• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

சிக்கும் பணம்: மக்கள் கோபம்..!

Recommended Posts

சிக்கும் பணம்: மக்கள் கோபம்

சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம்

"உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா...? எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...? எவ்வளவு குடுத்தாங்க...? தவணையா, புல்லா...?" எந்த தொகுதியை சுற்றி வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது

சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த கோஷங்களை பிரசாரமாக நடத்துகின்றன. பிரபலங்களும், தம் பங்குக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம்

காரணம், ஓட்டுக்கு தரப்படும் பணம், 'தங்களுக்கு சொந்தமானது' என்ற எண்ணம், மக்கள் மனதில் இறுகிக் கிடக்கிறது. அரசியல்வாதி நம்மிடம் பல வழிகளில் கொள்ளை அடித்த பணத்தை, நமக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் தேர்தல். அதை தடுப்பது தான் தவறு என்கின்றனர். 'துரைமுருகன் வீட்டில் இத்தனை கோடி சிக்கியிருக்கிறது என்று செய்தி வாசிக்கின்றனர். அவர் என்ன, ஏர் பிடித்து வயலில் உழைத்து சம்பாதித்த பணமா அது? பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள்


Tamil_News_large_2248585.jpg       gallerye_124243524_2248585.jpg

'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே?' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா? உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை? தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன? ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா?' என, கேட்கின்றனர்.

'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்?' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது. 

'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா?' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். 

எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு காட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது.

'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா? அத செய்யாம ஜனங்கள தடுக்கறதும் பயமுறுத்துறதும், வேஸ்ட்,' என, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டிக்காட்டியதை மறுக்க இயலவில்லை.

பொது புத்தியில் மக்கள், பணத்துக்காக ஒரு நியாயத்தைச் சொன்னால், அதை ஏற்க சட்டம் அனுமதிக்காது தான். ஆனால், சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் அமைப்புகள் மீதுமே நம்பிக்கை குறைந்து வருகிற சூழலில், மக்கள் பேச்சில் உள்ள நியாயத்தை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும், அவசரமாக நமக்கு தேவைப்படுவது, தேர்தல் சீர்திருத்தம் என்பதை, அரசியல்வாதிகள் உணர எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வாக்காளர்கள்.

தினமலர்

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி தேவை: இராணுவத்தளபதி வலியுறுத்து ஊரடங்கு தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்றையதினம் ஊரடங்கு ஆறு மணிநேரம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஒரு மீற்றருக்கும் அதிகமாக இடைவெளியை ஒருவரிடத்திலிருந்து பிறிதொருவர் பேணுவது அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் எமக்கு வெளிப்படையாக தெரியாது விட்டாலும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளப்படுத்தப்படாதிருப்பதானது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  https://www.virakesari.lk/article/78923
  • கொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் விடுமுறை..!   (ஆர்.ராம்) கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் எவையும் இன்றையதினமும் நடைபெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டள்ளது. கொழும்பு பங்குசந்தைக்கு இன்றையதினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிணை முறிகள் சந்தை மற்றும் வங்கிகள் அனைத்தும் இன்றையதினம் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இயலுமானவரையில் வாடிக்கையாளர்கள் இணையவழி மூலமான கொடுக்கல் வாங்கல்களை பேணுமாறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/78922
  • அமெரிக்க டொலர் 192 ரூபாய் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி வெள்ளிக்கிழமை ரூ. 191.99 ஆக பதிவாகியிருந்தது. வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்று 192 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  உலகளாவிய ரீதியில் COVID 19 பரவலுடன் சர்வதேச ரீதியில் நாடுகள் முடங்கியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரும் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புகைகளும் குறைவடைந்துள்ளமையின் காரணமாக, அமெரிக்க டொலருக்கு சந்தையில் காண்படும் கேள்வி அதிகரித்துள்ளமையால் ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணயமாற்று முகவர் ஒருவர் தமிழ் மிரருக்கு தெரிவித்திருந்தார். அமெரிக்க டொலரைப் போன்று, ஐக்கிய இராஜ்ஜிய ஸ்ரேளிங் பவுண் ஒன்றின் விற்பனை விலையும் அதிகரித்து 236.74 ரூபாயாக பதிவாகியிருந்தது.   http://www.tamilmirror.lk/வணிகம்/அமரகக-டலர-192-ரபய/47-247544
  • (ஆர்.ராம்) 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 3.6 சதவீதம் குறைந்துp;">1,931 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபைp;">தெரிவித்துள்ளது.</span></p> நாட்டில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்p;">ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இலங்கை ஏற்றுமதியாளர்கள் 174 நாடுகளுக்கு 2,429 தயாரிப்புகளைp அனுப்புவதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது. மேலும், இலங்கைளின் ஏற்றுமதிகளை அமெரிக்கா 260 மில்லியன் டொலர்களுக்கும் இங்கிலாந்து, 95 மில்லியன் டொலர்களுக்கும், இந்தியா 73 மில்லியன் டொலர்களுக்கும், ஜெர்மனி 51 மில்லியன் டொலர்களுக்கும், இத்தாலி 40 மில்லியன் டொலர்களுக்கும் கொள்வனவு செய்கின்றன. குறிப்பாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பெறப்படும் 939 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி,ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கொள்வனவு முக்கியமானது. தேயிலை ஏற்றுமதி மூலம் 208 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதோடு இலங்கை தேயிலைக் கொள்வனவில், துருக்கி மற்றும் ரான் ஆகிய நாடுகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன. தெங்கு உற்பத்திப் பொருட்கள் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைப்பதோடு அமெரிக்கா,ஜெர்மனி, இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த உற்பதிகளை கொள்வனவு செய்கின்றன. முடிவுறுத்தப்பட்ட இறப்பர் தயாரிப்புகளான டயர்கள்,கையுறைகள், முத்திரைகள், உள்ளிட்ட பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், வியட்நாம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  அந்த ஏற்றுமதி ஊடாக 142 மில்லியன் டொலர்கள் வருமானமான கிடைத்து வந்தபோதும்  அவ்வருமானம் 9 மில்லியன் டொலர்களால் குறைவடைந்துள்ளன.மின்சார மற்றும் மின்னணு மற்றும் இயந்திர தயாரிப்புகளை இந்தியா, மாலத்தீவு மற்றும் மெக்ஸிகோவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்வதால் 12 மில்லியன் டொலர்கள் வருமானத்தினை பெற முடிந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/78924