Jump to content

பாக்கிஸ்தானின் விமானங்களை இந்தியா சுட்டுவீழ்த்தவேயில்லை - அமெரிக்க அதிகாரிகள் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானின் விமானங்களை இந்தியா சுட்டுவீழ்த்தவேயில்லை - அமெரிக்க அதிகாரிகள் தகவல்

கடந்த பெப்ரவரியில்  இந்தியா பாக்கிஸ்தானின் எந்த எவ்-16 விமானத்தையும் சுட்டுவீழ்த்தவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார கொள்கைகள் குறித்த அமெரிக்க சஞ்சிகையான  பொறின் பொலிசி மகசின் தெரிவித்துள்ளது

அமெரிக்க அதிகாரிகளிற்கு பாக்கிஸ்தானிடம் உள்ள எவ் -16 ரக விமானங்களின் எண்ணிக்கை தெரியும் என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார கொள்கைகள் குறித்த அமெரிக்க சஞ்சிகை அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக இரு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது

அமெரிக்க அதிகாரிகள் விமானத்தை கணக்கிட்டுள்ளனர் அதன் போது அனைத்து விமானங்களும் உள்ளமை தெரியவந்துள்ளது என அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த வகை விமானத்தினை விற்பனை செய்யும்போது செய்யப்படும் உடன்படிக்கையின் அடிப்படையில் அவற்றை தொடர்ச்சியான கண்காணிப்பதற்கு அனுமதிக்க வேண்டிய கடப்பாடு பாக்கிஸ்தானிற்கு உள்ளது அதன் அடிப்படையிலேயே அமெரிக்க அதிகாரிகள் விமானங்களை பார்வையி;ட்டுள்ளனர் என வெளிவிவகார கொள்கைகள் குறித்த அமெரி;க்க சஞ்சிகை தெரிவித்துள்ளது.

விமானங்களை கணக்கிடுமாறு பாக்கிஸ்தான் இந்தியாவை அழைத்ததாகவும் மோதல் காரணமாக சில விமானங்களை உடனடியாக பார்க்கமுடியவில்லை எனவும்  தெரிவித்துள்ள வெளிவிவகார கொள்கைகள் குறித்த அமெரிக்க சஞ்சிகை விமானங்களை கணக்கிலெடுப்பதற்கு அமெரிக்க அதிகாரிகளிற்கு சிலவாரங்கள்  எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

pak_f16_1.jpg

இந்திய விமானத்தை பாக்கிஸ்தான் சுட்டுவீழ்த்தி விமானவோட்டியை கைதுசெய்வதற்கு முன்னர் பாக்கிஸ்தானின் எவ் 16 விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இந்தியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் விமானங்களை எண்ணியுள்ள தகவல்காரணமாக இந்தியாவின் இந்த கூற்று பொய்யானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

 

http://www.virakesari.lk/article/53434

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிகாரிகள் சொல்ல முன்பே.....
இந்தியா....  "வாயால் வடை சுடுவதில்"  திறமான நாடு, என்று... எமக்கு தெரியும்.

இந்திய ராணுவத்திடம்... ஒரு,  போருக்கு சென்றால்,   
அடுத்து இருக்கக் கூடிய... போர்க் குண்டுகளும் இல்லை என்று,
சில வருடங்கங்களுக்கு முன்பு, ஒரு இராணுவத் தளபதியே... சொல்லி இருந்தார்.

இதற்குள்... தேர்தலுக்காக.. "ஜில்மால்"  விளையாட்டு காட்டப்  போய்...
இந்திய பத்திரிகைகள் எல்லாம்.. பாகிஸ்தானுக்கு.. நல்ல அடி  கொடுத்து விட்டோம்.
400 தீவிர வாதிகளை அழித்து விட்டோம் என்று, தலைப்புச்  செய்திகளை போட்டு...
புளகாங்கிதம் அடைந்த... மானம் கெட்ட  ஊடகங்களே...  
அரசியல் உண்மைகளை... வெளியில் கொண்டு வரப்  பாருங்கள்.

உங்களது... நாட்டின், நன்மைக்கு...
அமெரிக்க பத்திரிகை தான்... உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற விதி இருந்தால்...  அது வரை..." மானாட மயிலாட",  "கிரிக்கெட்  ரன்  ஓட"  போன்ற  போன்ற செய்திகளை பார்த்துக் கொண்டு இருங்கள். 

Link to comment
Share on other sites

அதுமட்டுமல்ல இந்தியா சர்ஜிக்கல் ஸ்ரைக் என்றபெயரில் நடந்த தாக்குதலில் எந்த முகாமும் தாக்கி அழிக்கபடவும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

சுட்டு வீழ்த்தியது 4 வது பால்வெளி மண்டலத்தை சார்ந்த ஏலியன்களோடது. .😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது" - இந்திய விமானப்படை

 
இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர்படத்தின் காப்புரிமை DD Image caption இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர்

பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர், மிக் 21 பைசன் விமானம், ஒரு F 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு மறுக்க முடியாத வலுவான ஆதாரம் இருப்பதாக கூறினார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ANI

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ANI

மேலும், பாகிஸ்தானின் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ரேடார் புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.

 

பாகிஸ்தானின் இன்டர் சேவை பொது தொடர்புகளின் (ஐஎஸ்பிஆர்) இயக்குநர் வெளியிட்ட கருத்துகளும், இந்திய விமானப்படையுடன் ஒத்துப் போவதாக அவர் தெரிவித்தார். தாக்குதல் நடந்த அதே நாளில் இரண்டு விமானிகள் பிடிப்பட்டதாக ஐஎஸ்பிஆர் கூறுகிறது.

"அதாவது அந்த இடத்தில் இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. ஒன்று மிக் 21 ரக விமானம், மற்றொன்று F 16. இதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இந்திய விமானப்படையிடம் உள்ளது" என்று கபூர் தெரிவித்தார்.

எனினும், பாதுகாப்பு காரணங்களால் அதனை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, F 16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்று கூறுவது உண்மையல்ல என்று அமெரிக்காவின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது.

காஷ்மீர் பதற்றங்கள்

காஷ்மீர்படத்தின் காப்புரிமை Getty Images

பிப்ரவரி 14 அன்று, இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியது.

அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், அதன் விமானியையும் சிறைபிடித்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி இந்தியா போர்ப் பதற்றங்களை அதிகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் என்று சில பாகங்களை இந்தியா காட்டியது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது.

செயற்கைக்கோள் புகைப்படங்களில் சேதம் அதிகம் தெரியாததால், பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வெற்றி குறித்து கேள்விகள் எழுந்தன.

https://www.bbc.com/tamil/india-47856173

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.