நந்தி

மனைவி சொல்லே மருந்து

Recommended Posts

பிடரிப்பகுதியிலே -எனக்குப்

பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு.

ஆட்டிச் சொல்ல முடியுதில்லை-  தலையை

ஆம் என்றும், இல்லை என்றும்.

பின்னாலே பார்ப்பதற்கு நான்

பிரள வேண்டும் பாதி வட்டம்.

முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும்

முன்னேற்றம் மட்டும் பூச்சியமே.

வாட்டி இழு எருக்கிலையை

வலி மறையும் என்றார் பாட்டி.

வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி

மயிரெல்லாம் எரிந்து போச்சு.

வா வீ கியூ மணம் வருதே நானும்

வரட்டா ஒரு பிடிபிடிக்க என

மயிரெரியும் வாசனையை என்

மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான்.

டைகிளோ பீனைல் போடு என

ரை கட்டிய நண்பன் சொன்னான்.

போட்டுத்தான் பார்த்தேன் நானும்

ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு.

பிசியோ தெரபி சிகிச்சை செய்யும்

பிரிந்து போன பழைய காதலி சொன்னாள்.

செய்துதான் பார்த்தேன்-

செலவாய்ப் போச்சு பெருமளவு.

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

 

 

 • Like 8
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, நந்தி said:

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

கவிதை நன்று....நந்தி..!

சிவப்பு நிறத்தில் உள்ள வரிகள்.....ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொல்லி நிற்க்கின்றன!

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
46 minutes ago, நந்தி said:

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய ஓர் அறிவுரையைக் கவிதையாக வடித்துள்ளீர்கள், நந்தி. இப்படி சிறு சிறு காரணங்கள் பலவற்றைப் புறக்கணிப்பதாலும் நமது ஆரோக்கியம் கெடுகிறது. 

மேலும் தொடருங்கள் நந்தி 🙂

Share this post


Link to post
Share on other sites

ஒரு தசைப்பிடிப்பு தரமான ஒரு கவிதையை எங்களுக்கு தந்திருக்கு......நல்ல நகைச்சுவையுடன் கூடிய கவிதை நந்தி, தொடர்ந்து எழுதுங்கள்.........!   👍

Share this post


Link to post
Share on other sites

நல்ல நகைச்சுவையான கவிதை

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, புங்கையூரன் said:

கவிதை நன்று....நந்தி..!

சிவப்பு நிறத்தில் உள்ள வரிகள்.....ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொல்லி நிற்க்கின்றன!

மிக்க நன்றி புங்கையூரன்.

8 hours ago, மல்லிகை வாசம் said:

ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய ஓர் அறிவுரையைக் கவிதையாக வடித்துள்ளீர்கள், நந்தி. இப்படி சிறு சிறு காரணங்கள் பலவற்றைப் புறக்கணிப்பதாலும் நமது ஆரோக்கியம் கெடுகிறது. 

மேலும் தொடருங்கள் நந்தி 🙂

நன்றி சகோதரா.

3 hours ago, suvy said:

ஒரு தசைப்பிடிப்பு தரமான ஒரு கவிதையை எங்களுக்கு தந்திருக்கு......நல்ல நகைச்சுவையுடன் கூடிய கவிதை நந்தி, தொடர்ந்து எழுதுங்கள்.........!   👍

நன்றி நண்பா.யாவும் கற்பனையே.

Edited by நந்தி

Share this post


Link to post
Share on other sites

 நல்ல நகைச்சுவையுடனான கவிதை .மனைவியின் சொல்லும்  மருந்தாக அமையும் 
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வீட்டுக்குள்ள நந்திபோல ஒருத்தி குந்திக் கொண்டிருக்க ஊரெல்லாம் மருந்து கேட்டு கடைசியில வீட்டுக்காரியிடம் கேட்க வேணுமென்று தோன்றியுள்ளது. நல்ல நகைச்சுவையுடன் கவ pதை எழுதியுள்ளீர்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் நந்தி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

புதிதாய் வந்த பலர் புதுமையா கலுக்குகிறார்கள்.

கடலை வடையுடன் ஒருவர் வந்தால், கழுத்துப் பிடிப்புடன் இன்னுமொருவர் வருகிறார்.

வாருங்கள் வணக்கம், வழங்குங்கள் வரிசை கட்டி.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, நந்தி said:

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

அடி பலம் போல் இருக்கின்றது....

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

அடி பலம் போல் இருக்கின்றது....

 

மனைவியின் கையால் அடி வாங்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா அண்ணன்.வாங்கிப்பாருங்கள் வாழ்க்கை ருசிக்கும்.அடிக்கிற கைதான் அணைக்கும்.அது மட்டுமில்ல அதுக்கும் மேல.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 4/4/2019 at 5:47 AM, நந்தி said:

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மனைவி சொல் மந்திரமோ! மருந்தோ!! ஏன் சொன்னாள்? எதற்காகச் சொன்னாள்?? நந்தியவர்களுக்கு இன்னுமா புரியவில்லை.!! 🤣🤣🤣🤣 

கவிதை அருமை நந்தி. 👏

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரசிக்கத்தக்க  கவிதை  வாழ்த்துக்கள்  நந்தி   நல்வரவுகளும்.  

மனைவி  சொல்லே   மந்திரம்  எனும்  தந்திரத்தைத்    தானே  இந்த  அப்பாவி  ஆண்வர்க்கம்  காலாகாலமாக  கடைப்பிடித்து    வருகிறது. ஆப்பிள்  ஆய்ந்து  கொடுத்ததில்  தொடங்கி   மாயமானைத்  தேடி  ஓடுப்பட்டதில்    தொடர்ந்து  இன்று  வரையும்  .. ஓய   மாட்டோம் மாட்டோம்    …

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • 50 இலும் ஆசை வரும்.அது ஒன்லைனலும் வரும்.
  • சிங்களம் பயப்படுவது இந்த சிந்தனை முறைக்குத்தான்.  பாராட்டுக்கள் மாணவர்களே. 👏👏👍👍👏
  • தென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன   இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 143 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 164 பேர் பலியாகி உள்ளனர்.   தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 21 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.       கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 17-ந்தேதி 1 லட்சம் பி.சி.ஆர். கருவிகளும், 26ம் தேதி 1.5 லட்சம் பி.சி.ஆர், கருவிகள்  என 2.5 லட்சம் பி.சி.ஆர், கருவிகள் தமிழகத்திற்கு வந்தன.இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1½ லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன.இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.இதுவரை தென்கொரியாவில் இருந்து 4 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வந்துள்ளன. இன்னும் 6 லட்சம் கருவிகள் வரவேண்டி உள்ளது. வாரத்திற்கு ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் கருவிகள் வீதம் எஞ்சிய கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும்.பி.சி.ஆர். கருவிகள் மூலம் தமிழகம் முழுவதும் நாள் தோறும் 12 ஆயிரத்து 275 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதுவரை இந்த கருவிகள் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 155 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.தமிழ்நாடு முழுவதும் 72 பரிசோதனை மையங்களில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இதில் 43 அரசு மருத்துவமனைகள், மீதியுள்ள 29 மருத்துவமனைகள் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகும்.கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகளை வர வழைத்தது. ஆனால் அது தவறான முடிவுகளை காட்டியதால் திருப்பி அனுப்பப்பட்டது.பி.சி.ஆர். என்பது ரேபிட் டெஸ்ட் போன்று இல்லை. முடிவு வருவதற்கு சற்று நேரம் ஆனாலும் சரியான முடிவுகளை காட்டக்கூடியது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/05/31164732/1565068/South-Korean-covid19-PCR-Kit-15-lakhs-arrived-tamilnadu.vpf
  • ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு     மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும்  தொழில் செய்து வருகிறார். அவரது எட்டாம் வகுப்பு படிக்கும் மகளான நேத்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, மகளின் படிப்பு செலவுக்கு சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அவரது செயலை பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியது,  தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நேத்ரா கூறினார். https://www.dailythanthi.com/News/State/2020/05/31172644/Madurai-girl-who-helped-poor-people--Prime-Minister.vpf  
  • கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் நெற்செய்கை காணி தொடர்பில் நீண்ட கால பிரச்சினை காணப்படும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனத்தையும், பிரதேசவாசிகள் சிலரையும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்ய முற்பட்டபோதே குறித்த பதற்றமான நிலை தோன்றியுள்ளது. கைது செய்து ஆட்களை ஏற்றியவாறு புறப்பட்ட வாகனத்தை பிரதேச மக்கள் ஒன்று கூடி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/கிளிநொச்சி-ஆனைவிழுந்தான/