• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
poet

இனகொலையை தொடரும் வனக்கொலை - வ,ஐ,ச,ஜெயபாலன்

Recommended Posts

வடகிழக்கு மாகாணங்களில் தமிழரும் முஸ்லிம்களும்  விறகு பொறுக்கினாலே கைது செய்ய ஓடி வரும் வனத்துறையும் பொலிசாரும் எங்கே போனார்கள்?, எம்முன்னோர் பாதுகாத்து எமக்கு அளித்த   தேசிய வனபொக்கிசங்கள் பல ஏற்கனவே அழிந்துவிட்டது. அழிப்பவர்கள் ஆயுதப் படைகளோடு தொடர்புள்ள சிங்கள உல்லாசப் பயணிகள் என்பதால்  காவல்துறை கண்டுகொள்வதில்லை. 
.
நெடுந்தீவில் மட்டுமே அருமருந்தும் அழியும் ஆபத்தை நோக்கியுள்ள தாவரமுமான  செங்கற்றாளைகள் நிறைய இருந்தது. ஆனால் சிங்கள பயணிகள் -அவர்களுட் பலர் சிங்கள படையினரதோ கடல் படையினரதோ  பொலிசாரதோ உறவுகள்- வேரோடு பறித்து சென்றுவிட்டதால் இன்று நெடுந்தீவில் செங்கற்றாளை இனமே அழிந்துவிட்டது. அவற்றைவிட இயங்கு கீழாநெல்லி போன்ற பல அரிய மூலிகைகள் வேரோடு பறித்துச் செல்லபட்டு அருகிவிட்டன.

 வடகிழக்கு மாகாணத்தில் பணி புரியும் படை கடற்படை காவல்துறை அதிகாரிகளின் அனுசரணையுடன் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் எங்கள் வரப்பிரசாதங்கள் யாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துச் சொன்னாலும் அரசும் சிங்கள அரசியல் வாதிகளும்  தமிழ் தலைவர்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.  இது ஒரு வியாபாரமாகவே நடக்கிறது. 
.
இந்த வனக் கொலையை தடுக்க மேற்க்கு நாடுகள் இந்தியாவென  உலகளாவிய மட்டத்தில் பாரிய  போராட்டம் தேவை. 

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

வடக்கில் காடழிப்பு மிகவேகமாக நடைபெறுகின்றது, இதை ஜனாதிபதி மிகச்சமீபத்தில் சுட்டிக்காட்டினவர்.
காடுகள் யுத்தகாலத்தில் பாதுகாக்கப்பட்டன என்று.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு   by : Dhackshala கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீப்பரவல் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் 18 மற்றும் 19 ஆம் கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், காட்டுத் தீ காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கட்டுநாயக்க-அதிவேக-நெடுஞ/  
  • இனிய பாரதிக்குத் தொடர் விளக்கமறியல்     எஸ்.ஜமால்டீன்   கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் “இனிய பாரதி” என அழைக்கப்படும் குமார சாமி புஸ்பகுமாரை, மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான முஹம்மது ஹனிபா முஹமட் ஹம்ஸா  உத்தரவிட்டார். சந்தேக நபர்,   நீதமன்றத்தில் இன்று  (20)  ஆஜர்படுத்தப்பட்டபோதே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரதேசத்தில் ஐவரும்  ,அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசததில் ஒருவருமாக  06 பேர், 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக  உறவினர்களால், பாதுகாப்பு அமைச்சு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகங்களில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, மேற்படி சந்தேக நபரான இனிய பாரதிக்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு வழக்குகளிலும் இன்று  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தொடர்ந்தும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலரை ஆட்கடத்தலில் ஈடுபடுத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் குறித்த வழக்குகள், இனியபாரதிக்கு  எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/அம்பாறை/இனய-பரதககத-தடர-வளககமறயல/74-245823
  • பிரகீத் எக்னெலிகொட வழக்கு - சாட்சி விசாரணைகளை மார்ச் 11 ஆம் திகதி ஆரம்பிக்க உத்தரவு     ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (20) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளை மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்த நீதிபதிகள் குழாம் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றின் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கிரிதலை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லுதினன் கர்ணல் ஷம்மி குமாரரத்ன, டபில்யூ.டீ.உபசேன ( சுரேஷ்) ஆர்.எம்.பீ.கே.ராஜபக்ஷ (நாதன்) எஸ்.எம்.ரவிந்திர ரூபசிங்க (ரஞ்சி), சமிந்த குமார அபேரத்ன கனிஷ்க குணரத்ன, ஐய்யாசாமி பாலசுப்பரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் டீ.ஈ.ஆர். பீரிஸ் ஆகிய இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 2010 ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் கிரிதலை, ஹபரணை மற்றும் கொட்டாவை ஆகிய பிரதேசங்களில் பிரதிவாதிகள் மேலும் சில பெயர் தெரியாத நபர்களுடன் இணைந்து இரகசியமான முறையில் சிறைப்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125899
  • பாராளுமன்றம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு       பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இது தொடர்பாக இன்று அறிவிக்கையில் பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். அரசாங்கத்தினால் இன்று (20) சமர்ப்பிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கான திருத்தங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்க கரலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு , உர கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்கமான தற்போதைய எதிர்க்கட்சியினர் பெற்றுக் கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கையின் தேவைக்காகவே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்போது குறுக்கீடு செய்த பாராளுமனற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல முதலாவது பிரேரணைக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவிப்பதாகவும் 2 ஆவது பிரேரணையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலமையை கருத்தில் கொண்டு பாராளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)   http://tamil.adaderana.lk/news.php?nid=125907