Recommended Posts

விடுதலை வேட்கை கொந்தளிக்கும் ஒரு தேசத்தின் வெறுமனே காற்றில் ஆடும் ஒரு போராளியின் குண்டு துளைத்த சட்டை, விலைமதிப்பற்றது. அது காணும் எண்ணற்ற இதயங்களில் புரட்சியின் விதைகளைத் தூவிச் செல்லும். சே குவேராவின் திறந்த விழிகளும் அங்கே அப்படித்தான் இருந்தன!

p142d.jpg p142e.jpg

தென் கிழக்கு பொலிவியாவின் வாலேகிராண்டேவில், ஒரு பள்ளிக்கூட வளாகத்தில், 1967, அக்டோபர் 9-ம் தேதியன்று குண்டுகளால் துளைக்கப்பட்ட சேகுவேராவின் உடல் கிடத்தப்பட்டது. திறந்துகிடந்த அவரது விழிகளில் இரண்டு நட்சத் திரங்கள் இடையறாது மின்னுவதைப்போல உணர்ந்ததாகச் சொன்னார்கள். தான் இங்கே விதையாகக் கிடத்தப்பட்டுள்ளோம் என்ற அவரது பேருணர்வின் மிச்ச ஒளியாகக்கூட அது இருந்திருக் கலாம்!

இன்றும் பெருநகரச் சாலைகளில் எதிர்ப்படும் ஏராளமான இளைஞர்களின் டி-ஷர்ட்களின்

 

மூலமாக உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் ‘சே’ என்று அழைக்கப்படும் சேகுவேராவைத் தரிசிக்கிறது உலகம்!

யார் இந்த இளைஞர்கள்? சேகுவேராவைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

சேகுவேராவின் முகம் பதித்த ஆடைகளை அணிவதன் மூலம் இவர்கள் என்ன உணர்வைப் பெறுகிறார்கள்? தன் தினசரிச் செலவுகளில் பெரும் சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஒப்புக்கொடுக்கும் இன்றைய நவீன இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும்எதிரானது அல்லவா சேகுவேராவின் எண்ணமும் உணர்வும்?

இந்த வரலாற்று முரண்நகைகூட ஒரு வகையில் சேகுவேராவின் வெற்றியே! எந்த நாடு அவரை முற்றா கத் தீர்த்துக்கட்டியதாக நினைத்ததோ, அதே தேசத்தில் எண்ணற்ற போஸ்டர்களிலும், டி-ஷர்ட்களிலும், சாவிக் கொத்துகளிலும், காபிக் கோப்பைகளிலும் அவரை அச்சடிக்கவைத்து, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஒருவனை நம்மால் வேறு எப்படிக் கணிக்க முடியும்?

1928, ஜூன் 16... தென் அமெரிக்கக் கண்டத்தின் பணக்கார நாடான அர்ஜென்டினாவில், ரொசாரியோ (Rosario) எனும் நகரில், ஒரு வீட்டின் கூரைகளில் சிறிய மின்விளக்குகள் மினுங்கின. அப்போதுதான் பிறந்த ஒரு ஆண் குழந்தையின் சத்தமும் சந்தோஷச் சிரிப்பொலி களும் அந்த வீட்டிலிருந்து கேட்டன. ஸ்பானிய - ஐரிஷ் இனத் தம்பதிக்கு அன்று ஒரு தலைமகன் பிறந்தான்.நிலவுடைமை வம்சத்தைச் சேர்ந்த அந்தத் தம்பதியினர், தங்களது இருவரின் பெயரையும் இணைத்து ஒரு தொடர்வண்டி ரயில் போல நீளமாக ‘எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா’ எனப் பெயரிட்டனர். ஆனால், பின்னாட்களில் கியூபா மக்களின் பாச மொழியில் சகா, தோழன் எனப் பொருள்படும் வகையில், ‘சே’ என ஒற்றைச் சொல்லில் அவர் கம்பீரமாகவிளிக்கப்பட்டதே வரலாறு!

p142c.jpg

‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் செலியா, ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையைக்குளிப்பாட்ட அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின்நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது.

வாழ்நாள் முழுக்க அந்த நோய் சேகுவேராவை உருக்குலைத்தது.பின்னாளில் போர்க் காலங்களில், காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்தபோது ஆஸ்துமாவால் அவர் பட்ட வேதனைகள் கொஞ்ச நெஞ்சம் அல்ல. வேறொரு வகையில் சேகுவேராவுக்கு ஆஸ்துமா ஒரு பரிசு என்று கூடக் கருதலாம். உளவியல்ரீதியாகப் பார்க்கும்போது, சிறு வயதிலேயே பீடித்த அந்தக் கொடிய நோயின் மனவாதையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் விதமாகவே, அசாத்திய வீரனாகவும் கட்டற்றஆற்றல் கொண்டவராகவும் தன்னைக் கற்பனை செய்யத் தூண்டியிருக்குமோ அது என்று தோன்றுகிறது. ஏனெனில், ‘சே’வின் எல்லாத் தகுதிகளுக்கும் பின்னாலிருந்து செயல்படுத்தியது அவரது உடலிலிருந்தும் மனதிலிருந்தும் பீறிட்ட அந்தக் கட்டற்ற ஆற்றல்தான்.

அதுதான் சிறுவயதில் முரட்டுத்தனமான ரக்பி விளையாட்டில் அவரை ஈடுபடுத்தியது. ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார் ‘சே.’ பிற்காலத்தில் தான் மேற்கொண்ட கெரில்லா யுத்த காலங்களில், எதிரிகளைத் தன்னிச்சையாக செயல்படவைத்து, அவர்கள் வலுவிழக்கும் தருணத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கி முற்றாக நிலை குலையவைக்கும் தந்திரத்துக்கு இந்த விளையாட்டே அவருக்குப் பெரும் முன்னோட்டமோ!

p142b.jpg p142a.jpg

சிறுவயதிலிருந்தே அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் இதே தந்திரங்களைக் கொண்டுஇருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.

அக்கால கட்டங்களில் ‘சே’வின் தந்தை எர்னஸ்டோ கட்டடங்களைக் கட்டித் தரும் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். இதனால் அவரது வீட்டைச் சுற்றி எண்ணற்ற கூலித் தொழிலாளிகளின் ஏழை வீடுகள் இருந்தன. அவை, அட்டைகளாலும் தகரங்களாலும் நிர்மாணிக்கப்பட்ட குடிசைகள். அந்த வீடுகளில் இருந்த குழந்தைகள்தான் ‘சே’வின் விளையாட்டுத் தோழர்கள். ‘சே’விடம் இயல்பாகவே ஒரு தலைமைப் பண்பு உருவாகிவந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் அவர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பார் ‘சே’. மாலையில் மீண்டும் தன் பணக்கார வீட்டுக்குத் திரும்பியதும், பகல் முழுக்கப் பார்த்த ஏழைச் சிறுவர்களின் வாழ்வை தன் வீட்டுச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கேள்விகள் முளைத்தன. அந்த ஏழைக் குழந்தைகளின் வாழ்வு நிலை அவரைச் சங்கடப்படுத்தியது. தனக்கும் அவர்களுக்குமான இடைவெளிக்கான காரணம் என்ன, அதை எப்படி நம்மால் சமப்படுத்த முடியும் என்பது குறித்து அந்தப் பிஞ்சு இதயம் யோசித்திருக்கக்கூடும். இப்படியெல்லாம் சிந்தனை வயப்பட்ட ஒருவரால் மட்டுமே அதற்கான விளக்கவுரை எழுத, பின்னாட்களில் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடியும்.

கல்வியைப் பொறுத்தவரை கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மிகச் சாதாரண மனிதராகவே இருந்தார் ‘சே’. இசையும் நடனமும் இன்னும் மோசமாக அவரது திறமைக் குறைவை அவருக்கு உணர்த்தியது. மாறாக, இலக்கியமும் வரலாறும் அளவுக்கதிமாக வசீகரித்தன. நோபல் பரிசு பெற்ற இலக்கியங்களை சிறு பருவத்திலேயே தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்தார்.

அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு. ஜாக் லாண்டன், எமிலியோ சல்காரி, ஜூல்ஸ் வெர்ன், சிக்மண்ட் ஃப்ராய்ட், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போன்றவர்களைத் தன் கல்லூரி படிப்பின் துவக்க நாட்களுக்குள்ளாகவே வாசித்திருந்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது. பிறப்பில் ஐரோப்பிய ஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ‘சே’வின் நடவடிக்கை களில் ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தன. புரட்சியாளராக அவர் பின்னாளில் உருவெடுத்த போது கட்டற்ற ஆற்றலைக் கட்டுப்படுத்தி திட்டமான ஒரு பாதையில் அவரை நெறிப்படுத்த, இது பெரிதும் உதவியாக இருந்தது.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவப் படிப்பை ‘சே’ தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. தன் பாட்டி இறப்பதற்குக் காரணமாக இருந்த புற்றுநோய்க்கு மாற்று கண்டு பிடிக்கும் பொருட்டு மருத்துவம் பயின்றார் என்பதும் அவற்றில் ஒன்று.

தனது மருத்துவப் படிப்பு காலத்தில் ‘சே’ வசீகரத்தின் வசந்தத்தில் இருந்தார். கைகளை விரித்துp142.jpgஉற்சாகக் குரல் எழுப்பி நண்பர்களிடம் நாயகனாக வலம் வந்தார். அப்போது அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது.

தன் நண்பர்களைச் சந்திக்க, ஃப்யூனஸ் அயர்ஸிலிருந்து 78 கி.மீ தொலைவில் இருந்த கோர்டோபா எனும் நகரத்துக்கு அடிக்கடி பயணித்தார். அக்காலங்களில் அவரது வசீகரம், உயர் அழுத்த மின்சாரம் போல பெண்களின் இதயங்களைப் படபடக்கவைத்தது. கொச்சையான சிரிப்பும், கட்டற்ற சுதந்திரத்தைப் பறைசாற்றும் பின் தள்ளப்பட்ட கேசமும், அசிரத்தையான உடைகளும், அதிகாரத் தைக் கேலி செய்யும் பாவனைகளுமாக எதற்கும் வசப்படாத வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார் ‘சே’! இருந்தும், இறந்தும் பெற்ற எல்லாப் பெருமைகளுக்கும், அவரது இந்தக் கட்டற்ற வசீகரமும் ஒரு காரணம். புறத் தோற்றத்தைத் தாண்டி அவரது கண்ணில் பிரகாசித்த ஒளிக்கு அவரது ஆன்ம விசாலமே காரணமாக இருந்தது.

1960 மார்ச் 5-ம் தேதி, ஹவானாவின் வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான ஓர் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஆல்பர்ட்டோ கோர்டா (Alberto korda) என்பவர் எதேச்சையாக எடுத்த ‘சே’வின் புகைப்படம் பின்னாளில் 20-ம் நூற்றாண்டை அடையாளப் படுத்தும் மிகச் சிறந்த புகைப்படமாகத் தேர்ந் தெடுக்கப்பட்டது ஒன்றே இதற்குச் சான்று!

1951-ல் மருத்துவப் படிப்பு இன்னும் முழுமையாக முடிந்திராத தறுவாயில் ‘சே’வுக்கும் அவரது நண்பர் உயிர் வேதியியல் மாணவர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுக்கும் (Alberto Granado) ஒரு வித்தியாசமான ஆசை தோன்றியது. தென் அமெரிக்கக் கண்டம் முழுக்க மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை!

அதுதான் உலகத்தின் மிக உன்னதமான ‘மோட்டார் சைக்கிள் டைரி’!

https://www.vikatan.com/anandavikatan/2007-aug-15/special-article-2/72882.html

Edited by பா. சதீஷ் குமார்

Share this post


Link to post
Share on other sites

பகுதி 2

நண்பர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுடன் ‘சே’ மோட்டார் சைக்கிள் பயணம் புறப்பட்டார். இருவரின் விருப்பத்துக்கும் பின்புலமாக இருந்து தூண்டியது அவர்களின் மருத்துவப் படிப்பு.

p117.jpgதென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.

சித்தார்த்தன், புத்தன் ஆன கதை போல பயணம்தான் ‘சே’வின் பாதைகளைத் தீர்மானிக்கும் ஆரம்பமாகவும் இருந்தது. வெவ்வேறான நிலப்பரப்புகளிடையே பய ணித்து தங்களது கலாசார அறிவை வளர்த்துக்கொள் வதற்கும் அது உதவும் என்று அவர்கள் நினைத்தனர். 500 சிசி நார்டன் மோட்டார் சைக்கிளில், சொற்ப ஆடை களும், மனது நிறையத் தன்னம்பிக்கையுமாக, 1951 டிசம்பர் 29-ல் புறப்பட்ட அந்தப் பயணம், ‘சே’வின் வாழ்க்கையைத் திசை திருப்பியது.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணக் குறிப்புகள் தான், ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்ற பெயரில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட பிரபல புத்தகம்.

 

அப்போது ‘சே’வுக்கு வயது 23. தோழர் கிரனாடோவுக்கு 29. இளமையின் காற்று தழுவிக்கொண்டு இருந்த ஒரு குளிர் இரவில், துவங்கியது பயணம்.

காலத்தை உணர்தல் என்பது அறிவின் மூலமாக நிகழ்வதன்று, அது புலன்களின் வழியாக உணர்வது. 23 வயதில் மோட் டார் சைக்கிளில் ஏறக்குறைய 10,000 கி.மீ. பயணம் செய்யும் அவரது துணிச்சல் நமக்கு இதைத்தான் கற்றுத் தருகிறது. எண்ணற்ற மலைகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள் இவற்றினூடே நிகழ்ந்த அந்தப் பயணம் பல்வேறான அனுபவங்களைக்கொண்டு இருந்தது.

உழைப்பாளிகள், உழைப்பைச் சுரண்டு பவர்கள், தொழு நோயாளிகள், காவலர்கள், அறிவுஜீவிகள், முட்டாள்கள், அடிவருடிகள், பண முதலைகள், பராரிகள், திருடர்கள் மற்றும் எண்ணற்ற காதலிகள் என வெவ் வேறான மனிதர்களையும் அனுபவங்களை யும் தந்த அந்தப் பயணத்தில் ‘சே’வினுடைய ஆஸ்துமாவும் தன் பங்குக்கு அவரைப் பெரிதும் இம்சித்தது.

சிலி, பெரு, கொலம்பியா என நீண்ட அந்தப் பயணம் ஏறக்குறைய ஆறு மாதங் களைக் கடந்திருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச் சென்று, அவர்களின்p118.jpgதோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான உணர்ச்சிப் பேரலைகள்!

இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

சுற்றுப்பயணம் முடிந்ததும், மனம் முழுக்க வேதனைகளைச் சுமந்தவராக அர்ஜென்டினா திரும்பினார். ஒருவித குற்ற உணர்ச்சியில் பீடிக்கப்பட்டவராக இருந்தார் ‘சே’.

1953-ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும், சே அங்கிருக்கப் பிடிக் காமல், ஒரு நண்பரின் ஆலோசனை யில்பேரில், குவேதமாலாவுக்குப் பணி நிமித்தம் சென்றார். ஏற்கெனவே அவருக் குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. அப்போது குவேதமாலாவை ஆண்டு கொண்டு இருந்த அர்பான்சோ என்னும் கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக் கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம். ‘சே’, அங்கிருந்த கம்யூ னிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதி ரான வேலைகளில் ஈடுபடத் தொடங் கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது.

p119.jpg

இக்காலகட்டங்களில் கம்யூ னிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந் தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயி களிடம் குவேதமாலா அரசு, ஆயுதங் களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்கா வின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏ-வின் பார்வைக்கு இலக்கானார். பாது காப்புக்காக அர்ஜென்டினா தூத ரகத்தில் தங்க நேரிட்டது.

இச்சமயத்தில், அவரது எண்ணங் களால் ஒரு கியூபா போராளி வசீகரிக் கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த ஃபொலோன் சியோ பாடிஸ்ட் டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது. காஸ்ட்ரோ சிறை பிடிக்கப்பட்டு, பின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.

நிக்கோலோபஸுக்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சி யில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

p120.jpg

1955, ஜூலை மாதம், ஒரு குளிர்ந்த இரவில் மெக்ஸிகோ நகரத்தின் வீதியன்றில் மரியோ ஆன்டோ னியோ என்பவரின் வீட்டு முன் வந்து நின்ற காரிலிருந்து, பின்னாளில் புகழ்மிக்க தலைவராக உருவெடுத்த ஃபிடல் காஸ்ட்ரோ தன் சகோதர ருடன் இறங்கினார். வீட்டினுள்ளே அவர்களுக்காகக் காத்திருந்த சே குவேரா எனும் 27 வயது இளைஞன் தன் வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு கைகுலுக்கலுக்காக காத்திருந்தார்.

அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது.

சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட் ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது... சக்திகள் இடம் மாறின!

https://www.vikatan.com/anandavikatan/2007-aug-22/special-article-2/72834.html

Edited by பா. சதீஷ் குமார்

Share this post


Link to post
Share on other sites

பகுதி 3

p64c.jpg‘‘உ ன் முன் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்!’’ -இதுதான் சே குவேரா!

கியூபா... குட்டித் தீவு. வட அமெரிக்காவுக்குக் கீழே கரிபியக் கடல்வெளியில், கரும்புக்காடாக விரிந்துகிடக்கும் அழகு தேசம்.

பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி! ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பிற்பாடு, ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர். கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.

1890-ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய, ஸ்பானிஷ் - அமெரிக்க

 

யுத்தம் தொடங்கியது. 1902-ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. திருவாளர் நல்லவராக வந்த அமெரிக் காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதி யாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப் பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது.

பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங் கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?

பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் ‘சே’ - காஸ்ட்ரோ சந்திப்பு!

ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.

அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு p64b.jpgமுற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

‘கால்கள்தான் என் உலகம்’ என ‘சே’ ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். ‘என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்’ எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், ‘கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்’ என அழுத்தமாகக் கூறியிருந்தார் ‘சே’. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26-ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.

1957, ஜனவரி 17-ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் ‘சே’ என அழைத்தனர். கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் ‘சே’. ‘‘சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் p64a.jpgகொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’ போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. பின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.

1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது. ‘டைம்’ இதழ் ‘சே’ அட்டைப்படத்துடன் ‘புரட்சி யின் மூளை’யென கட்டுரை எழுதியது.

1959, பிப்ரவரி 16-ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் தொழிற்துறை அமைச் சராகவும் ‘சே’ பதவி வகித்தார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

p64.jpg

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம்.

அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’.

சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ!

https://www.vikatan.com/anandavikatan/2007-aug-29/special-article-2/72754.html

Share this post


Link to post
Share on other sites

பகுதி 4

p70d.jpg

 லகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.

‘சே’வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ-வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் ‘சே’வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் ‘சே’தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.

விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த ‘சே’, சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற

 

இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா தாரரீதியாகப் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

மூன்று மாத - கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத -பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ‘சே’வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.

p70e.jpg

‘சே எங்கே?’ - பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சே -காஸ்ட்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் ‘சே’ ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது ‘சே’வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு. இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!

உண்மையில் ‘சே’ அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் ‘சே’வை நிறுத்த முடியவில்லை. ‘மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது’ என ‘சே’ காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.

‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!

‘சே’வை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ-வுக்கு துப்பு கிடைத்துவிடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு ‘சே’ சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் ‘சே’வை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில், ’சே’வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா p70c.jpgரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965-ல், பொதுமக்கள் முன்னிலையில் ‘சே’ தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் ‘சே’ கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார்.

‘சே’, காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி ‘சே’வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.

அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, ‘சே’ தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.

‘சே’வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில், தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. ஆனால், அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது.

தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.

1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக்p70b.jpgகாட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார். மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00... ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ-வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் p70a.jpgபறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00... ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ-விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00... ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.

நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ - இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.

அக்டோபர் 18.... கியூபா... ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.

p70.jpg

இறந்தபோது ‘சே’வுக்கு வயது 40. உலகம் முழுக்க ‘சே’வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் ‘சே’ குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் ‘சே’ குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், ‘பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!’ என மகுடம் சூட்டினார்.

நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற ‘சே’வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர்.

கியூபா அரசாங்கம் ‘சே’வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளா கவும், பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியது. சான்டா கிளாரா எனும் நகரில் ‘சே’வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.

கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?

‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப் போல இருப்போம்!’’

அடுத்த நாயகன் சார்லி சாப்ளின்!

https://www.vikatan.com/anandavikatan/2007-sep-05/special-article-2/72627.html

 

Share this post


Link to post
Share on other sites

பகுதி 5

 • சார்லி சாப்ளின்
 

இரண்டாம் உலகப்போர்... இருபதாம் நூற்றாண்டின் இருள் சரிதம் அது. உலகமெங்கும் யுத்தச் சத்தத்தைக் கிளப்பியபடி ரத்த வெறி பிடித்த ஓநாயாக வலம் வந்தான் அடால்ஃப் ஹிட்லர்.

‘இனங்களைத் தூய்மைப்படுத்துதல்’ என்ற பெயரில் லட்சக்கணக்கான யூதர்களை, கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தான். ஐரோப்பாவே பிணக் காடாக மாறியது. வரலாறு அதுவரை பார்த்தறியாத பெரும் தீய சக்தியாக விஸ்வரூபமெடுத்து, உலகமே ஜெர்மனியாக வேண்டும் என்ற வெறியில் வேட்டை யாடித் திரிந்தான் ஹிட்லர்.

p92e.jpg

இச்சூழ்நிலையில்தான்... 1940-ல் வந்தது அந்தத் திரைப்படம்.

‘தி கிரேட் டிக்டேட்டர்’. சார்லி சாப்ளின் இயக்கி நடித்திருந்தார்.

ஹென் கோல் எனும் சர்வாதிகாரியாக ஹிட்லரைச் சித்திரித்து, இனவெறியையும் மனித குலத்துக்கு விரோதமான அவனது கொடூர புத்தியையும் கடுமையாகக் கிண்டலடித்த படம். ‘தீய சக்திகள் அழியும். மனித குலம் உய்வுறும். அன்பும் மனித நேயமும் மக்களிடையே தோன்றி அமைதியும் சாந்தியும் மீண்டும் உலகில் தவழும்!’ என அகிம்சையின் குரலாக உலக மக்களுக்கு நம்பிக்கையை விதைத்த படம்.

படம் பற்றிய தகவல் ஹிட்லருக்கு வந்தது. இருட்டில் தனியாளாக ஹிட்லர் மட்டும்

 

அமர்ந்திருக்க, படம் திரையிடப்பட்டது. ஹிட்லர் மீண்டும் படத்தைத் திரையிடச் சொன்னான். மீண்டும்... மீண்டும்... மூன்று நாட்கள் இடைவிடாமல் படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தானாம் ஹிட்லர்.

அப்படி, தான் வாழ்ந்த காலத்துக்கு உண்மையாக இருந்து ஒட்டுமொத்த உலகின் பிரதிநிதியாக தனது கலையை வெளிப்படுத்தியிருந்தது சாப்ளினின் மகத்தான சாதனை!

இன்று உலகக் குழந்தைகளின் சந்தோஷத்தைப் பிரதிபலிக்கும் ஒரே அடையாளமாக இருப்பது கோமாளிக் கனவான் தோற்றத்தில் இருக்கும் சாப்ளினின் உருவம்தான்.

இத்தனை சாதனைகளைத் தனது வாழ்நாளில் எட்டிய அந்த மகத்தான கலைஞனின் ஆரம்ப கால வாழ்க்கை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வேதனைகள் நிரம்பியது. மானுடத்தைச் சிரிக்கவைத்த சாப்ளினின் சொந்த வாழ்க்கையோ சோகங்களில் சுழன்றது.

இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ கதியற்று பிளாட்ஃபாரங் களில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களைப் போலத்தான் அன்று லண்டன் மாநகரத் திலும் ஏழைகள் பலர்p92.jpgநடைபாதைகளில் வசித்து வந்தனர். நாடு பிடிக்கும் வெறியில் உலகம் முழுக்க தன் ஆதிக்கத்தைப் பரப்பி வந்த இங்கிலாந்தின் விக்டோரியா மகா ராணிக்கு, தன் சொந்த நாட்டில் தலைவிரித் தாடிய ஏழ்மையையும் வறுமையையும் கவனிக்க நேரமில்லை.

அன்றைய சூழலில் லண்டன் மாநகரமே பணக்காரர்களும் பிச்சைக்காரர்களுமாக ஒரே நேரத்தில் இருவேறு கோலங்களில் காணப்பட்டனர். மக்களின் வாழ்நிலை விநோதமாக இருந்தது. இளம் பெண்கள் தெரு முனையில் நின்று பூவிற்றுக்கொண்டி ருந்தனர். ஆண்கள் சிலர் பேக் பைப்பர் போன்ற வாத்தியக் கருவிகளை இசைத்து யாசகம் கேட்டனர். பிளாட்ஃபாரங்களில் அழுக்கு மூட்டைகளுடன் படுத்துக்கிடந் தனர். இசை அரங்குகளின் முன் வாயிலில் நெருப்பு ஊதி வித்தை காட்டுபவர்களும், பயில்வான்களும், தலையில் குரங்கு வைத்து குழல் ஊதி வேடிக்கை காட்டுபவர்களும், நடனக் கலைஞர்களும் மக்களை மகிழ்வித்து காசு சம்பாதித்தனர். நாடு முழுக்கத் தலைவிரித்தாடிய இந்தப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க மக்கள் மதுக்கூடங்களை நாடினர். மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது மதுவும் இசையும்.

மது விடுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மக்களின் தரத்திற்கேற்ப இந்த மதுக்கூடங்கள் பல்வேறாக இருந்தன. பணக்காரர்களின் மது விடுதிக்குள் உயர்ந்த மேட்டுக்குடிp92a.jpgஇசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஏழைகளின் மது விடுதிக்குள் பாவப்பட்ட கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன. தோற்றத்தில் மட்டும்தான் அவர்களிடம் வறுமை இருந்ததே தவிர, திறமையில் அவர்கள்தான் பணக்காரர்கள். குடிகாரர்கள் மேடைக்கு வீசி எறியும் சொற்பப் பணமே அவர்களின் வருமானம்.

அவர்களில் ஒரு பெண் ஹென்னா. அப்போது அவளுக்கு 16 வயது. இனிமையான குரல் வளமும் வசீகரமான தோற்றமுமாக ஹென்னா ஓர் ஏழைப் பட்டாம்பூச்சியாக விடுதிகளில் வலம் வந்தாள்.

லண்டன் வீதிகளில் ஜட்கா வண்டிகளில் தொப்பி அணிந்து வாயில் சுருட்டு புகைய இறங்கும் கனவான்களைப் பார்க்கும் ஹென்னாவுக்கு தனக்கும் இதுபோல ஒரு கனவான் கிடைக்க மாட்டானா எனக் கனவுகள் முகிழும். சில நாட்களிலேயே அவளுக்கும் ஒரு கணவன் கிடைத்தான். ஆனால், அவள் கனவு கண்டது போல இல்லை அவன். சிட்னி என்ற மகனைத் தந்துவிட்டு அவன் காணாமல் போனான். இந்தச் சமயத்தில் விடுதிகளில் புகழ்பெற்ற பாடகியாக இருந்ததால் இசை ஹென்னாவின் துயரத்தைப் போக்கியது.

இந்தச் சமயத்தில்தான் ஹென்னாவின் வாழ்க்கையில் பிரவேசித்தான் சார்லஸ். நல்ல பாடகன். அவனது குரல் வளத்தில்தான் ஹென்னா மயங்கினாள். அவன் ஒரு குடிகாரன் எனத் தெரிந்தும் அவனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டாள். அதன் பலனாக உலகின் ஒப்பற்ற நட்சத்திரம் ஒன்று ஹென்னா வயிற்றில் கருவாக உருக்கொண்டது.

1889-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் நாள் இரவு 8 மணி ... அந்த நட்சத்திரம் குழந்தை உருவில்p92b.jpgஹென்னாவின் வயிற்றிலிருந்து பூமியை எட்டிப் பார்த்தது.

‘சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினர்.

அடுத்த நூற்றாண்டையே அந்தக் குழந்தை தன் கலையுணர்வால் கட்டி ஆளப்போகிறது என அப்போது யாருக்கும் தெரியவில்லை.

குழந்தை பிறந்த அடுத்த வருடமே சார்லஸ், ஹென்னாவை விட்டுப் பிரிந்து சென்றான். அவனது குடிப் பழக்கம்தான் இருவரது வாழ்க்கைக்கும் பிளவை ஏற்படுத்தியிருந்தது. ஹென்னாவுக்கு குழந்தைகளே உலகமானது.

இரண்டு குழந்தைகளைப் பெற்றதன் காரணமாக அவள் இளமையின் வசீகரம் காணாமல் போயிருந்தது. இதனால் விடுதிகளில் பாட அவளுக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சட்டென அவளது வாழ்க்கைக்குள் கருமேகம் சூழ்ந்தது. இதனால் வீட்டை மாற்றினாள். வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை நோக்கிய சாலையில் ஒரு மது விடுதிக்கெதிரே அவர்களது புதிய வீடு இருந்தது. வெளிச்சமற்ற குறுகலான சிறு அறைகள். வருமானத்துக்காக ஹென்னா அருகில் இருந்த தேவாலயத்துக்குச் சென்று அவர்களிடமிருந்து துணிகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து தைத்துக்கொடுப்பாள். பெரிதாக வருமானம் இல்லையென்றாலும் ஓரளவுக்கு வறுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்தது.

ஒருநாள் சாப்ளினைத் தன்னோடு சர்ச்சுக்கு ஹென்னா அழைத்துச் சென்றிருந்தாள். இயேசு கிறிஸ்துவின் சிலையைப் பார்த்து, ‘யார் இவர்?’ எனக் கேட்டான் சாப்ளின். அன்று இரவு உறங்கும் முன் இயேசுவின் கதையைத் தன் மகனுக்குச் சொல்ல ஆரம்பித்தாள் ஹென்னா. ‘நீயும் அது போல் மக்களின் நன்மைக்காக மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும் சாப்ளின்.p92d.jpgஅதற்கு நீ அனைவரையும் நேசிக்க வேண்டும். அன்பும் கருணையும்தான் நீ கடைசிவரை இறுகப் பற்றியிருக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள். அதற்காக நீ எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இரு’ என ஹென்னா அந்த இருண்ட அறையின் மெழுகுவத்தி வெளிச்சத்தில் சொன்ன வார்த்தைகள் சிறுவன் சாப்ளினின் மனதுக்குள் ஆழமாகப் பதிந்தன.

நெருக்கடி மிகுந்த காலங்களில் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், ‘ஏன் இப்படிச் சிரமப்படுகிறாய்? அரசாங்கம்தான் ஏழைகளுக்கு அநாதை விடுதி கட்டித் தந்திருக்கிறதே. அதில் உன் குழந்தை களைச் சேர்க்க வேண்டியதுதானே?’ என அறிவுறுத்துவார்கள். ஆனால், ஹென்னா தன் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்த விடுதிக்குள் மட்டும் சேர்ந்திடக் கூடாது என உறுதியாக இருந்தாள். மீண்டும் மீண்டும் மது விடுதிகளுக்குச் சென்று பாடுவதற்கான வாய்ப்பு கேட்டுப் போராடினாள். பலர் மறுத்த பின், கடைசியாக அவளுக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது. குழந்தை சாப்ளினை அழைத்துக்கொண்டு மறுநாள் அந்த விடுதிக்குப் பாடச் சென்றாள். அன்று கிடைக்கும் வருமானத்தில் சாப்ளினுக்குப் பிடித்தமான கேக்குகளை வாங்கித் தருவதாக அவனைச் சந்தோஷப்படுத்தினாள்.

விடுதியில் மேடையிலேறியதும் ஹென்னாவுக்குக் குரல் கட்டியது. அவளால் பாட முடியவில்லை. கண்ணீர் முட்டியது. விடுதியில் அன்று பார்த்து கூட்டம் அதிகமாக இருந்தது. குடிகாரர்கள் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். மேடையில் பாட முடியாமல் நிர்க்கதியாக நின்ற ஹென்னாவைப் பார்த்து, ‘வெளியே போடி... வெளியே போடி’ எனக் கூச்ச லிட்டனர். விடுதி நிர்வாகி, மேடையிலிருந்து அழுதுகொண்டு இறங்கிய ஹென்னாவைக் கடுமையாகத் திட்ட ஆரம் பித்தார்.

p92c.jpgஆறு வயதே நிரம்பிய சாப்ளின் என்ன நினைத்தானோ, சட்டென மேடையில் ஏறினான். அதுவரை அங்கே கூச்சலிட்டுக்கொண்டு இருந்த குடிகாரர்கள் மேடையில் ஒரு சிறுவன் நிற்பதை, ‘இவன் என்ன செய்யப் போகிறான்?’ என்று வியப்பில் வேடிக்கை பார்த்தனர்.

சாப்ளின் தன் அம்மா அதுநாள் வரை கற்றுத்தந்த ஒரு பாடலைப் பாடிக்கொண்டே, தன் பிஞ்சுக் கைகளையும் கால்களையும் அசைத்து நடனமாடத் துவங்கினான். கூச்சலிட்ட கூட்டம் சட்டென சாப்ளினின் வேடிக்கையான நடனத்தைப் பார்த்து உற்சாகம் கொண்டது. இரண்டொரு நிமிடத்தில் அரங்கம் கைத்தட்டல்களாலும் விசில்களாலும் அதிர்ந்தது. அழுதுகொண்டு வெளியே நின்றிருந்த ஹென்னா சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்க்க, சார்லி சாப்ளின் தன் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தி, பார்வையாளர்களை வசீகரித்துக்கொண்டு இருந்தான். மேடையை நோக்கி சில்லறைகள் சீறிப் பறந்தன. சாப்ளின் சட்டென தான் பாடுவதை நிறுத்திவிட்டு, மேடையில் அங்கு மிங்குமாக ஓடி ஓடி சில்லறைகளைப் பொறுக்க ஆரம்பித்தான். கூட்டம் அதற்கும் சிரித்தது. ‘‘ஏய் பாடுடா’’ என சிலர் கூச்சலிட்டனர். ‘‘நான் சில்லறையை பொறுக்கிக்கிட்ட பிறகுதான் பாடுவேன். என்னால் ஒரே நேரத்தில் எப்படி ரெண்டு வேலை செய்ய முடியும்?’’ என பெரிய மனிதன் தோரணையில் அவன் சொன்னதைக் கேட்டு, அதற்கும் கூட்டம் கைத்தட்டி ரசித்தது.

மகனைப் பார்த்துக் கண்ணீர் மல்கிய ஹென்னா, ஓடிப் போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தாள். அவளிடமிருந்து விலகிய சாப்ளின், மீண்டும் கூட்டத்தின் முன்பு தன் தாய் பாட முடியாமல் தொண்டை கட்டித் தவித்ததை நடித்துக்காட்ட, அரங்கு அதிர்ந்தது. அதுதான் ஹென்னா மேடையிலேறிய கடைசி நிகழ்வு. ஒரு மகத்தான கலைப் பயணத்தின் முதல் நிகழ்வும் அதுவே!

https://www.vikatan.com/anandavikatan/2007-sep-12/serials/72728.html

Edited by பா. சதீஷ் குமார்

Share this post


Link to post
Share on other sites

பகுதி 6

 

p39b.jpg தைபடும் பந்துதான் உயரத்தில் எழும்!

வாழ்வின் விநோதமான விதிகளில் இதுவும் ஒன்று. அவமானங்களாலும் புறக்கணிப்புகளாலும் வதைபடும் பிஞ்சு இதயங்கள்தான் பிற்காலத்தில் சரித்திரங்களை உருவாக்கும் சாதனை மனிதர்களாக உருவெடுக்கின்றனர்.

 

சிறுவயதில் வேதனைகளுக்குள்ளாகி தாழ்வு மனப்பான்மை கொள்ளும் இதயமானது, வளர வளர மற்றவர்களின் முன் தன்னை முக்கியத்துவம் நிறைந்தவர்களாகவும் திறமைசாலிகளா கவும் காண்பித்துக்கொள்ள விரும்பும். சாப்ளினின் ஆரம்பகால வேதனைகளும், பிற்காலச் சாதனைகளும் உணர்த்தும்உளவியல் ரீதியான பேருண்மை இது!

அன்று கடைசியாக ஹென்னா, மேடையில் குரல் உடைந்து பாட முடியாமல் அவமானப்பட்ட தினத்திலிருந்தே தன் திறமையின் மீது அவளுக்கு இருந்த மிச்சசொச்ச நம்பிக்கைகளும் தூள்தூளானது. அன்று சாப்ளின் சட்டென மேடையேறிப் பார் வையாளர்களைச் சந்தோஷப்படுத்தினாலும், அது ஒரு தற்காலிகத் தீர்வுதான் என்பதை ஹென்னா அறிவாள். வறுமையின் கொடிய கரங்கள் மீண்டும் அவளையும் குழந்தைகளையும் இறுக்க ஆரம்பித்தன.

 

வீட்டிலிருந்த பொருட்கள் அடகுக் கடைக்கு இடம்பெயரத் துவங்கின. இனி கடையில் அடகு வைக்க எந்தப் பொருளுமற்று வீடே வெறிச் சோடிவிட்ட சூழலில், வேறு வழியே இன்றி, சிட்னியை வேலைக்கு அனுப்பினாள் ஹென்னா. தன் குழந்தைகளைத் தரமான பள்ளிக்கு அனுப்பி அழகு பார்க்க ஆசைப்பட்ட வளுக்கு, பத்து வயதில் மூத்த மகனை வேலைக்கு அனுப்பவைத்தது விதி!

சொற்ப வருமானம்தான் சிட்னிக்கு. பேருந்துகளில் ஏறி இறங்கி, அன்றைய தினசரிகளை கூவிக் கூவி விற்கும் பேப்பர் பாய் வேலை. ஒரு நாள் சிட்னி, வீட்டுக்குள் நுழையும்போதே ஒருவிதமான பதற்றத்துடன் இருந்தான். அவன் கையில் ஒரு லெதர் பர்ஸ். அதை வாங்கிப் பார்த்த ஹென்னாவுக்கு ஆச்சர்யம்.

பர்ஸுக்குள் பளபளவென ஏழு வெள்ளி நாணயங்கள். சிட்னி பேப்பர் போடப்போன இடத்தில், யாருமற்ற ஒரு பேருந்தின் உள்ளே அதனைக் கண்டெடுத்ததாகவும், உடனே பேப்பர்களை அங்கேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக வந்துவிட்டதாகவும் மூச்சிறைத்துக்கொண்டே கூறினான். மற்ற நேரமாக இருந்தால், பர்ஸை மீண்டும் அங்கேயே போட்டுவிடச் சொல்லியிருப்பாள் ஹென்னா. ஆனால், குடும்பம் இருந்த சூழ்நிலையில் அப்படிச் செய்ய முடியவில்லை. சாப்ளினுக்கு அப்போது விவரம்தெரி யாவிட்டாலும், தன் அம்மாவும்அண் ணனும் சந்தோஷப்படுவதைப் பார்த்து, தானும் எம்பிக் குதித்துக்கை தட்டி மகிழ்ந்தான். ஏழு வெள்ளி நாணயங்களை எடுத்த பிறகும், பர்ஸ் இன்னமும் கனப்பதைப் பார்த்ததும் பர்ஸை உதறினான் சிட்னி. பொலபொலவென தரையில் மஞ்சள் மஞ்சளாக நாணயங்கள் கொட்டின. அத்தனையும் தங்க நாணயங்கள்!

p39a.jpgஅந்த மூன்று எளிய ஜீவன்களின்மேல் கருணைகொண்ட இறைவன், அன்றைய மாலைப் பொழுதில் அவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு நிலவையும், சில நட்சத்திரங்களையும் உருவாக்கியிருந்தான். சிட்னி, சாப்ளின் இருவரையும் கடைவீதிக்கு அழைத்துப் போனாள் ஹென்னா. ஐஸ்க்ரீம் களையும் கேக்குகளையும் வாங்கித் தந்தாள். உற்சாகமாகக் கூவியபடி செல்லும் நீராவி ரயிலில் அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துப் போனாள். சாப்ளின் முதன்முதலாக கடல் பார்த்த நாள் அது. கடலின் மேற்பரப் பில் மினுங்கிய வெளிச்ச வட்டங்கள் ஏராளமான தங்க நாணயங்களை அவன் மனதில் ஆழப் பதித்தன.

சில நாட்கள்தான்... வறுமை மீண்டும் தலைகாட்டத் துவங்கியபோது, குழந்தைகளுக்குப் பசி தெரியாமல் இருக்க ஹென்னா ஒரு புதிய தந்திரம் கற்றிருந்தாள். அவளது தந்திரம் சிறப்பாகவும் வேலை செய்தது. அதிலும் குறிப்பாக, சிறியவன் சாப்ளினுக்குக் கதை கேட்பது ரொம்பப் பிடிக்கும். எத்தனைதான்பசியென்றாலும், ஓடி வந்து அம்மாவின் கால்களைக் கட்டிக் கொள்வான்.

ஜன்னலருகே ஸ்டூலில் அமர்ந்தபடி, சாப்ளினை மடியில் அமரவைத்துக்கொண்டு, கீழே தெருவில் நடந்துசெல்லும் பலதரப்பட்ட மனிதர்களையும் காண்பித்து, அவர்களைக் கதா பாத்திரங்களாக மாற்றித் தன் மனம் போனபோக்கில் கற்பனையாகக் கதை சொல்வாள் ஹென்னா.

அவள் கதையில், தெருவில் போகும் ஒரு பிச்சைக்காரன் சட்டென சாரட் வண்டியில் வரும் பணக்காரனாக மாறுவான். வீதியில் பூ விற்கும் பார்வையற்ற பெண்ணிடம் ஒருவன் பணக்காரனாக நடித்து, அவளின் காதலைப் பெறுவான். சாப்ளினுக்கு அதெல்லாம் விநோதமாகவும் வேடிக் கையாகவும் இருக்கும். இரவில் சாப்ளின் கண்களை மூடிக்கொண்ட தும், அம்மா சொன்ன கதைகள் ஒவ் வொன்றும் அவனுக்குள் காட்சிக ளாக விரியும். அப்படி அம்மா சொன்ன கதைகள்தான் ‘தி கிட்’, ‘சிட்டி லைட்ஸ்’, ‘சர்க்கஸ்’, ‘மாடர்ன் டைம்ஸ்’ போன்ற சாப்ளினின் திரைப்படங்களுக்கான வேர்க் கதைகள்!

ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஹென்னா, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ஏதோ சொல்லி அழுதாள். சாப்ளினுக்கு அப்போது அம்மா என்ன சொல்கிறாள், ஏன் அழுகிறாள் எனத் தெரியவில்லை. தன் கணவன் சார்லஸிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தாள் ஹென்னா.

நம்பிக்கையும் துணிச்சலும் நிறைந்தவள் அவள். விவாகரத்து, நஷ்டஈடு போன்ற சம்பிரதாய நடவடிக்கை களிலிருந்து விலகி நடப்பவள். ஆனால், தனது பிடிவாதங்களுக்காகக் குழந்தை களைப் பட்டினி போட அவள் விரும்பவில்லை. கோர்ட்டில் வழக்கு நடந்ததே தவிர, தீர்ப்பு இழுத்தது. ஒரு கட்டத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் பட்டினியாக இருந்தாக வேண்டிய சூழல். என்ன செய்யக்கூடாது என நினைத்திருந்தாளோ, அதை வேறு வழியின்றிச் செய்தாள் ஹென்னா. ஆம், அநாதை விடுதி ஒன்றுக்குள் தன் குழந்தைகளை அழைத்துச் சென்றாள்.

அந்த விடுதி கட்டடம் பிளாட்பாரங்களைக் காட்டிலும் கொடுமையானதாக, அழுக்கடைந்து இருந்தன. சிக்குத் தலைகளும், அழுக்கு உடைகளுமாக அங்கே எண்ணற்ற சிறுவர்கள் திரிந்துகொண்டு இருந்தனர்.

p39.jpgதாய்மார்களுக்கென்றிருந்த தனி விடுதிக்கு ஹென்னா குழந்தைகளிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பணியாளர்களால் பிரித்து அழைத்துச் செல்லப்பட்டாள். எங்கே தான் அழுதால் அது குழந்தைகளைப் பாதித்துவிடுமோ என்று தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, சாப்ளினைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சிட்னியிடம் அறிவுறுத்திவிட்டுப் பிரிந்து சென்றாள் அவள். குழந்தைகள் கண்ணைவிட்டு விலகியதுமே, அவளது கால்கள் துவண்டன. முட்டி போட்டு கதறியழத் துவங்கினாள் ஹென்னா. அன்றிரவே சிட்னியும் சாப்ளினும், அவரவர்வயதுக்கேற்ப தனித்தனியாக வெவ்வேறு இடங்களுக்குப் பிரிக்கப்பட்டனர்.

விடுதியின் மூலமாக ஹென்னாவுக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம், குழந்தைகளின் படிப்பு! சிட்னி, சாப்ளின் இருவருமே படிப்பில் சுட்டியாக இருந்தனர். ஹென்னா விடுதியின் இதர தாய்மார்களிடம் தன் குழந்தைகளைப் பற்றிப் பெருமையுடன் பேசி, அவர்களுக்கு இந்த வறுமையான வாழ்க்கை அமைந்துவிட்டதே என விசனப்படுவாள். விடுதியில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் ஹென்னா, அவர்கள் வந்ததுமே அள்ளிக் கட்டிக்கொண்டு, பள்ளியில் அன்று நடந்த சம்பவங்களையெல்லாம் சொல்லச்சொல்லி ஆவலுடன் கேட்பாள். இரவு வந்ததும் விடுதிப் பணியாளர்கள் குழந்தைகளை அவளிடமிருந்து பிரித்து விடுதிக்கு கொண்டு சென்றுவிடுவர்.

இக்காலங்களில் சிட்னி, சாப்ளினுக்கு அண்ணனாக இல்லாமல், அப்பா போல இருந்தான். விடுதியில் சமையல் வேலைக்கு அவன் பணி யமர்த்தப்பட்ட காலங்களில், கேரட்டுகளையும் ரொட்டிகளையும் தம்பிக்காகத் தன் கால் சட்டை பாக்கெட்டுகளில் ஒளித்துவைத்துக் கொண்டுவருவான். சாப்ளினுக்கு அவன் தாயுமானவன்!

ஒரு முறை, செய்யாதகுற்றத்துக்காக விடுதியின் காவலர் ஒருவர் சாப்ளினை பெஞ்சின் மேல் ஏற்றி நிறுத்தி, பின்பக்கத்தில் பிரம்பால் அடித்தார். செய்யாத குற்றத்துக்குக் கிடைத்த இந்தத் தண்டனை, சாப் ளினின் வாழ்வில் ஒரு வடு வாகப் பதிந்துவிட்டது.

p39c.jpgஒரு நாள் மாலை, மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சாப்ளினையும் சிட்னியையும் காவலர்கள் அழைத்து, அவர்களின் தாய் ஹென்னாவுக்குப் பைத்தியம்பிடித்துவிட்டதாகச் சொன்னார்கள். சிறுவனான சாப்ளினுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சிட்னி அமைதியாக நின்றிருந்தான். அவர்களின் கண் முன்னே, ஒரு கூண்டு வாகனத்துக்குள் காவலர்கள் ஹென்னாவை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ஏற்றினர். ஹென்னா தன் குழந்தைகளை வேறு யாரோ போல பார்த்துச் சிரித்தாள். அவளைஏற்றிக் கொண்ட வாகனம் சத்த மிட்டபடி புறப்பட்டது.

ஹென்னா மனநோயாளிகளுக்கான விடுதியில் சேர்க்கப்படவே, சிறுவர்களை வந்து அழைத்துச் செல்லுமாறு சாப்ளினின் தந்தையான சார்லஸுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

முதல்முறையாக தன் தந்தையைப் பார்த்த சாப்ளினுக்கு, அவர் ஒரு பணக்காரராகக் காட்சியளித்தது ஆச்சர்யமாக இருந்தது. சிட்னியும்கூட சந்தோஷப்பட்டான். ஆனால், அந்தச் சந்தோஷம் சட்டென விலகியது.

சார்லஸின் பக்கத்தில் நின்றிருந்த, அவரது இரண்டாவது மனைவி லூஸியின் கண்களில் மின்னிய வெறுப்பின் வெளிச்சம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்!

https://www.vikatan.com/anandavikatan/2007-sep-19/serials/72603.html

Share this post


Link to post
Share on other sites

p122c.jpg

பகுதி 7

 ம்மா...

உலகின் உன்னதம்!

கருவாகப் பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, திருவாகவும் பத்து வருடங்கள் கைகளிலும் கண்களிலுமாகப் பேணிக் காத்தவள். அவள் பாலூட்டியதையும் தாலாட்டியதையும் காலம் மறக்கடித்திருக்கலாம். ஆனால், நம் ஊனில், உயிரில் அந்தப் பேரன்பு ஊறி ஊறி உறைந்திருக்கும்.

அந்த அன்பு, சாப்ளினுக்கு மட்டும் கிடைக்கவே இல்லை!

ஆறாவது வயதில், அழுக்கடைந்த வெள்ளை நிறக் கூண்டு வண்டியில் கேன்ஹில் மன நலக் காப்பகத்தின் ஊழியர்கள் தன் அம்மாவை ஏற்றிச் செல்வதைப் பார்த்த சாப்ளினின் மன வேதனையை விவரிக்க மொழி இல்லை. கை தவறிய ஆப்பிள் ஒன்று உருண்டு உருண்டு மீண்டும் கிடைக்கவே கிடைக்காத பாதாளத்தில் போய் விழுந்தது.

இங்கே தந்தையின் வீட்டில் சாப்ளினுக்கும் சிட்னிக்கும் புதிய வாழ்க்கை துவங்கியது. அரசாங்க

 

உத்தரவின் பேரில் சாப்ளினின் அப்பா, விடுதியிலிருந்து மகன்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சித்தி லூயிஸின் முகத்தைப் பார்த்த முதல் நிமிடத்திலிருந்தே சிட்னிக்கும் சாப்ளினுக்கும் ஏனோ அடி வயிற்றில் கிலி பரவியது. சாப்ளின் தன் அம்மாவை நினைத்துப் பார்த்தான். அவள் முகத்தில் என்னதான் வறுமை தாண்டவமாடினாலும், கண்களில் அன்பின் ஒளி இருக்கும். லூயிஸின் முகத்தில் அது இல்லை. பகட்டும் பணக்காரத்தனமும் திமிரும் தெறிக்கும் விழிகள். அவளைப் போலவே இருந்தது அவர்களின் பணக்கார வீடும்!

அந்த வீட்டுக்குள் நான்கு வயதுக் குழந்தையன்று இருந்தது. அது லூயிஸின் குழந்தை. ஒரு வகையில் தனக்கு அவன் தம்பி என்பதை சாப்ளின் புரிந்துகொண்டான். வீட் டுக்கு வந்த முதல் நாளே, சிட்னிக்கும் சித்தி லூயிஸுக்கும் சண்டை ஆரம் பித்தது. அப்போது அப்பா சார்லஸ் வீட்டில் இல்லை. உறங்கும் நேரம் வந்தது. சிட்னியும் சாப்ளினும் வரவேற் பறையின் ஒரு சோபா வில் படுத்தனர். வீட்டின் பின் பக்க அறையில் சென்று படுக்கும்படி சிட்னிக் குக் கட்டளையிட் டாள் சித்தி. அவளது கண்டிப்பு, சிட்னிக்குப் பயமுறுத்தலாகத் தெரியவே அதனை அலட்சியப்படுத்தினான். லூயிஸ் கோபத்துடன் கத்த ஆரம்பித்தாள்.

சார்லஸ் வீடு திரும்பியதும் நடந்ததைக் கூறி தன் சொல்பேச்சைக் கேட்காத சிட்னியை நாலு சாத்து சாத்தி உள்ளே இழுத்துப் போகும்படி சொன்னாள். ஆனால், நடந்ததோ வேறு. சிட்னி அவன் இஷ்டம் போல அங்கேயே படுத்துத் தூங்கட்டும் என்றார் அவர். லூயிஸால் அந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிட்னியின் மேல் அது என்றுமே அடங்காத தீராத வெறுப்பு உணர்ச்சியை அவளுக்குள் உருவாக்கியது.

p122b.jpgகென்னிங்டன் சாலையில் இருந்த பள்ளியில் இருவரும் சேர்க்கப்பட்டனர். பள்ளி விட்டு வீடு திரும்பும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் நரகத்தை நோக்கிச் செல்வதைப் போல சாப்ளினுக் குத் தோன்றும். அதிலும் சனிக் கிழமை என்றால், சிறுவர்கள் இருவருக்கும் உதறலெடுக்கும். அன்று பள்ளி பாதி நாள்தான் என்பதால், மதியம் வீடு திரும்பி யதும் சுத்தப் பணி. கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி, மரச் சாமான்கள் என எல்லாவற்றையும் ஈரத் துணி கொண்டு சுத்தமாகத் துடைக்க வேண்டும். பெருங்குடிகாரியான லூயிஸ், ஹாலின் நடுவே தன் தோழியுடன் சேர்ந்து குடித்துக்கொண்டே இருவரையும் இஷ்டத்துக்குத் திட்டத் தொடங்குவாள்.

சாப்ளினைப் பார்த்து, ‘‘இவனையாவது ஒருவிதத்தில் சார்லஸுக்குப் பிறந்தவன் என்ப தற்காக பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், அவன் எவனுக்கோ பிறந்த தறுதலை. அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தலையெழுத்தா என்ன?’’ என்று சிட்னியை எரித்து விடுவது போலப் பார்ப்பாள்.

ஒரு நாள் சிட்னியும் பொறுமை இழந்தான். இரவு தாமதமாக வீடு வந்த சிட்னி, கதவைத் தட்டினான். வழக்கம் போலத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்த லூயிஸ் அலறினாள். சிட்னியின் கையில் கூர்மையான கத்தி ஒன்று பளபளத்தது. அதனைக் காட்டிலும் அவனது கண்கள் உக்கிரத்தால் மின்னின. சத்தம் கேட்டு ஓடி வந்த பணியாட்களால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. அன்று இரவு, சார்லஸ் வீடு திரும்பியதும் கணவன் மனைவிக்கிடையே கடும் சண்டை!

‘இனி இந்த வீட்டில் ஒன்று... இவர்கள் இருக்க வேண்டும்; அல்லது நான் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்றை இப்போதே முடிவு செய்தாக வேண்டும்’ என இரைந்தவளை சார்லஸ் ஓங்கி அறைய, அவள் சுருண்டு ஒரு மூலையில் விழுந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் சார்லஸ் வீட்டுக்கு வராமல் வெளியே தங்கவே, லூயிஸ் பயந்து போனாள். உண்மையில் அவள் சார்லஸை அளவற் றுக் காதலித்தாள். சார்லஸ் வராத இரண்டு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்தாள். சார்லஸ் வீடு திரும்பியதும் அவரைக் கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டபடியே முத்த மழை பொழிந்தாள். அதன் பிறகு சிட்னியையும் சாப்ளினையும் நேரடியாகத் திட்டுவதைக் குறைத்துக்கொண்டாலும், தனது வன்மத்தை வேறுமாதிரியாகக் காட்டத் துவங்கினாள்.

p122a.jpgஒரு நாள்... அன்றும் சனிக்கிழமை. பாதி நாள் பள்ளி முடிந்ததும் வந்த சாப்ளின், வீடு பூட்டிக்கிடந்ததைப் பார்த்தான். லூயிஸ், குழந்தையுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருப்பதாகப் பணிப்பெண் கூறினாள். சாப்ளினுக்கோ அகோரப் பசி. தாங்க முடியவில்லை. தோளில் சுமந்த பையுடன் வீதிவீதியாக கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். எங்கெங்கோ சுற்றினான். கடைசியில் கடை வீதிக்கு வந்தான். மாலைச் சூரியனின் மஞ்சள் வெளிச்சத்தால் கடைவீதியே நிரம்பியிருந்தது.

பெரிய பெரிய புகை போக்கிகளுடன் கூடிய உணவு விடுதிகளிலிருந்து விதவிதமான வாசனைகள் காற்றில் மிதந்தன. பசி மயக்கத்தில் கால்கள் துவள, சாப்ளின் ஓரிடத்தில் அமர்ந்தான். வீதியில் எண்ணற்ற பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்ட தின்பண்டங்களையெல்லாம் வாங்கித் தருவதைப் பார்த்தான். அந்தக் குழந்தைகளில் ஒருவனாகத்தான் இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினான். சாப்ளினுக்குத் தன் அம்மாவின் ஞாபகம் எழுந்தது. ‘‘அம்மா...’’ என சாப்ளின் வாய்விட்டுக் கதறி அழத் துவங்கினான். அன்று, அந்த வீதியில் அழுதுகொண்டு இருந்த சாப்ளினைப் பார்த்தபடி நடந்து சென்ற பலரும் பின்னாட்களில் சாப்ளினின் படங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து ரசித்திருக்கக்கூடும். ஆனால் அன்று அந்த இரவில், உலகின் ஒப்பற்ற அந்தக் குழந்தையின் அழுகையைக் கண்டு ஏன் என்று கேட்கவோ, தலையைத் தடவிவிடவோ, ஆறுதல் பேசவோ யாரும் இல்லை. அந்தச் சம்பவம் சாப்ளினுக்குள் ஒரு விஷயத்தை ஆழமாகப் பதித்தது... அது, ‘பசியைவிடக் கொடுமையானது என்று உலகத்தில் எதுவும் இல்லை!’

நெடுநேரம் கழித்து சாப்ளின் வீடு திரும்பினான். சிட்னி வாசலில் காத்திருக்க, வீடு அப்போதும் பூட்டியே கிடந்தது. அதன் பிறகு, போதையில் தள்ளாடியவளாக லூயிஸ் வீடு வந்தபோது நேரம் நடுநிசியைக் கடந் திருந்தது.

மறுநாளே இரண்டு காவலர்கள் வீட்டுக்கு வந்தனர். சிறுவர்களை இரவில் நெடுநேரம் பனியில் நிற்க வைத்ததாகக் கேள்விப்பட்டதாகவும் மீண்டும் அது போல நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் லூயிஸை எச்சரித்துச் சென்றனர்.

இது நடந்து இரண்டு நாட்கள் இருக்கும்... பள்ளிவிட்டு வந்த மாலைப் பொழுதொன்றில் வீட்டு வேலைகளில் சிட்னியும் சாப்ளினும் மும்முர மாக இருந்தபோது, வெளியே ஒரு குரல் கேட்டது. அது ஒரு பெண் குரல். சிட்னியையும் சாப்ளினையும் விசாரித்துக் கொண்டு இருந்த அந்தக் குரலைக் கேட்டதுமே சாப்ளினுக்குச் சிலிர்த்தது.

‘‘அம்மா’’ என அலறியபடி சிறுவர்கள் இருவரும் வாசலுக்குப் பாய்ந்தோட, அங்கே மெலிந்த தோற்றத்தில் பூரணமடைந்தவளாக வாஞ்சைச் சிரிப்புடன், தன் குழந்தைகளை எதிர்நோக்கி கைகளை விரித்துக் காத்திருந்தாள் ஹென்னா. சாப்ளின், சிட்னி இருவரும் ஓடி வந்து தாயைக் கட்டியணைத்துக்கொண்டனர்.

ஹென்னா, தன் குழந்தை களை அணைத்துக் கண்ணீருடன் முத்தமிடுவதைப் பார்த்தாள் லூயிஸ். அந்தச் சூழலில் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தாள்.

லூயிஸும் ஹென்னாவும் ஒருவரை ஒருவர் அப்போதுதான் முதல்முறையாகப் பார்த்துக்கொண்டனர். யாருடைய வாழ்க்கையை யார் எடுத்துக்கொண்டது என்ற சந்தேகமும் கேள்வியும் இருவருடைய கண்களிலும் பிரதிபலித்தன.

p122.jpgஆச்சர்யப்படும் விதமாக, லூயிஸ் அந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டாள். வீட்டினுள் வந்து அமரும்படியும், தேநீர் பருகும்படியும் உபசரித்தாள். ஆனால் ஹென்னா, அதனைக் கண்ணியத்துடன் மறுத்தாள். குழந்தைகளின் துணிகளை மட்டும் எடுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டாள்.

குழந்தைகள் இருவரும் ஆளுக்கொருபுறமாக ஹென்னாவின் விரல்களை சந்தோஷத்துடன் இறுகப் பற்றிக்கொண்டனர். வழியில் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்களை வாங்கித் தந்தாள் ஹென்னா.

அன்று இரவு அவர்கள் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. அப்போதுதான் சட்டென அவளுக்குள் அந்தக் கேள்வி எழுந்தது.

இன்று இரவு எங்கே தங்குவது?

குழந்தைகளை அவசரப்பட்டு அழைத்து வந்துவிட்டோமோ என்றுகூட நினைத்தாள் ஹென்னா. வேறு வழி எதுவும் தெரியாமல், அன்று இரவு கென்னிங்டன் சாலையில் இருந்த ஊறுகாய்த் தொழிற்சாலை ஒன்றின் வாசலில், கையோடு கொண்டுவந்திருந்த பெட்ஷீட்டை நடைபாதையில் விரித் தாள். பேசிக்கொண்டே இருந்த குழந் தைகளைப் படுக்கவைத்தாள். அவர் களுக்கு நடுவே தானும் படுத்துக் கொண்டாள்.

வானத்தில் சில நட்சத்திரங்களும் நிலவும் மட்டும் எதிர்காலத்தை நன்கு அறிந்தவையாக தங்களுக்குள் கண் சிமிட்டி மகிழ்ந்துகொண்ட இரவு அது!

https://www.vikatan.com/anandavikatan/2007-sep-26/serials/72686.html

Share this post


Link to post
Share on other sites

தொடர்களை இணைத்தமைக்கு நன்றி சதீஸ்குமார்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அருமையான‌ வ‌ரிக‌ள் நொச்சி ஜ‌யா / வித்தாகி போன‌ த‌ள‌ப‌திக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் / மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை ப‌ல‌ர் ம‌ன‌தில் இருக்கு / பொறுத்தார் பூமி ஆள்வார் , 
  • ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!         by : Litharsan அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ட்ரம்ப்பின்-கோரிக்கை-நிற/
  • இலங்கையில் கொரோனா வைரஸால் 6 ஆவது உயிரிழப்பு!         by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கையில்-6-ஆவது-நோயாளிய/
  • அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி           by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளோம். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அற்ப-விடயங்களுக்காக-அநாவ/
  • சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் – டலஸ்!          by : Benitlas கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எந்த வேறுபாடும் இன்றி இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டதை எனது அரசியல் வாழ்வில் நான் பார்க்கவில்லை. நூற்றுக்கு 80 வீதம் கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் சமூர்த்தி நிவாரணங்களை வழங்கிய போது அதனைப் பெற்றுக்கொண்ட யாருக்கும் 80 வீத கட்டாய சேமிப்பு காணப்படவில்லை. தற்போது அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. 80 வீத கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையை தற்போதும் நடைமுறையில் இருந்திருந்தால் கடந்த அரசாங்கத்தில் நிவாரணம் பெற்ற எவருக்கும் தற்போது கிடைக்கப்பெறாது. எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காது எவ்வித பேதமும் இன்றி இம்முறை எமது அரசாங்கத்தால் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் சமூகமயப்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பரவலடைந்துள்ளன. இதுவே உண்மை நிலைமையாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சமூர்த்தி-பயனாளிகளுக்க-3/