Jump to content

Recommended Posts

விநாயக விரதம்

vinayagar.jpg

394. விநாயக விரதம் எத்தனை?

சுக்கிரவார விரதம், விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சட்டி விரதம் என மூன்றாம்.

395. சுக்கிரவார விரதமாவது யாது?

வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே பழம் முதலியன இரவில் உட்கொள்ளல் வேண்டும்.

396. விநாயக சதுர்த்தி விரதமாவது யாது?

ஆவணி மாசத்துச் சுக்கிலபக்ஷ சதுர்த்தியிலே விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்து, இரவிலே பழமேனும் பணிகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

397. விநாயக சட்டி விரதமாவது யாது?

கார்த்திகை மாசத்துக் கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதல் மார்கழி மாசத்துச் சுக்கிலபக்ஷ சட்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோ ரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சட்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply

சுப்பிரமணிய விரதம்

tiruchendur-cover_700.jpg

398. சுப்பிரமணிய விரதம் எத்தனை?

சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம்.

399. சுக்கிரவார விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.

400. கார்த்திகை விரதமாவது யாது?

கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக் கடவர். இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.

401. கந்த சட்டி விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதற் சட்டியீறாகிய ஆறு நாளுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஆறு நாளும் உபவாசஞ் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாளும் ஒவ்வொரு பொழுது உண்டு, சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். மாசந்தோறுஞ் சுக்கிலபக்ஷ சட்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

Link to comment
Share on other sites

வைரவ விரதம்

photo8.jpg

402. வைரவ விரதம் எத்தனை?

மங்கலவார விரதம், சித்திரைப் பரணி விரதம், ஐப்பசிப் பரணி விரதம் என மூன்றாம்.

403. மங்கல வார விரதமாவது யாது?

தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமைதோறும் வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

404. சித்திரை பரணி விரதமாவது யாது?

சித்திரை மாசத்துப் பரணி நஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

405. ஐப்பசிப் பரணி விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்துப் பரணி நக்ஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. ஈழவ நண்பரே! இந்தப் பதிப்புக்களை எல்லாம் சேமித்து வையுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள். கிடைத்தற்கரிய சொத்துக்கள் இவை.

நன்றிகள் நாவலரே, அதைத்தான் அடியேன் செய்து கொண்டிருக்கின்றேன். நான் அறிந்த தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கின்றேன்.

தங்கள் தொண்டிற்கு எங்கள் நன்றிகள். ஐயா.

Link to comment
Share on other sites

தமிழ் தங்கையே! வாழி தாங்கள் செய்யும் தொண்டு மிகவும் நல்லது. தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

70. ஆடவர்க்குங் கற்பொழுக்கம் ஏன் வேண்டாமெனவாதிப்பீராயின் பிள்ளைப் பேற்றுக்கு மூலமாய அவரும் அவ்வீதியிற் கட்டுண்டாராயின் ஜன சங்கியா விருத்தியில் மண்விழாதா?

71. பிள்ளை பிறந்த பிறகு தாய்க்கு உளதாகும் புத்ர வாத்ஸல்யமும், பிள்ளைக்கு உளதாகும் மாத்ரு பக்தியும், அவ்விருவர்க்கும் உளதாகும் மாதா புத்ரவுறவும் தந்தையின் கற்புச் சிதைவதாற் கெடுமா?

72. தன் மூலம் பிள்ளை யுதியாதபடி தடை செய்துகொண்டு சாத்தன் இன்பத்தின் பொருட்டுக் கொற்றன் மனைவியைப் புணரலாமென்பீராயின் அவ்வின்பத்தை விரும்புபவர் கொற்றன் மனைவியா? சாத்தனா?

A..

73. கொற்றன் மனைவியெனின் ஆண் தயவை யெதிர்பார்த்துப் புணரும் எளிமையிலுள்ள பெண்ணாகிய அவள் 'உன் மூலம் என் வயிற்றிற் பிள்ளை யுதியாதப்டி ஏதேனுந் தடை செய்து கொண்டு என்னைப் புணர்' என்று அச்சாத்தனுக்கு நிபந்தனையை விதிக்க முடியுமா?

74. அவள் கற்பரசியயின் தன் கணவன் பிள்ளைப் பேற்றோடு புணர்ச்சி யின்பத்தையுங் கொடுத்துவரும்போது அயலாரின் நாடமாட்டாளென்பதை யறிவீரா?

75. மேலும் அவளுக்குப் பிள்ளைப் பேற்றினும் புணர்ச்சியின்பம் ப்ரிதெனவே தோன்றாதென்பதும் உமக்குத் தெரியுமா?

B.

76. சாத்களெனின் 'என் மூலம் பிள்ளை யுதியாவண்ணந் தடை செய்துகொண்டு நான் உன் மனைவியை புணர்வேன்' என்று கொற்றனுக்கே நேரில் அவன் தடையுறுதியைச் செய்து கொடுக்க வேண்டுமன்றா?

77. கொற்றன் மனைவியும் சாத்தனும் புணரும் போதெல்லாம் பேற்றுத் தடையோடு புணர்கின்றனராவென்று காணக் கொற்றன் கண்விழித்துக்கொண்டே யிருக்க வேண்டாமா?

X.

78. சாத்தன் தன் மனைவியையும் அவ்வாறே பிறனுக்குக் கொடுக்க இசைவானென்பது பெறப்படவில்லையா?

இவைகள் எனக்கு உண்மையாகவே விளங்கவில்லை. சற்று விளங்கப்படுத்துவீர்களா?

Link to comment
Share on other sites

வீரபத்திர விரதம்

406. வீரபத்திர விரதம் எத்தனை?

மங்கலவார விரதம் என ஒன்றேயாம்.

407. மங்கலவார விரதமாவது யாது?

செவ்வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

408. விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத தினத்தில் எவ்வெவைகளை நீக்கி எவ்வெவைகளைச் செய்தல் வேண்டும்?

காமங் கோபம் முதலிய குற்றங்களெல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும்; தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும்; புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, விபூதி, வில்வத்தடி மண், தருப்பை, கோமயம், திலம் என்பவைகளைச் சிரசிலே வைத்துக் கையிலே பவித்திரஞ் சேர்த்துச், சங்கற்பஞ் சொல்லி, ஸ்தானஞ் செய்தல் வேண்டும். தியானம், செபம், பூசை, ஆலய தரிசனம், பிரதக்ஷிணம், புராண சிரவணம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும்; திருகோயிலிலே இயன்றமட்டும் நெய் விளக்கேற்றல் வேண்டும்; அபிஷேகத் திரவிய நைவேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும்; போசனம் பண்ணுமிடத்துச் சிவனடியர் ஒருவரோடாயினும் போசனம் பண்ணல் வேண்டும்; நித்திரை செய்யுமிடத்து, இரவிலே, கோமயத்தினாலே மெழுகப்பட்ட தரையிலே, தருப்பையின் மேலே, கடவுளைச் சிந்தித்துக் கொண்டு, அதிசுத்தராய் நித்திரை செய்து, வைகறையில் எழுந்துவிடல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு முதற்றினத்திலே ஒரு பொழுது அபாரணத்திலே போசனஞ் செய்தல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு மற்றை நாட் காலையிலே நித்திய கருமம் இரண்டும் முடித்துக் கொண்டு, மாகேசுர பூசை செய்து, ஆறு நாழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும். பாரணம் பண்ணியபின் பகலிலே நித்திரை செய்யாது, சிவபுராணங்களைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்; நித்திரை செய்தவர், சற்பிராமணர் நூற்றுவரைக் காரணமின்றிக் கொன்ற மகா பாதகத்தை அடைவர். (அபாரணம் - பிற்பகல்)

409. எவ்விதமாயினுஞ் சங்கற்பித்த காலவெல்லை வரையும் அநுட்டித்து முடித்த பின் யாது செய்தல் வேண்டும்?

விதிப்படி உத்தியாபனஞ் செய்தல் வேண்டும்; தொடங்கிய விரதத்தை இடையே விடுவோரும், உத்தியாபனஞ் செய்யாதோறும் விரத பலத்தை அடையார். (உத்தியாபனம் = நிறைவு செய்தல்.)

திருச்சிற்றம்பலம்.

veerapathirar.jpg

Link to comment
Share on other sites

16. அன்பியல்

410. அன்பாவது யாது?

ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம்.

411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர்?

அநாதியே மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்தரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள விரும்பி, தந்தொழில்களெல்லாந் தம் பயன் சிறிதுங் குறியாது, நம் பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையிலே தாம் நம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய பசுபதி, சிவபெருமான் ஒருவரே. ஆதலினால் அவரொருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடைமைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை. ஆதலினால் அவரிடத்திற்றானே நாமெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.

412. நாம் சிவபெருமானிடத்து எப்பொழுது அன்பு செய்தல் வேண்டும்?

இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும் இது இக்கணம் இருக்கும், இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமையுடையதாதலாலும் நாம் இடையறாது எக்காலமும் அன்பு செய்தல் வேண்டும்.

413. சிவபெருமான் இம்மனித சரீரத்தை எதன் பொருட்டுத் தந்தருளினார்?

தம்மை மனசினாலே சிந்திக்கவும், நாவினாலே துதிக்கவும், தம்மால் அதிட்டிக்கப்படுங் குருலிங்கசங்கமம் என்னும் மூவகைத் திருமேனியையுங் கண்களினாலே தரிசிக்கவும், கைகளினாலே பூசிக்கவுங் கும்பிடவும், தலையினாலே வணங்கவும், கால்களினாலே வலஞ்செய்யவும், தமது பெருமையையுஙந் தமது திருவடியார் பெருமையையுங் காதுகளினாலே கேட்கவுமே இம்மனித சரீரத்தைத் தந்தருளினார்.

414. சிவபெருமானிடத்து அன்பு எப்படி விளையும்?

பசுக்களாகிய நம்முடைய இலக்கணங்களையும், நம்மைப் பந்தித்த பாசங்களின் இலக்கணங்களையும், பசுபதியாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும், எத்துணையும் பெரிய சிவபெருமான் எத்துணையுஞ் சிறிய நமக்கெல்லாம் இரங்கி, எளிவந்து, ஓயாது என்றும் உபகரிக்கும் பெருங்கருணையையும், இவ்வியல்பின் அநந்தகோடியில் ஒரு கூறாயினும் உடையவர் பிறரொருவரும் நமக்கில்லாமையையும் இடையறாது சிந்திக்கச் சிந்திக்க, நமக்கு அச்சிவபெருமானிடத்து அன்பு விளையும்.

415. சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள் யாவை?

அவருடைய உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறுங்ம் காணுந்தோறுந் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும் பிறவுமாம்.

416. இல்வாழ்க்கை முதலியவைகளிற் புகுந்து அவ்வவைகளுக்கு வேண்டுந் தொழில்கள் செய்வோருக்கு இடையறாத வழிபாடு எப்படிக் கூடும்? அவர் யாது செய்வார்?

கழைக்கூத்தன் கூத்தாடும் பொழுதும் அவன் கருத்து உடற்காப்பிலே வைக்கப்பட்டிருத்தல் போல, நாம் லெளகிக கருமஞ் செய்யும் பொழுது நமது கருத்துச் சிவபெருமானிடத்தே வைக்கப் பட்டிருத்தல் வேண்டும்; இப்படிச் செய்யாதொழியின், மரண காலத்திலே சிவத்தியானஞ் சிந்திப்பது அரிதரிது.

417. சிவபெருமானை வழிபடுவோர் மரிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

சுற்றத்தாரிடத்தும், பொருளினிடத்துங் சற்றாயினும் பற்று வையாது, சுற்றத்தாரைத் தூரத்தே இருத்தி விட்டுத், தாம் விபூதி தரித்து, மனங் கசிந்துருகக், கண்ணீர் பொழிய, உரோமஞ் சிலிர்ப்பச் சிவபெருமானைத் தியானித்து, வேத சிவாகமங்களையேனுந் தேவார திருவாசகங்களையேனுஞ் சிவ பக்தர்கள் ஓதக் கேட்டல் வேண்டும்.

418. அவர் மரிக்கும் பொழுது அவருக்கு யாது செய்தல் வேண்டும்?

அவருடைய புத்திரர் முதலானவர்களுள்ளே சிவதீக்ஷையுடையவர், மனம் ஒரு சிறிதுங் கலங்காது, அவர் நெற்றியிலே சிதம்பரம் முதலிய புண்ணிய ஸ்தலத்து விபூதி சாத்தி, அவருடம்பிலே வில்வத்தடி மண் பூசி, அவர் வாயிலே கங்காதீர்த்தம் விட்டு, அவர் தலையைத் தமது மடிமீது கிடத்தி, அவர் செவியிலே அருமருந்தாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உபதேசித்தல் வேண்டும்.

தேவாரம்

உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்மைக்

குற்றார் ஆருளரோ.

-திருநாவுக்கரசர்-திருமுறை-4

-திருஅங்கமாலை.

திருச்சிற்றம்பலம்.

சைவவினாவிடை இரண்டாம் புத்தகம்

முற்றுப்பெற்றது.

மெய்கண்ட தேவன் திருவடி வாழ்க!

navalar4.jpg

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்: இறைவனால் அருளிச் செய்யப்பட்ட முதல் நூல் வேத சிவாகமங்கள் என்றும் அவற்றின் முடிந்த கருத்துக்களை சந்தானாச்சாரியார்கள் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களாக தமிழ் நாடு செய்த தவப்பயனாக நமக்கு அருளிச் செய்திருக்கிறார்கள் என்றும் சொன்னோமல்லவா. இனி அச்சாத்திரங்களில் சொல்லப்பட்ட சமயக் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றிற்கு மாறுபட்ட சமயக்கருத்துக்களும் நம் தேசத்தில் உலவி வருகிறபடியால் அவை யாவை என்பதையும் ஒரு சிறிது தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. நீங்கள் கடைக்குப்போய் ஒரு பொருளை வாங்கும் போது நல்ல பொருள் எப்படியிருக்கும் மட்டமானது எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் எல்லாம் ஒரே மாதிரியாகத் தானே தோற்றமளிக்கும். கடைக்காரன் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டுதான் வருவீர்கள். அதுபோல உண்மைச் சமயக் கருத்துக்களுக்கும் மாறுபட்ட அல்லது அறிவுக்குப் பொருந்தாத சமயக் கருத்துக்களுக்கும் வேற்றுமை தெரிய வேண்டியது அவசியமாகையால் பல்வேறு சமயங்களையும் அவற்றின் கோட்பாடுகளையும் சுருக்கமாகக் கூறுவோம்.

சமயங்களைப் புறப்புறச் சமயங்கள், புறச் சமயங்கள், அகப்புறச்சமயங்கள், அகச் சமயங்கள் என நான்கு பெரும் பிரிவுகளாக நமது ஆச்சாரியர்கள் பிரித்திருக்கின்றார்கள். புறப்புறச் சமயங்கள் ஆறு. அவை உலகாயுதம், மாத்தியமிகம், யோகாசாரம், செளத்திராந்திகம் வைபாடிகம் என்று நான்கு வகைப்பட்ட பெளத்தம் (புத்த சமயம்), ஆருகதம் (ஜைனம்). இந்த ஆறு சமயத்தவர்களும் வேதாகமங்களைப் பிரமாண நூல்களாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவைகளை நிந்தையும் செய்வர்.

Link to comment
Share on other sites

உலகாயுதம்: இச்சமயத்தார் காட்சிப் பிரமாணம் ஒன்றையே ஒப்புக் கொள்வர். மண், நீர், தீ, காற்று என தத்துவங்கள் நான்கு மட்டும் உண்டு. இவை ஒன்று சேர்ந்து உடம்பு உண்டாகிறது. உலகமும் இந்தத் தத்துவங்களின் கூட்டம்தான். உடம்புக்கு வேறாய் உயிர் என்று ஒன்று இல்லை. முற்பிறப்பு மறுபிறப்பு என்பதெல்லாம் பொய். உலகம் இயற்கை. கடவுள் கிடையாது. உலகத்தில் நாம் அனுபவிக்கும் இன்பமே மோக்ஷம். துன்பமே நரகம். உலகாயதாரைக் காட்சிவாதி என்றும் சொல்வதுண்டு.

பெளத்தம்: "பிடகம்" என்பது புத்தர்களின் சமய நூல். அதைச்செய்தவர் ஆதிபுத்தர். புத்தரைத் தவிற வேறு கடவுள் என்பவர் இச்சமயத்தாருக்குக் கிடையாது. ஞானமே ஆன்மா எனப்படும். அந்த ஞானம் கணந்தோறும் அழிந்து கொண்டும் திரும்பத் தோன்றிக் கொண்டுமிருக்கும். எல்லாப் பொருள்களுமே இப்படித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். கணந்தோறும் தோன்றியழிவதனாலே ஞானமும் அதினின்றும் வாசனையும் ஏற்படும். வாசனை அழிவதே முத்தி. பெளத்தரைக் கணபங்கவாதி என்றும் சொல்வதுண்டு.

மாத்திய மிகர், யோகாசாரர், செளத்திராந்திகர், வைபாடிகர் என்ற நான்கு வகைப் பெளத்தர்கள் பொருள்களின் இலக்கணத்தைக் கூறுமிடத்து ஒவ்வொருவரும் தம்முள் வேறுபடுவர். அவ்வேறுபாடுகளைப் பின்னர்ச் சந்தர்ப்பம் வரும்போது தெரிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

ஆருகதம்: இதைச் சைன மதம் என்றும் சொல்வதுண்டு. அருகனே இச்சமயத்தாரின் கடவுள். இச்சமயத்தில் பேசப்படும் பொருள்கள் ஏழு. அவை சீவன், அசீவன், ஆச்சிரமம், சமுவரம், நிச்சரம், பந்தம், வீடு என்பவை. சீவன் மூவகைப்படும். அனாதிசித்தனாகிய அருகக் கடவுள், பந்தங்களிலிருந்து நீங்கிய முத்தன், பந்தங்களிற் கட்டுண்டு கிடக்கும் பெத்தன். அசீவன் என்பது தாவரங்களும், விலங்குகளும், பறவைகளுமாம். பொறிகளினிடத்தே செல்லுதல் ஆச்சிரவம். அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்கு வழிதேடுவது சமுவரம். தவம் செய்தல் நிச்சரம். பிறவியிற் செலுத்தும் மோகம் முதலிய எண்குணங்களும் பந்தம், அக்குணங்களினின்றும் நீங்கி உலகத்தைக்கடந்து ஆகாயத்தை நோக்கிச் செல்லுதல் வீடு. மேலும் இவ்வுடம்பை எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ எனக் கேட்டால் அதற்குக் கூறும் பதில் வினோதமாக இருக்கும். உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாததாம், இல்லையாம் சொல்லொணாததாம், உண்டுமில்லையாம் சொல்லொணாத்தாம் என ஏழுவகையாகப் பதில் சொல்லுவார்கள். இதைச்சப்தபங்கி நியாயமென்று கூறுவர். அருகரை அனேகாந்தவாதி யென்றும் கூறுவர்.

Link to comment
Share on other sites

இனி புறச்சமயங்கள் ஆறாவன: தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்பவை. இச்சமயத்தார் வேதங்களைப் பிரமாணமாகக் கொள்வர். ஆகமங்களைக் கொள்ளார். ஆனால் வேதத்திலும் ஒவ்வொரு சமயத்தார் ஒவ்வொரு பாகத்தை மட்டும் பிரமாணம் என்பர்.

தருக்க நூலார்: திரவியம் குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை, எனப்பதார்த்தம் ஏழு என்பர். அவற்றின் பொதுவியல்பு சிறப்பியல்புகளை உணரவே ஆன்மவியல்பு விளங்கும். அது விளங்கவே நான் என்ற பொய்யுணர்வு அழியும். அது அழியவே, அறம் பாவங்கள் ஒழியும். அவை ஒழியவே பிறப்பு ஒழியும், பிறப்பு ஒழியவே அறிவின்றி பாடாணம் (கல்) போன்ற உயிர் கிடக்கும். அதுவே முத்தி. தருக்கம் என்னும் சமயம் வைசேடிகம், நையாயிகம் என இரண்டு வகைப்படும். அவற்றிற்குள்ள வேறுபாடுகள் சிறிதே யாகலின் அவற்றை விவரிக்க வேண்டாம். வைசேடிகம் நையாயிகம் என்னும் சமயங்களைச் செய்தவர் முறையே கணாத முனிவரும் அக்கபாத முனிவரும் ஆவர்.

மீமாஞ்சை: இச்சமயம் சைமினி முனிவரால் செய்யப்பட்டது. வேதம் ஒருவராற் செய்யப்பட்டதல்ல. சுயம்பு என்பது இவர் கருத்து. வேதத்தில் 'இதைச் செய்க' 'அதைச் செய்க' 'இன்னதைச் செய்யாதொழிக' எனக் கட்டளையிடுகிறவாக்கியங்கள் மட்டும் பிரமாணம் என்றும் ஏனைய பிரமாணம் என்று உபசரித்துக் கூறப்படும் என்றும் கூறுவர். உலக இன்பங்களையோ மோக்ஷத்தையோ விரும்புகிறவர்கள் வேள்வி செய்தல் வேண்டும். செய்தால் அவ்வேள்வியே நினைத்த பயனைத் தரும். இவற்றைத்தருவதற்குக் கடவுள் என்று ஒருவர் இல்லை. உலகம் என்றும் அழியாமல் நிலை பெற்றிருக்கும். இச்சமயத்தாரின் கொள்கை இது.

சாங்கியம்: மூலப்பகுதி நித்தமாய் வியாபகமாய், சடமாய் எல்லாப் பொருட்களுக்கும் காரணமாய் உள்ளது. இது இருபத்தி நாலாவது தத்துவம். ஏனைய இருபத்து மூன்று தத்துவங்களும் இதனிடத்திலிருந்து தோன்றியவை ஆன்மா இருபத்தைந்தாவது தத்துவம். அதுவே புருடன் எனப்படும். அதற்கு முத்தியிலும் பெத்தத்திலும் ஒரே தன்மை. மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்துணர வேண்டும். அப்போது அஞ்ஞானம் நீங்கும். அதுவே முத்தி. ஆன்மாவுக்கு வேறாக கடவுள் ஒருவன் இல்லை. இச்சமயம் செய்தவர் கபில முனிவர்.

யோகம்: இம்மதத்தின் கொள்கைகள் சாங்கியம் போலவேயாம். ஆனால் இருபத்தாறாம் தத்துவமாகிய இறைவன் ஒருவன் உண்டு. அவன் சாத்திரங்களை அருளிச் செய்து புருடனுக்கு ஞானத்தை அளிப்பன் என்பர். இம்மதம் செய்தவர் பதஞ்சலி முனிவர்.

பாஞ்சராத்திரம்: (வைணவம்) தத்துவங்கள் இருபத்தினாலு. இருபத்தைந்தாவது தத்துவம் வாசுதேவன் உலகம் முதலிய யாவும் வாசுதேவனுடைய பரிணாமமே (ஒன்று மற்றொன்றாக மாறுதல்) வாசு தேவனுடைய உருவத்தில் இலயமாதலே முத்தி, இம்மதம் வாசுதேவனால் செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்: இனி அகப்புறச் சமயங்கள் ஆறு. அவை பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அச்சமயக் கொள்கைகளாவன.

பாசுபதம்: ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் (என்றும் உள்ளது) வியாபகமாய் (எங்கும் நிறைந்தது) உள்ளன. காரிய காரணக் கூட்டரவால் (சேர்தல்) தோன்றும் ஞானத்தால் தனித்தனி வெவ்வேறாயுள்ளன. ஆன்மாக்களுக்கு ஆணவமலம் என்பது ஒன்று இல்லை. கன்மம் மாயை மாத்திரம் உண்டு; அவற்றால் கட்டுப்பாடு இன்பத்துன்பங்களை அனுபவிக்கும்; சாத்திர முறைப்படி தீக்கை பெற்றவனிடத்தில் இறைவனுடைய ஞானம் போய்ப்பற்றும்; பற்றியவுடனே இறைவன் தன்னுடைய அதிகாரத்திலிருந்து ஒழிவு பெற்று இருப்பான் என்பதாம்

.

மாவிரதம்: ஆன்மாக்களின் இலக்கணம் மேலே கூறியப்படியே, ஆன்மா சாத்திர முறைப்படி தீக்கை பெற்று எலும்பு மாலை அணிதல் முதலிய செயல்களைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் முத்தியை அடைவான். அப்போது சிவனுக்குச் சமமாக எல்லாக் குணங்களும் அவனிடம் உண்டாகும் என்பதாம்.

காபாலம்: ஆன்மாவின் இயல்பு மேலே கூறிய படியே. திக்கை பெற்ற ஆன்மா, பச்சைக் கொடி ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு மனிதர் தலை யோட்டில் நாள்தோறும் பிச்சை எடுத்து உண்டு வந்தால் முத்தி அடைவான். அடைந்தவுடன் சிவனால் ஆவேசிக்கப்பட்டு சிவனுடைய குணங்கள் எல்லாம் பெற்று சிவனுக்குச் சமானமாவான் என்பதாம்

Link to comment
Share on other sites

வாமம்: சடமும் (அறிவில் பொருள்கள்) சித்தும் (அறிவுப் பொருள்கள்) எல்லாம் சத்தியின் பரிணாமமே. (ஒன்று மற்றொன்றாக மாறுதல்) வாம நூலில் விதித்த முறைப்படி நடந்து சத்தியில் இலயித்தலே (சேர்தல்) முத்தி என்பதாம்.

வைரவம்: வாம மதத்தைப் போன்ற கொள்கைகளை யுடையது. சிலசில ஆசாரங்கள் மட்டும் வேறுபடும். இச்சமயத்தார்க்கு வைரவனேபரம் பொருள்.

ஐக்கியவாத சைவம்: ஆணவ மலம் என்பது இல்லை. கன்மம மாயை இரண்டும் உண்டு. ஆன்மாக்கள் முன் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப அவைகளுக்கு தனு (உடம்பு) கரணம் (அந்தக்கரணம் முதலிய உட்கருவிகள்) புவனம் (உலகங்கள்) இவற்றை இறைவன் கொடுப்பான். அவற்றை அடைந்த உயிர்கள் வினைப்பயன்களை அனுபவித்து வினையொப்பு (வினைகள் சமமாதல்) மலபரிபாகம் (பக்குவம்) உண்டாக, இறைவனருளால் மாயை கன்மங்களைக் கழித்து, மேலும் வினை ஏறாமல், முன்னே தனக்கு இருந்த பேரொளியில் திரும்பச் சேர்ந்துவிடும் என்பது இச்சமயத்தார் கருத்து

Link to comment
Share on other sites

இனி அகச்சமயங்கள் ஆறு. அவை பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கராந்தவாதம், ஈசுவரவவிவகாரவாதம், நிமித்தகாரணபரிணாமவாதம் என்பனவாம். இறைவன் ஒருவன் உண்டு, உயிர்கள் உண்டு, உயிர்கள் அனாதியே ஆணவ மலம் மறைத்துநிற்கும், கன்மமும் மாயையும் உண்டு. கன்மத்துக்கு ஈடாக இறைவன் உயிர்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுப்பான், உயிர்கள் இன்பத்துன்பங்களை அனுபவிக்கும் என்பவை, இச்சமயங்கள் எல்லாம் ஒப்புக்கொள்ளும், பொதுவான கொள்கைகள். உயிர்கள் எய்தும் முத்தியைப் பற்றிக் கூறும் வகையில் அவை ஒன்றற் கொன்று மாறுபடுகின்றன. அதாவது உயிர்கள் தனு, கரணங்கள் நீங்கியவுடன் எல்லா அவத்தை (கஷ்டம்) களின்றும் நீங்கி காண்பதற்கு ஒன்றும் இல்லாமலும், அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லாமலும் செயலற்றுப் பாடாணம் (கல்) போல் கிடக்கும். அதுவே உயிர் எய்தும் முத்திநிலை என்று பாடாணவாதம் சொல்லும்.

Link to comment
Share on other sites

இரசவாதத்தால் செம்பு பொன்னா னால்போல, ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்கள் இறைவனருளால் கெட்டு உயிர்கள்நித்த, சுத்த, முத்தராக ஆவர் என பேதவாதம் சொல்லும்.

ஒரு புழுவை குளவி எடுத்துக் கொண்டு போய் வளர்க்கும் போது அக்குளவியையே நினைத்துக் கொண்டிருக்கும் புழு, குளவியாக மாறி விடுவது போல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிரும் இறைவனையே தியானம் பண்ணிக் கொண்டிருந்து இறைவனது உருவம்பெற்று இறைவனது உருவம் பெற்று அவனைப்போல், ஐந்தொழில் செய்து கொண்டும் அவனைப் போன்ற ஆற்றலுடையதாகவும் இருக்கும் என்று சிவசமவாதம் சொல்லும்.

இறைவன் திருவருளைப் பெற்ற உயிர். விறகிலே தீயைப் பற்றவைத்த வுடனே விறகு தியாக மாறுவது போல தன்னுடைய தன்மை கெட்டு இறைவனது சொரூபம்பெற்று அவனாகவே மாறி விடும் என்று சங்கராந்தவாதம் கூறும்.

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர்; நண்பகலில் சூடு பொறுக்கமாட்டாதவன் ஒரு மரத்து நிழலிலே ஒதுங்கிச் சுகம் அனுபவிப்பதைப் போன்ற உணர்ச்சியுடன் இறைவன் திருவடி நிழலில் இன்பம் அனுபவிக்கும் என்று ஈசுவரவவிகாரவாதம் பேசும்.

இவ்வுலகம் யாவும் சிவசொரூபம். அசேதனம் (அறிவில்லாப் பொருள்) என்பது கிடையாது. சிவனே உலமாகப்பரிணமிக்கிறான். (மாறுதலடைதல்) உயிர்களாகவும் பரிணமிக்கிறான். உயிரும் உடம்பும் சிவத்திற்குள்ளே அடையச் செலுத்த வேண்டும். கருவிகரணங்கள் நீங்கியவுடன் இந்த நிலை ஏற்பட்டு ஒன்றும் அறியாமல் கிடக்கும். இதுவேதுரியாதீதம் என்னும் நிலை. முத்தி என்பதும் அதுவே என்று கூறும் நிமித்தகாரணபரிணாமவாதம்

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்: பிள்ளைகளே இதுகாறும் கூறியவற்றில் சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கேளுங்கள். விளக்குவோம்.

மந்தன்: சுவாமி உலகாயத சமயத்தைப்பற்றிச் சொல்லும்போது அச்சமயத்தார் காட்சிப்பிரமாணம் ஒன்றையே ஒப்புக்கொள்வர் என்று சொன்னீர்கள். காட்சிப்பிரமாணம் என்றால் என்ன? வேறு என்ன பிரமாணங்கள் உண்டு? அவைகளைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

மந்ததரன்: சுவாமி இதுகாறும் கூறியவை எல்லாம் வேற்றுச் சமயங்கள் அல்லது உண்மைக்கு மாறுபட்ட சமயங்களின் கருத்துக்கள் என்று சொன்னீர்கள் அப்படியானால் உண்மைச் சமயம் எது?

தீவிரன்: சுவாமி உண்மைக்கு மாறுபட்ட சமயங்கள் என்றால் அவைகளை அந்தந்தச் சமய கர்த்தாக்கள் ஏன் செய்யவேண்டும்? அந்தந்தச் சமயவாதிகளிடையே விரோத மனப்பான்மை வளர்வதற்கு ஏதுவாகுமல்லவா.

தீவிரதரன்: சுவாமி எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், எல்லோருடைய அறிவுக்கும் பொருத்தமானதுமான ஒரே சமயத்தை ஆச்சாரியர்கள் ஏற்படுத்தி எல்லோரும் ஒரே மாதிரியாக அனுசரிக்கும்படி செய்தல் சிறந்த பணியாகுமல்லவா?

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்: மிகவும் புத்திசாலித்தனமான கேள்விகள் தான் கேட்டீர்கள். கடைசி இரண்டு கேள்விகளை முதலில் விளக்குவோம் கேளுங்கள். முதனூலாகிய வேதாகமங்களைப் பற்றி முன் சொல்லும்போது ஆன்மாக்கள் அவரவர்களுடைய அறிவுக்கு ஏற்ப வேதத்தை உணர்ந்து அவரவர்களுக்குத் தோன்றிய உண்மைகளை அவர்கள் வெளியிட்டார்கள் என்று சொன்னோம். வேதத்தைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளாதவர்களும் தங்களுக்குத் தோன்றிய உண்மைகளைத் தொகுத்துச் சமயமாக வகுத்தார்கள். எனவே பல சமயங்கள் ஏற்பட்டதற்குக்காரணம் அந்தந்தச்சமய கருத்தாக்கள் தாங்கள் கண்ட முடிவே உண்மையானது, உயர்ந்தது, மிகச் சிறந்தது என்று கருதியதேயாகும். அந்த முடிவுக்கு ஏன் அவர்கள் வந்தார்கள் என்று யாரும் குறைகூற முடியாது. எல்லோர் அறிவையும் விளக்கும் இறைவனது திருவருள் அவர்களுக்கு எம்மட்டு உபகரிக்கிறதோ அம்மட்டேயாகும் அவர்கண்ட முடிவுகளும். பல்வேறு சமயங்கள் இருப்பதினால் விரோதமனப்பான்மை வளரும் என்பது பொருந்தாது. ஆன்மாக்களின் அறிவு பலதிறப்பட்டது ஆகையால் அவர்களின் சிந்தனைக் கருத்துக்களும் முடிவுகளும் பலதிறப்பட்டு இருப்பதில் வியப்பில்லை. ஒன்றற்கொன்று மாறுபட்ட கருத்துக்களினால் விரோதமனப்பான்மை வளர வேண்டிய அவசியமே இல்லை.

உதாரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள நாலு பிள்ளைகள் ஒவ்வொரு முயற்சியைச் சிறந்ததெனக் கருதுகிறார்கள். ஒருவர் வாணிபத்தை நாடுகிறார். ஒருவர் உத்தியோகத்தை தேடுகிறார். இன்னொருவர் சமூகத்துக்கு உழைக்கச் செல்கிறார். நாலாமவர் அரசியலில் ஈடுபடுகிறார். ஒரே தொழிலையே எடுத்துக் கொள்வோம். ஒரு நோயாளியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு நாலு மருத்துவர்கள் தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் நாலுவிதமான அபிப்ராயத்தைத் தெரிவிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் தங்களுக்குள் விரோதமனப்பான்மையுடன் சண்டையிட வேண்டிய அவசியமில்லை. சமயங்களுக்குள்ளும் அப்படியேதான். ஒரு சமயத்தவர் மற்றொரு சமயத்தவரைக் குறைவாகவும் இழிவாகவும் பேசுவதினாலும், கட்டாயப்படுத்தியும் பல ஆசைகளைக் காட்டியும் தங்கள் சமயத்துக்கு மாற்றுவதினாலுமே விரோத மனப்பான்மை ஏற்படுகிறது. ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சிறந்த அறிவாளிகளும் தலைவர்களும் அங்ஙனம் செய்ய மாட்டார்கள்.

எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற்கு சோபான (படிகள்) கிரமம் ஆகும். உலகம் ஒன்றே உண்டு கடவுள் இல்லை என்றுச் சொல்லுபவனை விட கடவுளும் உண்டு என்று சொல்லுபவன் உயர்ந்தபடியில் உள்ளவன். உயிர்களும் உண்டு என்று அறிபவன் அதனினும் மேல்படி. உயிர்களுக்கு ஒரு காலத்தில் உலகத்துன்பத்தினின்றும் விடுதலை உண்டு என்று அறிகிறவன் அதனினும் மேல்படி. அவ்விடுதலை அல்லது மோக்ஷம் இப்படிப்பட்டதென்று அறிகிறவன் இன்னும் மேல்படி . இப்படியே மற்றவைகளையும் ஊகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சமயவாதியும் தன்னுடையசமயத்தில் சொல்லப்பட்ட உண்மைகளையும் நெறிகளையும் கடைப்பிடித்துத் தவறாது ஒழுகி வந்தால்மேல்படிகளை யடைந்து உய்தி பெறுவது திண்ணம். இறைவன் ஒருவனே அவரவர்கள் வணங்கி வழிபடும் தெய்வமாக நின்று அவரவர்களுக்கு அருள் புரிகிறான்.

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்: இனி உலகம் புராவும் ஏன் ஒரே சமயமாக இருக்கக் கூடாது என்பதைச் சற்றுச் சிந்தனை செய்வாம். பலவேறு வகைப்பட்ட சமயங்களின் ஆச்சாரியர்களும் ஒரே காலத்திலோ, தேசத்திலோ, இடத்திலோ வாழ்ந்தவர்கள் அல்ல. ஆகவே உலகத்திலுள்ளோர் யாவருக்கும் பொதுவான சமயம் ஒன்றை ஏற்படுத்துவதில் ஈடுபடவில்லை அப்படி யாராவது இப்போது ஈடுபட்டாலும் அது சற்றும் இயலாத காரியம் என்பதை உணர்வர். கடவுள் ஒருவர் உண்டு என்று மட்டும் ஒப்புக் கொண்டால் போதும் அதுவே உலகப்பொது சமயம் என்று கொள்வோமானால் கடவுளே இல்லை என்று சொல்லுகிற சமயம் இருக்கிறதே அச்சமயத்தை உலகப் பொதுச் சமயத்தில் சேர்க்க முடியுமா? இன்னும் சமயம் என்பதே மனிதனுடைய வளர்ச்சிக்கு அவசியமில்லை என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது. அக்கூட்டத்தை உலகப்பொதுச் சமயத்தில் எப்படிச் சேர்க்க முடியும். ஆகவே உலக மக்கள் யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பொதுச் சமயத்தை ஏற்படுத்தலாம் என்பது குதிரைக்குக் கொம்பு ஏற்படுத்த முயல்வது போலவேயாம். பலதிறப்பட்ட அறிவயுடைய உயிர்கள் வாழும் இவ்வுலகத்தில் பலதிறப்பட்ட சமயங்கள் இருத்தல் இயல்பே. ஒரு பள்ளிக்கூடத்திலுள்ள பலதிறப்பட்ட மாணாக்கர்களுக்காக ஒன்று முதல் பதினொரு வகுப்புக்கள் அமைத்து ஒவ்வொரு வகுப்பிலும் தேறி மேல் மேலுள்ள வகுப்பை அடைவதுதான் உலக இயல்பு. எல்லா மாணவர்களுக்கும் ஒரே வகுப்பு அமைப்பது அறிவுடைமையாகாது. ஒருவகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் விளக்கும் பொருளை ஒரே மாதிரியாக அறிய மாட்டார்கள். அவரவர்கள் அறிவுக்கேற்பத்தான் வாங்கிக் கொள்வார்கள். ஆகவே உலகப் பொதுச் சமயம் அமைக்கவோ எல்லாச் சமயங்களையும் ஒன்று சேர்த்து விடவோ சிலர் முயன்று வருவது தங்கள் விளம்பரத்துக்காகவே

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

குங்குலியக்கலயநாயனார் புராணம்

சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந்

திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே

தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு

சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர்

ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே

நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப்

பாலமுத முண்டாரு மரசு மெய்திப்

பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே.

சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள்.

ஒருநாள் அவர்மனைவியார், அரிசி முதலியன வாங்குதற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவர் கையிலே கொடுத்து, "இதற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்" என்றார். குங்குலியக்கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனார். போம்பொழுது வழியிலே ஒருவணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து "சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ" என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிறவளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலயநாயனாருக்குத

Link to comment
Share on other sites

பன்னிரெண்டு சைவத் திருமுறைகளில் ஒன்றான எட்டாம் திருமுறை திருவாசகம். இது சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்க வாசக சுவாமிகள் அருளிச் செய்தது. இந்தத் திருமுறையை முற்றோதல் செய்தால் தீராத வினைகள் எல்லாம் தீரும். சுகம் பெருகும்.

vacakar.jpg

projectmadurai.gif

Mannikkavasagar's Thiruvasagam

திருவாசகம் - சிவபுராணம்

(மாணிக்க வாசகர் அருளியது)

This Etext file initially prepared in Mylai format by K. Kalyanasundaram, Lausanne, Switzerland. This webpage presents Etxt in Tamil script but in Unicode encoding.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது

தற்சிறப்புப் பாயிரம்)

மச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

இந்த பாடலைக் கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

சிவபுராணம் பாடல்

http://www.megaupload.com/?d=NGGASHX0

Link to comment
Share on other sites

கீர்த்தித் திருஅகவல்

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

தில்லை மூதூர் ஆடிய திருவடி

பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி

எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி

மண்ணும் விண்ணும் வானோர் உலகும்

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

என்னுடை இருளை ஏறத்துரந்தும்

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்

குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி

நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்

பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்

எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15

விராவு கொங்கை நல்தடம் படிந்தும்

கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்

மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து

உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20

நந்தம் பாடியில் நான் மறையோனாய்

அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்

வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்

நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்

சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்

வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்

வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி

சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி

பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று

ஈண்டு கனகம் இசையப் பெறா அது

ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி

இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்

மதுரைப் பெருநல் மாநகர் இருந்து

குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45

ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்

உத்தர கோச மங்கையுள் இருந்து

வித்தக வேடங் காட்டிய இயல்பும்

பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50

தூவண மேனி காட்டிய தொன்மையும்

வாத வூரினில் வந்து இனிது அருளிப்

பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

திரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக்

கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்

பாவம் நாசம் ஆக்கிய பரிசும்

தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து

நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்

பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு

அட்ட மாசித்தி அருளிய அதுவும்

வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு

காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்

ஓரி ஊரில் உகந்து இனிது அருளி

பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்

கோவார் கோலம் கொண்ட கொள்கையும்

தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்

ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்

ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்

திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து

மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்

பாவகம் பலபல காட்டிய பரிசும்

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்

ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்

ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்

திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்

கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்

கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்

புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்

அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து

சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு

இந்திர ஞாலம் போலவந்து அருளி

எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் 95

தானே ஆகிய தயாபரன் எம் இறை

சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி

அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்

சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்

மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்

எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்

ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு

நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்

ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105

ஆனந் தம்மே ஆறா அருளியும்

மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்

தூய மேனிச் சுடர்விடு சோதி

காதலன் ஆகிக் கழுநீர் மாலை

ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்

அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்

மீண்டு வாராவழி அருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி ஆகவும்

பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்

உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120

ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய

தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்

இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி

அருளிய பெருமை அருள்மலை யாகவும்

எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125

அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி

நாயினேனை நலம்மலி தில்லையுள்

கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன

ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி

அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்

எய்த வந்திலாதார் எரியில் பாயவும்

மாலது வாகி மயக்கம் எய்தியும்

பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்

கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135

நாத நாத என்று அழுது அரற்றி

பாதம் எய்தினர் பாதம் எய்தவும்

பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற

இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்

எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்

கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு

அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை

இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்

பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145

ஒலிதரு கைலை உயர்கிழ வோனே

திருச்சிற்றம்பலம்

http://www.tamilnation.org/sathyam/east/th.../tvasagam02.htm

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

http://www.megaupload.com/?d=NG4M75G8

Link to comment
Share on other sites

திருவண்டப் பகுதி

( தில்லையில் அருளயது - இணைக் குறள் ஆசிரியப்பா)

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

எறியது வளியின்

கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை

காப்போன் காக்கும் கடவுள், காப்பவை

காப்போன், கரப்பவை கருதாக் 15

கருத்துடைக் கடவுள், திருத்தகும்

அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்

வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி

கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும்

அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20

மதியில் தண்மை வைத் தோன், திண்திறல்

தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன், மேதகு

காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25

மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று

எனைப் பல கோடி எனைப் பல பிறவும்

அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று

முன்னோன் காண்க, முழுதோன் காண்க

தன்நேர் இல்லோன் தானே காண்க 30

ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க

கானம் புலியுரி அரையோன் காண்க

நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்

ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்

இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35

அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க

பரமன் காண்க, பழையோன் காண்க

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க

அற்புதன் காண்க, அநேகன் காண்க

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

ஒருவன் என்றும் ஒருவன் காண்க

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க

அரிய அதில் அரிய அரியோன் காண்க

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க

நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க

பந்தமும் வீடும் படைப்போன் காண்க

நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க

கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க

யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55

தேவரும் அறியாச் சிவனே காண்க

பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க

கண்ணால் யானும் கண்டேன் காண்க

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க

கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

புவனியல் சேவடி தீண்டினன் காண்க

சிவன் என யானும் தேறினன் காண்க

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க

குவளைக் கண்ணி கூறன் காண்க

அவளுந் தானும் உடனே காண்க 65

பரமா னந்தம் பழம் கட லதுவே

கருமா முகிலில் தோன்றித்

திருவார் பெருந்துறை வரையில் ஏறித்

திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70

வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர

எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து

முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்

செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்

கேதக் குட்டம் கையற வோங்கி

இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை

நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்

அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன

ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்

பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச்

சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்

இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து

உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்

சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி

அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்

தொண்ட உழவர் ஆரத் தந்த

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க

அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க

அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க

நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க

சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க

கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க

பேர்அமைத் தோளி காதலன் வாழ்க

ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி

பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை

நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

நிற்பன நிறீஇச் 110

சொல்பதம் கடந்த தொல்லோன்

உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்

கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்

விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்

பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை

இன்று எனக்கு எளிவந்து அருளி

அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்

இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி

ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து

உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு

அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்

முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை

அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்

ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140

ஒளிfக்கும் சோரனைக் கண்டனம்

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்

தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்

தொடர்மின் விடேன்மின்

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை

என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி

அறைகூவி ஆட்கொண்டருளி

மறையோர் கோலம் காட்டி அருளலும்

உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150

அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்

தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்

கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு

கோற்றேன் கொண்டு செய்தனன்

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்

வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின்

அடியோம் அடிக்குடில் 160

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்

தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்

சொல்லுவது அறியேன் வாழி முறையோ

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165

அருளியது அறியேன் பருகியும் ஆரேன்

விழுங்கியும் ஒல்ல கில்லேன்

செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து

உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே

குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய

அற்புதம் ஆன அமுத தாரைகள்

எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175

உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு

அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய

கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை

என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்

கருணை வான்தேன் கலக்க 180

அருளொடு பரா அமுது ஆக்கினன்

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே

திருச்சிற்றம்பலம்

http://www.tamilnation.org/sathyam/east/th.../tvasagam03.htm

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாட்டை டவுண்லோட் செய்யவும்.

http://www.megaupload.com/?d=10MM2Y07

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.