருமான வரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு முதல் சோதனை நடத்தினர். சனிக்கிழமை இரவு 8 மணி வரை நடந்த இச்சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதன்தொடர்ச்சியாக, துரைமுருகனின் வீடு, அவரது ஆதரவாளர்கள், உதவியாளர் வீடுகளில் தேர்தல் செலவினப் பார்வையாளர் உஜ்வல்குமார் தலைமையில் திங்கள்கிழமை மீண்டும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித் துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து துரைமுருகன் வீடு, காட்பாடியை அடுத்த வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது சகோதரி விஜயா வீடு, சிமெண்ட் கிடங்கு, அதற்கு அடுத்த தெருவில் உள்ள திமுக பிரமுகர் தாமோதரன் வீடு, விருதம்பட்டு அருகே வஞ்சூரிலுள்ள திமுக ஊராட்சி துணைச்செயலர் பெருமாள் வீடு, செங்குட்டையில் உள்ள துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீடு, கோட்டநத்தம் முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல் வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள துரைமுருகனின் பள்ளி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் கிடங்கில் இருந்து சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் இருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 200 ரூபாய் கட்டுகளாக இருந்ததும், ஒவ்வொரு கட்டிலும் ஊரின் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டிருந்ததால் இந்தப் பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல், துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீட்டில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும், வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரத்தை வரவழைத்து எண்ணப்பட்டன. எனினும், கைப்பற்றப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்பது குறித்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மாவட்டத் தேர்தல் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து, தேர்தல் ஆணையம் உரிய அறிவிப்புகளை வெளியிடும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


இந்து தமிழ்: 'வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45'

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு, தொலை யுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. மேலும், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.

தொடர் சாதனைகள் மூலம் விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கான 'எமிசாட்' என்ற நவீன மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது.

இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டது. ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து திட்டமிட்ட படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக் கெட் நேற்று காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடத்தில் 'எமிசாட்' 749 கி.மீ. துாரத்தில் புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின் ராக்கெட் இறுதிநிலையான பிஎஸ் 4 இயந்திரம் 2 மணி நேரம் பயணித்து 505 கிமீ தொலைவில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள் களையும் நிலை நிறுத்தியது." என்கிறது அந்நாளிதழ் செய்தி.



தினத்தந்தி: 'ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது'

"ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும்." என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.


திமுகபடத்தின் காப்புரிமைஇந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம்'

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம் தீவிரமடைந்துள்ளதாக கூறு கிரது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த நன்கொடை பத்திரம் 1716 கோடிக்கு இந்த ஆண்டில் இதுவரை விற்பனை ஆகி உள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

https://www.bbc.com/tamil/india-47781932

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகப பணம், அனைத்தும் 200 ரூபாய் கட்டுகள்

துரைமுருகன்

தினமணி: 'துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம்'

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளர்கள், உதவியாளர் உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

 

Image may contain: one or more people and text

 

Image may contain: 4 people, people smiling, people standing and text

துரை முருகனினின் மகன் கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுவது... 
அவரின்  கட்சி  ஆட்களுக்கே விருப்பம் இல்லையாம்.
இதுவரை... அவர், தி.மு.க. கூட்டங்களுக்கு கூட சென்றதில்லையாம்.
அவர் நடத்தும் கல்லூரி வளாகத்துக்குள்... கட்சிக்காரரை அனுமதிக்க மாட்டாராம்.   

இந்தப் பணத்தை  எல்லாம் காட்டிக் கொடுத்தது... அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.
அநேகமாக... கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுவது, கேள்விக்குறியாகி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 லட்சம், 100 சவரன் பரிசு !! வெளிப்படையா அறிவித்தவர் வீடுகளில் ரெய்டு ! வாய்கொழுப்பால் சிக்கிய துரை முருகன் , அனிதா

durai-murugan-in-troble_1200x630xt.jpg

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலுாரில், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  அதில் பேசிய திமுக பொருளாளார் துரைமுருகன், 'வேலுார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், எந்த தொகுதியில், திமுகவினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்' என்றார்.

இந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில், மார்ச், 30ல் இரவு, 10:30 மணிக்கு, துரைமுருகன் வீட்டை சோதனையிட சென்றனர்.அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், திடீர் நாடகத்தை அரங்கேற்றினர்.

நான்கு மணி நேரம் காத்திருப்பது போல் நடித்த அதிகாரிகள், துரைமுருகன் வீடு, கல்லுாரியிலிருந்து, பணம் வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். பின், சோதனையை துவக்கி, 10.50 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள், மூன்று, 'பென் டிரைவ்' உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

பென்டிரைவில் இருந்த தகவல்களில், வாக்காளர் பட்டியலும், ரகசிய குறியீடுகளும் இருந்துள்ளன. அதை பார்த்த அதிகாரிகள், பணப் பட்டுவாடாவுக்கான ரகசிய குறியீடாக கருதி, தீவிர விசாரணையில் இறங்கினர்.

துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் சிலரை, தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து, பணம் இருக்கும் இடங்களை மோப்பம் பிடித்தனர்.மார்ச், 31, ஏப்., 1 வங்கிகள் விடுமுறை என்பதால், முன்கூட்டியே பணத்தை குவித்ததையறிந்து, சோதனைக்கு நாள் குறித்தனர்.

வெளிமாவட்ட வருமான வரித்துறையினர், மார்ச், 31 மாலை வேலுாருக்கு வந்து சேர்ந்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதி  காலை, 3:00 மணிக்கு சோதனை துவக்க திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையே, வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக பறக்கும்படையினர், காலி கவர் வேனை மடக்கிய போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, வருமான வரித்துறையினருக்கு, அவசர தகவல் சென்றது. உடனடியாக சோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, உத்தரவு பறந்தது

ஏற்கனவே, வேலுாரில் முகாமிட்டிருந்த, வெளிமாவட்ட வருமான வரித்துறையினருக்கு, உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. இவர்கள், கலெக்டர் அலுவலக பறக்கும் படையினருடன் சேர்ந்து, சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை, 11 கோடியே 40 லட்சம்  ரூபாய் கைப்பற்றியுள்ளனர்.

பணம் கைப்பற்றப்பட்டதை அறிந்த துரைமுருகன். இனி, அதிலிருந்து மீண்டு வரும் வழியை  அவசரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.

இதே போல் தூத்துக்குடி தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனும் இதே போல் அதிக வாக்குகளை பெற்றுத்தரும் நிர்வாகிகளுக்கு பணமும், நகையும் பரிசாக அறிவித்தார். இதையடுத்து அனிதாவின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக துரை முருகனும், அனிதா ராதாகிருஷ்ணனும்  தங்களது வாய்க் கொழுப்பால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

https://tamil.asianetnews.com/politics/prize-todmk-cadersduri-murugan-announced-ppb8oa

டிஸ்கி:

TenseVacantBedbug-mobile.jpg

தரமான சம்பவம் ..கள்ளன் .! இன்னும் நல்லா தரவா செக் பண்ணுங்க ஆபீசர்ஸ்.. 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.