Jump to content

Recommended Posts

  • Replies 479
  • Created
  • Last Reply

ஏழாவது

பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்

புகழ்ச்சோழநாயனார் புராணம்

பொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்

போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே

யழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே

லடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த

தழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன்

சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்

கழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த

கனன்மூழ்கி யிறைவனடி கைக்கொண்டாரே.

சோழநாட்டிலே, உறையூரிலே, புகழ்ச்சோழநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்றையரசர்கள் பணி கேட்க; உலகத் தம்முடைய செங்கோலின்முறை நிற்க, சைவசமயம் தழைக்க அரசியற்றினார். சிவாலயங்களெலாவற்றிலும் நித்திய நைமித்திகங்களை வழுவின்றி நடத்துவிப்பார். சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து கொடுப்பார்.

இப்படியிருக்குநாளிலே, கொங்கதேசத்தரசரும் குடக தேசத்தரசரும் தருந்திறையை வாங்கும்பொருட்டு, தங்கள் குலத்தார்களுக்கு உரிய கருவூர் என்னும் இராஜதானியிலே அரசுரிமைச் சுற்றத்தோடு வந்தணைந்தார். அங்குள்ள ஆனிலை என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பரமசிவனை வணங்கி, மாளிகையிலே புகுந்து, அத்தாணி மண்டபத்திலே சிங்காதனத்தில் வீற்றிருந்து கொண்டு, கொங்க தேசத்தரசர்களும் குடக தேசத்தரசர்களுங் கொணர்ந்த திறைகளைக் கண்டு, அவர்களுக்கு அருள்புரிந்து, மந்திரிமாரைநோக்கி, "நம்முடைய ஆஞ்ஞாசக்கரத்துக்கு அமையாத அரசர்கள் இருக்கின்ற அரணங்கள் உளவாகில், தெரிந்து சொல்லுங்கள்" என்றார். இப்படி நிகழுநாளிலே, சிவகாமியாண்டார் கொணர்கின்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து, "என்னையுங் கொன்றருளும்" என்று தமது வாளைக் கொடுத்து; திருத்தொண்டிலே மிகச் சிறந்து விளங்கினார்.

மந்திரிமார்கள் புகழ்ச்சோழநாயனாரை வணங்கி, "திறை கொணராத அரசன் ஒருவன் உளன்" என்று சொல்ல, "அவன் யாவன்" என்று வினாவ, மந்திரிமார் "அவன் அதிகன் என்பவன். அவன் சமீபத்திலே மலையரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள். அதுகேட்ட புகழ்ச்சோழநாயனார் "நீங்கள் படைகொண்டு சென்று அவ்வரணத்தைத் துகளாகப் பற்றறுத்து வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, மந்திரிமார் சேனையோடு சென்று, அம்மலையரணைப் பொடிபடுத்தி, அதிகனுடைய சேனைகளை வதைத்தார்கள்; அதிகன் அஞ்சி ஓடிப்போய்ச் சுரத்தில் ஒளித்துவிட்டான். புகழ்ச்சோழநாயனாருடைய படைவீரர்களிற் பலர் அதிகனுடைய படைவீரர்களின் தலைகளையும், மற்றவர்கள் நிதிக்குவைகளையும் யானை குதிரைகளையுங் கொண்டு, மந்திரிமாரோடு கருவூரிலே வந்து சேர்ந்தார்கள். புகழ்சோழநாயனார் தமக்கு முன்னே படைவீரர்கள் கொண்டுவந்த தலைக்குவைகளுள் ஒருதலையின் நடுவிலே ஒரு புன்சடையைக் கண்டார். கண்டபொழுதே நடுங்கி, மனங்கலங்கி, கைதொழுது, பெரும்பயத்தினுடனே எதிர்சென்று அத்தலையிற் சடையைத் தெரியப்பார்த்து, கண்ணீர் சொரிய அழுது, "நான் சைவநெறியைப் பரிபாலித்து அரசியற்றியபடி மிக அழகிது, சடைமுடியையுடையவர் பரமசிவன் அருளிச் செய்த மெய்ந்நெறியைக் கண்டவர். அவருடைய சடைத் தலையைத் தாங்கிவரக் கண்டும் அதிபாதகனாகிய நான் பூமியைத் தாங்குதற்கு இருந்தேனோ" என்று சொல்லி, ஒன்று செய்யத்துணிந்து, மந்திரிமாரை நோக்கி, "பூமியைக் காத்து அரசளித்துப் பரமசிவனுக்கு வழித்தொண்டு செய்யும்பொருட்டு என்னுடைய குமாரனுக்கு முடிசூட்டுங்கள்" என்று விதித்து, அதனைக் கேட்டு அயரும் மந்திரிகளைத் தேற்றி அக்கினி வளர்ப்பித்து, விபூதியை உத்தூளனஞ் செய்து, சடைச் சிரத்தை ஒருபொற்கலத்தில் ஏந்தி, தம்முடைய திருமுடியிலே தாங்கி, அவ்வக்கினியை வலஞ்செய்து உயிர்த்துணையாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை எடுத்து ஓதிக்கொண்டு, அதனுள்ளே புகுந்து, பரமசிவனது திருவடிநிழலிலே அமர்ந்திருந்தார்.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஸ்ரீ பாஷ்யசாரராகிய

சிவஞான சுவாமிகள்

ஸ்ரீ V. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள்

திருவாவடுதுறை ஆதீன வித்வான்

----------

சுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள். அவர்கள் பன்னிரண்டாவது வயதிலே திருவாவடுதுறை மடாலயம் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகியபின் வேலப்ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் ஞானோபதேசமும் பெற்று வடமொழிக் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்து மகாயோகியாய் வீற்றிருந்தருளினார்கள்.

அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் செய்த உதவிகள் பல.

1. தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்பவர்கள் செய்த உரைகளில் உள்ள ஆசங்கைகளை நீக்கிச் சூத்திரங்களின் மெய்ப் பொருள் இது என்று காட்டிச் சுவாமிகள் "தொல்காப்பியச்சூத்திர விருத்தி" செய்தருளினார்கள்.

2. நன்னூலுக்குத் திருநெல்வேலிச் சங்கர நமச்சிவாயப் புலவர் செய்த உரையையைச் சுவாமிகள் திருத்தம் செய்து "நன்னூல் விருத்தி" எனப் பெயர் தந்து உலகிற் பரப்பினார்கள்.

3. தருக்கம் கற்பவர்கள் படிக்கும் தருக்கசங்கிரக நூலையும் அதன் உரையாகிய "தருக்க சங்கிரகதீபிகை" யையும் சுவாமிகள் தமிழிலே மொழி பெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தருக்க வறிவை உண்டாக்கினார்கள்.

4. வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதம் முதலிய நூல்களில் கூறப்படும் சிவ பரத்துவத்தை ஒருங்கு உணரும்படி வடமொழியில் அப்பதீக்ஷ¢தர் செய்த "சிவதத்துவ விவேகம்" என்னும் நூலைச் சுவாமிகள் சைவத் தமிழ் மக்கள் வடமொழி ஞான நூற் பொருளை எளிதில் அறியுமாறு அவ்வாறு தமிழில் மொழி பெயர்த்தருளினார்கள்.

5. சைவசித்தாந்த அறிவு பாலர்களுக்கு உண்டாகுமாறு வடமொழியில் சர்வாத்ம சம்பு சிவாசாரியர் செய்த "சித்தாந்த பிரகாசிகை" என்னும் நூலைச் சுவாமிகள் இனிய வசன நடையில் மொழி பெயர்த்தருளினார்கள்.

6. வடமொழியிலே சொல்லப்பட்ட காஞ்சிபுர மகிமையைத் தமிழிலே திராக்ஷபாகமான கவிகளாலே சுவாமிகள் "காஞ்சிப் புராணம்" என்னும் பெயரால் இனிமை வாய்ப்பப் பாடியருளினார்கள். மகா வித்துவான் மீனாக்ஷ¢சுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய பெரும்புலவர்கள் செய்த புராண காவியங்கட்கெல்லாம் வழிகாட்டியாயுள்ளது இப்புராணமே. இதில் சித்திர கவிகளுக்கு இலக்கியம் காணலாகும்.

7. திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒவ்வோர் குறள் வெண்பாவை எடுத்து அதன் கருத்தைப் பெரும்பான்மை புராண இதிகாசக் கதைகளாலும் சிறுபான்மை சிந்தாமணி முதலிய நூல்களிலுள்ள கதைகளாலும் விளக்கிச் "சோமேசர முதுமொழி வெண்பா" என்னும் அரிய நூலைச் சுவாமிகள் இயற்றியருளினார்கள்.

8. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், குளத்தூர் பதிற்றுப் பத்தந்தாதி, கலைசைப்பதிற்றுப் பத்தந்தாதி, இளைசைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன சுவாமிகள் இயற்றியருளிய "பக்திரசப் பிரபந்தங்க" ளாம்.

9. வைத்தியநாத நாவலர் செய்த இலக்கண விளக்க நூல் உரைகளிலுள்ள பொருந்தாக் கருத்துக்களை எடுத்துக் காட்டி இலக்கண விதிகளின் மெய்ப்பொருள் இது என்று விளக்கிச் சுவாமிகள் "இலக்கண விளக்கச் சூறாவளி" செய்தருளினார்கள்.

10. திருவண்ணாமலை ஞானப்பிரகாச முனிவர் சிவஞான சித்தியாருக்குக் கூறிய உரையின் பொருந்தாமையைச் "சிவசமவாத வுரை மறுப்பு" என்னும் நூலால் சுவாமிகள் விளக்கியருளினார்கள்.

11. சிவாகமங்களுக்கெல்லாம் உரையாணியாகிய சிவஞான சித்தியாருக்கு, முதனூலாகிய சிவஞான போத வார்த்திகங்களுக்கும் வழிநூலான சிவப்பிரகாசத்திற்கும் சிவாகமங்களுக்கும் இணங்கச் சுவாமிகள் அருமருந்தன்ன "பொழிப்புரை" அருளிச் செய்திருக்கிறார்கள்.

அவ்வுரைக்கு இணையாக நிற்பது திருக்குறட் "பரிமேலழகருரை" யொன்றே.

12. வடமொழிச் சிவஞானபோதச்சூத்திரங்களுக்க

Link to comment
Share on other sites

சுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள்.

நாவலர் ஐயா,

பரம்பரைச் சைவ வேளாளர் குலம் என்றால் என்ன ?

Link to comment
Share on other sites

நாவலர் ஐயா,பரம்பரைச் சைவ வேளாளர் குலம் என்றால் என்ன ?
வேளாண்மை (உழவு) செய்து வரும் அற்புதமான குலம். தமிழில் முதல் பாஷ்யம் (நம் மொழியில் உள்ள ஒரே பாஷ்யம் இது தான்)தந்த மாமுனிவர் நம்முடைய சிவஞான சுவாமிகள்.

sivagnana.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.