Jump to content

அமேசான் நிறுவனர் விவாகரத்து - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
ஜெஃப் பெசோஸ் - மெக்கின்ஸிபடத்தின் காப்புரிமை Reuters Image caption ஜெஃப் பெசோஸ் - மெக்கின்ஸி

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள வணிக நிறுவனமான அமேசானில் மெக்கின்ஸிக்கு உள்ள நான்கு சதவீத பங்கை அவர் தொடர்ந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெஃபுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கை கைவிடுவதற்கு மெக்கன்சி முடிவெடுத்துள்ளார்.

இதற்கு முன்புவரை, கலை வியாபாரி அலெக் வொலின்ஸ்டைன் மற்றும் அவரது மனைவி ஜோசலினுக்கிடையேயான 3.8 பில்லியன் விவாகரத்து இழப்பீடு உலகளவில் அதிகமானதாக கருதப்பட்டது.

"இருவரின் தார்மீக ஆதரவுடன் எங்களது மண முறிவு செயல்பாடு முடிவடைந்துள்ளது" என்று மெக்கின்ஸி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை சிறு வியாபாரிகளை அழித்து ஏகபோகமாய் வளர்ந்தவர் வீட்டில் புயல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்....

ஆரட்டையும், அவோண்ட சாதக குறிப்பு இருக்குமோ?

சீதனம் கேக்கிறதில்லை எண்டது கடும் கொள்கை பாருங்க.

மத்தாக்கள், அவசரப்படாதீங்கோ, கைல கிடைச்சோன்ன தரலாம்.

🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எத்தனை சிறு வியாபாரிகளை அழித்து ஏகபோகமாய் வளர்ந்தவர் வீட்டில் புயல் .

சரியாக சொன்னீர்கள். 👍

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

ம்....

ஆரட்டையும், அவோண்ட சாதக குறிப்பு இருக்குமோ?

சீதனம் கேக்கிறதில்லை எண்டது கடும் கொள்கை பாருங்க.

மத்தாக்கள், அவசரப்படாதீங்கோ, கைல கிடைச்சோன்ன தரலாம்.

🥰

நாதம்ஸ் இதைத்தான் உங்களை எழுதச்சொன்னேன் நீங்கள் எழுதவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பகலவன் said:

நாதம்ஸ் இதைத்தான் உங்களை எழுதச்சொன்னேன் நீங்கள் எழுதவில்லை.

 

விளப்பம் கணக்க இல்லாம, எழுதக் கூடாது, எண்டது தான் விஷயம்....

1 hour ago, பெருமாள் said:

எத்தனை சிறு வியாபாரிகளை அழித்து ஏகபோகமாய் வளர்ந்தவர் வீட்டில் புயல் .

அது அமெரிக்க எண்டால் பருவாயில்லை. உலகம் முழுக்க... சீனாகாரன் தான் விடேல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் சவூதியின்ரை கொலை சம்பந்தப்பட்ட விசயத்திலை கை நனைச்சதாலைதான் அவர்ரை தனிப்பட்ட படங்கள் எக்ஸ்சற்ராக்கள் வெளியிலை வந்ததெண்டும் கதைச்சாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன்பின்னரும் அமேசன் முதலாளி ஜெப் தான் உலகின் முதலாவது பணக்காரராக தொடர்ந்து இருப்பார். அதே சமயம் அவரின் மாஜி மனைவி உலகின் 3-ஆவது பணக்கார பெண்மணி என்ற இடத்தை பிடித்துக்கொள்கிறார். தமிழில் divorce settlement என்பதை இழப்பீடு என்று சொல்வதிலும் விவாகரத்துக்கான தீர்வு என்று சொல்வது சரியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி பத்திரிகையாளர் கசோக்கி வேலை செய்தது உந்த ஜெப்பின் பத்திரிகையான நியூயோக் டைம்ஸ் என்று நினைக்கிறேன்...அந்த பத்திரிகையில் தான் சவூதி அரசினை பற்றி கசோக்கி கேவலமாய் எழுதி வந்தாராம்....அதனால் கோபமான சவூதி அரசாங்கத்தினால் ஜெப்பின் காதல் லீலைகள் வெளியே வந்ததாம் என்று கேள்விப் பட்டேன் 😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் சின்னவீடுகள் இல்லாத பெரிய முதலாளிகள் இந்த உலகத்திலை இல்லையெண்டு நான் சொல்லுறன். மெக்கின்ஸ் பெரிய கற்புக்கரசி மாதிரியெல்லோ  கதையள் போகுது.....

அமெரிக்கா ஒரு விசித்திர நாடப்பா..😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.