Jump to content

Recommended Posts

nakuyava_i.jpg

nakuyava.gif

ThiruNeelakanda Naayanar - திருநீலகண்ட நாயனார் பற்றி சைவ சரபம் மா.பட்டமுத்துவின் சொற்பொழிவு.

Click this to download

http://www.megaupload.com/?d=MIEVBTSL

http://www.shaivam.org/nakuyava.html - ஆங்கிலத்தில் இச் சரித்திரம் பார்க்க இதைக் கிளிக் செய்யவும்

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply

சைவ வினா விடை

...

பாவங்கள்.

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

99 வீதமான தமிழர்கள் நரகத்தை அநுபவிக்கப் போவது நிச்சயம். :huh:

Link to comment
Share on other sites

இப்பெரியபுராணமானது, தன்னை உணர்ந்தவர்களுக்கன்றி மற்றவர்களுக்குத் தமிழ்வேதமாகிய தேவாரத்தின் வரலாறும் மகிமையும் ஓரோவிடங்களில் அதன் பொருளும் விளங்குதல் கூடாமையானும், தன்னை அத்தியந்த ஆசையுடன் ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பத்திசைவராக்கிய ஞானங்களைப் பயக்குங் கருவியாய் இருத்தலானும், சிவஞான சித்தியார், திருக்களிற்றுப்படியார் முதலிய சைவசித்தாந்த நூல்களினும் உரைகளினும் சிவானுபவத்துகுத்தான் கூறும் நாயன்மார் பலருடைய சரித்திரங்களில் உதாரணங் காட்டுதலானும், சர்வாதிகாரிகளாகிய ஆதிசைவருக்கும் பிறருக்கும்தான் அதிகரித்த தனியடியார் அறுபத்துமூவரும் தொகையடியார் ஒன்பதின்மரும் ஆகிய திருத்தொண்டர் எழுபத்திருவருடைய சரித்திரங்களையும் உணர்ந்து அவர்கள் மகிமையைத் தெளிந்தாலன்றிச் சிவாலயங்கள் எங்கும் முறையே அவர்களுக்குப் பிரதிட்டை பூசை திருவிழாக்கள் செய்தற் கண்ணும் அவைகளைச் சேவித்தற் கண்ணும் ஊக்கமும் அன்பும் நிகழாமையானும், சைவர்கள் யாவரும் ஒருதலையாகக் கற்றுணரவேண்டும் நூலாம்.

Link to comment
Share on other sites

vacakar.jpg

13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.

(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.

(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

manikavasakar.gif

:huh:

இரண்டாம் சைவ வினா விடை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click below to view the Second Part of Saiva Vinna Vidai :unsure:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22908

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகநாவலரே,

பழைய ரிலீசையே திருப்பித் திருப்பி ரிலீசு பண்ணினால் நாங்கள் என்ன செய்வது? :huh:

பச்சுகள் (patch) எங்கேயாவது டவுன்லோட் பண்ணமுடியுமா? அறியத் தாருங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு

Link to comment
Share on other sites

பலிபீடத்திற்கு இப்பால் நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

ஓமகுண்டத்துக்குள் தடக்கி விழுவதை தவிர்க்கலாம்...!

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

ஓரமாய் விளுந்து கிடந்து உறுள வசதியா இருக்கும். போய் வாற பக்தி சிகாமணிகள் கவனம் சிதறி தடக்கி விளாமல் இருக்க உதவும் கூடுதலாய் அந்த புண்ணியம் வந்து சேரும்...!

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

அந்த காலத்திலை நாலு முழம் வேட்டிதான் கட்டுறவையாம்... அவிண்டு விழுந்து மற்றவரை பயப்படுத்தும் பாவத்தை செய்யாமல் இருக்க உதவும்...!

அட்டாங்க நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்.

ஒரு தரம், இரு தரம் பண்ணுதல் ஏன் குற்றம்? ஒன்றும் இரண்டும் நல்ல நம்பர் இல்லையா?

ஒரு தரமாயினும், இரு தரமாயினும், நான்கு தரமாயினும், ஆறு தரமாயினும், எட்டு தரமாயினும் ஏன் பண்ணக்கூடாது?

உடற்பயிற்ச்சி செய்யும்போது 1,3,5, 7 எண்டு தானே என்ணிக்கை வருமாறு செய்யுறீயள் எப்பவாவது ஏன் எண்டு கேள்வி கேட்டனிங்களோ..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

பலிபீடத்திற்கு இப்பால் நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

வணங்குபவனை ( அடுத்தவனை) தொந்தரவு பண்ணக் கூடாது என்பது சொல்லப்படுகிறது.

எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.

பூமியின் காந்தப் புலத்தோடு சேர்ந்து நமஸ்காரம் செய்யும் போது மனித உடலில் இருக்கும் மின் தூண்டல்கள் பாதிப்படையாமல் இருக்கும் என்பதால் சொல்லப்படுகிறது. மனித மூளையில் வினாடிக்கு பல மின் தூண்டல்கள் நடக்கின்றன. பூமியின் காந்தப்புலம் கூட அதில் செல்வாக்குச் செய்கிறது.

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்?

ஆடவர்களின் உடலமைப்புக்கு ஏற்ப அவர்களுக்கான நமஸ்காரம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கடினமான நமஸ்காரங்களை செய்வது அவர்களை சில உபாதைகளுக்கு உட்படுத்தலாம் என்பதால் அவர்களுக்கு என்று தனியான நமஸ்காரம் உள்ளது..! குறிப்பாக கற்ப காலத்தில் பெண்களை குப்புறப்படு.. கவிழ்ந்து கிட.. என்றால் முடியுமா சார்..??! நமஸ்காரங்கள் யோகாசனங்களின் அடிப்படையில் எழுந்தவை. நல்ல உடற்பயிற்சியை வழங்கக் கூடியவை..!

பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

அட்டாங்க நமஸ்காரம் பண்ணினால் என்ன நடக்கும்

நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.

ஒரு தரம், இரு தரம் பண்ணுதல் ஏன் குற்றம்? ஒன்றும் இரண்டும் நல்ல நம்பர் இல்லையா?

பிரதக்ஷணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.

ஒரு தரமாயினும், இரு தரமாயினும், நான்கு தரமாயினும், ஆறு தரமாயினும், எட்டு தரமாயினும் ஏன் பண்ணக்கூடாது?

மனிதத்தசை இயக்கத்தின் அடிப்படையில் அது சொல்லப்படுகிறது. தசைகள் சுருங்கவும் விரியவும்.. மீளவும் இயல்பை அடையவும் என்று அவை ஒற்றை எண்ணில் செய்யச் சொல்லப்படுகின்றன..! யோகாசனப் பயிற்சிகளின் போதும் இப்படி அறிவுறுத்தப்படுவதைக் காணலாம்..! விஞ்ஞானச் செய்முறைகளில் கூட குறைந்தது 3 தரவுகள் தேவை ஒரு சிறிய முடிவை எடுப்பதற்கு..! 1 அல்லது 2 என்று தரவுகளோடு முடிவுகள் எடுப்பது குறைவு..!

Link to comment
Share on other sites

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?

கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.

:):lol::blink::D:D:D:D:D:D

Link to comment
Share on other sites

//பூமியின் காந்தப் புலத்தோடு சேர்ந்து நமஸ்காரம் செய்யும் போது மனித உடலில் இருக்கும் மின் தூண்டல்கள் பாதிப்படையாமல் இருக்கும் என்பதால் சொல்லப்படுகிறது. மனித மூளையில் வினாடிக்கு பல மின் தூண்டல்கள் நடக்கின்றன. பூமியின் காந்தப்புலம் கூட அதில் செல்வாக்குச் செய்கிறது.//

//மனிதத்தசை இயக்கத்தின் அடிப்படையில் அது சொல்லப்படுகிறது. தசைகள் சுருங்கவும் விரியவும்.. மீளவும் இயல்பை அடையவும் என்று அவை ஒற்றை எண்ணில் செய்யச் சொல்லப்படுகின்றன..! //

மேற் கூறப்பட்ட வற்றை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்பதையும் அதன் சுட்டியைம் தந்து உதவ முடியுமா, இந்த ஆராச்சி முடிவு எந்தப் பல்கலைக் கழக்கத்தில் எவரால் செய்யப்பட்ட ஆராச்சிகளின் முடிவில் நிறுவப்பட்டது?

//ஆடவர்களின் உடலமைப்புக்கு ஏற்ப அவர்களுக்கான நமஸ்காரம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கடினமான நமஸ்காரங்களை செய்வது அவர்களை சில உபாதைகளுக்கு உட்படுத்தலாம் என்பதால் அவர்களுக்கு என்று தனியான நமஸ்காரம் உள்ளது..! குறிப்பாக கற்ப காலத்தில் பெண்களை குப்புறப்படு.. கவிழ்ந்து கிட.. என்றால் முடியுமா சார்..??! நமஸ்காரங்கள் யோகாசனங்களின் அடிப்படையில் எழுந்தவை. நல்ல உடற்பயிற்சியை வழங்கக் கூடியவை..!//

உடற் பயிற்சி செய்ய ஏன் கோயிலுக்குப் போவான் வீட்டில செய்யலாமே?

நாவலர் உங்கள் சேவை இன்னும் தேவை , இன்னும் இன்னும் எழுதுங்கோ வாய் விட்டுச் சிரிப்பம். :):lol:

Link to comment
Share on other sites

//ஈசுரத் துரோகிகளுக்கு, நரகத்திலே இயம தூதர்கள் இரத்தவெள்ளுஞ் சிந்தும்படி இருப்புமுளைகளை நெருப்பிலே காய்ச்சி, தலையிலும், கண்களிலும், செவிகளிலும், நாசிகளிலும், வாயிலும், மார்பிலும் அறைந்து, உடம்பு முழுதும் தாமிர முதலிய உலோகங்களை உருக்கிய நீரைச் சொரிவார்கள். மயிர்க்காறோறும் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை அழுத்துவார்கள். அவயவங்கடோறும் இருப்பாப்புக்களை மாட்டுவார்கள். பின்பு நெய் நிறைந்த செப்புக் கடாரத்திலே விழுத்திக் காய்ச்சுவார்கள். ஈசுரத்துரோகிகள் அந்தச் செப்புக் கடார நெய்யிலே சந்திரசூரியர் உள்ளவரையும் குப்புறக் கிடந்து வருந்துவார்கள்.

இப்படி நரகத்துன்பத்தை அனுபவித்தபின், பூமியிலே மலத்திற்கிருமி முதலியவைகளாய்ப் பிறந்திறந்து உழன்று, பின்பு மனிதப்பிறப்பை எடுத்து, வலி, குட்டம், கபம், நீரிழிவு, பெருவியாதி, மூலவியாதி முதலிய மிகக் கொடிய நோய்களினாலும், பசியினாலும் வருந்துவார்கள்.//

ஈசுரத் துரோகிகள் என்ரால் யார் அவர்கள்? கிரிஸ்துவர்கள், இசுலாமியர்கள் மற்றும் மதத்தினரா?

//அநேகர் வாம மதத்திலே புகுந்து, பிறரையும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்றார்கள். வாம மதத்தை அநுட்டித்தவர்கள் பிசாச பதத்தை அடைவார்கள் என்பது நூற்றுணிவு.//

வாம மதம் அன்றால் என்ன மதம்? கிரித்துவமா?

//உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களேயாவர்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர்கள் போல் ஒழுகுதல் நாடகமாத்திரையேயன்றி உண்மையன்றென்பது தெள்ளிதிற்றுணியப்படும். பிறவுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரிடத்தும் இரக்கமில்லாதவரே யாவர். அவர் தமக்குத்தாமே வஞ்சகர்.//

மேலெ சொல்லப்பட்டதன் படி ஈசுரத் துரோகிகளுக்கும் வாம மதத்வரான உயிர்களையும் வதைக்கும் கடவுள் ஒரு வஞ்சகரா, அவர் உயுருக்கே உத்தரவாதம் இல்லையா? என்னையா உங்கட லொஜிக் கடவுளையே உதைக்குதே? :lol::blink::D இல்லாடி கடவுளுக்கு ஒரு நியதி மனிதர்களுக்கு ஒரு நியதியா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் நாமே விளக்கம் தரனும் என்றில்லை. பல இடங்களில் பல தகவல்கள் உள்ளன. அவ்வளவையும் மீட்டு இங்கு சேர்பது என்பது இலகுவல்ல..!

பூமியின் காந்தப்புலம் நேரடியாக மனித உடல்நலத்தைப் பாதிக்கக் கூடிய அளவுக்கு செறிவாக இல்லை என்று கொண்டாலும்.. அசாதாரண உடல் நிலைகள் அசாதாரண நிலைகளை மனிதரில் ஏற்படுத்த செல்வாக்குச் செய்யலாம். பறவைகளுக்கு வழியறிய புவி காந்தப்புலத்தைப் பாவிக்கின்ற போது மனிதரில் அதன் செல்வாக்கு இருக்கவே செய்யும்..! காந்தப்புலம் புவியின் வடக்கிரூந்து தெற்காக செல்கிறது. மூளை மற்றும் இதயத்தை குருதிச் சுற்றோட்டத்தை புலத்திசைக்கு எதிராக வைப்பதன் மூலம் உடலில் அசாதாரணங்கள் தோன்றலாம். அவை உடல் நோயை உண்டாக்கும் என்பதல்ல அர்த்தம். அசாதாரண சூழல் உருவாகலாம். அதைத் தடுக்கவே கோவில்களிலும் இதைப் பின்பற்ற கூறி இருக்க வேண்டும்..!

The earth’s core is molten metal and as it spins electric currents are created within these metals that produces a magnetic field. Man has evolved within the earth’s magnetic field, and can cope with the slight fluctuations from time to time caused by weather and the sun’s activity. But when the earth’s magnetic field is disturbed so that the background field we experience is different to normal, the human body can experience unusual stresses that lead to ill health or a slowing down of the normal healing processes.

‘Energy drains’ are natural structures that regulate the earth’s energy flow by funnelling away negative energies; if these become blocked, this can impair the earth’s natural ability to balance and harmonise its energy.

http://www.hk4health.co.uk/geopathic.htm

Medical statistics for Moscow show that 70% of all micro variations, caused by geomagnetic disturbances, are accompanied by an abnormally high incidence of heart attacks (a growth of about 13%), and blood-strokes (7.5% growth). The low and extremely low frequency electromagnetic fields destabilize the heartbeat, leading to a sudden death or infarction. Medical experts have finally explained why heart attacks take a heavy toll before a magnetic storm - because micro variations begin 24 hours before the storm.

http://www.spacedaily.com/reports/Magnetic...unications.html

வலிமையான காந்தப்புலம் தரும் உடல் நலப் பாதிப்புக்கள்... பற்றிய தகவல் கீழே..!

For static magnetic fields, acute effects are only likely to occur when there is movement in the field, such as motion of a person or internal body movement, such as blood flow or heart beat. A person moving within a field above 2 T can experience sensations of vertigo and nausea, and sometimes a metallic taste in the mouth and perceptions of light flashes. Although only temporary, such effects may have a safety impact for workers executing delicate procedures (such as surgeons performing operations within MRI units).

Static magnetic fields exert forces on moving charges in the blood, such as ions, generating electrical fields and currents around the heart and major blood vessels that can slightly impede the flow of blood. Possible effects range from minor changes in heartbeat to an increase in the risk of abnormal heart rhythms (arrhythmia) that might be life-threatening (such as ventricular fibrillation). However, these types of acute effects are only likely within fields in excess of 8 T.

It is not possible to determine whether there are any long-term health consequences even from exposure in the millitesla range because, to date, there are no well-conducted epidemiological or long-term animal studies. Thus the carcinogenicity of static magnetic fields to humans is not at present classifiable (IARC, 2002).

http://www.who.int/mediacentre/factsheets/...9/en/index.html

http://www.inchem.org/documents/ehc/ehc/ehc69.htm

http://www.sciencedaily.com/releases/2004/...40514030725.htm

தசை தொடர்பான விடயங்களுக்கு மேலதிக நூல்களைப் பார்க்கவும்..! :P

Link to comment
Share on other sites

முதற் கோணல் முற்றும் கோணல் எண்ட மாதிரி, நெடுக்ஸ் தந்த முதலாவது இணைப்பு இப்படிச் சொல்லுது,

The effects of GS are so insidious - GS cannot be seen or adequately explained in scientific terms

இது ஒரு விஞ்ஞான இணைப்பு அல்ல.Its pseudo science, அதாவது போலி விஞ்ஞானம்.இது ஒரு அறிவியல் மேற் கோள் கிடையாது. ஒரு வியாபரத்திற்கான போலி விளக்கம்.

Pseudoscience is a pretended or spurious science; a collection of related beliefs about the world mistakenly regarded as being based on scientific method or as having the status that scientific truths now have. -- The Oxford English Dictionary (2nd edition)

This category comprises articles pertaining to pseudoscience, to fields of endeavor or bodies of knowledge that critics have characterized as being pseudoscientific or having pseudoscientific aspects, or subjects which a significant portion of the scientific community fault as failing to meet the norms and standards of scientific practice in one way or another. Some of these fields, or parts of them, may be the subject of scientific research and may not be wholly dismissed by the scientific community.

The main article for this category is Pseudoscience.

http://en.wikipedia.org/wiki/Category:Pseudoscience

Magnet therapy, or magnetic therapy, or magnotherapy is a form of alternative medicine claiming that certain medical disorders can be effectively treated by exposure to static magnetic fields.

Proponents of magnet therapy claim that subjecting certain parts of the body to doses of magnetic fields has a beneficial effect. This belief has led to the popularization of an industry involving the sale of magnetic-based products for "healing" purposes: magnetic bracelets and jewelry; magnetic straps for wrists, ankles, and the back; shoe insoles, mattresses, and magnetic blankets (blankets with magnets woven into the material); and even water that has been "magnetized".

Magnet therapy makes use of the static magnetic fields produced by permanent magnets; the related alternate medicine field of electromagnetic therapy involves the application of electromagnetic waves to the patient.

Contents [hide]

1 Efficacy

1.1 Legal regulations

2 Criticism

3 See also

4 References

5 External links

[edit] Efficacy

Scientific tests of magnetic therapy for the treatment of wrist pain from carpal tunnel syndrome and chronic low back pain have concluded that there is no health benefit from magnetic fields in those cases.[1][2] Blinding of any study into the efficacy of magnetic therapy is problematic as the participants in the study may easily ascertain whether they have been issued with a genuine magnet or a placebo dummy.[3]

[edit] Legal regulations

A number of jurisdictions prohibit the marketing of magnetic therapy products with the claim that they offer any therapeutic effects. In the United States, for example, FDA regulations render it illegal to market a magnet therapy product that claims to treat any "significant" condition such as cancer, HIV, AIDS, asthma, arthritis, or rheumatism.[4]

[edit] Criticism

Criticism from the scientific community views magnet therapy with disapproval since it is not explained within standard scientific protocol. Although there is a small amount of scientific evidence that appears to support its validity, [5] as a whole, magnet therapy is lacking scientific confirmation to be fully accepted in science.[6] Carey explains in A Beginner’s Guide to Scientific Method, that true scientific principles are rigorously tested according to the methods of the scientific method; hence, by applying techniques from scientific investigation, apparent fallacies of magnetic therapy can be pointed out.

False anomalies are mysterious suggestions that attempt to explain an event, and they create ambiguity in that they omit factual information from their explanation.[6] Advocates of magnet therapy claim that magnets can help decrease pain levels but they fail to explain exactly how this occurs. [7] For example, in double blind experiments patients frequently become aware they are wearing a magnetic bracelet; thus, the "controlled" experiment loses validity, and this information is often omitted in the experimental results.[8]

Another method of forming an anomaly is to over-rely on anecdotal evidence.[6] Supporters make false assertions such as magnets stimulate blood flow because blood is composed of charged ions, or that the magnetic field can decrease pain because it can affect pain receptors. [9] Science does not support such claims because they are not based on solid scientific principles such as controlled double blind causal studies.[6] Because the fallacies used to explain magnetic therapy are not supported by science, there are numerous theories which attempt to invalidate its effectiveness.

Criticism of magnet therapy focuses on scientific facts about magnets, including that:[10]

The typical magnet used produces insufficient flux density to have a lasting effect on muscle tissue, bones, blood vessels, or organs.

Researchers in high-energy physics laboratories can work for hours per day with their whole body immersed in magnetic fields far stronger than those from the bracelets, and there is no evidence they are more or less healthy than their peers.

No magnet healing manufacturer has demonstrated scientifically that its products achieve what they claim, and most cannot agree on what exactly the magnetic fields do.

Some manufacturers claim that the magnets help to circulate the blood by some interaction with the iron in hemoglobin, a major component of red blood cells. However in its ionised form, iron is not ferromagnetic and cannot be affected by magnets.[11]

Others claim that the magnets can restore the body's theorised electromagnetic energy balance. There are also claims that the south pole of a magnet acts differently on the body than the north pole.[citation needed]

Many of the websites that provide information and resources promoting the benefits of magnetic therapy belong to individuals and companies that profit from the sale of magnetic therapy products.

Water is a diamagnetic material, and thus cannot be magnetized. In addition, attempts to sell "north pole" or "south pole" magnetized water to treat different conditions ignore the fact that magnetized ferromagnetic materials inevitably acquire both a north and a south pole; science yet to have found evidence for the existence of magnetic monopoles.[12]

http://en.wikipedia.org/wiki/Magnetic_therapy

:):lol::blink::D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் செத்துப் போற சமயங்களுக்கு உயிர் கொடுக்க போலி விஞ்ஞான விளக்கங்களைத் தேடி இப்படியான இணையக் குப்பைகளைப் பொறுக்கி இங்க போடாம உருப்படியா எதாவது செய்யலாம்.எனக்கு உம்மோடு மினக் கட நேரங் கிடையாது.பிரியோசனமா எதாவது இருந்தா எழுதவும் சும்மா எல்லோரது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

//பூமியின் காந்தப் புலத்தோடு சேர்ந்து நமஸ்காரம் செய்யும் போது மனித உடலில் இருக்கும் மின் தூண்டல்கள் பாதிப்படையாமல் இருக்கும் என்பதால் சொல்லப்படுகிறது. மனித மூளையில் வினாடிக்கு பல மின் தூண்டல்கள் நடக்கின்றன. பூமியின் காந்தப்புலம் கூட அதில் செல்வாக்குச் செய்கிறது.//

மேலே நெடுக்ஸ் எழுதியது, செறிவான காந்தப் புலத்தின் தாக்கமே கேள்விக் குரியதாக இருக்கும் போது, நமஸ்காரம் செய்யும் போது எல்லா இடத்திலும் இருக்கும் காந்தப்புலம் எப்படி தாக்கம் செலுத்தும்? இது பற்றி எந்த ஆராய்வுகளும் மேற் கொள்ளப்படவில்லையே? எல்லா இடத்திலும் இருக்கும் காந்த்தப்புலம் தான் நமஸ்காரம் செய்யும் போதும் இருக்கிறது.செறிவான காந்தப்புலம் தாக்கம் செலுதுகிறாதா என்பதே இன்னும் நிருபிக்கப்படாத நிலையில் புவியின் காந்தப்புலம் தாக்கம் செலுத்தும் என்பது எதுவித ஆதாரமும் அற்ற புனை கதை.

//பூமியின் காந்தப்புலம் நேரடியாக மனித உடல்நலத்தைப் பாதிக்கக் கூடிய அளவுக்கு செறிவாக இல்லை என்று கொண்டாலும்.. அசாதாரண உடல் நிலைகள் அசாதாரண நிலைகளை மனிதரில் ஏற்படுத்த செல்வாக்குச் செய்யலாம். பறவைகளுக்கு வழியறிய புவி காந்தப்புலத்தைப் பாவிக்கின்ற போது மனிதரில் அதன் செல்வாக்கு இருக்கவே செய்யும்..! காந்தப்புலம் புவியின் வடக்கிரூந்து தெற்காக செல்கிறது. மூளை மற்றும் இதயத்தை குருதிச் சுற்றோட்டத்தை புலத்திசைக்கு எதிராக வைப்பதன் மூலம் உடலில் அசாதாரணங்கள் தோன்றலாம். அவை உடல் நோயை உண்டாக்கும் என்பதல்ல அர்த்தம். அசாதாரண சூழல் உருவாகலாம். அதைத் தடுக்கவே கோவில்களிலும் இதைப் பின்பற்ற கூறி இருக்க வேண்டும்..!//

இதில் சொல்லப் படும் அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் ,உருவாகலாம் ,இருக்க வேண்டும் என்று எழுதுவது விஞ்ஞானம் இல்லை, எதுவித ஆதாரமும் அற்ற சொந்தக் கற்பனைகள், பூச் சுற்றல்.மற்றவனை மடையனாக்கும் அயோக்கியத் தனம்.சொந்தக் கற்பனைகள் புனை கதைகள் விஞ்ஞானம் இல்லை.

Link to comment
Share on other sites

நெடுகளபூவன், தயா ஆகியோர்க்கு நன்றி.

தம்பி நாரதா! நம்முடைய ஆலயங்கள் அனைத்தும் மெய்ஞ்ஞானிகளால் ஸ்தாபிக்கப் பட்டவை. அதில் உள்ள வழிமுறைகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை தருபவை.

ஆலயத்திற்குள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்று ஒரு விதி உண்டு.

அது ஏன் என்று பல பேர் கேட்டனர். எளிமையாக சொல்ல வேண்டுமானால் அனைவரையும் சமமாக இருக்க செய்ய வேண்டும் என்று ஒன்று.

விஞ்ஞான ரிதியன இதற்கு ஒரு விளக்கம்.

நம்முடைய ஆலயங்கள் எல்லாம் கருங்கற்களினால் ஆனவை. கருங்கற்கள் எதையும் தன்னுள்ளே வாங்கி சிறிது நேரத்திற்கு பிறகு அப்படியே பிரதிபலிக்கக் கூடியவை.

நம்முடைய ஆலயங்களுக்கு உச்சி வேளையில் சென்றால் குளிர்ச்சியாகவும். இரவு வேளைகளில் சென்றால் கதகதப்பாகவும் இருப்பதைக் கண் கூடாக காணலாம்.

சிவாசாரியார்கள் சொல்லும் வேத மந்திரத்தின் அதிர்வு அலைகளை அதே போல அது தேக்கி வைத்துக் கொண்டு பின்னர் வெளியிடும். ஆதலால் அது எவ்வளவு நம்முடைய உடம்பில் உள்ள முக்கிய பாகங்களான மூளை, இருதயத்தை சென்று அடைகிறதோ அந்த அளவிற்கு நன்று, ஆதலால மேலாடை இல்லாமல் ஆண்கள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று வகுத்தனர்.

மார்கழி மாதம் ஓசோன் (ozone) படலம் அதிகமாக உள்ளதால் அப்போது குளித்துவிட்டு ஆலயத்திற்கு வருபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும். இது போல நம்முடைய சம்பிரதாயங்களில் விஞ்ஞானத்தை மிஞ்சிய நடைமுறைகள் உண்டு.

நடராஜரின் நடனம் Cosmic Dance ஐ ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். (ஆதாரம் : The Tao of Physics by Fritz carpz).

இவ்வளவு சிறப்பான சமயம் உலகினில் எங்கும் இல்லை. ஆதலால் நாரதர் போன்ற நையாண்டிகளுக்கு விரைவில் பதில் சொல்வோம்.

"சைவத்தின் மேற்சம யம்வே றிலையதிற் சார்சிவமாந்

தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான் மறைச் செம்பொருள் வாய்

மைவைத்த சீர்திருத் தேவார முந்திரு வாசகமு

முய்வைத் தரச்செய்த நால்வர் பொற் றாளெம் முயிர்த்துணையே."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நெடுக்ஸ் எழுதியது, செறிவான காந்தப் புலத்தின் தாக்கமே கேள்விக் குரியதாக இருக்கும் போது, நமஸ்காரம் செய்யும் போது எல்லா இடத்திலும் இருக்கும் காந்தப்புலம் எப்படி தாக்கம் செலுத்தும்? இது பற்றி எந்த ஆராய்வுகளும் மேற் கொள்ளப்படவில்லையே? எல்லா இடத்திலும் இருக்கும் காந்த்தப்புலம் தான் நமஸ்காரம் செய்யும் போதும் இருக்கிறது.செறிவான காந்தப்புலம் தாக்கம் செலுதுகிறாதா என்பதே இன்னும் நிருபிக்கப்படாத நிலையில் புவியின் காந்தப்புலம் தாக்கம் செலுத்தும் என்பது எதுவித ஆதாரமும் அற்ற புனை கதை.

The earth’s core is molten metal and as it spins electric currents are created within these metals that produces a magnetic field. Man has evolved within the earth’s magnetic field, and can cope with the slight fluctuations from time to time caused by weather and the sun’s activity. But when the earth’s magnetic field is disturbed so that the background field we experience is different to normal, the human body can experience unusual stresses that lead to ill health or a slowing down of the normal healing processes.

‘Energy drains’ are natural structures that regulate the earth’s energy flow by funnelling away negative energies; if these become blocked, this can impair the earth’s natural ability to balance and harmonise its energy.

http://www.hk4health.co.uk/geopathic.htm

கீழே உள்ள இந்த இணைப்பில் பரிசோதனை ரீதியான முடிவுகள் உள்ளன..! செறிவான காந்தப்புலத்தாக்கம்.

http://www.inchem.org/documents/ehc/ehc/ehc69.htm

நமஸ்காரம் தொடர்பில் காந்தப்புல அறிவூட்டல் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. விங்கிபீடியா தரும் தரவுகளால் இவற்றை நிறுவவோ மறுதலிக்கவோ முடியாது. பல ஆய்வுகள் செய்யப்பட்டால் மட்டுமே சில சாத்தியங்களை நிறுவ முடியும். நாம் இங்கு மக்கள் கடைப்பிடிக்கும் சில சமய அநுட்டானங்களின் படி அடிப்படை அறிவூட்டலுக்கு இட்டுச் செல்ல முடியும் என்றே சொல்ல விளைந்துள்ளோமே தவிர நிறுவவில்லை . அது யதார்த்தமானது கூட.. அறிவியல் ரீதியாக சிந்திக்கப்பட வேண்டிய அல்லது படப்படும் விடயமும் கூட..! நமஸ்காரம்.. காந்தப்புலம் ரீதியான ஆய்வுகளை செய்வதால் பல தகவல்கள் வெளிவரலாம்..! எதிர்காலத்தில் அதற்கும் சாத்தியப்பாடு உண்டு..! காரணம் காந்தப்புலத் தாக்கம் பற்றிய ஆய்வுகள் பல இன்னும் முழுமை பெற்றவையாக இல்லை. விஞ்ஞானமே கண்டுபிடிக்க எண்ணிலங்காதவை இருக்கின்றன...! மெஞ்ஞானம் சில அடிப்படைகளை மக்களுக்குள் விதைப்பது விஞ்ஞானம் சார்ந்தும் உள்ளதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்..!

The Earth’s Magnetic Field

Fluctuations in the level of the Earth’s Geomagnetic Field (GMF), a quasi static magnetic field, and geomagnetic storms have been associated with a number of health effects and disorders in scientific literature spanning more than 50 years.

Magnetic fields are ever present in our lives. They exist wherever there is a flow of charged particles.

The GeoMagneticField is roughly akin to a bar-magnet running from pole to pole.

There are contributions to this field from solar winds, the Earth’s core, local crust variations, and the atmosphere.

Values of the field range from 20T-70microT. In Bristol the value of total intensity is~45microT.

Why Look at Magnetoreception?

Humans have long utilised the GMF for navigation using compasses.

Humans were not thought to be able to detect the GMF in any meaningful way.

Now there are several competing theories to show that biological reactions in animals arise with GMF interaction.

Some reactions may have a profound effect upon human health.

Aldrich, Andrews and Liboff (2001) The results offer evidence that a metric of EMF’s, incorporating a geomagnetic component, may finally provide some clarification on the protracted quandary about EMFs and cancer risk.

How does the GMF interact with life on Earth?

Three suggested mechanisms for animals: Induction, RPM and magnetite.

Most of the work on magnetoreception in animals has been concentrated on birds and turtles obvious migratory participants.

Wiltschko (2005) -The available evidence suggests that birds use a magnetite mechanism and RPM to navigate. The RPM is light dependent and is thought to be influenced by magnetic fields.

Magnetite, (Chemical Formula: Fe3O4, Iron Oxide) mechanism in the upper beak provides on position as component of a ‘map’.

Magnetite is present in the human brain.

What are the Reported Effects of GMF Interactions with Humans?

Sudden death

Seizures

Hallucinations

Heart attacks

Strokes

Depression

Suicide

Visual acuity - light perception

Melatonin suppression

http://www.electric-fields.bris.ac.uk/gmfintro.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அந்தத் துறையில கோட்டை விட்டிடுங்கோ

விஞ்ஞானம் என்று பார்த்தால் அதில கோட்டை

சமயம் என்று பார்த்தால் ஆயிரம் ஓட்டை

அதுக்குள்ளை சமயத்துக்கை விஞ்ஞானம் ...

நல்ல சாம்பார் தான் கலக்கிக் குடியுங்கோ :P

Link to comment
Share on other sites

17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.

திருச்சிற்றம்பலம்

சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது.

Bhairavar.jpg

Link to comment
Share on other sites

பண்டிதர் ஐயா, நாரதர் ஐயா, சபேசன் ஐயா அவர்களே அங்கே சுயமரியாதை யியக்க சூறாவளி மையம் கொண்டுள்ளது வந்து என்னென்னும் பாருங்கோ!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22797

Link to comment
Share on other sites

துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.

Link to comment
Share on other sites

விபூதி

lingam.gif

சைவர்களால் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதி, உருத்திராக்ஷம் என்னும் இரண்டும்.

விபூதி என்ற பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரியம்(செல்வம்). திருநீறு என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. திரு என்றால் தெய்வத்தன்மை. நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள். நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும். அதனை மகிழ்ச்சியுடன் பூசி மகிழ்பவர்கள் அடையும் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்

"கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாருங் சிவகதி

சிங்காரமான திருவடி சேர்வரே"

திருநீற்றின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் "திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்" என்னும் அற்புதப் பாசுரத்தைத் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.

"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே"

"நீறு இல்லா நெற்றி பாழ்" என்பது ஒளவை வாக்கு.

Link to comment
Share on other sites

பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் உண்டாக்கியது வெண்மையான் திருநீறு. இதனை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்கள் [ஆணவம், கன்மம், மாயை] ஆகியவைகளை சிவாக்கினியில் தகித்து வெண்மையான ஆன்மா ஆகும், முக்தி பேற்றைப் பெறுவார்கள்.

ஞான் அக்கினியால் தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்கும் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி விபூதி

திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.

விபூதியை பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக்குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தரித்தல் வேண்டும்.

விபூதியை வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

விபூதியை நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும்.

வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

Link to comment
Share on other sites

சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், மல சல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ இல்லாதவர் தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்.

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

3. தீட்டுக் கழிக்கும்.

4. உடலைச் சுத்தம் செய்யும்.

5. வியாதிகளைப் போக்கும்.

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

7. முகத்திற்கு அழகைத் தரும்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

9. புத்திக் கூர்மையைத் தரும்.

10. ஞானத்தை உண்டாக்கும்.

11. பாவத்தைப் போக்கும்.

12. பரக்தியைத் தரும்.

275px-Murugan1.gif

Link to comment
Share on other sites

"மால் அயன் இந்திரன் மற்றைய அமரர் மலர் மகளிர் சசி மற்றை வானக்

கோல மடவார் இயக்கர் கந்தருவர் இராக்கர் குல அரசர் வேதச்

சீல் முனிவரர் மற்றோர் இவருளரும் தவமுடையீர் திருவெண்ணீறு

சாலவும் உத்தூளனம் முப்புண்டாம் நாள்தோறும் போற்றித் தரியார் யாரே"

"பத்தியொடு சிவ சிவ என்று திருநீற்றைப் பரிந்து கையால் எடுத்து

பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்தபுயமீது விழ

நித்தமும் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு

நடுவினை அணுகாது, தேகம் பரிசுத்தமாம், நீங்காமல் நிமலன் அங்கே

அத்தியோடு நித்தம் விளையாடுவான், முகத்திலே தாண்டவக் செய்யும் திரு

சஞ்சலம் வராது, பரகதி உதவும், இவனையே சக்தியும் சிவனும் எனலாம்

மத்தினிய மேரு என வைத்து அழுதினைக்கடையும் மால்மருகனான முருகா

மயிலேறி விளையாடும் குகனே பொன்வயல் நீடு மலைமேவு குமரேசனே"

அணைத்து லோகத்திலும் அங்குள்ள தெய்வங்களும், தேவர்களும், அடியார்களும் திருநீறு அணிகிறார்கள்.

"கண்ணன் வெண்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் புண்ணியத்

திங்கள் வேணி யானிருபாதம் போற்றி"

எனக் கண்ண அவதாரத்திலும் கண்டிகையும் நீறும் அணிந்தனர் - என்று கூறியிருப்பதையும் வாயு சங்கிதையில் உத்திர காண்டத்திலும், மகாபாரதத்தில் அநுசாசன் பர்வத்தில் 14-ஆம் அத்தியாயத்திலும் கூர்ம புராணத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு மகாமுனிவரிடம் சிவதீட்சை பெற்று சிவபூஜை செய்து, தான் விரும்பிய பலனைப் பெற்றார் என்று கூறியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். எனவே ஸ்ரீ மன் நாராயணன் சிவஸ்துதி செய்பவனாகவும், சிவ சின்னமான விபூதியை மூன்று பட்டைக் கோடுகளாக நெற்றியில் தரித்தவராகவும், ருத்திரனுடைய கண்ணிற்குச் சமமானதாகவுள்ள ருத்திராக்ஷ மணிமாலையை அணிந்தவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

விபூதிக்கு பஸிதம், பஸ்மம், க்ஷ¡ரம், இர¨க்ஷ என்ற பெயர்களும் உண்டு. எல்லாப் பாவங்களையும் போக்குதலால் பஸ்மம் எனவும், பிரகாசித்தலால் பசிதம் எனவும். ஆபத்தைப் போக்கலால் க்ஷ¡ரம் எனவும், பூதப்பிரேத பிசாச பிரம ராக்ஷஸ அபஸ்மார பவ பீதிகளின்றும் காத்தலால் இர¨க்ஷ எனவும் திருநாமங்கள் வந்தன.

இவ்வளவு மேன்மை பொருந்திய விபூதி யணிவதிலும் மேலான சிவபுண்ணியம் யாதுளது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.