Jump to content

Recommended Posts

  • Replies 479
  • Created
  • Last Reply

ஆத்மநாததேசிகர்:

"....வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை

பாதபம் அதனில் படுபயன் பலவே

அவற்றுள்

இலை கொண்டு உவந்தனர் பலரே இலைஒரீஇத்

தளிர் கொண்டு உவந்தனர் பலரே தளிர் ஒரீஇ

அரும்பொடு மலர் பிஞ்சு அருங்காய் என்று இவை

விரும்பினர் கொண்டு கொண்டு உவந்தனர் பலரே

அவ்வாறு உறுப்பும் இவ்வாறு பயப்ப

ஓரும் வேதாந்த மென்று உச்சியிற் பழுத்த

ஆரா இன்ப அருங்கனி பிழிந்து

சாரங் கொண்ட சைவ சித்தாந்தத்

தேனமுது அருந்தினர் சிலரே....."

இவ்வாறு ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கூறுகிறார்கள். சிவபெருமான் வேதமாகிய ஒரு மரத்தை வளர்த்தனராம். அதிலுள்ள இலை, தளிர், அரும்பு, மலர், பிஞ்சு, காய் இவற்றைப் பறித்துக் கொண்டுபோய் பலர் திருப்தி அடைந்தார்களாம். மரத்தின் உச்சியிற் பழுத்திருந்த வேதாந்தம் (உபநிஷத்துக்கள்) என்ற பழத்தைப் பறித்து அதன் சாரமாகிய சைவ சித்தாந்த மென்ற தேனமுதத்தைப் பிழிந்து அருந்தியவர்கள் சிலரே என்கிறார்கள்

"மாறினேன் சமய பேத வழிப்படு புன்மை யெல்லாந்

தேறினேன் வீடு சேர்க்குஞ் சைவசித்தாந்த மென்றே

யேறினேன் சிலலோ கத்தே யிரண்டற் கலந் தொன்றாகி

ஆறினேன் வருத்த மெல்லாங் கலைசைக்கோ வருளினாலே"

இவ்வாறு திராவிட மகாபாஷ்ய கர்த்தாவாகிய ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். பிற சமய கோட்பாடுகளெல்லாம் பொய் என்று கண்டு நீங்கி, சைவசித்தாந்தமே, முத்தியாகிய வீட்டைத்தர வல்லது என்று உணர்ந்து கலைசைப் பிரானாகிய சிவபெருமான் அருளினாலே வருத்த மெல்லாம் தீர்ந்து பேரின்பத்தை அடைந்ததாக அருளிச் செய்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

naeeyark_i.jpg

naeeyark.gif

http://www.shaivam.org/naeeyark.html - Click this to view the English Version of this Nayanmaar's Life History.

நீங்கள் குறிபிட்ட இந்த பாடலில் பொருள் என்னவென்று கூறமுடியுமா?

:lol:

Link to comment
Share on other sites

இன்று சேக்கிழார் சுவாமிகள் குருபூஜை

nasekiza_i.jpg

nasekiza.gif

http://www.shaivam.org/nasekiza.html - ஆங்கிலத்தில் இந்நாயனார் சரித்திரம் படிக்க.

Link to comment
Share on other sites

நல்ல கேள்வி ஜமுனா!

இந்தப் பாடல் சேக்கிழார் சுவாமிகளால் பன்னிரெண்டாம் திருமுறை பெரியபுராணத்தில் அருளிச் செய்யப்பட்டது.

இந்தப் பாடல் ஏயர்கோன் கலிக்காம நாயனார் சரித்திரத்தில் இடம்பெறுகிறது.

ஏயர்கோன்கலிக்காம நாயனார் இரத்த வெள்ளத்தில் உயிர்நீங்கி கிடப்பதை பார்த்த சுந்தரர்(இவருக்கு இன்னொரு பெயர் ஆளுடைத் தம்பிரான்) தற்கொலை முடிவுடைய மனத்தை உடையராகி, அதன் பொருட்டுக் குத்திக் கொள்வதற்குரிய அந்த உடைவாளைத் தம் கையால் பற்றினார். பற்ற ஆளுடைய நம் இறைவரின், அக்கலிகாமர் மீள உயிர் பெற்று 'நட்புடையவராகிக் கெட்டேன்' என்று விரைவுடனே எழுந்து நம்பியாரூரரின் கையில் பிடித்த வாளைப் பிடித்துக் கொள்ள, வன்றொண்டரான நம்பியாரூரன் (சுந்தரர்) வணங்கி விழுந்தார். ஏயர்கோன் கலிக்காமரும் விழுந்து சுந்தரரை வணங்கினார்.

Link to comment
Share on other sites

ஐந்தாவது

வம்பறாவரிவண்டுச் சருக்கம்

மூர்க்கநாயனார் புராணம்

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று

கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்

கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்

விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்

எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்

ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

தொண்டைநாட்டிலே, திருவேற்காட்டிலே, வேளாளர் குலத்திலே தலைமைபெற்ற ஒருவர், தினந்தோறும் சிவனடியார்களை, சிவனென வணங்கித் துதித்துத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்பவரும், அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுப்பவருமாய் இருந்தார். இப்படியிருக்கு நாளிலே, அடியார்கள் அநேகர் எழுந்தருளி வருகின்றமையால் அவர் தம்மிடத்துள்ள திரவியங்களெல்லாஞ் செலவாகிவிட; அடிமை நிலம் முதலியனவற்றை விற்றும், மாகேசுரபூசையை வழுவாது மனமகிழ்ச்சியோடு செய்து வந்தார். அதன்பின், மாகேசுரபூசைச் செலவுக்குப் பொருள் இன்மையாற் கலவைகொண்டு, தம் முன்னே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க நினைந்து, அவ்வூரிலே சூதாடுவோர் இல்லாமை பற்றி அவ்வூரை அகன்று, சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமி தரிசனஞ் செய்து, சூதாடலால், வரும் பொருளினாலே தம்முடைய நியதியை முடித்து, சிலநாளிலே கும்பகோணத்தை அடைந்தார். அங்கே சூதாடிப் பொருள்தேடி மாகேசுரபூசை செய்தார். சூதிலே முதலாட்டத்திலே தாந்தோற்று, பின்னாட்டங்களிலே பல முறையும் வென்று, அதனாலே பொருள் ஆக்கி சூதிலே மறுத்தவர்களை உடைவாளை உருவிக்குத்தி, நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினாலே வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கள் கொள்ள; தாந்தீண்டார் அடியார்கள் திருவமுது செய்தபின் தாங்கடைப்பந்தியிலே அமுது செய்வாராயினார். இவர் இப்படிச் சிலகாலம் மாகேசுரபூசை செய்து கொண்டிருந்து, அந்த மகத்தாகிய சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

ஐந்தாவது

வம்பறாவரிவண்டுச் சருக்கம்

சோமாசிமாறநாயனார் புராணம்

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்

உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்

உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்

நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்

நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே

இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை

ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

சோழமண்டலத்திலே, திருவம்பரிலே, பிராமணகுலத்திலே சோமாசிமாறநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபித்தலை நித்திய நியமமெனக் கொண்டவர் எந்தக் குலத்தினராயினும், எந்தக் குணத்தினராயினும், பரமசிவன் மேல் அன்புடையவர்களாயின், அவர்களே நம்மை ஆள்பவர் என்னும் மெய்யறிவினையுடையவர் அவ்வன்பர்கள் தம்முடைய வீட்டுக்கு எழுந்தருளிவந்தால், அவர்களை எதிர் கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர். பரமசிவனுக்குப்பிரீதியாகிய யாகங்களை, புகழ் பயன் முதலியன கருதாது நிஷ்காமியாக வேதவிதிப்படி செய்பவர், அவர் திருவாரூரிற் சென்று, சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்திநாயனாரை அடைந்து, அவருடைய திருவடிகளிலே பக்தி பண்ணி, அதனாலே சிவபதத்தைப் பெற்றார்.

திருச்சிற்றம்பலம்.

வார்கொண்டவனமுலையாள் சருக்கம்

முற்றுப்பெற்றது

Link to comment
Share on other sites

ஆறாவது

வனமுலையாள் சருக்கம்

சாக்கியநாயனார் புராணம்

சங்கமங்கை வரும்வேளாண் தலைவர் காஞ்சிச்

சாக்கியரோ டியைந்தவர்தந் தவறுஞ் சைவத்

துங்கமலி பொருளுமுணர்ந்து அந்த வேடம்

துறவாதே சிவலிங்கந் தொழுவோர் கண்டோர்

அங்கல் மலர் திருமேனி அழுந்தச் சாத்தி

அமருநாள் மறந்தொருநாள் அருந்தா தோடிச்

செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த நாதன்

திருவருளால் அமருலகஞ் சேர்ந்து ளாரே.

திருச்சங்கமங்கையிலே, வேளாளர் குலத்திலே உதித்த ஒருவர் சனனமரணத் துன்பங்களை நினைந்து நினைந்து கவலை கொண்டு அவைகளினின்று நீங்கு நெறி யாது என்று ஆராய்வாராயினார். அந்நாளிலே காஞ்சீபுரத்தை அடைந்து, பெளத்தர்களை அணுகி, அவர்கள் அநுட்டிக்கும் பெளத்த சமயத்திலே பிரவேசித்து, அச்சமய நூல்களை ஓதி, அவற்றின் பொருள்களை ஆராய்ந்தார். ஆராய்ந்தபொழுது, அச்சமயம் சற்சமயன்றென்பது அவருக்குத் தெள்ளிதிற் புலப்பட்டது அதுபோல மற்றைச் சமயநூல்களையும் ஆராய்ந்து அவைகளும் மெய்யல்லவெனத் தெளிந்து, பரமசிவனது திருவருள்கூடுதலால், அறிவிக்க அறியும்சித்தாகிய ஆன்மாக்களும் அவ்வான்மாக்களினாலே செய்யப்படுஞ்சடமாகிய புண்ணியம் பாவம் என்னும் கர்மங்களும் அக்கர்மங்களாலே பெறப்படுஞ் சுகம் துக்கம் என்னும் பலங்களும் அப்பலங்களைக் கொடுக்கின்ற தானே அறியுஞ் சித்தாகிய பதியும் எனப் பொருள்கள் நான்கு என்றும், அவைகளைப் பூர்வோத்தர விரோதமின்றி யதார்த்தமாக உணர்ந்தும் நூல் சைவ சமய நூலே என்றும், அந்நூல் உணர்த்தும் பதி பரமசிவனே என்றும் அறிந்துகொண்டார். எந்த நிலையிலே நின்றாலும் எந்த வேஷத்தை எடுத்தாலும் பரமசிவனுடைய திருவடிகளை மறவாமையே பொருள் என்று கருதி, தாம் எடுத்த பெளத்த வேஷத்தை துறவாமல், பரமசிவனை மிகுந்த அன்பினோடு இடைவிடாது தியானஞ்செய்வாராயினார்.

சிவசாதாக்கியம், அமுர்த்திசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கர்மசாதாக்கியம், என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து, தினந்தோறும் சிவலிங்க தரிசனஞ் செய்து கொண்டே போசனம்பண்ணல் வேண்டும் என்று விரும்பி, சமீபத்தில் ஓர் வெள்ளிடையிலிருக்கின்ற சிவலிங்கத்தைத் தரிசித்து, பேரானந்தம் உள்ளவராகி, தாஞ்செய்யுஞ் செயல் இதுவென அறியாது, அருகிலே கிடந்த ஒரு செங்கல்லைக் கண்டு, அதைப் பதைப்பினுடனே எடுத்து, அச்சிவலிங்கத்தின்மேல் எறிந்தார். சிறுபிள்ளைகள் செய்யும் இகழ்வாகிய செய்கைகளும் தந்தையர்களுக்குப் பிரீதியாமாறுபோல, அந்தச்சாக்ய நாயனாருடைய செய்கையும் பரமசிவனுக்குப் பிரீதியாயிற்று. அந்நாயனார் அன்று போய் மற்றை நாள் அந்நியமத்தை, முடித்தற்கு அணைந்த பொழுது, முதனாளிலே தாஞ்சிவலிங்கத்தின்மேற் கல்லெறிந்த குறிப்பை நின்று ஆலோசித்து, "நேற்று எனக்கு இவ்வெண்ணம் வந்தது பரமசிவனது திருவருளே" என்று துணிந்து, அதனையே திருத்தொண்டாக நினைத்து, எப்பொழுதும் அப்படியே செய்யக்கருதினார். எல்லாச் செயல்களும் சிவன் செயல் என்றே தெளிந்தமையால் அந்நியதியைத் தினந்தோறும் வழுவாமல் அன்பினுடன் செய்ய; அது ஆன்மாக்கடோறும் வியாபித்திருந்து எல்லாவற்றையும் உணருஞ் சிவபெருமானுக்கு மிகச் சிறந்த திருத்தொண்டாகி முடிந்தது. ஒருநாள் அந்நாயனார் திருவருளினாலே மறந்து போசனஞ்செய்யப் புகும்பொழுது, இன்றைக்கு எம்பெருமானை அறியாமல் மறந்துவிட்டேன்" என்று எழுந்து, அத்தியந்த ஆசையுடன் மிகவிரைந்து புறப்பட்டு, சிவலிங்கத்தை அணைந்து, ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிய; பத்திவலையிற்படுவாராகிய பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றி, அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.

siva1.jpg

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

மாறினேன் சமய பேத வழிப்படு புன்மை யெல்லாந்

தேறினேன் வீடு சேர்க்குஞ் சைவசித்தாந்த மென்றே

யேறினேன் சிலலோ கத்தே யிரண்டற் கலந் தொன்றாகி

ஆறினேன் வருத்த மெல்லாங் கலைசைக்கோ வருளினாலே"

இவ்வாறு திராவிட மகாபாஷ்ய கர்த்தாவாகிய ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். பிற சமய கோட்பாடுகளெல்லாம் பொய் என்று கண்டு நீங்கி, சைவசித்தாந்தமே, முத்தியாகிய வீட்டைத்தர வல்லது என்று உணர்ந்து கலைசைப் பிரானாகிய சிவபெருமான் அருளினாலே வருத்த மெல்லாம் தீர்ந்து பேரின்பத்தை அடைந்ததாக அருளிச் செய்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

உமாசகிதர்

Click this to view full size photo of Umasakayar

சிவபெருமானது அருட்சக்தியே உமை என அழைக்கப்படுகிறது. சக்தி தன் வடிவே தன்னில் தடையிலா ஞானமாகும் என்பர் ஆன்றோர் ஞானமே உமை வடிவாகத் திகழ்கிறது. சிவபெருமானது கருணையே அம்பிகை என்பது இதனால் புலப்படும். உமை என்பது சிவபெருமானது கருணையே என்று காட்ட அமைந்த திருக்கோலமே உமாசகித மூர்த்தி அல்லது உமா மகேச்வர மூர்த்தி ஆகும்.

சுகாசனமூர்த்தி அருகே, தேவி அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் இக்கோலம் உமாசகிதமூர்த்தி என அழைக்கப்படும். இறைவனின் இடப்பக்கம் இறைவி அமர்ந்திருப்பாள். இவர் ஒரு முகமும் முக்கண்ணும் நாற்கரங்களும் கொண்டிருப்பர். சுகாசனத்தில் அமர்ந்த இவர் புலித்தோலையும் பட்டாடைகளையும் அணிந்திருப்பார். இவரது பின் வலக்கரத்தில் மழுவும் பின் இடக்கரத்தில் மானும் திகழும். முன் வலக்கை அபயஹஸ்தமாகவும் முன் இடக்கை வரதஹஸ்தமாக அல்லது சமஹகரணமாகவும் அமைந்திருக்கும். குண்டலம், ஜடா மகுடம், சர்ப்பகங்கணம், யக்ஞோபவீதம் ஆகியன அணிந்து மிக அழகுடையவராகத் திகழ்வார். தேவி ஒருமுகமும் இருகரங்களும் கொண்டு விளங்குவாள். அவளது வலக்கரத்தில் பத்மமும் (தாமரை மலர்) இடக்கரம் சிம்ஹகரணமாக அல்லது ஆசனத்தில் பதிந்தவாறும் இருக்கும். தேவி கரண்டமகுடம் சூடி அழகே உருவாக வலக்காலைத் தொங்க அமைத்து அமைந்திருப்பாள்.

Link to comment
Share on other sites

மதுரைக்கோயிலில் தூண்சிற்பமாக இம்மூர்த்தி விளங்குகிறது. இவ்வடிவத்தின் தனிச் சிறப்பாக, இறைவன் பின் வலக்கரத்தில் ஜபமாலையும் பின் இடக்கரத்தில் சூலமும் கொண்டு முன் வலக்கரம் அபயம், முன் இடக்கரம் வரதமாக விளங்குகிறார். இறைவியின் வலக்கரத்தில் உற்பல மலரும் இடக்கரம் கட்டியலம்பிதமும் அமைந்து விளங்குகிறது.

திருமுறைகளில் இம்மூர்த்தி, போற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திருந்திழை யவளொடும் பெருந்தகை இருந்ததே அரவிடைமாதொடும் வீற்றிருந்த அழக

என்று திருஞானசம்பந்தரும்

பண்ணினேர் மொழியாள் உமைபங்கர்

என்று திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும் பரவுகின்றனர்.

கந்த புராணத்திலும் இக்கோலம் காட்டப்பெறுகிறது.

தந்துழி ஈசந்தன்னைத் தநயரும் அயனும்மாலும் வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி நந்தமது அருளதாகும் நங்கையோ டினிது சேர்ந்தாம் முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான்.

thiruvana.jpg

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சண்டேச அனுக்ரஹர்

sandesaanukarakar.jpg

"தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு இவ்வண்டத்தொடுமுடனே

பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே"

- திருப்பல்லாண்டு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாளுக்கு அண்மையில் விளங்கும் சிற்றூர் சேய்ஞ்ஞலூர். இங்கு பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார்.

அவருக்கு ஐந்து வயதிலே, வேதங்களையும், வேதாங்கங்களையும், சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறியமறிவு உண்டாயிற்று.

Link to comment
Share on other sites

பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர். நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் ஒரேபதி சிவபெருமானே என்பதை உணர்ந்தார். அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.

ஒருநாள் ஓரிற்றுப் பசு ஒன்று மேய்ப்பனாகிய் இடையனைக் குத்தப் போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான். மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதைபதைப்போடும் அவன் சமீபத்திற் சென்று தடுத்தார். இப்பசுநிரையை இனி நீ மேய்க்க வேண்டியதில்லை. நானே மேய்பேன் என்றார். விசாரசன்மன், ஆநிரைகளைத் தாமே மேய்க்கும் பொறுப்பேற்று செய்துவரும் நாளில், மணலால் இலிங்கம் அமைத்து, மாடுகள் சொரிந்த பாலைக் கொண்டு அவ்விலிங்கத்துக்குத் திருமஞ்சனமாட்டி, வழிபட்டு வந்தார். இதனால் வீடுகளில் அம்மாடுகள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்து விடவில்லை. மாடுகள் மேய்க்கும் இடத்தில் தன் மகள் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிகிறான் என மறைந்து இருந்து கண்ட எச்சதத்தன், தன் மைந்தனின் சிவபூசைத் திறத்தினை உணராது, பூசனைக் கிடையூறாகக் காலால் உதைத்துச் சிதைக்க, சிவாபராதம் பொறுக்காத விசாரசன்மன், மாடு மேய்க்கும் கோலால் எச்சதத்தனின் காலில் அடிக்க, அது வாளாக மாறி அவன் காலைத் துணித்தது. சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர், முன் போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி அருளினார். விசாரசருமர் அது கண்டு மனம் களித்து விழுந்து வணங்கினார்.

பரமசிவன் அவரைத் தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, "நீ எம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச் செய்து அவரை அணைத்து அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார். சிவபெருமானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று. "நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக் கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்" என்று திருவாய் மலர்ந்தார். தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார்.

அண்டர்பிரானும் தொண்டர் தமக்கதிபனாக்கி, அனைத்து நாம்

உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்

சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர் பொற்றடமுடிக்குத்

துண்டமதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.

- சண்டிகேஸ்வர நாயனார் புராணம்

விசாரசன்மன் சண்டேச நாயனாராகி விட்டார். எச்சதத்தர் சிவத்துரோகஞ் செய்தும், சண்டேசுர நாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.

சண்டேச நாயனாருக்குச் சிவபெருமான் அருள் புரிந்த கோலமே சண்டேச அனுக்கிரகமூர்த்தி என்று போற்றப்படுகிறது. அம்சுமத்பேதாகமத்தில் இக்கோலம் விவரிக்கப்படுகிறது. இவ்வடிவில், சிவபெருமான் பார்வதி தேவியுடன், உமாசகித மூர்த்தியைப் போல அமர்ந்திருப்பார். அவரது முகம் இடப்பால் திரும்பியிருக்கும். அவரது வலக்கரம் வரதமாகவும், இடக்கரம் சண்டேசர் தலைமீது வைத்தும் காணப்படும். சண்டேசர் பணிவுடன் தன்னிரு கரங்களையும் குவித்து வணங்கியவராய் சிவபெருமான் முன்பு பத்மாசனத்தின் மீது நிற்பார்.

Link to comment
Share on other sites

உத்தரகாமிகாகமத்தின்படி, சிவபெருமானும் தேவியுடன் சந்திரசேகரர் கோலந்தாங்கி அமர்ந்திருப்பார். அவருக்கே முன்னால் கூப்பிய கரங்களுடன் சண்டேசர் நின்று கொண்டிருப்பார்; அல்லது அமர்ந்திருப்பார். சிவபெருமான் தனது வலக்கரத்தில் ஒரு மாலையைக் கொண்டு இடது கையால் அதனைச் சண்டேசர் தலையைச் சுற்றிக் கட்டுவது போன்று விளங்குவார். பூர்வ காரணாகமும் சில்பரத்தினமும் இம்முறையிலேயே இவ்வடிவத்தைக் கூறுகின்றன.

சண்டேசுரர் சிவபூசையின் இறுதியிலே பூசிக்கப்பட்டு, சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அன்னம் பானீயம் முதலியனவும் தாம்பூலம் மாலை சந்தனமும் ஆகிய நிருமாலியங்களை ஏற்று சிவபூசாபலத்தைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர். இச்சண்டேசுர பூசை செய்யா வழிச் சிவபூசையாற் பயன் இல்லை அது

"சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலங்

கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்"

- சைவ சமய நெறி

என்னும் சைவசமயநெறி திருக்குறளான் உணர்க.

Link to comment
Share on other sites

இது காறும் கூறியவற்றால் சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவத்துரோகத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெள்ளிதிற் பெறப்பட்டது.

ஆதலால், இச்சரீரம் உள்ளபொழுதே சிவலிங்கார்ச்சனைக்கு உரியோர்கள் சைவாசிரியரை அடைந்து, சிவதீட்சை பெற்று, விதி வழுவாது மெய்யன்போடு சிவபூசை பண்ணுக சிவனைப் பூசை செய்யாதவர்களுக்கு ஒரு துணையும் இல்லை. அது

"தமக்கருக மோருருவிற் பூசை சமையார்

தமக்குத் துணையாதோ தான்"

என்னும் சைவ சமய நெறித் திருக்குறளால் அறிக

Link to comment
Share on other sites

"திருக்கோயிலில்லாத திருவி லூருந்

திருவெண்ணீ றணியாத திருவிலூரும்

பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும்

பாங்கினொடு பலதளிகளில்லா வூரும்

விருப்போடு வெண்சங்க மூதாவூரும்

விதானமும் வெண்கொடியு மில்லாவூரு

மருப்போடு மலர்பறித்திட்டுண்ணாவூரு

மவையெல்லா மூரல்ல வடவி காடே"

Link to comment
Share on other sites

மந்தன்:காட்சிப் பிரமாணம் என்றால் என்ன சுவாமி?

ஆத்மநாததேசிகர்: காட்சிப் பிரமாணம் என்றால் என்னவென்று கேட்டீர்களல்லவா. அதைப்பற்றிச் சொல்வோம் கேளுங்கள். உலகியலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுவதற்கு முன் அதற்கு இன்றியமையாத தாயுள்ள வேறொரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். உதாரணமாக ஒரு நீதி ஸ்தலத்தில் ஒரு வழக்கை ஆராய்வதற்கு முன் சட்டப்படிப்பு அவசியம். ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்வதற்கு முன் மருத்துவப் படிப்பு தேவைப்படுகிறது. பெரிய கட்டிடங்களையும் பாலங்களையும் அமைக்க விரும்புகிறவர்கள் பொறியியல் நூல்களைப் படித்திருக்க வேண்டும். இதே போல மற்றவைகளையும் ஊகித்து அறிந்து கொள்ளுங்கள். சமயங்களை ஆராய்வதற்கும் அளவை அல்லது தர்க்க அறிவு அவசியம். அளவை நூல் வல்லவர்கள் ஒரு பொருளை ஆராய்ந்து நிச்சயிப்பதற்கு அது அளவை நூலிற் கூறிய விதிகளுக்குப் பொருந்துகிறதா என்று தர்க்க ரீதியாகப் பரிசோதித்து முடிவு கட்டுவார்கள். நியாயஸ்தலத்தில் ஒரு விஷயத்தை ஆராய்ந்து இன்ன கூட்டத்தின் இன்ன பிரிவுக்குள் அடங்கும் என்று தீர்மானிப்பது போலத்தான் நமது வைதிக சமயமாகிய சைவ சித்தாந்தத்தின் சமய உண்மைகள் எல்லாம். நமது ஆன்றோர்களால் தர்க்கத்துக்குப் பொருந்துமாறு விளக்கப்பட்டவைகளே யாகும் அதை இனி வரும் பாடங்களில் தெரிந்து கொள்ளுவீர்கள்.

ஆத்மநாததேசிகர்:அளவை நூல் அல்லது தர்க்க சாஸ்திரப்பயிற்சிக்கு வடமொழிப் பயிற்சி அவசியம். ஆகவே சாமான்யரும் அளவை இலக்கணம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெருங்கருணையினால் நமது மாபாஷ்ய கர்த்தராகிய ஸ்ரீமாதவச்சிவஞான சுவாமிகள் 'தர்க்க சங்கிரகம்' 'அன்னப்பட்டீயம்' என்ற இரு தர்க்க நூல்களைத் தமிழில் அருளிச் செய்து சைவ உலகத்தை வாழ வைத்தார்கள். அளவை அல்லது தர்க்க அறிவின் அவசியத்தைத் திருவுளத்தில் கொண்டு தாம் இயற்றிய 'சிவஞான சித்தியார்' என்னும் சிறந்த சைவ சித்தாந்த நூலில் முதற்கண் அளவையைப் பற்றி அருளிச் செய்திருக்கிறார்கள் சகலாகம பண்டிதர் என்னும் ஸ்ரீமத் அருணந்தி சிவாச்சாரியசுவாமிகள். "பாரிலுள்ள நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப்பாதிபோதும்" என்று ஆன்றோர்கள் போற்றுவதிலிருந்து இந்நூலின் (சிவஞான சித்தியார்) பெருமையை உணரக் கடவீர்கள்.

Link to comment
Share on other sites

ஆத்மநாததேசிகர்:இனி பிரமாணம், காட்சி, கருதல், உரை என மூவகைப்படும். காட்சியைப் பிரத்தியக்ஷம் என்றும் கருதலை அனுமானம் என்றும், உரையை ஆகமம் என்றும் சொல்லுவதுண்டு. இன்னும் அபாவம் (இன்மை) அருத்தாபத்தி (பொருள்) ஒப்பு (உவமை) என மூன்றையும் சேர்த்துப் பிரமாணம் ஆறு என்றும் சொல்லுவார்கள். அதற்கு மேலும் ஒழிபு, உண்மை, ஐதிகம், இயல்பு என்ற நான்கையும் சேர்த்து பிரமாணம் பத்து என்று சொல்வாரும் உண்டு. அவை அனைத்தும், காண்டல், கருதல், உரை, (காட்சி, அனுமானம், ஆகமம்) என்ற மூன்றில் அடங்கி விடுமாகையால் அம் மூன்றை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும். இவற்றுள் காட்சிப் பிரமாணம் என்பது ஒரு பொருளை நிருவி கற்ப உணர்வுடன், ஐயம், திரிபு, இல்லாமல் நேரே ஆன்மாவினது ஞானசக்தியால் அறிவது. ஐயம் என்பது ஒரு பொருளை அறியும்போது இதுவோ அதுவோ என்று சந்தேகப்படுதல். இது கயிறா அல்லது பாம்பா என்று எண்ணுதல் திரிபு என்பது. ஒன்றை இன்னொன்றாகவே அறிதல் அதாவது கயிற்றைப் பாம்பு என்றே நிச்சயமாக எண்ணிக்கொள்ளுதல். இவ்விரண்டும் இன்றி நம்முடைய ஐம்புலன்களின் மூலமாய் ஒரு பொருளை நிச்சயித்து இன்னது என்று அறிதல் நிருவிகற்பக் காட்சி எனப்படும். அதன் பிறகு அந்தப் பொருளினுடைய பெயர் சாதி குணம் கர்மம். பொருள் என்ற இவைகளை நிச்சயித்து அறிதல் சவிகற்ப உணர்வு அல்லது சவிகற்பக் காட்சி எனப்படும். உதாரணமாக ஒரு புத்தகத்தைப் பார்க்கிறோம். இது புத்தகமா பலகையா என்று சந்தேகமில்லாமலும், இது பலகை தான் என்ற மயக்க உணர்ச்சியில்லாமலும் புத்தகம்தான் என்று ஆன்ம அறிவினால் நிச்சயித்து அறிதல் நிருவிகற்பக் காட்சி. அதற்கு மேலே இது இன்ன புத்தகம் இன்னாரால் எழுதப்பட்டது, இன்ன விஷயம் அடங்கியுள்ளது என்ற மற்ற விவரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளுவது சவிகற்பக்காட்சி. அதே போல் காதினால் ஒரு ஓசையைக் கேட்பதும், மூக்கினாலே வாசனையை நுகர்வதும், நாவினாலே ருசியை ருசிப்பது உடம்பினாலே ஒரு உணர்ச்சியை உணர்வதும் காட்சிப்பிரமாணங்களே. அவற்றைப் பொதுவாய் அறிவது நிருவிகற்பக் காட்சி எனவும் அவற்றில் சாதி, குணம் முதலிய பேதங்களுடன் அறிவது சவிகற்பக் காட்சி எனவும்படும். ஐம்புலன்களில் எந்தப் புலனால் அறிந்தாலும் அது காட்சிப்பிரமாணமே.

Link to comment
Share on other sites

ஆறாவது

வனமுலையாள் சருக்கம்

சிறப்புலிநாயனார் புராணம்

திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்

சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்

அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்ப ரானார்க்கு

அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்

பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்

பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்

கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த

கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.

சோழநாட்டிலே, திருவாக்கூரிலே, பிராமணகுலத்திலே, சிறப்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்கள் எழுந்தருளி வந்தபொழுது, அவர்களை நமஸ்கரித்து இன்சொற்களைச் சொல்லி, அவர்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பவர். ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை அன்பினோடு ஜபிப்பவர். பரமசிவனைக் குறித்து யாகங்கள் செய்பவர். அவர் இன்னும் பல சிவபுண்ணியங்களைச் செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.