Jump to content

Recommended Posts

முடிப்புரை

தெய்வத்தை அது எனக்கொண்டு வணங்குஞ் சமயம் எது? அது தெரியவில்லை. அவன் எனக்கொண்டு வழி படுஞ் சமயங்களே பல. அதைத் தேவன், கர்த்தன் என்கிறது ஒரு சமயம். பரமண்டலத்தி லிருக்கிற எங்கள் பிதாவே! என்பது அதன் விளி. பரமண்டலத்தி லிருக்கிற எங்கள் மாதாவே! என அது விளியாது. (God is great) ஆண்டவன் பெரியவன் என்கிறது இன்னொன்று. (Goddess is great) ஆண்டவள் பெரியவள் என்னாது அது. பெண் எனவுங் கொண்டு வணங்கலா மென்பதற்கான குறிப்பொன்றும் அவற்றிற் காணப்பட்டிலது. அவற்றிலுள்ள மாதரும் அத்தெய்வத்தை அப்படித்தான் வணங்க வேண்டும். பெண்பாற் பெயரால் வணங்க அவருக்கும் அனுமதி கிடையாது. அவருக்குரிய தரத்தை யங்கீகரிக்க விரும்பாத ஆடவரே அச்சமயங்களை ஆக்கியிருக்க வேண்டும் என்பது அதனாற் புலனாகிறது. அப்படியிருந்தும் மாதர் அச்சமயங்களை எதனால் ஆசரிக்கின்றனரோ? தெய்வத்தை அவள் எனக் கொண்டு வணங்குஞ் சமயம் ஒன்றுண்டு. அவ்வவள் சத்தியெனவும் படுவாள். அவளுக்குப் பர்த்தாவுண்டு. அவன் சிவன். அவனை அவள் கீழே தள்ளி மிதித்துக் கொண்டு கோர சொரூபத்தோடு நிற்கிற படத்தைப் பலர் பார்த்திருக்கலாம். கோரசொரூபமுள்ள ஒருத்தியால் அல்லது ஆண்மையற்ற ஒருவனால் அச்சமயம் ஆக்கப்பட்டிருக்கும். அவ்வணக்கத்தை ஆண்மையுள்ள ஆடவரும் பெண்மையுள்ள பெண்டிரும் எங்ஙனம் மேற்கொள்கின்றனரோ? தந்தை தாயாரைப் போற்றி யொழுக வேண்டும். அப்பாக்கியம் பெறாத புத்திரப் போலிகளுமிருப்பர். காணா பத்திய கெளமார சமயங்களை அன்னாருட்பட்டவர் ஆக்கினார்போலும். சற்புத்திர புத்திரிமார் அச்சமயங்களை அணுகலாமா? தவத்தால் ஓரளவு தெய்வத்தன்மை யெய்திய வுயிர்கள் சில. ஆயினும் அவற்றிடம் உயிர்க்குணம் முனைப்பது முண்டு. அதனால் விரும்பத்தகாத செயல்களுங் காணப்படலாம். அவ்வுயிர்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு சமயம் தெய்வமென்னும். அச்சமயம் மெய்த்தெய்வத்துக் குரிய குணம் செயல்களை அவ்வுயிரின்பால் ஏற்றி அதனைத் தெய்வமெனக் கொண்டு கூறும் புகழ்கள் பொருள் சேராப்புகழ்கள் எனக் கடிந்தொதுக்கினார் பரிமேலழகர். உண்மை கண்டு உய்தி பெறுதற்கான அறிவும் ஆற்றலும் காதலும் உள்ள ஆடவர் பெண்டிர் அவ்வுயிர்வணக்கச் சமயங்களிற் புகுவாரா?

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply

அங்ஙனம் பெண்டிர்க்காகாத, ஆடவர்க்காகாத, புத்திரபுத்திரிமாருக்காகாத, திருத்தம்பெற விரும்புபவர்க்காகாத சமயங்கள் எத்தனை யெத்தனை?

திருக்குறட் கடவுள் வாழ்த்து பத்துக் குறட்பாக்களைக் கொண்டது. அவற்றிலுள்ள கடவுட் பெயர்களத்தனையும் ஆண்பாற் சொற்கள். பெண்பாலின்றி ஆண்பா லென்பதற்கும், ஆண்பாலின்றிப் பெண்பா லென்பதற்கும் கருத்தில்லை. கடவுள் எட்டுக்குணக்களை யுடையவர். அவை தன் வயத்தினாதல். தூயவுடம்பினனாதல் முதலியன. முதல் எட்டுப் பாடல்கள் அவ்வெட்டுக் குணங்களையும் வகுத்துக் காட்டி ஒவ்வொரு குணத்தையும் அவர் உடையார் என்றன, அக்குணங்களின் தொகையும் அதற்குரியார் அக்கடவுள் என்பதும் ஒன்பதாங் குறளிற் சொல்லப்பட்டன. அக்குணங்கள் உமை. அக்கடவுள் சிவன். அச்சிவனாரே முழுமுதற்கடவுளென்பது சர்வ வேதாகம புராணேதிகாச சாரமாகும். அதை விளக்கும் புராண சரித்திரங்கள் பல. அவற்றுள் ஒரு சரித்திரம் குறிப்பிடத் தக்கது. அதற்குச் சமமாக வேறொரு சரித்திரம் இருப்பதாகவும், அன்னதொரு சரித்திரம் வேறு தெய்வங்களுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. பிருங்கி யென்னும் மஹர்ஷி உமாதேவியையும் விலக்கிச் சிவபிரானை வழிபட்டுப் பேறெய்தினா ரென்பது அச்சரித்திரம்.

'ஆன்ற வைம்புல னொருவழிப் படுத்தி

யார்வம் வேரறுத் தையமொன் றின்றி

யூன்றி ரிந்திடி னுந்நிலை திரியா

வுண்மை யே பிடித் துலகங்கண் முழுது

மின்ற வெம்பெரு மாட்டியை நீக்கி

யெம்பி ரானையே வழிபடு மியற்கை

மூன்று தாளுடை யொருவனுக் கல்லா

லேனை யோர்களான் முடியுமோ முடியா?

(கந்த புராணம்)

என்றது காண்க. மூன்று தாளுடையொருவன் - பிருங்கி, செய்யுள், விக்குள் என்ற சொற்கள் போன்றது கடவுள் என்ற சொல். கடத்தல் என்பது அதன் பொருள். கடத்தலாவது கடந்து நிற்றல். எதைக் கடந்து நிற்றல்? உலகுயிரனைத்தையுங் கடந்து நிற்றல். அந்நிலையில் அக்குணங்கள் அக்கடவுளிடம் அடங்கிக் கிடக்கும். அவன் தான் மாத்திரமாய் நிற்பான். அப்போது அவனுக்குரிய சிறப்புப் பெயர் சிவன் என்பதே.

Link to comment
Share on other sites

'நிறைசிவத் தடக்கஞ் சத்தி' (தணிகைப்புராணம்)

என்றது காண்க. கணவனை அநுசரிப்பதே மனைவிக் கழகு. அதுவே பதிவிரதா தருமம். அதனால் கணவன் தலைமை வெளிப்படும். அ·தவளுக்கும் பெருமையே. அப்படியே தம்மை உமை அநுசரிக்குமாறு செய்து சிவனார் முதன்மை பெறுகிறார். அம்முதன்மையே அப்பிருங்கியாற் போற்றப்பட்டது.

அச்சிவனார் தம்மின் வேறல்லாத தம் சத்தியை வெளிப்படுத்துகிறார். அந்நிலையிற்றான் அவர் கொள்கிற உமையொருபாகர், தாக்காயணி வல்லபர், பார்வதி நாதர், அம்பிகா நாயகர், மீனாட்சிசுந்தரர், கெளரிசங்கரர் என்ற திருக்கோலங்கள் கிடைக்கின்றன. அக்கோலங்களில் மாதருக்குரிய தரமும் நன்கு மதிக்கப்பட்டிருக்கிறது. ஆகலின் அம்மாதொருபாகத் திருக்கோலங்களை மாதரும் வணங்கலாம். ஆடவரும் வணங்கலாம். அவற்றுக்குக் காரணம் அப்பரசிவப்பிரபு செய்து கொண்ட திருக்கலியாணமே. அவ்விழாச் சைவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடந்து சர்வ ஜனங்களுக்கும் பரமசுகத்தைத் தருவதாக.

முற்றிற்று.

ஸ்ரீமத் சிவஞானசுவாமிகள் திருவடி வாழ்க.

Link to comment
Share on other sites

ஆறாவது

வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

சேரமான்பெருமாணாயனார் புராணம்

காவலர்ம கோதையார் கொடுங்கோ ளூர்க்கோக்

கழறியவை யறிந்தகோச் சிலம்போசைக் கருத்தார்

நாவலர்கோ னண்பரடிச் சேர னென்றே

நவின்றுவரும் வண்ணானை நயந்த கோநற்

பாவலர்கோப் பாணபத் திரனால் வாய்ந்த

பரமர்திரு முகம்வாங்கிப் பணிகோ வெற்பின்

மேவியகோ வானைக்குக் குதிரை வைத்த

வீரர்கோ வெனையாளுஞ் சேரர் கோவே.

லைநாட்டிலே, இராஜதானியாகிய மகோதையென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். அவர் பாலியதசையிலே தானே, வியாதிபீடையினால் வருஞ் சனனவைராக்கியம் தன்னுடைய தேகதோஷத்தைக் கண்டும்வருந் தேவவைராக்கியம், சகல சம்பத்துக்களையும் குறைவற அநுபவித்து இனிப்போதும் என்று வரும் ஐசுவரிய வவராக்கியம். ஆன்மிக தைவிக உற்பெளதிகங்களினாலே வரும் பிரபஞ்ச வைராக்கியம், அருத்தத்தைத் தேடு தலினாலுங்காத் தலினாலுங் கள்ளர்கொண்டு போதலினாலும் உண்டாகுந்துக்கம்பற்றி வருந் திரவியவைராக்கியம், தாய் தந்தை மனைவி மைந்தர் சுற்றத்தார் நண்பர் முதலாயினாரைப் பிரிந்த துக்கத் தினாலே கூட்டமெல்லாம் பிரித்த காலத்திலே துக்கத்துக்கு எதுவென்று வருஞ் சங்கவைராக்கியம், காமுகனாயிருக்கின்றவன் தான் மோகிக்கப்பெற்ற ஸ்திரீயினிடத்திலே குணத்திலாயினும் தேகத்திலாயினும் வைராக்கிய ஏதுவாகிய ஒரு தோஷத்தைக் கண்டபோது வரும் ஸ்திரீ வைராக்கியம், அன்னபானாதிகள் ஒருபொழுது இல்லாதிருக்கினும் தேகம் நில்லாது எத்தனைநாள் எத்தனைவகையாகப் புசித்தாலும் திருத்தியடையாது என்று வரும் போசனவைராக்கியம், தானத்துக்குப் போய்த் தள்ளுண்டதனால் வரும் பிரதிக்கிரகவைராக்கியம், இகத்திலே இப்படிப் பட்டதொரு எதுவுமின்றிப் பூர்வஜன்ம சிவபூஜா புண்ணிய பலத்தினாலே தேகாதியாகிய சர்வவஸ்துக்களிலும் வரும் வைராக்கியம் என்னும் பத்துவகை வைராக்கியங்களுள் இறுதியில் நின்ற நிருகேதுகமாகிய உத்தமவைராக்கியத்தையுடையவரா

Link to comment
Share on other sites

கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, "அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் "அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்" என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார்.

அந்நாயனார் தில்லையின்கணுள்ள திருச்சிற்றம்பலத்திலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுஞ் சபாநாயகருடைய திருவடித் தாமரைகளே தாந்தோடும்பொருளும் தமக்குரிய பெருந்துணையுமென்று தெளிந்த மெய்யறிவினாலே, அத்திருவடியை மிகுந்த அன்பினோடு சைவாகமவிதிப்படி எந்நாளும் பூசிப்பாரானார். பூசைமுடிவிலே சபாநாயகர் அவரைத் தமது திருச்சிலம் பொலியை கேட்பிப்பாராயினார். சேரமான்பெருமாணாயனார் சிவனடியார்களுக்குந் தரித்திரர்களுக்குங் கனகமாரிபொழிகின்றவராகி, பரமசிவனுக்கு உரிய பல யாகங்களைச் செய்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து,

Link to comment
Share on other sites

331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்

சைவ வினா விடை

Link to comment
Share on other sites

ஐயா நாவலர் சுவாமிகளே தாங்கள் தில்லை சிதம்பரத்தக்கு ஒரு தரம் எழுந்தருளவேண்டும்.நீச பாஸையான தமிழில் உள்ள தேவாரம் திருவாசகத்தை பாடக் கூடாதென்றும் தீட்சதர்கள் அழிச்சாட்டியம் பண்ணுகிறார்கள்.அது உமது கண்ணுக்கும் தென்படவில்லையோ.ஆறுமுகசாமி என்று 73 வயதான சிவபக்தர் இதற்காக இந்தத் தள்ளாத வயதிலும் போராடிவருகிறார்.தமிழடியார்க

Link to comment
Share on other sites

நண்பரே! சிதம்பரத்தில் உண்மையில் நடந்த கதை இது தான்

சிலர், சிலதினங்களுக்கு முன்பு, சிவனடியார்கள் போல் வேடமிட்டு, ஸ்ரீ சிதம்பரம் திருக்கோயிலுக்குள் சென்று, அங்கு மரபுவழிநடந்து வரும் வழிபாட்டு நடை முறைகளுக்கு மாறாகச் சிலகுழப்பங்களைச் செய்ய, அங்கு பூஜைகள் செய்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சென்று குழப்பம் செய்தவர்களை அப்புறப்படுத்த, வெளியேற்றப்பட்ட அவர்கள் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் சென்றார்கள் என்று செய்தித்தாள் மூலம் அறிகிறோம். இவர்கள் நோக்கம் வழிபாடு செய்வது அல்ல. வம்பு செய்ய வேண்டும் என்பதே.

கன்னட நாட்டான் ஈ.வே.ரா சிலையில்(பெரியார்) இருந்து கிளம்பிய கூட்டம் சைவக் கூட்டமாக சத்தியமாக இருக்காது. இது எல்லாம் தி.க.வினர் சைவத்தை எதிர்த்து விடும் நாடகங்கள் தான்.

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

இவர்களே சைவர்கள்

(ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்கள் திருக்குழாம், கரிவலம்வந்தநல்லூர் வெளியீடு)

nalvar3.jpg

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி

வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி

ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

- ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் சுவாமிகள்.

Link to comment
Share on other sites

தாய், தந்தையரின் மனம் குளிரும்படி காரியங்களைச் செய்பவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவ வித்யா உபதேசம் செய்த குருமார்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் சைவர்கள்.

சைவத்தின் மேற்சமயம் வேறில்லை என்ற உறுதிப்பாட்டை உடையவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமானை தலைவனாக கொண்டு அப்பிரானுடைய திருவடியை தம் நெஞ்சில் சுமப்பவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமானுடைய புகழினை பாடுபவர்களும், திறனை பேசுபவர்களும் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமானால் "அன்னை" உமாதேவியாருக்கு உபதேசிக்கப் பெற்ற "வேத ஆகமங்களை" பூஜிப்பவர்களும் சைவர்கள்.

ஸ்ரீ வேத, ஆகம, திருமுறை, சாஸ்திர, புராண மற்றும் சிவபரத்துவ நூல்களுக்கு இழுக்கான செயலை மனம், மொழி, மெய்களால் செய்யாமல் இருப்பவர்கள் சைவர்கள்.

Link to comment
Share on other sites

ஸ்ரீ பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சாஸ்திரங்களையும் படித்து அதனை உணர்ந்து உறுதிப்பாடுடன் வாழ்க்கையை நடத்துபவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமானுடைய திருச்சின்னங்கள் தரித்தவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமானுடைய திருச்சின்னங்களைத் தரித்தவர்களை மானசீகமாக வணங்கி மகிழ்பவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமானுடைய பிரதி பிம்பமாக திகழும் சைவ ஆதின கர்த்தாக்களுக்கு அகத்தாலும், புறத்தாலும் வழிபாடுகளை நடத்துபவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமான் அன்னை உமாதேவியாருக்கு உபதேசித்த பேரூர் புராணம் கூறும் அடியார்களின் அக, புற இலக்கணங்களை வாழ்வில் வழுவாது கடைப்பிடிப்பவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சமயக் குரவர்கள் கூறிய நல்வழிகளைக் கடைப்பிடித்து நாணயமாக வாழ்வை நடத்துபவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ பெரிய புராண நாயகர்கள் அறுபத்து மூவரையும் ஒன்பது தொகை அடியார்களின் பெருமைகளைப் பேசி அருமைதனை உணர்ந்து ஆடி, பாடி, மகிழ்ந்து விழா எடுப்பவர்கள் சைவர்கள்.

Link to comment
Share on other sites

இலக்கண இலக்கிய சூறாவளி திராவிட மாபாஷ்ய கர்த்தா ஸ்ரீ சிவஞான சுவாமிகளின் கொள்கை கோட்பாடுகளை இவ்வுலகிற்கு உணர்த்தி அதன்படி நடப்பவர்கள் சைவர்கள்.

சிவாலயத்தில் விழா எடுத்து வினைகளை வேறருக்க முயலுபவர்கள் சைவர்கள்.

ஸ்ரீ சிவபெருமான் இடத்திலும், சிவ ஆலயத்திலும், சிவனடியார்கள் இடத்திலும் மனம், மொழி, மெய்களால் அன்பை செலுத்தி சிவபெருமான் திருவடியைக் கண்டு பற்றிக் கொண்டவர்கள் சைவர்கள்.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்று எண்ணும் எல்லா உயிர்களும், எல்லா உயிர்களையும் தம்முயிர் என எண்ணி யாவும் சிவம் என கருதி சித்தத்தை சிவன் பால் வைத்திருப்பவர்கள் சைவர்கள்.

Link to comment
Share on other sites

உரகா பரணத் திருமார்பும், உமைஒப் பனையாள் இடப்புறமும்,

சிரமா லிகையும் புரிசடையும், செய்ய வாயும் கறைமிடறும்,

வரதா பயமும் மழுமானும், வயங்கு கரமும் மலரடியும்,

கருவா புரியான் வெளிப்படுத்திக், காட்சி கொடுத்து நின்றானே.

- ஸ்ரீ சைவ சிரோண்மணி ஞான வரதுங்க ராம பாண்டியர்

Link to comment
Share on other sites

ஆறாவது

வனமுலையாள் சருக்கம்

கணநாதநாயனார் புராணம்

கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்

கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு

நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து

நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி

வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி

வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்

புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்

பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே.

சோழமண்டலத்திலே, சீர்காழியிலே, பிராமணகுலத்திலே, கணநாதநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருத்தோணியப்பருக்கு மிகுந்த அன்பினோடு தினந்தோறுந் திருப்பணிகள் செய்பவர். தம்மை விரும்பி வந்து, அடைபவர்களை, திருநந்தனவனம் வைத்தல், பூக்கொய்தல், திருமாலைக்கட்டல், திருமஞ்சனமெடுத்தல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றல், திருமுறையெழுதல், திருமுறைவாசித்தல் முதலாகிய திருத்தொண்டுகளுள் அவரவர்க்கு ஏற்ற திருத்தொண்டுகளிலே பயில்வித்து, அவர்களைச் சிவனடியார்களாக்குவார். கிருகதாச்சிரமத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் முப்பொழுதினும் பேராசையோடு விதிப்படி பூசை செய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே திருக்கைலாசமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

Link to comment
Share on other sites

ஆறாவது

வனமுலையாள் சருக்கம்

கூற்றுவநாயனார் புராணம்

குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த

மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி

மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்

சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து

திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

ளந்தையென்னும் பதியிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கூற்றுவநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரிப்பவர். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்பவர். அவர் திருவருள் வலியினாலே பெருஞ்செலவமுடையராகி, கச ரத துரக பதாதியென்னுஞ் சதுரங்கங்கள் நிறைந்த வீரச்செருக்கில் மேலாயினார். பலவரசர்களோடு யுத்தஞ்செய்து, அவர்களை வென்று அவர்களுடைய நாடுகளெல்லாற்றையுங் கவர்ந்து அரசர் திருவில் முடி ஒன்று தவிர மற்றவைகளெல்லாவற்றையும் உடையராயினார். உலகத்தை ஆளுதற்குத் தமக்கு முடிசூட்டும் பொருட்டுத் தில்லைவாழந்தணர்களை வேண்ட; அவர்கள் "நாங்கள் சோழகுலத்தாருக்கேயன்றி மற்றவர்களுக்கு முடிசூட்டோம்" என்று மறுத்து, தங்களுக்குள் ஒரு குடியை முடியைக் காத்துக்கொள்ளும்படி இருத்தி, சேரமண்டலத்துக்குப் போயினார்கள்.

கூற்றுவநாயனார் ஐயுறவினாலேவனந் தளர்ந்து, சபாநாயகரைப் பணிந்து அற்றைநாள் இரவிலே "எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு நித்திரை செய்ய; சபாநாயகர் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார்; கூற்றுவநாயனார் அவைகளையே முடியாகச் சூடி, பூமி முழுதையும், பொதுநீக்கி ஆண்டார். சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற முக்கிய ஸ்தலங்களெங்குஞ் சென்று வணங்கி, திருப்பணிகள் செய்து, சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

வார்கொண்டவனமுலையாள் சருக்கம்

முற்றுப்பெற்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.