Jump to content

தரைக்கு வந்த தாரகை


Recommended Posts

இதுதான் பானுமதி ஸ்டைல்!

bhanumathijpg
 

அக்காக் குருவியின் கூவல் மட்டுமே கேட்கும் அமைதியான பாண்டி பஜார் வைத்தியராமன் தெரு. பழைய நினைவுகளில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்சிதரும் பானுமதியின் பங்களா. தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஒரு பிற்பகல்.

எனக்கு முன்னால் பானுமதி உட்கார்ந்திருக்கிறார். திரையில் வரும் நிழல் பானுமதி அல்ல; நிஜ பானுமதி!

பணிப்பெண் அவருக்கு முன்னால் ஒரு கோப்பைப் பழச்சாறும் எனக்கு காபியும் கொண்டுவந்து வைத்தார்.

“வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று சினிமா. மற்றொன்று காபி” என்றார் பானுமதி.

திரையில் ஜொலிக்கிற நட்சத்திரமாய் நின்றுவிடாமல் சாதாரண மனுஷியாகத் தனது நினைவுகளையும் அனுபவங்களையும் கள்ளம் கபடற்ற குழந்தைபோல சொல்லிக்கொண்டு போவது பானுமதியின் சுபாவம்.

வானில் மின்னும் நட்சத்திரமாய் அவர் வாழ விரும்பவில்லை.

“நான் நடிக்க விரும்பவில்லை. அப்பாவின் வற்புறுத்தலால் நடித்தேன். வேண்டா வெறுப்பாக நடித்ததால் என் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஒரு அலட்சியம் வந்துவிட்டது. நான் காட்டிய இந்த அலட்சியம், விலகல்தான் என்னுடைய பாணி என்றார்கள். பானுமதி ஸ்டைல். இது ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லோரும் புகழ ஆரம்பிச்சாங்க. என்னடா இது வம்பாப் போச்சேன்னு நினைச்சேன்.

இதுதான் என் வாழ்க்கையின் மிகப் பெரிய க்ருயல் ஜோக்! எத்தனையோ சோதனைகளை வாழ்வில் தாண்டி வந்துவிட்டேன். அந்த முறையில் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாம எல்லோரும் ஆத்ம பரிசோதனை பண்ணிக்கணும். நாம யாரு? எதுக்காக வந்தோம்? என்ன செய்துகிட்டிருக்கோம்? அப்படீன்னு யோசிக்கணும். பணம், புகழ்னு அலையறதைவிட இது முக்கியம்.

இதுல கவனமிருந்தா, மனதைத் தத்துவ விசாரத்தில் பிலாஸபிகலாக வைத்துக்கொண்டால் மத்தது தானாகவரும்! நான் அப்படித்தான் செய்தேன்! புகழை உதாசீனப்படுத்தினேன்.. தானா வந்தது! பணத்தை வேண்டாம்னு தள்ளினேன்... அதுவா வந்து சேர்ந்தது.

இப்படியான தத்துவப் பார்வையே அவரை வானத்தில் மிதக்காமல் தரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. புகழின் பிரகாசத்தைப் பொருட்படுத்தாமல் செய்தது. தரைக்கு வந்த தாரகையாய் அவரை ஆக்கியது!

எழுத மறந்தேன்

பானுமதி நீண்ட நேரம் தியானத்தில் செலவழிப்பார். நான் குறிப்புப் புத்தகமும் கையுமாகக் காத்திருப்பேன். அவர் மிகச் சிறந்த நடிகையாக, இயக்குநராக, பாடகியாக, எழுத்தாளராக, கல்வியாளராக எல்லோருக்கும் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால், அவர் மிகச் சிறந்த கதைசொல்லியாக எனக்கு அனுபவம் ஆனார்.

எந்தச் சம்பவம் ஆனாலும் அதை அப்படியே உட்கார்ந்தபடியே தத்ரூபமாக நடித்தபடி கதைசொல்வதில் அவருக்கு ஈடுஇணை இல்லை. அவருக்கு முன்னால் கண்ணுக்குத் தெரியாத கேமரா ஒன்று நிரந்தரமாக இருப்பதாக நினைத்துக்கொள்வார் போலும். சில நேரம் நான் எழுதுவதை மறந்து அவர் பேச்சில் லயித்துவிடுவேன்.

“ரொம்ப நேரமா நீங்கள் எதுவுமே எழுதாமல் என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று கிண்டலாகச் சிரிப்பார் பானுமதி. ஆனால், அவர் பேசுவது என் மனத்தில் ரிக்கார்டு ஆகிக்கொண்டுதான் இருக்கும். இது அவருக்கும் தெரியும்.

பள்ளிக்கூடம் வேண்டாம்

“சொல்லுங்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?”

“உங்கள் பள்ளிக்கூட அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!”

“சின்ன வயசிலிருந்தே எனக்கு எதைக் கேட்டாலும் சட்டென்று மனப்பாடம் ஆகிவிடும்! புராணக் கதைகளைக் கேட்பதிலும், சுலோகங்களைச் சொல்வதிலும் நான் காட்டிய ஆர்வத்தைப் பார்த்துவிட்டுப் பள்ளிப் படிப்பிலும் நான் சிறந்து விளங்குவேன் என்று அப்பா நினைத்தார். வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் என்னை சேர்த்துவிட்டார்...”

“எப்படிம்மா இருக்கு பள்ளிக்கூடம்?”

“எனக்குப் பள்ளிக்கூடம் வேண்டாம்!” என்றேன் அழுத்தம் திருத்தமாக.

“அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் என்றால் ஞாபகம் வருவது கையில் பிரம்பும் கடுகடுமுகமுமாகப் பயமுறுத்தும் வாத்தியார்கள். இப்போதுபோல் தன்னைவிட அதிக எடையுள்ள பாடப் புத்தகப் பைகளைச் சுமக்க வேண்டாம். கையில் ஒரு சிலேட்டு, ஒண்ணு, ரெண்டு நோட்டு புஸ்தகம் அவ்வளவுதான். மத்தபடி சிலேட்டுகளின் ராஜ்யம்தான்!”

எங்கள் ஊரிலிருந்த பள்ளிக்கூடத்தில் ரங்கையா பந்துலு என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அப்பா என்னைப் பள்ளிக் கூடத்துக்குள் அழைத்துச்சென்றபோது ரங்கையா பந்துலு ஒரு மாணவனைப் பிரம்பால் விளாசிக்கொண்டிருந்தார். அந்த மாணவன் கதறியதைப் பார்த்துவிட்டுதான் சொன்னேன்.

“எனக்கு இந்தப் பள்ளிக்கூடம் வேண்டாம்!” அப்பா நான் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், என்னைக் கட்டாயப் படுத்திப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார். ரங்கையா பந்துலு பொடியை உறிஞ்சினார். கையில் பிரம்பு.

“பயப்படாதே அம்மா, நம்ம ரங்கையா பந்துலு ரொம்ப நல்லவர். பெண் குழந்தைகளை அடிக்க மாட்டார். என்ன ரங்கையா. நான் சொல்வது சரிதானே? அது மட்டுமல்ல; என் குழந்தை ரொம்ப புத்திசாலி” என்றார் அப்பா.

பொடியை உறிஞ்சியபடி அப்பா சொன்னதை ஆமோதித்தார் ரங்கையா.

நான் வரும்போது அடிவாங்கிக்கொண்டிருந்த பையன், இன்னும் அழுதுகொண்டிருந்தான். பெப்பர்மின்ட் தின்பண்டங்கள் எல்லாம் கொடுத்து அவனைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே அழுதான் அவன். கூல்டிரிங்ஸ் வந்தது. அதையும் வாங்கிக் குடித்துவிட்டு மறுபடி அழத் தொடங்கினான்.

வாத்தியார் ரங்கையா பந்துலுவுக்குக் குரு தட்சணையாக மாணவர்கள் வீட்டிலிருந்து தினமும் ஏதாவது பட்சணங்கள் கொண்டுவர வேண்டும். ‘நான் கேட்டேன் என்று வீட்டில் சொல்லக் கூடாது’ என்று மிரட்டி வைத்திருந்தார். அவர், பிள்ளைகளைப் பார்த்து, ‘நாலணா, எட்டணா கையில் வைத்திருந்தால் என்னிடம் கொடுத்திடணும். அப்பதான் படிப்பு வரும்’ என்றபோது நான் தலையாட்டினேன்.

‘போ போய் மத்த குழந்தைகளோட உட்கார்’ என்றார். நான் போய் உட்கார்ந்ததும் வகுப்பில் இருந்த குழந்தைகள் என்னை விசித்திரமாகப் பார்த்தன. நான் போட்டிருந்த பட்டுச் சொக்காயை வைத்த கண் வாங்காமல் பார்த்தன.

ஒரு பையன் என்னைப் பார்த்து கன்னத்தை உப்பிக்காட்டினான். என் கன்னம் உப்பி இருப்பதைக் கிண்டல் செய்தான். எல்லாக் குழந்தைகளும் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தன.” பானுமதி தனது பள்ளிநாட்களுக்கே சென்றுவிட, முதுமை இழையோடிய அவரது முகத்திலும் குழந்தைமையின் குறுகுறுப்பு ஒளிர்ந்ததைக் கண்டேன்.
 

bhanumathi-2jpg

கவிதை நடையால் கட்டிப்போடும் காவியக்காரர்கள் வாழும் தமிழ்நாட்டில், உரைநடையால் உங்களைச் சிறைவைப்பேன் எனக் கட்டியம் கூறி வாழ்பவர் தஞ்சாவூர்க் கவிராயர். பல்வேறு தளங்களில், பல்வேறு உணர்வுகளில் பல்வேறு பொருள்களில் பயணிப்பவை இவருடைய கட்டுரைகள். பனிக்கட்டியும் இனிப்பும் சேர்ந்த இவரது மொழியின் கலவையுடன் வார்த்தைச் சிக்கனமும் வசீகரிக்கும்.

கறுப்பு வெள்ளை சினிமா யுகத்தின் கதாநாயகிகளில் தனிப்பெரும் சாதனையாளர் பானுமதி. நடிப்பின்போது வசனங்களைப் படிப்பதைவிட, நடிப்பற்ற மனித மகத்துவத்தைப் படிக்க விரும்பியவர். சாந்தம் மீட்டும் சங்கீதக் குரலில் அவர் எடுத்துச் சொன்ன, எண்ணற்ற வாழ்க்கைச் சம்பவங்கள், தஞ்சாவூர்க் கவிராயரின் நளினத் தமிழில் ரசனைப் பயணத்தைத் தொடங்குகின்றன.

(தாரகை ஜொலிக்கும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26278265.ece

Link to comment
Share on other sites

02: வானர வாத்தியார்

vaanarajpg
 

தலைவாரி பூச்சூடி உன்னை

பாடசாலைக்குப் போ  என்று

சொன்னாள் உன்அன்னை!

சிலைபோல ஏன் அங்கு நின்றாய் நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

- ‘ரங்கோன் ராதா’ (1956)  படத்தில் பானுமதி பாடியது.

பள்ளிக் கூட நினைவுகளைத் தொடர்ந்தார் பானுமதி “என் மனசில் ஏதேதோ எண்ணங்கள். ஆசிரியர் கையில் இருக்கும் பிரம்பு ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கிறது, அது சரி பிரம்பைத்தான் ஏன் வைத்திருக்க வேண்டும்? எங்கள் வகுப்பில் நல்ல பிள்ளைகள் மட்டுமல்ல, துஷ்டப் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களில் சிலர் கையில் பசையைத் தடவி வைத்திருப்பார்கள்.

ஆசிரியர் அடிக்கும்போது அது பிரம்பில் ஒட்டிக்கொண்டு விடும். ஆனால், ரங்கையா வாத்தியாரின் பிரம்பு அப்பாவிப் பிள்ளைகளைத்தான் பதம் பார்த்தது. பிரம்பில் பசை ஒட்டிய துஷ்டப் பிள்ளைகள் தப்பித்து விடுவார்கள்.

பள்ளி மாணவர்களில் துஷ்டத்தனம் மிகுந்தவர்கள் இருந்ததுபோல், ஆசிரியர்களிலும் சிலர் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாத்தியார்தான் ஹனுமய்யா. ஹனுமய்யா முகமே ஒரு வானரம் மாதிரிதான் இருக்கும். அவர் சேஷ்டைகளும் அப்படியே. ஹனுமய்யா சில சமயம் தமாஷ் செய்வார். ஆடுவார், பாடுவார் என்று சொல்லி நிறுத்திய பானுமதியின் குரல் கொஞ்சம் தாழ்ந்தது. ஆனால், சற்றுக் கோபம் கூடியது.

“என்னோடு படித்த சேஷம்மாவுக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சி. அழகாக கொழுக் மொழுக்கென்று இருப்பாள். ஹனுமய்யா வாத்தியார் சேஷம்மாவை விசேஷமாக ‘கவனித்தார்’. தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக்கொண்டார். ஒருநாள் ஹனுமய்யா வாத்தியார் சேஷம்மாவைத் தொடக் கூடாத இடத்தில்  கிள்ளிவிட்டார். அந்தப் பெண் அழுதுகொண்டே ரங்கையா பந்துலுவிடம் சொல்ல அவர் ஹனுமய்யாவை கடுமையாகத் திட்டிவிட்டார். ஹனுமய்யா மன்னிப்பு கேட்டார்.

இது பெற்றோருக்குத் தெரிந்தது. அவர்கள் கும்பலாக ஹனுமய்யாவை அடிக்க வந்து விட்டார்கள். ரங்கையா பந்துலு தலையிட்டதால் விஷயம் அத்தோடு முடிந்தது. ஆனால், அவர்கள் தங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்ப்பதாகக் கூறி அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். பிற்காலத்தில் நான் புதிதாகத் தொடங்கிய பள்ளிக் கூடத்துக்கு ஆசிரியர் தேவைப்பட்டார். அதற்கு அப்ளை பண்ணியிருந்த ஒருத்தர் பெயர் அருண்பிரசாத் மற்றவர் பெயர் அனுமந்தராவ்.

‘அருண் பிரசாதை, நியமியுங்கள். அனுமந்தராவ் வேண்டாம் அவரை அனுப்பி விடுங்கள்’ என்றேன். எனக்கு ஹனுமய்யா ஞாபகம் வந்துவிட்டது” என்றபோது எனக்கும் கொஞ்சம் திக்கென்று ஆகிவிட்டது.

பாட்டியும் நெய்வடையும்

பானுமதி அம்மையார் வீட்டில் ஒருநாள் காலைச் சிற்றுண்டி சாப்பிடும்படி ஆயிற்று.

‘உங்கள் வீட்டு நெய்தோசை பிரமாதம்!’ என்றேன். பானுமதி சிரித்தபடி “நெய்தோசை என்றதும் எனக்கு நெய்வடை ஞாபகம் வந்துவிட்டது” என்றார்.

“நெய் வடையா?”

“ஆமாம்” ஊரில் எனக்கு ஒரு பாட்டி  இருந்தார். நெய்வடை செய்வதில் அவருக்கு நிகரே இல்லை. பாட்டியின் நெய்வடைக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கிறது. பாட்டியின் பெயரில் 36 ஏக்கர் நில புலன்களை எழுதிவைத்துவிட்டு தாத்தா செத்துப்போனார். பாட்டி வருஷம் தவறாமல் ஒரு ஏக்கரை விற்றுக் கிடைத்த பணத்தில் நெய்வடை செய்து சாப்பிட்டார். நெய்வடை என்றால் நெய்யில் சுடுவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நெய்வடையை நெய்யில் சுட்டு நெய்யிலேயே ஊறப்போட வேண்டும். பிறகு நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டும்.

அம்மாவுக்கும் பாட்டிக்கும் அடிக்கடி மாமியார்-மருமகள் சண்டை வந்துவிடும். அப்போதெல்லாம் அம்மா புருஷன் வச்சுட்டுப்போன நிலத்தை  எல்லாம் வித்து நெய்வடையா செஞ்சு  இந்தக் கிழவி சாப்பிடறா. குழந்தைக்கு ஏதாவது மிச்சம் வைக்க வேண்டாமா?’ என்பாள். பாட்டியோ, ‘நெய் வடைன்னா  எனக்கு இஷ்டம். நான் சாப்பிடறேன். என் புருஷன் எனக்கு வச்சுட்டுப்போன சொத்தில் நான் நெய்வடை என்ன, எது வேணும்னாலும் செஞ்சு சாப்பிடுவேன். உன்னிடமோ உன் புருஷனிடமோ வந்து எனக்கு நெய்வடை வேணும்னு கேட்டேனா?’ என்று வைரம்போல் கடினமான வைராக்கியத்துடன் கடைசிவரை ஜொலித்தவள்.

பாட்டி சொன்ன மாதிரியே கடைசி ஏக்கர் நிலத்தை விற்று நெய்வடை செய்து சாப்பிட்டுவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தாள். “பாட்டிக்குப் பிறகு அப்படி ஒரு நெய்வடையை நான் சாப்பிடவே இல்லை” என்றார் பானுமதி.

இப்படி நெய்யில் மிதக்கவிட்டு செய்தால் வடை ருசிக்கத்தான் செய்யும் என்றேன் நான். “இருக்கலாம். சில சமயம் மிகவும் எளிமையாகச் செய்யப்படும் பதார்த்தங்கள், அதைவிடச் சுவையோடு அமைந்துவிடும்” என்று தொடர்ந்தார்.

எங்கள் வீட்டருகே ஒரு தாத்தா இருந்தார். அவரை பஞ்சாபித் தாத்தா என்போம். நல்ல உயரம். பார்க்க லட்சணமாக இருப்பார். பெரிய ஹாண்டில்பார் மீசை. அவர் என்ன பண்ணுகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் சமையல் எனக்குப் பிடிக்கும். தானே சுயமாகச் சமைத்துக்கொள்வார். சில ரொட்டிகளும் கொஞ்சம்  சாதமும் அவ்வளவுதான். அவர் பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு என்று எதுவும் செய்வதில்லை.

பத்துப் பன்னிரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்வார். ஸ்டவ்வில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவார். கொஞ்சம் வெந்தயம், உப்பு, மஞ்சள் தூளைக் கலந்து கொதிக்கவிடுவார். நறுக்கிவைத்த வெங்காயத்தை அதில் போடுவார். அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடிவைத்துவிடுவார். அவரிடம் கொஞ்சம் கறிவேப்பிலை கொடுத்து அதில் போடுங்களேன் என்பேன். “நோ..நோ. இது எங்க சமையல்...அதெல்லாம் போட மாட்டோம்” என்பார்.

அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். அம்மாவிடம் கொஞ்சம் பருப்பு சாம்பாரும் வாங்கிக்கொண்டு செல்வேன். என் பாசத்தில் நெகிழ்ந்துபோன தாத்தா அவர் செய்த பொரியலில் கொஞ்சம் கொடுப்பார். நான் அதை வீட்டுக்குக் கொண்டுபோவேன். அம்மா அதை ருசி பார்த்துவிட்டு “என்ன பண்டம் இது? ஒரு ருசியும் இல்லை. முதலில் அதை எறிந்துவிட்டு வா” என்பார். அம்மா சொல்வதைக் கேட்காமல் தாத்தா பிரியத்துடன் கொடுத்த பொரியலைச் சாதத்தில் கலந்து சாப்பிடுவேன். சுவை பிரமாதமாக இருக்கும்!

இப்பவும்கூட பஞ்சாபித் தாத்தா பொரியலை சாப்பிடணும்னு ஆசையா இருந்தா, நானே சமையல் அறைக்குள் நுழைந்து என் கையாலேயே அதைச் செய்து சாப்பிடுவது உண்டு

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26338222.ece

03: அக்கம்மா என்றொரு கனவு தேவதை!

tharaikkujpg
 

அழகான பொண்ணுநான்

அதுக்கேத்த கண்ணுதான்

என்கிட்டே இருப்பதெல்லாம்

தன்மானம் ஒண்ணுதான்!

ஈடில்லா காட்டுரோஜா இதை நீங்க பாருங்க

எவரேனும் பறிக்க வந்தா குணமேதான் மாறுங்க

முள்ளேதான் குத்துங்க................

படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்...

எங்கள் வீட்டருகே இருந்த தாத்தையாவிடம் சம்ஸ்கிருத சுலோகங்களைக் கற்றுக்கொள்ள அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அவர் சுலோகங்களுக்கு நடுவே “குழந்தாய்! உனக்கு போஜராஜனின் காளிதாஸன் கதைகளைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார். தாத்தா சொல்கிற விஷயங்கள் வேடிக்கையாக இருக்கும். நான் தலையாட்டினேன்.

போஜராஜா கதையில் ரங்காஸனி கதையும் வரும். தாத்தா கதையை எப்படியோ திருகி காளிதாஸ் ரங்காஸனியிடம் போகிறமாதிரி செய்துவிடுவார். ரங்காஸனிக்கும் காளிதாஸனுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளைச் சொல்லும்போது தாத்தாவே காளிதாஸாக மாறிவிடுவார். அவர் சொல்லும் கதைகளை வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.

தாத்தா சொன்னார் “குழந்தாய்! உனக்குத் தெரியாது! ரங்காஸனி மட்டும் இல்லேன்னா காளிதாஸ் அப்பேர்ப்பட்ட கவிதைகளை எழுதியிருக்க முடியுமா? அழகை ரசிக்கணும்னா அதுக்கு ரங்காஸனிதான் வேணும்! மனைவி லாயக்குப் படாது! அதுக்காகத்தான் சொல்வாங்க. சீக்கிரமாகத் தூக்கம் வரணுமானா பக்கத்தில் மனைவியும் புஸ்தகமும் இருக்கணும்!”

இப்படிச் சொல்லிவிட்டு மனைவி சூடம்மாவைப் பார்த்து பெரிதாகக் கொட்டாவி விடுவார்! நானோ இரண்டு பேரையும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்! ஆதிசங்கரரின் செளந்தர்ய லஹரியை அவர்தான் சொல்லிக் கொடுத்தார்!

ஆன்மிக அனுபவம்

சினிமா படப்பிடிப்பு இடைவேளைகளில் நான் செளந்தர்ய லஹரியின் ஸ்லோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன்! தினம்தோறும் ஸ்ரீசக்கர பூஜை செய்வேன். ஒரு முறை சிருங்கேரி பீடாதிபதி சங்கராச்சாரியாரைச் தரிசித்தபோது “நீ ஸ்ரீசக்கர பூஜை செய்கிறாயா?” என்று கேட்டபோது திடுக்கிட்டேன். இது எப்படி இவருக்குத் தெரியும்? “நீ பாலமந்திரம் உபதேசம் பெற்று தீட்சை வாங்கிக்கொண்டால் நல்லது” என்றார்.

“ஆனால் இதை உன் கணவரின் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும்” என்றார். கணவரிடம் கேட்டதற்கு “நீ என்ன சந்நியாசினி ஆகப் போகிறாயா? அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஆனால், என் மனத்தில் திரும்பத் திரும்ப குரு உபதேசம் பெற வேண்டும் என்ற எண்ணமே சுற்றிவந்தது. என் கணவர் நான் படுகிற அவஸ்தையைப் பார்த்துவிட்டு “சரி உன் விருப்பம் அதுவானால், குருவின் ஆக்ஞைப் படியே செய்” என்றார்.

ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியாரிடம் நான் பாலமந்திரம் உபதேசம் பெற்றேன். ஸ்ரீ ஜகத்குரு என்னிடம் “பலதரப்பட்ட மனிதர்கள் என்னிடம் வருகிறார்கள். தங்கள் கவலைகளையும் கஷ்டங்களையும் சொல்லி தீர்த்துவைக்கச் சொல்கிறார்கள். திரைப்படத் துறையில் இருந்தாலும் நீ மட்டும்தான் உன் நேரத்தை எல்லாம் தெய்வீக வழிபாட்டில் கழிக்க விரும்புகிறாய்!”என்றார். இதற்குப் பிறகு எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனக்குள் இருந்த பயமும் கூச்சமும் போய்விட்டன. அதற்குப் பதிலாகத் தன்னம்பிக்கையும் மனஉறுதியும் ஆன்மிக ஈடுபாடும் ஏற்பட்டுவிட்டது.

சூடம்மா தாத்தாவிடம் சொல்வார். “நம்மவீட்டு கொல்லைப்புற மதில் சுவர் வழியாக அக்கம்மாவை எட்டிப் பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைக்கு பகவத்கீதையிலிருந்து ஏதாவது சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்தால் பிரயோசனம் உண்டு” என்பார்.

அக்கம்மா அடுத்த வீட்டுப்பெண். அழகில் அவளை மிஞ்ச ஊரில் எந்தப் பெண்ணும் இல்லை. புசுபுசுவென்ற கூந்தலுடன் அதில் ஒரே ஒரு பூவைச் சூடிக்கொண்டு அவள் தண்ணீர் எடுக்கத் தெருவழியே நடந்துபோவதைப் பார்க்கிறவர்கள், “கிருஹலட்சுமியில் வருகிற கண்ணாம்பா மாதிரியே இருக்கா!” என்பார்கள்.

இந்திப் பட ரசிகர்கள் “அப்படியே தேவிகாராணி மாதிரி இருக்கா!” என்று புகழ்வார்கள். மொத்தத்தில் அக்கம்மா எங்கள் ஊர் ஆண்களின் ‘கனவு தேவதை’. பெண்களுக்கோ அவள் ‘பெண் பிசாசு’ பானுமதி கூறியதைக் கேட்டு எனக்குச் சிரிப்பாக வந்தது. நான் எழுதுவதை நிறுத்தினேன். அவர் எழுந்து உள்ளே போனார்.

எழுபது வயது சபலம்

சிறிது இடைவேளை. பானுமதி மீண்டும் வந்து உட்கார்ந்தார். கண்களை மூடி தியானிப்பதுபோல் சற்று நேரம் இருந்தார். இது போன்ற சமயங்களில் அவராகப் பேசும்வரை நான் காத்திருப்பது வழக்கம். இந்தமுறை அவர் மெளனத்தை நானே கலைத்தேன்.

“அப்புறம் அக்கம்மா என்ன ஆனாள்?” எனது கேள்விக்காகக் காத்திருந்தவர்போல் பானுமதி பேசத் தொடங்கினார்.

பக்கத்து வீட்டு தாத்தா வாழை இலை கேட்கிற சாக்கில் காம்பவுண்டு சுவர் வழியாக எட்டிப் பார்த்து அக்கம்மாவிடம் பேச்சுக்கொடுத்து அவள் அழகைப் புகழ்வார்! அவள் நல்ல உயரம். பெரிய அகன்ற விழிகள், பொன்நிறம், வடிவான அழகு முகம் - இதுதான் அக்கம்மா. அவளுடைய கணவர் ஒரு தபால்காரர். அழகாகவும் இருக்க மாட்டார். குள்ளம் வேறு. அருகில் வசிக்கும் பெண்கள் அவள் அழகைப் பார்த்துப் பொறாமை காரணமாக அவளைப் பற்றி அவதூறு பேசினார்கள். சிலர் அவர் நடத்தையைப் புகழ்ந்தார்கள்.

அக்கம்மா அடக்கமே உருவானவள். கடவுள் பக்தி மிகுந்தவள். அவருடைய ஒரே பிரச்சினை அவளுடைய மாமியார்தான்! அக்கம்மா எங்கே போனாலும் அவள் பின்னாடியே போய் வேவுபார்ப்பதுதான் அவள் வேலை! அக்கம்மாவுக்குப் புத்திமதி சொல்லும்படி அவள் தாத்தாவைக் கேட்டுக்கொண்டாள். இதுதான் சாக்கு என்று தாத்தா அக்கம்மாவைக் கூப்பிட்டு அனுப்பினார்.

அக்கம்மா வந்தாள். அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டாள். சற்றே தள்ளி நின்று பவ்யமாக “ஸ்வாமி! எதற்குக் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டாள்.

அக்கம்மாவைப் பார்த்ததும் தாத்தா தன் நிலை மறந்துவிட்டார். “ஏனம்மா தள்ளி நிற்கிறாய்? இப்படிவா. உன்னிடம் ஒரு ரகசியம் பேசவேணும்”

அக்கம்மாவைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். அவள் தொடையில் கை வைத்து அழுத்தியபடி சொன்னார். “அக்கம்மா! உனக்காக என் மனசு ரொம்பவே கஷ்டப்படுகிறது. ஏன் தெரியுமா? உன் அழகுக்கு ஏற்ற புருஷன் அமையவில்லையே! அவனோடு வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டாய் பாவம்” என்றார். அக்கம்மா வெட்கத்துடன் “ஸ்வாமி உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாள். “ஒருபக்கம் அவலட்சணமான புருஷன். மறுபக்கம் மாமியாரின் தொந்தரவு. பாவம் நீ படுகிற சித்திரவதை எனக்குத் தெரியும் அம்மா!” என்று மறுபடியும் அவள் தொடையை அழுத்தினார்.

அக்கம்மா இதை எதிர்பார்க்கவில்லை. “ஐயையோ! என் வீட்டுக்காரர்வரும் நேரமாச்சு! நான் போறேன்” என்று எழுந்தவளின் தோளைத்தொட்டு உட்காரவைத்து “என்னம்மா அவசரம்? நான் உன்கிட்டே எவ்வளவோ பேசவேண்டியிருக்கு” என்று கிசுகிசுத்தார்.

“மன்னிக்கணும் என் வீட்டுக் காரருக்கு சமைக்கணும்” என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து ஓடியே போய்விட்டாள். நான் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். “இந்த வயசில் கிழவருக்கு ஆசையைப் பாரு!” என்று திட்டினாள். எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த மர்லின் மன்றோவின் Seven year itch படம் ஞாபகம் வந்தது. இது Seventy years itch போலும்! பானுமதி

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26457118.ece

04: மாப்பிள்ளைக்குச் சுண்டுவிரல் இல்லை!

tharagaijpg
 

சொன்ன பேச்சைக் கேக்கணும்

முன்னும் பின்னும் பார்க்கணும்

நின்னு நல்லா நிமிர்ந்து பார்த்து

நேர்வழியே நடக்கணும்!

காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு

காற்றுவாக்கில் பறக்கவிட்டு

பாதையில் வழுக்கி விழக்கூடாது-போகும்

பாதையில் வழுக்கி விழக்கூடாது!

படம்: மக்களைப் பெற்ற மகராசி.

பானுமதி காபி குடிக்க மாட்டாரே தவிர,  அதை ருசித்து அருந்துவதை ஒரு குழந்தையைப் போல வேடிக்கை பார்ப்பார். காபிக்குப்பின் நமது முகத்தில் உற்சாகம் கூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு பேசத் தொடங்குவார். எழுபது வயது சபலத் தாத்தாவிடமிருந்து தப்பித்த அக்கம்மாவைப் பற்றிக் கூறி முடித்த பானுமதி, நினைவுகளைத் தொடர்ந்தார்.

அப்பாவுக்குத் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. தான் உயிரோடு இருக்கும்போதே எனக்குக் கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் நான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியபோது என் கல்யாண ஏற்பாடு பற்றிய பேச்சு காதில் விழுந்தது.

‘பையன் பி.ஏ. படிச்சிருக்கான். லட்சணமாக இருக்கான்...’ – ‘எல்லாம் சரி. சுண்டுவிரல் இல்லை என்கிறீர்களே!’ என்றாள் அம்மா. ‘கல்யாணத்துக்கும் சுண்டு விரலுக்கும் என்ன சம்பந்தம்? அது பெரிய குடும்பம். என் நண்பனின் மகன்தான் அந்தப் பையன். குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்’ என்றார் அப்பா. ‘அதெல்லாம் முடியாது’ என்று சொல்லிவிட்டாள் அம்மா.

பக்கத்து வீட்டு தாத்தாவும் பாட்டியும் ‘கனகத்துக்கு இப்ப 12 வயசுதானே ஆகிறது. அதுக்குள்ளே எதுக்குக் கல்யாணம்; உனக்கு உடம்பு சரியில்லை என்பதற்காக பாப்பாவைப் பலிகடா ஆக்கணுமா?’ என்று கேட்டுச் சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

தேடிவந்த மாப்பிள்ளை

எனக்கு வரன் பார்க்கிற விஷயம் எப்படியோ வெளியே தெரிந்துவிட்டது. ஒரு நாள் ஒரு பெரியவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பா வீட்டில் இல்லை. அம்மா அவரை உட்காரவைத்து விசாரித்தார். அவர் தயங்கித் தயங்கிச் சொன்ன விஷயம்.

‘எனது இரண்டாவது மனைவி இறந்துவிட்டாள். நான்கு குழந்தைகள். நிறைய சொத்து இருக்கிறது. குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள எனக்கு மூன்றாவது மனைவி தேவை. இந்த வீட்டில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் பார்க்க முடியுமா?’

அவர் கூறியதைக் கேட்டு, அம்மா புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டுவிட்டாள். அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘இல்லை உங்களுக்கு ஏத்தமாதிரி பெண் இந்த வீட்டில் இல்லை’ என்று கூறி அனுப்பிவிட்டாள். என்னைத் தேடிக்கொண்டுதான் இந்தக் கிழவர் வந்திருக்கிறார் என்று புரிந்தது. எனக்குள் அவமானமும் ஆத்திரமும் வெடித்தன.

கிழவர் புறப்பட எழுந்தார். அந்த நேரம் பார்த்து அப்பா வந்துவிட்டார். கிழவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷயத்துக்கு வந்தார். அப்பாவுக்கு அதிர்ச்சி. என்னைக் கூப்பிட்டார். கிழவருக்கு அப்பாவைவிட வயது அதிகம். என்னைக் காட்டி, ‘இந்தப் பெண்ணுக்குத்தான் நான் வரன் தேடுகிறேன்.

எனக்கு உடம்பு சரியில்லை’ என்றார். கிழவர் அதிர்ந்து போய்விட்டார். ‘கடவுளே என் பேத்தி வயசு இருக்கும் போல் இருக்கிறதே. நான் 25 அல்லது 30 வயசு இருக்குமென்று நினைத்தேன். என்னை மன்னியுங்கள்’ என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாய்ப் போய்விட்டார்.

ஆனால், அப்பா அடங்குகிற மாதிரி இல்லை. ‘நல்ல வரன் அமைய மாட்டேன் என்கிறது. குழந்தையின் ஜாதகத்தை ஜோதிடர் ராமையாவிடம் காட்டலாம் என்று பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு குண்டூர் போனார். அங்கேதான் ராமையா இருந்தார் அவர் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் பெண்ணுக்கு 18 வயதில்தான் கல்யாணம் நடக்கும். அது மட்டுமில்லை; இது சாதாரண ஜாதகம் கிடையாது.

எல்லோரையும் போல கல்யாணம் பண்ணிக்கொண்டு, குழந்தை பெற்றுக்கொண்டு, ஒரு சாதாரணப் பெண்ணாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கப் பிறந்தவள் இல்லை இவள். கலைகளில் இவள் புகழின் உச்சத்துக்குப் போவாள் என்று தெரிகிறது’ என்று சொல்லிவிட்டார். அப்பா சந்தோஷமாக வீடுவந்து சேர்ந்தார். ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி மாதிரி என் மகள் மிகப் பெரிய பாடகியாக வருவாள். நாடே அவள் பாட்டில் மயங்கப்போகிறது’ என்றார் அம்மாவிடம்.

இந்தப் பெண்ணுக்கு நடிப்பு வராது

அடுத்த வாரம் அப்பா கோர்ட் விஷயமாகச் சென்னைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். நான் அவருடன் சென்னைக்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்தேன். சென்னையைப் பார்க்க எனக்குக் கொள்ளை ஆசை. அப்பா முதல் தடவையாகச் சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையைச் சுற்றிக் காண்பித்தார். லைட் ஹவுஸ், விலங்குக் காட்சிச்சாலை, மெரினா கடற்கரை, உயர் நீதிமன்ற வளாகம் என்று பல இடங்களுக்கும் அழைத்துப்போனார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலையில் அவர் எனக்குப் புதுக் காலணிகள் வாங்கிக் கொடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவை, காலைக் கடித்து நான் ‘நொண்டி நொண்டி’ நடந்ததும் ஞாபகம் இருக்கிறது. ‘இப்போது நாம், ஸ்ரீராமபிரம்மம் வீட்டுக்குப் போகிறோம்’ என்றதும் எனக்குத் திக்கென்றது. அவர் சினிமா படங்கள் எடுக்கிறவர் ஆச்சே! அப்பாவின் நண்பர்கள் பலர் சினிமா இண்டஸ்டரியில் இருந்தார்கள். அவர்களைப் பார்க்க என்னை அழைத்துக்கொண்டு போனார்.

என்னை சினிமாவில் நடிக்க வைக்கப் பார்க்கிறாரோ என்று எனக்குப் பயம் வந்துவிட்டது. அந்தக் காலத்தில் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. நடிகை என்றால் கீழாகப் பார்ப்பார்கள். எனக்கு நடிக்கப் பிடிக்காததற்கு அதுவும் ஒரு காரணம்.

அப்பா என் முகம்போன போக்கைப் பார்த்துவிட்டுச் சிரித்தார். ‘நீ சின்னப் பெண் அம்மா. உனக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும்? நீ அவங்களுக்கு முன்னாடி அழாம… பாடிக் காட்டினா போதும். சின்னதா ஒரு பாட்டு அவ்வளவுதான்!’ என்றார். என்றாலும், எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாய் உதறியது. நண்பர்கள் ஓரிடத்தில் பாயில் உட்கார்ந்து சினிமா எடுப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நடுநாயகமாக ஸ்ரீராமபிரம்மம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ‘குழந்தை நன்றாகப் பாடுவாள்’ என்று அப்பா சொன்னார். அவர்கள் எடுக்கப் போகிற படத்தில் என்னை நடிக்கவைக்க விரும்புகிறார்கள் என்று தெரிந்தது.

அங்கிருந்த ஒருவர் ‘டைரக்டர் நீ பாடணும்னு ஆசைப்படுகிறார். பயப்படாமல் பாடம்மா’ என்றார். நான் ‘சக்குபாய்’ படத்தில் வரும் பாடலைப் பாடினேன். பயத்தில் என் கீச்சுக் குரல் நடுங்கியது. எப்படிப் பாடி முடித்தேன் என்றே தெரியாது. ‘குழந்தை நன்றாகத்தான் பாடுகிறாள். ஆனால், பாடறதுக்கான தைரியம் போதாது; ரொம்ப சின்னப்பெண். இவளுக்கு சினிமாவில் நடிக்க வரும்னு தோணலை’ என்பதாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.

‘வேறு படவாய்ப்பு வந்தால் சொல்லி அனுப்புகிறேன்’ என்று டைரக்டர் சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. ரயில் ஏறிப் பத்திரமாக ஊர்வந்து சேர்ந்தோம்” என்று முடித்தார் பானுமதி. பானுமதியின் எண்ணம் இவ்வாறிருக்க, விதியின் எண்ணம் வேறாக இருந்தது.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26542019.ece

05: விதியின் விளையாட்டு!

thaaragaijpg
 

கண்ணிலே இருப்பதென்ன

கன்னி இளம் மானே...

காவியமோ ஓவியமோ

கன்னி இளம் மானே...

படம்: அம்பிகாபதி (1957)

“வாழ்க்கையில் நான் முதன்முதலாக மேக்கப் போட்டுக் கொண்ட நாளை மறக்க முடியாது!” என்று தொடங்கினார் பானுமதி. ‘எந்தப் படத்துக்கு?’ என்றேன். “படம் எல்லாம் இல்லை. பள்ளிக்கூட டிராமாவுக்கு! அக்கம்மாதான் எனக்கு முதன்முறையாக மேக்கப் போட்டுவிட்டாள்!” கொழகொழவென்று என்னத்தையோ எடுத்து என் முகத்தில் பூசினாள். அதற்குப் பிறகு முகப்பவுடர்.

நெற்றியில் ஒரு பெரிய சிவப்பு கலர் கோடு. கண்ணுக்கு ஏதோ மை. டிரஸ் எல்லாம் போட்டபிறகு கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். விசித்திரமாக இருந்தது. கண்ணாடியில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் தலைமீது ஒரு அட்டை கிரீடத்தை வைத்தாள். நான்தான் லட்சுமி தேவியாம்!

பள்ளிக்கூட ஆடிட்டோரியம் பெற்றோர்களாலும் பள்ளிக் குழந்தைகளாலும் நிரம்பி வழிந்தது. நான் மலேரியா பேஷண்ட் மாதிரி நடுங்கிக்கொண்டிருந்தேன். அப்பா ஊரில் இல்லை. அம்மா இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது. அக்கம்மா மட்டும்தான் என்னுடன் இருந்தாள்.

மேடையில் அட்டையில் செய்திருந்த ஒரு பெரிய தாமரையை வைத்தார்கள். அக்கம்மா கச்சிதமாகப் புடவை கட்டிவிட்டாள். காற்றடித்த பொம்மை மாதிரி இருந்தேன். இரவல் வாங்கிய நகைகள் மட்டுமல்லாது இந்த அட்டை கிரீடம் வேறு. முதன்முதலாக ஒரு உண்மை புரிந்தது. ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்!

என்னை அட்டையால் செய்த தாமரைப் பூவின் நடுவே அக்கம்மா உட்காரவைத்தாள். மேடையில் என்னைச் சுற்றி விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. பள்ளிக்கூடமே எனக்கு அந்நிய இடமாகத் தெரிந்தது. மாணவர்களின் முகங்கள் எல்லாம் பழகிய முகம் மாதிரியே இல்லை. நானே வேறு ஒரு உடம்பில் புகுந்து கொண்டுவிட்டது போல் இருந்தது.

திரை உயர்ந்தது, பார்வை யாளர்கள் படபடவென்று கை தட்டினார்கள். எனக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. அக்கம்மா சொன்னதைச் செய்தேன். லக்ஷ்மி கையை உயர்த்தி ஆசீர்வதிப்பது போல் நின்றேன். கடவுள் வாழ்த்து முடிந்தது.

லட்சுமியும் பின்னே ஸ்ரீராமனும்

அடுத்தது ‘பாதுகா பட்டாபிஷேகம்’ எனக்கு அப்பாவின் பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரத்தால் டிரஸ் பண்ணிவிட்டு நெற்றியில் சிவப்பாக ராமம் வைத்துவிட்டாள். ஸ்ரீராமன் ரெடி. சீதையாக நடித்தவள் ஊரிலேயே பெரிய நகைக்கடைக்காரர் வீட்டுப்பெண். அவள் காது கழுத்தெல்லாம் நகைகள் ஜொலித்தன.

அவளைப் பார்த்து நாடக ஆசிரியர் சிரித்தார். ‘அம்மா கதைப்படி சீதை காட்டுக்குப் போகணும்! நகையெல்லாம் கழற்று அம்மாயி’ என்று சொல்லிவிட்டு நகைகளைக் கழற்றிவிட்டு சாதாரணப் புடவை ஜாக்கெட் போட்டுவிட்டு ஒரு மாங்கல்யச் சரடைக் கழுத்தில் மாட்டிவிடச் சொன்னார்.

இதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர், உறவினர்களுக்கு எல்லாம் கோபம் வந்துவிட்டது. ‘எங்கள் பெண் இப்படி பரம ஏழையாக நடிக்க மாட்டாள். எல்லா நகையும் இவளுக்குப் போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் வேறு யாராவது காட்டுக்குப் போகட்டும்! எங்கள் பெண் நகை இல்லாமல் காட்டுக்குப் போகமாட்டாள்!’ என்றார்கள்.

கடைசியாக, சீதை வேடத்துக்கு ஓர் அழகான, நிஜமாகவே ஏழைப்பெண் கிடைத்தாள். லட்சுமணன், பரதன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் பெண்கள் கிடைத்துவிட்டார்கள்.

நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். அடக்கடவுளே ராமன் முகத்தில் இப்படி ஒரு அசட்டுக் களையா? நான் நடிக்கவே இல்லை. அக்கம்மா சொன்னதைச் செய்தேன். அக்கம்மாதான் என் முதல் டைரக்டர். நாடகத்தில் என் நடிப்பை எல்லோரும் புகழ்ந்தார்கள். மறுநாள் காலை நான் பள்ளிக்கூடம் போகும்போது ‘பாதுகா பட்டாபிஷேக’ ராமன் அதோ போகிறான் என்று மாணவர்கள் கத்தினார்கள். எனக்கோ வெட்கம். அந்த வேடத்தை ஏன்தான் போட்டோமோ என்று தோன்றியது.

இப்போதுகூட நான் காரில் போகும்போது என்னைப் பார்த்து ‘அதோ பானுமதி! பானுமதி!’ என்று ரசிகர்கள் கத்துவதைப் பார்க்கிறேன். அப்போது எனக்கு என் பள்ளிக்கூட நண்பர்கள் ஞாபகம் வந்துவிடும்.

அக்கம்மா எனக்கு மேக்கப் போட்டது விதியின் விளையாட்டு. வீட்டுக்கு வந்த அப்பாவுடைய நண்பர் ‘வெங்கட சுப்பையா! உன் மகள் டிராமாவில் பிரமாதமாக நடித்தாள்!’ என்று பாராட்டினார்.

கிராப்பு வைத்த கிருஷ்ணன்

அன்று பானுமதி அம்மையார் வீட்டுக்குள் நுழையும்போது ஒருவர் பஞ்சகச்சமும் குடுமியுமாக மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கி என்னைக் கடந்துபோனார். முகத்தில் மேக்கப் களை நன்றாகத் தெரிந்தது. பானுமதி சொன்னார் “இப்போதெல்லாம் இப்படிக் குடுமிவைத்திருப்பவர்களை விநோதமான ஜந்து மாதிரி பார்க்கிறார்கள். நான் எடுக்கிற சீரியலில் சாஸ்திரிகள் வேஷத்தில் நடிக்க நீங்கள்தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டீர்களே!”

உண்மைதான் சீரியலுக்காக என் அழகான கிராப்பை என்னதான் மேக்கப் என்றாலும் தியாகம் செய்ய நான் விரும்பவில்லை. கிராப்புத்தலையை நான் தடவிக்கொள்வதைப் பார்த்தபடி சொன்னார். “கிராப்புத் தலை காரணமாக எங்கள் கிராமத்தில் நடந்த விபரீதமான, ஏன் வேடிக்கையான சம்பவத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று நினைவுகளுக்குத் தாவினார் பானுமதி.

“அப்பாவழி உறவினர் ஒருவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை எங்கள் வீட்டில் படிப்பதற்காகக் கொண்டுவந்து விட்டிருந்தார். பையனின் பெயர் முத்துக்கிருஷ்ணன். பெண்ணின் பெயர் நாகவள்ளி. இருவரும் சரியான போக்கிரிக் குழந்தைகள். நாகவள்ளிக்கு என்மீது பொறாமை. ஏதாவது என்னை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருப்பாள். கிருஷ்ணன் செய்கிற வம்புகள் எல்லைமீறிப் போயின.

அம்மா மோரைக் கஷ்டப்பட்டுக் கடைந்து எடுத்த வெண்ணெய்யைத் திருடித் தின்பதிலிருந்து, பள்ளிக்குப் போகாமல் மட்டம் போட்டுவிட்டு ஊர் சுற்றுவதுவரை அவன் செய்கிற துடுக்குத்தனங்கள் கொஞ்சமல்ல. பள்ளிக்கூட டிராமாக்களில் நடிப்பதில் கிருஷ்ணனுக்கு ஆர்வம். படிக்கவே மாட்டான்.

பெண்கள் பின்னால் சுற்றுவான். எங்கள் ஊரில் இருந்த சிவன் கோயில், கிருஷ்ணன் கோயில், ராமர் கோயில் ஆகிய மூன்று கோயில்களின் அர்ச்சகர்களின் பெண்களுக்கும் அப்போதுதான் கல்யாணம் முடிந்திருந்தது. இன்னும் புகுந்தவீடு செல்லவில்லை.

இவன் அந்தப் பெண்களைச் சுற்றிவர ஆரம்பித்தான்! ஒவ்வொரு கோயிலின் பின்புறம் பிரகாரத்தில் இருக்கும் நந்தவனத்தில் அந்தப் பெண்களை ரகசியமாகச் சந்திப்பான்! அவர்கள் பிரியத்துடன் தருகிற புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என மூன்று வகையான பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டுக் குண்டாகிக்கொண்டே வந்தான். மூளை மழுங்கிக்கொண்டே வந்தது.

கிருஷ்ணனின் காதல் விவகாரம் பள்ளிக்கூட ஆசிரியருக்கும் தெரிந்துவிட்டது. இவன் எப்போது பார்த்தாலும் கோயில்களுக்கு வரும் பெண்களின் பின்னாடியே சுற்றுகிறான். படிப்பதே கிடையாது என்று புகார் கிளம்பியது. ‘அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும்’ என ஒரு பெண்ணின் தகப்பனார் முடிவுசெய்துகொண்டார்…” என்று சொல்லி நிறுத்த, எனக்கோ கிருஷ்ணன் மாட்டியிருப்பானோ என்ற எண்ணம் எழுந்தது.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26606274.ece

Link to comment
Share on other sites

06: கிருஷ்ண தேவராயரும் கொய்யாப்பழமும்

tharagaijpg
 

மயங்காத மனம் யாவும் மயங்கும்

மயங்காத மனம் யாவும் மயங்கும்

அலைமோதும் ஆசை பார்வையாலே

அழகின் முன்னாலே - ஓ ராஜா

படம்: காஞ்சித்தலைவன்

கிராப்பு வைத்த கிருஷ்ணன் கதையை பானுமதி தொடர்ந்தார்.

“அப்போது அப்பா ஊரில் இல்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று ஒரு நாள் ராமர் கோவிலுக்குப் போனேன். பகல் மூன்று மணி. கோயிலின் வெளிப்புறக் கதவு சாத்தியிருந்தது. கோயிலில் யாரும் இல்லை. கோயிலுக்குப் பின்னாலிருந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் நின்றேன். புழுக்கத்துக்கு இதமாகக் காற்று வீசியது. மரத்துக்கு அந்தண்டைப் பக்கம் மதில்சுவர் மறைவில் பேச்சுக்குரல் கேட்டது. போய்ப்பார்த்தால் அர்ச்சகரின் மகளும் கிருஷ்ணனும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். கல்யாணம் முடிந்து மூன்று மாதம்கூட ஆகவில்லை.

கிருஷ்ணன் பிரசாதத்தை ருசித்துச் சாப்பிட்டபடி அவள் கன்னத்தை நிமிண்டினான். அவளோ அவன் கிராப்புத் தலையை ஆசையுடன் கோதினாள். அந்தப் பெண் மீது கோபம் வந்தது. அதேநேரம் அவளை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. அவள் கணவன் குடுமி வைத்திருந்தான். கூன் போட்டு பெண்பிள்ளை மாதிரி நடப்பான். அது ஒரு கட்டாயக் கல்யாணம். அந்த ஆலமரத்தடி சந்திப்பு நடந்த நேரத்தில் பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். கிருஷ்ணன் கையும்களவுமாகப் பிடிபட்டுவிட்டான்.

மறுநாள் அவர் வீடுதேடி வந்துவிட்டார். அவரை சமாதானம் செய்து, ‘உங்கள் மகளையும் கண்டித்து வையுங்கள். முதலில் அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்புங்க’ என்றாள் அம்மா. ‘நீங்கள் சொல்வது சரிதான் அம்மா’ என்று சொல்லிவிட்டுப்போனார். ‘ஏண்டா இப்படிக் கல்யாணமான பெண்கள் பின்னால் சுற்றுகிறாய்?’ என்று கிருஷ்ணனை அம்மா திட்டினாள் ‘நான் என்ன செய்வேன் அம்மா? அந்தப் பெண்கள்தான் என் பின்னாடி வருகிறார்கள்.

என் கிராப்பு அழகாக இருக்கிறதாம்! அவர்களுக்கு பிடித்தமில்லாத மாப்பிள்ளைக்கு ஏன் கட்டிவைக்கவேண்டும்? அவங்க கஷ்டத்தைச் சொன்னார்கள், கேட்டது தப்பா?’ என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியைப் பார்த்தபடி கிராப்புத்தலையைச் சரிசெய்யத் தொடங்கிவிட்டான்.

மறுநாள் மூன்று பெண்களின் தகப்பனார்களும் அவரவர் மாமியார் வீட்டுக்கு பெண்களைப் ‘பேக்’ பண்ணி அனுப்பிவிட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பானுமதி.

பேசுவதற்கு முன்னால் ஒரு மெல்லிய பாடலை முணுமுணுப்பது பானுமதி அம்மையாரின் வழக்கம். சிலநேரம் பாடல் வரிகள் விளங்காவிட்டாலும் ராகம் பரம சுகமாக இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான் என்ன பாடல், என்ன ராகம் என்று புரியாத ஒரு இசை மீட்டல் அவரிடமிருந்து வந்துகொண்டிருந்தது. இது என்ன பாடல் அம்மா... ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று கேட்டேன்.

“அதுவா? ‘வரவிக்ரேயம்’ என்ற தெலுங்குப் படத்தில் அறியாத பெண்ணான காளிந்தியாக நான் நடித்தபோது பாடிய பாடல்! அது என் முதல் படம். ‘பலுகவேமி நா தெய்வமா?’ தெய்வமே எனக்குப் பதில் சொல்ல மாட்டாயா? தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனை. அப்போதிருந்த என் மனநிலைக்குப் பொருத்தமான பாடல். அதைப் பற்றித்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப்போகிறேன்” என்று தொடர்ந்தார். சொல்லட்டும் கேட்போம்.

அம்மாவின் அதிர்ச்சியும் அறிமுகப் படமும்

“அப்பாவுக்குக் கர்னாடக சங்கீதத்தில் அபார ஞானம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு என்றால் அவருக்கு உயிர்.

வீட்டில் கிராமபோன் ரிகார்டுகளைப் போட்டுவிட்டு தான் ரசிப்பதோடு என்னையும் கவனிக்கும்படி சொல்வார். கேட்டதை என்னையே பாடிக்காட்டச் சொல்லிக் கண்ணைமூடிக் கேட்டபடி ரசிப்பார். கடவுளின் கிருபையால் எனக்கு இயற்கையிலேயே இனிமையான சாரீரம் வாய்த்திருந்தது. அது மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு ராகத்தை ஒருமுறை கேட்டதும் அதை அப்படியே அச்சு அசலாகத் திரும்பப் பாடிவிடுவேன்.

புகழ்பெற்ற டைரக்டர் சி. புல்லையா அப்போது ‘வரவிக்ரேயம்’ என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் சங்கீதஞானம் மிகுந்த காளிந்தி என்ற சிறுமி வேடத்துக்கு ஒரு பெண் தேவைப்பட்டாள். அந்தப் படத்தில் பாடல்கள் நிறையப் பாடுகின்ற வாய்ப்பும் இருந்தது. சினிமா சம்மந்தப்படாத அல்லது சினிமாக்காரர்கள் குடும்பத்தைச் சேராத சினிமாவுக்கே புதுசாக அந்தப் பெண் இருக்க வேண்டும் என்பது புல்லையாவின் விருப்பமாக இருந்தது. புல்லையா என்னைக் காண விரும்பினார். பாடல்கள் பாடும் வாய்ப்பு, அந்தப் படத்தில் நிறைய இருப்பதால் அப்பாவுக்கும் இந்த ஏற்பாடு பிடித்திருந்தது.

அம்மாவிடம் இதைப் பற்றிச் சொன்னார். அம்மாவுக்கு இதைக் கேட்டதும் பயங்கர அதிர்ச்சி. சினிமா உலகத்தைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அவள் பலவிஷயங்கள் கேள்விப்பட்டிருந்தாள். ‘ஐயையோ! வேண்டவே வேண்டாம்! சினிமாவில் சேர்ந்த பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்ற அலறிய அம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டு அப்பா சொன்னதை இன்றுவரை மறக்கமுடியவில்லை. ‘அடி அசடே! எங்கே இருந்தாலும் கெட்டுப்போகிறவர்கள் கெட்டுப்போவார்கள்.

இது தெரியாதா உனக்கு? எங்கேயுமே போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெண்ணும் கெட்டுப்போவாள்! நாம் நல்ல குணத்தோடு இருந்தால் நம்மைச் சுற்றிய உலகமும் நல்லதாகவே இருக்கும். எல்லாம் நாம் நடந்துகொள்வதைப் பொறுத்துதான் இருக்கிறது. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது! கவலைப்படாதே. அவளைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்!’ என்றார். அந்தக் கணத்தில் அப்பாவின் மீது எனக்கிருந்த மரியாதை கூடியது.

டைரக்டர் புல்லையாவைச் சந்திக்க நாங்கள் ராஜமுந்திரிக்குப் புறப்பட்டுப் போனோம். எங்களை ராஜமுந்திரியில் இருந்து ஆந்திரா சினி ஸ்டுடியோவுக்கு அழைத்துப் போனார்கள். ஸ்டுடியோவின் கட்டிடம் பெரிதாகவும் பாழடைந்தும் காணப்பட்டது. ஏன் ஸ்டுடியோ இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரியவில்லை.

ஆனால், எனக்கு அந்த ஸ்டுடியோவைப் பிடித்ததற்கு அங்கிருந்த கொய்யாமரங்கள்தாம் காரணம். ஒவ்வொரு கொய்யாவும் குண்டு குண்டாக இருந்தது. அவ்வளவு பெரிய கொய்யாவை நான் பார்த்ததே இல்லை. ‘அப்பா அந்தக் கொய்யாக்காயைப் பறிக்கலாமா?’ என்று கேட்டேன். சிறுவயதில் இருந்தே எனக்குக் கொய்யா என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் செங்காய்கள் என்றால் ரொம்பவே இஷ்டம்.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீ பி.என். ரெட்டியிடம் கொய்யாமீது எனக்கு இருந்த அளவு கடந்த ஆசையைச் சொன்னேன். ‘அதுக்கென்ன மல்லேஸ்வரி படத்தில் ஒரு கொய்யாப்பழ சீன் வச்சிடுவோம்!’ என்றார். அவர் தமாஷ் பண்ணுகிறா ரென்று நினைத்தேன். ஆனால், மல்லேஸ்வரி படத்தில் உண்மையில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயருக்கு நான் கொய்யாப் பழங்கள் அன்பளிப்பாகக் கொடுக்கிற மாதிரி ஒரு சீனை அமைத்துவிட்டார் என்று சொன்ன பானுமதி முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26665468.ece

07: தொட்டுப்பேசக் கூடாது!

tharagaijpg
 

சம்மதமா? நான் உங்கள்

கூடவர சம்மதமா?

சரிசமமாக நிழல்போல - நான்

உங்கள் கூடவர சம்மதமா?

படம்: நாடோடி மன்னன்

பானுமதி சொன்ன கொய்யாப் பழக் கதை சுவையாக இருந்தாலும் அவர் சாப்பிட்ட கொய்யாப்பழம் அப்படி இல்லை. முதல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களிலிருந்து தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார் பானுமதி.

“நான் பறித்துக்கொண்டு வந்த கொய்யாப்பழங்களை அப்பாவின் முன்னால் கொட்டினேன். ஒரு பழத்தை எடுத்துக் கடித்தேன். ஒரே துவர்ப்பு. உடனே அப்பா, ‘இது கல்கத்தா ரக கொய்யா அம்மா. அப்படித்தான் இருக்கும். ரொம்ப சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கும். நாளை நீ புல்லையாவிடம் பாட்டு பாடிக் காண்பிக்கணும் மறந்துடாதே’.

அவர் கூறியதைக் கேட்டதும் நான் டல்லாகி விட்டேன். கடவுளே நான் மட்டும் சினிமாவுக்குச் சரிப்பட மாட்டேன்னு சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சினிமா பற்றிய கவலை இல்லாமல் படிக்கலாம்; விளையாடலாம்.

நான், அப்பா, அவர் நண்பர் மூணு பேரும் அன்று ‘மோகினி பஸ்மாசுரா’ படம் பார்க்கப்போனோம். புகழ்பெற்ற நடிகை புஷ்பவல்லி மோகினியாக நடித்தார். அப்படியே மோகினியாகவே மாறிவிட்டார். புஷ்பவல்லி பாடத் தொடங்கினார். பாட்டும் நன்றாக இல்லை. குரலும் ஒத்துப்போகவில்லை. வாயசைப்பு மோசம்.

எனக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவேயில்லை. ‘பாடத் தெரியாவிட்டால் ஏனய்யா இப்படிப் பாடவைக்கிறீர்கள்?’ என்று அப்பா கேள்வி கேட்டார். ‘என்னசார் செய்வது? அந்த அம்மாதான் ஹீரோயின். எனக்கு அவரைவிட நன்றாகப் பாடத் தெரியும் அதுக்காக நான் அவரது ரோலை செய்ய முடியுமா, நடிக்கறவங்கதான் பாடணும்?’ என்றார்.

புல்லையாவைச் சந்தித்தேன்

மறுநாள் காலை இயக்குநர் புல்லையாவைப் பார்க்கப் போனோம். நாங்கள் உட்கார்ந்திருந்த ஹாலுக்குள் புல்லையா நுழைந்தார். இப்போதுதான் முதல் தடவையாக அவரைப் பார்க்கிறேன்.

நரைத்த தலை, கறுப்பும் வெள்ளையுமாய் மீசை. நல்ல உயரம். கட்டுமஸ்தான அழகான தோற்றம். வேட்டியும் குர்தாவும் அணிந்திருந்தார். என்னைப் பாரத்துப் புன்னகைத்தார். பிறகு கேட்டார். ‘குட்டிப்பெண்ணே, உன் பெயர் என்ன?’. யாருக்குமே அவரைப் பார்த்ததும் ஒரு மரியாதை தோன்றும். மிகவும் மரியாதையுடன் அவர் கண்களைத் தவிர்த்து நான் சொன்னேன், ‘பானுமதி’.

என் மனசுக்குள் ஒரு உதைப்பு. எந்தப் பாட்டைப் பாடுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாப் பாட்டும் மறந்துபோய்விட்டது.

புல்லையா உட்கார்ந்தார். நான் குனிந்த தலை நிமிரவில்லை. ‘நோ, நோ ரொம்பச் சின்னக் குழந்தை, இவள் சினிமாவுக்கு லாயக்கில்லை’ என்ற வார்த்தைகள் அவர் வாயிலிருந்து எப்போது வரும் என்றிருந்தது. அவ்வளவுதான் சட்டென்று ரயிலைப் பிடித்து ஊருக்குப்போய்விடலாம். இப்படி யோசித்தபடி இருந்தேன். பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ‘சக்குபாய்’ படத்தில் வரும் பாட்டைப் பாடினேன். புல்லையாவைப் பார்க்கும் தைரியமில்லை. எனக்கு வேர்த்துக் கொட்டியது. பாடி முடித்ததும் புல்லையா சத்தம் போட்டுச் சிரித்தார்.

 ‘அடடே! இந்தப் பெண்தான் நாங்க தேடிக்கிட்டிருந்த காளிந்தி!’ ‘மிஸ்டர் வெங்கட சுப்பையா உங்க பொண்ண அழைச்சிகிட்டு நீங்க கல்கத்தா புறப்படுங்கள். அங்கேதான் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கோம். காளிந்தி ரோலில் நடிக்க வேண்டிய ஒரு பொண்ணுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம். கடவுளே அனுப்பிய மாதிரி உங்க பெண் வந்துவிட்டாள். காளிந்தி வேஷத்துக்கு எத்தனையோ பெண்களைப் பார்த்துவிட்டேன். ஆனால், காளிந்தியே வருவாள் என்று நினைக்கவில்லை! இந்தப் படத்தில் இந்தப்பெண்ணுக்கு நிறைய பாட்டுக்கள் பாடும் வாய்ப்பு கிடைக்கும். குரல் பிரமாதமா இருக்கு’ என்றார் புல்லையா.

அப்பாவின் நிபந்தனைகள்

புல்லையா தன் உதவியாளரை அழைத்து, “ஒரு சின்ன சிக்கல். புஷ்பவல்லி படத்தில் இந்தப் பெண்ணின் தங்கையாக நடிக்கிறாள். குண்டாகவும் இருக்கிறாள். புஷ்பவல்லியைத் தங்கையாக வைத்து நிறைய ஷாட்டுகள் எடுத்தாகிவிட்டது. இந்தப் பெண்ணுக்குத் தங்கையாக நடிக்கும் உடல்வாகு புஷ்பவல்லிக்கு இல்லை. ஆகவே, நல்ல மேக்கப்மேனாகப் பார்த்து அழைத்து வந்து இந்தப் பெண்ணுக்கு பெரிய பெண் மாதிரி தோன்றும் விதமாக மேக்கப் போடணும்’ என்றார். ‘அதுக்கென்ன? அப்படியே செய்கிறேன்’ என்றார் அவருடைய உதவியாளர்.

ஆனால், அப்பா சில கடுமையான நிபந்தனைகளை விதித்தார். ‘மிஸ்டர் புல்லையா உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்! இந்தப் படத்திலே வருகிற ஹீரோ ஆனாலும் சரி, வேறு ஆண் நடிகர் என்றாலும் சரி என் பெண்ணைத் தொட்டுப் பேசக் கூடாது.  அவர்கள் தலையை எனது பெண்ணின் தோள்மீது சாய்த்துக் கொள்ளக் கூடாது’ என்றார்.

அதைக் கேட்டு புல்லையா சிரித்துவிட்டுச் சொன்னார். ‘கவலைப்படாதீர்கள்... இந்தப்படத்தில் ஹீரோ கிடையாது. கல்யாணத்துக்கு முந்தியே காளிந்தி கிணற்றில் விழுந்து செத்துப்போகிறாள். அதுவுமில்லாமல் இத்தனை சின்னப் பொண்ணுக்கு ஹீரோ வைக்க முடியுமா?’ என்றார்.

150 ரூபாய் சம்பளம்

இயக்குநர் கூறியதைக் கேட்டு அப்பாவின் மனம் நிம்மதி அடைந்தது. ‘குழந்தையை அழைச்சிட்டு அடுத்த வாரம் கல்கத்தா வாங்க. இது லோ பட்ஜெட் படம்தான். உம்ம பெண்ணுக்கு மாதம் 150 ரூபாய் சம்பளம்’ சொல்லிவிட்டு மறுபடி சிரித்தார். தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சிரித்ததால் அப்பா அதைப் பொருட்படுத்தவில்லை. ‘பணம் ஒரு பொருட்டே அல்ல. என் மகளுக்குப் படத்தில் பாட நிறைய பாட்டுகள் வேண்டும். ஒவ்வொரு பாட்டும் லட்ச ரூபாய்க்குச் சமம். எனக்கு என் பெண் பாடுவதைக் கேட்கணும் அதுபோதும்’ என்றார்.

‘ஊரிலிருக்கும் என் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக நிறையக் கொய்யாக் காய்களைப் பறித்துக்கொண்டு அப்பாவுடன் ரயில் ஏறினேன். என் நண்பர்களுக்குக் கொய்யாப் பழங்களைக் கொடுத்தபோது என் கண்ணில் கண்ணீர் தளும்பியது. இவர்களோடு மறுபடி விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என் பள்ளிப் பருவம் முடிவுக்கு வந்துவிட்டதா? இந்தக் கேள்விகள் என்னை வாட்டின.

இன்று இளவயது ஆண்களும் பெண்களும் படத்தில் நடிக்கத் தங்கள் படிப்பைக் கைவிடுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. படிக்க முடியவில்லையே என்று நான் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். இவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது” என்று சொன்ன பானுமதி அம்மையார் குரலில் நிஜமான கவலை ஒலித்தது.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26734446.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நடிகைகளை பற்றிப் போடுகிறீர்கள். எல்லாம் வாசிக்கவில்லை. ஆனால் அவர்கள் பற்றிய செய்திகளை தெரிந்துகொள்வது நல்லதுதான். இதை நீங்கள் தவறான பகுதியில் இணைத்துவிட்டீர்கள். நான் நினைக்கிறேன்  வேரும் விழுதும் பகுதியில் இணைத்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பா. சதீஷ் குமார் said:

இப்பொழுது என்ன செய்வது? இதை மாற்ற முடியுமா அல்லது இதிலேயே தொடரலாமா...

நிர்வாகத்திடம் கோரினால் மாற்றிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்!

tharagaijpg

தெனாலி ராமகிருஷ்ணா தெலுங்குப் படத்தில் பானுமதி

 

சலாம் பாபு… சலாம் பாபு... என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு... சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க...

படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன.

இக்கதைகள் தமிழில் பிரபல வார இதழில் ‘மாமியார் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்து, அவருக்கு ஒரு வாசகர் கூட்டத்தைத் தமிழிலும் உருவாக்கித் தந்தது. மாமியார்-மருமகள் சண்டையில் வருகிற நகைச்சுவைச் சம்பவங்கள் உண்மையில் பானுமதியின் வாழ்க்கையில் நிகழ்ந்தவைதாம்.

மறுபடி மாமியார் கதைகள் எழுதும் உத்தேசம் உண்டா? என்று அவரிடம் கேட்டேன். “எழுதினால் போச்சு. ஒரு சம்பவம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் விவரித்தபோது, ஒரு மாமியார் கதை கிடைத்துவிட்டது. அது பத்திரிகையில் பிரசுரம் கண்டது. அதைத் தவிர தமாஷாக அவர் விவரித்த சம்பவங்கள் அவ்வப்போது எழுத்துவடிவம் எடுத்து பிரசுரம் ஆனதும் உண்டு.

அப்போதெல்லாம் அவர் ஒரு குழந்தைபோல் குதூகலிப்பார்.” என்றார். ‘சகலகலாவல்லி’ என்ற பெயருக்கு ஏற்ப அவர் பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்தாலும் எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. சிறந்த எழுத்தாளருக்கான ஆந்திரப் பிரதேசத்தின் சாகித்திய அகாடமி விருதும் அவருக்குக் கிடைத்தது.

tharagai-2jpg

‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் பானுமதி

 

சிறப்பான நடிப்புக்கு உதவி

“அப்பாவுக்கு என் எழுத்துத் திறமைமீது அபார நம்பிக்கை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் செட்டில் இடைவேளைகளில் என் மனத்தில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன். ஸ்டுடியோக்களில் நான் சந்திக்கும் வேடிக்கையான மனிதர்கள்பற்றி பேனா சித்திரங்கள் பலவற்றைத் தீட்டியிருக்கிறேன்.

இதை கவிராஜூ என்ற எழுத்தாளர் பார்த்துவிட்டுப் பாராட்டினார். நான் உனக்குக் கதையெல்லாம் எழுதச் சொல்லித்தருகிறேன். உனக்கு காமெடிக் கதை பிடிக்குமா? சோகக்கதை பிடிக்குமா? என்று கேட்டார். ‘காமெடிதான் பாப்பாவுக்கு இஷ்டம்’ என்றார் அப்பா சிரித்தபடி.

கவிராஜூதான் எனக்குக் கதை எழுதக் கற்றுக்கொடுத்தார். தன் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவைச் சம்பவங்களை விவரிப்பார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். கவிராஜூ தந்த உற்சாகத்தில் நான் எழுதிய முதல்கதை ‘மரச்சொம்பு’. அவர் அதைத் திருத்திக் கொடுத்தார். என் கற்பனைத்திறனையும் பாராட்டினார்.

எனக்குத் தரப்படும் ஸ்கிரிப்ட் சப்பென்று இருந்தால் எனக்குப் பிடிக்காது. அதில் ஏதாவது நகைச்சுவையாக வரும்படி செய்து பேசிவிடுவேன்.

நான் பேசும் வசனங்களை இப்படி நானே செய்துகொள்ளும் வார்த்தை அலங்காரங்களைப் பல இயக்குநர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

வாழ்க்கையில் நான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் ஏனோ தெரியவில்லை சீரியஸாகத்தான் இருக்கிறார்கள். எப்பவும் முகத்தையும் சீரியஸாக வைத்துக்கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் என்னமோ கப்பல் கவிழ்ந்து விட்டதுபோல் படுமோசமாகக் காட்சியளிப்பவர்களும் உண்டு. என் பேச்சாலும் எழுத்தாலும் இது போன்றவர்களைச் சீண்டி சிரிக்கவைப்பது எனக்குப் பிடிக்கும்.

ஒருநாள் எனது கார் ஓட்டுநர் கோவிந்து தலையைச் சொறிந்துகொண்டு வந்து நின்றான். “சொல்லப்பா என்ன விஷயம்” என்று கேட்டேன். ‘உங்களை நன்றாகத் தெரியும்னு சொல்லிகிட்டு காலைலேர்ந்து ஒருவர் வந்து வெயிட் பண்றார். ஏதோ வேணுமாம்’ என்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் கண்கலங்கி தனது கஷ்டங்களை விவரித்து பணஉதவி கேட்டார்.

நான் மறுத்துவிட்டேன். வந்தவர் விடாப்பிடியாக ‘அம்மா நீங்க நினைச்சா உதவி செய்யலாமே. நான் ரொம்ப ஏழை. உங்களைப் போன்றவர்கள் உதவினால்தான் உண்டு’ என்றார்.

எனக்கு முகம் சிவந்துவிட்டது. அதாவது கார், பங்களாவோடு இருப்பதால் எனக்குக் கஷ்டமில்லை என்று நினைச்சிட்டீங்க. இதப் பாருங்க நான் பெரிய மரம். பெரிய காத்து. நீங்க சின்ன மரம். சின்ன காத்து புரியுதா? என்றேன்.

நான் கூறியதைக் கேட்டு வந்தவரால் ஏதும் பேசமுடியவில்லை. ஒருவர் கஷ்டப்படுகிறார் என்பதை அவரது கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். வந்தவர் நானே வியக்கும் அளவுக்கு நடிகர் என்பதைக் கண்டுபிடித்தேன்.

இவ்வளவு நேரம் சிறப்பாக நடித்தவரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாமே என்று அவர் கையில் கொஞ்சம் பணம் தந்து அனுப்பிவைத்தேன்” என்று பானுமதி கூறியபோது பல்லியைக் கண்டு தாம் பயந்து நடுங்குவதை ஒரு வேடிக்கைக் கதையாக அவர் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது.

எம்.ஜி.ஆருடன் கத்திச் சண்டை

நான் ஆர்வத்துடன் ‘நீங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறீர்களா? ’ என்று உரையாடலைத் தொடர்ந்தேன். “அதற்குத் தேவையே இல்லை. எவ்வளவு சீரியஸான கதாபாத்திரம் ஆனாலும் என்னால் லைட்டாக நடிக்க முடியும். அதை அப்படியே நகைச்சுவையாகச் செய்துவிட முடியும். என் சுபாவமே அதுதான் சார்” என்றார்.

ஒருமுறை எம்.ஜி. ஆரிடம் ‘நான் வேண்டுமானால் கத்திச் சண்டை போடட்டுமா? ’ என்று கேட்டீர்களாமே என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம் எம்.ஜி.ஆர். போடும் கத்திச்சண்டையை எவ்வளவு நேரமானாலும் அலுப்பில்லாமல் பார்க்கலாம். அவ்வளவு சுறுசுறுப்பு. வீரம் அவர் முகத்தில் தாண்டவமாடும். அன்றைக்கும் அப்படித்தான் சண்டை நீண்டுகொண்டே போனது...

எனக்கு அவசரமான வேலை இருந்தது... மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் நம்பியாரோடு சண்டை போட்டு என்னைக் காப்பாத்தறதுக்கு ரொம்ப நேரம் ஆகும்போல் தோணுகிறது... என்கிட்டே கத்தியைக் கொடுங்கள்.

எனக்குக் கத்திச் சண்டை தெரியும். கொஞ்ச நேரத்தில் வில்லனைத் தோற்கடித்துவிடுகிறேன் என்றேன். செட்டில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். உட்பட” என்று நினைவுகூர்ந்த பானுமதி குழந்தையைப் போலச் சிரித்தார்.

ஒருமுறை பிரபலமான சோப்பு கம்பெனிக்காரர்கள் அவரை அணுகித் தங்கள் சோப்புக்கட்டியின் பிரதாபங்களை எடுத்துக்கூறி, அதன் விளம்பரத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். அவர்கள் கூறி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பானுமதி அவர்களைப் பார்த்து, “இதோ பாருங்கள்.

என் ரசிகர்களை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். நான் உங்கள் சோப்பை வாங்குவதில்லை! நான் உங்கள் சோப்பைப் பயன்படுத்துவதில்லை! உங்கள் சோப்பு எனக்குப் பிடிக்காது! போய்வாருங்கள்” என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம்.

பானுமதிக்குப் சோப்புப் போட்டு விளம்பரத்தில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைத்த கம்பெனிக்காரன் விட்டால்போதும் என்று ஓடியிருக்கிறான். பானுமதிக்கு கோபத்திலும் எத்தனை நகைச்சுவை!

Link to comment
Share on other sites

09: எம்.ஜி. ஆரின் கைரேகை!

 

உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே

கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பேதானே

பெண்ணை லேசாய் எண்ணிக்கொண்டு

பேதை என்று இகழ்ந்திடாது

அன்புசெய்தால் அமுதம் அவளே

வம்பு செய்தால் விஷமும் அவளே!

படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார்.

அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் தொடர்பான கிரந்தங்கள், புத்தகங்கள்! கைரேகை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகள் சிலவும் அங்கே இருந்தன.

“ஜாதகம்கறது ஏதோ பொய் புனைசுருட்டு கிடையாது. அது கணிதம். சின்ன வயசிலிருந்தே எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடு உண்டு. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் நாடி கிரந்தங்களில் மூழ்கிவிடுவேன்” என்றவர், அதை முறைப்படி கற்றுக்கொண்டதையும் தெரிவித்தார். “சிவலிங்க வீரேசலிங்கம் என்று ஒரு சித்தர புருஷர் இருந்தார். அவரிடம்தான் கைரேகை, ஜோதிடக் கலையைக் கற்றுக்கொண்டேன்.

எம்.ஜி.ஆரின் கைரேகையைப் பார்த்து அந்தக் காலத்திலேயே அவருக்கு ஆரூடம் சொல்லி இருக்கிறேன் தெரியுமோ?” என்றவரைப் பார்த்து ஆச்சரியம் விலகமால் ‘அப்படியா?’ என்றேன். “ஆமாம் சார்.. அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தேன். ‘மலைக்கள்ளன்’ படப்பிடிப்பில் ‘புதுமுகம்’ என்று சொல்லி எனக்கு எம்.ஜி.ராமச்சந்திரனை அறிமுகப்படுத்திவைத்தார்கள்.

கையை காட்டிய எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் முகத்தில் ஒரு காந்தசக்தி இருந்ததைக் கவனித்தேன். நடை உடை பாவனைகளில் ஒரு பெரும்போக்கும் நாகரிகமும் தெரிந்தது. மரியாதையாக என்னை ‘அம்மா’ என்றுதான் கூப்பிடுவார். பானுமதி என்று சொல்லவே மாட்டார். ஸ்டுடியோவில் பணியாற்றும் லைட் பாயைக்கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட உட்காருவார்.

சினிமாவில் மட்டுமல்ல; நிஜவாழ்க்கையிலும் அவர் ஒரு ஏழைப்பங்காளர்தான். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போது கிரீடத்துடன் மன்னர்வேடம் அணிந்து அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரையே கவனித்தபடி இருந்தேன். நிச்சயமாக இவர் போன ஜென்மத்தில் ஏதோ ஒரு தேசத்தின் மன்னராகவோ இளவரசராகவோதான் இருந்திருக்க வேண்டும் என்று என் மனசுக்குப் பட்டது. அப்படி ஒரு கம்பீரம். அது நடிப்பால் வருவதல்ல.

நானே எம்.ஜி.ஆர் அருகில் சென்று ‘மிஸ்டர் ராமச்சந்திரன் உங்கள் கையைக் காட்டுங்கள். எனக்குக் கொஞ்சம் கைரேகை ஜோதிடம் தெரியும் என்றேன். அவர் கூச்சத்துடன் ‘வேண்டாம் அம்மா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது’ என்றார். சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்தலால் கையைக் காண்பித்தார். பார்த்த உடனே சொல்லிவிட்டேன். “மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள்! இந்த உலகமே கொண்டாடும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள்! ஆனால் சினிமாவால் அல்ல” என்று நான் கூறியதும் எல்லோரும் கை தட்டினார்கள்.

அவர் கைகூப்பி வணங்கி ‘நன்றி அம்மா’ என்றார் புன்னகையுடன். பின்னர் அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர். என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுண்டு தமிழக மக்கள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியபோது கலைத் துறையினர் சார்பாக சென்னையில் பிரம்மாண்டமான பாராட்டுக் கூட்டம் நடந்தது. நான் மேடைக்குக் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தேன்.

உரையாற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து என்னைப் பார்த்துவிட்டு ‘இந்த நிலைக்கு நான் வருவேன் என்று நானே எதிர்பார்க்காத காலத்தில் அன்றே என் கைரேகையைப் பார்த்து பானுமதி அம்மையார் கணித்துச் சொன்னார். அவரது ஆரூடம் பலித்துவிட்டது’ என்றார். அரங்கத்தில் கை தட்டல் அடங்க வெகுநேரமாயிற்று” என்றவர் என்னைக் கூர்ந்து பார்த்து, “உங்கள் ஜாதகத்தை நாளைக்குக் கொண்டுவாருங்கள் பார்க்கலாம்” என்றார் பானுமதி.

எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அடுத்தமுறை சென்றபோது, என் ஜாதகம் எழுதிய பழைய செல்லரித்த நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு “சரிதான்..! நான் நினைச்சபடிதான் இருக்கு” என்றார்.

நான் சற்று ஆவல் அதிகமாகி ‘என்னம்மா சொல்றீங்க’ என்றேன். “களத்திரபாவம் சரியில்லை” என்றவர் தொடர்ந்தார்.

“மனைவியால் பெரிய சந்தோஷம் கிடைக்காது. சஞ்சலம்தான்” என்றவரைப் பார்த்து ‘உண்மைதான்’ என்று சொன்னேன்.

பானுமதி, “உங்க மேல உங்க மனைவிக்கு ரொம்ப ஆசை உண்டு. ஆனால் காரணமில்லாமல் ஒரு ஊடல் இருந்துகிட்டே இருக்கும்.” என்றார். அட! ‘இன்னிக்குக் காலையில் கூட ஊடல்தான் அம்மா’ என்றேன். “நான் கொடுக்கிற செக் உங்க ஊடலைச் சரிபண்ணிடும்னு நினைக்கிறேன்” என்று ஏதோ ஞானதிருஷ்டியால் பார்த்த மாதிரிப் பேசிய பானுமதியை வியப்போடு ஏறிட்டுப் பார்த்தேன். “அது அப்படித்தான் சார்.

பெண்கள் பெரும்பாலும் லெளகீகமாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பதுதான் நல்லதும்கூட. லோகம் இயங்குறதுக்கு இந்த லெளகீகம் தேவை. அதனால்தான் மூன்று பிடிகளுக்கு மேல் குசேலன் கொடுத்த அவலைச் சாப்பிட வேண்டாம்னு துவாரகை கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள் மனைவி” என்றவர் அன்று பேட்டி முடிந்து கிளம்பும்போது மறக்காமல் எனக்குக் காசோலை கொண்டுவந்துகொடுத்தார்.

 

 

கைரேகை பார்ப்பதைக் கைவிட்டார்

அடுத்த சந்திப்பிலும் ஜோதிடம், கைரேகை பற்றிக் கொஞ்சம் பேச்சு தொடர்ந்தது. “கைரேகை பார்ப்பதையே கைவிடும்படியான சம்பவம் ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது” என்று தொடங்கினார் பானுமதி. “எங்கள் படக்குழுவின் புகைப்படப் பிரிவில் ராஜூ என்ற இளைஞன் இருந்தான். நானும் குருஜியும் (அந்த சித்த புருஷர்) படப்பிடிப்பு இடைவேளையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ராஜூ வந்தான். அவரை வணங்கிவிட்டு, தன் கையை நீட்டி ‘சுவாமி என் கைரேகையைப் பார்க்கணும்’ என்று பவ்யமாகக் கேட்டுக் கொண்டான். குருஜி சிரித்துக்கொண்டே ‘நீ பாரேன்’ என்று என்னிடம் தள்ளிவிட்டார்.

ராஜூவின் கைரேகையைப் பார்த்தேன். திரும்பத் திரும்பப் பார்த்தேன். எனக்குள் கலவரம் மூண்டது. ‘எப்படி இருக்கு?’ என்று கேட்டார் குருஜி. நீங்களே பாருங்கள் என்று நான் கூறியதும் குருஜி முகத்தில் சிந்தனைக்கோடுகள். ‘நீ நினைத்தது சரிதான். நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு குருஜி போய்விட்டார். ராஜூவைப் பார்த்து, உன் வயது என்ன என்றேன். ‘இருபத்தாறு’ என்றான். கடவுளே இந்த வயதுக்கு மேல் அவன் வாழ்க்கை தொடர முடியாதே... என் மனதை அவனது ஆயுள் ரேகை பிசைந்தது. அவனிடம் பேச்சை மாற்றிப் பார்த்தேன். ஆனால், அவன் குறியாக இருந்தான். அவனிடம் உடம்புக்கு ஏதாவது? என்று நான் இழுப்பதற்குள் ‘நான் நல்லாத்தான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

இது நடந்து கொஞ்ச காலம் கழிந்தது. என் கணவர் என்னிடம் ‘அவனைக் கைரேகை பார்த்துப் பயமுறுத்திவிட்டீர்களாமே? ஆள் ஜோரா இருக்கான்!’ என்று கிண்டல் செய்தார். சில மாதங்கள் சென்றன. படப்பிடிப்பில் அவசர அவசரமாக என்னை நோக்கி வந்த புரடெக்ஷன் பாய் ஒருவர், ‘அம்மா நம்ம ராஜூ செத்துப்போய்விட்டான். சைனஸுக்காக ஆப்ரேஷன் செய்திருக்கான். அதில் என்னமோ சிக்கல். ரெண்டே நாள்தான் ஆஸ்பத்திரியில் இருந்தான். இன்று காலையில் போய்விட்டான்” என்றார்.

கண்முன்னால் துருதுருவென ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் நிலையைக் கேட்டு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கிச் சடாரென்று துளிகள் வெளியே தெறித்தன. அந்தத் துளிகளில் துக்கத்துடன் எனது குற்ற உணர்ச்சியும் கலந்திருந்தது. எதிர் காலத்துக்குள் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல முட்டாள்தனம் என்ன இருக்க முடியும் என்று தோன்றிவிட்டது.

அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பதையே விட்டுவிட்டேன்” பானுமதி பேசுவதை நிறுத்திவிட்டுப் பெருமூச்செறிந்தார். அவரது கண்கள் இப்போது கலங்கியிருந்தன. ஜன்னலுக்கு வெளியே ஒருபெரிய மாமரத்தின் கிளையிலிருந்து எதிர்காலம் பற்றிய கவலையே இல்லாமல் அக்காக் குருவி ஒன்று கத்தியது.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26884791.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

10: சின்ன ஹலோ சொன்ன சேதி!

 தியாகராய நகர் ‘வைத்தியராம் தெரு’வில் பானுமதி வீட்டைக் கண்டுபிடிப்பது (அந்தக் காலத்தில்) சுலபம். வீட்டுக்கு முன்னால் இரண்டு மூன்று டூரிஸ்ட் வண்டிகள் நிற்கும். மொட்டைத் தலைகளுடன் ஆந்திர ரசிகர்கள் காணப்படுவார்கள்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்குப் பிறகு நேராக பானுமதி தரிசனம். அம்மையாரின் வீட்டு காம்பவுண்டின் உள்ளே ஒரே நேரத்தில் இரண்டு மூன்று அல்சேஷன் நாய்கள் உறுமும். “கட்டிப் போட்டிருக்கு தைரியமா உள்ளே போங்க” என்பார் காவலாளி.

எங்கே பார்த்தாலும் பூந்தொட்டிகள், மரங்கள், நிழல் தரும் குளிர், ஊஞ்சல், ராதையின் ஆளுயரச் சிலை. அந்த இடமே படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பதுபோல இருந்தது.

குளிர்ந்த மொஸைக் படிகள். ஒவ்வொரு படி ஓரமும் வண்ண வண்ணப் பூந்தொட்டிகள். மாடி வராந்தாவின் இடது பக்கம் ஒரு அறை. அதில் டைப்ரைட்டர் சப்தம் கேட்கும். மனிதர்கள் இருப்பதற்கான சுவடே தென்படாது. அப்படி ஒரு அமைதி.

எப்போது போனாலும் ஒரு பெரிய கோப்பையில் பணிப்பெண் காப்பி கொண்டு தருவார். ஒவ்வொரு சொட்டாக ருசித்துப் பருகி முடிப்பதற்கும் பானுமதி அம்மையார் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கும்.

போட்டிபோடும் நினைவுகள்

அழகான திருத்தமான நெற்றி, நெருப்புக் கோடாக ஸ்ரீசூர்ணம். கத்தரித்த புருவங்கள். அழகான நாசி. அளவான முகப்பூச்சு. பட்டுப்புடவை. கம்பீரமான, கெளரவமான தோற்றம்.

என்ன ஒரு தனித்துவம். பர்சனாலிட்டி! வயது எழுபது என்றால் நம்ப முடியவில்லை! நேரத்தை மிச்சப்படுத்த சில நேரம் காரில் சென்றபடி தன் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிப்பது அவர் வழக்கம்.

தன் பால்யகாலம், காதல் திருமணம், தெலுங்குப் படங்கள், எம்.ஜி.ஆர். சிவாஜி, மாடர்ன் தியேட்டர்ஸ் என்று காரின் வேகத்துக்கு இணையாக அவரது பழைய நினைவுகளும் போட்டியிடும். அவர் சொன்னதில் காதில் விழுந்தது கொஞ்சம். மனதில் விழுந்தது கொஞ்சம். நினைவில் பட்டுத் தெறித்தது கொஞ்சம்.

பாண்டி பஜார் பக்கம் கார் திரும்பியதும் “எனக்கு பீடா வேணுமே” என்றார். கோவிந்து ஓடிப்போய் வாங்கிவந்தார். ஒன்று இரண்டல்ல, ஒரு அட்டைப் பெட்டி நிறையச் சீராக அடுக்கிய இனிப்பு பீடாக்கள். ஒன்றை எடுத்துக் கடைவாய்க்குள் விரல்கள் படாதவண்ணம் பதவிசாகக் கொடுத்து மென்மையாக மெல்லத் தொடங்கினார்.

காருக்குள் மெல்லிய சங்கீதம் இழைய “இது என்ன ராகம் தெரியுமா?” என்று கேட்டார் பானுமதி. பட்டென்று அந்த ராகத்தின் பெயரைச் சொன்னார் கோவிந்து. திறந்த கார் கண்ணாடி வழியே பார்த்துவிட்டு, ஒரு பழக் கடைக்காரர் ‘டேய் பானுமதிடா’ என்று கத்திக்கொண்டே பானுமதிக்கு உற்சாகத்துடன் கையசைத்தார். அவரது அன்பை ஏற்று பானுமதியும் பதிலுக்கு கையசைக்க கார் அங்கிருந்து வீடு நோக்கி நகர்ந்தது.

காலம் உறைந்த ஒளிப்படங்கள்

கூர்க்கா ஓடிவந்து கேட்டைத் திறந்தார். கார் உள்ளே நுழைந்தது. பானுமதியின் பங்களா பழைய மோஸ்தரில் கட்டப்பட்டது. வெயில் நேரத்திலும் குளிர்ச்சியாக இருக்கும்.

சந்தன கலரில் டிஸ்டெம்பர் அடித்த வீடு. அரக்கு கலரில் கதவு, ஜன்னல்கள். பானுமதி இந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கட்டியிருக்க வேண்டும். அப்படி ஒரு நேர்த்தி.

பெரிய கூடம். ஒரு கல்யாணமே நடத்தலாம். கூடத்தை அலங்கரிக்கும் அழகிய சிற்பங்கள். சுவரில் பானுமதியின் புகழ்பெற்ற பழைய கறுப்பு வெள்ளைக் காவியங்களின் ஸ்டில்கள். கூடத்துக்குள் அல்ல ஒரு காலத்துக்குள் அடியெடுத்து வைப்பதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும்.

அந்த ஒளிப்படங்களில் ஏதோ ஒன்றிலிருந்து இறங்கி வந்தாற்போல் பானுமதி தோன்றுவார். பேசிவிட்டு மறுபடியும் ஒளிப்படத்தில் போய் உட்கார்ந்துகொள்வார். திரைப்பட ஸ்டில்கள் மட்டுமின்றி அபூர்வமான அவருடைய தனிப்பட்ட குடும்ப ஒளிப்படங்களும் அங்கிருந்தன.

நீங்கள் பார்த்தே இராத பானுமதி வீட்டு விசேஷத்தில் பெண்கள் கூட்டத்தில் பளிச்சென்று நான் தனிப்பிறவி தெரியுமா என்பது போல் பார்க்கும் பானுமதி. கணவருடன் பானுமதி. ஜனாதிபதியிடம் பரிசு வாங்கும் பானுமதி எனப் பல தோற்றங்கள். கூடத்தில் மாட்டப்பட்ட கடிகாரம் என்னவோ ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் படங்களில் காலம் நின்றுவிட்டது!

 

குறிப்பாக, ஒருபடம் நெஞ்சைக் கொள்ளைகொள்கிறது. தோள் தெரியும்படி ஒரு கறுப்பு உடை. ஆனால், விரசமில்லை. தேவதை மாதிரி நிற்கிறார். பேசும் கண்கள். அலட்சியச் சிரிப்பு. அழகு முகம். அந்தப் படத்தைப் பார்க்கிறவர்கள் சில நேரம் அதிலேயே லயித்துப் போய்விடுவதைக் கவனித்திருக்கிறேன்.

‘இந்தப் படத்தில் அம்மா அப்சரஸ் மாதிரி இருக்காங்க இல்ல?’ என்பார் அண்ணாசாமி. அவர் பானுமதி வீட்டின் அலுவலக நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் இளைஞர். பரம சாது, பேசவே மாட்டார். பக்கத்தில் இடியே விழுந்தாலும் அவர்பாட்டுக்குத் தட்டச்சு செய்து கொண்டிருப்பார்.

‘சினிமாவில் பார்க்கிற அம்மா வேறே… நிஜத்தில் பார்க்கும் அம்மா வேறே. எங்களிடம் கோபமாகத்தான் பேசுவாங்க. உள்ளுக்குள் எங்கள் மீது அன்பு உண்டு. அந்த அன்பைப் பண்டிகை நேரத்தில்தான் காட்டுவாங்க!’ என்றார் அண்ணாசாமி.

நான் ‘எப்படி?’ என்றேன். ‘எங்கள் வீட்டு, மனைவி குழந்தைகளுக்கு எல்லாம் துணிமணிகள், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணுவாங்க! சமையல்காரப் பெண்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பாங்க... சாப்பாடு விஷயத்தில் அம்மாகிட்ட நல்லபேர் வாங்குவது கஷ்டம்’ என்றார்.

பானுமதியின் பொது நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொள்ள பி.ஏ. அந்தஸ்தில் ஒரு பெண். ரொம்பச் சூட்டிகை. திரைப்படத் தயாரிப்பு, டப்பிங் வேலை, சினிமா சம்மந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தனியாக ஒருவர் இருந்தார். இதைத் தவிர ஒரு பெண்மணி. அவர் உடல்நலம் பேண. பெரும்பாலும் நகங்களை வெட்டி விடுவார். கால்பிடித்து விடுவார். தோட்டக்காரனுடைய இளம் மனைவி அவர்.

மதிய வேளைகளில் அம்மாவுடன் சாப்பிட அவருடைய மகன் டாக்டர் பரணி வருவார். நெடுநெடுவென்று சிவப்பாக அழகாக இருப்பார். ஷேவ் செய்த மோவாய் பச்சை சாயம் பூசியதுபோல் இருக்கும்.

கூடத்தில் எங்களைக் கடந்து அவர் செல்லும்போது அவரிடம் என்னைக் காண்பித்து “இவர் தமிழ்ல பெரிய எழுத்தாளர். என்னோட பயாக்ரபர்!” என்றார் பானுமதி. சின்னதாகப் புன்னகைத்து புருவம் உயர்த்தி ‘ஹலோ’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார் பரணி.

‘படங்களில் நடித்துப் பேர் வாங்கியாச்சு. இன்னும் அண்ணாசாமி, பர்சனல் பி.ஏ., பி. ஆர். ஓ., பயாக்ரபர் இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு எதற்கு இத்தனை சிரமம்? செலவு?’- எல்லாம் பரணியின் அந்த சின்ன ஹலோவில் அடக்கம்.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26943811.ece

11: அச்சுப்பிச்சுகளின் காதல்

11

 

பானுமதி மாறி வரும்

வானகத்து மீனே

பார்க்க உன்னைத் தேடுதடி

கன்னி இளம் மானே

                படம்: அம்பிகாபதி

“கல்கத்தாவுக்குப் போய் உங்கள் முதல் படத்தில் நடித்த அனுபவத்தைச் சொல்லவே இல்லையே?” - என்று கேட்டேன்.

பானுமதி சிரித்தார். அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள்?. ‘வரவிக்ரேயம்’ படத்தில் நான் நடித்த காளிந்தியின் பாத்திரம் ஒரு வகையில் என் சொந்த வாழ்க்கையையே பிரதிபலிப்பதுபோல அமைந்துவிட்டதை என்னவென்று சொல்ல?

நான் முதன்முதலாக செட்டுக்குப் போனேன். யாராரோ வந்தார்கள். எனக்குக் கூச்சமாக இருந்தது. ‘லைட்ஸ் ஆன்’ என்று யாரோ கத்தினார்கள்.

மங்கலாக இருந்த செட்டில் பளீரென்று பரவிய வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்துவிட்டேன். ஓடிப்போய் ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன்.

அடடா! உம்ம பெண் எங்க காளிந்தியவிட ரொம்பக் கட்டுப் பெட்டியாய் இருப்பாள் போலிருக்கே என்றார் புல்லையா.

“கொஞ்சம் இருங்கள், இந்தப் பெண்ணின் அம்மா வந்துவிடட்டும்” என்றார்.

“அம்மா எப்படி இங்கே?” என்று குழம்பிப்போன எனக்கு அப்புறம்தான் தெரிந்தது. அவர் சொன்னது என் அம்மாவாக சினிமாவில் நடிக்கும் சிவரஞ்சனியை என்று!

இயல்பான கண்ணீர்

சிவரஞ்சனி வந்தார். என்னை அன்புடன் தொட்டார். “என்ன மேக்கப்பெல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டார். எடுக்கப்போகிற காட்சியை புல்லையா விவரித்தார்.

மகளுக்கு வரன் தேடிவிட்டு அப்பா களைத்துப்போய் நுழைகிறார். சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுகிறார். வரன் முடிவாயிட்டுதா? என்று அம்மா கேட்கிறார். எங்கே போனாலும் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். நம்ம பெண் காளிந்திக்கு எப்படிக் கல்யாணம் நடக்கும் என்கிறார் அப்பா சோர்வுடன்.

எங்கள் வீட்டிலும் அப்பாவும் அம்மாவும் இப்படிப் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. என் கண்ணில் நீர் தளும்பியது.

புல்லையா ‘கட்’ என்றார். அவ்வளவுதான் ‘ஷாட்’ ஓகே ஆகிவிட்டது.

“ரொம்ப இயற்கையாய் இருந்தது அம்மடு. அதுவும் நீ நின்றவிதம் பிரமாதம்” என்றார் புல்லையா.

அடுத்தநாள் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடல் பதிவு. மைக் என்று சொல்லி என் முன்னால் வைக்கப்பட்டது, தேன்கூடுபோல் இருந்தது.

பின்னணிப் பாடல் பதிவு என்பதே சினிமாவுக்கு அப்போதுதான் அறிமுகம். புஷ்பவல்லி சொன்னார்: “நீ அதிர்ஷ்டக்காரிதான் நாங்கள் எல்லாம் பாடிக்கொண்டே நடிக்க பட்ட கஷ்டம் உனக்கில்லை. வாயசைப்பு சரியாகவே வராது.”

ஒரு முறை சோகமான காட்சி ஒன்றை புல்லையா நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. சிரித்துவிட்டேன்.

1j.jpg

புல்லையா என்னைப் பார்த்துக் கோபமாக இரைந்தார். இதை நான் கொஞ்சம்கூட அவரிடம் எதிர்பார்க்கவில்லை. அழுதுவிட்டேன். அழுகையை நிறுத்தவே இல்லை. புடவை நுனியால் வாயை மூடிக்கொண்டு அழுதேன். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. டைரக்டர் ‘கட்’ என்றார்.

நானோ என் விசும்பலை நிறுத்தவே இல்லை. புல்லையா சிரித்துக்கொண்டே, “உன்னை அழவைக்க வேறு வழி தெரியவில்லை அம்மா. ஷாட் எவ்வளவு நன்றாக வந்திருக்கிறது தெரியுமா?” கோபிப்பதுபோல் நடித்து என்னை அழ வைத்துப் படம் எடுத்திருக்கிறார் என்று அப்புறம்தான் புரிந்தது.

‘மாலதி மாதவம்’, ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கிருஷ்ண பிரேமா’ போன்ற படங்களில் நான் இயக்குநர் சொன்னபடிதான் நடித்தேன். ஆனால், இதில் எனக்கு உடன்பாடில்லை. டைரக்டரின் கார்பன் காப்பிபோல் நடிப்பதால் அந்தப் பாத்திரத்துக்கு எப்படி உயிர்வரும்?.

சுயமான நடிப்பு

‘சொர்க்க சீமா’வில் நடிக்கும்போதுதான் சுயமாக நடிப்பதைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். படத்தில் எனது ரோல் என்ன, அதைச் சரியாய்ப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடியும்.

நடிப்பு அனுபவம் இல்லாத டைரக்டர்கள் தாங்கள் சொல்கிறபடிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது சரியல்ல. ஆனால், இதை எத்தனை இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவரவருக்கு என்று ஒரு பாணி இருக்கும் அல்லவா?

‘வரவிக்ரேயம்’ வெளிவந்தது. புதுமுகம் பானுமதி அருமையாக நடித்திருக்கிறார். காளிந்தி கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ‘சபாஷ்’ என்று பத்திரிகைகள் எழுதின.

அவ்வளவுதான் வேலை முடிந்தது. வீடு திரும்பி பள்ளிக்கூடம் போக வேண்டியதுதான் என்று நினைத்தேன். அப்பாவிடம் கேட்டேன்.

“இனி, பள்ளிக்கூடம் போகலாமா அப்பா?”

அப்பா சிரித்தார்.

“புல்லையா ‘மாலதி மாதவம்’ என்று ஒரு படம் இப்ப உடனே எடுக்கப் போகிறாராம். பவபூபதி எழுதிய அருமையான காவியத்தைத்தான் படம் எடுக்கப் போகிறார். நீதான் கதாநாயகியாம்.

ஆனால், யோசிக்கணும் என்று சொல்லியிருக்கிறேன். உலகம் தெரியாத பெண்ணாகிய உனக்கு இந்த வேடம் சரிப்பட்டு வருமா? வேறு வேடம் ஒண்ணு இருக்கு. அதுதான் சரிப்பட்டுவரும்”

அப்பாவின் மனசு புரிந்தது. அவர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனக்குத் தலையில் இடிவிழுந்த மாதிரி இருந்தது!

“அப்பா! வீட்டுக்குப் புறப்படுங்கள் புல்லையாவிடம் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்!”

இப்படிச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து தலையணையில் முகம் புதைத்தேன். எனக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது!

கவிராஜூவிடம் கற்ற பாடம்

“அப்புறம் என்ன ஆச்சு?”

“மறுநாள் கவிராஜூ என்ற கதாசிரியர் என்னைக் காண வந்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ரொம்ப நாளைக்கு அப்புறம் இவர் பேச்சைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தேன்.

அவர் அப்பாவிடம் அம்முடுவுக்கு மாலதி வேடம்தான் சரியாக இருக்கும். அழகும் பாடும் திறமையும் மிக்க சின்னஞ்சிறு பெண் ருத்ராட்ச மாலை போட்டுக்கொண்டு சந்நியாசியாக வருவதை ஆடியன்ஸே விரும்ப மாட்டார்கள்!” என்றார்.

நான் பள்ளி செல்ல முடியாத குறையை கவிராஜூதான் தீர்த்துவைத்தார். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன்.

எப்படியோ ‘மாலதி மாதவம்’ படத்தில் நடிக்க கவிராஜூ என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டார்.

‘மாலதி மாதவம்’ படத்தில் நான் என்ன செய்தேன், என்ன பாடினேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் படத்தில் மாதவனாக நடித்தவர் புல்லையாவின் உறவினர்.

 அவர் என்னைவிட அதிகக் கூச்சம் உடையவர் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்துகொண்டு அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பவபூபதியையும் கொலைசெய்வதில் வெற்றிபெற்றோம்.

காதல் காட்சிகளில் நாங்கள் நளினமான உணர்வுகளையும் காதலையும் வெளிப்படுத்தவில்லை. அவர் என்னைக் கண்டு பயந்து நடுங்கினார். நானோ குனிந்த தலை நிமிரவில்லை.

நான் பயந்துபோய் அவரைப் பார்ப்பேன். அவர் சட்டென்று தலைகுனிவார். இரண்டு அச்சுப்பிச்சுகள் சேர்ந்துகொண்டு காதல் பண்ணினால் எப்படி இருக்கும்?

எங்கள் இரண்டு பேரையும் பார்த்துவிட்டு புல்லையா தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

“புல்லையா. நான் சொன்னேனா இல்லையா?” என்றார் அப்பா.

புல்லையா அழாத குறைதான். படத் தயாரிப்பாளரிடமிருந்து பண உதவி கிடைக்காதது படம் வெற்றி பெறாததற்கு மற்றொரு காரணம்.

கதை வசனகர்த்தா குழுவை விட்டு விலகிவிட்டார். அவருக்குப் படம் ஓடாது என்று தெரிந்துவிட்டது. கவிராஜூ விஜயநகரம் சென்றுவிட்டார்.

மேலும் சிலர் தங்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். சிலர் அங்கேயே தயாரிப்பாளர் தர வேண்டிய பாக்கிக்காகச் சுற்றித் திரிந்தனர். நானும் அப்பாவும் கல்கத்தாவிலிருந்து ஊர் திரும்பிவிட்டோம்.

“இதுதான் நான் கல்கத்தாவுக்கு நடிக்கப்போன கதை” என்று புன்னகைத்தார் பானுமதி.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27012799.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

12: பொம்மைக் கல்யாணம்

“இவ்வளவு நாளாக நான் சொல்லிக்கொண்டு வந்த என் வாழ்க்கைக் சம்பவங்களில் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறதே கவனித்தீர்களா?” என்று கேட்டார் பானுமதி.நான் விழித்தேன்.

“நான் சாதாரண விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ரொம்பச் சாதாரணச் சம்பவங்கள், சாமானிய மனிதர்களை நாம் கவனிப்பதே கிடையாது.

உண்மையில் இவை தருகிற ஆனந்தத்துக்கு ஈடு இணையே கிடையாது. இப்படி ரொம்பச் சாதாரண விஷயங்களை நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பெரிய விஷயங்களுக்கு ஏங்க வேண்டிய தேவையே இருக்காது! இயற்கை இப்படி நம்மிடம் ஏராளமான விஷயங்களைக் கொட்டி வைத்திருக்கிறது.

கடிதத்தில் வந்த அழைப்பு

நான் அமெரிக்கா போயிருந்தபோது என் பேரக் குழந்தைகள் பனிக்கட்டிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

ஆஹா! அவர்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! பனிக்கட்டிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை! என்ன எழுத்தாளர் சார் நான் சொல்றது சரிதானே?” பானுமதி அம்மையார் சிரித்தார்.

“குச்சு வீடுதான். ஆனால், சொந்தமாக நீல வான் உண்டே!” என்ற கவிஞர் திருலோக சீதாராமின் கவிதையை நினைத்துக்கொண்டேன். பானுமதி தொடர்ந்தார்.

அப்பா உடம்பு தேறிய உடன் பம்பாயிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவருடைய நண்பர்தான் எழுதியிருந்தார். கடிதம் இப்படிப் போயிற்று.

அன்புள்ள வெங்கட சுப்பையா, இங்கே பம்பாயில் பிரபல டைரக்டர் பி. புல்லையா ‘தர்மபத்தினி’ என்ற படம் எடுக்கிறார். அதில் பானுமதி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். சம்மதமானால் உடனே வரவும்.

அப்பா யோசனையில் ஆழ்ந்தார். இந்த பி. புல்லையா, சி.புல்லையா போன்று பொறுமைசாலி இல்லை. முன்கோபக்காரர். படப்பிடிப்பின்போது நடிகர்களை மிகவும் மோசமாகத் திட்டுவாராம்.

அப்பா ஒரு நிபந்தனை விதித்தார். “என் மகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்” என்ற நிபந்தனை ஏற்கப்பட்டது. அப்பா, அம்மாவுடன் பம்பாய் போய்ச் சேர்ந்தோம்.

புல்லையா சந்தேகம்

பம்பாய் ஸ்டேஷனுக்கு கார் வந்தது. கார் புறப்படுகிற நேரம் “டிரைவர் கொஞ்சம் நில்லப்பா” இன்னும் எடுத்து வைக்க வேண்டிய லக்கேஜ் இருக்கு என்றேன்.

அப்பா டிரைவரை வியப்புடன் பார்த்துவிட்டு, “அம்மா! அவர்தான் டைரக்டர் பி.புல்லையா!” என்றார் என்னிடம். நீங்கள் இவ்வளவு எளிமையாக இருப்பீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது என்றார் மன்னிப்பு கோரும் பாவனையில்.

புல்லையா சிரித்துவிட்டு “உங்களுக்கு என்னைப் பற்றிச் சந்தேகம் தீர்ந்துவிட்டது அல்லவா. அது போதும்” என்றார்.

நாங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே என் வயதுகொண்ட பெண் என்னிடம் ஓடிவந்து உன் பெயர் பானுமதிதானே? இந்தப் படத்தில் உன் மாமனாராக நடிக்கப் போகிறவர் என் அப்பாதான்! என் பெயர் நாகமணி என்று சொல்லிவிட்டு நான் கேட்காமலேயே பல விஷயங்களையும் என்னிடம் கொட்டித் தீர்த்தாள்!.

பிறகு ஓடி விட்டாள். இதற்குள் என் அம்மா குளித்துவிட்டு பூஜைக்குத் தயாராகிவிட்டார். எங்கிருந்தாவது பூக்கள் கொண்டுவருமாறு என்னிடம் சொன்னார்.

நான் அறையைவிட்டு வெளியே வந்தேன். பக்கத்து அறையிலிருந்து நாகமணி என் பின்னாலேயே ஓடிவந்தாள்.

“ஏ பொண்ணே! நில்லு எங்கே போறே?” என்றாள்.

“அம்மா பூஜைக்கு பூ கேட்டாங்க. இங்கே ஏதாவது கிடைக்குமா?”

“பூ வேண்டுமானால் டவுனுக்குத்தான் போகணும்!. இதோ பக்கத்தில்தான் அக்கா சாஹிப் பங்களா இருக்கிறது. அங்கே ஒரு பூந்தோட்டம் இருக்கு. அதில் பெருசு பெருசான ரோஜாப்பூக்கள் பூத்திருக்கு. நாம் போய்த் திருட்டுத்தனமாகப் பறித்துக்கொண்டு வரலாம்.

அக்கா சாஹிப் யார் தெரியுமா? அவர்தான் ‘தர்மபத்தினி’ படம் எடுக்கும் ஸ்டுடியோ சொந்தக்காரர். அவர் பெண் ஷாலினி பெயரைத்தான் ஸ்டுடியோவுக்கு வைத்திருக்கிறார். நீ வந்தால் அந்த பங்களாவைக் காட்டுகிறேன். நாம் ரோஜாப் பூக்களை யாருக்கும் தெரியாமல் பறித்துவரலாம்” என்றாள்.

இப்படித் திருட்டுதனமாக ரோஜாப்பூக்களைப் பறிக்க எனக்குப் பிடிக்கவில்லை.

விளையாட்டுப் பொம்மைகள்

“வேண்டாம் நாகமணி. இங்கே இருக்கிற ஏதோ காட்டுப்பூக்கள் கொஞ்சம் பறிச்சுட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கே ஏரிக்கரை ஓரம் பூத்திருக்கும் மஞ்சள் அரளிப் பூக்களைப் பறித்துக் கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்தேன்.

tharagai hsiu.jpg

நானும் நாகமணியும் அந்த ஏரிக்கரைக்கு வேடிக்கை பார்க்கப் போனோம்.

அங்கிருந்து ஷாலினி ஸ்டுடியோ தெரிந்தது. அக்கா சாஹிப் பங்களா, கோலாப்பூர் நகரம் எல்லாம் தெரிந்தன. அந்தக் காட்சி என்னுள் உறங்கிக்கொண்டிருந்த ஓவிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. அதை அப்படியே படமாக வரைய கைகள் பரபரத்தன.

(பல ஆண்டுகள் கழித்து பேயர்ல் எஸ்.பக் எழுதிய ‘எனது பல்வேறு உலகங்கள்’ என்ற புத்தகத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது இயற்கையின் அழகை அவர் அவ்வளவு அற்புதமாக விவரித்திருப்பதற்கு அவர் கண்ட காட்சியே காரணம் என்று உணர்ந்தேன்) அப்போது நான் கோலாபூரைத்தான் நினைத்துக் கொண்டேன்.

எங்கே பார்த்தாலும் மாமரங்கள், ஆலமரங்கள். பெயர் தெரியாத பிரம்மாண்ட விருட்சங்கள். விதவிதமான செடிகொடிகள்.

நான் கையோடு கொண்டுபோயிருந்த சிறு பெட்டியைத் திறந்து நாகமணிக்குக் காட்டினேன்.

“ஹையா! பொம்மைக் கல்யாண விளையாட்டுப் பொம்மைகள்” என்று நாகமணி குதித்தாள்.

(அந்தக் காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிறுமிகள் பொம்மைக் கல்யாண விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்)

விளையாட ஆசை

“நான்தான் பெண் வீட்டு பார்ட்டியாம். நீ மாப்பிள்ளை வீட்டாராம். வரதட்சிணை தர முடியாது. நாங்கள் ஏழைகள். பெண்ணுக்கு எங்களால் முடிந்ததைப் போட்டு அனுப்புகிறோம்” என்றாள் நாகமணி, பாட்டி மாதிரி.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘வரவிக்ரேயம்’ கதைதான் நினைவுக்கு வந்தது.

“எனக்கு வரதட்சிணை வேண்டாம்! வரதட்சிணை கொடுப்பவர்களும் வேண்டாம்! என்றேன் நெஞ்சை நிமிர்த்தி.

“ஏய்! இது பொம்மைக் கல்யாணம்!” என்று சிரித்தாள் நாகமணி.

நாங்கள் புறப்பட்டோம். “மறுபடி எப்போது பொம்மைக் கல்யாணம் விளையாடலாம்?” என்று கேட்டேன்.

“ஏய், இங்கே பொம்மைக் கல்யாணம் விளையாட வந்தாயா? சினிமாவில் நடிக்க வந்தாயா என்று கேலிசெய்தாள் நாகமணி.

“ஆமாம்! நாளைக்கு ஷூட்டிங் இருக்கில்ல.”

நாங்கள் அறைக்குத் திரும்பினோம். அப்போது புல்லையா அனுப்பியதாக ஒரு ஆள் வந்தார். நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாமா என்று டைரக்டர் கேட்டதாகச் சொன்னார்.

“இதுவரை எடுத்த படத்தை” ரஷ் பார்த்துவிட்டு அதில் என் மகளின் கதாபாத்திரம் எப்படிச் செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டி இருக்கு. நாளை மறுநாள் வைத்துக் கொள்ளலாமே” என்றார் அப்பா.

நான் நாகமணியின் அறைக்கு ஓடினேன்.

“நாகமணி! நாளைக்கு ஷூட்டிங் இல்லை!. நாளைக்குப் பொம்மைக் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டேன்.

பானுமதி அம்மையார் வீட்டு காட்சி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ராஜாராணி பொம்மைகளும் அம்மா சொல்வதை ஆமோதிப்பது போல் தலையாட்டின.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27082413.ece

13: நடிப்புக்குச் சம்பளமாய் நாணயங்கள்...

“கல்கத்தாவுக்கு நான் ‘மாலதி மாதவம்’ படத்தில் நடிக்கப்போனபோது நடந்த ஒரு விசித்திரச் சம்பவத்தை உங்களுக்குச் சொல்லாமல் விட்டுவிட்டேன்” என்றார் பானுமதி. ‘அதற்கென்ன இப்போது சொல்லுங்கள்!’ என்று அவரது முகத்தை ஆர்வமாக நோக்கினேன்.

“கல்கத்தா ரயில் நிலையத்தில் ரயிலில் உட்கார்ந்திருந்த என் தாயார், ‘யாராவது நான் சொன்னால் நம்புவார்களா... பார்க்கவே அதிசயமாக இருக்கிறது!’ என்றார். நான்,” என்னம்மா சொல்லுகிறீர்கள்?’ என்றேன்.

இதற்கு முன்னால் கல்கத்தா போன்ற பெரிய நகரத்துக்கு என் தாயார் வந்ததே இல்லை. கிராமப்புறங்களிலேயே வசித்தவர் அவர். அவருக்கு கல்கத்தா புறப்படும்முன் ஒரு கனவு வந்ததாம். அவர் கனவில் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. அங்கே ரயில்கள் புறப்படுவதும் வந்து சேர்வதும் தெரிந்ததாம்.

இப்போது பார்க்கிற கல்கத்தா ரயில்நிலையம் மாதிரி அப்படியே இருந்ததாம். கனவில் கண்ட காட்சிகள் கண்முன்னால் தெரிவதை ஒப்பிட்டுப் பார்த்து அம்மா முணுமுணுப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. எனக்கும் இதுபோன்ற கனவுகள் வந்திருக்கின்றன.

ஆனால், காலை எழுந்து பார்த்தால் மறதி அவற்றை அழித்திருக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. நான் மறந்துவிட்டேன். அம்மாவுக்கு நினைவிருக்கிறது. அவ்வளவுதான்” என்று நிறுத்தினார் பானுமதி.

வரப்போவதை ‘கனவுகள் முன் அறிவிக்கின்றன என்று நம்புகிறீர்களா?’என்று கேட்டேன். “நிச்சயமாக..! என் தாயார் முன்பின் பார்த்திராத கல்கத்தா ஸ்டேஷன் அவர் கனவில் எப்படி வந்தது? ஏன் வந்தது? நாடி சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஷர்மா என்ற ஒரு பண்டிதர் மூலம் இந்த சாஸ்திரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு வருட காலம் அவர் அதை எனக்குப் படித்துக் காண்பித்தார். அந்தச் சுவடிகளில்.. ‘பரஷாரா சொப்பனாத்யாயம்’ (கனவு அத்தியாயம்) என்ற பகுதி எனக்குப் பிடிக்கும். அம்மா ஏன் அப்படிக் கனவு கண்டார் என்பதற்கு அதில் விளக்கம் இருந்தது.

கனவுகள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றியவையாகத் தோன்றுவது ஒரு மாயை. உண்மையாய் ஆத்மாவுக்கு எல்லாமே நிகழ்காலம்தான். முக்காலம் என்று ஒன்றுமில்லை..” என்று நீளமாகச் சொல்லி முடித்தார் பானுமதி.

நான் என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவருக்குக் கனவுகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைக்கும் பழக்கம் இருந்தது. நான் படித்திருக்கிறேன். ஏதோ கொலாஜ் ஓவியம்போல் இருக்கும். அவரிடம் ‘கனாநூல்’ என்ற புத்தகம் இருந்தது. அதில் கனவுகளுக்குப் பலன்கள்கூடப் போட்டிருக்கும்.

ஆனால், என் அறிவு இதை நம்ப மறுத்தது. மனோ தத்துவ அறிவியலாளர் சிக்மண்ட் பிராய்டு, ‘கனவுகள் என்பது மூளை விழித்திருப்பதன் அடையாளம். அங்கு ஏற்கனவே பார்த்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் குழப்பமான பதிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும் இது பற்றி பானுமதி அம்மையாருடன் தொடர்ந்து விவாதிக்காது அவர் சரித்திரத்தைத் தொடர்ந்து சொல்லுமாறு வேண்டிக்கொண்டேன்.

குறும்புக்கார நாகமணி

பானுமதி தன் கதையைச் சொல்லத் தொடங்கினார். “கோலாபூரில் இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை அப்பாவிடம் போட்டுக் காட்டினார்கள். அன்று பிற்பகல் எங்கள் ‘பொம்மைக் கல்யாண’மும் முடிந்தது. எங்களைச் சுற்றி இருந்தவர்களை அழைத்து வயிறாரச் சாப்பாடு போட்டோம். அட்சதை தூவி பொம்மை மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

அந்த நேரம் பார்த்து அப்பாவும் புல்லையாவும் வந்தார்கள். அவர்களை உட்காரச் சொல்லி இனிப்பு கொடுத்தோம். நாகமணியைப் பார்த்ததும் புல்லையா ‘ஓஹோ! இதெல்லாம் இந்தப் பிசாசின் வேலைதானா? இவள் பெரிய ரவுடி அம்மா!’ என்றார் என்னிடம்.

பிறகு நாகமணியிடம் ‘நீ வீட்டுக்கு மூத்த பெண். அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருக்காமல் பானுமதியுடன் சேர்ந்துகொண்டு பொம்மைக் கல்யாணம் நடத்துகிறாயே!’ என்றார். அதற்கு அவள் ‘பானுமதிதான் நடத்துகிறாள், நானில்லை’ என்றாள். அப்பா என்னிடம் ‘என்னம்மா...நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளச் சொல்லலாமா?’ என்று கேட்டார். ‘உங்கள் விருப்பம் அப்பா’ என்று சொன்னேன்.

மறுநாள் படப்பிடிப்பு. ஷாலினி ஸ்டுடியோஸ் சென்றோம். நாகமணியும் உடன் வந்தாள். அவள்தான் பல தகவல்களை எனக்குச் சொல்லிக்கொண்டு வந்தாள். செட்டுக்குப் போனோம். அன்று எடுக்கப்பட்ட காட்சி எனக்கு நினைவில்லை.

ஆனால், படத்தின் கதாநாயகி சாந்தகுமாரி வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றார். என்னிடம் அன்பாகப் பேசினார். நான் அவர் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். நாகமணி என் காதில் ‘அவள் கர்ப்பமாய் இருக்கிறாள்.

எட்டு மாதம்’ என்று கிசு கிசுத்தாள். இப்படியான விஷயங்களை அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்தப் பெண்மணி காதில் இது விழுந்திருக்குமோ...

நாகமணி ‘இந்தப் படத்தின் ஹீரோ பொம்பளை மாதிரி நடப்பார் பாரேன். ஆம்பளையே இல்லை அந்த ஆள்’ என்றாள். தன் தந்தை டிராமாக்களில் பெண் வேஷம் போட்டு இப்படித்தான் நடப்பார் என்றாள் நாகமணி. ஹீரோ வந்தார்... நாகமணி சொன்னது ஞாபகம் வந்தது. சிரிப்பாக வந்தது. நல்லவேளை அவர் எங்களைப் பார்க்கவில்லை.

ஒரு மூட்டை நாணயங்கள்

புல்லையா வந்தார். என்னை பியானோவின் எதிரில் உட்காரச் சொன்னார். நான் என்ன வசனம் பேசினேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஷூட்டிங் நேரத்தில் அப்பா குறுக்கிட்டு வசனத்தில் திருத்தம் செய்தது நினைவிருக்கிறது.

‘தர்மபத்தினி’யில் என் ‘ரோல்’ என்னவென்பது ஞாபகமில்லை. ஆனால், அதில் இரண்டு பாட்டுகள் பாடியிருக்கிறேன். ‘அனுராகமு லேகா ஆனந்தமு பிராப்தின்சுனா’, ‘நிலு...நிலுமா...நீலவர்ணா’ இந்த இரண்டு பாட்டுகளும் எனக்கு பெயரும் புகழும் வரக் காரணமாக அமைந்துவிட்டன.

நாகமணியின் நட்பால் கோல்ஹாபூரில் நான் செலவழித்த நான்கு மாதங்களும் நான்கு நாட்களாக ஓடிவிட்டன. பத்துப் பன்னிரண்டு தடவைக்குமேல் பொம்மைக் கல்யாணம் நடத்திவிட்டோம்.

கோலாபூரிலிருந்து கிளம்பினோம். அப்பா என் நடிப்புக்கான சம்பளத்தை வாங்கிவரப் போனார். நான் அவரிடம் ‘அப்பா நீங்க வாங்குகிற பணத்தை அப்படியே ‘காயின்ஸா’ (நாணயங்களா) மாத்தி வாங்கி வரமுடியுமா? எவ்வளவு இருக்கும்? என்று கேட்டேன்.

எனக்கு நாணயங்களை வைத்து விளையாடுவதில் கொள்ளைப் பிரியம். ‘ஒரு சின்ன கோணிப்பை நிறைய வரும்’ என்று சிரித்தார் அப்பா. ‘அப்படியே வாங்கிட்டு வாங்க’ என்றேன்.

அப்பா அதேபோல கிடைத்த ரூபாய் முழுவதையும் நாணயங்களாக மாற்றி வாங்கிக் கொண்டார். ஒரு சின்ன கோணிப்பை நிறைய வைத்து கட்டிக் கொடுத்தார்கள். தூக்க முடியாமல் தூக்கி வந்து காரில் வைத்தேன். வீட்டுக்கு வந்ததும் பாயை விரித்து அவ்வளவு நாணயங்களையும் அதில் கொட்டினேன்.

ஆசை தீரும்வரை பூவா, தலையா விளையாடினேன். பிறகு அப்பாவிடம் கொடுத்துவிட்டேன். இன்றுவரை ரூபாய் நாணயங்களைச் சேகரிப்பதில் எனக்கு உற்சாகமும் ஈடுபாடும் உண்டு” என்று சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தார் பானுமதி.

தரையில் கொட்டிய நாணயங் களாய் கலீரிட்டது அவர் சிரிப்பு.

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27149138.ece

Link to comment
Share on other sites

14: அவரது அழகில் மயங்கிப் போனேன்!

 

கலைடாஸ் கோப்பில் விரியும் வண்ணச் சித்திரங்களாக பானுமதியின் வாழ்க்கைக் கதையும் சுழன்று விரிந்தது. சென்னைக்கு நடிக்க வந்த கதையைப் பகிரத் தொடங்கினார்.

“கல்கத்தாவிலும் கோலாபூரிலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு  ‘பக்திமாலா’ படத்தில் நடிக்க சென்னை புறப்பட்டு வந்தோம். சென்ட்ரல் ஸ்டேஷன். தமிழ்க் குரல்களைக் கேட்கவே மனசுக்குச் சந்தோஷமாக இருந்தது. ‘குழந்தை இந்தப் படத்தில் இரண்டு இடங்களில் நாட்டியம் ஆடும்படி இருக்கும்’ என்றார் இயக்குநர். ‘

அடடா... என் மகளுக்கு நாட்டியம் தெரியாதே’ என்றார் அப்பா. படத்தின் நடன இயக்குநர் வேம்பட்டி பெரிய சத்யம் எனக்கு முறையாக நாட்டியம் கற்றுக் கொடுக்க முன்வந்தார். ‘இந்தப் படத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு நாட்டியம் கற்றுக் கொடுத்தால் போதும்’ என்றார் அப்பா பெரிய சத்யத்திடம்.

அடம் பிடித்த நாட்டியம்

‘சங்கீதம் (இசை) சாகித்யம் (இலக்கியம்) இரண்டு கண்கள் போன்றவை. பானுமதி இந்த இரண்டிலும் சிறந்து விளங்குகிறாள். நாட்டியம் பெரிய விஷயமே இல்லை. பானுமதி சிறப்பாக நாட்டியம் கற்றுக்கொள்ள நானாச்சு’ என்றார் பெரிய சத்யம்.

ஆனால், அந்தப் படத்தில் சத்யம் சாருக்கு நான் நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. சரஸ்வதி தேவி எனக்கு சங்கீதமும் சாஹித்யமும் தன் இரு கண்களாலும் பூரணமாகப் பார்த்து அருளியது என்னவோ உண்மைதான். ஆனால், நாட்டிய விஷயத்தில் அவள் பார்வை கோணலாகி விட்டது.

சின்ன வயதிலேயே நான் நாட்டியம் கற்றுக்கொண்டிருந்தால் இப்படி நடந்திருக்காது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்குச் சிறு வயதிலிருந்தே நாட்டியத்தில் ஈடுபாடு கிடையாது. சுபாவத்திலேயே எனக்குக் கூச்சம் அதிகம்.

கண்களை உருட்டுவதும் கைகளால் முத்திரை காட்டுவதும் எனக்குப் பிடிக்காது. இதெல்லாம் செயற்கையாகத் தோன்றும். செயற்கையான எந்த விஷயத்தையும் செய்வதற்கு என் மனசு இடம் கொடுக்காது.

கல்கத்தாவில் ‘மாலதி மாதவம்’ படப்பிடிப்பின்போது எனக்குக் குதிரை ஏற்றம், தடை தாண்டுதல், கத்தி வீசுதல் போன்ற வீர விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் விளைவாக நான் அபிநயித்த நாட்டிய முத்திரைகளில் நளினமும் மென்மையும் வெளிப்படுவதற்கு பதிலாக முரட்டுத்தனமும் கடூரமான உணர்ச்சிகளின் சாயலும் வெளிப்பட்டது.

‘அடக்கடவுளே... என்னம்மா இது! நீ ஒரு பையனாகப் பிறந்திருக்க வேண்டும். தவறிப்போய்ப் பெண்ணாகப் பிறந்துவிட்டாய். உனது நடையிலும் அபிநயத்திலும் பெண்மைக்கே உரிய ஒயிலும் கவர்ச்சியும் வெளிப்பட வேண்டாமோ!’ என்றார் பெரிய சத்யம்.

‘பக்திமாலா’வில் மீராபாய் கதாபாத்திரத்தில் நான் பாடிய பாட்டுக்கள் எனக்குப் பெயர் வாங்கித் தந்தன. நாட்டியத்தில்தான் சொதப்பிவிட்டேன். ஒரு பத்திரிகை என் நடனப் படத்தைப் போட்டு ‘குழந்தை நட்சத்திரம் பானுமதி - முடக்குவாத போஸில்!’ என்று எழுதிவிட்டார்கள். இனிமேல் ஏதாவது படத்தில் நாட்டியம் ஆடச் சொன்னால் அந்த ரோல் செய்ய மாட்டேன் என்று அப்பாவிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.

காஞ்சனமாலா எனும் நட்சத்திரம்

‘பக்திமாலா’ படத்தின் அலுவலகம் அப்போது தியாகராயநகர் வைத்திய ராமன் தெருவில் இருந்தது. (அதே தெருவில் நான் வீடுவாங்கிக் குடியேறுவேன் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை) வாஹினி அலுவலகமும் அருகில்தான் இருந்தது.

அப்பாவுடன் வாஹினி அலுவலகம்  செல்வது பிடிக்கும். அதற்குக் காரணம் அங்கிருந்த மெஸ். அந்த மெஸ்ஸில் தயாராகும் முறுகல் தோசையும் மல்லிகைப்பூ இட்லியும் இன்று நினைத்தாலும் நாவில் நீரூறும். ‘பக்திமாலா’ படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிவிட்டோம்.

பின்னர், ‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்புக்காக நாங்கள் மீண்டும் சென்னை வந்தோம். அதே சென்ட்ரல். அதே தமிழ்க் குரல்கள். ஸ்டார் கம்பைன்ஸ் நிறுவனத்தார் எங்களுக்காக ராயப்பேட்டை ஸ்ரீபுரம் காலனியில் ஒரு வாடகை வீடு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே போனதும் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைத்தது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகையான காஞ்சனமாலா அதே தெருவில்தான் குடியிருந்தார். நான் அப்பாவிடம் ஓடினேன் ‘அப்பா! எப்படியாவது நாம் காஞ்சனாமாலாவைச் சந்திக்கணும் வாங்க’ என்றேன். ‘நமக்கு முன்பின் பழக்கமில்லாதவங்களை அப்படிப் போய் பார்க்கப்படாது அம்மா. அறிமுகம் ஆகட்டும் அப்புறம் சந்திக்கலாம்.

நீ உடனே பார்க்கணும்னு ஆசைப்பட்டா பார்க்க ஒரு வழி இருக்கு. காஞ்சனாமாலாவோட கார் இந்த வழியாகத்தான் போகும். அதில் பார்க்கலாம்’ என்றார். எனக்குப் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை. நான் தெருவில் ஒவ்வொருமுறை கார் சத்தம் கேட்கும்போதும் ஓடிப்போய் பார்ப்பேன். ஏமாந்துபோவேன்.

இரண்டு நாள் கழித்து காலை 9 மணி இருக்கும். ஒரு பெரிய கார் அசைந்தபடி வந்தது. குறுகலான தெரு ஆகையால் கார் மிகவும் பெரிதாகத் தெரிந்தது. கார் நெருங்கியதும் தெருக் குழந்தைகளிடையே ஒரே கூச்சல். எனக்குப் புரிந்தது அது காஞ்சனாமாலாவின் கார்தான். எங்கள் வீட்டை காஞ்சனாமாலாவின் கார் கடக்க முற்பட்டபோது எதிரே ஒரு மாட்டு வண்டி வந்தது. கார் மெல்ல நின்று நின்று போயிற்று.

கையில்லாத பிளவுஸ், ஜார்ஜெட் புடவை, நல்ல செக்கச் செவேலென்ற நிறம், ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கிவரும் ரம்பையைப் போல ஜொலித்தார். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காஞ்சனாமாலாவின் பார்வை என்மீது விழுந்தது. நானும் அவரை உற்றுப் பார்த்தேன்.

அவர் தன் பெரிய கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார். ‘யார் இந்தக் குட்டிப்பெண்?’ என்று கேட்பது போல் மெலிதாகப் புன்னகைத்தார். சட்டென்று கார் நகர்ந்து வேகம் எடுத்து சென்றது.

கார் நகர்ந்தாலும் என் கால்கள் நகரவில்லை. அவரது பெரிய கவர்ச்சியான கண்கள், மாம்பழக் கதுப்புகள் போன்ற கன்னங்கள், அந்தப் புன்னகை என அவரின் தோற்றப் பொலிவு அப்படியே என் மனசில் அழியாத ஓவியம்போல் ஆகிவிட்டது. நான் அவரது அழகில் மயங்கிப் போனேன்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் காஞ்சனாமாலாவின் கார் எங்கள் வீட்டைக் கடந்து செல்வதைப் பார்க்க காத்திருப்பேன். காரை நிறுத்தி அவரோடு இரண்டு வார்த்தை பேசமாட்டோமா என்று இருக்கும். பேசினால்தான் என்ன; அவருடைய ஆயிரக்கணக்கான விசிறிகளில் நானும் ஒருத்தி அல்லவா? நட்சத்திரங்கள் இரவில்தான் பளீரென்று தெரியும்.

பகலில் அவை தங்களின் சோபையை இழந்துவிடும். ஒரு வேளை நடிகர், நடிகைகளை இதனால்தான் நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்களோ என்னவோ… வெள்ளித்திரையில் இந்த நட்சத்திரங்களைப் பார்க்கும்வரைதான் மனசு மயங்கி மகிழ்ச்சியில் துள்ளும். அந்த இமேஜைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் நடிக நடிகைகள் படாதபாடு படுகிறார்கள். காஞ்சனாமாலா கவர்ச்சிக்கும் அதுதான் காரணம் எனத் தோன்றியது.

சில வருஷங்கள் கழித்து காஞ்சனாமாலா மறைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். திரைவானில் சுடர்விட்டு ஒளி வீசிய துருவ நட்சத்திரம் விழுந்துவிட்டதை எண்ணி மனசு கனத்தது.

என் கதைக்கு வருகிறேன். ‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்பு தொடங்க தேதி குறிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என் வாழ்வை ஒரு தென்றல் தீண்டியது! பின் அதுவே சூறாவளியாகவும் மாறியது” என்று புதிரோடு நிறுத்தினார் பானுமதி. புதிருக்குப் பின்னால் ஆச்சரியம் காத்திருந்தது!

https://www.kamadenu.in/news/cinema/31009-14.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 15: அதுவொரு அழகிய காதல் காலம்!

15

சம்மதமா...சம்மதமா

நான் உங்கள் கூடவர சம்மதமா

சரிசமமாக நிழல்போலே

நான் உங்கள் கூடவர சம்மதமா

                                    படம்: நாடோடி மன்னன்

“‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்பின் போதுதான் என்னைக் காதல் எனும் தென்றல் சீண்டியது. என் வீட்டாரின் எதிர்ப்புச் சூறாவளியும் என்னைத் தாக்கியது” என்று தொடங்கினார் பானுமதி.

இதுவரை நான் பார்த்த பானுமதி வேறு. சின்னஞ்சிறு பெண்ணாக, சீரியஸான பாத்திரத்தையும் விளையாட்டாக நடித்த வெளி உலகம் அறியாத வெகுளிப் பெண்ணாக வளையவந்த பானுமதி வேறு. இந்தச் சிறுபெண்ணை காதல் எப்படித் தீண்டியிருக்கும்? அவர் சொல்லச் சொல்ல மென்மையான நேர்த்தியான, கண்ணியமான காதல் அனுபவத்தின் பக்கங்கள் என்முன் படபடத்துப் புரண்டன.

உட்ஸ் ரோட்டில் இருந்த ஸ்டார் கம்பைன்ஸ் அலுவலகத்தில் சாமிப்பிள்ளை, ராமையா (அப்போது இவர் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்ததால் பிலிம் சேம்பர் அலுவலகமும் அதுவாகவே இருந்தது) இசையமைப்பாளர் காலி பெஞ்சலா நரசிம்மராவ தப்பி தாமராவ், இயக்குநர் ஹெச்.வி. பாபு, இணை இயக்குநர் என்று பலரும் வந்திருந்தனர். அறிமுகப் படலம் முடிந்தது.

நான் முதன்முதலாக ஹெச்.வி. பாபு இயக்கத்தில் நடிக்கவிருந்தேன். ஹெச்.வி. பாபு கைக்குட்டையால் வாயைப்பொத்திக் கொண்டு சிரிப்பார். எதைச் சொன்னாலும் அத்துடன் ஒரு சிரிப்பும் சேர்ந்துகொள்ளும். அப்படி ஒரு சுபாவம். அவரைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வரும்.

ராமகிருஷ்ணாவைக் கவனித்தேன்

எங்களைக் கீழே உட்கார வைத்துவிட்டு ராமையா மாடிக்குப் போனார். அங்கிருந்து அவர் ‘ராமகிருஷ்ணா...’ என்று கூப்பிடும் குரல் கேட்டது. இதோ ‘வரேன் சார்’ என்று சொல்லிவிட்டு என்முன் உட்கார்ந்திருந்த இணை இயக்குநர் எழுந்து போனார். அந்த இளைஞர் வங்காளிகளைப் போல வேட்டி கட்டியிருந்தார். ஒல்லியான தேகம். எவ்வித அலட்டலும் இல்லாத எளிய தோற்றம்.

எச். வி. பாபு படக்கதை பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். ராமையா குறுக்கிட்டு ஆங்கிலத்தில் ‘அருமையான பையன் சார்’ என்று ராமகிருஷ்ணாவைப் புகழ்ந்து பேசினார். ஹெச். எம். ரெட்டிக்கு அந்தப் பையனை ரொம்பவும் பிடிக்கும் ‘நல்ல பையன்.

ஆனால், பிடிவாதக்காரன்’ என்றார் எச் வி.பாபு. தப்பி தர்மராவ் சொன்னார், ‘தன்னம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ராமகிருஷ்ணா ஒரு வைரம். என்றைக்காவது ஒருநாள் வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வருவான் பாத்துக்கிட்டே இருங்க’ என்றார். அந்த இளைஞனின் மீது அவர் கொண்டிருந்த பிரியம் அவர் வார்த்தைகளில் தொனித்தது.

நான் பார்த்தவரையில், திரைத்துறையில் பெரிய மனிதர்கள் இளைய தலைமுறையை அப்படியெல்லாம் உடனே பாராட்டிவிட மாட்டார்கள். இவரைப் பற்றி எல்லோரும் ஓஹோ என்று புகழ்வதைக் கேட்டபிறகு உள்ளபடியே இந்த மனிதர் நல்லவர்தான் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

மாடிக்கு ஏறிச்சென்ற ராமகிருஷ்ணாவை நான் கவனிக்கவில்லை. ஆனால், இறங்கி வரும் ராமகிருஷ்ணா விசித்திரமாகத் தெரிந்தார். அவர்மீது இவ்வளவு நேரம் பொழிந்த பாராட்டு மழையே காரணம். அப்படி என்னதான் இருக்கிறது அவரிடம் என்று கூர்ந்து பார்த்தேன். அவரோ என்பக்கம் திரும்பக்கூட இல்லை.

நான் செட்டுக்குள் நுழைந்தபோதுகூட, அவர் பார்வை என்மீது படவில்லை. இப்போதுகூட அவர் என்னை கவனிக்கவில்லை. ஆனால், அந்தக் கணத்திலிருந்து என்னை அறியாமலே என் கண்கள் அவர் இருந்த பக்கம் தாவிக்கொண்டே இருந்தன.

எனக்குள் ஏதோ ஒரு எண்ணம். இந்த மனிதரை இதற்கு முன் எங்கோ எப்போதோ பார்த்திருக்கிறேன். அது போன ஜன்மமாகக்கூட இருக்கலாம் என்று தோன்றியது. “இவர் என்னுடையவர்” என்று பார்த்தமாத்திரத்திலேயே என் உள் மனசு பட்டென்று சொல்லிவிட்டது.

இதுவரை எந்த ஆண்மகனையும் நான் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. இவர் தோற்றமும் அப்படி ஒன்றும் சொல்லும்படி இல்லை. கட்டுமஸ்தான உடம்பு கிடையாது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான அந்தஸ்தும் கூட அவரிடம் இல்லை.

ஒரு சாதாரண நல்ல மனிதர், அவ்வளவுதான். ஆனால், அவ்விதம் காட்சியளிக்க அவர் எவ்விதத்திலும் மெனக்கெடவில்லை. என்னைச் சற்றும் கவனிக்கவில்லை. ஆனால், நான் அவர் எங்கே நிற்கிறார், போகிறார் என்று  கவனிக்க தொடங்கி விட்டேன்.

குனிந்த தலை நிமிராத இளைஞர்

எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னது என்காதில் ஒலித்தது. ‘ராமகிருஷ்ணா ஓர் அருமையான பையன்’ விசித்திரம்தான்! இப்படி எல்லாரும் புகழும்படி அவர் என்னதான் செய்துவிட்டார்?

கொஞ்சம் கொஞ்சமாக என் கவனம் சிதறிக் கொண்டிருந்தது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தச் சாதாரண மனிதர் நான் ஒருத்தி அவரையே நினைத்துக் கொண்டிருப்பதையோ அவரையே கவனித்துக்கொண்டிருப்பதையோ உணரவே இல்லை.

2.jpg 

சில நேரம் எனக்குத் தோன்றும் என் மனசு ஏன் இப்படி அலைபாய்கிறது? அவர் யாரென்றே தெரியாது. எங்கிருந்து வருகிறார்? அவர்களின் பெற்றோர் யார்? என்ன படித்திருக்கிறார்? எதுவுமே தெரியாது. இதெல்லாம் தெரியாமல் அவரையே ஏன் என் மனசு சுற்றிச் சுற்றி வருகிறது? காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது இதுதானோ?

படப்பிடிப்பின்போது அவர் நான் நடிக்க வேண்டிய காட்சி மற்றும் வசனத்தைச் சொல்வார். அவர் என்னருகே வரும்போது அவர் என்னைப் பார்ப்பார் என்று ஒரு நம்பிக்கைவரும். “இதோ பாருங்கள். இதுதான் நீங்கள் பேச வேண்டிய வசனம். இதை இப்படித்தான் பேச வேண்டும்” என்று ஏற்ற இறக்கத்துடன் தலை குனிந்தபடியே சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

படப்பிடிப்பு இல்லாதபோது நாங்கள் பெண்கள் எல்லாம் ஓரிடத்தில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். ராமகிருஷ்ணா அந்தப் பக்கமாக வரநேர்ந்தால் எங்களைச் சுற்றிக்கொண்டு தலைகுனிந்தபடியே போய்விடுவார்.

அவர் பெண்களோடு பேசி நான் பார்த்ததே இல்லை. ஒருநாள் கடற்கரையில் (இப்போது அண்ணா சமாதி உள்ள இடம்) படப்பிடிப்பு நடந்தது. முன்பெல்லாம் அங்கே மரங்கள் அடர்ந்து வனம்போல் இருக்கும்.

கிருஷ்ணன் ராதாவின் தங்கையான சந்திராவளி பின்னால் ஓடுகிறான். சந்திராவளிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. சந்திராவளி கிருஷ்ணனைக் கன்னத்தில் அறைகிறாள்.

அப்போது கிருஷ்ணன் கபகபவென்று சிரிக்க வேண்டும். நான் பலமாக அறைந்துவிட்டேன். கிருஷ்ணனால் சிரிக்க முடியாமல் போய்விட்டது. இதைச் சொல்லிச் சொல்லிப் படக்குழுவினர் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதயம் அதிர்ந்தது

மறுநாள் படப்பிடிப்பில் கிருஷ்ணன் என்னைத் துரத்த நான் குட்டையில் தடுமாறி விழ வேண்டும். என் உடம்பில் சேறு பூசியிருக்க வேண்டும். அன்றைய படப்பிடிப்புக்கு அது அவசியம். அப்பா புகை பிடித்தபடி “அவள் கையில் சேற்றைக்கொடுத்து எப்படிப் பூசிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

ராமகிருஷ்ணாவின் கையில் சேற்றைக் கொடுத்து டைரக்டர் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். ‘சார்... வேண்டாம் சார்...’ என்று ராமகிருஷ்ணா அரண்டுபோய்ப் பின்வாங்குவது தெரிந்தது.

இயக்குநர் வற்புறுத்திச் சொல்லவும் ராமகிருஷ்ணா ஒரு வேலைக்காரப் பையனின் கையில் வாளி நிறைய சேற்றைக் கொண்டுவரச் சொல்லி என்னை நெருங்கினார். “அம்மாயி இதை நீங்க உடம்பு பூரா பூசிக்கணும்” என்றார்.

காட்சிக்கு அது ஏன் தேவை என்பதையும் விளக்கினார். நான் அருவருப்புடன் கொஞ்சம் போல் சேற்றை எடுத்து என் தோளிலும் கையிலும் பூசிக்கொண்டேன். இயக்குநர் ‘இது போதாது நிறையப் பூசணும்’ என்றார்.

நான் தயங்கியபடியே இன்னும் கொஞ்சம் எடுத்துப் பூசிக்கொண்டேன். இயக்குநர் பொறுமை இழந்து ‘ராமகிருஷ்ணா நீயே சேற்றை எடுத்து நன்றாய் பூசி விடப்பா’ என்றார். ராமகிருஷ்ணா கையில் சேற்றோடு கூச்சத்தோடும் பயத்தோடும் என்னை நெருங்கினார்.

சேற்றை அப்படிறே என் கழுத்து, மார்பு என இயக்குநர் சொன்ன இடங்களில் எல்லாம் பூசிவிட்டார். என் இதயம் ஒருகணம் நின்றேவிட்டது. நான் தலை குனிந்தபடி அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டேன். என் இதயம் அதிர்ந்துபோய்ப் படுவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அப்பா என் நிலைமையைப் பார்த்துவிட்டு எழுந்து வந்தார். ராமகிருஷ்ணாவை இன்னும் கிலி பிடித்துக்கொண்டது. பாக்கியிருந்த சேற்றை எடுத்து முழுவதுமாகப் பூசிவிட்டு கேமராவுக்குப் பின்னால் போய்விட்டார். அவசரத்தில் என் மோவாயிலும் சேற்றைப் பூசிவிட்டார்.

என் திருமணத்தின்போது என் மோவாயில் சந்தனத்தைப் பூசியபோது இந்தச் சேறு பூசிய சம்பவம் நினைவுக்கு வந்தது. அவரும் அதை நினைத்துக் கொண்டார்போல. மணமேடையில் இருவர் முகத்திலும் ஒரே நேரத்தில் புன்னகை அரும்பியது!

https://www.kamadenu.in/news/cinema/31955-15-9.html

Link to comment
Share on other sites

16: பிரிவோம்... சந்திப்போம்!

 

பானுமதி அம்மையார் மெல்லச் சிரித்து, “என் காதல் விவகாரத்தை கண்ணாமணி அம்மா எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்!” என்றார். நான் “கண்ணாமணியா?” என்று வியப்பைக் கூட்டினேன்! “ஆமாம் ‘கிருஷ்ண பிரேமா’ பாடல் பதிவுக்கான ஒத்திகைக்குப் போயிருந்தபோது அங்கும் ராமகிருஷ்ணாவை என் கண்கள் தேடின.

இதெல்லாம் எதில் போய் முடியுமோ என்ற கவலையும் என்னைப் பிடித்துக் கொண்டது. யாரோடும் பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு யோசனையில் மூழ்கியிருந்தேன். அப்போது ஒரு பெண்ணின் கை மிகவும் பிரியத்தோடு என் தோளைத் தொட்டதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன் அவர்தான் கண்ணாமணி.

கண்ணாமணி கண்டுகொண்டார்

படத் தயாரிப்பாளர் ராமையா அவர்களின் மனைவி அவர். ஒரு காலத்தில் தமிழ்ப் படங்களில் நடித்தவர்தான். தம்பதியர் இருவரும் திரைப்பட வர்த்தகசபை அலுவலகத்தின் மாடியில்தான் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த அலுவலகம் வுட்ஸ் சாலையில் ஒரு பழைய பங்களாவில் இயங்கிவந்தது. ‘என்ன பானுமதி.. யோசனை எல்லாம் பலமா இருக்கு?’ என்று தமிழில் அவர் கேட்டபோது (அப்போது நான் தமிழில் நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டிருந்தேன்) என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டது போன்ற குற்ற உணர்வுதான் ஏற்பட்டது. அதேநேரம் ராமகிருஷ்ணா மேலே ஏறி வந்தார். என் இதயத் துடிப்பு அதிகமாயிற்று.

வாங்க பிரதர் வாங்க என்ன சாப்பிடுறீங்க? என்று கண்ணாமணி அவரை சினிமா தோரணையில் வரவேற்றார். அவரோ எங்களைப் பார்த்துத் தலையைக் குனிந்துகொண்டுவிட்டார். ‘தாங்ஸ் ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ‘இவருக்குப் பெண்களைக் கண்டாலே எங்கிருந்தோ ஒரு கூச்சம் வந்துவிடும். நல்ல பிள்ளையாண்டான்தான் போ’ என்று கிண்டல் தொனியில் பேசினார்.

அந்த நேரம் என் தந்தையும் இசையமைப்பாளர் பெஞ்சாலையாவும் வந்தார்கள். ‘நீ பாடிய இரண்டு பாட்டுக்களும் மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது அம்மா’ என்றார் இசையமைப்பாளர்.

இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு கிண்டியிலும் பூந்தமல்லிப் பக்கமும் நடந்தது. அப்போதெல்லாம் ராமகிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. முன்பு அவரிடம் இருந்த தயக்கமும் சங்கடமும் போய்விட்டது. ஆனால், அப்பாவைப் பார்த்துவிட்டால் அந்தண்டை போய்விடுவார்.

ஒருநாள் படப்பிடிப்பின்போது கேமரா வழியாக என்னைக் கவனித்த ராமகிருஷ்ணா மராத்தியில் ஹெச்.வி.பாபுவிடம் ‘இந்தப் பெண்ணை கேமரா வியூவில் பாருங்களேன் கொள்ளை அழகு’ என்றார்.

‘ஏனப்பா அம்மாயி பதினாறு வயசு பருவப்பெண். அழகாகப் பாடவேறு செய்கிறது. அழகாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்?’ என்று ஹெச்.வி.பாபு ராமகிருஷ்ணாவிடம் பதிலுரைத்தபோது அவர் முகத்தில் புன்னகை அரும்பியது.

டேக்கில் சொதப்பினேன்

அவர்கள் இருவரும் இப்படி என்னைப் பார்ப்பதும் பேசிக்கொள்வதுமாக இருந்ததைப் பார்த்து எனக்கு ‘மூட் அவுட்’ ஆகிவிட்டது. அந்த டேக்கில் நான் நன்றாகச் செய்யவில்லை. ‘ஏனம்மா பானு… ஒத்திகைக் கூடத்தில் நன்றாகப் பண்ணினாயே. இப்போது டேக்கில் சரியாகப் பண்ண மாட்டேன் என்கிறாயே’ என்றார் ஹெச்.வி.பாபு. நான் பதில் சொல்லவில்லை.

‘இந்தமுறை நன்றாகச் செய்யுங்கள்’ என்றார் ராமகிருஷ்ணா. நான் அவரைப் பார்த்து முறைத்தேன். ஒன்றும் புரியாமல் திகைத்துவிட்டார் ராமகிருஷ்ணா. ‘தலை வலிக்கிறது நான் வீட்டுக்குப் போறேன்’ என்று நேராக காரில் போய் உட்கார்ந்துகொண்டுவிட்டேன். ஏன் திடீரென்று என் மூட் அவுட் ஆகியது என்று யாருக்கும் தெரியவில்லை.

இயக்குநர், என் மூடு மாறியதன் காரணத்தை அறிந்துவர ராமகிருஷ்ணாவை அனுப்பினார். காரில் உட்கார்ந்திருந்த என்னருகில் தலைகுனிந்தபடி வந்த ராமகிருஷ்ணா, ‘இன்னிக்கு ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிவிட வேண்டியதுதானா?’ என்று கேட்டார்.

‘ஆமாம்’ என்றேன். ‘நாளைக்கு வைத்துக்கொள்ளலாமா?’ என்று மறுபடி கேட்டார். நான் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அவர் சிரித்துவிட்டார். ஏனென்று தெரியவில்லை. என் கோபம் மறைந்தது. அவரது சிரித்த முகத்தை விழுங்குவதுபோல் பார்த்தேன். ‘நீங்கள் சரியான மூடி டைப்பாக இருப்பீர்கள் போலிருக்கே?’ என்றார். நான் பேசவே இல்லை.

‘நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாமா?’ என்று மறுபடி கேட்டார். ‘எனக்குத் தெரியாது. அப்பாவிடம் கேளுங்கள்’ என்றேன். ஒருவேளை என்னால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வந்துவிட்டதோ என்ற குற்ற உணர்வோடு நான் போயிட்டால் உங்களுக்குச் சிரமம் இல்லையா? என்றேன். இதைக் கேட்டதும் சிரித்தார். இன்றைக்கு நாங்கள் வேறு காட்சிகளை எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்குரியதை நாளைக்கு வைத்துக்கொள்ளலாம். இதைச் சொல்லிவிட்டு அவர் விறுவிறு என்று போய்விட்டார்.

போர் மேகம் தந்த பிரிவு

‘கிருஷ்ண பிரேமா’ ஏறத்தாழ மூன்றில் இரண்டு மடங்கு முடிந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து யுத்தம் வந்தது. சென்னை மீது குண்டு போடப்படுமோ என மக்கள் மத்தியில் பீதி நிலவியது. பெரும்பாலான மக்கள் வீட்டைக் காலிசெய்துவிட்டு வெளியூர்களுக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள். இருட்டடிப்பு அமல்படுத்தப்பட்டது.

கொஞ்ச காலத்துக்குப் படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதென்று முடிவெடுத்தோம். என் மனசில் ஒரு தவிப்பு. படப்பிடிப்பு இல்லை என்றால் அவரைப் பார்க்க முடியாதே மறுபடி எப்போது பார்ப்பேனோ? அவர் எங்கே தங்கியிருக்கிறார்? சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? எதுவுமே தெரியவில்லையே. என் தவிப்பு யாருக்கும் தெரியவில்லை. என் ராமகிருஷ்ணாவுக்கே இதைப் பற்றிக் கிஞ்சித்தும் தெரியவில்லை.

நான் வெளியே செல்லாவிட்டாலும் என் தங்கைக்கு மட்டும் என் மனநிலைக்கான காரணம் அரசல் புரசலாகத் தெரியும். அப்பாவை நினைத்துப் பயமாக இருந்தது. அவருக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்து எனக்குள் கலவரம் மூண்டது. ஏனென்றால், தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்லுவார். உயரமாக, லட்சணமாக, நன்கு படித்தவராக, சங்கீத ரசனை மிக்கவராக, உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இப்படி ஒரு மாப்பிள்ளையைத்தான் அவர் எனக்குத் தேடிக்கொண்டிருந்தார்.

அவரது எதிர்பார்ப்பை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பகீரென்று இருக்கும். என் கனவு எல்லாம் பகல் கனவாகவே போய்விடுமோ என்று மனதுள் கொஞ்சமாய் இருள் சூழும். என் மனதைப் போல் பட்டணத்திலும் இருட்டடிப்பு. அந்த நேரம் மக்கள் விளக்குகளை அணைத்துவிட்டு லாந்தர்கள் கொளுத்தி வைத்துக்கொள்வார்கள்.

பிரச்சினைகள் வந்தால் கூட்டமாகத்தான் வரும். சின்ன அத்தை திடீரெனக் காலமாகிவிட்டார். அப்பாவும் நானும் அவசரமாக ஊருக்குப் புறப்பட்டோம். ரயில் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. அப்பா எனக்காக சஞ்சிசைகள் வாங்கிவரப் போனார். திடீரென்று ராமகிருஷ்ணா வருவதைப் பார்த்தேன். யாரையோ வழியனுப்ப வந்திருப்பார்போல.

அவரைப் பார்த்ததுமே என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவரோடு பேச வேண்டும்போல் என்னுள் ஒரு இன்பமான இம்சை. அவராக வந்து பேசமாட்டாரா என்றிருந்தது. அவர் எங்களைப் பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தம் சம்பிரதாயமாக எங்களிடம் ‘ஊருக்குத் திரும்பிப் போறீங்களா?’ என்று இரண்டு வார்த்தை பேசினார்.

‘நீங்க போகலையா?’ என நான் கேட்டேன்- ‘நாளைக்கு பம்பாய் போறேன். ஹெச்.எம்.ரெட்டி படத்துக்குக் கொஞ்சம் எடிட்டிங் வேலை பாக்கியிருக்கு. அதை முடிச்சிட்டு மெட்ராஸ் வந்திடுவேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் அங்கே நின்றதில், பேசியதில் பரம திருப்தி. பம்பாய் போகிறார். நல்லவேளை மெட்ராஸில் இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். அவருக்காக நான் இங்கே ஒருத்தி கவலைப்படுவதை அவர் அறிவாரா? அறிந்திருந்தால் இப்படி ரொம்ப சாதாரணமாகப் பேசிவிட்டுப் போவாரா? இல்லை. போகத்தான் முடியுமா? ரயில் நகர ஆரம்பித்தது. ‘இப்போது பிரிகிறோம். மீண்டும் சந்திப்போம்?’ என்று அவர் போன திசைநோக்கி மானசீகமாகச் சொல்லிக்கொண்டேன். என் கண் கலங்கியது ரயிலின் கரிப்புகையால் என்று அப்பா நினைத்திருப்பார்.

https://www.kamadenu.in/news/cinema/32888-16.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

Link to comment
Share on other sites

17: காதலின் கைக்குட்டை

 

பானுமதி அம்மையாரின் நினைவுப் பகிர்தலில் காதலின் சுகந்தம் தொடர்ந்தது.

“வீடு திரும்பினோம். எப்போதும் ஏதோ ஒரு யோசனை. வீட்டின் மூலையில் தனித்து உட்கார்ந்திருந்தேன். என் வயது கொண்ட பெண்களுடன் விளையாட முடியவில்லை. தனிமையில் என் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. என்னிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை அம்மா கவனித்துவிட்டார்.

அப்பாவிடம் அவர் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததும் காதில் விழுந்தது. ‘வயதுக்கு வந்த பெண் ஏதாவது கல்யாணக் கனவில் மூழ்கிவிட்டாளோ.. அல்லது வேறு ஏதாவது சிந்தனையா?’ என அப்பா நினைத்திருப்பாரோ? ஆனால், அவர் எனக்கு வரன் தேடத் தொடங்கி விட்டார். அம்மா இதை என்னிடம் சொன்னபோது என் இதயம் நின்றே விட்டது.

தங்கை கொடுத்த தைரியம்

அப்பாவும் சரி, அம்மாவும் சரி நான் ராமகிருஷ்ணாவை காதலிப்பதை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் வருகிற வரன்களைப் பார்ப்பதில் மூழ்கிவிட்டார்கள். எனக்கு வந்த வரன்களில் அப்பாவுக்கு பிசப்பதி குடும்பத்தாரின் வரனைத்தான் பிடித்திருந்தது.

‘பையன் லட்சணமாக இருக்கிறான். பணக்காரன், நன்றாகப் படித்திருக்கிறான். அதுமட்டுமல்ல பையனின் தகப்பனார் என் சினேகிதர்’ என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக்கொண்டிருந்தது என் தங்கை காதில் விழுந்திருக்கிறது. கர்ம சிரத்தையோடு அவள் இதை என் காதில் போட்டுவிட்டாள். “இரவெல்லாம் தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்வேன்..

எப்படிச் சொல்வேன்? என் தங்கைக்குப் புரிந்தது ‘இதோ பார் அக்கா… பயப்படாதே! அவங்ககிட்டே உன் விஷயத்தைச் சொல்லிடறேன்’ என்று அவள் சொன்னதும் திகைத்துப் போய் அவளைப் பார்த்தேன். ‘ஓ! ஆமாம் எனக்கு எல்லாம் தெரியும். நீ ராமகிருஷ்ணா மீது எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாய்!. நீ அவரை அடிக்கடி பார்ப்பது எனக்கு முன்பே தெரியும்’ என்றதும், என்னால் அவளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.

தலையைக் குனிந்து கொண்டேன். இப்போதும் நான் மெளனம் சாதித்தால், அது என்னையே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும். அவளைப் பார்த்து மெல்லிய குரலில் ‘நான் கல்யாணம் செய்து கொள்வதாய் இருந்தால், அவரைத்தான் பண்ணிக்கொள்வேன்’ என்றேன்.

தங்கைக்குப் புரிந்தது. ‘நீ கவலைப்படாதே. நான் அம்மாவிடம் பேசறேன்’ என்றாள். நான் தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டேன். அப்பாவுக்குத் தெரிந்தால் ஆத்திரப்படுவார். அவரை அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரைப் பார்த்தால் ஏழை மாதிரிதான் தெரிகிறது என்று புலம்பினேன்.

‘ஆமாம், அக்கா ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து வரும்போது பார்த்தேன். வராந்தாவில் ஃபேனுக்கு கீழே நின்றுகொண்டிருந்தார். அவரது சட்டையின் காலர் ரொம்பவே சாயம் போயிருந்தது. அவர் ஏழைதான். சந்தேகமில்லை. ஆனால் நல்லவர்’ என்றாள்.

உண்மைதான். ‘நல்லவர், நல்லவர் என்று எல்லோரும் திரும்பத் திரும்ப இந்த வார்த்தையைத்தான் சொல்லுகிறார்கள். இந்த உலகத்தில் எனக்கு ஒன்றுமே வேண்டாம். அந்த நல்லவர் என் கணவராக வேண்டும்’ - இப்படி ஒரு சங்கல்பத்தை அந்தக் கணமே செய்துவிட்டேன்.

தங்கையிடம் அப்பா தேர்ந்தெடுக்கிற யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதில்லை என்றேன் தீர்மானமாக. ‘ஓ.கே. நீ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாய் அப்படித்தானே? அப்பாவிடம் சொல்லிவிடட்டுமா?’ என்றாள். நான் சிலையாக நின்றுவிட்டேன்.

அப்பாவுக்குக் கோபம் மூண்டு, அந்தப் படத்தில் நான் நடிப்பதை ரத்து செய்துவிட்டால்… ராமகிருஷ்ணாவுக்கு வேலை போய்விட்டால்… அல்லது வேறு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுவிட்டால்? என் முகத்தில் படர்ந்த பீதியைத் தங்கை கவனித்துவிட்டாள். ‘சரி, நீ இப்படி மௌனமாகவே இருந்தால் அப்பா அவசரமாக ஒரு வரனைத் தேடி முடித்துவிட்டார் என்று வைத்துக்கொள்.

உன்னால் என்ன செய்ய முடியும்?’ நான் பதில் பேசாமல் நேராக சிவபார்வதி படத்துக்கு முன்னால் போய் உட்கார்ந்தேன். என் மௌனத்தைப் பிரார்த்தனையாகச் சமர்ப்பித்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. குப்புறப்படுத்து வணங்கிய என் உடல் அழுகையால் குலுங்கியது. திடீரென்று என் தங்கை ஒரு மின்னலைப் போல ஓடிவந்தாள்.

‘அக்கா… அப்பாவிடம் ஒன்று பாக்கியில்லாமல் சொல்லிவிட்டேன்’ என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘ஏன் சொன்னாய்’ எனக் கோபத்தோடு கேட்டேன். ‘ஏன் என்ன தப்பு? நீதான் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே?’ என்றாள்.

நானோ பரிதவிப்புடன் அப்பா என்ன சொன்னார் எனப் பட படத்தேன். ‘மெட்ராஸ் போகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்’ என்று அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்து சொன்னாள். எனக்கோ மூச்சுவிடுவதே சிரமமாக இருந்தது.

காயத்துக்கான மருந்து

அப்பாவுடன் சகஜமாகவே பழக முடியவில்லை.முன்புபோல் நடந்து கொள்ள முடியவில்லை. அவரோடு பேசுவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். குற்ற உணர்வு எனக்குள் குறுகுறுத்தது. அவரோடு மிகவும் ஜாக்கிரதையாய்ப் பேசினேன்.

அவரும் அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. இரண்டு மாதம் கழித்து ராமையாவிடமிருந்து உடனே புறப்பட்டு வருமாறு தந்தி வந்தது. யுத்த பீதி குறைந்துவிட்டிருந்தது. இருட்டடிப்பும் விலக்கப்பட்டு விட்டது. படப்பிடிப்பை உடனே தொடங்க வேண்டியதுதான். இதுதான் தந்தியின் சாரம்.

எனக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. என் தங்கை சொன்னாள் ‘உன் முகத்தில் திடீரென்று சந்தோஷம் தாண்டவமாடுது!’

சென்னைக்கு வந்ததும் நேராக ஸ்டார் கம்பைன்ஸ் அலுவலகம் சென்றோம். நடிகை கண்ணாமணி என்னைப் பார்த்துவிட்டு ‘ஐயோ பெண்ணே கொஞ்ச நாளில் இப்படி இளைச்சுப் போயிட்டியே’ என்றார். அத்தோடு விடவில்லை. ‘அடி.. கள்ளி! எனக்குத் தெரியும்! காதல்ல விழுந்துட்டேன்னு சொல்லு…

உன்னை விடமாட்டேன்… யார் அந்த அதிர்ஷ்டசாலி?’ என்று என் மோவாயை நிமிர்த்திக் கேட்டார். ‘சீச்சீ...’ என்று வெட்கத்தால் நிறைந்து முகத்தை மூடிக்கொண்டேன். எல்லோரும் என்னையே பார்ப்பது போலிருந்தது. இருப்பினும், வந்ததிலிருந்து என் கண்கள் அவரையே தேடிக்கொண்டிருந்தன.

அன்றைய படப்பிடிப்பில் என்னோடு சாந்தகுமாரி ராதையாக நடித்தது ஞாபகமிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் நான் ரோஜாப் பூக்களைப் பறித்து என்னைச் சுற்றி தூவ வேண்டும். அந்தக் காட்சியின்போது என் வலக்கை விரலில் ரோஜா முள் ஆழமாகக் குத்தி ரத்தம் சொட்டுச் சொட்டாக வழியத் தொடங்கிவிட்டது. அதைக் கண்ட இயக்குநர், ‘ரத்தம் கொட்டுது சீக்கிரம் முதலுதவி கொடுங்க… டிங்சர் எடுத்துட்டு வாங்க” என்று கத்தினார்.

திடீரென்று எங்கிருந்தோ ராமகிருஷ்ணா ஓடிவந்தார். அவர் கைக்குட்டையை எடுத்து என் விரலில் கட்டுப்போட்டார். பெண்களிடமிருந்து காததூரம் தள்ளி நிற்கிற மனிதர் இப்படிச் செய்தார். அப்படிப்பட்டவர் மிகச் சுதந்திரமாக என் விரலில் கட்டுப் போட்டபோது எல்லோருக்கும் அவர் ஒரு கதாநாயகனாகத் தோன்றினார். காயம்பட்ட என் விரலுக்குக் கட்டுப்போடுவது தன் கடமை மாதிரி அந்தக் காரியத்தைச் செய்தார். செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போல நடந்து சென்று தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்.

என் உதவியாளர் இந்தக் களேபரம் எல்லாம் முடிந்தவுடன் டிங்க்சருடன் வந்தார். நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். கைக்குட்டை சுற்றிய விரலைப் பிடித்தபடி வீடு திரும்பினேன். அந்தக் காலத்தில் என் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய். அவர் சம்பளம் 200 அல்லது 300 இருக்கலாம்.

அந்தக் கைக்குட்டை எங்கள் காதலை அழுந்தக் கட்டியது மட்டுமல்ல; அவர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த அவரது உழைப்பின் துளி. அன்பின் பெருங்கடல். அதைத் துவைத்து அயன் செய்தேன். அதில் படிந்துவிட்ட ரத்தக் கறையில் ஒரு எளிய இதயத்தின் உருவம் தெரிவதுபோல் எனக்குத் தோன்றியது. பூஜை செய்யாத குறைதான். அவரது கைக்குட்டையைப் பத்திரமாக மடித்துக் கவனமாக என் பெட்டிக்குள் வைத்தேன். நீண்டகாலம் அது என்னிடம் பத்திரமாக இருந்தது.

https://www.kamadenu.in/news/cinema/33910-17-7.html

Link to comment
Share on other sites

18: ராமகிருஷ்ண பிரேமா!

18

 

பானுமதி அம்மையாரின் நினைவாற்றலை எண்ணி வியப்பு மேலிட்டது. “எப்பவோ நடந்ததை எல்லாம் இவ்வளவு துல்லியமாகச் சொல்லுகிறீர்களே!” என்று அவரிடம் கேட்டேன்.

“எனக்குச் சின்ன வயதிலிருந்தே கிரகித்து உள்வாங்கிக்கொள்ளும் சக்தி அதிகம். என் கணவர்கூட அடிக்கடி, இதையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருக்கே என்பார்!” என்றவர் காதல் நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார்.

“ ரோஜாச் செடியின் முள் கிழித்த மறுநாள் படப்பிடிப்பு இல்லை. அம்மா ஷாப்பிங் போக விரும்பினார். நாங்கள் ஒரு காரில் புறப்பட்டோம். சற்றுத் தள்ளி புரொடக்ஷன் கார் நின்றது. அதை நோக்கி ராமையா, ஹெச்.வி.பாபு, ராமகிருஷ்ணா எல்லோரும் வந்து கொண்டிருந்தார்கள். நான் ராமகிருஷ்ணாவைப் பார்த்தேன்.

இதை அப்பா கவனித்துவிட்டார். அதே நேரம் ஹெச்.வி.பாபு ராமகிருஷ்ணா என்று கூப்பிட்டார். ‘நீ சொன்ன பையன் அவன்தானா?’ என்று அப்பா சட்டென்று கேட்டார். நான் வேறு வழியின்றித் தலையாட்டினேன். அப்பா ராமகிருஷ்ணாவைப் பார்த்தார். அவர் முகம் வாடிவிட்டது.

‘அச்சச்சோ... இந்தப் பையனா? ஆள் இப்படி நோஞ்சானாக இருக்கானே. பழக்க வழக்கங்கள், குணத்தில் இவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், உன் பக்கத்தில் இவனை மாப்பிள்ளையாக வைத்துப் பார்க்கவே பிடிக்கலையே அம்மா..’ என்று அதிருப்தியோடு முணுமுணுத்தார்.

என் இதயம் நின்றே விட்டது. அப்பாவிடம் ஒரு வழக்கமுண்டு. எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கள் பெண்களுக்கு வரன் பார்க்கும் போதெல்லாம் அப்பா ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி சொல்லுவார். ‘பையன் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும்’.

இதே மாதிரி மாப்பிள்ளை எப்படி இருக்கவேண்டுமென்று அவரிடம் ஒரு சாமுத்திரிகா லட்சணப் பட்டியலே இருந்தது. காரில் அப்பா பக்கத்தில் உட்கார்ந்திருந்தாலும் எங்களுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

ஜமீன்தார் வீட்டுச் சம்மந்தம்

ஷாப்பிங்கைப் பெரிய ஈடுபாடு இல்லாமல் முடித்துவிட்டுத் திரும்பினோம். இரவுச் சாப்பாட்டின் போது அப்பா என் கல்யாணப் பேச்சைத் திடுதிப்பென்று எடுத்தார்.

‘என் நண்பரின் பையன் ஒருத்தன் இருக்கான். பெரிய ஜமீன்தார் குடும்பம். பி.ஏ.படித்திருக்கிறான். பார்க்கிறதுக்கு ராமனைப் போல லட்சணமாக இருப்பான். ஆனால், பெண்கள் விஷயத்தில் கிருஷ்ணனைப் போல்தான்! கல்யாணம் பண்ணினால் சரியாகிவிடுவான்.

நீ என்னம்மா சொல்லுகிறாய்?’ என்று என்னைப் பார்த்துச் சட்டென்று கேட்டார். இப்போது இந்தப் பேச்சை எடுப்பானேன்? ராமகிருஷ்ணாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிவைக்க முடியாது என்று மறைமுகமாகச் சொல்லுகிறார். நான் சாப்பாட்டிலிருந்து பாதியில் எழுந்து கை கழுவினேன்.

அப்பா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அந்தப் பையன் பார்க்க லட்சணமாக இல்லாவிட்டாலும் வேலையைச்  சொல்லு. சினிமா வேலை நிரந்தரமானது கிடையாது. இந்த மாதிரி பையனுக்கு ஆசையாக வளர்த்த பெண்ணை கொடுக்கணுமா என்றுதான் யோசிக்கிறேன்’. அம்மா குறுக்கிட்டுச் சொன்னார்.

‘அவளுக்கு என்ன தெரியும்? நீங்க அந்த ஜமீன்தார் பையனையே முடியுங்க. சினிமாவும் வேண்டாம், கினிமாவும் வேண்டாம்! அவ மனசு மாறுவதற்குள் இந்த இடத்தை முடியுங்க’ என்றாள். அப்பாவும் ‘சரி… பிள்ளை வீட்டாரை வந்து பெண் பார்க்கச் சொல்லி எழுதறேன்’ என்று தீர்க்கமாக அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பெண்ணுக்குப் பிழைக்கத் தெரியாது

அப்பாவிடம் நேரடியாகப் பேசத் துணிவு இல்லை. என் தங்கையைத் தூது அனுப்பினேன். ‘கல்யாணம் என்றால் அது ராமகிருஷ்ணனோடுதான். இல்லாவிட்டால் காலமெல்லாம் கன்னியாகவே இருந்து விடுகிறேன்’. எனது முடிவைப் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் எப்போதும் செல்லமாகவே பேசும் அப்பா சொன்னார், ‘என் கண்ணல்ல..

உன் எதிர்காலம் நல்லா இருக்கணும் அம்மா! இதுதான் என் ஆசை!. பையன்கள் விஷயம் வேறே. அவங்க எப்படியாவது பொழச்சுப்பாங்க. ஆனா பொண்ணுங்க கல்யாணத்தைப் பெத்தவங்கதான் ஜாக்கிரதையாய் நல்ல இடமாகப் பார்த்து செஞ்சு வைக்கணும்.

ராமகிருஷ்ணா நல்ல பையன் என்றுதான் கேள்விப்பட்டேன். என்ன படிச்சிருக்கான் தெரியுமா?’ என்றார். நான் அசடுபோல் ‘எனக்குத் தெரியாதே’ என்றேன். அவர் என்னை அடுத்தடுத்து மடக்கிக் கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தார்.

“வீடு, இல்லன்னா சொத்துபத்து ஏதும் இருக்கா?”

“தெரியாது”

“அவரோட ஜாதி என்ன தெரியுமா?”

“தெரியாது.”

“அப்பா அம்மா இருக்காங்களா?”

“தெரியாது”.

அப்பா சிரித்தார்.

எனக்குத் தலைசுற்றியது. இதைப் பற்றியெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவரை உளமாரக் காதலிக்கிறேன் என்பது ஒன்றுதான் எனக்குத் தெரியும். அதுவும் அவருக்குத் தெரியாது.

அப்பா கேட்டதிலும் தப்பொன்றுமில்லை. ஒரு விஷயம் தெளிவானதில் நிம்மதி. என்னவர் பற்றி இத்தனை விஷயங்கள் அவருக்குத் தெரிந்தாக வேண்டும். நான் என்ன செய்வேன்? அவர் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லையே!

காதலின் அசடு

அப்பாவின் கேள்விகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த என் தங்கை, எப்படியோ ராமகிருஷ்ணா பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டுவந்துவிட்டாள். ‘பி.ஏ. வரை படித்திருக்கிறார்!’ பிராமணர். சொல்லிக் கொள்ளும்படியாக எந்தச் சொத்தும் இல்லை! அப்பாவுக்கு ஏதோ அரசாங்க உத்தியோகம்! தாயார் திருவல்லிக்கேணியில் தன் சகோதரி வீட்டில்தான் வசிக்கிறார்’.

தங்கை கொண்டுவந்திருந்த தகவல்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அப்பா, ‘அப்போ நீ அவனை விரும்பற விஷயம்கூட அவனுக்குத் தெரியாது! அப்படித்தானே?’ என்றார். நான் தலையாட்டினேன். ‘ஆக அவனுக்குத் தெரியாமலே அவனைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய்! அட அசடே..!’ என்று சிரித்தார் அப்பா.

ஆமாம் நான் ஒரு முட்டாள்தான்! அவரை நேசிக்க எனக்கு ஏது உரிமை? அவருக்கே தெரியாமல் அவரை நேசிக்கும் இந்தத் துணிச்சல் எனக்கு  எப்படி வரலாம்? அம்மா சொன்னார். ‘ஐயோ பாவம்! அவளுக்கு என்ன வேணும்னு அவளுக்கே தெரியாதுங்க.

பசிச்சா பசிக்குதுன்னு சொல்லத் தெரியாது! உங்களுக்குத் தெரியாமல் அவன் கிட்டே போய் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கோ அப்படீன்னு சொல்லிடுவாளா? வீட்டுக்கு மூத்த பொண்ணு வேறே. அவ கண்ணீர் விட்டா குடும்பத்துக்கு ஆகாது! உங்க இஷ்டம்போல் செய்யுங்க’ என்று சொல்லிவிட்டு தன் கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

இந்த விஷயங்கள் எல்லாம் கண்ணாமணி அம்மா காதுக்கு எட்டிவிட்டன. மறுநாள் மாடியில் வந்து அவரைச் சந்திக்குமாறு அழைப்பு வந்தது. நான் தயங்கியபடியே மாடிக்குப் போனேன்.

‘வாடி பொண்ணே! எல்லா சங்கதியும் தெரிஞ்சு போச்சு! நான் என் கணவரிடம் படத்தின் பெயரை ‘கிருஷ்ண பிரேமா’ என்பதற்குப் பதில் ‘ராமகிருஷ்ண பிரேமா’ என்று வைக்கச் சொல்லிட்டேன்!’ என்று சொல்லிவிட்டுச் டு சத்தம்போட்டு சிரித்தார். நான் வெட்கத்தால் தலை குனிந்தாலும் அழுத்தும் வேதனையால் அவர்முன் கலங்கி நின்றேன்.

(தாரகை ஒளிரும்)

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article28087162.ece

Link to comment
Share on other sites

19: ஏழையின் காதல்!

19

 

பானுமதி அம்மையார் உரையாடலின் நடுவே பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கதையை நிறுத்திய இடத்திலிருந்து கச்சிதமாகத் தொடங்கிவிடுவார். பெரும்பாலும் அவருடைய உதவியாளர் அண்ணாசாமிதான் எங்கள் அருகே தயங்கியபடி வந்து  நிற்பார்.

“ஆடிட்டர் பேசினார்” என்பார், சிலநேரம் “லீவு வேணும்மா” என்பார். அம்மையாரிடம் எந்தச் சலனமும் இராது. சிறிய தலையாட்டல். ஏற்பா, மறுப்பா? அண்ணாசாமிக்கே வெளிச்சம். அவர் முகத்தில் ஏதோ புரிந்துகொண்ட பாவனை தெரியும், போய்விடுவார்.

எங்கிருந்தோ காற்றில் நாகலிங்கப் பூக்களின் நறுமணம் கமழும். அமைதி என்றால் அப்படி ஓர் அமைதி. அமைதிக்கென ஒரு வாசனை உண்டென்றால் அது இப்படித்தான் இருக்க முடியும். அன்றும் அப்படித்தான்.

பானுமதி அம்மையார் “கண்ணாமணி அம்மா என்னைக் கூப்பிட்டு கலாட்டா பண்ணிணார்னு சொன்னேன் இல்லையா? ஒரு முக்கியமான விஷயத்தை அப்பவே சொல்ல மறந்துட்டேன்” என்று தொடங்கினார்.

“கண்ணாமணி ராமகிருஷ்ணாவையும் கூட்டிவர ஆபீஸ் பையனை அனுப்பியிருப்பார் போல. அங்கு எனக்கு முன்பே ராமகிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். என் கையைப் பிடித்து அழைத்துப்போய் அவருக்கு முன்னால் போட்டிருந்த நாற்காலியில் உட்காரவைத்தார் கண்ணாமணி.

மனம்விட்டுப் பேசிய மணாளன்

ராமகிருஷ்ணா என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடி கேட்டார். ‘இதெல்லாம் என்ன அம்மாயி? கண்ணாமணி அம்மா சொல்லித்தான் தெரியும். எனக்குத் தெரியாது’ என்றார்

என்னால் பதில் எதும் பேச முடியவில்லை. கண்ணாமணி ஏன் இப்படிச் செய்துவிட்டார்? அப்பாவுக்குத் தெரிந்தால்…? கடவுளே என்று மனதுக்குள் பதற்றத்துடன் வேண்டிக்கொண்டேன்.

கண்ணாமணி அம்மாவால் எங்கள் மெளனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘இப்படி ரெண்டு பேரும் பேசாமல் இருந்தால் எப்படி? ஏதோ பழங்காலக் கட்டுப்பெட்டி காதல் ஜோடி மாதிரி இருக்கீங்களே..!’ என்றார். அவர் அப்படிக் கூறியதற்கு ‘நான் ஒன்றும் இவரைக் காதலிப்பதாகச் சொல்லவில்லையே என்றார் சிரித்தபடி ராமகிருஷ்ணா.

அவரைச் சடாரென்று நிமிர்ந்து பார்த்தேன். என் சுயமரியாதை தாக்கப்பட்ட உணர்வு! அப்போதுதான் அவர் கண்களில் மின்னிய குறும்புத்தனத்தைக் கவனித்தேன்!. எனக்குப் புரிந்தது, என்னைச் சீண்டிப் பார்க்கிறார்!

‘நல்ல காதலர்கள்தான் போங்க. அவதான் சின்னப்பொண்ணு. நீ தொடங்கலாமே’ என்றார் கண்ணாமணி. ‘ஏன் இப்படிக் களேபரம் பண்றீங்க அம்மா! நானோ ஏழை, இவங்க என்னோடு வந்து சந்தோஷமா வாழ முடியுமா?’ என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்த ராமகிருஷ்ணா, ‘அம்மாயி, உங்க அப்பா, அம்மாகிட்டே என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தீர்மானமாகச் சொல்லிட்டீங்களாமே’ என்று கேட்டார்.

நான் பேசவில்லை. என் கண்கள் பேசின. அவர் கண்கள் அதைப் புரிந்துகொண்டன. ‘இப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டிருந்தா எப்படி? பெரியவங்ககிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்வோம்’ என்றார் கண்ணாமணி.

ராமகிருஷ்ணா சொன்னார் ‘முன் யோசனை இல்லாத முடிவு! நான் ஒரு சாதாரண ஆள். ஒரு சிம்னி விளக்கு மாதிரின்னு வச்சுக்குங்க. பிரகாசமான பெரிய விளக்கு பக்கம் நான் நிற்க முடியுமா? முதல்ல அவங்க அப்பா ஒத்துப்பாங்களா? அம்மாயி, நான் சொல்றதைக் கேளுங்க.

உங்க மனசை மாத்திக்குங்க. நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய பிரச்சினைகளைச் சமாளிக்கணும்’. கண்ணாமணி சட்டென்று குறுக்கிட்டுச் சொன்னார். ‘இதோ பாரப்பா, அவ ஒண்ணும் உன் லெக்சரைக் கேட்க இங்கே வரலை. ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ. இந்த சினிமா ஃபீல்டில் நான் எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன்.

ஆனால், இவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்குக் கிடைக்கமாட்டாள். அப்பா அவளை பூ மாதிரி வச்சு காப்பாத்துறார். உண்மைதான். ஆனா மகாலட்சுமியே வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டும்போது. நீ பெப்பே காட்டிட்டு ஓடிப்போயிடுவாயா?’ கண்ணாமணி பேசுவதைக் கேட்டு சிரிப்பு வந்துட்டுது. இதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள என் காதுகளைத் தீட்டிக்கொண்டேன்.

‘அவங்க மகாலட்சுமி மட்டுமில்லை.. மகா சரஸ்வதின்னும் எனக்குத் தெரியும். கதை எல்லாம் எழுதறாங்க! என்ன ஒண்ணு கோபம் வந்துட்டா, எதிரில் இருப்பவர் கன்னம் பழுத்துடும். நல்ல பெண்தான். இல்லேன்னு சொல்லலையே..’ என்றார். அவரது இந்த வார்த்தைகள் என் உடலைச் சிலிர்க்கவைத்தன.

‘ஒருத்தன் சொன்னானாம் எனக்கு ராஜாவின் மகளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைதான். ஆனா அதுக்கு ராஜா ஒத்துக்கணுமே...! என் நிலைமையும் இதுபோல்தான்! இந்தப் பெண் என்னை மாதிரி ஒரு ஏழையைக் கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டங்களை அனுபவிக்கத் தயார்னா எனக்கு ஆட்சேபனை இல்லை, என்று சொல்லிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தார், பிறகு போய்விட்டார்.

குடிசையா, மரத்தடியா?

‘கருட கர்வ பங்கம்’ படத்துக்காக மேலும் சில காலம் சென்னையில் தங்கும்படி ஆயிற்று. என் பெற்றோர் தங்களை வந்து சந்திக்குமாறு ராமகிருஷ்ணாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். ராமகிருஷ்ணா வந்தார், வழக்கம்போல் வங்காளி பாபு போல் சட்டையும் வேட்டியும் உடுத்தியிருந்தார்.

மணமகன் போல ஜம்மென்று ஒரு கோட் போட்டிருந்தார். தயங்கிபடியே நாற்காலியில் அமர்ந்தார். நான் கதவருகே ஒளிந்துகொண்டு அவரைப் பார்த்தேன். அப்பா திடீரென்று கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

“உங்கள் தகப்பனார் வசதி படைத்தவரா?’

“இல்லை”

“என்ன உத்தியோகம் பார்க்கிறார்”

“இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ்”

“எதுவரை படித்திருக்கிறீர்கள்?’

“பி.ஏ. வரை படித்திருக்கிறேன்”

“சங்கீதம் பிடிக்குமா?”

“பிடிக்கும். ஆனால் பாடத் தெரியாது”

“உங்களுக்கு இலக்கிய அனுபவம் உண்டா? அதாவது கதை,கிதை எழுதுவீர்களா?”

“இல்லை, நான் சினிமாக் கதைகளை உருவாக்குபவன்! படத்துக்கான கதை வசனங்கள் எழுதத் தெரியும்” என்றார் ராமகிருஷ்ணா சிரிப்பை அடக்கிக்கொண்டு.

அப்பா சொன்னார்.

“ஆக, சினிமா சமாச்சாரம் தவிர வேறு ஏதும் தெரியாது?”

“ஆமாம் சார், எனக்கு சினிமாத் துறையில்தான் ஆர்வம். இதற்காகத்தான் என் 18-வது வயதிலேயே சென்னைக்கு வந்துட்டேன். ஹெச்.எம். ரெட்டியுடன் இணைந்து பணியாற்றுகிறேன்”

“அப்பா என்கிற முறையில் என் பெண்ணை நல்ல இடத்தில் கொடுக்க வேண்டும் என்ற கடமை எனக்கு உண்டு. அதனால்தான் உங்களைக் கேள்வி கேட்கும்படி ஆச்சு... தப்பாக எடுத்துக் கொள்ளாதீங்க”

“நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் நினைப்பது போல் உங்கள் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதில் வேறு கெட்டநோக்கம் ஏதும் எனக்கில்லை. விருப்பங்கள் குதிரைகள்.

ஆனால், அதில் பிச்சைக்காரர்களும் சவாரி செய்வார்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வாய்ப்பு வந்தால் விருப்பம் நிறைவேறும்..” என்று புன்னகையுடன் சொன்னார் ராமகிருஷ்ணா. அப்பா ராமகிருஷ்ணாவை வியப்புடன் பார்த்தார்.

“சரி தம்பி, இவ்வளவு தூரம் வந்தபிறகு ஒன்றே ஒன்று கேட்கிறேன். அவளை நடிக்க அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், அவளைப் பாட அனுமதிப்பீர்கள் அல்லவா? ஆந்திர தேசம் முழுவதும் அவள் குரல் ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை”

“நீங்கள் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுப்பதாயிருந்தால் திருமணத்திற்கு பிறகு நான் குடிசையில் வசித்தாலும், மரத்தடியில் வசிக்க நேர்ந்தாலும் அவள் என்னுடன் வாழ்ந்தாகவேண்டும்”.

இப்படிச் சொல்லிவிட்டு அப்பாவின் பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்து வெளியேறினார் ராமகிருஷ்ணா.

நான் எப்படி பேச வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே ராமகிருஷ்ணா பேசினார். அவர் சென்றதும் என் பக்கம்  திரும்பினார்கள், ‘ஆக அவனுடைய சொற்ப சம்பளத்தில் அவனோடு குடிசையிலும் நீ வாழத் தயார் அப்படித்தானே அம்மா?’

“ஆமாம் அப்படித்தான்! நான் ஒரு ஏழ்மையான வாழ்க்கையைத்தான் விரும்புகிறேன். அவரே ஏழைதானே? அவரையே திருமணம்செய்துகொள்வது என முடிவு செய்துவிட்டால் எந்த நிலைமையையும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை!” என்றேன் வைராக்யமான குரலில்.

https://www.kamadenu.in/news/cinema/35750-19.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.