ரஞ்சித்

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு

Recommended Posts

30 minutes ago, குமாரசாமி said:

புலிகளை அழித்துவிட்டோம்.

இப்போது அதன் சாம்பலையும் அதிர்வுகளையும்  சுவடுகளையும் அழிக்கவேண்டும்.

அதுதான் புலிவாந்திகளின்  இன்றைய இலட்சியம்.

சரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது எல்லோரும் சம உரிமையுடன் வாழ்வோம் என்று இறுதி 10 வருடங்களில் ஒரு சிங்கள அரசியல்வாதியாவது சொல்லியிருக்கின்றாரா?

புலி என்று சொன்னால் மட்டும் எப்படிப்பட்ட திரியானாலும் கொலரை மேலுக்கு இழுத்து விட்டு வியாக்கியானம் புசத்த வந்துவிடுவார்கள்.

ஏன் சிங்களவன் சொல்ல வேண்டும்? அவனுக்கு வேலை முடிந்து விட்டதல்லவா? கொலர் இருப்பவன் இழுத்தும் விடலாம் மடித்தும் விடலாம்! இதுக்கேன் கோபம்? உங்களால் முடிந்தால் இந்த விவாதத்திற்கு வாந்தி பூந்தி என்று பட்டங்கள் சூட்டுவது விடுத்து எழுதியதில் என்ன பிழை என்று சுட்டிக் காட்டுங்கள்! அதைத் தொடர்ந்து உரையாடலாம்! 

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, Justin said:

உங்களுக்கும்  உங்களைப் போன்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளை தூற்றவேண்டும். அதுதான் லட்சியம். அப்படிப்பட்டவர்களுடன் கருத்துக்கள் வைப்பதிலோ அல்லது வாதாடுவதிலோ சுவாரசியம் இல்லை.

வாதாடுவதில் பலன் என்று உங்களைப்போன்றவர்களுடன் எதிர்பார்க்க கூடாது.

புலிகளும் தவறு செய்தார்கள் என்பவர்கள் மத்தியில் தான் உங்கள் விரோதங்களை விதைக்கின்றீர்கள்.

Share this post

Link to post
Share on other sites

உலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்..

ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.... 
 
Share this post

Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

ஓம்! எனக்கு நீங்கள் உழைத்து சோறு போட நான் கணணி முன் இருந்து புலிகளைத் தூற்றி அதில் விருது வாங்கும் இலட்சியத்துடன் உழைக்கிறேன்! அதனால் நான் உங்கள் கருத்துக்கு அஞ்ச வேண்டும் இல்லையா? இங்கே என் கருத்து இருக்கிறது! உங்களுக்கு அறிவு/தகவல் பூர்வமாக அதற்கு எதிர்க்கருத்து இருந்தால் பதியலாம்! அல்லது வான் கோழி போல மண்ணில் தலை புதைத்துக் கொண்டு 'புலி வாந்தி: என்று தூற்றலாம்! இந்த சுதந்திரம் இருக்கிறது, விக்கினமில்லை!

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, putthan said:

உலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்..

ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.... 
 
புலிகள் அந்தச் சான்றுகளுக்காக மக்களை மறித்து வைத்திருந்தார்கள் என்று ஐ.நா வுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்திருக்கும் போது எப்படி அந்த சான்றுகளை வைத்து ஐ.நாவின் துலங்கலை எதிர்பார்க்கிறீர்கள்? இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் "மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட  ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள்? என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். "ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார்.  வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, putthan said:

உலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்..

ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.... 
 
ஐ நா அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரு அமைப்பு. 

Quote

“The United States is one of 193 countries in the United Nations, and yet we pay 22 per cent of the entire budget and more,” Trump said.

Total revenue by UN Agency 2016

பல முள்ள நாடுகள் பணக்கார நாடுகளின் நிதியில் இயங்கும் ஐ நா அமைப்பு அவர்களை அனுசரித்தே செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக 2015 ல் இருந்து சிரியாவில் நடக்கும் யுத்தம். இதில் பிரதானமாக சம்மந்தப்படும் நாடுகள் அமரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் அரசுக்கு எதிரானவர்களோடு கூட்டு ரசியா அரசின் பக்கம். என்னும் பல நாடுகள் இதில் சம்மந்தப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்கள் ஐந்து லட்சத்துக்கும் மேல்  சொந்த நாட்டுக்கு வெளியே அகதிகளாக ஐந்து மில்லியன் மக்களும் நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்து ஆறு மில்லயன் மக்களும் அகதிகாளாக உள்ளனர். இத்தனை மில்லியன் மக்களின் அவல வாழ்விலும் உயிர்ப்பலியிலும் ஐ நா வின் அதிகாரம் என்பது கொடிய போரை தடுப்பதாகவோ மக்களை காப்பதாகவோ இல்லை. அடிச்சு துவைச்சு பாதி செத்த நிலையில் உள்ளவனுக்கு ஓரு கப் யூஸ் கொடுத்துவிட்டு அதிகமாக யார் ஐ நா வுக்கு நிதி உதவி செய்தார்களோ அவர்களுக்கு ஆதரவாக நியாயங்கள் போசுவதுதான். அதையேதான் எல்லா நாடுகளிலும் செய்கின்றார்கள். இலங்கையிலும் செய்தார்கள்.  ஐ நா  வை யார் நடத்துகின்றார்கள் அல்லது எது நடத்துகின்றது என்று தெரியாமல் நாம் தான் நியாயம் தர்மம் அறம் என்ற நினைப்போடு அவர்களை அண்ணாந்து பார்க்கின்றோம். 

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, Justin said:

.  வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

ஜஸ்டின்,

 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல)  புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009  வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் । 

அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என   நீங்கள் கருதுகிறீர்கள் 

Edited by சாமானியன்
Para 2 added

Share this post

Link to post
Share on other sites

பாதுகாப்பு வலயங்களுக்கு வரசொல்லி அங்கு வைத்து படுகொலைகள் நடத்தப்பட்டதையும், மருத்துவமனைகள் எங்கிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்ட பின் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் என் கனவில் வந்தது!
வேறு யாருக்கும் கனவில் தெரிஞ்சதோ தெரியல?

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, சாமானியன் said:

ஜஸ்டின்,

 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல)  புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009  வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் । 

அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என   நீங்கள் கருதுகிறீர்கள் 

இதை ஏன் வன்னி மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சி என்று கொள்கிறீர்கள்? மகிந்த வந்தால் சர்வதேச தலையீடு வரும் அளவுக்கு நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு புலிகளிடம் இருந்ததா இல்லையா? அந்த எதிர் பார்ப்பு ஒரு தீர்வைப் பெறும் வழியாக நோக்கப் பட்டிருக்கலாம் அல்லவா? ஆனால், சர்வதேசம் அப்படி வரமுன்னர் (அவர்கள் வரும் எண்ணத்திலேயே இருக்கவில்லை என்பது வேறு கதை!) வன்னி மக்கள் ஒரு தொகையினராவது சாவார்களே என்ற எண்ணம் புலிகளுக்கு ஏன் வரவில்லை? இதற்கு யாரிடமும் பதில் இல்லை! உங்களிடம் இருக்கிறதா?

என் பதில் அவர்களுக்கு மக்கள் சிலரைப் பலி கொடுத்தாவது ஏதாவது செய்வோம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது! என் கருத்தில் இந்த மக்களைப் பலியாக்க நினைத்தது தவறு!  இது தவறு என்று ஏற்றுக் கொண்டால் புலிகள் மக்களைத் தடுத்து வைத்ததையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் என்பதால், பலர் மேலே ஏராளன்  போல  கனவிலேயே இருக்கிறார்கள்.

இருந்து விட்டுப் போகட்டும்! ஆனால், அதற்காக ஒரு systematic ஆக நடந்த பணயம் வைத்தலை ஏதோ தற்செயலான அரிதான சம்பவமாகக் காட்டுவதைத் தான் எதிர்க்கிறேன்.

9 hours ago, ஏராளன் said:

பாதுகாப்பு வலயங்களுக்கு வரசொல்லி அங்கு வைத்து படுகொலைகள் நடத்தப்பட்டதையும், மருத்துவமனைகள் எங்கிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்ட பின் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் என் கனவில் வந்தது!
வேறு யாருக்கும் கனவில் தெரிஞ்சதோ தெரியல?

இது கனவில்லை ஏராளன்! செய்திகளில் வெளிவந்தது! அந்த மக்கள் சிங்களவனின் அறிவித்தலை நம்பி வலயங்களுக்குப் போகாமல், எதிர் திசையில் நகர்ந்து இராணுவ  முன்னரங்கை நோக்கிப் போயிருக்கலாம்! யார் தடுத்தது அந்த நகர்வை? அது உங்களுக்கு எந்தக் கனவிலும் வராது! ஆனால்,  நடந்த சமகாலத்திலேயே செய்திகளாக வெளி வந்தது! அதற்குப் பிறகு சில நூல்களும் வெளி வந்து விட்டன! 

Share this post

Link to post
Share on other sites

உங்களை போல ஒரு சிலருக்கு தான் முழு விபரமும் தெரிஞ்சிருக்கு அண்ணை!

Share this post

Link to post
Share on other sites

வன்னியில் யுத்தம் தொடங்கி முதல் நாளே மக்கள் அரசின் பக்கம் போக வெளிக்கிட்டார்கள்..அப்படிப் போன மக்களை புலிகள் தடுத்தார்கள்...இப்படி ஒவ்வொருவராய் போக வெளிக் கிட்டால் எல்லாச் சனமும் போக வெளிக்கிடும்...அப்படி எல்லாச் சனமும் அங்கால போனால் யுத்தம் இலகுவாய் முடிந்திடும்{புலிகள் மட்டும் இல்லை மக்களுக்காய் போராடும் எந்த அமைப்பாய் இருந்தாலும் இதைத் தான் செய்து இருப்பார்கள்.}. அப்படி போக வெளிக்கிட்ட சனம் தங்கட பிள்ளைகள், உறவினர்கள் இயக்கத்தில் இருந்தால் அவர்களை இழுத்து கொண்டு போக தொடங்கிட்டுது...மக்கள் தங்களோட இருந்தால் புலம் பேர் மக்கள் உலக நாடுகளிட்டை கெஞ்சி,கூத்தாடி யுத்தம் நிறுத்தப்படும் என்று புலிகள் எதிர் பாத்திருக்கலாம்....எல்லாவத்திக்கும் மேலாக இது புலிகளுக்கான யுத்தம் இல்லை,மக்களுக்கான யுத்தம்...மக்கள்,புலிகளோடு இல்லாட்டில் எதற்கு புலிகள் போராட வேண்டும் 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Justin said:

அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட  ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள்? என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். "ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார்.  வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

அவர் மூட்டி வைத்து காறியம் பண்ணிய விளைவுகளை இப்பொழுது அனுபவிக்கின்றார்..புலிகளை அழித்து சிங்கள மக்களின் தயவால் ஆட்சி அமைக்கலாம் என்ற நினைப்புக்கு சிறுபான்மை மக்களும் சிங்கள மக்களின் 40% மானவ‌ர்களும் எதிர்ப்பு தெரிவித்து விட்டதின் பயன் அவர் ஆட்சி யமைக்க முடியாமல் போய்விட்டது...
அதாவது ஜனாதிபதியாக இறக்கும்வரை செயல் படலாம் என்று நினைத்த‌து பிழைத்து போய்விட்டது...இனிமேல் ஜனாதிபதியாக வ‌ந்தாலும் தொடர்ந்து இருதடவைகள்  செயற்பட எனைய கட்சிகள் விட மாட்டார்கள்.
ப‌யங்கரவாதத்தை கையாள்வது இலகு ஆனால் சர்வதேச‌த்தின் (அமெரிக்கா,சீனா,இந்தியா ,அரபியதேசங்களின் மதபிரச்சாரம்) விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் அரசு நட‌த்துவது மிகவும் கடினமானது....உய்யவும் விடமாட்டார்கள்,அழியவிடமாட்டார்கள்....

சிறிலங்கா என்ற தேசத்தை என்ன காரண‌த்திற்காக‌ உருவாக்கினார்களோ அந்த காரணத்தை இலகுவில் விட்டுகொடுக்கமாட்டார்கள்....பொர்ட் சிற்றி போன்ற இன்னோரு தீவை உருவாக்க முடியாத நாடுகள் சிறிலங்கா முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத்தான் விரும்புவார்கள்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ஏராளன் said:

உங்களை போல ஒரு சிலருக்கு தான் முழு விபரமும் தெரிஞ்சிருக்கு அண்ணை!

எது உங்களுக்கு தெரியாது எண்டு அண்ணையிட்டை  கேட்டுப்பாருங்கோ........அதுவும் அவருக்கு தெரியாது :grin:

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, ஏராளன் said:

உங்களை போல ஒரு சிலருக்கு தான் முழு விபரமும் தெரிஞ்சிருக்கு அண்ணை!

ஏராளன், உங்கள் கருத்தில் இருக்கும் எள்ளலை உதாசீனம் செய்து விடுகிறேன்!

இது உகந்த திரி என்பதால் புலிகள் செய்த தவறு, அதனால் தமிழர்கள் இறந்தது என்பன பற்றிப் பேசினேன். நீங்கள் செய்ய வேண்டியது எனவென்றால், நான் சொன்ன குறிப்பிட்ட சம்பவங்களில் எது நடக்கவில்லை, எது பிழை என்று சுட்டிக் காட்ட வேண்டியது தான்! அதைச் செய்தால் நான் சொல்வது வெறும் புலிவாந்தியா அல்லது உண்மையான சம்பவங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளா என்பது தெரிந்து விடும் அல்லவா? 

எனவே, குறிப்பிட்டுச் சொல்லி எது நான் சொன்னதில் பிழை என்று பட்டியல் இடுங்கள்! அதற்கு ஆதாரங்களும் தாருங்கள்! செய்ய முடியுமா உங்களால்?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, ரதி said:

வன்னியில் யுத்தம் தொடங்கி முதல் நாளே மக்கள் அரசின் பக்கம் போக வெளிக்கிட்டார்கள்..அப்படிப் போன மக்களை புலிகள் தடுத்தார்கள்...இப்படி ஒவ்வொருவராய் போக வெளிக் கிட்டால் எல்லாச் சனமும் போக வெளிக்கிடும்...அப்படி எல்லாச் சனமும் அங்கால போனால் யுத்தம் இலகுவாய் முடிந்திடும்{புலிகள் மட்டும் இல்லை மக்களுக்காய் போராடும் எந்த அமைப்பாய் இருந்தாலும் இதைத் தான் செய்து இருப்பார்கள்.}. அப்படி போக வெளிக்கிட்ட சனம் தங்கட பிள்ளைகள், உறவினர்கள் இயக்கத்தில் இருந்தால் அவர்களை இழுத்து கொண்டு போக தொடங்கிட்டுது...மக்கள் தங்களோட இருந்தால் புலம் பேர் மக்கள் உலக நாடுகளிட்டை கெஞ்சி,கூத்தாடி யுத்தம் நிறுத்தப்படும் என்று புலிகள் எதிர் பாத்திருக்கலாம்....எல்லாவத்திக்கும் மேலாக இது புலிகளுக்கான யுத்தம் இல்லை,மக்களுக்கான யுத்தம்...மக்கள்,புலிகளோடு இல்லாட்டில் எதற்கு புலிகள் போராட வேண்டும் 

புலிகள் தங்கள் அமைப்பையும் தலைமையும் காப்பாற்ற சில பத்து அல்லது சில நூறு உயிர்களை (மக்களின் உயிர்களை)க் காவு கொடுக்க தயாராக இருப்போர் தான்! உள்வீட்டுப் பிரச்சினைகளான மாத்தையா வேலை, கிட்டு கொலை முயற்சி போன்ற சம்பவங்களின் போது இது தெளிவாகத் தெரிந்தது! நீங்கள் கேட்ட கடைசிக் கேள்வி ஜனவரி 2009 இல் மக்கள் குறு நிலப்பரப்பில் இருந்து இரகசிய வழிகள் தேடி தப்பி ஓட முயன்ற போது புலிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்! மக்கள் வேண்டாமென்றால் போராடி மடிய நாங்கள் யார் என்ற முடிவுக்கு புலிகள் வந்திருந்தால் யுத்தம் நின்றிருக்கும். புலிகளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் வன்னி மக்கள் பல்லாயிரம் பேர் தப்பியிருப்பர்! 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 4/5/2019 at 11:11 PM, குமாரசாமி said:

எது உங்களுக்கு தெரியாது எண்டு அண்ணையிட்டை  கேட்டுப்பாருங்கோ........அதுவும் அவருக்கு தெரியாது :grin:

எல்லாம் தெரிந்தவர் என்று எவரும் இல்லை! அப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைக்க எங்கள் மூளை கட்டமைக்கப் படவும் இல்லை!

ஆனால், "இது தெரியாது, தேடித் தெரிந்து கொள்வோம்!" என்ற ஊக்கம் மட்டுமே தேவை! அந்த ஊக்கம் இருந்தால் நீங்கள் அறிவாளி!அது இல்லா விட்டால் தேடலற்ற சோம்பேறி! ஊக்கமும் இல்லாமல் ஊக்கம் உடையோரை எள்ளி நகையாடுபவராக இருந்தால் தன் அறிவின்மையையே பெருமை என நினைக்கும் *****! இதில் எது நீங்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா?😉 

Edited by நியானி
தணிக்கை

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Justin said:

ஏராளன், உங்கள் கருத்தில் இருக்கும் எள்ளலை உதாசீனம் செய்து விடுகிறேன்!

இது உகந்த திரி என்பதால் புலிகள் செய்த தவறு, அதனால் தமிழர்கள் இறந்தது என்பன பற்றிப் பேசினேன். நீங்கள் செய்ய வேண்டியது எனவென்றால், நான் சொன்ன குறிப்பிட்ட சம்பவங்களில் எது நடக்கவில்லை, எது பிழை என்று சுட்டிக் காட்ட வேண்டியது தான்! அதைச் செய்தால் நான் சொல்வது வெறும் புலிவாந்தியா அல்லது உண்மையான சம்பவங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளா என்பது தெரிந்து விடும் அல்லவா? 

எனவே, குறிப்பிட்டுச் சொல்லி எது நான் சொன்னதில் பிழை என்று பட்டியல் இடுங்கள்! அதற்கு ஆதாரங்களும் தாருங்கள்! செய்ய முடியுமா உங்களால்?

ஏற்கனவே சில கருத்துகளை சொன்னேன், நீங்கள் என்னுடைய கருத்துக்களை புறந்தள்ளி உங்கள் கருத்து மட்டுமே சரி என வாதிடுவதால் தொடர்ந்து கருத்தாட விரும்பவில்லை.
இது நீதிமன்றம் இல்லை தானே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க. கருத்துகளத்தில உங்கள் கருத்துகளை உள்வாங்கினேன், ஆனால் என் அறிவிற்கு உங்கள் கருத்துகளில் பாதிக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட தரப்பினரை மட்டும் தாக்கி அவர்கள் மட்டும் தவறு செய்தது போல் எழுதுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
த.வி.பு வினரின் தோல்வி ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வுரிமை சார்ந்த தோல்வியாக நான் பார்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளும் இனி வரும் காலங்களும் அதை தெளிவாக எல்லோருக்கும் உணர்த்தும்.
அங்கு இருந்த மக்களோடு நானும் உரையாடியுள்ளேன், யாரும் இவ்வளவு மோசமாக குற்றம் சாட்டவில்லை.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஏராளன் said:

ஏராளன், நான் சில நடந்த , நன்கு பதிவு செய்யப் பட்டு அவதானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டேன்! அவற்றின் அடிப்படையில் என் அபிப்பிராயம் என்ன என்பதையும் குறிப்பிட்டேன். என் அபிப்பிராயம் சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை! ஆனால், நீங்கள் கேள்வி கேட்டது என் அபிப்பிராயத்தை அல்ல! நடந்த சம்பவங்கள் நடந்தனவா? என்று 10 ஆண்டுகளின் பின் கேட்டீர்கள்! அதற்கே என் மறுதலிப்பு. அபிப்பிராயம் என்பது ஒருவரது சார்பு எதிர்ப்பு அரசியல் சார்ந்தும், அனுபவங்கள் சார்ந்தும் இருக்கலாம்! ஆனால், சில சம்பவங்களின் விளைவை வைத்து நாம் அது சரியா பிழையா என்று சொல்ல முடியும்! அதற்கு அரசியலும் அனுபவமும் சார்பும் எதிர்ப்பும் அவசியமில்லை! 

ஆனால், இங்கே நீங்கள் உட்பட சிலர் எதிர்பார்ப்பது, சம்பவங்களின் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சார்ந்திருக்கும் சார்பு எதிர்ப்பு அரசியல் ஊடாக அவற்றைப் பார்த்து சிறுப்பித்து, பெருப்பித்து , வளைத்து வரலாற்றை  எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை!

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Justin said:

புலிகள் தங்கள் அமைப்பையும் தலைமையும் காப்பாற்ற சில பத்து அல்லது சில நூறு உயிர்களை (மக்களின் உயிர்களை)க் காவு கொடுக்க தயாராக இருப்போர் தான்! உள்வீட்டுப் பிரச்சினைகளான மாத்தையா வேலை, கிட்டு கொலை முயற்சி போன்ற சம்பவங்களின் போது இது தெளிவாகத் தெரிந்தது! நீங்கள் கேட்ட கடைசிக் கேள்வி ஜனவரி 2009 இல் மக்கள் குறு நிலப்பரப்பில் இருந்து இரகசிய வழிகள் தேடி தப்பி ஓட முயன்ற போது புலிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்! மக்கள் வேண்டாமென்றால் போராடி மடிய நாங்கள் யார் என்ற முடிவுக்கு புலிகள் வந்திருந்தால் யுத்தம் நின்றிருக்கும். புலிகளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் வன்னி மக்கள் பல்லாயிரம் பேர் தப்பியிருப்பர்! 

புலிகளும் எம்மவர்கள் தானே ...தாங்கள்,தங்களுடைய மக்களுக்காய் போராடும் போது அந்த மக்கள் தம்மை விட்டு போவது பிழை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் ...தவிர புலிகளும் தாங்கள் இப்படி வந்து இறுகுவோம் என்று எதிர் பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன் 

Share this post

Link to post
Share on other sites
On 4/5/2019 at 1:26 PM, சண்டமாருதன் said:

ஐ நா அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரு அமைப்பு. 

.  ஐ நா  வை யார் நடத்துகின்றார்கள் அல்லது எது நடத்துகின்றது என்று தெரியாமல் நாம் தான் நியாயம் தர்மம் அறம் என்ற நினைப்போடு அவர்களை அண்ணாந்து பார்க்கின்றோம். 

வாழ்வாதார ,மற்றும் மனித உரிமைகள் பறிக்கபப்பட்ட மனிதர்கள் எங்கு தான் முறையிடுவது என்ற கேள்வி இந்த உலகில் இன்னும் தொக்கி நிற்கின்றது .....

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, putthan said:

வாழ்வாதார ,மற்றும் மனித உரிமைகள் பறிக்கபப்பட்ட மனிதர்கள் எங்கு தான் முறையிடுவது என்ற கேள்வி இந்த உலகில் இன்னும் தொக்கி நிற்கின்றது .....

பலமானவர்கள் பலவீனமானவர்களை வேட்டையாடிக்கொள்வதுதான் மனித இயல்பு. ஏனெனில் மனிதன் அடிப்படையில் ஒரு வேட்டை விலங்கு, எவ்வளவுதான் பண்பட்டாலும், நாகரீகம் அடைந்தாலும் அறிவு  விஞ்ஞானம் தொழில்நுட்பம்  மருத்துவம் என பல நூறு துறைகள் வளர்ந்தாலும் இவை அனைத்தும்  சக மனிதனை அழிக்க அக்கிரமிக்க  வியாபார ரீதியில் சுரண்ட  என பல வடிவங்களில் வேட்டையாடும் கருவிகளாகவும்  பயன்படுகின்றது. எம்மைப்போல் சிறிய இனக்கூட்டம் சிறிய தேசம் சமூக முரண்பாடுகளால் பிளவுபட்ட மக்கள் கூட்டம் இலகுவாக வேட்டையாடப்படும்.  எமக்கு நடந்த அனுபவங்களும் இதுதான். ஆனாலும் அனுபவத்தில் இருந்தும்  எதையும் நாங்கள் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் எமது அவல வாழ்வின் பிரதான உண்மை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று பாலர் வகுப்பிலேயே சொல்லித் தருகின்றார்கள் இருந்தும் எம்மால் அதை ஏற்க முடிவதில்லை. ஐ நா வோ இல்லை வேறு ஒரு நாடோ எம்மை காப்பாற்றுவார்கள் அல்லது எமது உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என நம்புகின்றோம். அவர்கள் ஏன் அதைசெய்ய வேண்டும் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் குறித்து சிந்திப்பதில்லை. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, சண்டமாருதன் said:

. ஐ நா வோ இல்லை வேறு ஒரு நாடோ எம்மை காப்பாற்றுவார்கள் அல்லது எமது உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என நம்புகின்றோம். அவர்கள் ஏன் அதைசெய்ய வேண்டும் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் குறித்து சிந்திப்பதில்லை. 

உரிமைகள் திட்டமிட்டு பரிக்கப்படுகின்றது இதை ஒன்றுபட்டாலும் கிடைக்கப்போவதில்லை போராடியும் கிடைக்கப்போவதில்லை என்பதை அனுபவரீதியாக நாங்கள் உணர்ந்து விட்டோம்..பாதிக்க பட்ட தனிமனிதன் நீதிமன்றம் செல்வது போன்று,இன‌க்குழுமமும் தனது குறைகளை கூற ஒர் நீதிமன்றம் தேவைதானே....

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, putthan said:

எதிர்பார்த்தாலும் நடமுறையில் அ;ப்படி ஒரு நீதி மன்ற மும் இல்லை.  ஐ நா போன்ற அமைப்புகள் இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவனுக்கு சார்பாக இல்லை. பலமானவன் சொல்வதை கேட்கும் நிலையிலேயே  இருக்கின்றது. உலகில் போர்களும் அதனால் பல மில்லியன் மக்கள் கொல்லப்படுவதும் உடமைகளை இழந்து அகதியாவதற்கும் காரணமாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பது அமரிக்கா. அமரிக்காவுக்கு எதிராக உலக நீதி மன்றம் எதை செய்ய முடியும்? ஒரு இனக் குழுமம் ஒன்றுபட்ட சக்தியாக பலமாக இருக்கும் போது பேரம் பேசும் தகுதியை பெறுகின்றது. புலிகள் பலமாக இருந்தவரை தான் ஏனைய நாடுகள் எமது பிரச்சனைகளை சொற்பமேனும் காதுகொடுத்து கேட்க நேர்ந்தது. புலிகளுக்கு முன்பும் பின்பும் எமது பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்ள வில்லை என்பது மட்டுமில்லாமல் இன அழிப்பு குற்றச் சாட்டில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நோக்கிலேயே உள்ளது. பலமான நாடுகள் சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை. அதனால் லாபம்  இல்லை. ஐ நா பலமான நாடுகளை  அனுசரித்தே செல்கின்றது. ஈழம் தமிழகம் மற்றும் உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் ஒரு பெருவட்டமாக ஐக்கியப் படுவதும் ஒன்றுபட்ட அமைப்புகள் உருவாகுவதும் வியாபாரங்களில் வளர்வதும் போன்ற நிலை ஏற்படும்போது சில அனுகூலங்கள் ஏற்பட வாய்புள்ளது. 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, சண்டமாருதன் said:

 ஈழம் தமிழகம் மற்றும் உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் ஒரு பெருவட்டமாக ஐக்கியப் படுவதும் ஒன்றுபட்ட அமைப்புகள் உருவாகுவதும் வியாபாரங்களில் வளர்வதும் போன்ற நிலை ஏற்படும்போது சில அனுகூலங்கள் ஏற்பட வாய்புள்ளது. 

இப்படியான ஒன்றபடுதலையும் இந்திய இலங்கை அரசுகள் விரும்பாது தானே?
தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியும் கல்வி அறிவியல் வளர்ச்சியும் தான் அவர்களின் எதிர்கால இருப்பை சாத்தியப்படுத்தும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.