Jump to content

விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது இதனை அனுமதிக்கமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவை எச்சரித்துள்ளன

விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை 1998 இல் எமிரேட்சிற்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்தவர்களே இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ளனர் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தின் ஜனக விஜயபத்திரன  தெரிவித்துள்ளார்

அடுத்த வாரம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளனர் என தகவல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

srilanka_airlinesss.jpg

தேசியபாதுகாப்புடன் தொடர்புடைய நெருக்கடியொன்று உருவாவதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்

 

http://www.virakesari.lk/article/53454

Link to comment
Share on other sites

லைக்கா மொபைல் என்று பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

லைக்கா மொபைல் என்று பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம்.

அது  லைக்கா என்றால், அது மகிந்தவின் நிறுவனம் தானே. மேலும் அது ஒருபோதும் தன்னை புலிகள் சார்பானதாக வெளிக்  காட்டிக் கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

அது  லைக்கா என்றால், அது மகிந்தவின் நிறுவனம் தானே. மேலும் அது ஒருபோதும் தன்னை புலிகள் சார்பானதாக வெளிக்  காட்டிக் கொள்ளவில்லை.

பட் தெ ஆர் டமிழ்ஸ் யு நோ...😀ஒரு காலகட்டத்தில் தமிழர்கள் என்று சொல்லி முன்னேற்றங்கள் தடைசெய்யப்பட்டன ....இப்பொழுது புலிகள் என சொல்லி செய்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

பட் தெ ஆர் டமிழ்ஸ் யு நோ...😀ஒரு காலகட்டத்தில் தமிழர்கள் என்று சொல்லி முன்னேற்றங்கள் தடைசெய்யப்பட்டன ....இப்பொழுது புலிகள் என சொல்லி செய்கிறார்கள் 

சிறீலங்கன் விமான நிறுவனம் வாங்குவார் இல்லாமல் தவிக்கிறது. முறையான நிர்வாகம் இல்லாமல் தடுமாறுகிறது.

மக்களின் வரிப்பணத்தில், நம்ம ஊர் வழக்கில் சொல்வதானால் 'ரிம்மில்' ஓடுகின்றது.

விமான நிறுவனங்கள் இன்றைய நிலையில், அரசுகள் கையில் லாபகரமாக இயங்க முடியாது. அதுவும் இலங்கை போன்ற ஊழல் மிக்க நாடுகளில்.

அரசு வாங்குவார் இல்லாமல் தவிக்கிறது. எமிரேட்டை வெளியே அனுப்புவதில், மகிந்தா முன்னர் செய்த அடாவடியால், வெளியார் யாருமே வாங்க மறுக்கிறார்கள்.

லைக்காமுதலீட்டினை எதிர்த்தால், கடன் சுமையில் தள்ளாடும் நாட்டின் வரிப்பணத்தில் 
இப்படியே போனால், வேறு வழியில்லாமல் ஸ்ரீலங்கன் இழுத்து மூடப்பட்டு, இந்த தொழில் சங்கங்கள் வேலையிழப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரலாம். ஆகவே அவர்கள் போராடுவார்கள் என்பது சும்மா பீலா. அதேவேளை வாங்கும் எந்த வெளி நிறுவனமும், அநியாயத்துக்கு  குந்தி இருந்து சம்பளம் எடுக்கும் பலரை வெளியே அனுப்பியே தீரும். அந்த கோஸ்டிகள் தான் போராட்டத்தில் முன்னிலை வகிப்பார்கள். இவர்கள் அரசியல்வாதிகளானால் வேலை கொடுக்கப் பட்டவர்கள். 

லைக்கா வாங்குவதானால், தமிழர் அல்ல, பிரித்தானியா நிறுவனமே முதலிட்டு வாங்குகிறது என்று பொருள். அதன் பொருள், பிரித்தானிய அரசு, இலங்கை அரசிடம், பிரித்தானிய நிறுவனத்தின் முதலீடு தொடர்பில் சில உத்தரவாதங்களை பெறும். காரணம், லைக்கா முழு முதலீடும் செய்ய கூடிய பெரிய நிறுவனம் அல்ல.

ஆனால் முன்னிலை வகித்து, புலம் பெயர் மக்களிடம் பங்குகள் வாங்க முடியும். இந்த பிரித்தானிய அல்லது புலம் பெயர் மக்களின் பங்குகள் வாங்கும் காரணத்தினால், இலங்கை அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டி வரலாம். 

ஆகவே தமிழர் என்ற வகையில் இந்த முதலீட்டினை செய்து, இந்த நிறுவனத்தினை கையகப் படுத்தி, தமிழர் பணபலத்தினை காட்டிட வேண்டும்.

ஆயுபோவனுடன், வணக்கமும் சொல்ல வைக்க வேண்டும். அது கேட்டுப் பெறுவதிலும் பார்க்க, உத்தரவு போட்டு பெற வேண்டும்.

இலங்கை உல்லாச பயணத்துறை பெரும் அபிவிருத்தி அடைந்து உள்ளதால் உண்மையில் ஸ்ரீலங்கன் நிறுவனம் சரியான நிர்வாகத்தில் லாபத்தில் இயங்க முடியும். 

இஸ்ரேலியர்கள், பணத்துடன் பாலஸ்த்தீனதில் விளையாடிய அதே விளையாடு செய்ய நேரம் வந்து விட்டது.

நாம் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இஸ்ரேலியர்கள், பணத்துடன் பாலஸ்த்தீனதில் விளையாடிய அதே விளையாடு செய்ய நேரம் வந்து விட்டது.

நாம் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும்.

இப்பிடி நடந்தாலும் என்ற பயத்தில தான் சத்தம் போடுறாங்களோ?

Link to comment
Share on other sites

லைக்கா நிறுவனம்  ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தை  பெற்றுக்க்கொள்வது எம்மை பொறுத்தவரை நன்மையான விடயமே. லைக்கா வடகிழக்கில் நிறையவே உதவிகளை செய்துள்ளது. மேலும் செய்யும் என எதிர்பார்க்கலாம். எம்மவரின்  நிறுவனம் என்பதில் எமக்கு பெருமையும் சேரும்.

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும்

விடுதலைப் புலிகளின் நிதியை அபகரித்தே பலர் இன்று சிறீலங்காவில் முதல்தர பணக்காரர்களாக உள்ளனர். விடுதலைப் புலிகளை அழித்திராது தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுத்திருந்தால், இன்று சிறீலங்காவே உலகின் முதல்தர பணக்கார நாடுகளிள் ஒன்றாக உயர்ந்திருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.