• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

இயற்பகைநாயனார் புராணம்

எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து

ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட

வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி

யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்

கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்

காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த

பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்

பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.

சோழமண்டலத்திலே, காவேரிநதி சமுத்திரத்தோடு கலத்தலால் காவேரிசங்கமம் எனப்பெயர்கொண்ட விசேட தீர்த்தம் பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்திலே, வைசியர் குலத்திலே, குருலிங்க சங்கமபத்திகளிற் சிறந்தவரும் ஒளதாரியம் உள்ளவரும் ஆகிய இயற்பகையாரென்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் இல்லறத்தில் இருந்து, விபூதி உருத்திராக்ஷம் தரித்த சிவபத்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு வருங்காலத்தில்; ஒருநாள், திருக்கைலாசபதியானவர், அவ்வியற்பகையார் அடியார்கள் விரும்பியவை யாவையேனும் அவற்றை மறாது கொடுத்தலைச் சகலருக்கும் புலப்படுத்தும்பொருட்டு, ஒரு பிராமணவடிவங் கொண்டு, விபூதி திருமேனியிலே பிரகாசிக்க, தூர்த்த வேடமுந் தோன்ற, அவர் வீட்டிற்கு எழுந்தருளினார். இயற்பகை நாயனார் அன்பினோடு அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்து, அழைத்துக்கொண்டு போய் விதிப்படி அருச்சித்து, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளியது பூர்வசன்மத்தில் அடியேன் செய்த தவத்தினாற் போலும்" என்றார். அது கேட்ட ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "சிவனடியார்கள் விரும்பிக் கேட்பன யாவையெனினும் நீர் அவைகளை மாறாமல் மகிழ்ச்சியோடு கொடுத்தலை நான் கேள்வியுற்று, உம்மிடத்திலுள்ள ஒரு பொருளை விரும்பி இன்றைக்கு இங்கே வந்தேன். நீர்தருதற்கு இசைவீராயில், அந்தப்பொருள் இன்னது என்று சொல்லுவேன்" என்றார். அதற்கு இயற்பகைநாயனார் "எப்படிப்பட்ட பொருளாயினும் என்னிடத்தில் இருக்குமாயின், அந்தப்பொருள் நமது கடவுளாகிய பரமசிவனுடைய அடியார்களுக்கு உரிய பொருளேயாம். இதைக் குறித்துத் தேவரீர் சந்தேகிக்க வேண்டுவதில்லை. திருவுள்ளம் விரும்பியதை இன்னது என்று சொல்லியருளும்" என்று சொல்ல; ஐயர் " உம்முடைய மனைவியை விரும்பிவந்தேன்" என்றார், அப்பொழுது இயற்பகைநாயனார் முன்னிலும் பார்க்க மிக மகிழ்ந்து வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீர் அடியேனிடத்தில் உள்ள பொருளையே விரும்பிக் கேட்டது அடியேனுடைய பாக்கியம்" என்று சொல்லி, சீக்கிரம் உள்ளே போய், கற்பிலே சிறந்த தம்முடைய மனைவியாரை நோக்கி, "நான் இன்றைக்கு உன்னை இந்தச் சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன்" என்றார். உடனே மனைவியார் மனங்கலங்கிப் பின்னே தெளிந்து, "பிராணநாயகரே! நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறொன்று உண்டோ? இல்லை" என்று சொல்லி, அவரை வணங்க; அவர் தமது மனைவியாரை, அங்கு வந்த சிவனடியாருக்கு மனைவியா கைபற்றி, வணங்கினார். மனைவியார் போய், அவ்வையாருடைய பாதங்களிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்றார். அதுகண்ட இயற்பகைநாயனார் மனமகிழ்ந்து அவ்வையாரை வணங்கி "இன்னும் அடியேன் செய்யவேண்டிய பணியாது" என்று வினாவ, ஐயர் "இந்தப்பெண்ணை நான் தனியே கொண்டு போகையால், உங்கண்மேலே பற்றுள்ள பந்துக்களையும் ஊரவர்களையும் கடக்குவரைக்கும் அவர்களால் எனக்கு ஓரிடையூறும் உண்டாகாதிருக்கும்படி, நீர் துணையாக வரவேண்டும்" என்றார். இயற்பகைநாயனார் அதைக் கேட்டு, "இவர் கட்டளையிடுமுன் நானே நினைந்து செய்யவேண்டிய இக்குற்றேவலைச் செய்யாமல், இவர் சொல்லும் வரைக்கும் தாழ்ந்து நின்றது குற்றம்" என்று நினைத்துக் துக்கித்து, ஆயுதசாலையிலே போய், போர்க்கோலங் கொண்டு, வாளும் பரிசையும், ஏந்திக்கொண்டு, ஐயரிடத்திற்கு வந்து, அவரை வணங்கி, அவரையும் மனைவியாரையும் முன்போம்படி செய்து தாம் பின்னே போனார்.

Share this post


Link to post
Share on other sites

அப்பொழுது இயற்பகைநாயனாருடைய சுற்றத்தவர்களும் அவர் மனைவியாருடைய சுற்றத்தவர்களும் "இயற்பகை பைத்தியத்தினாலே தன் மனைவியைக் கொடுத்தானாயினும், அவளை ஒருவன் கொண்டுபோவது நீதியா" என்று, தங்கள் மரபுக்கு வரும் பெரும்பழியை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அவர்களைத் தொடரக் கருதி, வேல் வில் வாள் முதலிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, சண்ட மாருதம் போலத் தீவிரமாக நடந்து, நகருக்குப் புறத்திலே போய், ஐயருக்கு இருபக்கத்திலும் நெருங்கி, ஆராவாரித்து, "ஓ துட்டனே! எங்களுக்குப் பழி வராதபடி எங்கள் குலப்பெண்ணை விட்டுப்போ" என்று சொல்லி, அவரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனாருடைய மனைவியாரைப் பார்க்க; அம்மனைவியார் "சுவாமி! நீர் பயப்படவேண்டாம். இயற்பகைநாயனார் அவர்களை வெல்லுவார்" என்றார். இயற்பகை நாயனார் அதைக் கேட்டு, "அடியேன் அவர்கள் எல்லாரையும் இப்போது கொன்று போடுகின்றேன், தேவரீர் அஞ்சவேண்டாம்" என்று சொல்லி, அங்கு வந்த சுற்றத்தவர்களைப் பார்த்து, "நீங்கள் என்வாளுக்கு இரையாவீர்கள். ஒருவரும் எனக்கு எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள்" என்று கூற; அவர்கள் "ஏடா இயற்பகை! நீ என்னகாரியஞ்செய்தாய்! ஊரவர்கள் பேசும் பழிமொழிக்கும் நம்முடைய சத்துருக்கள் நகைக்கும் நகைப்புக்கும் நீ சற்றாயினும் வெட்கப்படவில்லை, மனைவியைப் பிராமணனுக்குக் கொடுத்தோ நீ சாமர்த்தியம் பேசுவது, நாமெல்லாம் ஒருங்கே மடிவதன்றி இந்தப் பெண்ணைப் பிராமணனுக்குக் கொடுக்க விடோம்" என்றார்கள். உடனே இயற்பகைநாயனார் அதிக கோபங்கொண்டு, உங்கள் சரீரங்களைத் துண்டம் துண்டமாக்கி உங்களுயிரைச் சுவர்க்கத்துக்கேற்றி ஐயரைத் தடையின்றிப் போகவிடுவேன்" என்று சொல்லி எதிர்க்க; அவர்கள் அந்நாயனாரோடு யுத்தஞ்செய்யத் தொடங்காமல், அவர் மனைவியாரைக் கொண்டுசெல்கின்ற ஐயருக்கு முற்பட்டு, அதிக கோபத்தோடும் அவரைத் தடுத்தார்கள். அதுகண்ட நாயனார் கோபங்கொண்டு, வாளினாலே, இடசாரி வலசாரியாக மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களுடைய தோள்களையும் கால்களையும் தலைகளையும் துணித்து, விழுத்தி, பின் ஒவ்வொருவராய் வந்து எதிர்த்தவர்களையும் கொன்று, மேல் எதிர்ப்பவர் ஒருவருமின்றி யுத்தகளத்திலே உலாவினார். பின் இந்தச் செயற்கருஞ் செய்கையைச் செய்த நாயனார் ஐயரை நோக்கி, "சுவாமி! தேவரீர் அஞ்சாவண்ணம் இந்தக் காட்டைக் கடக்கும் வரைக்கும் வருகிறேன்" என்று சொல்லி, அவரோடு போனார். திருச்சாய்க்காடு என்னுஞ்சிவஸ்தலத்துக்கு சமீபத்திலே போன பொழுது, ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "இனி நீர்திரும்பிப் போகலாம்" என்று சொல்ல; நாயனார் அவருடைய திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு திரும்பினார். அப்பொழுது ஐயர் "இயற்பகையே! இங்கே வா" என்று சொல்லி ஓலமிட்டார். நாயனார் அந்த ஓசையைக்கேட்டு, "அடியேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன். இன்னும் இடையூறு, செய்பவர்கள் உண்டாயில், கொன்று போடுவேன்" என்று சொல்லிக்கொண்டுவர; ஐயர் மறைந்தருளினார். வந்த நாயனார். அவ்வையரைக்காணாமல் மனைவியாரைமாத்திரங் கண்டார். பின்பு ஆகாயத்திலே பார்வதி சமேதராகி இடபவாகனத்தில் எழுந்தருளிவந்த திருக்கைலாசபதியைக் கண்டார்.

21b79g.jpg

ஆராமையினாலே உடனே விழுந்தார்; எழுந்து ஸ்தோத்திரம்பண்ணினார். சுவாமி அவரை நோக்கி "நம்மேலும் நம்முடைய அடியார்கண் மேலும் நிஷ்களங்கமாகிய அன்பு வைத்த இயற்பகையே! நீ உன் மனைவியோடும் நம்முடனே வா" என்று திருவாய் மலர்ந்து, அந்தர்த்தானமாயினார். இயற்பகைநாயனாரும் மனைவியாரும் சிவலோகத்தை அடைத்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள். யுத்தத்திலே இறந்த அவர்கள் பந்துக்களும் வானுலகத்தை அடைந்து இன்பமனுபவித்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites

மனிதர்கள் இலகுவாக விளங்க முடியாத சிவாகம சைவ சித்தாந்தக் கருத்துக்களை சாதாரண வாழ்வியல் வடிவில் எளிமைப்படுத்தி பாமரனும் விளங்கச் சொல்வதையே புராணங்கள் செய்கின்றன என்பதை இங்கு அழகாக விளங்க உங்கள் இணைப்பை தந்துள்ளீர்கள். சிலர் புராணங்களுக்குள் கால இசைச்செருகல்களால் விளைந்த ஆபாசங்களை மட்டும் படித்துவிட்டு.. அதுவே சமயம் சித்தாந்தம் என்று தவறாக மெஞ்ஞான அறிவின்றி கருத்துக்களைப் பகர முயல்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த எளிமைப்படுத்திய புராணங்கள் சொல்லும் வாழ்வியல் நீதிகள் ஒழுக்கங்கள் புரிய வேண்டும்.. புரிய முனைந்தால்..!

ஓங்குக சைவ நீதி..! :lol:

Share this post


Link to post
Share on other sites

naiyarpa_i.jpg

naiyarpa.gif

Eyarpakai Naayanar - இயற்பகை நாயனார் பற்றி சைவ சரபம் மா.பட்டமுத்துவின் சொற்பொழிவு.

Click this to download

http://www.megaupload.com/?d=WFT8MNCL

திருச்சிற்றம்பலம்

நன்றி நெடுங்களப்பூவன் நண்பரே!

http://www.shaivam.org/naiyarpa.html - ஆங்கிலத்தில் இப்புராணத்தைப் படிக்க கிளிக் செய்யவும்

Share this post


Link to post
Share on other sites

2.சூசனம்

1. சிவனது பரத்துவம்

சிவன் பிரமாண்டத்துள்ளே கைலாச நிலயராகிய ஸ்ரீகண்ட சரீர சரீரியாய் இருந்து, பிரமவிட்டுணு முதலியோர்க்கும் சுவேதர் உபமன்னியு முதலியோர்க்கும் கிருஷ்ணர் அர்ச்சுனர் முதலியோர்க்கும் அறுபத்துமூவர் முதலியோர்க்கும் நிக்கிரகானுக்கிரகங்களைப் பண்ணும் இயல்புடையோர் ஆதலானும், அறுபத்துமூவர் முதலியயோர்க்கும் நிக்கிரகானுக்கிரகங்களைப் பண்ணும் இயல்புடையோர் ஆதலானும், அறுபத்துமூவர் முதலிய திருத்தொண்டரது சரித்திரத்தை விரித்துரைக்கப்புகுந்த ஆசிரியர் முன்னர் அவ்வறுபத்துமூவர்க்கு அருள் செய்த சிவன் கைலாசத்தில் பிரம விட்டுணு முதலியோர் சேவிப்ப வீற்றிருந்தருளும் பெருஞ்சிறப்பைக் கூறுதல் முறைமை யாதலானும், அதனை ஈண்டுச் சுருக்கிக் கூறி, அங்ஙனங் கூறுமுகத்தாற் சிவனே விச்சுவாதிக்கும் விச்சுவசேவியருமாம் என்பது குறிப்பித்தார். பல பிரமாணங்களாலே சிவனே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாமென்பது ஐயமறத் துணிந்த வழியன்றி, அவர்பாற் பத்தி எய்தல் கூடாமையானும், ஒரோவழி எய்தினும், வைணவர் முதலியோர் மறுக்கும்வழி மயக்கமெய்துதல் பற்றி அது குன்றுமாதலானும், அத்ப்பிரபலப் பிரமாணமாகிய அதர்வசிகை முதலிய சுருதிகளால் சிவனே விச்சுவாதிக்கும் விச்சுவ சேவியருமாம் என்பது சிறிது காண்பிப்பாம்.

hindu_index1.jpg

அதர்வசிகையிலே "அந்தத் தியானம் யாது? அன்றியும் தியானிப்போன் யாவன்? தியானிக்கற்பாலரும் யாவர்?" என்ற உபக்கிரமத்தில் இருந்த வினாக்களுக்கு இசையத் தியானத்தையும் தியானிப்போனையும் நிரூபணஞ் செய்த பின்னர், தியானிக்கற்பாலரை நிச்சயித்தற்குச் சொல்லுமாறு, மிகவுந் "தியானிக்கற்பாலராகிய ஈசானரைத் தியானிக்க, அந்தப் பிரம விஷ்ணு ருத்திரேந்திரர்களாகிய இவரெல்லாம் உற்பத்தியாகின்றனர். எல்லா இந்திரியங்களும் பூதங்களுடனே கூட (உற்பத்தியாகின்றன,) காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் (உற்பவித்தல்) இன்று, காரணமும் சருவை சுவரிய சம்பன்னரும் சருவேசுவரரும் சம்புவுமாகியவரே ஆகாச மத்தியத்திலே தியானிக்கற் பாலர்" என்பது தொடங்கி, "மற்றதெல்லாம் விட்டுச் சுகத்தைச் செய்பவராகிய சிவனொருவரே தியானிக்கற்பாலர். அதர்வசிகை முற்றிற்று" என்பது வரையும், இங்கே யோக ரூடியினாற் பரமசிவனிலே வர்த்திக்கும் ஈசானரென்னுஞ் சொல் யோகத்தினாற் சுவாபாவிக நிரதிசயைசுவரிய பரத்தன்மையுடையரென்று பொருள்படுதலானும், ரூடியினாலே பரமசிவனுக்குப் பெயராதலானும், அனைத்தினும் மேலாகிய பயன் வேண்டினோராகிய உயர்ந்தோரால் பரமசிவன் தியானிக்கற் பாலரென்னுங் கருத்துப் பற்றி ஈசான சத்தத்தால் விசேடிய நிர்த்தேசம் பண்ணப்பட்டது "மிகவுந் தியானிக்கற்பாலராகிய" என்று தியானிக்கப்பட தக்கவரென வற்புறுத்தி அதிகமாகத் துதித்தது ஈசானரன்றி மற்றையோர் இப்பெற்றிப் பட்டவ அன்றென்னும் உறுதியைத் தொனிப்பித்தற்கு, தேவ மனுஷாதி ரூபமாகிய சகலப் பிரபஞ்சத்தினும் பிரமா முதலிய நால்வருக்கும் மிக்க தலைமை கூறி, அவர்களது ஐசுவரியங்களும் வரையறைப்பட்டவைகளென்று உணர்தற்கு "பிரம விஷ்ணு" என்பது முதல் "பூதங்களூடனே கூட" என்பது வரையும் பூதம், இந்திரியம் முதலிய வற்றிற்குச் சமமாக அவர்களுக்கு உற்பத்தியுடையை காட்டப்பட்டது. இவ்வுற்பத்தியுடைமை பரமசிவனுக்கு உண்டாயின், அவருக்கும் அது போலத் தியானிக்கப் பாலராந் தன்மையின்றாகுமென்று ஆசங்கித்து "காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் உற்பவித்தலின்று" என்று சொல்லப்பட்டது. பிரமாதிகளுக்கு உற்பத்தி கூறுஞ் சொல்லாற்றலால் அவர்களுக்கு அருந்தா பத்தியாற் பெறப்பட்ட காரணம் எதுவோ அந்த ரூபமாகிக் காரணங்களாகிய பிரமா விஷ்ணு ருத்திரர்களையும் மந்திரோப நிடதப் பிரசித்தமான காலமுதலியவற்றையும் படைத்தோராகியும் ஆதிசிருட்டியைச் சங்கற்பித்தோராகியும் இருக்கும் இப்பெற்றிப்பட்ட ஈசானர் யாண்டாயினும் உற்பவித்தல் இன்று என்பது இதன் பொருளாம். இதனால் பிரமாதிகட்குக் காரணம் யாது அது பிறத்தலின்று என்ற இவ்வளவு பொருளுமே பிரசித்தம். ஈசான ரென்றது இல்லையெனின்; அங்ஙனமாயினும், ஈசானருக்குத் தியேயத்துவம் விதித்துப் பிரமாதிகட்குத் தியேயத்துவம் பிரித்து நீக்கும் பொருட்டு அவர்களிடத்திற்றோஷந் தோற்றுவித்தபின்பு, அந்தத் தோஷம் ஈசானருக்கும் உண்டாயின் தியேயத்துவம் இன்றாகுமென்று அவசரத்திற் போந்த சங்கை யகற்றற்கு அவருக்கே அத்தோஷமின்மை கூறவேண்டுதல் அவசியமாதலின், ஆண்டு ஈசானரென வருவித்துப் பொருளுரைப்பதே சால்பு, அங்கே ஆகாசமத்தியத்திலே என்றது உபாசனா ஸ்தானம் கூறியவாறு, அதற்குப் பரமாகாசமாகிய கைலாசமென்னும் பெயருடைய பரசிவலோகமென்பது கருத்து, அதனால் இருதயகமலம் இரவிவிம்ப முதலிய எவ்வெவ் விடங்களிற் சிவனைத் தியானிக்கினும், அவ்வவ்விடங்கள் அனைத்தினும் சோதி மயமாகிய கைலாசத்தை விபாவித்து, அதன் மத்தியத்தில் இருப்பவராகச் சிவனைத் தியானிக்க என்று உணர்த்தப்பட்டது; சருவேசுவரரென்றது சிவனது நாமமாகக் கூறப்பட்டது; "ஓங்காரமாகிய சருவேசுவரரைத் துவாதசாந்தத்திலே (உபாசிக்க)" என்று தாபநீயோப நிடதத்திற் பிரயோகித்தலாலும், புராணங்களில் வழங்கலாலும், அவருக்கு அப்பெயருண்மையாலென்க. அதுவன்றி, சருவைசுவரிய முடையவரென்னும் பொருள்படக் கூறிற் புனருத்தமாதலின், அற்றன்றென்க. அன்றியும், இரவி கிரணத்தால் அனுக்கிரகிக்கப்பட்ட கமலங்களே கமலங்களாகும் என்பதனுள் இரண்டாங் கமலபதம் கமலகுண சமூக மென்னும் பொருள்படுமாறுபோல, முன்னையது ரூடியாகவும் பின்னையது யோகரூடியாகவும் பொருள் பட்டு, சம்பு வானவர் உற்பத்தியின்றிப் பிரமாதிகட்குங் காரணமாயிருத்தன் மாத்திரத்தால் அபரிச்சின்னைசுவரியரென்றதன்

Share this post


Link to post
Share on other sites

அற்றேல், "இரணிய கர்ப்பன் ஆதியிலுள்ளவன்" என்றும் "இந்திரன் சகலத்திலும் மேலான தேவன்" என்றும் "அக்கினியே தேவரனைவர்க்கும் முன்னே தலைவன்" என்றும் இத்தொடக்கத்துச் சுருதிகளிலே பிறதேவதைகட்கும் வரையறைப்படாத தலைமையுண்டென்று கூறியதேதெனின், அது கூறுதும், அநேகருக்கு விகற்பித்துக் கூறினமையால், சருவேசுவரத்துவம் சம்பவியாது; வஸ்துவில் விகற்பங் கூடாமையால், ஒருங்கு சம்பவித்தலும் இன்று; ஒருவர்க்கொருவர் தலைவராதல் உண்மை வருதலால், விகற்ப பேதத்தினாலே சகலருடைய தலைமையும் கால பரிச்சின்னமாதலின் ஒருவருக்கும் தலைமையின்றெனலுங் கூடாது; தோஷம் உண்மையால், ஆதலால், அப்பெற்றிப்பட்ட வசனங்களுட் சில வசனங்கள் பிரதீதமாகிய பொருளுடையன என்றும், சில பிறிதோராற்றாற் பெறப்படும் பொருளுடையன என்றும் எல்லாரும் உடன்பட்டுக் கொள்ளல் வேண்டும். அங்கே இவை இவை பிரதீதமாகிய பொருளுடையன ஏனையவை பிறபொருளுடையன என்று நமது புத்தியாற் கற்பிக்கப்பட்ட நியாயங்களால் வியவஸ்தாபிப்பதிலும், உபவிருங்கணங்கட்கு அனுசாரமாக வியவஸ்தாபித்தலே மேன்மை; ஆன்மாக்களது புத்தியானது நிச்சயமில்லா நிலைமைத்தாதலின் அதனால் ஊக்கிக்கப்பட்ட நியாயங்களினாலே நிச்சயம் சித்தி பெறாமையானும், "வேதமானது அற்பக்கல்வியுடையானுக்கு "என்னையிவன் கடப்பான்" என்று அஞ்சுகின்றது. இதிகாச புராணங்களாலே வேதப் பொருளைத் தெளிந்தறிய வேண்டும். தன்னாலே அறிந்து கொள்ளப்பட்ட வேதப் பொருளிலே அறியாமை உண்டாகும்; ஆயினும் முனிவராலே நிச்சயிக்கப்பட்ட அந்தப் பொருளிலே பெரியோர்க்கு என்ன சங்கை யுண்டாகும்" என்னும் வியாச வசனத்தினாலுமென்க. ஆதலால், அனேக உபவிருங்கணங்களின் வலிமையாலே அதர்வசிகையே பிரதீதார்த்தம் உள்ளதென்றும், அவ்விதமாகிய உபவிருங்கணங்கள் இல்லாதனவாகிப் பிறதேவதைகட்குத் தலைமை கூறும் பிற சுருதிகள் வேறு பிரமாணங்களால் விரோதிக்கப்பட்டு சுருங்கி நிற்கின்ற அவ்வவர் தலைமையைப் பொருளாகவுடையனவென்றும் உடன்படுதலே பொருத்தம். நியாயத்தாற் பலாபலம் விசாரியாது திருப்தியடையாதவரைக் குறித்து, இந்தச் சுருதி மற்றையவற்றினும் மிகுபலம் உடைத்தென்பது நிறுத்துதும், பல சுருதிகள் தம்முள் விரோதம்டைந்தபோது பலமுடையது செம்பொருள்படுதலும் பலமில்லது பிறிதோராற்றாற் பெறப்படுதலுமே நியாயம். அங்ஙனமே சுருதியின் "சாதுர் மாசிய யாகஞ்செய்தவனுக்கு அழிவில்லாத புண்ணியம் உண்டாகின்றது" என்னுஞ் சுருதி "எப்படி இம்மையிற் கன்மங்களாலீட்டிய லோகம் நாசமடையும் அப்படித்தான் மறுமையிற் புண்ணியங்களாலீட்டிய லோகமும் நாசமாம்" என்று பொருட்பலம் பற்றிப் பிறிதொன்றிற் செல்லாமற் கிளர்ந்த பிரபலச்சுருதியால் வாதிதமாகிச் சுருங்கிய பொருட்பட்டு நிற்றலின், அழிவில்லாத என்பதற்கு ஒருகாலாவதியைக் குறித்து அழியாத என்பது பொருளாம். அதுபோலவே, ஈண்டும் சிவனது தலைமை கூறக் கிளர்ந்த கருதி ஏனனத் தேவர்களின் தலலமைகூறக் கிளர்ந்த சுருதிகளைச் சுருங்கிய பொருட்படுத்தும்; ஏனைத் தேவர்கட்குக் குற்றங்கூறி அவர்களினின்றும் பிரித்துச் சிவனது தலைமை கூறலானும், ஏனைச் சுருதிகள் இங்ஙனங்கூறாது ஓரோவிடத்து ஓரொருவர்க்குத் தலைமைமாத்திரம் கூறலானுமென்க. இன்னும் சிவனது தலைமை முமூட்சுக்களால் உபாசிக்கப்படும் பரதேவதையை நிச்சயிக்கத் தொடங்கிய உபநிடதத்தில் உரைக்கப்பட்டது ஏனையோரது தலைமை கர்மதேவதா நிச்சயப்பிரகரணங்களிற் கூறப்பட்டது. அதனாலும் இதற்குப் பிரபலத்துவம். இந்தச் சுருதி சிவனது தலைமையே கூறி, "அதர்வசிகை முற்றிற்று" என்று ஏனையோரினின்றும் பிரித்துச் சிவனது நிரதிசயமாகிய ஐசுவரியம் உணர்த்தி முடிவுபெற்றது. ஏனைச் சுருதிகள் அங்ஙனமல்ல. அதனாலும் இது பிராபல்லியம்.

Share this post


Link to post
Share on other sites

துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.

தீமை செய்த பிள்ளைக்கு நான் மெதுவாகத் தட்டினாலையே நான் கம்பி எண்ண வேண்டி இருக்கும்.சித்திரவதை செய்வதுதான் கடவுள் ஒரு வரை நல் வழிப் படுத்த முடியும் என்றால் அந்தக் கடவுளின் இயலாமையைஉம் அதனை ஒரு போதனையாகக் கூறும் உமது பாடமும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னைய குப்பைகள் அன்றி வேறொன்றும் இல்லை.

இப்படியான குப்பையை இன்னும் ஒரு பாடமாக இங்கே இணயத்தில் எற்றிக் கொண்டிருக்கும் உம்மை முதலில் மனித உரிமைச் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப உள்ள போட வேண்டும்.சித்தரவதையை நியாயப்படுதுவதற்காக.

நான் முதலில் கேட்ட கேள்விகளுக்கான் விடை எங்கே? ஈசுவர துரோகம் என்பது எதை?

மற்ற மதங்களைப் பின் பற்றுவதற்கு சித்திரவதை தான் உமது கடவுளின் பரிசு என்றால் அந்தக் கடவுள் மத வழிபாட்டு அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானவர்.அப்படியான காட்டு மிராண்டிக் கடவுள், இந்த நூற்றாண்டுக்குப் பொருத்தமானவர் இல்லை.இப்படியான சித்திரவதையையும், காடுமிராண்டித் தனத்தையும் சாதியத்தையும் தூக்கிப் பிடிக்கும் ஆறுமுகத்தின் கடந்தனூற்றாண்டுக் குப்பைகளை இணயத்தில் தரவேற்றுவது தமிழர்களை காட்டுமிரண்டிகளின் யுகத்திற்க்கு பின் நோக்கி அழைத்துச் செல்லவா?

Share this post


Link to post
Share on other sites

அற்றேல், "விசுவத்திற்குத் தலைவனும் ஆன்மாக்களுக்குத் தலைவனுமாகயவனை" என்று நாராயணோபநிடதத்து இருத்தலானும், "தேவர்களுள்ளே அக்கினி கடைப்பட்டவன்; விஷ்ணு சீர்த்தலைவன்; அவர்கட்கிடையே மற்றத் தேவதை களனைத்தும்" என்னும் வெகுவிருசபிரமாணத்திலே சகல தேவதைகளினும் உயர்ந்தவன் என்கையாலும், லோகாட்சி கிருகியத்திலே "அக்நயே பிருதிவ்யதிபதயேசுவாகா" என்பது முதல் "பிரமனே லோகாதிபதயே சுவாகா" என்பது வரையுமுள்ள மந்திரங்களாலே அக்கினி, சோமன், வாயு, சூரியன், இந்திரன், யமன், வருணன், குபேரன், மகாசேனன், உருத்திரன், பிரமன் என்பவர்களுக்குப் பிருதிவி, நட்சத்திர, அந்தரிக்ஷ, தியு, சுர, பிரேத, சலில, யக்ஷ, சேநா, பூத லோகங்களுள் ஒவ்வொன்றற்கு அதிபதியாந்தன்மை காட்டியபின்பு "விஷ்ணுவே சர்வாதிபதயே சுவாகா" என்று சுருக்கப்படாத சர்வாதிபதித்தன்மை காட்டினமையாலும் நாராயணன் தானே நிரதிசயைசுவரியமுடையனெனின் அற்றன்று. "விசுவத்திற்குத் தலைவனும் ஆன்மாக்களுக்குத் தலைவனு மாகியவனை" என்றது "இந்திரன் சகலத்திலும் மேலான தேவன்" என்றற்றொடக்கத்தன போலச் சுருங்கிய பொருட்படும் "முதல்வனான அக்கினியே தேவர்களுக்கு முகம்" "அக்கினிமுன்னே தேவதைகளுக்குத் தலைவன்" "அக்கினி தேவதைகட்குத் தலைவனாகச் செல்லுக" "அக்கினியே சகலதேவதைகளும்" என்றற்றொடக்கத்துச் சுருதிகளாலும், பருவங்களுள் இளவேனில் போலவும் மனிதருள் அந்தணா போலவும் தேவதைகளுள் அக்கினி என்றற் றொடக்கத்து மிருதிகளானும், "அக்கினிமுதலியோர்" என்றற்றொடக்கத்து விஷ்ணுபுராண வசனங்களாலும். "அக்கினியே முக்கியதேவன்" என்னுஞ் சைமினி சூத்திரத்தாலும், அக்கினியின்மேன்மை பிரசித்தமாதலாற் சகலதேவதைகளிலும் அக்கினி கடைப்பட்டோனென்பதே பொருந்தாது. ஆதலிற் காட்டிய சுருதியிலே "அக்கினிகடைப்பட்டவன்" என்றது சில தேவதைகளைக் குறித்தே அக்கினிக்குக் கடைத்தன்மை கூறுதலிற் சுருக்கப்பட்ட பொருளுடையதேயாம். அதற்குச் சமானமான யோக க்ஷேமத்திலே விஷ்ணு தலைவனென்ற வழியும், அப்படிச் சில தேவதைகளைக் குறித்தே தலைவனென்று சுருங்கிய பொருட்படும். லேர்காட்சி கிருகியத்திலே காட்டிய மந்திரங்கள் கிருச்சிராங்கங்களாகிய பன்னிரண்டோமங்களினும் தனியே தனியே விநியோகிக்கப்பட்டவைகளாம். அவை ஒவ்வொரு பொருளைக் கூறுதலி னொவ்வொரு வாக்கியங்களாம். ஆதலின் வேறு வேறு வாக்கியங்கள் கூடி ஒருங்கு முடிந்து பொருட்படாமையால் தனித்தனியே நான்காம் வேற்றுமை யுருபீற்றவாய் முடியும். அந்த வாக்கியங்கள் கூடி அக்கினி முதலியோரினின்றும் பிரித்து விஷ்ணுவினது சருவைசுவரியம் உணர்த்தற்கு வலியுடையனவல்ல. இந்த மந்திரங்களிற் கூறிய உருத்திரனை யொழிந்தோரனைவரும் லோக பாலராதலின் இந்த உருத்திரனும் லோகபாலனென்பது பெறப்படும். லோகபாலருத்திரன் சிவகலை பெற்ற கணநாதருள் ஒருவனென்று கூர்மபுராணத் துரைக்கப்பட்டது. அதனால் இங்கே சிவனினின்றும் பிரித்து விஷ்ணுவினது தலைமை கூறப்பட்டதென்று சங்கித்தற்கு இடமேயில்லை. ஆதலால், அதர்வசிகைப்படியே சிவனது நிரதிசயமான ஐசுவரியஞ் சாதிக்கப்பட்டது; அதர்வ சிகையே எல்லாவற்றிலும் மிகு பலமுடையதாதலால்.

Share this post


Link to post
Share on other sites

அதர்வசிரசின் முதற்கண்டத்திலே "தேவர்கள் சுவர்க்க லோகத்தை அடைந்தனர். அந்தத் தேவர்கள் உருத்திரரை வினாவினர்" என்று தொடங்கி "நீர் ஆர்" என்று வினாவின தேவர்களுக்கு அவர் கூறினர்; "நானொருவனே ஆதியிலேயிருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்; என்னையன்றி வேறொருவனில்லை; அப்படியே என்னையறிந்தவன் எல்லாமறிவான்" என்பது முதலிய சிவவசனத்தாற் சிவனது சருவாத்துமத்தன்மை காட்டப்பட்டது. பின்னர் "அதன்பின் தேவர்கள் உருத்திரரைக் கண்டிலர்; அந்தத் தேவர்கள் உருத்திரரைத் தியானித்தனர். அதன்பின் தேவர்கள் ஊர்த்துவ்வாகுவை யுடையவரைத் துதித்தனர்" என்று தேவர்களால் உபாசிக்கப்படுந் தன்மையும் துதிக்கப்படுந் தன்மையும் காட்டப்பட்டன. பின்பு இரண்டாங் கண்டத்திலே "எவர் உருத்திரர்; அவர் பகவான்; பூர், புவர், சுவர் (ஆகியவர்) அவரே பிரமாவும்; அவருக்கு வணக்கம் வணக்கம். விஷ்ணுவுமவர்; மகேசருமவர்" என்பது முதலியவற்றால் பிரமா விஷ்ணு ருத்திரன் உமை இலட்சுமி சரசுவதி இந்திரன் முதலியோரும் மகாபூதம் முதலியவும் அவரது விபூதியேயென்று காட்டப்பட்டது. மூன்றாம் நாலாம் கண்டங்களிலே சிவநாமத் தொகுதியை விரித்துரைத்து, அவரது மேன்மை விளக்கப்பட்டது. ஐந்தாங் கண்டத்திலே அவரை உபாசித்தலாற்றான் மோக்ஷமென்று கூறி, உபாசனாப்பிரகாரமாகிய பாசுபத யோகங் காட்டப்பட்டது. இப்படியே அதர்வ சிரசிலுள்ள வசனங்களெல்லாம் பரமசிவனது சர்வோத்கருஷத்தை விளங்கக் கூறும். இதற்கு உபவிருங்கணம், இலிங்கபுராணத்தில் "அதன் பின்பு தேவர்கள் மயங்கி, நீர்யாவரென வினாவினர் அவர் கூறுவார். நானொருவனே புராதனனும் பகவானுமாகிய உருத்திரன். நானே ஆதியிலே யிருந்தேன் இருக்கிறேன் இருப்பேன். தேவர்களே, இந்த உலகத்திலே எனக்கு வேறானவ னொருவனுமில்லை. நான் நித்தியாநித்தியன்; குற்றமற்றவன்; பிரமாவுக்குத் தலைவனாகிய பிரமாநான்." என்று தொடங்கி "தருமாதருமங்களாலே எனது மகிமையாற் சகலத்தையும் பரிபாகம் பண்ணுவேன் என்று சொல்லி, உருத்திரபகவான் அங்கே மறைந்தார். பின்பு தேவர்களவரைக் கண்டிலர்." என்பது முதலாக இரண்டத்தியாயங்களினாலும் அதர்வ சிரசு முற்றுஞ் சிவபரமென்று உணர்த்தப்பட்டது. இப்படியே சூதசங்கிதை வாயுசங்கிதை ஆதித்திய புராணம் என்பவற்றினும் உணர்த்தப்பட்டது.

இப்படியே சுருதிகளும் அவைகளின் உபவிருங்கணங்களும் சிவனே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாமென்பது தெளிவுற விளக்குதலால், விஷ்ணு முதலிய பிறரைச் சிவனினும் அதிகமென்றாயினும் சிவனோடு சமமென்றாயினும் கொள்ளுதல் சிவநிந்தையாகிய அதிபாதகமேயாம். ஆதலால், சிவனே பரம்பொருள் என்று துணிந்து, அவரையே மெய்யன்போடு மனம் வாக்குக் காயங்களினாலே வழிபடுக.

8b733544-s_4-deepam-arunachala.jpg

Share this post


Link to post
Share on other sites

ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் உழவார நற்பணி மன்றம்

வடதிருமுல்லைவாயில்

06july-aanmigam01.jpg

நாங்கள் இலவசமாக 63 நாயன்மார்கள் பற்றிய குறுந்தடகடுகள் இடவாரியாக கொடுக்கிறோம் அனைவரும் பெற்று மகிழுங்கள். தொடர்பு கொள்ள: சைவத்திரு. R.S.சுப்பிரமணியன் : +91 98410 87040.

சொற்பொழிவாளர்: சைவ சரபம் மா.பட்டமுத்து

We are giving the free CD'S of various Naayanmars Areawise those who are interested please contact

Mr.R.S.Subramanian : +91 9841087040,Sri Maasila Maneeswarar Ulavara Narpani Mantram. (or) Email us at : rssubramanian@sify.com

06july-aanmigam03.jpg06july-aanmigam02.jpg

Share this post


Link to post
Share on other sites

கீழே உள்ள இந்த இணைப்பில் பரிசோதனை ரீதியான முடிவுகள் உள்ளன..! செறிவான காந்தப்புலத்தாக்கம்.

http://www.inchem.org/documents/ehc/ehc/ehc69.htm

நமஸ்காரம் தொடர்பில் காந்தப்புல அறிவூட்டல் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. விங்கிபீடியா தரும் தரவுகளால் இவற்றை நிறுவவோ மறுதலிக்கவோ முடியாது. பல ஆய்வுகள் செய்யப்பட்டால் மட்டுமே சில சாத்தியங்களை நிறுவ முடியும். நாம் இங்கு மக்கள் கடைப்பிடிக்கும் சில சமய அநுட்டானங்களின் படி அடிப்படை அறிவூட்டலுக்கு இட்டுச் செல்ல முடியும் என்றே சொல்ல விளைந்துள்ளோமே தவிர நிறுவவில்லை . அது யதார்த்தமானது கூட.. அறிவியல் ரீதியாக சிந்திக்கப்பட வேண்டிய அல்லது படப்படும் விடயமும் கூட..! நமஸ்காரம்.. காந்தப்புலம் ரீதியான ஆய்வுகளை செய்வதால் பல தகவல்கள் வெளிவரலாம்..! எதிர்காலத்தில் அதற்கும் சாத்தியப்பாடு உண்டு..! காரணம் காந்தப்புலத் தாக்கம் பற்றிய ஆய்வுகள் பல இன்னும் முழுமை பெற்றவையாக இல்லை. விஞ்ஞானமே கண்டுபிடிக்க எண்ணிலங்காதவை இருக்கின்றன...! மெஞ்ஞானம் சில அடிப்படைகளை மக்களுக்குள் விதைப்பது விஞ்ஞானம் சார்ந்தும் உள்ளதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்..!

.

The magnetic fields from man-made sources generally have higher

intensities than the naturally occurring fields. In the home and

public places, magnetic flux densities ranging from 0.03 µT to

30 µT are produced around household appliances, and up to 35 µT near

transmission lines (50 and 60 Hz), depending on the current carried

and the distance from the line. For magnetically-levitated

transportation systems, static magnetic fields of 6 - 60 mT are

expected in the region of a passenger's head. Security systems in

libraries and storehouses operate at frequencies of between 0.1 and

10 kHz and produce fields of up to about 1 mT.

Occupational exposure to magnetic fields is mainly encountered

in industrial processes involving high electric current equipment,

in certain new technologies for energy production and storage, and

in specialized research facilities. Around various types of

welding machines, furnaces, and induction heaters, the magnetic

flux densities at the operator location range from about 1 µT to

more than 10 mT, depending on the magnetic field frequency and the

distance from the coil. Compared to devices operating at high

frequencies, lower frequency induction heaters expose operators to

higher magnetic flux densities. At operator-accessible locations

in industries using electrolytic processes, the mean static field

level is about 5 - 10 mT.

Broadly summarized, available evidence suggests that the following

9 classes of biological functions are not significantly affected by

static magnetic fields at levels up to 2 T:

(a) cell growth;

(B) reproduction;

© pre- and post-natal development;

(d) bioelectric activity of isolated neurons;

(e) behaviour;

(f) cardiovascular functions (acute exposures);

(g) the blood-forming system and blood;

(h) immune system functions;

(i) physiological regulation and circadian rhythms.

Studies on workers involved in the manufacture of permanent

magnets in the USSR indicated various subjective symptoms and

functional disturbances including irritability, fatigue, headache,

loss of appetite, bradycardia, tachycardia, decreased blood

pressure, altered EEG, itching, burning, and numbness. However,

lack of any statistical analysis or assessment of the impact of

physical or chemical hazards in the working environment

significantly reduces the value of these reports. Although the

studies are inconclusive, they suggest that, if long-term effects

occur, they are very subtle, since no cumulative gross effects are

evident.

Recent epidemiological surveys in the USA have failed to reveal

any significant health effects associated with long-term exposure

to static magnetic fields. A study of the health data on 320

workers in plants using large electrolytic cells for chemical

separation processes, where the average static field level in the

work environment was 7.6 mT and the maximum field was 14.6 mT,

indicated slight changes in white blood cell picture (still within

the normal range) in the exposed group compared with the 186

controls. None of the observed changes in blood pressure or blood

parameters was considered indicative of a significant adverse

effect associated with magnetic field exposure.

The prevalence of disease among 792 workers at the US National

Accelerator Laboratories, who were exposed occupationally to static

magnetic fields, was compared with that in a control group

consisting of 792 unexposed workers matched for age, race, and

socioeconomic status. The range of magnetic field exposures was

from 0.5 mT for long durations to 2 T for periods of several hours.

No significant increase or decrease in the prevalence of 19

categories of disease was observed in the exposed group relative to

the controls.

Workers exposed to large static magnetic fields in the

aluminium industry were reported to have an elevated leukaemia

mortality rate. Although these studies suggest an increased cancer

risk for persons directly involved in aluminium production, there

is no clear evidence, at present, indicating the responsible

carcinogenic factors within the work environment.

It can be concluded that available knowledge indicates the

absence of any adverse effects on human health due to exposure to

static magnetic fields up to 2 T. It is not possible to make any

definitive statements about safety or hazard associated with

exposure to fields above 2 T. From theoretical considerations and

some experimental data, it could be inferred that short-term

exposure to static fields above 5 T may produce significant

detrimental effects on health.

நெடுக்ஸ் தான் இணைக்கும் கட்டுரைகளைப் படிக்காமலே படி எடுத்துப் போடுபவர் என்பது மீண்டும் நிருபிக்கப்படுகிறது.கூகிளில

Share this post


Link to post
Share on other sites

எதிர்காலத்தில் அறிவியல் ரீதியாக நிறுவப் படக்கூடும் என்று கருதும் கற்பனைகளை என்ன ஞானக் கண்ணாலா கண்டு பிடிதுள்ளீர்கள்.உங்கள் அறிவுக்கு ஒருத்தரும் கிட்ட நெருங்கேலாது.உங்கள் கற்பனை அவ்வளவு உறுதியானது என்றால் அறிவியல் பரிசோதனைகளே தேவையில்லையே? ஆறுமுக நாவலர் அல்லவா மின் காந்த விசைகளையும் ,தொலை பேசியையும் தொலைக் காட்சியையும் ஆகாய விமானத்தையும் கண்டு பிடித்திருப்பாரே? எமக்கு வைத்தியர்களும்,தொழில் நுட்பவியலாளர்களும், விஞ்ஞானிகளும் ,பாடசாலைகளும்,பரிசோதனைக் கூடங்களும் தேவையில்லையே.எல்லோரும் அரகர சிவ சிவ சம்போ எண்டு ஆண்டவன் சன்னிதானத்தில் வயிறு முட்டச் சாப்பிட்டு விழுந்து கும்புட்டுக் கொண்டு இருக்கலாமே? ஏனிந்தப்படிப்புக்கள் ஆராச்சிகள் எல்லாம், எல்லோரும் அப்படியே தியானத்தில் இருந்து கற்பனைகளால எல்லாவற்றையும் கண்டு பிடிப்பம்.

நீங்களும் உங்கட சமயமும் :lol::lol::D:D

ஏன் நாரதர் அண்ணா நரம்பியலை கண்டு பிடித்து இண்டைக்கு வர்மக்கலையை சிகிட்ச்சைக்காகவும், தற்பாதுகாப்புக்கும் உபயோகப்படுத்து கிறார்கள்... நரம்பு ஓட்டத்தையும் முடிச்சுகளின் தன்மைகளையும் 1980களில்த்தானே விஞ்ஞானம் விளக்கமாக கூறியது...

உங்களுக்கு விசயம் தெரியாது என்பதுக்காக நான் இதை சொல்லவில்லை.... தெரியாதது போல நிங்கள் நடிப்பது எங்களுக்கு தெரியும் என்பதை சொல்வதற்காக மட்டும்தான்...

மெய்ஞானம் பற்றிய விஞ்ஞானத்தின் தேடல்கள் பலவற்றிக்கு இன்னும் விடைகள் இல்லையே... எகிப்திய இரகசிங்களை இன்னும் விஞ்ஞானத்தால் திருப்பி செய்ய முடியவில்லை என்பதையும் கொஞ்சம் பரிசீலனையில் எடுங்கோ...!

Share this post


Link to post
Share on other sites

ஏன் நாரதர் அண்ணா நரம்பியலை கண்டு பிடித்து இண்டைக்கு வர்மக்கலையை சிகிட்ச்சைக்காகவும், தற்பாதுகாப்புக்கும் உபயோகப்படுத்து கிறார்கள்... நரம்பு ஓட்டத்தையும் முடிச்சுகளின் தன்மைகளையும் 1980களில்த்தானே விஞ்ஞானம் விளக்கமாக கூறியது...

உங்களுக்கு விசயம் தெரியாது என்பதுக்காக நான் இதை சொல்லவில்லை.... தெரியாதது போல நிங்கள் நடிப்பது எங்களுக்கு தெரியும் என்பதை சொல்வதற்காக மட்டும்தான்...

மெய்ஞானம் பற்றிய விஞ்ஞானத்தின் தேடல்கள் பலவற்றிக்கு இன்னும் விடைகள் இல்லையே... எகிப்திய இரகசிங்களை இன்னும் விஞ்ஞானத்தால் திருப்பி செய்ய முடியவில்லை என்பதையும் கொஞ்சம் பரிசீலனையில் எடுங்கோ...!

தல ,

முதலில அறிவியல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ள வேணும்.எதனையும் தீரா ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறுவதே அறிவியல் அல்லது விஞ்ஞானம்.இப்படி அறுதியிட்டுக் கூறியதனால் தான் விஞ்ஞானத்தின் மதிப்பும் பயனும் உயர்ந்துள்ளது.எல்லோரும் அதனில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இங்கே தீர ஆராய்வது என்பது வெறும் கற்பனை இல்லை.பரிசோதனைகள், தரவுகள், மீள் பரிசீலனை என அது மிகவும் கடினமான ஒரு நடை முறை.ஒரு விடயத்தை விளக்க அதன் பொறிமுறை , அதனை விளக்கும் அடிப்படை அறிவியல் என அது மிகவும் நுணுக்கமானது, விளக்கமானது.

மெஞ்ஞானம் என்று கூறப்படுவது ஒரு கற்பனாவாதம்.ஒருவர் தனது கற்பனையில் உதிக்கும் புனைவுகளை உண்மைகளாகக் கூறுவது.இதற்கு பெரிசா ஒன்றையும் ஆராயவோ படிக்கவோ பரிசோதனை செய்யவோ அவசியம் இல்லை, நல்ல கற்பனைத் திறனும் மொழி பற்றிய அறிவும் கொஞ்சம் இருந்தால் காணும்.சாத்திரம் சொல்லுவது, இப்படியான சமயப் புத்தகங்களை எழுதுவது, கற்பனையான போலியான விஞ்ஞான விளக்கங்களைச் சொல்லுவது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூறுவது என்பவை எல்லாமே இதில் அடங்கும்.இங்கு பல ஆயிரம் எதிர்வு கூறல்கள் கற்பனைகள் இருக்கும் போது அவ்வற்றில் எதாவது ஒன்று நிகழ்தகவாக அறிவியல் ரீதியாக்கண்டு பிடிக்கப்படும் போது பார்தீர்களா நாம் அன்றே சொன்னோம் என்பார்கள்.மொட்டாந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவார்கள்.

ஒரு உதரணத்திற்க்கு புஸ்ப்பக விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.ஆகா நாம் அன்றே விமானம் ஓட்டினோம் என்பார்கள்.ஆனால் பறப்பது என்பதைக் கற்பனை செய்யும் ஒரு புனை கதை எழுதாளர் இது பற்றி எழுதுவதில் எந்த வியப்பும் இல்லை.அவர் பறவைகள் பறப்பதைப் பார்க்கிறார் அது போல் தானும் பறக்க வேண்டும் அல்லது பறப்பது என்பது ஒரு மந்திரமான சூட்சமுமான விடயம் என்று எண்ணுகிறார் அதனை தனது புனைவுகளில் ஒன்றாக எழுதுகிறார்.அதற்காக அன்று தமி்ழரிடம் விமானம் இருந்தது என்று கூறுவது அடி முட்டாள் தனம்.ஒரு விமானம் கண்டுபிடிக்கப் படுவதற்கு முதல் பல விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கப் பட வேண்டும்.அடிப்படை இயற்பியல், இறக்கைகள்,உந்தித்தள்ளும் என்சின் என பல கண்டுபிடிப்புக்கள் இருக்க வேண்டும்.இது ஒரு தொடர் கண்டி பிடிப்பாக , அறிவியலின் வளர்ச்சியாக இருக்க வேணும்.இப்படியெல்லாம் தமிழரிடம் இருந்திருந்தால் தமிழர்கள் இன்று எங்கோ இருந்திருப்பார்கள்.ஆனால் நாம் உலகில் எங்கு இருக்கிறோம் என்று எமக்கே தெரியும்.வந்தேறிகளினால் ,தமது சுய லாபத்திற்காக பெரும் கோவில்களை தமிழர்கள் கட்டிக் கொடுத்ததே மிச்சம்.தமிழரின் செல்வங்களும் உழைப்பும் இவ்வாறு கடவுளருக்கும் அவர் தம் இடைத்தரகர்களாக தங்களைச் சொல்லிக் கொண்ட பிராமணருக்கும் கோவில்களையும் மடாலயங்களையும் கட்டிக் கொடுப்பதிலேயே சீரழிந்தது.

இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமானது.தமிழரின் அழிவுக்குக் காரணம் ஆன அதே புளிதுப் போன சரக்குகளை அறிவியல் முலாம் பூசி மீண்டும் இங்கு விற்பதை ஆதரிக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப்படத் தான் முடியும்.தமிழரின் சாபக்கேடு அது.

சாதிய ,சமய வெறியரான ஆறுமுக நாவலாரால் தான் தமிழத் தேசியம் ஈழத்தில் மழுங்கடிக்கப்பட்டது,அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைக்காத சைவ வேளாளா குறுந் தேசியமே யாழ்ப்பாணத்தவரை ஒரு தேசமாக எழிச்சி கொள்ளச் செய்யவில்லை.மாறாக அது தமிழர்களை சாதிய சமய அடிப்படையில் கூறு போட்டது.இதனை உணர்ந்த கிரிதுவர்களும் மற்றும் மதத்தவரும் கீழ் சாதிகள் என்று ஒதுக்கப்பட்ட மக்களும் தாம் சிறிலங்கா அரசுக்குக் கீழ் இருப்பதே மேல் என்று உணர்ந்தனர்.ஈசுவர துரோகிகள் என்று மற்ற மதத்தவரைப் பழித்த ஆறுமுக நாவலர் அவர்களைக் கடவுள் சித்திரவதை செய்து கொல்ல வேணும் என்று எழுதினார்.கீழ் சாதியினருடம் சம போசனம் செய்தலாகாது என எழுதினார்.

மேலும் வியர்வையில் இருந்து தான் பேனும் மற்றும் பூச்சிகளும் உருவாகின்றன என பல முட்டாள்த் தனமான விளக்கங்களை எழுதி இருப்பதைக் காணலாம். இப்படியான அடி முட்டாத் தனமான புத்தகங்களைப் படித்தா நாம் முன்னேறப் போகிறோம்?

அடிப்படை மனித உரிமைகளையோ மனித முன் நேற்றத்தையோ, அறிவியல் விருத்தியையோ வளர்க்காமல்

இப்படியான் அடி முட்டாள்த் தனமான புத்தகங்களை நாம் எமது குழந்தைகளுக்குச் சொல்லிக் குடுக்கப்போகிறோம்? அதில் விளக்கம் வேறு சித்திரவதை செய்து நல் வழிபடுதலாம் என்று.இதை எழுதியவரின் அறிவு எத்தகையது என்பது இதில் இருந்து தெளிவாக வில்லையா? இப்படி அடி முட்டாள் தனமான விடயங்களை 'எனதுமதம் ' எங்கிற வெறியில் இருந்து பார்க்காமல் அதில் இருந்து வெளி வந்து நிதானமாகச் சிந்தித்தால் மட்டுமே உண்மை புலப்படும்.

Share this post


Link to post
Share on other sites

தம்பி நாரதா! உங்களது கேள்விகளுக்கெல்லாம் சுயமரியாதையியக்க சூறாவளியில் பதில் இருக்கிறது (கேள்வி இருக்கிறது!).

Share this post


Link to post
Share on other sites

தம்பி நாரதா! உங்களது கேள்விகளுக்கெல்லாம் சுயமரியாதையியக்க சூறாவளியில் பதில் இருக்கிறது (கேள்வி இருக்கிறது!).

தம்பி ஆறுமுகா ஏன் உமக்குக் கேள்வி கேட்கத் தான் தெரியுமா? பதில் சொல்லத் தெரியாதா? நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி.அதற்கு முதலில் பதிலைச் சொல்லும்.ஈசுவர துரோகிகள் என்றால் யார் அவர்கள்? ஏன் அவர்களைச் சித்திரவதை செய்ய வேணும்?

பிறகு உமது 'கேள்விகளுக்கு' வருகிறேன். முதலில் ஒழுங்கா தமிழில எழுதிப் பழகுங்கள்.எமக்கு வடமொழி கலந்த தமிழ் தெரியாது.முடிந்தால் தூய தமிழில் முதலில் உங்கள் 'கேள்விகளை 'மொழி பெயருங்கள்.கிருத்துவர்களும் இசுலாமியர்களும் எப்படி தூய தமிழில் எழுதுகிறார்கள்.முதலில் அதனைச் செய்யுங்கள், கேள்விகளை பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.

Share this post


Link to post
Share on other sites

இலவச டவுண்லோடு சேவையும் உண்டு.

சக்தி நாயனார் - Sakthi Naayanar

Click this to download

http://www.megaupload.com/?d=Z35PS533

Amarneethi Naayanaar - அமர்நீதி நாயனார் - Part - 1

Click this to download

http://www.megaupload.com/?d=FRT83KMY

Amarneethi Naayanaar - அமர்நீதி நாயனார் - Part - 2

Click this to download

http://www.megaupload.com/?d=PVNHFOSM

ThiruNeelakanda Naayanar - திருநீலகண்ட நாயனார்.

Click this to download

http://www.megaupload.com/?d=MIEVBTSL

Share this post


Link to post
Share on other sites

நன்றி தங்களுக்கு தெரியாது என்று ஒத்துக் கொண்டதற்கு.

Share this post


Link to post
Share on other sites

நன்றி தங்களுக்கு தெரியாது என்று ஒத்துக் கொண்டதற்கு.

வட மொழி கலந்த தமிழைத் தெரின்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.ஏனெனில் அதில் எழுதப்பட்டவை எல்லாம் குப்பைகள். நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் சமயத்தை நீங்கள் பரப்ப வேண்டும் என்றால் முதலில் மக்கள் பேசும் மொழியில் எழுதுங்கள்.அது தான் உங்கள் பிரச்சாரத்திற்கு உதவும்.இந்த அடிப்படை அறிவு கூட உங்களிடம் இல்லை.வட மொழித் தமிழில் இங்கு எழுதி அதனை ஒருவருமே படிக்கப் போவதில்லை.

மேலும் நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை.

இது மதப் பிரச்சாரம் செய்யும் தளம் அல்ல, விவாதக்களம்.கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் விவாதம்.மேலும் எனக்குத் தெரிந்த தூய தமிழில் நீங்கள் எழுதினால் தான் எனக்கு விளங்கும்,எனக்கு விளங்கினால் தான் என்னால் பதில் சொல்ல முடியும்.

புரின்சுதோ? :lol:

Share this post


Link to post
Share on other sites

இளையான்குடிமாறநாயனார் புராணம்

இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த

வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்

செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்

கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே

மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்

வறுமையா லுணவுமிக மறந்து வைகி

யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி

யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்

செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்

சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து

பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்

பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

ளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார். இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார். அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாறநாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார். அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

Share this post


Link to post
Share on other sites

2. திருத்தொண்டர் சரித்திர வரலாறு

பின்னே நிகழும் அடியார்களது சரித்திரத்தை உமாதேவிக்கு முன்னே அருளிச் செய்யப் புகுந்த பரமசிவன் அச்சரித்திரம் உபமன்னியுமுனிவராலே பத்தர்குழாங்களுக்குக் கூறப்படுமெனக் கூறினாரென்று சிவரகசியத்து நவமாம் மிசத்திற் கூறப்பட்டது. அப்படியே திருத்தொண்டர் சரித்திரம் சொன்னவர் உபமன்னியுமுனிவர் என்பது இங்கும் பெறப்பட்டது. உபமன்னியுமுனிவர் கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷைசெய்தமையால், அவரை "யாதவன் றுவரைக் கிறையாகிய மாதவன்முடிமே லடிவைத்தவன்" என்றார் அச்சரித்திரம் வருமாறு கிருஷ்ணர் புத்திரபாக்கியத்தின் பொருட்டு நெடுங்காலம் சிவபூசை பண்ணியும், சிவன் வெளிப்படாதொழிந்தார். அக்காலத்தில் ஒருநாள் உபமன்னியுமகாமுனிவர் சிவபூசைக்குப் பத்திரபுஷ்பங்களில்லையென்று தமக்கு வின்ணப்பஞ் செய்ததமது சீடனை நோக்கி, கிருஷ்ணர் சிவபூசை செய்து கழித்த பத்திரபுஷ்பங்களைக் கொண்டு வரும் பொருட்டு ஆஞ்ஞாபித்து அவைகளாலே சிவபூசை செய்து முடித்தார் அதை அறிந்த கிருஷ்ணர் வந்து, சங்கைபேச; உபமன்னியுமுனிவர், சைவாகமத்தில் விதித்தபடி சிவதீக்ஷை பெற்று மந்திரக்கிரியா பாவனைகளாலே சிவனைப் பூசித்தாலன்றி இவை நிருமாலியமாகா; சிவனும் வெளிப்படார் என்றார். அது கேட்ட கிருஷ்ணர் அம்முனிவருக்கு ஆளாகி, அவரிடத்தே சிவதீக்ஷை பெற்று சிவபூசை செய்து, தாம் விரும்பிய பயனைப் பெற்றார். கிருஷ்ணர் சிவதீக்ஷை பெற்ற சரித்திரம் வாயுசங்கிதையில் உத்தரகாண்டத்திலும் மகாபாரதத்தில் அனுசானபர்வத்தில் பதினான்காம் அத்தியாயத்திலும் கூர்மபுராணத்திலும் சொல்லப்பட்டது.

இங்கே உபமன்னியு முனிவருக்குக் கொடுக்கப்பட்ட மாதவன் முடிமேலடி வைத்தமையும், அத்தர் தந்த அருட்பாற்கடலுண்டமையும் ஆகிய விசேடணங்களால் இவரது பெருமையும், இவராலே புகழ்ந்துரைக்கப்பட்ட சுந்தரமூர்த்திநாயனாரது பெருமையும், அவராலே திருத்தொண்டத் தொகையிற்றுதிக்கப்பட்ட திருத்தொண்டரது பெருமையும் தொனிக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகன்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, "இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்" என்றார். அதற்கு மனைவியார் "வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்" என்று சொல்லி, பின்பு "இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்" என்று சொல்லித் துக்கித்தார். இந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார். அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, "அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே" என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார். மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, "இனிக் கறிக்கு யாதுசெய்வோம்" என்றார், உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, "சைவரை அமுதுசெய்விப்போம்" என்று சொன்னார். நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, "சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்" என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, "அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு" என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.

Share this post


Link to post
Share on other sites

3. சிவபுண்ணியம் செய்யும்போது நினைவு வேறாதலாகாதெனல்

சுந்தரமூர்த்திநாயனாரும் அநிந்திதை கமலினி என்னும் பெண்களும் முறையே சிவனுக்கும் உமாதேவிக்கும் புஷ்பங் கொய்யும்போது இச்சைகொண்டமையால், பூமியிலே பிறந்து போகம் அனுபவிக்கும்படி சபிக்கப்பட்டார்கள் என்று சொல்லுகையால்; புஷ்பம் எடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்யும்போது நினைவு வேறாதலாகாதென்பது துணியப்பட்டது. அது "கொந்தலர் கொய்யும் போது கூர்விழி மைய லாலே - பைந்தொடி மடவார் தம்மைப் பார்த்தலாற் கைலை வெற்பிற் - சுந்தரன்பட்ட காதை யறிதிரோ துணர்மென் போதா - லந்தணர் கீழ்க ளாவா கீழ்களந் தணர்க ளாவார்" என்னும் புட்பவிதி செய்யுளாலுமறிக. கைலாசவாசிகளாய்ச் சிவனை இடைவிடாது சேவிக்கும் அன்பர்களுக்கு இக்குற்றத்தின் பொருட்டு இத்தண்டம் கிடைத்தாயின், ஒன்றுக்கும் பற்றாத சிறியேங்கள் குற்றஞ் செய்யின் எத்துணைப் பெருந்தண்டம் கிடைக்குமோ என்று அஞ்சி நடுங்கி, சிவபுண்ணியங்களைச் செய்யும்போது சிறிதாயினும் மனசைப் பிறிதொன்றிற் செல்ல விடாமற் சிவனுடைய திருவடிகளிலே செலுத்துக.

Share this post


Link to post
Share on other sites

3.மனுநீதிகண்ட புராண சூசனம்

1. செங்கோன்மைச் சிறப்பு

தன்கீழ் வாழ்வோர் குற்றஞ்செய்யின், அக்குற்றத்தை நாடி, யாவரிடத்தும் கண்ணோட்டம் வையாது நடுவு நிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லப்பட்ட தண்டத்தை ஆராய்ந்து, அவ்வளவினதாகச் செய்வதே அரசனுக்கு முறையாம். அது "ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் - தேர்ந்துசெய் வஃதேமுறை" என்னுந் திருக்குறளால் அறிக. இம்முறையானது ஒரு பக்கத்திலே சாயாமற் செவ்வியகோல்போலுதலில், செங்கோலெனப்படும். இன்னும், பொதுப்பட உயிர்களைக் காத்தல் தரும மாயினும், பசுக்களையும் பெண்களையும் பிராமணரையும் சிவனடியார்களையும் காத்தல் பெருந் தருமமாம். அது "ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் - தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங் - காவலன் காப்பவன் காவா தொழிவனேன் - மேவு மறுமைக்கு மீளா நரகமே" என்னுந் திருமந்திரத்தாலும், "வெற்றியின் விழுமி தம்ம வெருவினோர் மேற்செலாமை - மற்றதின் விழுமிதைய வழுநரை நெறியின் மாட்டல் - சொற்றவிவ் விரண்டின் மேலும் விழுமிதுதுகடீர் நல்லா - னற்றவர் மறையோர்க் குற்ற நலிவினை நலிதறானே." "வெடித்தடங்கயற் கண்ணியர் மைந்தர்வேதியர் கோ - நெடிற்கொ டுங்கொலை சூழ்ந்திட நீக்கருந் தீதிற் - படிற்றனாண்மையிற் காப்பது காத்தது பலியா - விடிற்ற னாவியை விடுத்திடா வேந்துமோர் வேந்தோ" என்னும் இரகுவம்மிசச் செய்யுள்களாலும் அறிக.

இப்படியே செங்கோலை முட்டாமற் செலுத்தியவிதம் இந்த மனுசக்கிரவர்த்தியிடத்திற் காணப்பட்டது; இவர், பசுக்கன்றைக்கொன்றவன் தாம் நெடுங்காலம் பெருந்தவஞ் செய்து அரிதிற் பெற்ற ஏகபுத்திரனாயிருப்பவும், பசுக்கொலைக்கு உயிர்த் தண்டமல்லாத பிராயச்சித்தம் ஸ்மிருதியில் விதிக்கப்பட்டமையால், இக்குற்றத்தின் பொருட்டுப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளுதலன்றி, இவனைக் கொலை செய்தல் தகுதியன்றென்று மந்திரிகள் தடுப்பவும், நடுவு நிலைமை சிறிதும் தவறாது அவனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்த பெருந்தன்மையுடையராதலால் என்றறிக. பசுக் கொலை செய்தவர்களுக்கு உயிர்த்தண்டமல்லாத பிராயச்சித்தம், ஸ்மிருதியில் விதிக்கப்பட்டதாயின், இவர் உயிர்த்தண்டஞ் செய்தமை குற்றமன்றோ எனின், இந்தப் பசுவானது, தன்னினம்போலன்றி மனிதருக்கு உரிய அறிவை உடையதாகி, ஆராய்ச்சி மணியை அசைத்தமையால் எல்லையின்றி எழுந்த இரக்கம் பற்றி, அப்பசுவின் கன்றைக் கொன்றமையை மனிதரது குழந்தையைக் கொன்றைமையாகக் கொண்டராதலாலும், சிவனது திருவாரூரிற் பிறந்த உயிரைக் கொன்றமை சிவாபராதமாமெனத் துணிந்தாராலாலும் அது குற்றமாகாது புண்ணியமாயிற்றென்றுணர்க. அது "அவ்வுரையில் வருநெறிக ளவைநிற்க வறநெறியின் - செவ்வியவுண்மைத்திறநீர் சிந்தைசெயா துரைக்கின்றீ - ரெவ்வுலகிலெப் பெற்ற மிப்பெற்றித் தாமிடரால் - வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்." "போற்றி சைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச - வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த் - தோற்றமுடை யுயிர்கொன்றா னாதலி னாற்றுணிபொருடா - னாற்றவு மற்றவற் கொல்லு மதுவேயா மெனநினைமின்." என இவ்வரசர் கூறியவற்றால் அறிக.

Share this post


Link to post
Share on other sites

தம்பி நாரதா! நாரதர் என்பது தமிழ் பெயரா? அது வடமொழி பெயரன்றோ. அதை முதலில் மாற்றுங்கள். வேண்டாம் மொழி துவேசம். தமிழன் உயர்ந்ததற்கு காரணம் தான் சகல மொழிகளையும் சகலவற்றையும் கற்றதினால் தான். இன்றும் தாங்கள் கூறும் விஞ்ஞானம் (விமானம் ஓட்டுதல், கட்டுவித்தல்) எல்லாம் ஆங்கிலத்திலும் பிறமொழியிலும் தான் உள்ளது. தமிழை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரைப் போல் வளர்த்தவர் யாரும் உண்டோ? அவருடைய புத்தகங்களையும் அவருடைய சரித்திரத்தையும் படித்ததில்லையோ? கிணற்று தவளைப் போல எதையும் படிக்காமல் எல்லாம் தெரிந்தவர் போல பேசுவது எந்தவிதத்தில் நியாயம்.

படிக்கவில்லை என்பது ஒரு குறையே அல்ல. முயற்சி செய்தால் படிக்கலாம். ஆனால் படிக்கமாட்டேன் நான் சொல்வது தான் சரி என்று நினைப்பது தவறு. நாவலர் பெருமானின் சிறந்த கட்டுரைகள் விரைவில் தருகிறேன், "நான்" என்பதை நீக்கிவிட்டு புதிதாக என்ன தான் சொல்கிறார்கள் என்ற ஆர்வத்தோடு பயின்று நம்முடைய தாய் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை புரியுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.