Jump to content

மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மறைமாவட்ட ஆயர் – பிரான்சின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

April 5, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG-20190404-WA0002.jpg?resize=800%2C389

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மடு அன்னையின் திருத்தலத்திற்கும் உயர்ஸ்தானிகர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/117648/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் இருக்கிற ஆட்களையும் மதத்தை மாத்த சொல்லி காசு கொடுத்திருப்பார் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

மிச்சம் இருக்கிற ஆட்களையும் மதத்தை மாத்த சொல்லி காசு கொடுத்திருப்பார் 😟

சிவராத்திரிக்கு... திருக்கேதீஸ்வர  கோயில் வாசலில்,
என்ன குழப்படி  செய்தனீங்கள்..... என்று நேரில் கேட்க வந்திருப்பார்,
என்று நான்... நினைக்கவில்லை. 🌚

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மிச்சம் இருக்கிற ஆட்களையும் மதத்தை மாத்த சொல்லி காசு கொடுத்திருப்பார் 😟

40 minutes ago, தமிழ் சிறி said:

சிவராத்திரிக்கு... திருக்கேதீஸ்வர  கோயில் வாசலில்,
என்ன குழப்படி  செய்தனீங்கள்..... என்று நேரில் கேட்க வந்திருப்பார்,
என்று நான்... நினைக்கவில்லை. 🌚

சரி மதம் சம்பந்தமாய் அவர்கள் வருகிறார்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். சந்தோசம்

ஆனால் இந்து இந்து எண்டு வாய்கிழிய கத்துற இந்து மகாசங்கங்கள் ஏதாவது வாய்திறந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சரி மதம் சம்பந்தமாய் அவர்கள் வருகிறார்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். சந்தோசம்

ஆனால் இந்து இந்து எண்டு வாய்கிழிய கத்துற இந்து மகாசங்கங்கள் ஏதாவது வாய்திறந்ததா?

திருக்கேதீஸ்வர பிரச்சினையின்  பின்....
மத  நல்லிணக்க குழுவில் இருந்து, இந்து அமைப்பு வெளியேறி விட்டதாகவும்,
அதன் பின்... அவர்களை, மீண்டும் வரும் படி.. அந்தக் குழு, அழைப்பு விடுத்ததாகவும் வந்த செய்திகளை.. யாழ்.களத்தில்  வாசித்தேன்.

ஐயர்...  என்ன முடிவு  சொல்கிறார் என்று, பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ன்.

ஐயர்...  என்ன முடிவு  சொல்கிறார் என்று, பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 😎

ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படல் அவசியம். அதாவது, கத்தோலிக்கப் பாதிரிமாருக்கு மேற்குலக பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு இருக்கும் வசதியென்பது, எமது ஐய்யர்மாருக்குக் கிடையாது. கோயில் சடங்குகளுக்குப் பிறகு ஐய்யர்கூடச் சாதாரணப் பொதுமகன் தான். ஆனால், கத்தோலிக்கக் குருமார் அப்படியில்லை, அவர்களுக்கிருக்கும் சமூக அந்தஸ்த்து பல தொடர்பாடல்களுக்கு உதவுகிறது.

ஆனால், சந்தர்ப்பவாத, சுயநலமிக்க குருமார்களுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்த்தென்பது சிலவேளைகளில் பாதகமாகக்கூட அமையலாம்.

Link to comment
Share on other sites

தவறான போக்கில் பயணிக்கும் சந்தர்ப்பவாத மதவெறியர்களுக்கு பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதரவு கொடுக்காமல் இருப்பதுடன் அவர்களை நல்வழிப்படுத்த முனைவதே சிறந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

இதில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படல் அவசியம். அதாவது, கத்தோலிக்கப் பாதிரிமாருக்கு மேற்குலக பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு இருக்கும் வசதியென்பது, எமது ஐய்யர்மாருக்குக் கிடையாது. கோயில் சடங்குகளுக்குப் பிறகு ஐய்யர்கூடச் சாதாரணப் பொதுமகன் தான். ஆனால், கத்தோலிக்கக் குருமார் அப்படியில்லை, அவர்களுக்கிருக்கும் சமூக அந்தஸ்த்து பல தொடர்பாடல்களுக்கு உதவுகிறது.

ஆனால், சந்தர்ப்பவாத, சுயநலமிக்க குருமார்களுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்த்தென்பது சிலவேளைகளில் பாதகமாகக்கூட அமையலாம்.

இது போன்ற திரிகளில் நான் இப்போது பங்கு பற்றுவதில்லை (மேலுள்ள சில கருத்துகளே இதன் காரணம்). ஆனால் உங்கள் போன்றோருடன் இது பற்றி ஆரோக்கியமாக உரையாட முடியும். 

நீங்கள் சொல்லும் வித்தியாசம் இருப்பது உண்மையே. இதன் காரணம் கத்தோலிக்க மதம் மிகவும் நிறுவன மயப்படுத்தப் பட்டிருக்கிறது. கத்தோலிக்க மத குருவாக வர குறைந்தது 7 ஆண்டுகள் கல்வி கற்கவும் பயிற்சி பெறவும் வேண்டும். வெளியே வரும் போது ஆங்கிலத்திலும் தொடர்பாடலிலும் வேறு ஓரிரு மொழிகளிலும் தேர்ச்சியுடன் வருவார்கள். இந்த முறைசார் கல்வி வசதி சைவக் குருமாருக்கு இல்லாதது ஒரு பெரியகுறை தான். 

உண்மை தான்!

கடந்த 2000 வருடங்களில் உலகில் நடந்த, நடக்கும் அல்லது இனி உருவாகும் சகல மதவெறிப் பயங்கரவாதங்களும் இது போன்று நிறுவனமயப்பட்ட மதக் குழுக்களின் பின்னணியில் தான் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது, நடக்கப் போகிறது. இது உலகெங்கும் பரவலாக நடந்த, நடக்கும் அல்லது உருவாகும் இஸ்லாமிக், பௌத்த, கிறிஸ்தவ மதவெறிப் பயங்கரவாத செயல்கள் / குழுக்கள் அனைத்தினதும் வரலாற்றில் பின்னிப் பிணைந்துள்ள உண்மையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

இதில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படல் அவசியம். அதாவது, கத்தோலிக்கப் பாதிரிமாருக்கு மேற்குலக பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு இருக்கும் வசதியென்பது, எமது ஐய்யர்மாருக்குக் கிடையாது. கோயில் சடங்குகளுக்குப் பிறகு ஐய்யர்கூடச் சாதாரணப் பொதுமகன் தான். ஆனால், கத்தோலிக்கக் குருமார் அப்படியில்லை, அவர்களுக்கிருக்கும் சமூக அந்தஸ்த்து பல தொடர்பாடல்களுக்கு உதவுகிறது.

ஆனால், சந்தர்ப்பவாத, சுயநலமிக்க குருமார்களுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்த்தென்பது சிலவேளைகளில் பாதகமாகக்கூட அமையலாம்.

ரஞ்சித்,
உங்கள் கருத்துக்களை முன்பும் வாசித்துள்ளேன். நீங்கள் ஐயர்களை முன்னிலைப்படுத்துபவர் என்று நினைக்கவிலை, ஆனாலும் இதையொட்டி எனது கருத்து. 

பிறப்பால் வரும் பதவியை, சாதியை இறுக்கப்பற்றுபவர்களால் நீங்கள் சொல்லும் அந்த இடத்துக்கு போகமுடியாது, சார்ந்த குழுவை ஒருமுகப்படுத்தவும் முடியாது. இந்தியாவில் இந்து மதத்தை ஓரளவுக்கு நிறுவனப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதாவது சாதியை பற்றிக்கொண்டு, பிறப்பால் வரும் தகுதியை வைத்துக்கொண்டு, விளைவுகள் எமக்கு தெரிந்தவை.  தமிழர்கள் என்ற அடையாளத்தில் இதுவரை இணைந்திருந்தோம், அது இப்போது உடைக்கப்படுகிறது. திடீரென பார்த்தால் ஒரு குழுவுக்கு பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மற்றக்குழுவுக்கு ஒருவரும் இல்லை. நாங்கள் தமிழ் என்ற அடையாளத்தை விட்டு இந்து என்ற அடையாளத்தில் இணைய வேண்டுமா? எனக்கு மத அடையாளத்தில் ஆர்வமில்லை அதுவும் பிறப்பை முன்னிலைப்படுத்தி வரும் தலைமையில் நிச்சயமாக இல்லை. ஆனால் இப்பிடியே தொடர்ந்தால்,  மற்றவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள், இணைய  இணையமுற்படுவார்கள் என்பது புரிகிறது. இது RSSஐ , இந்திய  அடையாளத்தையே முன்னிலைப்படுத்துவதாக முடியும், எமது தமிழ் அடையாளம் போய்விடும். முன்பு இருந்த தமிழ் கிறிஸ்தவ தலைமைகள் மதத்தை  தாண்டி தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்தினார்கள். இப்போது அது மாறிக்கொண்டு வருகிறது. இதுக்கு என்ன செய்வது? எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை போய்க்கொண்டு இருக்கிறது. எமக்கு  இருக்கும் கிறிஸ்தவ  நண்பர்களை சக தமிழன் என்றவகையிலேயே இதுவரை பார்த்திருந்தோம், உடனடியாக இல்லாவிட்டாலும் வருங்காலங்களில் எதிர்கால தலைமுறை அப்பிடி பார்க்குமா என்று தெரியவில்லை, வேறு ஒரு குழுவாக அடையாளப்படுத்தப்படுமா என்று புரியவில்லை.

மதங்கள் நிறுவனப்படுத்தப்படுவது தேவையற்ற பிரச்சனைகளையே  உருவாகும், இவர்கள் எந்த விலை கொடுத்ததும் தங்கள் மத  குழுக்களை மாத்திரமே முன்னிலை படுத்துவார்கள் , ஒரு selfish attitude எப்போதுமே இருக்கும். இவர்களை அரசியலுக்கு அப்பால் வைத்திருக்க வேண்டும், இது கண்ணனுக்கு தெரிந்து இப்போதைக்கு நடக்க போவதில்லை என்று தெரிகிறது. மேலை நாடுகளில் ஓரளவுக்கு இவர்களின் எல்லைகளை கட்டுப்படுத்துகிறார்கள்,  இவர்களை கட்டுப்படுத்தாமல் விடுவதால் என்ன நடக்கும் என்று இலங்கையில் பிக்குகளை பார்த்தல் தெரியும். மத்திய கிழக்கு நாடுகளை பற்றி சொல்ல தேவையில்லை.

அப்பிடியானால் இலங்கை தமிழராக , ஒரு இனக்குழுவாக, இருப்பது பிரச்சனை இல்லையா? எமக்கு அரசியல்  அடையாளம் இருக்க வேண்டுமா? அப்பிடித்தான் இருக்க வேண்டும் வேறு வழியில்லை. இன்னொரு குழுவால் நாங்கள் அப்பிடித்தான் அடையாளபடுத்தப்பட்டோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

மதங்கள் நிறுவனப்படுத்தப்படுவது தேவையற்ற பிரச்சனைகளையே  உருவாகும்

மதங்களை முன்னிலைப்படுத்திதான் நாடுகளின் எல்லைகளை வகுத்துள்ளார்கள் பிரித்தானியர்கள்.இது நடந்தது 1948 களில்....
சிறந்த உதாரணம்
பாகிஸ்தானும் ...கிழக்கு பாகிஸ்தானும்....இஸ்லாம் என்ற அடிப்படையில்

அந்தமான் ,லக்ஸ்தீவுகள்  இந்தியாவுக்கு எத்தனையோ கில்லோமீற்றருக்கு அப்பால் உள்ளது அதை இந்தியாவுடன் இணைத்தார்கள்...

22 கில்லோமீற்றர்க்கு அப்பால் இருக்கும் சிறிலங்காவை பெளத்தம் என்ற மத அடையாளத்துடனும் வேறு சில முக்கிய தேவைகளுக்க்குமாக தனிநாடக அமைத்தனர்...

உலகில் பல தேசிய இனங்கள் இருந்தால் தலையிடி என நினைத்து
நாங்கு மத‌ங்களை வைத்து எல்லைகளை வகுத்தனர் போலும்....

இந்தியாவில் பல தேசிய இனங்கள் அழிக்கப்பட்டு "இந்து"  இந்தியா என்ற ஒர் நாடு உருவாக்கிவிட்டு சென்று இப்பொழுது ஜனநாயக்ம் போதிக்கின்றனர்...

இனிவரும் காலங்களில் மதங்கள் மூலம் தான் அடையாளங்கள் வெளிபடுத்த முற்படுவார்கள்.....சிங்கள தேசியம்,தமிழ்தேசியம் எல்லாம் அழிக்கப்பட்டு பெளத்த ,இஸ்லாமிய,கிறிஸ்தவ,இந்து மதஅடையாளங்கள் முன்னிலை படுத்தப்படும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இது போன்ற திரிகளில் நான் இப்போது பங்கு பற்றுவதில்லை (மேலுள்ள சில கருத்துகளே இதன் காரணம்). ஆனால் உங்கள் போன்றோருடன் இது பற்றி ஆரோக்கியமாக உரையாட முடியும். 

நீங்கள் சொல்லும் வித்தியாசம் இருப்பது உண்மையே. இதன் காரணம் கத்தோலிக்க மதம் மிகவும் நிறுவன மயப்படுத்தப் பட்டிருக்கிறது. கத்தோலிக்க மத குருவாக வர குறைந்தது 7 ஆண்டுகள் கல்வி கற்கவும் பயிற்சி பெறவும் வேண்டும். வெளியே வரும் போது ஆங்கிலத்திலும் தொடர்பாடலிலும் வேறு ஓரிரு மொழிகளிலும் தேர்ச்சியுடன் வருவார்கள். இந்த முறைசார் கல்வி வசதி சைவக் குருமாருக்கு இல்லாதது ஒரு பெரியகுறை தான். 

உண்மை. நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையினூடாகத் தேறிவரும் குருக்களின் தொடர்பாடல்த்திறன்      சாதாரண, சந்ததியூடான சைவமத அறிவைப்பெற்றுவரும் சைவக் குருக்களின் தொடர்பாடல்த்திறனுடன் ஒப்பிடிம்பொழுது அதிகமானது. இதுமட்டுமில்லாமல், மேற்குலகின் கிறீஸ்த்தவ அடிப்படையானது, இலங்கையில் கத்தோலிக்கக் குருக்கள் இவர்களுடன் இலகுவாக தொடர்புகொள்ள உதவுகிறது.

இதுகாலவரைக்கும், எமது விடுதலைப் போராட்டத்தில் கத்தோலிக்கக் குருமார் சிறந்த பங்களிப்பினையாற்றியிருக்கிறார்கள். மதம் ஒன்றைத்தவிர, அடிப்படையில் அவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வே இதற்குக் காரணம். 

ஆனாலும், பிற்காலத்தில் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த மதம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இதைப்புரிந்துகொண்டு, எம்மிரு மதங்களுக்குமிடையே ஒற்றுமையைப் பேணுவது அவசியமானது.

4 hours ago, நீர்வேலியான் said:

ரஞ்சித்,
உங்கள் கருத்துக்களை முன்பும் வாசித்துள்ளேன். நீங்கள் ஐயர்களை முன்னிலைப்படுத்துபவர் என்று நினைக்கவிலை, ஆனாலும் இதையொட்டி எனது கருத்து. 

பிறப்பால் வரும் பதவியை, சாதியை இறுக்கப்பற்றுபவர்களால் நீங்கள் சொல்லும் அந்த இடத்துக்கு போகமுடியாது, சார்ந்த குழுவை ஒருமுகப்படுத்தவும் முடியாது. இந்தியாவில் இந்து மதத்தை ஓரளவுக்கு நிறுவனப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதாவது சாதியை பற்றிக்கொண்டு, பிறப்பால் வரும் தகுதியை வைத்துக்கொண்டு, விளைவுகள் எமக்கு தெரிந்தவை.  தமிழர்கள் என்ற அடையாளத்தில் இதுவரை இணைந்திருந்தோம், அது இப்போது உடைக்கப்படுகிறது. திடீரென பார்த்தால் ஒரு குழுவுக்கு பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மற்றக்குழுவுக்கு ஒருவரும் இல்லை. நாங்கள் தமிழ் என்ற அடையாளத்தை விட்டு இந்து என்ற அடையாளத்தில் இணைய வேண்டுமா? எனக்கு மத அடையாளத்தில் ஆர்வமில்லை அதுவும் பிறப்பை முன்னிலைப்படுத்தி வரும் தலைமையில் நிச்சயமாக இல்லை. ஆனால் இப்பிடியே தொடர்ந்தால்,  மற்றவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள், இணைய  இணையமுற்படுவார்கள் என்பது புரிகிறது. இது RSSஐ , இந்திய  அடையாளத்தையே முன்னிலைப்படுத்துவதாக முடியும், எமது தமிழ் அடையாளம் போய்விடும். முன்பு இருந்த தமிழ் கிறிஸ்தவ தலைமைகள் மதத்தை  தாண்டி தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்தினார்கள். இப்போது அது மாறிக்கொண்டு வருகிறது. இதுக்கு என்ன செய்வது? எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை போய்க்கொண்டு இருக்கிறது. எமக்கு  இருக்கும் கிறிஸ்தவ  நண்பர்களை சக தமிழன் என்றவகையிலேயே இதுவரை பார்த்திருந்தோம், உடனடியாக இல்லாவிட்டாலும் வருங்காலங்களில் எதிர்கால தலைமுறை அப்பிடி பார்க்குமா என்று தெரியவில்லை, வேறு ஒரு குழுவாக அடையாளப்படுத்தப்படுமா என்று புரியவில்லை.

மதங்கள் நிறுவனப்படுத்தப்படுவது தேவையற்ற பிரச்சனைகளையே  உருவாகும், இவர்கள் எந்த விலை கொடுத்ததும் தங்கள் மத  குழுக்களை மாத்திரமே முன்னிலை படுத்துவார்கள் , ஒரு selfish attitude எப்போதுமே இருக்கும். இவர்களை அரசியலுக்கு அப்பால் வைத்திருக்க வேண்டும், இது கண்ணனுக்கு தெரிந்து இப்போதைக்கு நடக்க போவதில்லை என்று தெரிகிறது. மேலை நாடுகளில் ஓரளவுக்கு இவர்களின் எல்லைகளை கட்டுப்படுத்துகிறார்கள்,  இவர்களை கட்டுப்படுத்தாமல் விடுவதால் என்ன நடக்கும் என்று இலங்கையில் பிக்குகளை பார்த்தல் தெரியும். மத்திய கிழக்கு நாடுகளை பற்றி சொல்ல தேவையில்லை.

அப்பிடியானால் இலங்கை தமிழராக , ஒரு இனக்குழுவாக, இருப்பது பிரச்சனை இல்லையா? எமக்கு அரசியல்  அடையாளம் இருக்க வேண்டுமா? அப்பிடித்தான் இருக்க வேண்டும் வேறு வழியில்லை. இன்னொரு குழுவால் நாங்கள் அப்பிடித்தான் அடையாளபடுத்தப்பட்டோம்.  

தமிழர்கள் மதத்தால் பிரிவதைக் காட்டிலும், இனத்தால் ஒன்றுபடுவதே காலத்தின் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

ப்பிடியானால் இலங்கை தமிழராக , ஒரு இனக்குழுவாக, இருப்பது பிரச்சனை இல்லையா? எமக்கு அரசியல்  அடையாளம் இருக்க வேண்டுமா? அப்பிடித்தான் இருக்க வேண்டும் வேறு வழியில்லை. இன்னொரு குழுவால் நாங்கள் அப்பிடித்தான் அடையாளபடுத்தப்பட்டோம்.  

நன்றி நீர்வேலியான்,

எமக்கிருக்கும் ஒரேயொரு அடையாளம் தமிழர்கள் என்பது மட்டுமாகத்தான் இருக்கவேண்டும். சந்ததியினாலும், கலாசாரத்தாலும் , பண்பாட்டினாலும், கலைகளினாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, உயிரினும் மேலான தமிழ் மொழியினாலும் நாம் கலந்திருக்கிறோம். மதம் எமக்குடையில் எப்போதுமே வந்துவிடக் கூடாது. 

நிறுவன மயப்படுத்தப்படும் மதங்களால் அந்த மதங்கள் மெருகூட்டப்படவேண்டுமே ஒழிய, ஒன்றுபட்டிருக்கும் இனத்தினைக் கூறுபோடும் ஆயுதமாக அது மாறுவதை அனுமதிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.