• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

பாலைவன தடங்கள் 🐪 ...................................🐫🐫🐫

2003 உயர்தர பரீட்சை  ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்ததுஎப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி  போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது  . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அதுஅதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது  மாவிலாறு பகுதியில் சமாதான  புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல்  கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்)

இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது   போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது  அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள்  எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது .

விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன்  ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் .

அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன்அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு  விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு .

தொடரும்.....  🐫🐫🐫

 • Like 19

Share this post

Link to post
Share on other sites

தனியின் கதை ஆரம்பமே கவலையா இருக்கு, எல்லா உயிரிகளும் தன்னை தற்காத்து கொள்ள முயலும். பெற்றோர் உங்களை பாதுகாக்க மத்தியகிழக்கு அனுப்பியுள்ளனர்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

உங்களை கதையை கேட்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். இலங்கையில்  இப்பிடியான அனுபவத்தை சந்திக்காத தமிழர்கள் குறைவு.  

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள் தனி .... வாசிக்க ஆவலாக இருக்கிறோம்......!   😁

Share this post

Link to post
Share on other sites

உங்களது இந்த ஆக்கம் தனித்தன்மை பெறும்.
 
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள் முனி அதிக இடைவெளி விடாதீர்கள் 
 
Share this post

Link to post
Share on other sites

மீண்டும் முனிவர்ஜீயின் ஆக்கத்தைப் படுத்த சுவை.. உள்ளூர ஒரு கவலை அலை தெறிக்கினும். 

Edited by nedukkalapoovan
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்கின்றோம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு அனுபவப் பகிர்வு,நல்ல உரைநடையில்.தொடரட்டும் உங்கள் ஆக்கம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, ஏராளன் said:

தனியின் கதை ஆரம்பமே கவலையா இருக்கு, எல்லா உயிரிகளும் தன்னை தற்காத்து கொள்ள முயலும். பெற்றோர் உங்களை பாதுகாக்க மத்தியகிழக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த நேர நிலை அப்படி யார் யார் பிள்ளைகளை கடத்தி செல்கிறார்கள் என்ற நிலையில் பெற்றவர்கள் என்னதான் செய்யலாம் சொல்லுங்கள்  கவலை கஸ்ரம் தந்து என்னை ஓர் சமுதாயத்திற்கும் வாழ்க்கையெனும் பாடத்தை அணுஅணுவாக செதுக்கியும் விட்டது 

கருத்துக்கு நன்றி ஏராளன்

22 hours ago, நீர்வேலியான் said:

உங்களை கதையை கேட்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். இலங்கையில்  இப்பிடியான அனுபவத்தை சந்திக்காத தமிழர்கள் குறைவு.  

ம்ம் இருக்கலாம் ஆனால் கிழக்கிலிருந்து மத்திய கிழக்குக்கு வேலைக்காக சென்றவர்களுக்கு இது புரியும்  மிக்க நன்றி நீர்வேலியான் அவர்களுக்கு

22 hours ago, suvy said:

தொடருங்கள் தனி .... வாசிக்க ஆவலாக இருக்கிறோம்......!   😁

ஊக்கத்திற்கு நன்றி சுவி அண்ணா

21 hours ago, குமாரசாமி said:

உங்களது இந்த ஆக்கம் தனித்தன்மை பெறும்.
 
நன்றி குமாரசாமி அண்ணை 

21 hours ago, ரதி said:

தொடருங்கள் முனி அதிக இடைவெளி விடாதீர்கள் 
 
ம்ம் தொடர்ந்து பந்திகளாக வந்து முழுமை பெறும் நன்றி உங்கள் கருத்துக்கும் ஊக்கம் கொடுத்தலுக்கும்

21 hours ago, nedukkalapoovan said:

மீண்டும் முனிவர்ஜீயின் ஆக்கத்தைப் படுத்த சுவை.. உள்ளூர ஒரு கவலை அலை தெறிக்கினும். 

ம்ம் நிறைய சம்பவம் இருக்கு நெடுக்ஸ் நன்றி தல

19 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா...!

நன்றி புங்கையூரான் 

17 hours ago, நிலாமதி said:

தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்கின்றோம்.

நன்றி நிலா அக்கா  வரும் வரும் பந்திகளில் கண்ணீர் வரலாம் 

4 hours ago, putthan said:

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா

நன்றி புத்தன் அண்ணா

3 hours ago, நந்தி said:

நல்லதொரு அனுபவப் பகிர்வு,நல்ல உரைநடையில்.தொடரட்டும் உங்கள் ஆக்கம்.

நன்றி கிழக்கு பேச்சு தமிழ் புரியும் என நினைக்கிறேன் நன்றி கருத்துக்கு 

அனைவரின் ஊக்கத்திற்கு நன்றிகள் 

Share this post

Link to post
Share on other sites

✈️✈️✈️

விமான நிலையத்தில் என்னுடன் சேர்ந்து ஒரு 30 பேர் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள் எல்லோரும் என் வயதை ஒத்தவர்கள் அந்த நாட்டு காசு மாற்றி எல்லோரிடமும் வெறும் 50 திர்ஹம் மட்டும்  இருந்தது. என்னைப்போலவே வயல்காணிகளையும் , வீடுகளையும் விற்று வந்தவர்ளும் மற்றும் பிள்ளை பிடித்தலில் இருந்து தப்பித்து வந்தவர்களும் படுவான்கரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும்.

 விமான நிலைய உள்ளக சம்பவங்களை கண்டதும் நாங்கள் எங்களை மறந்து போனோம். விமானம் ஏர்லங்கா அழைப்பு கொடுக்கிறது  அடிமாடுகளாய் செல்ல போகும் அடிமைகளே அனைவரும் வருக வருக என.

வாருங்கள் வாருங்கள் உங்களை இன்னொரு நாட்டுக்கு விற்க ஆவலாக உள்ளோம் எனவும். எல்லோரும் உள்ளே சென்றோம் முதல் விமான பயணம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். எல்லாச்சாமிகளும் ஒரு நிமிடம் மனதுக்குள் வந்து விளையாடிப்போனார்கள் . விமானம்  பறக்க ஆரம்பமானது உச்சியை தொடும் வரை கொஞ்சம் நெஞ்சில் தண்ணீ இல்லை எல்லோருக்கும்.

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு  எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம் எல்லோரும் . விமானத்தில் சாப்பாடும் கொஞ்ச தண்ணீரும் சோடா பானங்கள் கொடுக்கப்பட்டது குடித்துவிட்டு அந்த விமான பெண்களை அழைக்கும் ஒரு சுவிட்ச் இருந்தது அதை அவர்களை அழைப்பதென்று தெரியாமல் இவனுகள் எல்லோரும் அவளை காண்பதற்க்காகவா? இல்லை தெரியாமல் அழுத்துகிறார்களா!!!! என்று தெரியாமலே அழைத்துக்கொண்டிருந்தானுகள் சிலர் அவளிடம் பியர் வாங்கி குடிப்பதற்க்காகவும் அழுத்திக்கொண்டே இருந்தானுகள்.

அவளோ சிரித்து வந்து ஏசிப்போனாள் மணித்தியாலங்கள் செல்ல செல்ல ஊரும் உறவினர்களும் ஞாபகத்திற்குள் வந்து விட்டார்கள் விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல்  வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. விமானம் தரை இறங்கியதும் வெள்ளைக்காரன் போய் கெப்டனை (பைலட்டை) கட்டி அணைத்து நன்றி சொல்லி இறங்கி சென்றான் நானும் தங்கியூ கெப்டன் என்று சொல்லி விமானநிலையத்தினுள் உள் நுழைகிறேன் வெல்கம் துபாய் என்ற அழைப்பும் அரபு மொழியும் ஆங்கிலமும் கலந்து வரவேற்றது . ஆங்கிலம் புரிந்தது ஆனால் அரபியோ சுத்தமாக ஒன்றுமே புரியல.

கண்ணிலிருந்து, கைரேகை வரைக்கும் பதிவு செய்து எல்லாம் சரி செய்த பின்னரே வெளியே விட்டார்கள் வெளியே வந்து பார்த்தால் சரியான வெயில் நம்ம ஊரில் பாண் செய்யும் போறணைக்குள் (பேக்கரி) இருக்கும் தணலில் தூக்கி போட்டமாதிரி இருந்தது. எங்களுக்கு என்னடா இப்படி வெயிலா இருக்கு என்று ஆளாளுக்குள் பேசிக்கொண்டாலும் எங்களை அழைத்து செல்ல நாங்கள் வந்த ஒப்பந்த கம்பனிகாரர்கள் வரவில்லை இரண்டு மணிநேரமாக காத்திருக்க போட்டு வந்த சேட் எல்லாம்  வியர்வையால் (உருகி) நனைந்து நனைந்து  ஈரமாகிகொண்டே இருந்தது.

தொடரும்..........ð«ð«ð«

 • Like 11

Share this post

Link to post
Share on other sites

தொழில் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் சென்று இருக்கிறீர்கள்...தொடருங்கள்..நன்றாய் கஸ்டப் பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😮

Share this post

Link to post
Share on other sites

அது முதல் மூன்று கிழமைதான் கஷ்டமாய் இருக்கும். இனி இதுதான் என்னும் தெளிவு பிறந்ததும் எல்லாம் பழகிடும்......!  😁

Share this post

Link to post
Share on other sites

முனிவர் உங்கள் பகிர்வுகளை வாசிக்க ஆவலாக உள்ளோம். நிறைய கஸ்டப்பட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

✈️✈️✈️

...

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு  எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம்...

...

...விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல்  வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது...

...

முனிவர்ஜீ,

இந்த வெளிப்படை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு..

****

இருப்பத்தோரு வருடங்களுக்கு முன் நானும் இதையே தான் அனுபவித்தேன். அப்பொழுது சென்னையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இல்லையென நினைக்கிறேன்..

எனது வேலைக்கான நிறுவனம் விசா, மற்றும் பயணத்திற்கான டிக்கட்டை கல்ஃப் ஏர் (Gulf Air) மூலம் ஏற்பாடு செய்திருந்தது. நான் சென்னை வந்து 'மான்டியத்' சாலையிலிருந்த 'கல்ஃப் ஏர்' விமான அலுவலகத்திற்கு போனால், "நீங்கள் பாம்பே மூலம் கத்தார் தோஹா சென்று அங்கிருந்து துபாய் செல்லவேண்டுமென" விமான டிக்கட்டை பதிவு செய்து கொடுத்தனர்.

வேறு வழியின்றி ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி, பாம்பேக்கு மாலை 4 மணியளவில் சென்றடைந்தேன். மறுநாள் அதிகாலை 03:50 க்கு தோஹா செல்ல கல்ஃப் ஏர் விமானம்.

என்ன செய்வது..?

பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது..

வட இந்தியா எனக்கு புதுசு..

எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார்.

நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, "எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்..? என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே..?" என ஆங்கிலத்தில் கேட்டேன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்..?" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. "இந்தி தெரியாது" என்றேன்..

"ஆர் யூ இன்டியன்..?" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடையாள அட்டையை காண்பித்தேன்..

மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார்.

இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன்.

(இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகுப்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.)

****

விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்..

கடல்போல் மணல் திட்டுகள்..! அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்..!!

தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி..

ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி..

வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு..!

ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று..!!

இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்..!

நீங்கள் அடிக்கடி கேட்கும் ரஷிதியா மற்றும் ரிக்கா ரோடுக்கும் செல்கிறேன்..!!

Edited by ராசவன்னியன்
 • Like 4

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

ஈரோப் லைவ் வெரி கூல் லைவ் யு நோ...😎

Share this post

Link to post
Share on other sites

பாலைவன வாழ்க்கை மனதிலும்  வெளியிலும் சோதனையாகத்தான் இருக்கும் 

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, குமாரசாமி said:

ஈரோப் லைவ் வெரி கூல் லைவ் யு நோ...😎

ஒவ்கோர்ஸ் ....அவுஸ்,கனடா ,யுரோப் எல்லாம் கூல் லைவ் 😎

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

இங்கே ஒரு சுவாரசியமான விசயத்தையும் சொல்ல வேண்டும்.. வெளிநாட்டுப் பயணம் அதுவே எனக்கு முதன்முறை..

பாம்பேயிலிருந்து காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியதும் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் துபாய் செல்ல 'ட்ரான்ஸிட் (Transit)' பகுதியிலிருக்கும் கல்ஃப் ஏர் (Gulf Air) கவுண்டருக்கு என்னை போகச் சொன்னார்கள்..

எனது அடுத்த துபாய் விமானம் புறப்படும் நேரம் மதியம் 12 மணி.. !

இன்னும் நான்கு மணிநேரமிருந்ததால், அங்கிருந்த அரபி அலுவலர், "எதிரிலிருக்கும் இருக்கைகளில் உட்காருங்கள், சிறுது நேரத்தில் மாற்று அலுவலர் வந்தவுடன் கூப்பிடுவார்கள்.." என சொன்னார்..

நான் இருக்கையில் அமர்ந்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..

அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன், பெரும்பாலும் தாடிகளுடன் வந்தார்கள்..

ஒரே கூச்சலும், சத்தமும் அந்த பெரிய ஹாலில்..

உடனே கத்தார் போலீஸ்காரர்கள் வந்து ஓங்கி உரத்த குரலில் அரபியில் சத்தமிட்டு, அவர்கள் பலரையும் நெட்டித் தள்ளி ஒரு மூலைக்கு சென்று உட்கார சொன்னார்கள்.. அங்கே அனைவரும் குத்துகாலிட்டு அமர்ந்தார்கள்..!

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் 'சுடிதார்' போன்று உடையணிந்திருந்தார்கள்..

என் பக்கத்திலிருந்த ஒரு மலையாள பயணியிடம், "இவர்கள் யாராக இருக்கும்..? இவர்களிடம் ஏன் போலீஸ் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது..?" எனக் கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னது, "இவர்கள் ஆப்கானியர்கள், படிப்பறிவு மிகவும் கம்மி, முரடர்கள் அவர்களை இப்படித்தான் கையாள வேண்டும்.. ஒருவேளை இவர்கள் கல்லி வல்லி ஆட்களாக இருப்பார்கள்.." என சொன்னார்.

நான் கல்லி வல்லி என்றால் என்ன என புரியாமல்,அப்படியா..?” என கேட்டுவிட்டு அமைதியாக கவுண்டரில் எனது அழைப்பிற்க்காக காத்திருந்தேன்..

மாற்று அலுவலர் வந்தும் என் பெயர் அழைக்கப்படவே இல்லை.. காலை வயிற்றுப் பசி வேறு..!

பொறுமையிழந்து மறுபடியும் கவுண்டர் சென்று அந்த அரபியிடம் ஏன் என்னை இன்னமும் அழைக்கவில்லை..?” என விசாரித்தேன்.

அவர் எனது விமான டிக்கட், விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை பார்த்துவிட்டு சற்று முன் பலமுறை உங்கள் பெயரை உச்சரித்து கூப்பிட்டேனே..? எங்கே போனீர்கள்..?” என என்னை திருப்பிக் கேட்டார்..

"அடப்பாவி, குத்துக்கல் மாதிரி உன் முன்னே தூரத்தில் இருக்கையில்தான் இருந்தேனே...?" என சொன்னேன்..

அவர் எனது பெயரை மறுபடியும் வாசித்தார்.. விசயம் அப்பொழுதுதான் புரிந்தது..

அவர் இதுவரை வாசித்து கூப்பிட்டது எனது தந்தையின் பெயரில் ஒரு பகுதியை மட்டும்.. மீதமுள்ள எனது பெயரை வாசிக்கவே இல்லை..

அடப்பாவிகளா..! அன்று புரிந்தது..!!  '

'எங்குமே பாஸ்போர்ட்டிலிருக்கும் முதல் பெயரைதான் அனைவரும் அழைக்க பயன்படுத்துகிறார்கள்..' என்பது..!

கடுப்புடன் 'கல்ஃப் ஏர்' வழங்கிய உணவுக் கூப்பனையும், போர்டிங் அட்டையையும் சரிபார்த்து வாங்கிக்கொண்டு அருகிலிருந்த உணவகம் சென்றேன்.

இன்றும் எனது உண்மை பெயரை அலுவலகத்திற்கு வரும் புது அரபிகள் உச்சரிப்பதில்லை, எனது தந்தை பெயரின் முதற்பகுதி பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள்..

சென்ற நவம்பரில், வட அயர்லாந்து பெல்ஃபாஸ்ட் நகரத்திற்கு அலுவலக வேலை நிமித்தம் சென்றபோது, பர்மிங்காம் விமான நிலையத்திலும், பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்திலும் அப்படியே அழைத்தார்கள்..!

எங்கேயும், எனது பெயரையோ அல்லது எனது தந்தையின் பெயரையோ கேட்க அவதானமாக இருக்கவேண்டுமென இப்பொழுது எனக்கு பழகி விட்டது..!

Edited by ராசவன்னியன்
 • Like 1
 • Thanks 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, ரதி said:

தொழில் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் சென்று இருக்கிறீர்கள்...தொடருங்கள்..நன்றாய் கஸ்டப் பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😮

இருக்கு இருக்கு நிறைய சங்கதிகள் இருக்கு 

20 hours ago, nunavilan said:

முனிவர் உங்கள் பகிர்வுகளை வாசிக்க ஆவலாக உள்ளோம். நிறைய கஸ்டப்பட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

மறக்க முடியாத தடங்கள் அவை நூணா

19 hours ago, putthan said:

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

ம்ம் என்ன வாழ்க்கையென நினைத்து வெறுத்த நாட்களாக அமைந்த நாட்களாக இருந்தது

21 hours ago, suvy said:

அது முதல் மூன்று கிழமைதான் கஷ்டமாய் இருக்கும். இனி இதுதான் என்னும் தெளிவு பிறந்ததும் எல்லாம் பழகிடும்......!  😁

என்ன்னை மாற்றியதும் பொறுமை கற்றுக்கொடுத்தும் போனது அதான் பழகிடுச்சிண்ணே

12 hours ago, ராசவன்னியன் said:

இங்கே ஒரு சுவாரசியமான விசயத்தையும் சொல்ல வேண்டும்.. வெளிநாட்டுப் பயணம் அதுவே எனக்கு முதன்முறை..

பாம்பேயிலிருந்து காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியதும் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் துபாய் செல்ல 'ட்ரான்ஸிட் (Transit)' பகுதியிலிருக்கும் கல்ஃப் ஏர் (Gulf Air) கவுண்டருக்கு என்னை போகச் சொன்னார்கள்..

எனது அடுத்த துபாய் விமானம் புறப்படும் நேரம் மதியம் 12 மணி.. !

இன்னும் நான்கு மணிநேரமிருந்ததால், அங்கிருந்த அரபி அலுவலர், "எதிரிலிருக்கும் இருக்கைகளில் உட்காருங்கள், சிறுது நேரத்தில் மாற்று அலுவலர் வந்தவுடன் கூப்பிடுவார்கள்.." என சொன்னார்..

நான் இருக்கையில் அமர்ந்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..

அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன், பெரும்பாலும் தாடிகளுடன் வந்தார்கள்..

ஒரே கூச்சலும், சத்தமும் அந்த பெரிய ஹாலில்..

உடனே கத்தார் போலீஸ்காரர்கள் வந்து ஓங்கி உரத்த குரலில் அரபியில் சத்தமிட்டு, அவர்கள் பலரையும் நெட்டித் தள்ளி ஒரு மூலைக்கு சென்று உட்கார சொன்னார்கள்.. அங்கே அனைவரும் குத்துகாலிட்டு அமர்ந்தார்கள்..!

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் 'சுடிதார்' போன்று உடையணிந்திருந்தார்கள்..

என் பக்கத்திலிருந்த ஒரு மலையாள பயணியிடம், "இவர்கள் யாராக இருக்கும்..? இவர்களிடம் ஏன் போலீஸ் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது..?" எனக் கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னது, "இவர்கள் ஆப்கானியர்கள், படிப்பறிவு மிகவும் கம்மி, முரடர்கள் அவர்களை இப்படித்தான் கையாள வேண்டும்.. ஒருவேளை இவர்கள் கல்லி வல்லி ஆட்களாக இருப்பார்கள்.." என சொன்னார்.

நான் கல்லி வல்லி என்றால் என்ன என புரியாமல்,அப்படியா..?” என கேட்டுவிட்டு அமைதியாக கவுண்டரில் எனது அழைப்பிற்க்காக காத்திருந்தேன்..

மாற்று அலுவலர் வந்தும் என் பெயர் அழைக்கப்படவே இல்லை.. காலை வயிற்றுப் பசி வேறு..!

பொறுமையிழந்து மறுபடியும் கவுண்டர் சென்று அந்த அரபியிடம் ஏன் என்னை இன்னமும் அழைக்கவில்லை..?” என விசாரித்தேன்.

அவர் எனது விமான டிக்கட், விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை பார்த்துவிட்டு சற்று முன் பலமுறை உங்கள் பெயரை உச்சரித்து கூப்பிட்டேனே..? எங்கே போனீர்கள்..?” என என்னை திருப்பிக் கேட்டார்..

"அடப்பாவி, குத்துக்கல் மாதிரி உன் முன்னே தூரத்தில் இருக்கையில்தான் இருந்தேனே...?" என சொன்னேன்..

அவர் எனது பெயரை மறுபடியும் வாசித்தார்.. விசயம் அப்பொழுதுதான் புரிந்தது..

அவர் இதுவரை வாசித்து கூப்பிட்டது எனது தந்தையின் பெயரில் ஒரு பகுதியை மட்டும்.. மீதமுள்ள எனது பெயரை வாசிக்கவே இல்லை..

அடப்பாவிகளா..! அன்று புரிந்தது..!!  '

'எங்குமே பாஸ்போர்ட்டிலிருக்கும் முதல் பெயரைதான் அனைவரும் அழைக்க பயன்படுத்துகிறார்கள்..' என்பது..!

கடுப்புடன் 'கல்ஃப் ஏர்' வழங்கிய உணவுக் கூப்பனையும், போர்டிங் அட்டையையும் சரிபார்த்து வாங்கிக்கொண்டு அருகிலிருந்த உணவகம் சென்றேன்.

இன்றும் எனது உண்மை பெயரை அலுவலகத்திற்கு வரும் புது அரபிகள் உச்சரிப்பதில்லை, எனது தந்தை பெயரின் முதற்பகுதி பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள்..

சென்ற நவம்பரில், வட அயர்லாந்து பெல்ஃபாஸ்ட் நகரத்திற்கு அலுவலக வேலை நிமித்தம் சென்றபோது, பர்மிங்காம் விமான நிலையத்திலும், பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்திலும் அப்படியே அழைத்தார்கள்..!

எங்கேயும், எனது பெயரையோ அல்லது எனது தந்தையின் பெயரையோ கேட்க அவதானமாக இருக்கவேண்டுமென இப்பொழுது எனக்கு பழகி விட்டது..!

ஹாஹா நல்ல சம்பவம் நீங்களும் இந்த தடங்களுக்குள் இருக்குறீர்கள் ராசவன்னியன் அண்ணா

Share this post

Link to post
Share on other sites

இரண்டரை மணிநேரத்தின் பின்பே நாங்கள் வந்த விசா பொறித்த வான் ஒன்று வந்தது வந்த அந்த வானில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார். ஸ் ரீ லங்காவில் இருந்து வந்த நீங்களா? என கேட்டு அத்தனை பேரிடமும் முதலில் பாஸ்போட்டை பறித்துக்கொண்டார். பறித்துக்கொண்ட பின்பே அதனை ஒவ்வொன்றாக சரிபார்த்துவிட்டு வாகனத்தினுள்ளே ஏற்றினார். வாகனம் குளிரூட்டப்பட்டிருந்தது நிம்மதியான பெருமூச்சு விட்டு எல்லோரையும் மீண்டும் எண்ணி சரிபார்த்து வாகனம் புறப்பட்டது. நகர்களை பார்த்தால் எல்லாம் கண்ணாடிகளால் ஆனதாகவே இருந்தது வானுயர்ந்த கட்டிடங்கள் அழகிய கானல் நீர் கரை புரண்டு ஓடும் தார் சாலைகள் இரு மருங்கிலும் அழகான பூ மரங்களென மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. அந்த பாலைவனத்தில் மிளிரும் துபாய் நாடு.

சுமார் ஓர் மணி நேரம் சென்ற பிறகு எங்கோ ஓர் தூரத்தில் நகர்கள் மொதுவாக மறைந்து செல்ல செல்ல மணல் மேடை ,மணல் குவியல்கள் சூழ்ந்த சிறிய பாலைவனச் செடி நிறைந்த ஒட்டிய பகுதியில் இருந்த கம்ப் (Camp) ஒன்றிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே இறக்கிவிட்டு ஒரு தமிழர் (இந்தியர்) இவர்களுக்கு றூமை கொடு என்று சொல்லிவிட்டு என்ன வேலை? எத்தனை மணிக்கு வரவேண்டும்?  எந்த தகவலும் சொல்லாமல் வான் பறந்தது. அவர்தான் அந்த விடுதிக்கு காப்பாளரும் கூட

வந்த களைப்பில் ஒருவன் கால் கை மேலை கழுவித்து வருகிறேன் என குளிக்கும் அறைக்கு போனவன் ஓடிவருகிறான் ஐயோ அம்மா , அப்பா காப்பாற்றுங்க காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என நாங்களும் பயந்து என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என விசாரிக்க அவனால் சொல்ல முடியவில்லை உடம்பில் நீர் மட்டும் ஊற்றப்பட்டு இருந்த்து.  சிறிது நேரம் கழிந்த பின்னர் அழுகையை நிறுத்திவிட்டு முதுகை பார்க்க சொன்னான் அவனது முதுகு தோல் மெதுவாக உரிய ஆரம்பித்தது என்னடா நடந்தது? என விசாரிக்க தண்ணீரை திறந்து முதுகை காட்டினேன் சுடுதண்ணி வந்து ஊற்றுப்பட்டதென கூறினான் அவன்.

உடனே அந்த கம்ப்(Camp)  காவலரிடம் சென்று கேட்க இப்ப ஜீலை மாதம் தண்ணி கொதிநீராகத்தான் வரும் நீங்கள் கேன்களில் பிடித்து குளிக்க வேண்டும் என்று சொன்னார் நாங்களும் அவனுக்கு சிக்னலை (பற்பசை) எடுத்து பூசிவிட்டு கொஞ்சம் இருடா என ஆளை இருத்தி விட்டு. ஒரு ரூமுக்கு எட்டு எட்டு பேராக பிரிக்கப்பட்டு அறை வழங்கப்பட்டது. நான்கு கட்டில்கள் ஒரு கட்டிலில் இருவர் இருக்கலாம் கீழும் மேலும். ஏசியை போட்டு அறையை குளிராக்கி அவனையும் அழைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டோம்.

கையில் இருந்த காசை கொண்டு கம்ப் எதிரே இருந்த மலையாளியின் கடைக்கு சென்று ஒரு ரெலிபோண் காட்டை வாங்கி ஊருக்கு அழைத்து நான் இங்கு வந்து விட்டேன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு  நான் அழுது கொண்டேன் . கையில் இருந்த காசில் 20 திர்ஹம் காட் அந்த காட் முடிந்து விட்டது நான் அடுத்தமாதம் தான் இனி எடுப்பன் என கடைசி வார்த்தை சொல்லிவிட்டு மீதி இருந்த 30 திர்ஹம்(ரூபா) க்குள் எப்படி காலத்தை கடத்துவதென தெரியாமல் முழுசிக்கொண்டு இருந்தேன் .

நேரம் மாலை 6 மணியாக காகங்கள் கூடு வந்து சேர்வது போல எல்லா   வேலையாட்களும் கவலையுடனும் வேலைக் களைப்பில் வருவதும் அவதானிக்க முடிந்தது முதலில் நேபாள் காரர்கள் வந்து எட்டிப்பார்த்து விட்டு செல்ல , பிறகு வங்களாதேஷ், ஆந்திரா, கர்னாடகா, சிங்களவர்களும் களும் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர் கடைசியில் நம்ம பொடியங்கள் தமிழ் பொடியங்கள் வந்திருக்கிறார்கள் என பல நூறு பேர் பொடியங்கள் ,நடுத்தர வயதானவர்கள் வந்தார்கள் எல்லோரும் என்னுடன் வந்தவர்களுக்கு பரீட்சியமானவர்கள் ஊரீல் இருந்து கொண்டு வந்த  தீன் பண்டங்களையெல்லாம் மேய்ந்து விட்டு.

ஊர்நிலமைகளை கேட்டார்கள் நிலமையை சொல்ல ஓர் தலைவனின் வழிநடத்தலில்  வந்தவர்களது அறைக்கு வேறொரு நாள் சென்ற போதே பார்க்க முடிந்தது அத்தனை பேரின் அறைகளிலும் தலைவர் நிமிர்ந்து நின்றது இப்பவும் கண்ணுக்குள் இருக்கிறது . சாப்பிட்ட அவர்கள் இங்க கவனமாக இருக்க வேண்டும் களவு எடுக்க கூடாது தனியாக செல்லக்கூடாது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர்களுக்கு தெரிந்த பொடியங்களுக்கு அவர்களும் 50 ரூபா கொடுத்துவிட்டு போனார்கள் செலவுக்கு  எனக்கோ அங்கே யாரையும் தெரியாது எங்க ஊர் பொடியங்கள் அங்கு யாரும் இருக்க வில்லை  போகும் போது இந்த கம்பனி கூடாது சம்பளம் குறைவு நாங்களெல்லாம் ஊருக்கு போக முடியாது என்ற காரணத்திற்க்காகதான் இங்கே வேலை செய்கிறோம் என்று சொல்லி விட்டு.

அந்த இந்த வேலையை செய்ய சொன்னால் செய்ய கூடாது உங்களுக்குரிய  அடையாள அட்டை வரும் வரைக்கும் உங்களை மேய்ச்சு போடுவாங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னானுகள். கம்பனியில் ஒருவன் இருக்கிறான் அவந்தான் எல்லாமே அவனுக்கு ஒட்டுமொத்த பேரும் நடுங்குவானுகள் நம்ம பயத்தை காட்டினால் அவன் நமக்குமேல் ஏறிவிடுவான் எனவும் அவன் பெயர் இடிஅமின் என்று சொல்லி போனார்கள்

சுமார் 2000 பேர் இருந்தார்கள் அந்த கேம்பில்(Camp)

அடுத்த நாள் காலை .............. தொடரும் 1f42b.png1f42b.png

Edited by தனிக்காட்டு ராஜா
 • Like 9
 • Sad 2

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2019 at 1:02 PM, தனிக்காட்டு ராஜா said:

யாருடைய ள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. ன்னடா எனக்கு ந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் ல்லை

சண்டை தொடங்கிய நேரம் மட்டக்களப்பிலிருந்து நிறைய போராளிகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பெருவாரியாக போனதாக சொன்னார்கள்.ஆனபடியால்த் தான் உங்களையும் எந்த குறூப் என்று கேட்டிருக்கிறார்கள்.கருணா குறூப் என்று சொல்யிருந்தால் அவர்களே பாதுகாப்பு கொடுத்து கொண்டு போய் விட்டிருப்பார்களே?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.