Jump to content

Recommended Posts

தோத்திரம் பாடல்

300. எந்தத் தோத்திரங்களை எப்படிப் பாடல் வேண்டும்?

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் அருட்பாக்களை மனங் கசிந்துருகக், கண்ணீர் வார, உரோமஞ் சிலிர்ப்பப், பண்ணோடு பாடல் வேண்டும்.

ஆனந்தக் கூத்தாடல்

301. ஆனந்தக் கூத்து எப்படி ஆடல் வேண்டும்?

உலகத்தார் நகைக்கினும் அதனைப் பாராது, நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பொழிய, மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைகளைக் கொட்டித் தோத்திரங்களைப் பாடிக் கால்களைச் சதிபெற வைத்து, ஆனந்தக் கூத்தாடல் வேண்டும்.

பூசைத் திரவியங்கள்

302. திருமஞ்சனத்திலே போடற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

பாதிரிப்பூ, தாமரைப்பூ முதலிய சுகந்த புஷ்பங்களும் செங்கழுநீர்க்கோஷ்டம், ஏலம், இலாமச்சம்வேர், வெட்டிவேர், இலவங்கப்பட்டை, சந்தனம், கர்ப்பூரம் என்னும் பரிமளத் திரவியங்களுமாம்.

303. பாத்தியத் திரவியங்கள் எவை?

வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்குமாம். (பாத்தியம் = பாதபூசை)

304. ஆசமநீயத் திரவியங்கள் எவை?

சாதிக்காய், கிராம்பு, ஏலம், பூலாங்கிழங்கு, சண்பகப்பூ மொட்டு, பச்சைக்கர்ப்பூரம் என்னும் ஆறுமாம்.

305. அருக்கியத் திரவியங்கள் எவை?

(அருக்கியம் - மந்திரநீர் இறைத்தல்)

சலம், பால், தருப்பைநுனி, அக்ஷதை, எள், யவம், (கோதுமை) சம்பாநெல், வெண்கடுகு என்னும் எட்டுமாம்.

306. அபிஷேகத் திரவியங்கள் எவை?

எண்ணெய்க்காப்பு, மாக்காப்பு, நெல்லிக்காப்பு, மஞ்சட்காப்பு, பஞ்சகவ்வியம், ரசபஞ்சாமிர்தம், பலபஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, தமரத்தம் பழச்சாறு, குளஞ்சிப் பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, இளநீர், சந்தனக்குழம்பு என்பவைகளாம். தாமிரப் பாத்திரத்தில் விட்ட பாலும் வெண்கல பாத்திரத்தில் விட்ட இளநீருங் கள்ளுக்குச் சமம். இளநீர் முகிழைத் திறந்து, தனித்தனி அபிஷேகம் பண்ணல் வேண்டும். நெய்யபிஷேகஞ் செய்தவுடன், இள வெந்நீரபிஷேகஞ் செய்தல் வேண்டும். இளநீரபிஷேகத்துப் பின் எண்பத்தொரு பதமந்திரம் உச்சரித்துச் சகச்சிரதாரை கொண்டு சுத்தோதகத்தால் அபிஷேகஞ் செய்தல் வேண்டும். சந்தனக் குழம்புக்குப்பின் விதிப்படி தாபிக்கப்பட்ட நவகலசத்தினாலும் விசேஷார்க்கியத்தினாலும் அபிஷேகஞ் செய்தல் வேண்டும்.

(சகச்சிரம் - ஆயிரம், சந்தோதகம் - நன்னீர்)

307. அபிஷேகத்தின் பொருட்டு எண்ணெய் எப்படி ஆட்டல் வேண்டும்?

எள்ளை, வண்டு முதலிய பழுதறப் பதினாறு தரம் பார்த்து ஆராய்ந்து, உவர் முதலிய தீய சலங்களை விடாது நல்ல சலத்தைப் புதிய பாண்டத்தில் விட்டு, எள்ளைக் கருந்தோல் போமளவுங் காலினால் மிதியாது கையினாற் பிசைந்து கழுவி, காகம், கோழி, நாய், பன்றி முதலியன வாயிடல் மிதித்தல் செய்யாவண்ணம் உலர்த்தி, கல்லினாலேனும் புளியமரத்தினாலேனுஞ் செய்த, நாய் முதலியன வாயிடாத கைச்செக்கினால் ஆட்டல் வேண்டும். சந்தனாதிதைலம் முதலிய சுகந்தத்தைலஞ் செய்து அபிஷேகம் பண்ணுவித்தல் உத்தமோத்தமம். தம் வியாதி நீக்கத்தின் பொருட்டுச் சந்தனாதி முதலிய செய்வித்தவர் முதற்கட் சிறிது பாகஞ் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவர்.

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் சார் முதலில் கள விதியை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்புறமா நீங்க எங்கெங்க என்ன சொன்னீங்கள் என்று காட்டலாம். கள விதியையே கடைப்பிடிக்க பொறுமையற்றவர்களோடு.. அறிவியல் விளக்கம் எப்படி அளிப்பது..! எல்லோரும் கள விதியை மதிக்க முற்படேக்க நீங்கள் குறுக்கால இழுக்கிறது.. தப்பு..! கள நிர்வாகமும் இதைக் கவனத்தில எடுக்கனும். இதாலதான் கள விதிகள் மீறப்பட மற்றவர்களும் தூண்டப்படுகின்றனர். அப்புறம் மற்றவங்களில குறை சொல்லிடுங்க..! இவர்களை தப்ப வைச்சிடுங்க..! :rolleyes::lol:

மேலும் சில..உசாத்துணைகள்.. எமது காந்தப்புலக் கருத்துக்கு..

People are also healthier in parts of the world where magnetic fields

are stronger. Millions of people visit Lourdes, France where greater

magnetic fields prevail. As a result of bathing, drinking and dabbing

the water of Lourdes on their body, most people report that they are

feeling better as pain and stress are relieved, while over 2,000

inexplicable cures (with 65 so called miracles) have been recognized

by the authorities. 2

What would happen if a Magnetic Field Deficiency occurred in the

earth, since a degree of human energy appears to be absorbed from the

Earth's magnetic field? Dr. Nakagawa, Director of the Isuzu

Hospital in Tokyo, has spent 20 plus years researching magnetism and humans.

He concludes that a magnetic field deficiency already exists which

currently produces stiffness of shoulders, neck, and chest pains,

headache, heaviness of head, dizziness, insomnia, constipation and

lassitude. Nakagawa references authorities who have demonstrated that

the Earth's magnetic field has diminished 50 percent over the last

500 years.

It is clear from this research that the Earth's magnetic field is intended to provide each cell in our body with the magnetic and electrical energy that they need to survive. Since it has been

established that this energy is deficient, it is necessary to supplement this if we want to live our lives to their fullest potential of health and length of life.

http://wellnessmagnets.com/magnetic_therapy_simplified.html

எமது கருத்து எமது சொந்தக் கற்பனையல்ல..

Always sleep in an east-west position. North-south position should be avoided,because the earth's magnetic field is north-south.

http://www.swamiram.com/shivratri.html

Link to comment
Share on other sites

நாரதர், சபேசன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சைவ வினா விடை இரண்டாம் புத்தகத்தில் பதில் இருக்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22908

மற்ற நண்பர்களும் அவசியம் படியுங்கள்.

Link to comment
Share on other sites

308. பஞ்சகவ்வியமென்பது என்னை?

விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்பவைகளினது தொகுதியாம்; இது பிரமகூர்ச்சம் எனவும் பெயர் பெறும். பால் ஐந்து பலமும், தயிர் மூன்று பலமும், நெய் இரண்டு பலமும், கோசலம் ஒரு பலமும், கோமயங் கைப்பெருவிரலிற் பாதியுங் கொள்க.

309. ரசபஞ்சாமிர்தமென்பது என்னை?

விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், தேன், சர்க்கரை என்பவைகளினது தொகுதியாம்.

310. பலபஞ்சாமிர்தமென்பது என்னை?

முற்கூறிய ரசபஞ்சாமிர்தத்தோடு கூட்டி அமைக்கப்பட்ட வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் என்பவைகளினது தொகுதியாம்.

311. கவ்வியத்துக்கு உரிய பசுக்கள் எவை?

வியாதிப் பசு, கிழப் பசு, கன்று செத்த பசு, கன்று போட்டுப் பத்து நாட் சூதகமுடைய பசு, கிடாரிக் கன்றாகிய பசு, சினைப் பசு, மலட்டுப் பசு, மலத்தைத் தின்னும் பசு, என்னும் எண்வகைப் பசுக்களல்லாத மற்றைப் பசுக்களாம். பால் கறக்குமிடத்துப் பாத்திரத்தையும் கைகளையுங் கன்றூட்டிய முலையையுஞ் சலத்தினாற் கழுவிக் கொண்டே கறத்தல் வேண்டும். கறந்தபின் பாலைப் பரிவட்டத்தினால் வடித்துக் கொள்ளல் வேண்டும்.

312. சந்தனக் குழம்போடு சேரற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கர்ப்பூரம், புழுகு, சவ்வாது, கஸ்தூரி என்பவைகளாம்.

313. நைவேத்தியங்கள் எவை?

சுத்தான்னம், சித்திரான்ன வகைகள், நெய், காய்ச்சிய பால், தயிர், முப்பழம், தேங்காய்க்கீறு, சர்க்கரை, கறியமுதுகள், அபூப வகைகள், பானகம், பானீயம், வெற்றிலை, பாக்கு, முகவாசம் என்பவைகளாம்.

(அபூபம் = பணிகாரம்)

314. சித்திரான்ன வகைகள் எவை?

பருப்புப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகோதனம், புளியோதனம், ததியோதனம், கருகோதனம், எள்ளோதனம், உழுந்தோதனம், பாயசம் என்பவைகளாம்.

315. பணிகார வகைகள் எவை?

மோதகம், பிட்டு, அப்பம், வடை, தேன்குழல், அதிரசம், தோசை, இட்டலி என்பவைகளாம்.

316. பானீயம் என்பது என்னை?

ஏலம், சந்தனம், பச்சைக்கர்ப்பூரம், பாதிரிப்பூ, செங்கழுநீர்ப்பூ என்பவைகள் இடம்பெற்ற சலம்.

317. முகவாசம் என்பது என்னை?

ஏலம், இலவங்கம், பச்சைக்கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பவற்றின் பொடியைப் பனி நீரோடு கூட்டிச் செய்த குளிகை.

318. மேலே சொல்லப்பட்டவைகளன்றிச் சிவாலயப் பணிகள் இன்னும் உள்ளனவா?

உள்ளன. அவை, திருவீதியில் உள்ள புல்லைச் செதுக்குதல், திருக்கோபுரத்திலுந் திருமதில்களிலும் உண்டாகும் ஆல், அரசு முதலியவற்றை வேரொடு களைதல், திருக்கோயிலையுந் திருக்குளத்தையுந் திருவீதியையும் எச்சில், மலசலம் முதலியவைகளினால் அசுசியடையாவண்ணம் பாதுகாத்தல், திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும், வாயிலே வெற்றிலை பாக்கு உடையவரும், சட்டையிட்டுக் கொண்டவரும், போர்த்துக் கொண்டவரும், தலையில் வேட்டி கட்டிக்கொண்டவரும் உட்புகா வண்ணந் தடுத்தல், திருவிழாக் காலத்திலே திருவீதியெங்குந் திருவலகிட்டுச் சலந் தெளித்தல், வாகனந் தாங்கல், சாமரம் வீசுதல், குடை கொடி ஆலவட்டம் பிடித்தல் முதலியவைகளாம்.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சமணர் கழுவேற்றம்

Eswaramoorthyb1.jpg

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

PREFACE

*********

It is with a great deal of diffidence that I have cousented to write a short note by way of preface to this booklet; for a good wine needs no bush. The author of this interesting little volume comes of a well-known literary family of Tirunelvely and is an earnest and enthusiastic student of Saiva Siddhanata Philosophy. Those who are already acquainted with his annotated editions of Thiruvarulpayan, Kodikavi, Pottipahrodai and Vinavenba will not need any invitation to come for further instruction and those who are not, will very properly and profitably plunge at once into this little book.

The one excuse I have for complying is the deep interest that I take in the exquisite system of Philosophy known as Saiva Siddhanta in the exposition and propagation of which the Great Saint Sambandar took a leading part. 'Prejudices die hard', so goes the saying. A canard had been started that the Great Saint was responsible for the immolation of the Jains on the pikes by King Kunpandia. The learned author conclusively proves in this little volume that neither the Great Saint nor the Pandian King was responsible for the retribution that had overtaken them. I wish that the another produces more books of this kind exploding some of the time-worn religious prejudices.

Ponneri, Vasudevalu Chetty B.A.,B.L., Vakil.

30th Jan. 1929

Link to comment
Share on other sites

12. சிவாலய தரிசனவியல்

319. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியாவந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம் பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம் முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும், பிறரால் எடுப்பித்துக் கொண்டேனும், வாகனாதிகளின்றி நடந்துபோதல் வேண்டும்.

320. திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

கால்களைக் கழுவி, ஆசமனஞ் செய்து, தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச், சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே போதல் வேண்டும்.

321. திருக்கோயிலுள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்தையுந் துசத்தம்பத்தையும் இடப தேவரையுங் கும்பிட்டுப், பலிபீடத்துக்கு இப்பால், வடக்கு நோக்கிய சந்நிதியாயினும் மேற்கு நோக்கிய சந்நிதியாயினும் இடப்பக்கத்திலும், கிழக்கு நோக்கிய சந்நிதியாயினும் தெற்கு நோக்கிய சந்நிதியாயினும் வலப்பக்கத்திலும் நின்று, அபிஷேக சமயம் நிவேதன சமயமல்லாத சமயத்திலே, ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும். நமஸ்காரம் ஒரு தரம், இரு தரம் பண்ணல் குற்றம்.

322. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை யிரண்டு, செவி யிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

323. இந்த நமஸ்காரம் எப்படிப் பண்ணல் வேண்டும்?

பூமியிலே சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப், பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும், இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்தல் வேண்டும்.

324. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை யிரண்டு, முழந்தா ளிரண்டு என்னும் ஐந்தவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

325. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, இரண்டு கைகளையும் குவித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும் ஒன்பது தரமாயினும் பதினைந்து தரமாயினும் இருபத்தொரு தரமாயினும் பிரதக்ஷிணம் பண்ணி, மீட்டுஞ் சந்நிதானத்திலே நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

326. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?

முன்பு துவாரபாலகரை வணங்கிப், பின்பு கணநாயகராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்துப், "பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்து, அடியேன் உள்ளே புகுந்து, சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அநுமதி செய்தருளும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு, உள்ளே போய், முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப்பெருமான் சந்நிதியையும் உமாதேவியார் சந்நிதியையும் அடைந்து, ஆதிசைவரைக் கொண்டு அருச்சனை செய்வித்துப் பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவற்றை நிவேதிப்பித்துக் கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணித், தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி தக்ஷிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுஞ் சமய குரவர் நால்வரையுந் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

327. விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

Link to comment
Share on other sites

சமணர் கழுவேற்றம்

பிரமாண நூல்கள்

ஒவ்வொரு சமயமும் ஒன்றோடொன்று இயைபுடைய பலகோட்பாடுகளை யுடையது அவ்வியைபு நேராகவேனும் பரம்பரையாகவேனும் இருக்கும். ஒரு வாற்றானுந் தம்முள் இயைபில்லாத கோட்பாடுகள் எச்சமயத்தினுமில்லை. ஆகவே, ஒன்றனை யழிக்க முந்துறுவது பிறவற்றினும் போய்ப்பற்றி எல்லாவற்றையுமே யழிக்க எத்தனிப்பதாய் முடியும். இதனைக் கூர்த்தமதிகொண் டோர்க. இனி அத்தகைய கோட்பாடுகள் அவ்வச்சமயப் பிரமாணநூல் களாற்றான் விளங்கும். பிரமாண நூலில்லாத சமயம் யாண்டு மிராது. பிரமசமாசம், ஆரியசமாசம், பிரமஞானசபை முதலிய நவீனசமயங்களுக்கும் அவ்வவற்றை நிலையிட்டாரது வாக்குக்கள் பிரமாணமாக விருக்கின்றன. அங்ஙனமாக, சைவசமயத்துக்கும் பிரமாணநூல்க ளிருத்தல்வேண்டும். அவைதான் வடமொழியிலுள்ள இருக்கு முதலிய நான்கு வேதங்களும், காமிகமுதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களும், தமிழிலுள்ள பன்னிரண்டு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், சிவஞானமகாபாஷியமுமாம். இத்தனையுந் தம்முட் சிறிதும் விரோதியா. பொருள்கோள்முறை தெரியாதோர் அவை விரோதிப்பனவாக மயங்குவர். அதனைத் தெரிந்த சைவர்க்கு அவை யெல்லாம் ஒரேநெறிச் செல்வனவாய் அகச்சான்றாதல் ஒருதலை. ஆகலின் அவற்றுள் ஒன்றை அகச்சான்றென்றும், பிறிதொன்றைப் புறச்சான்றென்றும் அவர் சொல்லார். பொருள்கோள்முறை சிவஞானமகாபாஷிய முதலியவற்றுட் காட்டப்பட்டது.

சைவர் பட்ட துயர்

அமிழ்திணு மினியது தமிழ். அதனிது மினியது சைவம், ஏனெனில் சிவபிரானே தமிழைத்தந்தார்; ஆய்ந்தார்; தமிழ்ப்பெருநூல்களுள் மிகப்பெரும்பகுதி போற்றுதற் குரியராயினார் என்க. இத்தகைய சைவசமயத்துக்கு இடையிடையே இடையூறிழைத்தார் எத்தனையோபேர். வைணவரொருபால் வாட்டினர். ஏகான்மவாதியரொருசாரிடித்தனர

Link to comment
Share on other sites

அதனையே சைவத்தின் பெயரால் கடவுளின் பேரால் கழுவில் ஏற்றிச் சமண சமயத்தவரைக் கொன்றதன் மூலம் நிறை வேற்றினார்கள் சைவத் தொண்டர்கள்.

தம்பி நாரதா! உன்னுடைய கட்டுக்கதைக்கு இந்த கட்டுரை மூலம் முற்று புள்ளி வைக்கப்படும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22942

தம்பி நாரதா! அறியாமை தவறு அல்ல. இந்தக் கட்டுரையை படித்து அறிந்து கொள்.

கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!!

Link to comment
Share on other sites

பருவம்

பாலறாவாயர் பாண்டியன் முன்னர்ச் சமணப்பெருங் கூட்டத்துக்கு நடுவில் இருந்துகொண்டு மங்கையர்க்கரசியாரைத் தேற்றுமாறு "எனைப் பாலனென்று நீ நனியஞ்சவேண்டா" என்றும், அப்பெருமானார் புனல்வாதத்தினிமித்தம் வீதியில் எழுந்தருளுகையில் ஆண்டு நின்றார் "பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தா - மானசீர்த் தென்னனாடு வாழவந்தணைந்தார்" என்றுங் கூறுமாற்றால், அப்பெருமானார் தமது அதிபாலியத்தில் சமணரோடு வாதஞ் செய்தது வெளி. தொண்டுகிழவனாகிய பிரமனும் தான் படைத்த மாதின் எழில் வெள்ளத்தை நான்கு முகத்தாலும் பருகினான். ஆனால் கனவுக்குரிய இயல்பெல்லாம் ஒருங்கமைந்து "புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் புகலிவேந்தர்" அம்மாதினுநல்ல பூம்பாவையார் பால் "கண்ணுதல் கருணைவெள்ளம் ஆயிரமுகத்தாற் கண்டார்" அவர்களுக்குப் பதினாறாட்டைப் பிராயமே அவ்வாறாயின் சமணரோடுவாதிட்ட அதிபாலியம் மிகப்பரிசுத்தமாகவே யிருக்கும். காமக் குரோத முதலிய கொடுமைகள் குடிபுக அப்பருவஞ் சிறிதும் இடந்தருவதில்லை.

மதப்போர்

செல்வம், அரசு, அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றில் ஆசைமிகுந்தவர் சமயத்தை வியாஜமாகவைத்துக்கொண்டு ஒருவரோடொருவர் போர் தொடுப்பர். சம்பந்தருக்கு அவ்வாசை சிறிதுமில்லை. இருக்குமாயின் சமணரது அழிவுக்குப் பிறகு அவர்கள் பாண்டியராக மணிமுடி கவித்துத் தனியரசியற்றியிருப்பார்கள். ஆனால் அவ்விராச்சியம் பழைய பாண்டியருக்கே கொடுக்கப்பட்டது. ஆகலின் அப்பரசமய கோளரியாரை மதப்போர் தொடுப்பவரென்றல் வீண்புலப்பமாகும். அவ்வந்தணர்சிகாமணியாரது திருவுளப் பாங்கெல்லாம் "சிவபெருமானே! அடியேற்கு இன்று ஞாலம் நின்புகழே யாகவேண்டும்" என்பது தான்.

thirugnanasambanthar.jpg

கருணைத்திறம்

நடந்த வாதங்கள் இரண்டு, அவை அனல்வாதமும், புனல்வாதமும். புனல்வாதத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. அனலில் ஏட்டை முதலாவதிட்ட பிரானார் புனலில் சமணரிடும் வரைத் தாமதித்தார்கள். ஏடு கடல் சென்று சமணரை நட்டாற்றில் விட்டது. அப்போதே சமணரனைவருக்குங் கழுவேற்றத்தில் அச்சம் நிச்சயமாயிற்று. சமணர் புத்திசாலிகளாயின் அவ்வச்சத்தினின்றுந் தப்ப அப்போதும் ஒரு நல்ல வழி யிருந்தது. அதுதான் சரணாகதி. அதுமட்டும் நிகழ்ந்திருக்குமாயின் உடனே புகலித்தலைவர் அரசனைப் பார்த்து "அரசே! வழக்கிடுவாரிருவரில் ஒருவர் வென்றாலன்றித் தோற்றமற்றவர்க்குத் தண்டனை விதித்த லடாது. யாம் ஏடி டாது வாளாவிருக்கும்வரைச் சமணரிட்ட ஏடு நீரோடு செல்லினும் அது அவருக்குத் தண்டனையைத் தராது. எம்மையும் ஏடிட நீர் வற்புறுத்தமாட்டீர். ஒருக்கால் வற்புறுத்து வீராயின் எமது ஏட்டையும் நீரோடு செல்லுமாறு செய்வேம். அப்போது நீர் யாரைக் கழுவேற்றுவீர்? இருவரையுமே யென்பீராயின், தோற்றவரைத்தான் கழுவேற்றுவேமென்னும் உமது முறை தவறுபடும். ஆகலின் நீர் சமணரை விடுவிப்பீராக" என்றெல்லாம் வழக்காடியிருப்பார்கள். ஆனால் போகூழ்வயத்தராய சமணர் "மாறுகொண்டீருமிட்டால் வந்ததுகாண்டும்" என்று சொல்லி வள்ளலாரை யெதிர்த்தனர். "பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் - சொரியினும் போசா தம" என்பது வீண்போமா? அப்போதும் எங்கருணாசாகரர் "பரசமயங்கள் பாற" என்று திருவாய் மலர்ந்து கொண்டே ஏட்டை யிட்டார்கள். "பரசமயத்தர் மாள" என்னுஞ் சங்கற்பம் அவர்கள் பாலில்லை.

சமண சமய வொழிவு

ஏடி எதிர்சென்று எமது ஞான வீரர்க்கு வென்றி தந்தது. அதன்பயனாக "தென்னவன் றனக்கு நீறு சிரபுரச்செல்வரீந்தார். முன்னவன் பணிந்துகொண்டு முழுவது மணிந்து நின்றான். மன்னன் நீறணிந்தானென்று மற்றவன் மதுரை வாழ்வார் துன்னி நின்றார்களெல்லாந் தூயநீறணிந்துகொண்டார். பூதிமெய்க்கணிந்து வேந்தன் புனிதனா யுய்ந்தபோது - நீதியும் வேதநீதி யாகியே நிகழ்ந்ததெங்கு - மேதினி புனிதமாக வெண்ணீற்றின் விரிந்தசோதி - மாதிரந்தூய்மை செய்ய வமணிருண் மாயந்த தன்றே". அமணிருளாவது சமணசமயம்.

திரும்புதல்

சிரபுரச் செல்வர் அங்ஙனம் பரசமய நிராகரண மட்டுஞ் செய்து மன்னரையும்,மங்கையர்க்கரசியா

Link to comment
Share on other sites

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.

-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,

Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'

-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.

-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,

Chennai, Page 27-29

-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.

-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.

-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.

-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை

-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.

-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'

-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'

-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை

1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'

ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,

1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'

க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'

-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,

1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'

'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'

-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,

1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,

1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.

இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.

-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'

-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.

-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.

-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.

-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது

(தகவல்கள் தொடரும்)

நன்றி : சுகவனப்பிரியனின் வலைப்பதிவு

Link to comment
Share on other sites

328. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

பிரதக்ஷிணஞ் செய்து, சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டுத், தோத்திரஞ் செய்து, மூன்று முறை கைகொட்டிச், சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து, இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப், பலி பீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து, எழுந்து, இருந்து, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமுஞ் செபித்துக் கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

329. அம்மையார் திருக்கோயில் வேறாயிருக்கின் யாது செய்தல் வேண்டும்?

அம்மையார் திருக்கோயிலினுள்ளே போய், முன் சொல்லிய முறை பிறழாழற் பலிபீடத்துக்கு இப்பாலே நான்கு தரம் நமஸ்காரம் பண்ணி, எழுந்து, இரண்டு கைகளையுங் குவித்துக்கொண்டு, நான்கு தரம் முதலாக இரட்டுறு முறையிற் பிரதக்ஷிணஞ் செய்து, மீண்டுஞ் சந்நிதியை யடைந்து, நமஸ்காரம் பண்ணி, எழுந்து, துவாரபாலகிகளைக் கும்பிட்டு, அனுமதி பெற்று, உள்ளே புகுந்து, விக்கினேசுரரைத் தரிசித்துத், தேவியார் சந்நிதியை அடைந்து, அருச்சனை முதலியன செய்வித்துத், தரிசனஞ் செய்து, விபூதி முதலியன வாங்கித் தரித்துக்கொண்டு, மகேசுவரியையும் வாமை முதலிய சக்திகளையும், விக்கினேசுரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுந் தரிசித்துச் சண்டேசுவரி சந்நிதியை அடைந்து, கும்பிட்டு, மூன்று முறை கைகொட்டித், தேவி தரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து சந்நிதியை அடைந்து, நான்கு தரம் நமஸ்கரித்து, எழுந்து இருந்து, தேவியாருடைய மூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்துக்கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

330. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, கந்தசட்டி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.

Link to comment
Share on other sites

"சைவத்தின் மேற்சம யம்வே றிலையதிற் சார்சிவமாந்

தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான் மறைச் செம்பொருள் வாய்

மைவைத்த சீர்திருத் தேவார முந்திரு வாசகமு

முய்வைத் தரச்செய்த நால்வர் பொற் றாளெம் முயிர்த்துணையே."

nalvar2.jpg

Link to comment
Share on other sites

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'

-சதாசிவ செட்டியார் தேவாரப் பதிகங்கள் சென்னை

1925இ pயபந 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'

ஏ.ஜி.கோமதி அம்மாள் திருத் தொண்டர் பெரிய புராணம் சைவம் வளர்த்த அரசி கோவில்பட்டி

1948இ Pயபந 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'

க. வெள்ளைவாரணன் பன்னிறு திருமறை வரலாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

1972இ Pயபந 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி அவர்கள் சொத்து சுதந்திரம் கோயில் குளம் மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'

-அ.பொன்னம்பலம் அப்பரும் சமபந்தரும் சென்னை

1983இ Pயபந 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம் சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'

'விபூதி கோமயம் பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'

-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை திருவிளையாடற் புராணம் சென்னை

1925இ Pயபந 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும் காக்கைகளும் நரிகளும் நாய்களும் தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் உ.வே.சா.பதிப்பு சென்னை

1937இ Pயபந 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம் திருவிளையாடற்புராணம் தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும் மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி சமணமும் தமிழும் பக்கம் அறுபத்தெட்டு.

அவ்விளக்கங்களில் பாரதநாட்டிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தத்துவ ¡£தியாக அமைந்திருந்த அறுசமயங்களைப்பற்றிப் பின்வரும் பாடலில்.

"அறுசமயங்களென்ப வான கையாயிகத்தோ

டுறையும் வைசேடிகம் மேலுள்ள லோகா

குயிலிமீமாம்ச மென்று குறித்தவை யன்றி நல்ல

நெறியுள அருகப் புத்தம் நீதியென்றோது மன்றே"

என விளக்கியுள்ளார் இவ் அறுசமயங்களையே பண்டைய இலக்கியங்கள் பலவும் கூறியுள்ளன. அதுமட்டுமல்ல சேந்தன் திவாகரத்தில் 12வது தொகுதியும் இவ் ஆறு சமயங்களே எனப்பட்டுள்ளன. இவ்வராற்றுப் பாடல் நிகண்டில் பழைய ஓலைச் சுவடிகளிலும், சூடாமணி நிகண்டை முதன் முதல் அச்சிட்ட நூலிலும் இன்றும் காணலாம்.

யாழ்ப் பாணம் திரு ஆறுமுக நாவலர் அவர்கள் பிற்காலத்தில் தோன்றியதும், தத்துவங்காணுததுமாகிய தம் சமயமாகிய சைவ சமயத்தைச் சூடாமணி நிகண்டில் நுழைக்க வேண்டி, தாம் சூடாமணி நிகண்டை அச்சிடுவதாகப் பறைசாற்றிக் கலைக் கொலைக் செய்துள்ளக் கோரச் செயலை நேர்மை உள்ளம்படைத்த எந்தத்தமிழரும் வருந்தாமலிருக்கமாட்டார். அவர் செயலை பாருங்கள்.

நாம் மேலே கண்ட அறு சமய விளக்கப் பாடலை நீக்கி விட்டு கீழே காணும் இரு பாடல்களைத் தாமே இயற்றிச் சேர்ந்து சூடாமணி நிகண்டை வெளியிட்டுள்ளார்."அ¡¢யவுட் சமயமாறே யாவன சைவந் தூய்மை

பெருக பாசுபத்தோடு பிறங்கு மாவிரமற்றும்

கருதிய வீடுபேறு காட்டு களா முகந்தான்

மருளயவால மிக்க வைரவம்என் னலாகும்"

"அறுபுறச் சமயந்தானே யறையும்லோ காயதம்பின்

உறைதரு பெளத்தமேயோ ருகதமீமாம்சமோடு

குறிபெறு ம்¡யாவாதங் கூறிய பஞ்சராதரம்

நெறிபேறு மிவையே யென்ன நிகழ்த்துவர்நூல்

வல்லோரே"

பண்டைய காலந்தொடர்ந்து அறுசமயம் எனப்போற்றிவரும் வரலாற்றுக்கு மாறாக உட்சமயம் புறச்சமயம் எனப்பி¡¢த்துப் போலிப் பாடல்களை இயற்றி வரலாற்றையே பாழாக்கியுள்ளார். வரலாறு மட்டுமின்றி நிகண்டின் மூலத்தையும் மறைத்துள்ளார். இச்செயல் தமிழ்த்தாயின் உருவத்தையே சிதைத்தற்கொப்பாகும் எனில் மிகையன்று. நாவலர் செய்த சூழ்ச்சி அவருக்கே இழுக்கை தேடிவிட்டது. தம் சமயத்தின் உட்சமயங்களாக இணைத்துக்கொண்ட சமயங்கள் இன்று பெயருக்கேனும் காணமுடியாது மறைந்து மாய்ந்து போனவை. பாசுபதம், மாலிரதம் (கபாலிகம்) காளாமுகம், வாமம் ஆகிய ஐந்துமாம். இவைகளின் கொள்கைகளையும், வேடங்களையும், எலும்பு மாலைகளையும், மண்டையோடிகளையும், ஊனையும், கள்ளையும் பற்றி மகேந்திரபல்லவ மன்னர் எழுதிய மத்த விலாசபிரஹசனம் என்ற நாடகத்தில் காணலாம் இத்தகையாரை நாவலர் தம் சைவ சமயக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டதை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால் கூடா நட்புஎன உரைத்து விடலாம். தன்வினையே தன்னைசுடும் என்ற பழமொழிக்கு இலக்காகிவிட்டார் நாவலர் அவர்கள் நிகண்டாசி¡¢யர் மேலே கண்ட ஐந்து சமயங்களும் சைவத்தின் உட்சமயங்கள் எனப் பாடிவிட்டிருந்தால் சைவ உலகம் கண்டனக்குரல் எழுப்பி இருக்கும். நாவலர் இயற்றிப் புகுத்தியதால் ஒன்றும் பேசாது ஏற்றுக் கொண்டு அச்சிட்டு வெளியிட்டும் வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் தம் சமயத்திற்கு ஊறு தேடிக்கொண்ட நாவலர் அவர்கள் கடவுள் இலக்கணத்திலும் தம் காழ்ப்பைக் காட்டியுள்ளார். நிகண்டாசி¡¢யர் மண்டல புருடர் கடவுளின் இலக்கணத்தை.

"கடையிலா ஞானத்தோடு காட்சி வீ¡¢யமே இன்பம்

இடையுறு நாமமின்மை விதித்தக் கோத்திரங் களின்மை

அடைவிலா ஆயுவின்மை அந்தராயங் களின்மை

உடையவன் யாவன் மற்றில் வுலகினுக் கிறைவனாமே"

எனக் கடவுளின் இயல்பைக் கூறி இத்தகைய இலக்கணத்தையுடையவரே உலகுக்கு இறைவனாவான் எனப் பாடியுள்ளார். இப்போ¢லக்கணத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத நாவலர் மேலே உள்ள பாடலின் கடைசி வா¢யை மாற்றி உடையவன் இறைவனென்று உரைக்கும் ஆருகத நூலே' எனத்திருத்தி வெளியிட்டுவிட்டார். இச்செயல் கடவுளைத் தூய்மையுடையதாகத் கொள்ளாது தம் சமயக் கடவுளாகிய ருத்ரன் போல் இருக்க வேண்டுமென்பதையே காட்டுகிறதல்லவா? இக்கொடுஞ்செயலைத் தமிழை வளர்கிறோம் எனப் பேசி வரும் எந்த அறிஞரும் கண்டிக்கவில்லை. அதற்கு மாறாக ஆறுமுக நாவலா¢ன் போலிக் கவிகளையே திரும்பத் திரும்ப அச்சிட்டு வெளியிடுகின்ற பா¢தாபக் காட்சியைத்தான் காண்கிறோம். இது போன்றே சிவனுக்கும் எண் குணங்களுண்டென இரு செய்யுள்கள் இயற்றி நிகண்டில் நுழைத்துள்ளார். இவ்விரு போலி செய்யுட்களுக்காக நிகண்டில் இருந்த பஞ்சு அடித்தல் நெய்தல் ஆகிய தொழில்களை விளக்கும் இரு பாடல்களை எடுத்து விட்டார். இத்தகு செயலை ஜைன அறவோர்கள் உலகியல் வழக்கங்களையும் அறநெறிகளையும், வரலாற்றுச் சிறப்பையும் கண்ணாடிபோல் காட்டியுள்ள கருத்துக் கருவூலங்களின் ஆக்கப் பணியை அழிக்கும் தொழில் அல்லது கலைக் கொலை யென்றே கூறலாம். இச்செயல் போதாதென்று இவருக்கு பின் தோன்றிய சிலர் ஜைன நூல்களைச் சிதைத்துள்ள செய்திகளையும் பாருங்கள்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் விளைவித்த சமயப் பூசல் காரணமாக ஜைன அறவோர்கள் இயற்றியருளிய பல அரும் பெரும் நூல்கள் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் திரு. ஆறுமுக நாவலர், நிகண்டை திருத்தி வேறு செய்யுள் இயற்றிய நுழைத்திருப்பதை முன்னரே கண்டோம் எஞ்சியிருக்கும் சில நூல்களின் கடவுள் வாழ்த்தைத் திருத்தி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பதினென்கீழ்க் கணக்குகளில் சிலவும், நெல்லிலக்கம் போன்ற சில கணித நூல்களும் இக்கதிக்கு உள்ளாகியுள்ளன. கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் தாம் இயற்றிய கலிங்கத்துப்பரணி என்னும் நூலில் தாம் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதை விளக்கிப் பதினோரு பாடல்கள் இயற்றிய உலகறியச் செய்துள்ளார் இந்நூலை அச்சிட முனைந்து அந்நூலாசி¡¢யர் வரலாற்றை எழுதியவர் ஜெயங்கொண்டார் ஜைன சமயத்தில் தோன்றியவராயினும் பின்னர் சைவம் தழுவி விட்டார் என அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

திவாகரம் பிங்கலந்தை ஆகிய இரண்டு நிகண்டுகளும் ஜைன அறவோர்களால் இயற்றப்பட்டவைகளே. திவாகரம் இயற்றிய அறவோர் திவாகர் என்பதை யாவரும் அறிவர். இப்பேரறிஞர் திவாகரம் இயற்றுவதற்கு காரணமாய் இருந்தவர் சேந்தன் என்ற மன்னராகும். திவாகர் தன்னை ஆதா¢த்த சேந்தனை மறவாது தம் நூலுக்கு சேந்தன் திவாரம் எனும் பெயர் சூட்டியதோடு நூலின் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் சேந்தனைப் பாராட்டிப் பாடியுள்ளார் குறிப்பாக,

'செந்தமிழ் சேந்தன்'

'அம்பற்கதபதி சேந்தன்'

'கற்றநாவினன் கேட்ட செவியினன்'

'முற்ற உணர்ந்த மூதறிவாளன்'

'வட நூற்கரசன் தென்தமிழ்க் கவிஞன்'

'கவியரங்கேற்றும் உபயக்கவிப் புலவன்'

என்றெல்லாம் புகழ்ந்து நன்றியறிதலைக் காட்டியுள்ளார் இப்புகழுரைகளால் சேந்தன் வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமைப் பெற்ற பேரறிஞன் என்பது புலனாகிறது. இவ்வுண்மையை சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவர் தம் நூலின் சிறப்பையும் அரங்கேற்றிய இடத்தையும் குறிப்பிட்டு விளக்குகையில்,

"நாமான் புரைக்கும் குறையென்னினு

நாம வென்வேல்

தேமா ணலங்கற் றிருமா னெடுஞ் சேந்தனென்னூர்

தூமான் டமிழின் கிழவன் சுடரார மார்பிற்

கோமா னவையுட் டெருண்டார் கொளப்பட்ட

தன்றே"

என்னும் பாடலில் வரும் தமிழிற் கிழவன் என்னும் சேந்தனும் திவாகரர் குறிப்பிடும் "கற்றநாவினன் கேட்ட செவியினன்" எனப் புகழும் சேந்தனும் ஒருவரே என்பதில் ஐயமில்லை. எனவே தோலாமொழித்தேவரும் கிவாகரரும் சமண காலத்வர் ஆவர்.

'அப்பர்-சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர் திருவாரூ¡¢லும், இத்தகைய சைவ-சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுதப்பட்டுத் துரத்தப்பட்டதோடு அவருடைய நிலைகளும், மடங்களும், பள்ளிகளும்பாழிகளும் அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பொ¢யபுராணம் கூறுகிறது. இப்போது திருவாரூர் திருக்குளம் மிகப் பொ¢யதாகவும், பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும், இருக்கிறது. இத்துணை பொ¢ய குளம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே திருவாரூ¡¢ல் சமணர் செல்வாக்குடனும், ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர். இந்த குளம் மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பொ¢ய குளமாகத் தோண்ட வேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவநாயனார் முயற்சி செய்தார். இந்தச் செய்தியைப் பொ¢யபுராணம் கூறுகிறது.

"செங்கண் விடையார் திருக்கோயில்

குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு

எங்கும் அமணர் பாழிகளாய்

இடத்தால் குறைபாடெய்துதால்

அங்கந் நிலைமை தனைத் தண்டி

யடிகள் அறிந்தே ஆதரவால்

இங்கு நானிக் குளம் பெருகக்

கல்ல வேண்டும் என்றெழுந்தார்"

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடை நிலங்களும், கட்டடிடங்களும் உள்ளன. குளத்தைப் பொ¢ய தாகத்தோண்ட வேண்டுமானால், குளக்கரையச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும், கட்டிடங்களையும் இடித்துத்தகர்த்தல் வேண்டும். முதலில் குளத்தைப் பொ¢யதாகத் தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும், கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள். வழக்கம்போல கலகம் ;ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி "தண்டியடிகளால் அமணர் கலகம் விளைந்தது" கலக்கம் மட்டும் நிகழவில்லை கலகம் நடந்தது. ஏனென்றால் சிவபெருமான் அரசன் களவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார், அரசன் சமணரை ஊரைவிட்டே துரத்திய பின்னர், அவர்களுடைய கட்டிடங்கள¨யும், நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பொ¢ய குளமாகத் தோண்டினான். இதனைப் பொ¢ய புராணம்

"அன்ன வண்ணம் ஆரூரில்

அமணர் கலக்கம் கண்டவர் தாம்

சொன்ன வண்ணமே அவரை

ஓடத் தொடர்ந்து துரந்ததற் பின்

பன்னும் பாழிப்பள்ளிகளும்

பறித்துக் குளஞ் சூழ் கரைபடுத்து

மன்னனவனும் மனமகிழந்து

வந்து தொண்டர் அடி பணிந்தான்"

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத்துரத்துதல் நிலபுலன்களைக் கவர்தல் முதலிய கலகங்களும், கொடுமைகளும், சச்சரவுகளும் போராட்டங்களும் நிகழ்ந்து வந்தன. சமயப் போர் இல்லை சமயவெறி!

இவ்வாறு நிகழ்த்திய கொடும் செயல்கள் கணக்கில் இவ்வாறெல்லாம் துன்பங்களும், கொடுமைகளும் நிகழ்ந்தபடியினாலே நாளடைவில் சமண சமயம் செல்வாக்கு இழந்து நிலை குன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத சமணர்களின் பெரும்பான்மையோர் மதம் மாறினார்கள். அ·தவாது சமண சமயத்தைவிட்டு சைவர்களாகவும், வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள். தமிழ் நாடெங்கும். இவ்வாறே பலாத்காரம் செயலால் ஜைனசமயத்தவர்க்குத் தீங்கிழைத்துள்ளனர். மதுரையில் நடந்த கொடுஞ்செயலை மங்களகரமான அருஞ்செயலெனப் பொ¢யபுராணத்தில்,

"பூமியன் மதுரை யுள்ளான்

புறத்துனர் அறணர் கேரும்

பாழியும் அருகர் மேவும்

பள்ளியும் ஆன எல்லாம்

கீழுறப் பறித்துப் போக்கிக்

கிளரொளித் தூய்மை செய்தே

வாழியாப் பதிகள் எல்லாம்

மங்கலம் பொலியச் செய்தார்"

எனப்பாடி மகிழ்ந்துள்ளார் சேக்கிழார்.

இக்கோரச் சம்பவங்களைப் பற்றி 1850-ம் ஆண்டில் விளங்கிய புலவர் பெருந்தகை வேங்கடசாமி நாயகர் அவர்கள் நாம் இயற்றிய "இந்துமத ஆபாச தரிசினி" என்ற நூலில் சம்பந்தர் சமணத்தை அழித்தக் கொடுமை" என்ற தலைப்பில் மணமுடைந்து வருந்தி பாடியுள்ள பாக்கள் நம் உள்ளத்தை உருக்கும்.

"நத்திமச் சோழன் நாட்டிய சமண் மதத்தை

வைத்திட வவருங்கூடி வஞ்சகர் தமக்குள்ளாகிப்

பற்றியே கற்காணத்திற் பதைத்திட வனேகம்பேரைச்

செற்றிட வாடிக்கொன்றே சமயத்தைப் பறக்கடித்தார்"

"உறுத்திட வூ¡¢ல்நின்ற வுற்சவச் சிலையுடைத்தார்

பெருந்திட விருந்த கோயிற் பிணக்கற விடித்தார்மேலும்

ஒறுத்திட வோடியோடி யொருங்கற வழித்தாரையோ

நிறுத்திய பொதுநோக்காமல் நிலையழி சோழன் செய்தான்.

இவ்வாறு பல பாக்கள் உள்ளன.

இத்தகு பகைமை உணர்ச்சிக்கு காரணம் வேண்டுமல்லவா? இக் காரணம் வாசகர்களுக்கு புதிதல்ல. திரு. மயிலை சீனு வேங்கடசாமி அவர்கள் போன்ற பல வரலாற்று ஆசி¡¢யர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள். பகுத்தறிவாதிகள் நேர்மை எழுத்தாளர்கள் பலரும் பலகாலமாக எழுதிவரும் வரலாற்றுச் செய்திதான். எனினும் அவ்வரலாற்றைக் கொண்டுதான் உண்மையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. எனவே அப்பண்டைய வரலாற்றின்படி மிகமிகப் பழங்கால முதல் தொடர்ந்துவரும் பகைமை உணர்ச்சியே காரணமாகும் என்பதை இனி காண்போம்.

ஆ¡¢யர்கள் பாரத நாட்டில் குடியேறிய வரலாறும். அவர்கள் வாழ்க்கை வரலாறும் பாரத நாட்டு வரலாற்று நூல்கள் அனைத்திலும் கண்டுள்ளோம். ஆ¡¢யர்கள் பாரத நாட்டில் குடியேறுவதற்கு முன் இங்கு அஹிம்சா தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட அறநெறி சமுதாயம் சிறப்புற்று விளங்கியிருந்தது. இச்சமுதாயம் பகவான் விருஷபதேவரால் அமைக்கப் பெற்றது. சாதி சமயம். உயர்வு தாழ்வு என்ற பேதமற்ற அறநெறிக் கொள்கையைக் கொண்ட தென்பதை முன்னரே அறிந்துள்ளோம் புதிதாக பாரத நாட்டில் நுழைந்த ஆ¡¢யர் கொள்கைகளை இங்குள்ள அஹிம்சாவாதிகள் ஏற்றுக்கொள்ளாது எதிர்த்தார்கள். பகைமை மூண்டது. இந்திரன், வாயு, வருணன் முதலான சடங்குகள் அற்றவர்களாய் கொலை, ஊனுண்ணல், கள்குடித்தல் அற்றவர்களாய் கொலை, ஊனுண்ணல், கள்குடித்தல் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களாய் விளங்கும் பாரத மக்களைத் தங்கள் வழியில் திருப்பித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டப் பல விதங்களிலும் ஆ¡¢யர்கள் முயற்சித்து வந்துள்ளார்கள் என்பதற்கு அவர்கள் வேதங்களே சான்றாகும். அவ்வேதங்களில் பாரத மக்களை வேதப் பகைவர் என்றும் வேள்வியை நிந்திப்பவர்களென்றும் பல்வேறு குற்றங்களைச் சாட்டிப் பொதுவாகப் பாரத மக்களை தஸ்யுக்கள் என்றும் இராக்கதர் என்றும் வெறுத்துள்ளார்கள். அத் தஸ்யுக்களை அடியோடு அழிக்குமாறு தங்கள் தெய்வமாகி இந்திரனை வேண்டிக் கொண்டுள்ளார்கள். இப்பகைமைக்கு சான்றாக ¡¢க் வேதத்தில் 1-33-5வது சுலோகத்தில், "இந்திரனே! தஸ்யுக்களை எங்குமில்லாமல் செய்த அவர்களை முதுகுகாட்டி ஓடச் செய்யுங்கள் எனவும், சுலோகம் 13-3-7ல் இந்திரனே! இந்த தஸ்யுக்களோடு யுத்தம் செய்து இந்நாட்டிற்கு வெளியே ஓட்டிவிடக்கடவீர். அன்றியும் இந்த தஸ்யுக்களின் தலைவனை எங்கிருந்தேனும் பிடித்துக்கொண்டு வந்து சுட்டொ¢த்து அழிக்கவும்" என்பன போன்ற பல சுலோகங்களை அவ்வேதங்களில் காணலாம்.

இனி தமிழகவரலாற்றை ஆராய்வோம். மேலே கண்ட வேதப்பகை பாரத நாடெங்கும் நிலவியிருந்தது. அக்கால முதல் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. தமிழ் நாட்டிலும் அப்பூசல் இல்லாமலில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் திருஞான சம்பந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஞான சம்பந்தர் வைதீக பிராமணர். வேதவழி நின்று வேள்வி செய்யும் பிராமண வகுப்பைச்சார்ந்தவர். ஞானசம்பந்தர் தன் தந்தையார் பு¡¢யும் வேத வேள்விக்குச் சிவபெருமானிடம் பொருள்வேண்டி தேவாரம் பாடியுள்ளார். தமிழகத்தில் வேத வேள்வியாகிய கொலை வேள்வியை அஹிம்சா வாதிகளான தமிழக ஜைனர்களும் புத்த சமயத்தவர்களும் எதிர்த்தனர். ஞான சம்பந்தர் எதிர்பாராத இந்த எதிர்பார்ப்பைக் கண்டு கோபங் கொண்டார். ரிக் வேதத்திலுள்ள சுலோகங்கள் நினைவுக்கு வந்தன. அவ் வடமொழி சுலோகங்களை தமிழாக்கம் செய்து சமணர்களைப் பழித்துப் பாடினார் அத் தேவாரப் பாக்களை கேளுங்கள்.

"வேத வேள்வியை நிந்தனை சேய்துழல்

ஆதமில்லி அமணொடு தேரரை

வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே"

"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி

மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை

ஓட்டி வாது செய்யத் திருவுள்ளமே."

"அந்தணாளர் பு¡¢யும் அருமறை

சிந்தை செய்யா அருகர் சிரங்களை

சிந்தவாது செயத் திருவுள்ளமே"

இத் தேவாரப் பாடல்களும், ¡¢க் வேத சுலோகங்களும் ஒன்றை ஒன்றுப் பின்னிப் பிணைந்திருப்பதைக் காண்கிறோம் கருத்துக்களும், குறிக்கோளும் ஒன்றாகவே பா¢ணமிக்கின்றன. எனினும் ஒரு வேறுபாடு. ¡¢க் வேதம் ஜைனத்தை அழிக்க இந்திரனை வேண்டுகின்றது. ஞான சம்பந்தர் பாடல்கள் சிவபெருமானை வேண்டுகின்றன. இவ் வேறுபாடன்றி வேத வேள்விப் பகைவர்களை அழக்கவும், ஓட்டவும் இரண்டும் முனைந்து நிற்கின்றன.

Link to comment
Share on other sites

பரஞ்சோதி முனிவர் அருளிய

திருவிளையாடற் புராணம்

(திருவாலவாய் மான்மியம்)

திருச்சிற்றம்பலம்

மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்

( பாண்டியன் சுரம் தீர்த்த படலம் சுபம் முதல் அருச்சனைப் படலம் வரை)

http://siddhanta.shaivam.org/sta_tiruvilaiyadal_10.htm

63. சமணரைக் கழுவேற்றிய படலம்

3174. பஞ்சவன் அடைந்த நோயைப் பால் அறா வாயர் தீர்த்து

நஞ்சு அணி கண்டன் நீறு நல்கிய வண்ணம் சொன்னேம்

அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற

வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம்.

3175. தென்னவன் தேவியாரும் அமைச்சருள் சிறந்த சிங்கம்

அன்னவன் தானும் காழி அந்தணர் அடியில் வீழ்ந்து எம்

மன்னவன் வெப்பும் கூனும் பாசமும் மாற்றி நீரே

இன்னமும் அடியேம் வேண்டும் குறை செயத் தக்கது

என்றார்.

3176. கன்னி நாடு எங்கும் இந்தக் கார் அமண் காடு மூடித்

துன்னின இதனை இன்னே துணித்திடல் வேண்டும் என்றார்

அன்னவர் ஆலவாயர் திரு உள்ளம் அறிவேன் என்னா

உன்னிய மனத்தர் ஆகி ஒய் எனக் கோயில் புக்கார்.

3177. அவ் இருவோரும் கூட அடைந்து பொன் கமலம் பூத்த

திவ்விய தீர்த்தம் தோய்ந்து சேல் நெடும் கண்ணி பாக

நவ்வி அம் கமலச் செம்கை நாதனைத் தாழ்ந்து வேந்தன்

வெவ்விய வெப்பு நீத்தார் தொழுது இது வினவு கின்றார்.

3178. காயமே ஒறுத்து நாளும் கைதவம் பெருக நோற்கும்

போயரை இம்மை யோடு மறுமையும் பேறு அற்றாரை

நீ உரை செய்த வேத வேள்வியை நிந்தை செய்யும்

தீயரை ஒறுத்தல் செய்யத் திருஉளம் செய்தி என்றார்.

3179. வெம் மத வேழம் காய்ந்த விடையவர் விசும்பில்

சொல்வார்

எம்மனோர் அவிர் நுங்கட்கு இசைந்ததே எமக்கும்

வேண்டும்

சம்மதம் ஆனால் வெல்லத் தக்கவர் ஆக நீரே

அம் மதம் உடையார் தேற்கத் தக்கவர் ஆக என்றே.

3180. எம் மொழி தேறினீர் போய் இறை மகன் அவையத்து

எய்திச்

செம்மை இலாரை வாது செய்திர் நீர் அனையார் தோற்று

வெம் முனைக் கழுவில் ஏறி விளகுவர் என்னக் கேட்டு

மைம் மலி களத்தான் மைந்தர் தொழுது தம் மடத்தில்

போனார்.

3181. இருவரும் மீண்டு தத்தம் இருக்கையில் போகி அற்றைப்

பருவம் அங்கு அகலப் பின் நாள் பாண்டிமா தேவியாரும்

பெரு மதி அமைச்சர் ஏரும் பிள்ளையார் மடத்தில் போகி

அருகரை வெல்லும் சூழ்ச்சி யாது என அளந்து தேர்வார்.

3182. பேர் அருள் நிறைந்த காழிப் பெருந்தகை உடன் போய்த்

தம்கோன்

சீர் அவை குறுகி ஈது செப்புவார் செய்ய கோலாய்

கார் அமண் காடே எங்கும் கழியவும் இடைந்த இன்ன

வேரோடும் களைந்தார் சைவ விளைபயிர் ஓங்கும் என்றார்.

3183. அவ்வண்ணம் செய்வதே என்று அரசனும் அனுச்சை

செய்யச்

செவ் வண்ண வெண் நீற்று அண்ணல் அனுச்சையும்

தெரிந்த தேயம்

உய் வண்ணம் இது என்று அங்கண் உள் மகிழ்ந்து

இருந்தார் நீண்ட

பை வண்ண ஆரம் பூண்டார் புகழ் எங்கும் பரப்ப

வல்லார்.

3184. அந்த வேலை அருகந்தக் கையரைக்

குந்த வேல் கண் குல மட மாதரும்

மைந்தர் ஆகிய மக்களும் கண் அழல்

சிந்த நோக்கி இகழ்ந்து இவை செப்புவார்.

3185. செழியர் கோமகன் மூழ்கிய தீப் பிணி

கழிய மாற்றும் வலியின்றிக் கற்றிலா

மழலை வாய் ஒரு மைந்தற்குத் தோற்று வெம்

பழி விளைத் தீர் பகவன் தமர்க்கு எலாம்.

3186. சாம்பர் ஆடும் சமயம் புகுந்து வெம்

பாம்பு அணிந்தவனே பகவான் என

வேம்பன் உங்கள் விரத நெறி எலாம்

சோம்பல் எய்தத் துறந்தான் இகழ்ந்து அரோ.

3187. ஏது உமக்கு நிலை இனி என்ற அப்

போது மற்றவர் தம்மைப் புறகிட

வாது செய்தற்கு எழுந்தனர் வஞ்சகர்

போதும் என்னத் தடுத்தனர் பூவை மார்.

3188. செல்லன் மின் கண் உமக்கு இது செவ்வி அன்று

அல்லல் கூர வரும் துன்பத்து ஆழ நாம்

எல்லி கண்ட கனவு உண்டு அதனை யாம்

சொல்லு கேம் இன்று கேண்ம் எனச் சொல்லுவார்.

3189. இடையறாது நம் பாழியும் பள்ளியும் எங்கும்

சடையர் முஞ்சியர் சாம்பலர் தாங்கிய சூலப்

படையர் தீவிழிப் புலவு வாய்ப் பாய் பெரும் புலித்தோல்

உடையராய்ச் சிலர் வந்து வந்து உலவுதல் கண்டேம்.

3190. கன்னியில் துறவு அன்னங்கள் கணவனின் துறவின்

மன்னும் ஆரியாங் கனைகள் நுல் வாங்கும் அக் குசைகள்

என்ன மூவகைப் பெண் தவப் பள்ளிகள் எல்லாம்

சின்ன வெண் பிறைக் கோட்டுமா சிதைக்கவும் கண்டேம்.

3191. முண்டிதம் செய்த தலையராய் முறுக்கு உறி தூங்கும்

குண்டிகை கைத் தடம் கையராய்க் கோவணம் பிணித்த

தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன் பேர் நாவில்

கொண்டு அசைத்தனராய் எங்கும் குலாவவும் கண்டேம்.

3192. காந்து வெங்கதம் உடையது ஓர் கயம் தலை வந்து

சூழ்ந்து கொண்டு நம் அடிகள் மார் கணம் எலாம் துரத்தி

ஏந்து பூம் சினை அலைந்திட இரங்கி வண்டு இரியப்

பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவும் கண்டேம்.

3193. அந்த மூவிலை வேலினும் மயில் முனைக் கழுவின்

பந்தி மீது நீர் ஏறவும் கண்டு உளம் பனிப்பச்

சந்த மார்பகம் சேப்ப அம் தளிர்க்கரம் புடைத்துக்

கந்த வார் குழல் சோரவும் கலுழவும் கண்டேம்.

3194. தள் அரும் திறல் இந்திர சாலமோ காதி

உள்ள விஞ்சை இவ் எல்லை வந்து உதவிலா ஒன்றும்

கள்ளரால் பறி பட்டவோ கனவில் வெந்தனவோ

வெள்ளம் கொண்டவோ சேமத்தில் கிடப்பவோ விளம்பீர்.

3195. தாவு தீ வளர்த்து எழு கரி தன்னை ஆடு அரவை

ஆவையேவி முன் நம்மனோர் பட்டது மறந்தீர்

காவலன் பிணி தணித் திலீர் இனிச் செய்யும் கருமம்

யாவது ஆகுமோ அதனையும் எண்ணுமின் என்றார்.

3196. இற்றை வைகலுக்கு ஏகன் மின் என்றனர் அறத்தைச்

செற்ற வஞ்சகர் செல்லுவார் திரும்பவும் கையைப்

பற்றி ஈர்த்தனர் பெண்டிர் சொல் கேட்பது பழுது என்று

உற்ற தீவினை வழிச் செல்வார் ஒளித்தனர் செல்வார்.

3197. கொங்கலர்க் குழல் சரிந்திடக் குரத்தியர் பின்னும்

எங்கள் சொல் கொளது ஏகுவிர் பரிபவம் எய்தி

உங்களுக்கு இடையூறு வந்து உறுக எனச் சபித்தார்

அங்கு அதற்கும் அஞ்சார் செல்வார் அழியும் நாள்

அடுத்தார்.

3198. புட்களும் பல விரிச்சியும் போகல் என்று எதிரே

தட்கவும் கடந்து ஏகுவார் தடம் கயல் உகைப்பக்

கட் கவிழ்ந்து அலர் கிடங்கர் சூழ் கடி நகர்ப் புறம் போய்

உட்கு நெஞ்சராய் யாவரும் ஓர் இடத்து ஈண்டி.

3199. யாது சூழ்ச்சி என்று எண்ணுவார் இறைவனைக் கண்டு

ஈது ஓதி நாம் அவன் அனுமதி உறுதி கொண்டு அனைய

ஏதிலாளனை வாதினால் வென்றும் இசைந்து

போதுவார் நகர் புகுந்து வேத்து அவைக் களம் புகுவார்.

3200. ஆய போது இளம் காலையில் கவுணியர் ஆல

வாயர் சேவடி பணிந்து தம் மடத்தினில் செல்லக்

காயும் மாதவச் செல்வனைக் கங்குல் சூழ்ந்தாங்கு

மாய வஞ்சகர் வந்து இடை வழித் தலை மறித்தார்.

3201. மறித்த கையர் பின் செல்ல முன் மன் அவைக் குறுகிக்

குறித்த வாளரித் தவிசின் மேல் கொச்சையர் பெருமான்

எறிந்த சேய் இளம் பரிதியின் ஏறி வீற்று இருந்தார்

பறித்த சீத்தலை புலையர்கள் பொறாது இவை பகர்வார்.

3202. மழலை இன்னமும் தௌ¤கிலா மைந்த கண் மணி ஒன்று

உழல் கருங்கொடி இருந்திடக் கனி உதிர்ந்தாங்கு உன்

கழல் கொள் விஞ்சையின் அன்மையான் மன்னனைத்

தொடுத்த

அழல இத்தனம் என்று நீ தருக்குறத் தகுமோ.

3203. நந்து நாகு நீர் வண்டு செல் நடை வழி எழுந்தாய்

வந்து வீழினும் வீழும் அவ் வழக்கு நின் கையற்று

சிந்து சாம்பரும் சிறு சொலும் மருந்து மந்திரம் போல்

சந்து சூழ் மலையான் சுரம் தணிந்தன கண்டாய்.

3204. உங்கள் மந்திரம் ஏடு ஒன்றில் தீட்டுக ஓர் ஏட்டு

எங்கள் மந்திரம் தன்னையும் தீட்டுக இரண்டும்

அங்கி வாய் இடின் வெந்தது தோற்றது அவ் அங்கி

நுங்கிடாது வென்றது என்று ஒட்டியே நுவலா.

3205. செக்கர் அம் சடையான் உறை பதிகளில் செய்யத்

தக்க தன் தவநிலை பிழைத்தும் நும் சார்வாய்

விக்க எம் மனோர்க்கு இயற்றுவான் வேறு ஒரு தலத்தில்

புக்கு அமர்ந்து தவம் செயப் போதுகம் என்னா.

3206. வென்றி மா முரசு உறங்கிட வியன் நகர்ப் புறம் போய்

மன்றல் வேம்பன் முன் கதழ் எரி மடுத்திடில் பிழைப்ப

தொன்று வேவது ஒன்று ஈது கொண்டு உமர்களும் எமரும்

இன்று வெல்வதும் தோற் பதும் காண்டும் என்று எழுந்தார்.

3207. ஈட்டு வஞ்ச நெஞ்சரே எழீ நகர்ப் புறம்பு போய்க்

கீழ் திசைக்கண் ஓர் அழல் கிடங்கு தொட்டு எழுந்து

வான்

நீட்டு கோடு அரம் குறைத்து நிறைய விட்டு நெட்டு எரி

மூட்டினார் மாதரார் வயிற்றும் இட்டு மூட்டினார்.

3208. ஞானம் உண்ட முனிவர் தம்மை எள்ளி எள்ளி நாயினும்

ஈனர் அங்கியை அடுத்து இருப்ப எண்ணாராயிரர்

ஆன தொண்டர் உடன் எழுந்து சண்பை வேந்தும்

அரசனும்

மானன் ஆர் மந்திரக் கிழானும் வந்து வைகினார்.

3209. உள் அவிழ்ந்த முலை சுரந்து ஒழுக்கு பால் அருந்தியே

துள்ளி ஓடும் கன்று பின் தொடர்ந்து செல்லும் ஆன் என

வெள்ளி அம்பலத்துள் ஆடும் வேதகீதர் காதல் கூர்

பிள்ளை போன வாறு தம் பிராட்டி யோடும் எய்தினார்.

3210. ஆறினோடு இரண்டு அடுத்த ஆயிரம் சமணரும்

வேறு வேறு தாம் முயன்ற மந்திரங்கள் வேறு வேறு

நீர் சுந்தர ஒலையில் பொறித்து ஒருங்கு போய்ச்

சீறி வான் நிமிர்ந்து எழுந்த தீயின் வாய் நிரப்பினார்.

3211. அக்கி வாய் மகுத்த ஏடு அனைத்தும் அக் கணத்தினே

இக்கு வாய் உலர்ந்த தோடு எனக் கரிந்து சாம்பராய்

உக்க வாறு கண்டு நீசர் உட்கிடந்து பொங்கவே

திக்கு உளார்கள் கண்டபேர் சிரித்து உளார்கள் ஆயினார்.

3212. விரிந்த வேத நாவர் தாம் விரித்த வேத மெய்ப் பொருள்

வரைந்த புத்தகத்தை வண் கயிற்றினால் வகிர்ந்து தாம்

அருந்த ஞான அமுது அளித்த அம்மை போகப் படத்

தெரிந்த ஏடு எடுத்து அடுத்த தீயின் வாயில் இட்டனர்.

3213. மறைப் புலப் படுத்த நூல் வரைந்த ஏடு அனந்த நாள்

அறை புனல் கிடந்ததாம் எனப் பசந்த அரசனும்

நிறை அமைச்சும் அரசியாரும் நின்றபேரும் அந்தணர்க்

இறைவரை புகழ்ந்து அளப்பு இல் இன்ப வெள்ளம்

மூழ்கினார்.

3214. வெந்த சிந்தை அமணர் வாது வெல்வதற்கு வேறு இடம்

புந்தி செய்து வந்த அப் பொதுத் தலம் பொதுக் கடிந்து

அந்தணாளர் வாது வென்ற அன்று தொட்டு ஞானசம்

பந்தன் என்ற நாமமே படைத்து உயர்ந்த இன்றுமே.

3215. அன்ன ஏடு முறையினோடு இறுக்கி அந்தணாளர் கோன்

மன்னை நோக்க வினையினோடு பாய் உடுத்த மாசர் தாம்

சொன்ன சூள் புலப்படத் துணிந்தும் வாய்மை நாண் ஓரி

இக்

கன்னி நாடன் அவை சிரிக்க ஆற்றலாது கத்துவார்.

3216. ஏட நாங்கள் எழுதி இட்ட பச்சை ஏடு எணாயிரம்

வீட வந்த நீ வரைந்து விட்ட ஓலை ஒன்றும் என்

வாடல் இன்றி நீரில் இட்ட வண்ணம் ஆனது ஆல் இது

உன்

பாடவம் செய் விஞ்சை கொண்டு பாவ கல் பிணித்ததே.

3217. உங்களேடும் எங்கள் ஏடும் உம்பர் வானளாய் விரைஇப்

பொங்கி ஓடும் வைகை நீரில் இடுக இட்ட போது தான்

அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை அன்றியே

துங்க வேலை செல்லும் ஓலை தோற்கும் ஓலை யாவதே.

3218. வென்று வீறு அடைந்தவர்க்கு வீறு அழிந்து தோற்றபேர்

என்றும் ஏவல் அடிமை ஆவது என்று இசைந்து கைதவக்

குன்று போலும் நின்ற குண்டர் கூறலோடும் ஈறு இலா

மன்று ஆடும் அடிகள் மைந்தர் வாய் மல்ர்ந்து பேசுவார்.

3219. அடியார் பதினாறாயிரவர் உள்ளார் சிவனை அவமதித்த

கொடியார் நீவிர் உமக்கு ஏற்ற தண்டம் இதுவோ

கொன்றை மதி

முடியார் அருளாள் உங்களை நாம் வென்றேம் ஆயின் மூ

இலை வேல்

வடிவான் நிரைத்த கழு முனை இடுவேம் அதுவே வழக்கு

என்றார்.

3220. ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள்

அ·து அறிந்து

சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத்

தொகுவித்துக்

காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப்

பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடு போய்

பரப்பினார்.

3221. தேறலாதார் தமைக் காழிச் செம்மல் நோக்கி இனி வம்மின்

நீறு பூசிக் கண்டிகையும் பூண்டு நிருத்தர் எழுத்து ஐந்தும்

ஊற ஒதிப் பாசம் ஒழித்து உய்மின் என்னா அற நோக்கிக்

கூறினார் மற்று அது கேட்டுக் குண்டர் எரியில் கொதித்து

உரைப்பார்.

3222. முன்பு தீயில் வென்றனமே நீரில் யாதாய் முடியும் என

அன்பு பேசி எமை இணக்கி அகல நினைத்தாய் அல்லதை

நீ

பின்பு வாது செயத் துணியும் பெற்றி உரைத்தாய் அல்லை

புலால்

என்பு பூணி அடி அடைந்த ஏழாய் போதி என மறுத்தார்.

3223. ஊகம் தவமும் பழு மரத்தை உதைத்துக் கரை மாறிட

ஒதுக்கிப்

பூகம் தடவி வேர் கீண்டு பொருப்பைப் பறித்துப் புடை

பரப்பி

மாகம் துழாவிக் கடுகிவரும் வைகைப் புனலை மந்திரத்தால்

வேகம் தணிவித்து ஏடு எழுதி விடுத்தார் முன் போல்

வெள்காதார்.

3224. சிறை ஏய் புனல் சூழ் வேணுபுரச் செல்வர் யாரும்

தௌ¤வு எய்த

மறையே வாய்மை உரையாய் இன் மறைக் கண் முழுதும்

துணி பொருள் தான்

பிறையேய் வேணிப் பிரான் ஆகில் பெரு நீர் எதிரே

செல்க என

முறையே பதிகம் எடுத்து எழுதி விட்டார் முழங்கி

வருபுனலில்.

3225. தேசம் பரவும் கவுணியர் கோன் விடுத்த ஏடு செழுமதுரை

ஈசன் அருள் ஆம் கயிறு பிணித்து ஈர்ப்ப நதியில் எதிர்

ஏற

நாசம் செய்யும் பொறிவழியே நடக்கும் உள்ளம் எனச்

சென்று

நீசரே எண்ணாயிரம் நீத்த வழியே ஒழுகிய ஆல்.

3226. சிங்கம் அனையார் எழுது முறை எதிர் ஆற்று ஏற

தெரிந்தமரர்

அம் கண் நறும் பூமழை பொழிந்தார் அறவோர் துகில்

விண் எறிது ஆர்த்தார்

கங்கை அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில்

அமிழ்ந்தினார்

வெம் கண் அமணர் நடுங்கி உடல் வெயர்வைக் கடலில்

அமிழ்ந்தினார்.

3227. வேமே என்பது அறியாதே வெல்வேம் என்றெ சூள் ஒட்டி

நாமே இட்ட ஏடு எரியில் வேவக் கண்டு நதிக்கு எதிரே

போமே இன்னம் வெல்வேம் என்று இட்ட ஏடும் புணரி

புகத்

தாமே தம்மைச் சுட நாணி நின்றார் அமணர் தலை தூக்கி.

3228. பொருப்பே சிலையாய் புரம் கடந்த புனிதனே

எத்தேவர்க்கும்

விருப்பேய் போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என

நான்கு

மருப்பேய் களிற்றான் முடி தகர்த்தான் மருமான் அறியக்

குருமொழி போல்

நெருப்பே அன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால்.

3229. பொய்யின் மறையின் புறத்து அமணர் புத்தர்க்கு அன்றி

வாய்மை உரை

செய்யும் மறை நூல் பல தெரிந்தும் சிவனே பரம் என்பது

அறியாதே

கையில் விளக்கினொடும் கிடங்கில் வீழ்வார் கலங்கி மனம்

ஐயம் அடைந்த பேதையர்க்கும் அறிவித்தனவே அவை

அன்றோ.

3230. கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய

வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும்

தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி

விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி

வியந்தனர் ஆல்.

3231. நன்றிதேறார் பின்பு உள்ள மானம் இழந்து நாண் அழிந்து

குன்று போலும் தோணி புரக் கோமான் எதிரே யாங்களும்

உமக்கு

இன்று தோற்றேம் எமை ஈண்டு நீரே வென்றீர் என

நேர்ந்து

நின்று கூறக் கவுணியர் கோன் அனையார் உய்யும் நெறி

நோக்கா.

3232. இன்னம் அறத்தாறு இசைக்கின்றே நீர் ஏன் வாள

இறக்கின்றீர்

அன்னை அனையான் எம் இறைவன் அவனுக்கு ஆளாய்

உய்மின்கள்

என்ன ஏட சிறியாய் நீ எவ்வாறு எங்கட்கு அடாத மொழி

சொன்னது என்று மானம் உளார் கழுவில் ஏறத்

தொடங்கினார்.

3233. மதத்தினின் மான மிக்கார் தாங்களே வலிய ஏறிப்

பதைத்திட இருந்தார் ஏனைப் பறி தலை அவரைச் சைவ

விதத்தினால் ஒழுக்கம் பூண்ட வேடத்தார் பற்றிப் பற்றிச்

சிதைத்து இடர் செய்து ஏறிட்டார் திரி தலைக் கழுக்கோல் தன்னில்.

3234. வழி வழி வரும் மாணக்கர் சாதற்கு வருந்தி நெஞ்சம்

அழிபவர் திரு நீறு இட்டார் அது கிட்டாது அயர் வார்

ஆவின்

இழிவு இல் கோமயத்தை அள்ளிப் பூசினார் இதுவும்

கிட்டாது

ஒழிபவர் ஆவின் கன்றைத் தோளில் இட்டு உயிரைப்

பெற்றார்.

3235. கூறிட்ட மூன்றும் கிட்டாது அயர்பவர் குற்றம் தீர

நீறு இட்டார் நெற்றியோடு நிருமல கோமயத்தின்

சேறு இட்டார் நெற்றியோடு நெற்றியைச் செறியத் தாக்கி

மாறிட்ட பாசம் தன்னை மறித்திட்டுப் பிறப்பை வெல்வார்.

3236. மற்று இவர் தம்மை ஊற்றம் செய்திலர் மடிந்தோர் யாரும்

சுற்றிய சேனம் காக நரிகள் நாய் தொடர்ந்து கௌவிப்

பற்றி நின்று ஈர்த்துத் தின்னக் கிடந்தனர் பரும யானை

வெற்றி கொள் வேந்தன் காழி வேந்தரைத் தொழுது

நோக்கா.

3237. இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே

சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன்

கூடல்

மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது

வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார்.

3238. செல்லு நர் காண ஓலை காவதம் செல்வது அப்பால்

ஒல்லை அங்கு ஒளித்தலோடும் வியந்து அவண் ஒருங்கு

கூடிக்

கொல்லையான் மேய்த்து நின்றார் சிலர் தமைக் குறித்து

நீர் இவ்

எல்லையுள் விசேடம் உண்டோ இவண் கண்டதிசை

மினென்றார்.

3239. அவ் இடைச் சிறார்கள் யாங்கள் ஒன்றையும் அறியேம்

என்ன

இவ்விடை விசேடம் காணல் வேண்டும் எத்திறத்தும்

என்னாத்

தெவ்விடை வாது செய்யத் திரு உளக் கருணை செய்த

வெவ்விடைக் கொடியினாரைப் பாடினார் வேத நாவார்.

3240. பாட்டின் மேல் கருணை வைத்தார் சயம்பு வாய்ப் பராரை

வில்லக்

காட்டினுள் இருப்ப நேரே கண்டு தாழ்ந்து எழுந்து

சண்பை

நாட்டினர் வலம் கொண்டு ஏத்தி எதிர் நின்றார்

நகைத்தார் நிம்பத்

தோட்டினான் அது கேட்டு அங்கே தோன்றினான்

தானை யோடும்.

3241. அந்த மா இலிங்கத்து ஈசன் ஆயிரம் மதியம் கண்ட

முந்தை வேதியராய்த் தோன்றி முத் தமிழுக்கு அரசை நீ

என்

மைந்தன் ஆம் இளையோன் ஒப்பாய் வருக என நீறு

சாத்திச்

சிந்தை நீள் ஆர்வம் கூரத் திரு அருள் சுரந்து நின்றார்.

3242. நின்ற அந்தணரை அன்று நிருமல ஞானம் ஈந்தார்

என்று கண்டு இறைஞ்சி ஐய நீரில் யான் இட்ட ஏடு

சென்றது இங்கு எடுத்தீர் நீரே அ·து நும் செல்வர்க்கு

ஏற்ற

அன்று அதைத் தருதி என்றார் அறுமுகச் செம்மல்

அன்னார்.

3243. இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும்

புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு

பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி

மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர்.

3244. தாதையார் கவர்ந்து மீளத் தந்த ஏடு அதனை வாங்கிப்

போதையார் ஞானம் உண்டார் புரிசடைப் பிரானார்

வெளவி

ஈதை யாம் இரந்து வேண்டத் தந்தனர் என்று கூறிக்

கோதை ஆர் வேலினார்க்குக் காட்ட அக் கொற்கை

வேந்தன்.

3245. கச்சு ஆன அரவம் ஆர்த்த கருணை அம் கடலில்

தோன்றும்

விச்சான ஞானம் உண்டீர் ஆற்றலின் விளைவு தேறாது

அச்சான வலியான் உம்மை அளந்தனன் அடியேன் இந்தக்

துச்சான பிழைதீர்த்து ஆள்க என்று இறைஞ்சினான்

துணர்த்தார் வேம்பன்.

3246. அந் நெடு மேரு ஆகும் ஆடகச் சிலையினார்க்குப்

பொன் நெடும் சிகரக் கோயின் மண்டபம் புயலைக் கீண்டு

மின் நெடும் மதியம் சூடும் கோபுர மேகம் தாவும்

கல் நெடும் புரிசை வீதி யாவையும் களிப்பக் கண்டான்.

3247. அற்றை நாள் ஆதி ஆக வேடகம் என்னும் நாமம்

பெற்றதால் ஏடகத்தின் மேவிய பிரானைப் பாண்டிக்

கொற்றவன் சமண ரோடும் கூடிய பாவம் எல்லாம்

பற்று அறப் பூசை செய்து பாசமும் கழியப் பெற்றான்.

3248. நறை கெழு துழாயினானும் கலுழனும் நாகர் வேந்தும்

முறையினால் உகங்கள் மூன்றும் பூசித்து முடியா இன்ப

நிறை அருள் பெற்றார் அன்ன நிரா மய இலிங்கம்

தன்னை

இறுதியா முகத்தில் பாண்டி இறை மகன் பூசை செய்தான்.

3249. அம் கண் மா நகர் கண்டு ஆங்கு ஓர் ஆண்டு இறை

கொண்டு காழிப்

புங்கவ ரோடும் பின் நாள் பூழியர் பெருமான் மீண்டு

மங்கல மதுரை சேர்ந்து வைகும் நாள் நீற்றுச் செல்வம்

எங்கணும் விளங்கச் சின்னாள் இருந்து பின் ஞானச்

செல்வர்.

3250. வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்

கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான்

தன்னை

இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும்

பெற்று

விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு

போவார்.

3251. தன் பெரும் கற்பினாளும் அமைச்சனும் தமிழ் நர் கோனும்

பின்பு முனம் தண் காழிப் பிரான் அடி பிரிவு ஆற்றார்

ஆய்

அன்பு தந்தவர் பால் நட்ட அன்று தொட்டு ஆனாக்

கேண்மை

இன்பமும் துன்பம் ஆகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார்.

3252. சண்பையர் தலைவர் தாமும் அனையராய்த் தம்பின்

செல்லும்

நன்புடையவரை நோக்கி நம் இடத்து அன்பு நீங்காப்

பண்பினர் ஆகி நீறு பாதுகாத்து ஈசன் கீர்த்தி

மண் பட வாழ்மின் இது மறுக்கன் மின் நின்மின் என்றார்.

3253. ஆள்உடைப் புகலி வேந்தர் அருண்மொழி மறுக்க

அஞ்சித்

தாள் உடைப் பதுமச் செந்தாள் தலை உறப் பணிந்து

மீண்டு

வாள் உடைத் தானைத் தென்னன் மதுரையில் வந்தான்

கஞ்சத்

தோள் உடைச் சிங்கம் அன்னார் சோழர் கோன் நாடு

புக்கார்.

3254. ஞானமா மதநீர் சோர ஞான சம்பந்தர் என்னும்

மானமா யானை வந்து கடம்பமா வனத்தில் துன்னும்

ஊனம் ஆம் சமணர் என்னும் தருக்களை ஒடித்து

வெண்ணீறு

ஆன மாப் பூழி அள்ளித் தூற்றியது அவனி எங்கும்.

3255. ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச்

சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில்

பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப்

பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி.

சமணரைக் கழுவேற்றிய படலம் சுபம்

Link to comment
Share on other sites

தம்பி நாரதா! உன்னுடைய கட்டுக்கதைக்கு இந்த கட்டுரை மூலம் முற்று புள்ளி வைக்கப்படும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22942

தம்பி நாரதா! அறியாமை தவறு அல்ல. இந்தக் கட்டுரையை படித்து அறிந்து கொள்.

கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!!

தம்பி ஆறுமுகா,

உன்னுடைய கட்டுக் கதைகளையும் யாழ்ப்பாணத்து ஆறுமுகம் இட்டுக் கட்டிய நிகண்டு பற்றிய திருவிளயாடலையும் சேர்த்தே இணைதிருக்கிறேன், கற்றுக் கொள்.

//கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!!//

அதே அதே ,கற்றுக் கொள். :lol:

Link to comment
Share on other sites

7. சமயப்போர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதமும், ‘தேரவாதம்’ எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் ‘திராவிட மதம்’ என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

மேற்சொன்ன ‘ஆருகதம்,’ ‘வைதீகம்’, ‘பௌத்தம்’, ‘ஆசீவகம்’ ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.

தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.17 ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.

‘‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்

பற்றா மாக்கள் தம்முட னாயினும்

செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’’

(மணிமேகலை, 1 - காதை 60-63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.

சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டிவைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஓட்டிவிட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான்.18 இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.

கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர்.19 இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.

இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தௌ¤வாக்குகின்றன.

இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவையாகும்:- வைதீகர் கொலை வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், ‘‘சுவர்ணதானமே, «க்ஷத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே கன்னியா தானமே’’ என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டுவந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவுபெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.

வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள். வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப்போன்று கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவுதானத்தைமட்டும் சிறிதளவு பெற்றுவந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன.

ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. (கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கி.பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர்20 காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தபிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங்காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து’ மதமும் ‘பக்தி’ இயக்கமுந்தான். இப்புதிய ‘இந்து’ மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

பண்டைக் காலத்திலே, வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட’ மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர். உயிர்ப்பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைக் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.

குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்த தென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி யாது எனின்: தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தறுவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அஃதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.

ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது. சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர்’ என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்னும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகப் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து’ மதம் என்பது. இப்புதிய ‘இந்து’ மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும்.

இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து’ மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய ‘இந்து’ மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து’ மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து’ மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது.

‘பக்தி’ இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ‘இந்து’ மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து’ மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடுதற் கென்க.

அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,’ ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,’ ‘செந்தமிழோ டாரியனைக் சீரியனை,’ ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், ‘அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,’ ‘அந்தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை’ என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க’ என்றும், ‘சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க’ என்றும், ‘அருமறைச் சைவந் தழைப்ப’ என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறியொடுந் தழைப்ப’ என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு ‘அகச் சமயம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், ‘பக்தி’ இயக்கத்தின் துணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமண சமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று.

‘இந்து’ மதம் சமண சமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

________________________________________________________________________________

____________________________

17. ஆசீவக மதத்தின் வரலாற்றினை இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் காண்க.

18. மணிமேகலை: 13 ஆம் காதை.

19. மணிமேகலை, 5 ஆம் காதை, 32-55

20. Ep. Ind. Vol iii, P186, Ep.Rep.1904-05, P.57.

8. சமணசமயம் குன்றிய வரலாறு

இந்து மதத்தில் ‘பக்தி’ அல்லது ‘அன்பு’ இயக்கம் தோன்றிய பின்னர், இந்துமதம் சமண மதத்தை எதிர்க்க ஆற்றல் கொண்டது என்று கூறினோம். பக்தி இயக்கம் எவ்வாறு சமணசமயத்தின் செல்வாக்கினை அழிக்க முடிந்தது என்பதைக் கூறுவாம். இச் செய்தியை அறியவேண்டுமானால், முதலில் ‘வீடு’ அல்லது ‘மோட்சம்’ என்னும் உயர்நிலை அடைவதற்கு இவ்விரு சமயத்தவரும் கொண்டுள்ள கொள்கைகள் இன்னவை என்பதை அறியவேண்டும். ஆதலின், வீட்டு நெறியைப் பற்றி இவ்விரு சமயத்தவரின் கருத்து இன்னதென்பதை விளக்குவாம்.

சமண சமயத்தவர் கொள்கை இது: அருகப் பெருமான் விருப்பு வெறுப்பு அற்றவர். தம்மாட்டுப் பக்தி (அன்பு) செய்வோரிடத்தும் செய்யாதவரிடத்தும் உவப்பு வெறுப்பு இன்றி ஒரு தன்மைத்தாக இருக்கின்றார். தம்மை வணங்கித் தம்மாட்டுப் பக்தி செய்வோரின் பாவ புண்ணியங்களைப் போக்கி அவர்களுக்கு வீடு பேறளிப்பது விருப்பு வெறுப்பு அற்றவராகிய அவரது இயல்பு அன்று. மக்கள் வீடுபேறடையும் வழியை அவர் அருளிச் செய்திருக்கின்றார். அந்நெறியைக் கடைப்பிடித் தொழுகி முயற்சி செய்தால் அவரவர் வீடுபேறடையக் கூடும். துறவிகளுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தாரும் மகளிரும் நல்வினை செய்வாராயின், தெய்வப் பிறவி பெற்றுச் சுவர்க்க பதவி பெற முடியுமேயன்றி வீடுபேறு அடைய முடியாது (சுவேதாம்பர சமணர்களுக்குப் பெண் மகளிரும் வீடுபேறடைய முடியும் என்னும் கொள்கை உண்டு.) சமணசமய நூல்களில் கூறப்பட்ட யதிதருமப்படி ஒழுகினால் துறவிகள் மோட்சமடையப் பெறுவர். அவர்கள் அருகக் கடவுள் மாட்டுச் சரண் அடையவேண்டும். மோட்ச நெறிக்குத் துணையாக நிற்பது அறவொழுக்கம் ஒன்றுதான். இவ்வற வொழுக்கத்தையும் தவத்தையும் துணையாகப் பற்றிக்கொண்டு அவரவர் தமது முயற்சியாலேயே வீட்டுலகைக் கைப்பற்றவேண்டும்.

‘‘கறங்கின் உழலுங் கதிதோறும் துன்பம்

பிறங்கும் பிறப்பஞ்சி வாழ்மின் - சிறந்த

பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளெனும் துன்பம்

உறுப்புணர யானுழக்குங் காலை - அறத்திறஞ் சேர்ந்(து)

யானாம் ஒருவனே யல்லது எனக்கு மற்(று)

ஏனோர் துணையல்லவர் என்றறிமின்.’’

என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் இக் கருத்தை நன்கறியலாம். இதனால், அருகக் கடவுள் மாட்டுப் பக்தி செலுத்தினால் மட்டும் வீடுபேறடைய முடியாது என்பதும், சமணசமய நெறியைப் பின்பற்றி ஒழுகி இருவினை யறுத்து வீடுபேறடைய வருந்தி முயற்சி செய்ய வேண்டும் என்பதும் விளங்குகின்றன.

சைவ வைணவராகிய ‘இந்து’க்களின் கொள்கை இது: துறவிகளும் இல்லறத்தாரும், பெண் மகளிரும், மோட்சம் அடையலாம். ‘பக்தி’ மட்டும் இருந்தால் போதும். துறவு பூண்டு தவம் செய்யாமலே ‘பக்தி’ ஒன்றினாலேயே முக்தியடையலாம். ‘பக்தியால் முக்தி எளிதாகும்.’ சிவபெருமான் திருவடி, ‘பரவுவார் பாவம் பறிக்கும் அடி’ எத்தகைய பாதகம் செய்தவராக இருந்தாலும், அவர்கள், கடவுள் மாட்டுப் பக்தி செய்வாராயின் அவர் பாவங்களைக் கடவுள் நீக்கிவிடுவது மட்டும் அன்றி மோட்சமாகிய வீட்டுலகத்தையுங் கொடுக்கின்றார். ஆனால், பக்தி செய்யவேண்டும். பக்தி செய்யாதவருக்கு அவர் அருள் செய்கிறதில்லை. இதுவே இந்து மதத்தின் கொள்கை. இக் கருத்தை இந்துமதப் பெரியார்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

‘‘திருமறு மார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து

மருவிய மனத்த ராகில் மாநிலத்து உயிர்க ளெல்லாம்

வெருவுறக் கொன்று சுட்டிவிட்டு ஈட்டிய வினையரேனும்

அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகருள் ளானே.’

(நாலாயிரம், திருமாலை, 39)

‘மறிந்தெழுந்த தெண்திரையுள் மன்னும்மாலை

வாழ்த்தினால்

பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.’

(நாலாயிரம், திருச்சந்த விருத்தம். 74)

‘தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு

வாமனன் அடிக்கென்றேத்த மாய்ந்தறும் வினைகள்தாமே’

(நாலாயிரம் திருவாய்மொழி 10, பாட்டு 9)

‘‘வினைவல் இருள்எனும்

முனைகள் வெருவிப்போம்

சுனைகள் மலர்இட்டு

நினைமின் நெடியானே.’’

(நாலாயிரம் 5, திருவாய்மொழி, 10)

‘ஓது வேதிய னார்திரு வொற்றியூர்

பாத மேத்தப் பறையும்நம் பாவமே.’ (தேவாரம் - அப்பர்)

‘உரைசெய் நூல்வழி யொண்மலர் இட்டிடத்

திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்.’

(தேவாரம் - அப்பர்)

‘கச்சிளவர வசைத்தீர் உமைக் காண்பவர்

அச்சமோ டருவினை யிலரே.’ (தேவாரம் - சம்பந்தர்)

‘தாழ்சடை முடியீர் உமைக் காண்பவர்

ஆழ்துயர் அருவினை யிலரே.’ (தேவாரம் - சம்பந்தர்)

‘பிண்டம் அறுப்பீர்காள்!

அண்டன் ஆரூரரைக்

கண்டு மலர் தூவ

விண்டு வினை போமே.’ (தேவாரம் - சம்பந்தர்)

இதுபோன்று மேற்கோள்களை ஏராளமாகக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றோம். இதனால் சைவ வைணவராகிய ‘இந்து’க்களுக்குப் பக்தி ஒன்றினாலேயே மோட்சம் பெற இயலும் என்னும் கொள்கை உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என அறியப்படும். அன்றியும் இல்லறத்தார்க்குச் சுவர்க்க பதவி தவிர வீடுபேறு கிடையாது; துறவறத்தார்க்கே வீடுபேறு உண்டு என்னும் சமண சமயக் கொள்கையை மறுத்து, இல்லறத்தாருக்கும் வீடுபேறு உண்டு என்னும் இந்துமதக் கொள்கையைத் திருஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

‘பிறவியால் வருவன கேடுள ஆதலாற் பெரிய இன்பத்

துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே!

மறவல்நீ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி

அறவனார் ஆரூர் தொழுதுய்யலாம் மையல்

கொண்டஞ்சல் நெஞ்சே.’

‘தந்தை தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர்,

தாரம் என்னும்

பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில் எனப் பற்றினாயே!

வெந்த நீறாடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்

எந்தை ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டஞ்சல்

நெஞ்சே’ (சம்பந்தர்-2 திருவாரூர்.)

இவ்வாறு, துறவறத்தாரும் இல்லறத்தாரும் ஆண்பாலரும் பெண் பாலரும் கடவுள் மாட்டுப் பக்தி மட்டும் செய்வாராயின் அவர்களுக்கு மோட்சம் உண்டு என்று இந்துமதம் பறை சாற்றியது. இவ்வளவு எளிய முறையில் யாதொரு வருத்தமுமின்றி வீட்டுலகத்திற்குச் செல்ல வழியைக் காட்டினால் அதனை மக்கள் விரும்பாதொழிவரோ? புதிய இந்து மதம், ‘பக்தியால் முத்தி எளிதாகும்’ என்னும் எளிய வழியைக் காட்டிச் செல்வாக்குப் பெற்றது. எளிய வழியைக் காணப்பெற்ற மக்கள், இதற்கு மாறாக உள்ள, மனைவி மக்களை வீட்டு, உலக இன்பங்களைத் துறந்து ஐம்புலன்களையும் அடக்கிக் கடுந்தவம் புரிந்து இருவினையுங் கெடுத்து ஞான வீரனாய் வீட்டுலகத்தை வெற்றியோடு கைக்கொள்ளும் சமண மோட்ச வழியைப் பின்பற்றுவரோ? ஆகவே, உலகம் ‘பக்தி’ செய்து ‘முக்தி’ பெற இந்துமதத்தைப் பின்பற்றத் தொடங்கியது. ஆகவே இந்துமதத்தின் பக்தி இயக்கம் சமண சமயத்தின் செல்வாக்கைப் பெரிதும் குறைத்துவிட்டது என்று துணிந்து கூறலாம்.

ஆனால், இந்து மதத்தின் பக்தி இயக்கம் ஒன்றினாலேயே சமணசமயம் தனது முழுச் செல்வாக்கையும் இழந்துவிட்டதாகக் கருதவேண்டா, சமணசமயத்தின் செல்வாக்கை யழிக்க இந்துமதத்தார் வேறு முறைகளையும் கையாண்டனர். அறநெறி அல்லாத மறநெறிகளையும், செம்மை முறைக்கு மாறுபட்ட முறைகளையும், கொடுஞ் செயல்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபடியினாலே சமண சமயம் முழுவதும் செல்வாக்கு இழந்துவிட்டது. இதற்குச் சான்றுகள் உள்ளன.

பக்தியிக்கம் இந்து மதத்தில் தோன்றிய பிறகு, இந்துக்களாகிய சைவ வைணவர் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் சமயப் பகை மேன்மேலும் காழ்ப்புக் கொண்டது. சமணர்மேல் வசை மொழிகளையும் இழிசொற்களையும் இந்துக்கள் அர்ச்சனை செய்தபடியினாலே சமணர்களுக்கு இவர்கள்மேல் சீற்றம் வருவது இயல்புதான். ஆகவே, சமணர் சைவ வைணவக் கோயில்களைக் காண்பதும், சைவ வைணவக் கடவுள்களைப் பற்றிக் கேட்பதும் ‘‘பாவம்’’ என்று கருதினார்கள். இதனைச் சமணர் ‘‘கண்டு முட்டு, கேட்டு முட்டு’’ என்பர்.

‘‘நீற்று மேனிய ராயினார் மேலுற்ற

காற்றுக் கொள்ளவு நில்லா வமணர்’’

என்று திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுவது காண்க. இவ்வாறு சமயப்பகை முற்றிக் காழ்ப்புக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் சைவ வைணவ ஆழ்வார்கள் தோன்றி நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து சைவ வைணவ சமயத்துக்கு ஆக்கம்தேட முயன்றார்கள். அவரவர் சமயத்தை அவரவர் பிரசாரம் செய்வது தவறன்று. ஆனால், மற்றவர் சமயத்தைக் குறை கூறுவதும் மற்றச் சமயத்தவருக்கு இடையூறுகளும் துன்பங்களும் உண்டாக்குவதும் கலகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகும். ஆகவே சமயப் போராட்டங்களும் கலகங்களும் நடைபெற்றன. இந்தச் சமயப் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற காலம் கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளாகும்.

தேவாரப் பாடல்பெற்ற திருப்பதிகளின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் அப்பதிகளில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் குடியிருந்ததையும் பௌத்த சமணப் பள்ளிகளும் அங்கிருந்ததையும் அறியலாம். அக்கோயில்கள் பிற்காலத்தில் அழிந்து மறைந்துவிட்டன.

கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சமயப்போர் தமிழ் நாட்டில் மும்முரமாக நடைபெற்றது என்று கூறினோம். அந்தச் சமயப் போர் முக்கியமாக மூன்று மதங்களில் நிகழ்ந்தது. ‘‘இந்து’’ மதத்துக்கும் சமணசமயத்துக்கும், இந்து மதத்துக்கும் பௌத்த மதத்துக்கும், பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் ஆக மும்முனைப் போர் ஆக நடைபெற்றது. இந்துக்கள் சமணரையும் பௌத்தரையும் தாக்கினார்கள். சமணர் இந்துக்களையும் பௌத்தர்களையும் தாக்கினார்கள். பௌத்தர் இந்துக்களையும் சமணர்களையும் தாக்கினார்கள். இவ்வாறு ஒரே காலத்தில் மும்முனைப்போர் நடந்தது. இந்தப் போரில் இந்து மதம் பௌத்த மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை எமது ‘‘பௌத்தமும் தமிழும்’’ என்னும் நூலில் கூறியிருக்கிறோம். இங்கு ‘‘இந்து’’ மதம் சமண மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை ஆராய்வோம்.

இந்தச் சமயப்போர் நடந்த காலத்திலே இந்துமதம் சைவம் வைணவம் இரண்டு என்னும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்பட்டதுபோல் பெரிய பிளவு ஏற்பட்டுச் சைவ வைணவப்போர் நிகழ்ந்தது போல அல்லாமல் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருந்து சமணசமயத்தையும் பௌத்த மதத்தையும் கடுமையாகத் தாக்கின. (பிற்காலத்தில் மும்முரமாக நடந்த சைவ வைணவப் போராட்டம், பௌத்த சமண சமயங்கள் பெரிதும் ஒடுங்கிப்போன காலத்தில் நடந்தது.)

சமணசமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்தல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்தவரைக் காண்கிறோம். இவ்வாறு இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள. இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம்.

‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்

சாக்கியர்கள் நின்பால்

பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக்

குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே

அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’’

என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.

திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரைக் கழுவேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும், இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரந் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்துநாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.

காஞ்சிபுரத்துக்கடுத்த திருவோத்தூரிலும் இதுபோன்ற கலகம் நடந்திருக்கிறது. அவ்வூரில் ஒரு சைவர் பனை மரங்களை நட்டுவளர்க்க, அம்மரங்கள் வளர்ந்து ஆண் பனையாயிருக்க, அங்கிருந்த சமணர் அதைக்கண்டு ‘இவ்வாண்பனைகள் பெண்பனை ஆகுமோ?’ என்று கேட்டாராம். மதுரைக்குச் சென்று வந்த ஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இந்தச் சைவர், ஆண்பனைகளைப் பெண் பனைகளாகச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு இணங்கி ஞானசம்பந்தர் பதிகம்பாடினார் என்றும், பொழுது விடிந்தவுடன் அப் பனைமரங்கள் ஆணாக இருந்தவை பெண் பனைகளாக மாறிப் பனங்காய்களைக் காய்த்தன என்றும், இதைக் கண்ட சமணர் அந்த ஊரைவிட்டு ‘ஓடி’ விட்டனர் என்றும், பெரியபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக அந்தத் திருவோத்தூர்ச் சிவன் கோயிலில் சமணரைக் கழுவேற்றுதல் போன்ற சிற்ப உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்விதக் கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமலிருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர்க் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்று அங்குச் சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தவை.

இதுபோன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டிலே பழையாறை என்னும் இடத்திலே அப்பர் சுவாமிகள் சென்றபோது நடைபெற்றதாகத் திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலைக் கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலை மீண்டும் சைவக் கோயிலாக்க எண்ணினார். அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தைக் கண்டு வணங்காமல் உணவுகொள்ளமாட்டேன் என்று சூளுரைத்து உணவுகொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை ஆழிக்கும்படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.

அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர், திருவாரூரிலும் இத்தகைய சைவ - சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுத்தப்பட்டுத் துரத்தப்பட்டதோடு, அவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பெரிய புராணம் கூறுகிறது.

இப்போது திருவாரூர்த் திருக்குளம் மிகப் பெரியதாகவும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. இத்துணைப் பெரிய குளம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால், தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே - அந்தக் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்குடனும் ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர்-; இந்தக் குளம் மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும் மடங்களும், பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பெரிய குளமாகத் தோண்டவேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவ நாயனார் முயற்சி செய்தார். இந்தச் செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது.

‘‘செங்கண் விடையார் திருக்கோயில்

குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு

எங்கும் அமணர் பாழிகளாய்

இடத்தால் குறைபா டெய்துதலால்

அங்கந் நிலைமை தனைத்தண்டி

யடிகள் அறிந்தே ஆதரவால்

இங்கு நானிக் குளம்பெருகக்

கல்ல வேண்டும் என்றெழுந்தார்.’’21

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடைய நிலங்களும் கட்டிடங்களும் உள்ளன. குளத்தைப் பெரியதாகத் தோண்ட வேண்டுமானால், குளக்கரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும். தண்டியடிகள், சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் விலை கொடுத்து வாங்கியபிறகு குளத்தைப் பெரியதாகத் தோண்டவில்லை. குளத்தைப் பெரியதாகத் தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும் கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள்; வழக்கம்போலக் கலகம் ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி, ‘‘தண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்தது’’ கலக்கம் மட்டும் நிகழவில்லை; கலகமும் நடந்தது. ஏனென்றால், சிவபெருமான் அரசன் கனவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார். அரசன், சமணரை ஊரைவிட்டுச் துரத்திய பின்னர், அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தோண்டினான். இதனைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது.

‘‘அன்ன வண்ணம் ஆரூரில்

அமணர் கலக்கம் கண்டவர்தாம்

சொன்ன வண்ண மே அவரை

ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்

பன்னும் பாழிப் பள்ளிகளும்

பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து

மன்ன னவனும் மனமகிழ்ந்து

வந்து தொண்டர் அடிபணிந்தான்.’’22

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய கலகங்களும் கொடுமைகளும் சச்சரவுகளும் போராட்டாங்களும் நிகழ்ந்துவந்தன. சமயப்போர் - இல்லை, சமய வெறி - எல்லா நாட்டிலும் பெருந் தீங்கு செய்துள்ளது.

கிறித்துவர்களை உரோமர்கள் செய்த கொடுமைகளும், முஸ்லிம்- கிறிஸ்துவ மதப் போர்களும், செய்துள்ள துன்பங்களும் கொடுமைகளும் சொல்லி முடியா. இவ்வாறே, நமது நாட்டிலும் சமய வெறியர்கள் நிகழ்த்திய கொடுஞ் செயல்கள் கணக்கில. இவ்வாறெல்லாம் துன்பங்களும் கொடுமைகளும் நிகழ்ந்தபடியி னாலே நாளடைவில், சமணசமயம் செல்வாக்கிழந்து நிலை குன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத சமணர்களில் பெரும் பான்மையோர் மதம் மாறினார்கள். அஃதாவது சமண சமயத்தை விட்டுச் சைவர்களாகவும் வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

சைவ வைணவராகிய இந்துக்கள் எல்லாப் பழியையும் சமணர்மேல் சுமத்தினார்கள் என்பது, ‘‘போம் பழியெல்லாம் அமணர் தலையோடே’’ என்னும் பழமொழியினால் அறியலாம். வைணவராகிய திருவாய்மொழி விளக்க உரைகாரர், இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதை எழுதுகிறார். அந்தக் கதை இது:

‘‘ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹகத்திலே கன்னமிட, அது ஈரச்சுவராகையாலே இருத்திக்கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்து பிராமணனைப் பழிதரவேணுமென்ன, இரண்டு திறத்தாரும் ராஜாவின் பாடேபோக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகையாலே, ‘ப்ராஹ்மணா! நீரீரச்சுவரை வைக்கையாலே யன்றோ அவன் மரித்தான். ஆகையாலே நீ பழி கொடுக்கவேணும்’ என்ன, அவன் ‘எனக்குத் தெரியாது. சுவரை வைத்த கூலியாளைக் கேட்கவேணும்’ என்ன, அவனை அழைத்து, ‘நீயன்றோ ஈரச்சுவர் வைத்தாய்; நீ பழி கொடுக்கவேணும்’ என்ன, அவனும் ‘தண்ணீரை விடுகிறவள் போரவிட்டாள்; என்னாற் செய்யவாவது என்?’ என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் ‘குசவன் பெரும்பானையைத் தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று’ என்ன, அவனை அழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேஸ்யை போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கவே பானை பெருத்தது’ என்ன, அவளையழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான் புடவை தராமையாலே போகவரத் திரிந்தேன்’ என்ன, அவனை யழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் அன்று; துறையில் கல்லிலே ஓரமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று’ என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, ‘நீயன்றோ இத்தனையும் செய்தாய்; நீ பழிகொடுக்க வேணும்’ என்ன, அவனும் மௌனியாகையாலே பேசாதிருக்க என்ன, ‘உண்மைக்குத்தரமில்லை என்றிருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்’ என்று ராஜா அவன் தலையை யரிந்தான்.’’

இது கட்டுக் கதையே, ஆனாலும், மற்றச் சமயத்தார் சமணர்மேல் பழி சுமத்தினார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். சோழருடைய தலைநகரமாகிய உறையூர் மண்மாரி பெய்து அழிந்துபோனபோது, அதனைச் சமணர் தமது மந்திர சக்தியினால் அழித்தார்கள் என்று அவர்கள்மீது பழி சுமத்தியதையும் மற்றும் அபவாதங்களையும் இந்நூலில் மற்றோர் இடத்தில் காண்க.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சி வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு செய்தியைக் கூறி இதனை முடிப்போம். கி.பி. 1478 இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் ‘துமால் கிருஷ்ணப்ப நாயகன்’ என்னும் பெயர் உண்டு. இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்ட தெலுங்கு இனத்தவன். இவன், உயர்ந்த குலத்தவரான ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மனைவியை மணக்கவேண்டும் என்று எண்ணங் கொண்டு, முதலில் உயர்ந்த குலத்தவரான பிராமணர்களை அழைத்து, தனக்கு ஒரு பிராமணப் பெண்ணை மனைவியாகத் தரவேண்டும் என்று கேட்டான். தங்களை விடத் தாழ்ந்த இனத்தவனாகிய இவனுக்குப் பெண் கொடுக்கப் பிராமணர் இசையவில்லை. மறுத்துக்கூறவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் நியாய அநியாயம் அறியாத மூர்க்கன். ஆகவே, பிராமணர்கள் இந்தத் தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும், சமணர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கி விடவும் யோசனை செய்து, அரசனிடம் சென்று, ‘‘சமணர்கள் பிராமணர்களைவிட உயர்ந்த இனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண் கொடுக்கிறோம்,’’ என்று கூறினார்கள். அரசன் சமணரை அழைத்துத் தனக்கு ஒருத்தியை மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். தாழ்ந்த இனத்தானாகிய இவனுக்குச் சமணர் பெண் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூர்க்கனாகிய இவனிடம் மறுத்துக் கூறினால் துன்பம் செய்வான் என்று அஞ்சினார்கள். கடைசியாக அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். சமணப் பிரபு ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்துகொண்டு போகலாம் என்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்களுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான். ஆனால், அவன் கண்டதென்ன? அவ்வீட்டில் ஒருவரும் இலர். கலியாணப் பந்தல் மட்டும் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ஒரு பெட்டை நாய் கட்டப்பட்டிருந்தது!

பெண் கொடுப்பதாகத் தெரிவித்த சமணப் பிரபு அந்த ஊரைவிட்டு வேறு நாட்டிற்குப் போய்விட்டார். செஞ்சி மன்னன் தன்னைச் சமணர் அவமானப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்தான். சமணரைக் கொல்லும் படி கட்டளையிட்டான். சேவகர் செஞ்சி நாட்டிலிருந்தே சமணரைக் கொன்றனர். இதைச் சுமந்தான் தலைபத்து என்று கூறுவார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட சமணர் பலர் வேறு நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். பலர் பூணூலை அறுத்துப் போட்டுச் சைவசமயத்தில் சேர்ந்து விபூதி பூசிக்கொண்டார்கள்; (இவர்கள் நீறுபூசி வேளாளர் என்று கூறப்பட்டனர்.) பெண் கொடுப்பதாகச் சொல்லி வேறு நாட்டிற்குச் சென்ற சமணப் பிரபுவின் சந்ததியார் இப்போதும் சைவசமயத்தவராகவே இருக்கிறார்கள்.

இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் வீரசேனாசாரியார் என்னும் பெயருள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். இதனைக் கண்ட அரச சேவகர் அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள்.

அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தபடியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதலை செய்து விட்டான். தமது தலைபோவது உறுதியென்று நம்பியிருந்த வீரசேனாசாரியார் விடுதலை செய்யப்பட்டபோது மறுபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் நேரே மைசூரிலுள்ள சிரவணபௌகொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அங்குச் சமண சமய நூல்களை நன்கு ஓதினார்.

செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக்கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார்பாளையம் குறுநில மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். குறுநில மன்னர் இவருக்கு நிலபுலன்கள் அளித்து ஆதரித்தார். உடையார் பாளையத்தில் தங்கியிருந்த காங்கேய உடையார், சிலகாலங் கழித்து மைசூரில் உள்ள சிரவண பௌகொள மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியாரை அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்களை மீண்டும் சமண மதத்தில் சேர்ப்பித்தார். வீரசேனாசாரியார், சமண முறைப்படி அவர்களுக்குப் பூணூல் அணிவித்துத் தீக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார்.

காங்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாயனூரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம்பரையினராகையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செய்து வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் சமணர் பற்பல காலத்தில் பற்பல துன்பங்களை அடைந்தார்கள். ஆனால், பௌத்த மதம் தமிழ் நாட்டில் அடியோடு அழிந்து விட்டதுபோலச் சமண மதம் முழுவதும் மறைந்து விடவில்லை. சமணர் தமிழ் நாட்டில் இன்றும் சிறு தொகையினராக இருந்து வருகிறார்கள்.

சமயப்போர் கடுமையாக நடந்த காலத்திலும் சமணசமயம் குன்றிய காலத்திலும் சமணரிற் பெரும்பாலோர் ‘‘இந்து’’ மதத்தில் சேர்ந்து சைவராகவும் வைணவராகவும் மதம் மாறிவிட்டனர். இவ்வாறு இந்து மதத்தில் புகுந்த சமணர் வாளா வெறுங்கையோடு வந்துவிடவில்லை. சைவ வைணவராக மாறிய சமணர் தம் சமண சமய ஒழுக்கங்களையும் கொள்கைகளையும் இந்து மதத்தில் புகுத்தி விட்டார். ஏற்கெனவே, திராவிட வைதீக மதங்களின் கொள்கைகள் கலக்கப் பெற்றுப் புதிய உருவடைந்த இந்து மதத்தில் இன்னும் புதியதாகச் சமணக் கொள்கைகளும் கலக்கத் தொடங்கின. இதனோடு நின்றபாடில்லை. இக்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்த பௌத்த மதத்தினரும் இந்து மதத்தோடு சேரத் தொடங்கி அவர்களும் தம் சமயக் கொள்கைகளிற் சிலவற்றைப் புதிய இந்து சமயத்துடன் சேர்த்து விட்டார்கள்.23 இவ்வாறு, இந்து மதத்தில் புதிய புதிய கொள்கைகள் கலக்கப்பெற்று இந்துமதம் பலவாறு மாறுதல் அடைந்து கொண்டிருந்தது. சமணர் சைவ வைணவராகி இந்து மதத்தில் புகுத்திய சமணசமயக் கொள்கைகளை ‘இந்து மதத்தில் சமண சமயக் கொள்கைகள்’ என்னும் அதிகாரத்தில் காண்க.

இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.

_____________________________________________________________________________

21. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள் புராணம்.

22. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள், 27.

23. இச்செய்தியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் நூலிற் காண்க.

Link to comment
Share on other sites

அட பாவிகளா நம்ம சமயத்தில இம்மட்டு இருக்கா?

நமக்கு சாமியும் கோயிலும்தான் தெரியும் இதெல்லாம் படித்து எருக்க கொஞ நஞ்ச மூளையையும் குழப்பிக்க விரும்பல

வாழ்க உங்கள் தொண்டு

வளர்க உங்கள் கருத்து மோதல் ( ஏதும் புரியுறது போல சின்னதா எழுதுங்கப்பா)

:angry: :P :lol:

Link to comment
Share on other sites

ஆறுமுக நாவலர் எழுதிய சில நூல்களை ஏன் இணைக்கவில்லை என்று நாரதர் கேட்டிருந்தார். அதற்கு ஏன் பதில் சொல்லவில்லை?

"சாக்கிய பெண்டிரை கற்பழிக்க திருவுளமே" என்று தேவாரத்தை எமக்கு விளக்குவீர்களா?

அடிநிலையில், அறியாமையில் உள்ள மக்களுக்குத்தான் புராணக் கதைகள் என்று தூயவன் சொல்லி உள்ளார்.

இங்கே யாழ் களத்தில் அடிநிலையில் யார் இருக்கிறீர்கள்?

கள உறுப்பினர்களே! மேல்நாடு வந்து கணணியை பாவித்து, அதில் கருத்து எழுதக் கற்ற உங்களுக்கு, இமய மலையில் மாட்டின் மீது புலித் தோல் அணிந்து பார்வதியோடு நான்கு பிள்ளைகள் பெற்ற சிவன் அமர்ந்திருப்பதாக கதை சொல்லித்தான் சைவத்தை கற்றுத் தர வேண்டுமா?

Link to comment
Share on other sites

1.சமணசமயம் தோன்றிய வரலாறு

சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர்(வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்1 என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

சமணக் கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும்.

இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு;

1. விருஷப தேவர் 13. விமல நாதர்

(ஆதி பகவன்.) 14. அநந்த நாதர்

2. அஜிதநாதர். (அநந்தஜித் பட்டாரகர்)

3. சம்பவ நாதர் 15. தருமநாதர்

4. அபி நந்தனர் 16. சாந்தி நாதர்

5. சுமதி நாதர் 17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்)

6. பதும நாபர் 18. அரநாதர்

7. சுபார்சவ நாதர் 19. மல்லிநாதர்

8. சந்திரப் பிரபர் 20. முனிசு வர்த்தர்

9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்) 21. நமிநாதர்(நமிபட்டாரகர்)

10. சீதள நாதர் 22. நேமிநாதர்(அரிஷ்ட நேமி)

11. சீறீயாம்ச நாதர் 23. பார்சுவ நாதர்

12. வாசு பூஜ்யர் 24. வர்த்தமான மகாவீரர்.

தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.

சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன;

முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்த்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.

இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு

கூறப்பட்டுள்ளன.

பெயர் உயரம் ஆயுள்

1. விருஷபர் 500-வில் 84 லட்ச பூர்வ ஆண்டு

2. அஜிதநாதர் 450-வில் 71 "

3. சம்பவநாதர் 400-வில் 60 "

4. அபிநந்தனர் 350-வில் 50 "

5. சுமதிநாதர் 300-வில் 40 லட்ச பூர்வ ஆண்டு

6. பதுமநாபர் 250-வில் 30 "

7. சுபார்சவநாதர் 200-வில் 20 "

8. சந்திரப்பிரபர் 150-வில் 10 "

9. புஷ்பதந்தர் 100-வில் 2 லட்ச பூர்வ ஆண்டு

10. சீதளநாதர் 90-வில் 1 "

11. சிறீயாம்சநாதர் 80-வில் 80 லட்சம் ஆண்டு

12. வாசு பூஜ்யர் 70-வில் 72 "

13. விமலநாதர் 60-வில் 60 "

14. அருந்தநாதர் 50-வில் 30 "

15. தருமநாதர் 45-வில் 10 "

16. சாந்திநாதர் 40-வில் 1 "

17. குந்துநாதர் 35-வில் 95 ஆயிரம் ஆண்டு

18. அரநாதர் 30-வில் 84 "

19. மல்லிநாதர் 25-வில் 55 "

20. முனிசுவர்த்தர் 20-வில் 30 "

21. நமிநாதர் 15-வில் 10 "

22. நேமிநாதர் 10-வில் 1 "

23. பார்சுவநாதர் 9-முழம் 100 ஆண்டு

24. மகாவீரர் 7-முழம் 72 ஆண்டு

இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களை கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் ‘சமயப்பற்று’ என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் ‘சமயக் கொள்கை’ என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப்பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. என்னை?

அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்

விரிகடல் சூழ்ந்த வியண்கண்மா ஞாலத்

துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்

பெரியதன் ஆவி பெரிது.

என்பது பழமொழி நானூறு.

இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும், மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திரகாலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்களாகிய முனிசு வர்த்தர், நமிநாதர், நேமிநாதர் பார்சுவநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். எப்படி என்றால், கூறுதும்.

இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக்கொண்டு வரலாற்றாசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் இந்துக்களுக்கு (சைவ வைணவர்) உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இந்து, சமண இராமாயண பாரதக் கதைகளில் சில சிறு மாறுதல்கள் காணப்படுகிறபோதிலும் இரண்டும் ஒரே கதைகளாகும். இராமாயணமும் பாரதமும் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறபடியால், இராமாயண காலத்தில் இருந்த 20 ஆவது தீர்த்தங்கராகிய முனிசுவர்த் தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21 ஆவது தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும்2, அவருக்குப் பிறகு இருந்த பார்சுவநாத தீர்த்தங்கரரும். அவருக்குப் பிறகு புத்த பகவான் காலத்தில் இருந்த 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி.மு. 817 முதல் கி.பி. 717 வரையில் இருந்தவர். இவருக்குப்பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.பி. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்த மதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிந்தார். பிறகு மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன. சுவேதாம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடைகள் அணிவர். இவரின் ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கௌபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள். (திக் + அம்பரம் = திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பர். இவரின் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும் திகம்பர சமணரும் உருவவழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தம் கோயில்களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள்.

சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வட இந்தியாவில் காணப்படுகின்றனர். திகம்பர சமணர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே பெருந்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ் நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே. தமிழ் நூல்களிலே ஜைனர் என்றும், சமணர் என்றும், அமணர் என்றும், ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பர சமணரேயாவர்.

____________________________________________________________________________

1. ‘‘அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவனெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்றுமிகும்’ என்பதனாற் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும்’ என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, முன்னொற் றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து’ என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க’’ என்பது நேமிநாதம்; எழுத்ததிகாரம்; 10ஆம் செய்யுளுரை.

2. நேமிநாத தீர்த்தங்கரரின் உறவினரான கண்ணபிரான், இனி உலகத்திலே தோன்றப்போகிற சமண தீர்த்தங்கரர்களின் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப்போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.

அட பாவிகளா நம்ம சமயத்தில இம்மட்டு இருக்கா?

நமக்கு சாமியும் கோயிலும்தான் தெரியும் இதெல்லாம் படித்து எருக்க கொஞ நஞ்ச மூளையையும் குழப்பிக்க விரும்பல

வாழ்க உங்கள் தொண்டு

வளர்க உங்கள் கருத்து மோதல் ( ஏதும் புரியுறது போல சின்னதா எழுதுங்கப்பா)

:angry: :P :lol:

வானவில் இப்படி நீங்கள் தெரிந்து கொள்ள கனக்க வரலாறு இருக்கிறது.இப்போது இருக்கும் இந்து மதம் என்பதே பல பழைய சமயங்களைக் கலந்து உருவாக்கிய ஒரு மட்டை.பல சமயப் போர்களின் பின் வென்ற வைதீக மத்தவர் உருவாக்கியது தான் நவீன இந்த இந்து மதம்.மனிதன் உருவாக்கியது தான் மதம் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.

:rolleyes:

2.சமணசமய தத்துவம்

இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்;

‘உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும்

செயிர்தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற

துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக் காய்யுரைப்பன்;

மயல்தீர்ந்த காட்சி யுடையோய்! இது கேண்மதித்தே’

என்பது மேருமந்தரபுராணம்.

சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை நவபதார்த்தம் என்பர். இவை; உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோட்சம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.

1. உயிர் (ஜீவன்); உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதியாகவுள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. நல்வினை தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்3.

உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து நிற்கும். குடத்திற்குள் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளிகாட்டும்; பெரிய அறையில் வைத்த விளக்கு அறை முழுவதும் ஒளிகாட்டும்; அதுபோல, உடம்புகளின் அளவுக்குத் தக்கபடி உயிரானது பெரியதாகப் பரவியும் சிறியதாகச் சுருங்கியும் இருக்கும். ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்பது ஆருகதர் வழங்கும் பழமொழி.

மேலும், உயிர்கள் வீட்டது, மாற்றது என இருவகைப்படும். வீட்டது எனப்படும் ‘மோக்ஷ ஜீவன்’ அறிவு விளங்கப்பெற்று இருவினைகளையும் நீக்கி வீடுபேறடையும் தன்மையுள்ளது. மாற்றது எனப்படும் ‘சம்சார ஜீவன்’ நல்வினை தீவினைகளிற் கட்டுண்டு அவ்வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நரகத்திலும் சொர்க்கத்திலும் பிறப்பதும் இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நரகர், தேவர் என்னும் பிறப்புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவிகளிலே வீடுபேறடையா. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடுபெறும் வாய்ப்பு உடையன. அதுவும் துறவு பூண்டவர்களுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தார்க்கு வீடுபேறு கிடையாது.

2. உயிரல்லது (அஜீவன்); புத்கலம், தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் இவை ஐந்தும் உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம். இவைகளும் உயிரைப் போன்றே அனாதியாக உள்ளன. அதாவது, இவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிர்களின் இயல்பாகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளைச் செய்து அவ்வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைத் துய்த்துப் பல பிறவிகளிலும் பிறந்து இறந்து உழல்வதும் பின்னர், நல்லறிவும் நன்ஞானமும் பெற்று இருவினைக் கட்டறுத்து வீடுபேறடைவதும் ஆகிய இத்தன்மைகள் உயிரல்லன வாகிய இந்த அஜீவப் பொருள்களுக்குக் கிடையா. இந்த ஐந்து அஜீவப் பொருள்களின் இயல்பை விளக்குவோம். புத்கலம் என்னும் பொருள், உயிர்களில் படிந்து அவற்றைப் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்விக்கும் தன்மையுள்ளது. புத்கலம் என்பதில் ஐந்து புலன்களும், ஐம்புலன்களும் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெயிலும், நிழலும், ஒளியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு பூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்குமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) மாறும் தன்மையுள்ளது இந்தப் புத்கலம். புத்கலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம், துக்கம் முதலியவற்றையும் பிறத்தல் வாழ்தல் இறத்தல் முதலியலற்றையும் புத்கலப்பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்றை அடைவது புத்தகலப் பொருளினாலேதான்.

தர்மம் அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்திகாயம் என்றும் கூறப்படும் (இவற்றைப் புண்ணியம் பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம் அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு). தர்மம் அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறது அவ்வாறு உயிர்கள் இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப்பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல் ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின்

உதவியினாலாகும். இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்கலங்களால் உண்டாகும்

பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

‘‘தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய்

அப்படித் தாக அதன்மாத்தி காயமும்

எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்’’

(மணிமேகலை 27;187 - 190)

எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.4

காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.

‘‘காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்

மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆகும்’’

(மணிமேகலை 27;191 - 192)

ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம்கொடுப்பது ஆகாயம்.

‘‘...ஆகாயம் எல்லாப் பொருட்கும்

பூக்கும்இடங் கொடுக்கும்புரிவிற் றாகும்’’

(மணிமேகலை, 27;193 - 194)

ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடங்கொடுத்து நிற்பது.

இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.

3,4. புண்ணியம், பாவம் (நல்வினை, தீவினை); (இவற்றை, மேலே அஜீவப் பொருள்களில் கூறப்பட்ட தர்மம் அதர்மம் எனக் கருதுவது தவறு. இவை வெவ்வேறு பொருள்கள் என்பது மேலே விளக்கப்பட்டது). இந்தப் புண்ணிய பாவங்கள் மூன்று வகையாக உயிருடன் கலக்கின்றன. மனத்தினால் நினைப்பதும் வாக்கினால் சொல்வதும் காயத்தினால் செய்வதும் ஆக மூன்று வகை நல்ல எண்ணங்களாலும் நல்ல சொற்களினாலும் நல்ல செய்கைகளினாலும் பெறப்பட்ட புண்ணியமானது, உயிர்களை மனிதராகவும் தேவராகவும் பிறக்கச்செய்து அறிவு, செல்வம், இன்பம், புகழ், மேன்மை, சிறப்பு முதலிய நன்மைகளை யடையச் செய்கிறது. தீய எண்ணங்களாலும், தீய சொற்களாலும், தீய செய்கைகளினாலும் உண்டான பாவமானது உயிர்களை நரககதி, விலங்குகதி முதலிய இழிந்த பிறப்புகளில் பிறக்கச் செய்து அறிவின்மை, துன்பம், இகழ்ச்சி, வறுமை, சிறுமை முதலிய துன்பங்களை அடையச் செய்கிறது.

5. ஊற்று (ஆஸ்ரவம்): நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல, நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் உயிரில் சுரப்பது (சேர்வது) ஊற்று எனப்படும். மனம் வாக்கு காயங்களின் வழியாக ஊற்றுக்கள் உயிரிடம் வந்து சேர்கின்றன. இதனைக் கன்மத் தொடர்ச்சி அல்லது பொறிவழிச் சேறல் என்றும் கூறுவர்.

6. செறிப்பு (ஸம்வரை): மேலே கூறப்பட்ட இருவினைகளும் சுரக்கும் ஊற்றினது வழியை அடைத்து விடுவது செறிப்பு அல்லது ஸம்வரை எனப்படும். உயிர், முன்பு செய்த இருவினைகளை மறுபிறப்பில் துய்த்து ஒழிக்கும் போதே புதிதாக வினைகளைச் செய்து மீண்டும் கர்மத்தைத் தேடிக்கொள்கின்றன. உயிர்கள் தாம் முன்பு செய்த வினைப்பயன்களைத் துய்த்து ஒழிக்கும் போது, புதிய கர்மங்கள் வந்து சேராதபடி தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பது தான் செறிப்பு என்பது, ஒரு குளத்திற்கு நீர் வரும் கால்வாய்களை அடைத்துவிட்டால், அக் குளத்தில் மேன்மேலும் நீர் பெருகாமல் தடைப்படுவது போன்று, மனம் வாக்கு காயம் ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

7. உதிர்ப்பு (நிர்ஜரை); இருவினை ஊற்று உயிரினிடத்து மேன்மேலும் பெருகாதபடி தடுத்தபின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஜரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம், சுக்கிலத்தியானம் முதலியவற்றால் செய்ய வேண்டும்.

‘‘வரும்பாவம் எதிர்காத்து மன்னுந்தம் பழவினையும்

ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றான்’’.

(நீலகேசி, மொக்கல 312)

இதன் பொருள், ‘‘வருகின்ற கர்மங்களைக் குப்தி, சமிதி முதலாயினவற்றால் அடைந்து தபஸ் ஸம்ய மாதிகளால் நின்ற கர்மங்களை நிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் கண் மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவதென்று சொல்லுவது’’ (சமயதிவாகர வாமன முனிவர் உரை).

8. கட்டு (பந்தம்); மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலிய வற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தௌ¤த்தால், அவ்விரும்பு நீரை இழுத்துக்கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன் கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக்கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. உயிரைத் துணியாகவும், ஐம்புலன் வாக்கு காயம் முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுக்காகவும் உபமான உபமேயப்படுத்திக் கூறுவர்.

9. வீடு (மோக்ஷம்); ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவலதரிசனம், கேவல வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோக்ஷம் அல்லது வீடு எனப்படும்.

‘‘வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்

அருவினைப்பயன் அனுபவித் தறுத்திடுதல்

அது வீடாகும்’’ (மணிமேகலை, 27;199 - 201)

இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமண சமய நூல்களில் கண்டுகொள்க.

குறிப்பு: சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒரு தன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத் திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாதது.

‘‘மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள்

தம்மைப்

பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி

உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும்

இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்’’.

(சிந்தாமணி, கேமசரியார், 25)

கீழ்க்காணும் சித்திரம் சமண சமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.

____________________________________________________________________________

3. தொடர்புரை I காண்க.

4. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) "தன்மம்... நன்மையைப் பயப்பது; அதன்மம்... "தீமையைப் பயப்பது" என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.

Link to comment
Share on other sites

கருணைத்திறம்

நடந்த வாதங்கள் இரண்டு, அவை அனல்வாதமும், புனல்வாதமும். புனல்வாதத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. அனலில் ஏட்டை முதலாவதிட்ட பிரானார் புனலில் சமணரிடும் வரைத் தாமதித்தார்கள். ஏடு கடல் சென்று சமணரை நட்டாற்றில் விட்டது. அப்போதே சமணரனைவருக்குங் கழுவேற்றத்தில் அச்சம் நிச்சயமாயிற்று. சமணர் புத்திசாலிகளாயின் அவ்வச்சத்தினின்றுந் தப்ப அப்போதும் ஒரு நல்ல வழி யிருந்தது. அதுதான் சரணாகதி. அதுமட்டும் நிகழ்ந்திருக்குமாயின் உடனே புகலித்தலைவர் அரசனைப் பார்த்து "அரசே! வழக்கிடுவாரிருவரில் ஒருவர் வென்றாலன்றித் தோற்றமற்றவர்க்குத் தண்டனை விதித்த லடாது. யாம் ஏடி டாது வாளாவிருக்கும்வரைச் சமணரிட்ட ஏடு நீரோடு செல்லினும் அது அவருக்குத் தண்டனையைத் தராது. எம்மையும் ஏடிட நீர் வற்புறுத்தமாட்டீர். ஒருக்கால் வற்புறுத்து வீராயின் எமது ஏட்டையும் நீரோடு செல்லுமாறு செய்வேம். அப்போது நீர் யாரைக் கழுவேற்றுவீர்? இருவரையுமே யென்பீராயின், தோற்றவரைத்தான் கழுவேற்றுவேமென்னும் உமது முறை தவறுபடும். ஆகலின் நீர் சமணரை விடுவிப்பீராக" என்றெல்லாம் வழக்காடியிருப்பார்கள். ஆனால் போகூழ்வயத்தராய சமணர் "மாறுகொண்டீருமிட்டால் வந்ததுகாண்டும்" என்று சொல்லி வள்ளலாரை யெதிர்த்தனர். "பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் - சொரியினும் போசா தம" என்பது வீண்போமா? அப்போதும் எங்கருணாசாகரர் "பரசமயங்கள் பாற" என்று திருவாய் மலர்ந்து கொண்டே ஏட்டை யிட்டார்கள். "பரசமயத்தர் மாள" என்னுஞ் சங்கற்பம் அவர்கள் பாலில்லை.

Link to comment
Share on other sites

4. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே

தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’

என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்.5

இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன: 1. கொல்லாமை (அகிம்சை), 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்), 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்), 4. பிறன் மனை விரும்பாமை, 5. பொருள் வரைதல், இவை ஐந்தும் ‘அணுவிரதம்’ என்று கூறப்படும்.

இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்ட வேண்டும் என்னும் வரையறுத்துக் கொண்டு, அவ்வரையறைப்படி பொருளை ஈட்டுவதாகும். நிலபுலம், வீடுவாசல், பணம் காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடுமாடு முதலிய பொருள்களை இவ்வளவுதான் ஈட்டுவேன்; இதற்குமேல் சம்பாதிக்கமாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்.

இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம்மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

தேன் உண்பது ‘பாவம்’ என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன் புழுக்களைக் கொன்றும் உயிர்க் கொலைகளைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் விரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள். மருந்தைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டியிருந்தால், தேனை விலக்கிச் சர்க்கரைப் பாகுடன் கலந்து கொடுப்பது சமண மருத்துவரின் மரபு.

சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை என்பது. சூரியன் மறைந்த பிறகு உணவு கொள்ளக்கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத்தார்க்கு இன்றியமையாதன. கீழ்க்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது.

‘‘கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை

ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோ டிவைபிறவும்

பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு

நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்’’

திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன:

‘‘விரையார் மலர்மிசை வருவார் திருவறம்

விழைவார், கொலையினை விழையார்; பொய்

உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை

உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்

சுரையால் உணர்வினை அழியார்; அழிதசை

துவ்வார்; விடமென வெவ்வாறும்

புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்

புகழார்; குரவரை இகழாரே’’

இச் செய்யுள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்பிடித்தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கெண்டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர் யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அச் செய்யுள் இது:

‘‘செய்யும் வினையும் இருள்உண் பதுவும்

தேனும் நறவும் ஊனும் களவும்

பொய்யும் கொலையும் மறமும் தவிரப்

பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்

கையும் முகமும் இதழும் விழியும்

காலும் நிறமும் போலும் கமலங்

கொய்யும் மடவார் கண்வாய் அதரங்

கோபங் கடியுந் தீபங் குடியே’’

இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.

‘‘பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல்

பொருள்வரைதல் மத்தம்மது புலைசுணலின் நீங்கல்

பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல்

மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்’’

என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித்திரன் அறங்கேள்விச் சருக்கம், 173) இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக்கூடாது.

தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையாதிருத்தல்; 2. அசட்டைத் தனத்தினால் பூச்சிகளைச் சாகவைக்காதிருத்தல்; அஃதாவது பால், எண்ணெய், நீர் முதலியவற்றை மூடி வைக்காதபடியால் ஈ, எறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 3. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்களை வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிறருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டாதிருத்தலும் ஆம்.

இருபோகம் வரைதல் என்பது போகப் போக பரிமாண விரதம். அஃதாவது போகப் பொருள்களை வரையறுத்தல். உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள், காய் கறிகள் சிற்றுண்டி முதலிய உணவுப் பொருள்கள், பருகும் பால் பாயாசம் முதலிய பானவகைகள், சந்தனம் வாசனைத் தைலம் மல்லிகை ரோசா நறுமணப் பொருள்கள், குதிரை மாடு முதலிய ஊர்திகள், பஞ்சணை முதலிய சயனப் பொருள்கள், காலில் அணியும் பாதர¬க்ஷ முதலிய போகப் பொருள்கள் ஆகிய இவற்றில் இன்னின்ன பொருள்களை உபயோகிப்பதில்லை என்று விரதம் செய்து கொள்ளுதல். இவை பொய், களவு, கொலை முதலியன செய்யா திருப்பதற்கு உதவியாக உள்ளன.

சிக்கை என்பது சிக்ஷ£விரதம். இது நான்கு வகைப்படும். அவை: - தேசாவதாசிகம், ஸாமாயிகம், புரோஷதோபவாசம், அதிதி ஸம்விபாகம் என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்.

தேசாவதாசிகம் என்னும் விரதம் மேலே கூறப்பட்ட திசை விரதம் போன்றது. இந்தத் திசையில் இந்த எல்லைக்கு அப்பால் செல்வதில்லை என்று உறுதிசெய்து கொண்டு அதன்படி நடத்தல்.

சாமாயிக விரதம் என்பது தியானத்தில் அமர்ந்திருத்தல். குறைந்த அளவு நாற்பத்தெட்டு நிமிடமாவது கோயிலிலோ அல்லது வீட்டிலோ அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வது. இதைக் காலை நடுப்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளில் செய்யலாம். ஆனால் காலையில செய்வதே சிறந்தது. சாமாயிகம் செய்யும்போது மனம் வாக்குக் காயங்களினால் பாவச் செயல்களை நினைக்காமலும் பேசாமலும் செய்யாமலும் இருக்கவேண்டும்.

புரோதோபவாசம் என்பது போசத விரதம் என்றும் சொல்லப்படும். ஓரிரவும் ஒரு பகலும் ஆகிய ஒரு நாள் முழுவதும் உணவு கொள்ளாமலும் நீர் அருந்தாமலும் உயர்ந்த ஆடை அணிகள் அணியாமலும் இணைவிழைச்ச இல்லாமலும் விரதம் காத்தல். இந்த விரதத்தை மாதத்தில் நான்கு நாள் செய்யவேண்டும். பிற்காலத்தில் துறவு கொள்ளவிரும்பும் சமணர் இந்த விரதத்தை மாதத்தில் ஆறுமுறை செய்வது உண்டு. சமணப் பெண்மணிகள் இந்த விரதத்தை அதிகமாகச் செய்வது வழக்கம்.

அதிதி சம்விபாக விரதம். இது வையா விரதம் என்றும் கூறப்படும். துறவிகளாகிய சமண முனிவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்களில் எதையேனும் அளிப்பேன் என்று விரதம் செய்துகொண்டு அதன்படி ஒழுகுதல் இந்த விரதமாகும். சமண முனிவர் இல்லறத்தாரிடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்கள் எவை என்றால், உணவு, நீர், பழம், கமண்டலம், மருந்து, உடை முதலியனவும் உபயோகப்படுத்திக்கொண்டு திருப்பிக் கொடுத்துவிடுகிற கம்பளி, படுக்கை, ஆசனம் முதலிய பொருள்களுமாம். இந்த வையா விரதம், துறவறத்தாரை இல்லறத்தார் போற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது. இல்லறத்தார் இந்தப் பொருள்களைத் துறவிகளுக்குக் கொடுக்கும்போது பணிவிடையாளரைக் கொண்டு கொடுப்பிக்காமல் தாமே தமது கைகளால் மனமுவந்து கொடுத்தல் வேண்டும். இவற்றைப் பெற்றுக் கொள்ளும் துறவியானவர், தமக்கு வருகையை முன்னரே தெரிவிக்கக்கூடாது; தமக்கு இன்னபொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் கூடாது.

இவ்வாறு சமணசமயத்து இல்லறத்தார்; தாமும் அறவழியில் ஒழுகித் துறவறத்தாரையும் நன்கு போற்ற வேண்டும் என்னும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமணத் துறவிகளைச் சமண இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மிக்க ஆர்வத்தோடு போற்றி வந்தார்கள். இவ்வாறு போற்றுவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுவர். சமணசமய நூல்களில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம். (குறள்)

என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைந்திருந்தது சமணசமயத்து இல்லற வாழ்க்கை.

_____________________________________________________________________________

5. தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர், சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.

‘‘நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப்போன்றுதான் உடை உடுத்து இருப்பார்கள்’’ என்று கூறியபோது அந்த நண்பர், ‘‘அப்படியா’’ என்று அதிசயப்பட்டார்.

3.சமணமுனிவர் ஒழுக்கம்

வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.

பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர். அவையாவன:- மாவிரதங்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம்; திகம்பரம், நீராடாமை, பல்தேய்க்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக விளக்குவாம்.

மாவிரதங்கள் ஐந்து: 1. அகிம்சை, 2. வாய்மை, 3. கள்ளாமை, 4. துறவு, 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களையும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

1. அகிம்சை : ‘‘அகிம்சா பரமோ தர்ம’’ என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இந்நான்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது, ‘‘ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்ல மாட்டேன்; கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவு மாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்’’, என்று உறுதி கூறிச் சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

2. வாய்மை : அஃதாவது பொய்யாமை. ‘‘பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கையின்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலுங் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது:

‘‘என்னை?

‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்’(குறள். 292)

என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்த மாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது.....................ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது’’

‘‘நான் எப்பொழுதும் மெய்ம்மையே பேசுவேன்; ஒரு போதும் பொய் பேசமாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்டவும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்ம்மையே பேசுவேன்,’’ என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.

3. கள்ளாமை: எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். ‘‘நாட்டிலாயினும் காட்டிலா யினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை - அஃது அற்பமானதாக இருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ள தாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும்-, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை எடுத்துக் கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன். மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்’’ என்று உறுதி கூறிச் சமண முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

4. பிரமசரியம்: அஃதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக் காயங்களால், செய்யாதிருத்தல்.

‘‘தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்’’ என்று கூறிச் சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம்’ என்பர்.

‘‘அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து’’ (குறள்: 461)

என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.

‘‘உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்’’, என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.

இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:

‘‘ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின்

மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப்

பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்

செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்’’

(சிந்தாமணி, 2834)

‘‘கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப்

பிறர்ம னைகள்மேல்

சேற லின்றிச் செழும்பொருண்மேல் சென்ற சிந்தை

வேட்கையினை

ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடிய தாமென்றான்

நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா

நோக்குவான்.’’ (நீலகேசி, 40.)

சமிதிகள் ஐந்து : 1. இரியை, 2. பாஷை, 3. ஏஷணை, 4. ஆதான நி«க்ஷபனை, 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவாம்:

1. இரியா சமிதி: சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். ‘‘நூற்கதிகொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,’’ நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய சிற்றுயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப் பார்த்துச் சமணத் துறவி நடக்க வேண்டும். இது பற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம், பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

3. ஏஷணா சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத் துறவி யாசித்துப்பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

4. ஆதான நி«க்ஷபனா சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் எறும்பு முதலிய சிற்றுயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங்கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழு பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவையுள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்க வேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு,யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய்களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமண முனிவர் ஐம்பொறி களாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்கவேண்டும்.

‘‘மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற

ஐவாய வேட்கை அவாவினை - கைவாய்

கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்

வலங்காது வீடு பெறும்.’’

என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

ஆவஸ்யகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:

1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதி கிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன. இவற்றின் விளக்கம் வருமாறு:

1. சாமயிகம்:

இன்ப துன்பம், நன்மை தீமை, உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.

2. துதி:

இருஷபர் முதலிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.

3. வணக்கம்:

அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீ¬க்ஷ கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.

4. பிரதிகிர்மணம்:

பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக் கொள்ளுதல்.

5. கழுவாய்:

அஃதாவது பிராயச்சித்தம். சமண முனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்துவிட்டால், அதனையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக்குற்றத்தைக் கழுவுதல்.

‘‘ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை

நின்று நினைத்திரங்கற் பாற்று.’’

‘‘தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கித்

தூயவழி நிற்றலும் அற்று’’ (அருங்கலச் செப்பு.)

6. விசர்க்கம்:

காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும்போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.

‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையையடைந்த சமண முனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ் வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன. 1. லோசம், 2. திகம்பரம், 3. நீராடாமை, 4. தரையிற் படுத்தல், 5. பல்தேய்க்காமை, 6. நின்று உண்ணல், 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.

1. லோசம்: அஃதாவது மயிர் களைதல், சமண முனிவர் துறவுகொள்வதற்கு முன்னர்த் தீ¬க்ஷபெறுவர். தலைமயிரைக் களைவது தீ¬க்ஷயில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களையவேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச்செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலிமையப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின்மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

2. திகம்பரம்: அஃதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீங்கிய சமணமுனிவர், அதுதொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெயிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசுகு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதும் உடம்பு தமதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாகும்.

3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பர நிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான (நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை’’ (மொக்கல. 318 ஆம் பாட்டுரை).

‘‘செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம

வற்றவிட்டார் .... நம்தொழு தெய்வமே’’

என்பது திருநூற்றந்தாதி.

சமண முனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச் சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமண முனிவர், உடற்றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமை பற்றியே சமணமுனிவர் நீருண்ணும்போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

5. பல் தேய்க்காமை: உடம்பும் மிகை என்று தமது உடம்பையுந் துறந்த சமண முனிவர் பல் தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

6. நின்று உண்ணல்: சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ளவேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கிவிட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப் போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

7. ஏக புக்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை, உண்ணுதல், சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவுகொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அஃதாவது, பகல் நேரத்திலேயே சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ளவேண்டும்.

இதுகாறும், கூறிய இவையே சமண முனிவர் கைக் கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்கு மிஞ்சிச் செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் ‘‘கடுநோன்பிகள்’’ என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.

‘‘யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தி யார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி) துறந்தனம். ...........யாங்கள் பலகாலுண்ணவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், ‘‘சக்தி தத்ஸ தியாக தபஸி’’ (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெயினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?

‘‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.’’ (குறள். 241)

என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்த லல்லது வெயில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி அழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெயில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?’’ (மொக்கல, 87ஆம் பாட்டின் உரை)

இதுகாறும் கூறிய இவை யதிகர்மம் ஆகும். அஃதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.

5. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

சமணர்களின் கடைசித் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72 ஆவது வயதிலே கி.மு. 527 இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர், கேவல ஞானம் வாய்க்கப் பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்6. கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு சுணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குருவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்பு சுவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமித்திரரும், அவருக்கும் பின்னர் அபராசிதரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும், அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமய குரவராக இருந்தனர். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தார். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322 - 298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சந்தர் காலத்தவன்; இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்7.

சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதையறிந்து அச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும், அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக் குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாக முனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர், கி.மு. 297 இல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.8

இச்செய்திகள் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி.மு. 931 இல்) இயற்றிய பிருகத் கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி.பி. 1838 இல்) இயற்றிய ‘‘ராஜாவளி கதெ’’ என்னும் நூலிலும் சமணர்களின் கர்ணபரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக் கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவச்செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமணசமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென்திசை நோக்கிவந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத் தக்கது.

வட நாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத் துறவிகளும், மைசூரில் தங்கி வாளா காலங் கழித்திருக்கமாட்டார்கள். தமது மதக் கொள்கையைப் பரப்புவதையே தமது நோக்கமாகக் கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ்நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது.

இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும் பௌத்த மத நூலில், இலங்கையிலே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி.மு. 377 முதல் 307 வரையில் இலங்கைத் தீவை அரசாண்ட பாண்டு காபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரி, கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக் குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.

வட இந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட இந்தப் பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமண சமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென்றிருக்க வேண்டும்; வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியாக நேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. ஏனென்றால், சமணசமயத் துறவிகள், ஆறு முதலிய சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர, கடலில் பிரயாணம் செய்யக்கூடாது என்பது அந்த மதக் கொள்கை. ஆகவே, வட இந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். இலங்கைக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக்கூடிய அண்மையில் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம்.

இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. மகாபாரத காலத்திலே, அஃதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22 ஆவது தீர்த்தங்கரராகிய நேமி நாத சுவாமி, கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணதீர்த்தங்கரராகப் பிறந்து சமணமதத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன: இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன.

கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:

அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் ‘‘துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து’’ காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்; (தொல்: எழுத்து, பாயிரம் உரை)

‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

(தொல்: பொருள். அகத்திணை 32 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை)

மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ் நாட்டிற் கொண்டுவந்து குடியேற்றிய செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஒரு அகத்தியர் வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த வரலாறாக இருக்கவேண்டும்.

கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்கவேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ் நாட்டில் குடியேறியபின், சேர சோழ பாண்டிய அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடையவராக வாழ்ந்து வந்தனர் என்று சங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘அருவாஹி (ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செட்டி செய்வித்த குகை’’ என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது.10

இதில் கருதவேண்டியது என்னவென்றால், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர்தான் இச்சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பதும் ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தான் போலும்.

கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணசமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்தபிறகு கண்ணன் பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலை நாட்டினார்கள் என்றும் தெரிந்தது. கண்ணன் பலராமன் வணக்கம் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலை எடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ணபிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாலின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆதாரத்துடன் தௌ¤வாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு நிறுத்துகிறோம்.

இச்செய்திகளை இங்குக் குறிப்பிட நேர்ந்த காரணம் என்னவென்றால், கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - கண்ணபிரான் வாழ்ந்திருந்த மகாபாரதக் காலத்திலேயே - சமண சமயம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கேயாகும். கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்தியச் சரித்திர நூல்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியின

Link to comment
Share on other sites

332. பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை?

கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும்.

333. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், பாக்கு வெற்றிலையுண்டல், போசன பானம் பண்ணுதல், ஆசனந் திருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வஸ்திரந் தரித்துக் கொள்ளுதல், தோளிலே உத்தரீயம் இட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல் சட்டையிட்டுக் கொள்ளுதல், பாதரக்ஷையிட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம், பலிபீடம், இடபம், விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், சண்டையிடுதல், விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல், ஒரு தரம் இரு தரம் வலம் வருதல், ஓடி வலம் வருதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல், அகாலத்திலே தரிசிக்கப் போதல், திரை விட்ட பின் வணங்குதல், அபிஷேக காலத்திலும் நிவேதன காலத்திலும் வணங்குதல், முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் வணங்குதல், திருவிளக் கவியக் கண்டுந்தூண்டாதொழிதல், திருவிளக்கில்லாத பொழுது வணங்குதல், உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கேயின்றி உள்ளே போய் வணங்குதல் முதலியவைகளாம். இக்குற்றங்களுள் ஒன்றை யறியாது செய்தவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின் அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

6. ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது

புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப்பௌத்த மதத்தை ‘இந்து மதத்தில்’ சேர்த்துக்கொண்டு பின்னர், காலப்போக்கில் அந்த மதத்தை அழித்து விட்டதுபோல, சமண மதத்தையும் ‘இந்து’ மதத்தில் இணைத்துக்கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன்பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக்கொண்டனர். சமண மதத்தை ‘இந்து’ மதத்தின் கிளைமதமாக இணைத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வாம்.

விஷ்ணுபுராணத்தில் கீழ்கண்ட கதை கூறப்படுகிறது; அசுரர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில் அசுரர் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற்கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமாலை வணங்கித் தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றிகொள்ளத் தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று மாயா மோகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி அனுப்பினார். அக்கட்டளைப்படியே சென்ற மாயாமோகர், தம் உடைகளைக் களைந்து தலையை மழித்துக் கையில் மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த நருமதை246 ஆற்றங்கரைக்குச் சென்று அவ்வசுரருக்கு நக்ன (சமண) மதத்தைப் போதித்து அவரை ஆருகதர் ஆக்கினார். பின்னர், மாயாமோகர் செம்பட்டாடை (சீவரம்) அணிந்து எஞ்சி நின்ற அசுரர்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தை) ப் போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதீக மதத்தை)க் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர். குன்றவே தேவர், அசுரரைப் பொருதுவென்றனர்.

இக்கதையில் அசுரர் என்பது சமண பௌத்த மதத்தினரை என்பதும், தேவர் என்பது வைதீகப் பிராமணரை என்பதும் விளங்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து ‘இந்து’ மதத்துடன் இந்த மதங்களையும் இணைத்துக்கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது. மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறுக்கிறது: ரசி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து பேராற்றல் பெற்றனர். ஆற்றல்பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர்செய்து வென்று அவனது தேவலோகத்தைக் கைப்பற்றியதோடு, அவன் யாகத்தில் பெறுகின்ற அவிப்பாகத்தைப் பெறாதபடியுந் தடுத்துவிட்டனர். தோல்வியடைந்து உரிமையிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர்நிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான். பிரகஸ்பதி அவனது வேண்டுகோளுக்கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர்களுக்கு அவைதிக (சமண பௌத்த) மதங்களைப் போதித்தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதீக மதத்தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்றான்.

தேவீபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப்பட்டடுள்ளது; இதில் காணப்படும் சிறு மாறுதல்யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அசுரரிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.

விஷ்ணு புராணம், மச்ச புராணம், தேவி பாகவதம் இவற்றிற் கூறப்பட்ட இக்கதையைத் திரட்டிச் சேர்த்து, திருமாலின் கூறாகிய மாயாமோகர் சமண பௌத்த மதங்களைப் போதித்தார் என்று பதும புராணம் கூறுகின்றது.

அக்கினி புராணம் கூறுவதாவது: தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென்றனர். தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுந்து முறையிட்டுத் தமது குறையை நீக்குமாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால் சுத்தோதனருக்கு மாயாமோகர் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பொத்தராக்கினார். எஞ்சி நின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை ஆருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப்புராணம் கூறுகின்றது.

காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (19 ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான வித்துமாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்பவர் கடுந்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களிற் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களினாலாய முப்புரங்களைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரரின் ஆற்றலைக் கண்டு பொறாமையும் அச்சமுங்கொண்ட தேவர்கள் திருமாலிடஞ் சென்று அசுரரை அழிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டனர். வழக்கம்போலவே திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் சேர்ந்து அபிசாரயாகஞ் செய்து கணக்கற்ற பூதங்களையுண்டாக்கி அவற்றை ஏவி முப்புரங்களை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பூதங்கள் முப்புரங்களை அழிக்க முடியாமல் புறங்காட்டி ஓடின. பின்னர், திருமால் முப்புரதியரைச் சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து. ‘நீ புத்தனென்று அழைக்கப்படுவாய். நீ முப்புராதியரிடஞ் சென்று கணபங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியினின்றும் பிறழச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய் என்று கட்டளையிட்டார்.

அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று முப்புராதியாருக்குக் கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பௌத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்.) அவர்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேவர் சிவனிடஞ் சென்று திரிபுராதியார் சிவநெறியைக் கைவிட்டனர் என்று கூற அவர், திரிபுரத்தை எரித்து அழித்தார். பின்னர், புத்தரும் நாரதரும் திரிபுராதியரை வஞ்சித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளக் காஞ்சிபுரத்திற்குச் சென்றபோது, ‘இரும்பு மலையொத்த பெரிய பாவப் பரப்புப் பருத்திமலையைப் போல நொய்மையாயிற்று.’ இதனைக் கண்டு வியப்படைந்த புத்தரும் நாரதரும் அவ்விடத்திற்குத் ‘திருப்பருத்திக்குன்றம்’247 எனப் பெயரிட்டனர் என்று இந்த மகாத்மியங் கூறுகின்றது.

பாகவத புராணத்தில் திருமால், புத்தர் இருஷபர் என்னும் அவதாரங்களை எடுத்துப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்று கூறப்பட்டுள்ளது. பாத்ம தந்திரம் என்னும் வைணவ ஆகம நூல், திருமால் பாஞ்சராத்திரம் (வைணவம்), யோகம், சாங்கியம், சூனிய வாதம் (பௌத்தம்), ஆர்கத சாத்திரம் (சமணம்) ஆகிய மதங்களை யுண்டாக்கினார் என்று கூறுகின்றது. மற்றொரு வைணவ ஆகமமாகிய அஹிர்புத்நிய சம்ஹிதை, பௌத்த மதமும் சமண மதமும் பிரம்ம ரிஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை மயக்குவதற்காக உண்டாக்கப்பட்டன என்று கூறுகின்றது.

திருமால் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்றார்:

‘‘கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புரம்புக்க வாறும்

கலந்த சுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்

வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை

விளங்க நின்றதும்

உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி யுண்ணுமே.’’

இதற்குப் பன்னீராயிப்படி உரை வருமாறு:-

‘‘கள்ளவேடத்தை = வேதபாஹ்ய புத்தரூபமான க்ருத்திர வேஷத்தை, கொண்டு = கொண்டு, போய் = போய், புரம் = த்ரிபுரத்திலே, புக்க ஆறும் = புக்கபிரகாரமும், அசுரரை = அங்குத்தை யசுரரை, கலந்து = உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் = சித்த பேதத்தை, செய்திட்டு = பண்ணி, உயிர் = அவர்கள் பிராணன்களை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = விரகுகளும்.’’

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5 ஆம்பத்து, 7 ஆம் திருமொழி, 5 ஆம் செய்யுளிலும் இச் செய்தி கூறப்படுகிறது:-

‘‘எய்தக் கூவுத லாவதே எனக்கு

எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று

கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே.’’

இதற்கு ஈடு 36 ஆயிரம்படி வியாக்யானம் வருமாறு:

“கைதவங்கள் செய்யும் = கிருத்திரிமங்களைச் செய்யும். அஃதாவது - புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்குநின்ற அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தையைப் போக்கினபடி. வசனங்களாலும் யுக்திகளாலுங் கிருத்திரிமத்தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வளவினாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள்மாளப் பண்ணினபடி (வாள்மாளப் பண்ணினபடி = சவப்பிராயராகப் பண்ணினபடி, அஃதாவது கொன்றபடி.) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி ஒருவன் (சிவன்) அம்புக்கு இலக்கமாம்படி பண்ணிவைத்தான்.

சிவனும் திருமாலும் சேர்ந்து முப்புரத்தை (பௌத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியதுபோலலே தேவாரம் முதலிய நூல்களும் கூறுகின்றன.

‘‘நேசன் நீலக் குடிஅர னேஎனா

நீச ராய், நெடு மால்செய்த மாயத்தால்

ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்

நாச மானார் திரிபுர நாதரே.’’ (அப்பர் தேவாரம்)

கூர்ம்புராணம் திரிபுரதகனம் உரைத்த அத்தியாயத்தில், திருமால் புத்த முனிவராகவும் நாரதர் சமணமுனிவராகவும் உருவம் எடுத்துச் சென்று அசுரர் அவுணர் என்பவர்களை மயக்கும்பொருட்டுப் பௌத்த சமண மதங்ளைப் போதித்தார்கள் என்று கூறுகிறது:

‘‘சாக்கிய குருவின் மாயன் ஆங்கவர் புரத்தில் சார்ந்து,

கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே

ணியன்மேல் அன்பு

நீக்கியவ் வசுரர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில்

ஆக்கிநல் இலிங்க பூசை யறிவொடும் அகற்றி னானே.’’

‘‘ஆங்கண்மா ணாக்க ரோடு நாரத னணுகி யன்பிற்

கோங்குறழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல்

தீங்கினைச் செய்யா நிற்கும் சமயத்தில் சென்று நாளும்

வாங்குவில் அவுணர் நெஞ்சம் மருண்டிட மாயை செய்தான்.’’

இதே கருத்தைத் திருக்கூவப்புராணம், (திரிபுர தகனப் படலம்) கூறுகிறது:

‘‘மறமொன்று கின்ற அரணங்கள் தம்மில்

வரும் அம்பு யக்கண் இறைவன்

திறமொன்று புத்த னருகன் றயங்கு

சினனென்ன வங்கண் அடையா

அறமென்று வஞ்ச மதிநூல் மருட்டி

யறைகின்ற காலை யவுணர்

நிறமொன்று பூதி மணியோ டிலிங்க

நிலைவிட்டு அகன்ற னரரோ.’’

இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுணரிடம் சென்று பௌத்த சமண மதங்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங்களாகும். இரண்டும் ஒன்றே.

இந்தக் கதைகளிலே, அவுணர் அல்லது அசுரர் என்பவர்களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவுணர் அழிந்தார் என்றும் கூறப்படுகின்றன. திரிபுரம் என்றால் என்ன? இரும்பு, செம்பு, பொன் என்னும் உலோகங்களால் அமைக்கப்பட்ட நகரங்கள் என்று புராணக் கதைகள் கூறும். திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிற தத்துவார்த்தக் கருத்தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல.

‘‘அப்பணி செஞ்சடை யாதிபு ராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறி வாரே.’’

என்பது திருமூலர் திருமந்திரம். இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை? ‘‘முப்புரமாவது மும்மல காரியம்’’ என்று திருமூலரே, வேறு இடங்களில் இப்புராணக் கதையையும் கூறுகிறார்:

‘‘வானவர் தம்மைவலிசெய் திருக்கின்ற

தானவர் முப்புரம் செற்ற தலைவன்’’

என்றும் கூறுகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு கருத்தும் உண்டு. அக் கருத்து யாது?

முப்புரம் என்று கூறுவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள் போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணி என்பது பௌத்த மதத்தைக் கற்றவர் நன்கறிவர். அவ்வாறே சமணருக்கு உறுதியான கோட்டை போன்றிருப்பவை நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மும்மணியாகும். இவற்றைத்தான் இக் கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழிந்துவிடும். முப்புரம் எரித்த கதையில், சிவனும் விஷ்ணும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணிகளை அழித்ததாக) க் கூறப்படுவது உருவகமாகும். இக்கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது, சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத்தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது. இதற்கு உதாரணங் காட்டி விளங்குவோம்.

மதுரையை யடுத்த யானைமலையில் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் ‘‘யானைமாமலை யாதியாய இடங்களில்’’ சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று இருப்பதனால் யானைமலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில் சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறையில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த மலையிலே வைணவர்கள் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். கி.பி. 770 இல் மாரன்காரி என்னும் வைணவர் - இவர் பாண்டியனுடைய அமைச்சர் -, யானைமலைக் குகையிலே நரசிங்கப் பெருமாளை அமைத்தார் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது248. சமணக் கோயில் களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் மலையாகிய யானைமலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். இதற்குச் சைவர்களும் உடன்பட்டிருந்ததோடு, ஒரு புராணக் கதையையும் கற்பித்துக் கொண்டார்கள். அஃது எந்தக் கதை என்றால், திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சோமசுந்தரப் பெருமான் நாரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது.

‘‘இங்கித நெடுங்கோ தண்டம்

இடங்கையில் எடுத்து நார

சிங்கவெங் கணைதொட் டாகந்

திருகமுன் னிடந்தாள் செல்ல

அங்குலி யிரண்டால் ஐயன்

செவியுற வலித்து விட்டான்

மங்குலின் முழங்கும் வேழ

மத்தகங் கிழிந்த தன்றே.’’

பிறகு, இந்த யானைமலையில் சிவன் எய்த நரசிங்க அம்பு நாரசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் கூறுகிறது:-

‘‘வம்புளாய் மலர்ந்த ஆரான்

வரவிடு மத்தக் குன்றில்

சிம்புளாய் வடிவங் கொண்ட

சேவகன் ஏவல் செய்த

அம்புளாய்த் தூணம் விள்ள

அன்றவ தரித்தவா போல்

செம்புளாய்க் கொடிய நார

சிங்கமாய் இருந்த தன்றே.’’

யானைமலையில் அஜ்ஜநந்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானைமலையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன்காரி யானைமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும், சொக்கப்பெருமான் நரசிங்க அம்பு எய்து சமணருடைய யானையை (மலையை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்தால், சைவரும் வைணவரும் சேர்ந்து சமணருடைய யானைமலையைக் கைப்பற்றினர் என்னும் உண்மை புலனாகும். இதுபோன்று வேறு செய்திகளும் உள. விரிவஞ்சி நிறுத்துகிறோம்.

______________________________________________________________________________

246. நருமதை ஆற்றங்கரையிலும் அதைச் சூழ்ந்த இடங்களிலும் சமண மதம் பண்டைக் காலத்தில் செழிப்புற்றிருந்த செய்தி ஆங்குக் கிடைக்கும் சிலாசாசனங்களாலும் சிற்ப உருவங்களாலும் தெரிய வருகிறது.

247. இக் கதையில் திருப்பருத்திக் குன்றம் கூறப்படுகிறது. திருப்பருத்திக் குன்றத்தில் இப்போதும் சமணக்கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக் கருகிலுள்ள இத்திருப்பருத்திக் குன்றத்திற்குச் சினகாஞ்சி என்றும் பெயர். காஞ்சியில் பண்டைக் காலத்திலிருந்த பௌத்த சமணக் கோயில்கள் பிற் காலத்தில் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டது போல, திருப் பருத்திக் குன்றத்துச் சமணக்கோயிலும் ‘இந்து’ கோயிலாக மாற்றப்பட்டு விடும் என்னும் நம்பிக்கையுடன் காஞ்சி மகாத்மியத்தின் ஆசிரியர் இவ்வாறு கதை கற்பித்துக்கொண்டார் போலும். ஆனால், நற்காலமாகத் திருப்பருத்திக் குன்றம் இன்னும் சமணக் கோயிலாகவே இருந்து வருகின்றது.

248. Ep. Indi. Vol VIII P. 317.

Link to comment
Share on other sites

9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்து மதத்தில்24 காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்து மதத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றியபோது, சமணர்கள் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமண சமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகி வந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்துமதத்தில் கலந்து விட்டன. இந்து மதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம்.

ஊன் உண்ணாமை: இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக் காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டுவந்ததோடு புலாலுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்துசெய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனை வகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமணசமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண்பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத் தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.

‘‘விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த

பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா

எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,

நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக்கள் தம் தெய்வங்களுக்கு ஆடுமாடுகளைப் பலியிடுவதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் சமணர் வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய ரிஷிகள் (பிராணிகளின் உயிரைக்கொன்று) யாகம் செய்தபோது அதை அரக்கர்கள் அழித்துவந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூறப்படுகிறதல்லவா? இதன் உண்மைக் கருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத்தின்பேரால் பிராணிகளைக் கொலை செய்துவந்ததை அரக்கர்கள்25 அஃதாவது சமண சமயத்தவர் தடுத்துவந்தார்கள் என்பதே. சமண சமயத்தவருடைய கொள்கை நாடெங்கும் பரவிச் செல்வாக்கடைந்த போது, இந்து மதத்தவரும் இக் கொள்கையைத் தமது கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும் பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமணசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்து சமயத்தில் சேர்ந்து மதம் மாறியபோது, தமது ஊனுண்ணாக் கொள்கையை விடாமல் இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு இரண்டு விதத்தில் சமணரின் இக் கொள்கை இந்து மதத்தில் சேர்ந்து விட்டது.

பௌத்தர்களும் ஊனுண்ணாக் கொள்கையுடையவர். ஆனால், அவர்கள் கொல்லாமையை மட்டும் வற்புறுத்திக் கூறி ஊனுண்ணாமையை அதிகமாக வற்புறுத்தாது விட்டனர். சமணரோ கொல்லாமை, ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தியதோடு, இவற்றைத் தமது மதத்தின் முதன்மையான கொள்கையாகவும் கொண்டனர். ஆதலால், சமணர்களாலேயே இந்தக் கொள்கை நமது நாட்டில் அதிகமாகப் பரவிற்று என்று கருதலாம்.

ஊன் உணவு அல்லாத ‘‘காய்கறி’’ உணவுக்கு இப்போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுகிறது. சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே ‘‘மரக்கறி’’ உணவுக்கு ஆருகத உணவு என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. இலங்கையிலுள்ள தமிழர்கள் ‘‘காய்கறி’’ உணவை இப்போதும் ஆரத உணவு என்று வழங்கி வருகின்றனராம்26. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு.

தீபாவலி: இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆனபடியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுதுவிடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைப் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கெண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு. ஆவலி = வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. நீராடியபின்னர் திருவிளக்கேற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும், ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம்:

சைவமும் சமணமும்: சைவர்களுக்கும் சமண சமயத்தவருக்கும் பொதுவான சில கொள்கைகளை இங்கு ஆராய்வோம். இக் கொள்கைகளில் சில இரண்டு சமயத்துக்கும் பொதுவானதாக, அடிப்படையான கொள்கைகளில் ஒற்றுமையுள்ளதாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொதுவாகவும் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஆயினும், மிக மிகப் பண்டைக் காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்லச் செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம்.

சிவராத்திரி: சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்தவரும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்னவென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பக்ஷம், திதி, நட்சத்திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பதுதான்.

சைவர்கள் சிவராத்திரியன்று இரவு சிவபெருமானை வழிபட்டு ஒழுகினால் சிவகதியடையப் பெறலாம் என்று கருதுகின்றனர். ஆனால், சமண சமயத்தவர் சிவராத்திரி கொண்டாடுவதன் காரணம் என்ன? முதல் தீர்த்தங்கரராகிய ஆதிபகவன் (ரிஷபதேவர்) திருக்கயிலாய மலையிலே வீடுபேறடைந்தார் என்பது சமண சமயத்தவர் கொள்கை. வெள்ளியங்கிரியாகிய கயிலாயமலையிலே ஆதிபகவன் வீடுபேறடைந்தார் என்பதும், அது மாசித் திங்கள், அமரபக்ஷத்துச் சதுர்த்தசியன்று நள்ளிரவு என்பதும் சமணசமயக் கொள்கை. சமணர்கள், சைவ சமயத்திலே பிற்காலத்தில் சேர்ந்தபோது, தமது பழைய சிவராத்திரி வழிபாட்டைச் சைவ சமயத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்திலிருந்தே சிவராத்திரி வழிபாடு சைவ சமயத்தில் இருந்தது என்று கூறினால் அதை மறுத்துக் கூற யாதொரு சான்றும் கிடையாது. அப்படியானால், சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சிவராத்திரி வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது என்று கருதவேண்டும்; இதனால், மிகமிகப் பழைய காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்று பட்டிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

மோட்சமாகிய வீட்டுற்குச் சிவகதி என்றும், சிவபுரி என்றும், அருகக்கடவுளுக்குச் சிவகதிநாயகன், சிவன் என்றும் பெயர்கள் கூறப்படுவதைச் சமணசமய நூல்களில் பெரிதும் காணலாம். அது போலவே, தேவாரம் முதலிய சைவ சமய நூல்களிலே வீடுபேறு சிவகதி என்று கூறப்படுகிறது.

திருக்கயிலாயமலை : கயிலையங்கிரி என்னும் திருக்கயிலாயமலை இமயமலைக்கு வடபுறத்திலே திபெத்து நாட்டில் இருக்கிறது. இதற்கு வெள்ளியங்கிரி என்னும் பெயரும் உண்டு. பனிக்கட்டியால் நிறைந்துள்ள இந்த மலை இரவும் பகலும் வெண்மைநிறமாக வெள்ளிபோல் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமான திருப்பதியாகும். சிவபெருமான் இந்த மலையில் எழுந்தருளியிருக்கிறார் என்றும், இங்குள்ள சிவபெருமானை வணங்குவதற்காகத் திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்று, இக்கட்டான வழியில் செல்ல முடியாமல் திரும்பி வந்து விட்டார் என்றும் புராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து ஆகாய வழியாக இக் கயிலை மலைக்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம்மலைக்குச் சென்று இவ்விடத்தைக் காலினால் மிதிக்க அஞ்சித் தலையினால் நடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மலையையும் அதில் எழுந்தருளியிருக்கும் கயிலாயநாதனையும் தம் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். திருக்கயிலாய மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும்.

அது போன்றே, சமணர்களுக்கும் திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் இக்கயிலை மலையிலே வீடு பேறடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணியத்திருப்பதியாகும் திருக்கலம்பகம் என்னும் சமண சமய நூல், ஆதிநாதரை, கயிலாயம் என்னும் திருமலைமேல் உறைகின்றனர் என்று கூறுகிறது. மேலும்,

‘‘போக்கறு சுடர் வெள்ளி

மாக்கயிலை மிசை நாப்பண்’’

ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் மேற்படி நூல் கூறுகின்றது. இதனால் சைவர்களுக்குரியது போலவே சமணர்களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது.

சடைமுடி : சைவர்கள் வணங்கும் சிவபெருமான் சடை முடியுடையவர் என்றும், அதனால் அவர் சடையன் என்று கூறப் படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் ஆதி நாதரும் (ரிஷபதீர்த்தங்கரர்) சடை முடியுடையவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. ஆதிநாதரைத் தவிர, ஏனைய இருபத்து மூன்று தீர்த் தங்கரர் எல்லோரும் சடைமுடியற்றவர்கள். இவர்கள் திருவுருவங்கள் சடைமுடியில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் சமணக் கோயில்களில் காணலாம். ஆனால், ஆதிநாதர் மட்டும் சிவபெருமானைப்போலவே சடைமுடியுடையவர். இதனைத் திருக்கலம்பகம்,

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை

காலம் மூன்றும் கடந்தனை

தாழ்சடை முடிச் சென்னிக்

காசறு பொன்னெயிற் கடவுளை’’

என்று கூறுகிறது. இக்காலத்துச் சமணர் கோயில்களில் ரிஷபதேவராகிய ஆதிநாதர் திருவுருவமும், ஏனைய தீர்த்தங்கரரைப் போலவே, சடைமுடியில்லாமல் காணப்படுகின்றது. ஆனால் பண்டைக் காலத்திலே இருந்த ஆதிநாதர் திருவுருவங்கள் சடைமுடியுடன் அமைந்திருந்தன. இதற்கு ஆதாரமாகப் பழைய ஆதிநாதரின் திருவுருவங்கள் இன்றும் சடைமுடியுடன் சில இடங்களில் காணப்படுகின்றன.

இப்போதைய திகம்பரச் சமணர் இதை முற்றும் மறந்து விட்டனர். திருக்கலம்பகம் ஒன்று தவிர ஏனைய சமணத் தமிழ் நூல்கள் ஆதிநாதர் சடைமுடியுடையவர் என்பதைக் கூறவில்லை. ஆனால், சுவேதாரம்பரச் சமணரால் எழுதப்பட்ட திரிசஷ்டி சலாகாபுருட சரித்திரம் (ஆதீஸ்வர சரிதம்) இதைக் கூறுகிறது. சமண முனிவர் துறவுகொள்ளும்போது, லோசம் செய்துகொள்வது வழக்கம். அஃதாவது தலைமயிரைக் கைகளால் பிய்த்துக் களைவது வழக்கம். அந்த முறைப்படி, ஆதிநாதர் லோசம் செய்தபோது, இந்திரன் பொன்தட்டில் அந்த மயிரை ஏந்தினான் என்றும், ஆதிநாதர் தமது தலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் நான்கு பிடி மயிரைப் பிய்த்துக் களைந்து தட்டில் வைத்து, மற்றப் பக்கத்து மயிரையும் களையத் தொடங்கியபோது, இந்திரன் அந்த மயிரின் ஆழகைக் கண்டு இனியும் பிய்த்துக் களைய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதாகவும், இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி ரிஷபர் (ஆதிநாதர்) மற்றச் சிகைகளைக் களையாமலே விட்டார் என்றும் ஆதீஸ்வர புராணம் கூறுகிறது.27

எருது அல்லது விருஷபம் : சமணருடைய முதல் தீர்த்தங்கரரான விருஷப தேவராகிய ஆதிநாதருக்கு முத்திரை (அடையாளம்) விருஷபம் என்னும் ஏறு ஆகும். இவரது திருவுருவத்தின்கீழ் விருஷபம் (ஏறு) அமைக்கப் பட்டுள்ளதைச் சமணக் கோயில்களில் இன்றுங் காணலாம். இவ்வாறே, சைவரும் சிவபெருமானுடைய வாகனம் ஏறு (விருஷபம்) என்று கூறுகின்றனர்.

அன்றியும், தருமத்திற்கு (அறத்திற்கு) வடிவம் ஏறு (எருது) என்று கூறுவது சமணசமயத் துணிபு. இதனை,

‘மணியினுக் கொளி; அகமலர்க்கு மல்கிய

அணியமை அங்குளிர் வாசம்; அல்லதூஉம்

திணி இமிலேற்றினுக் கொதுக்கம்; செல்வநின்

இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே.’

எனவரும் சீவகசிந்தாமணி முத்தியிலம்பகச் செய்யுளால் அறியலாம். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘இமிலேறென்றது- அறத்தினை; தருமத்திற்கு அது வடிவமாகலின்’ என்று எழுதி யிருப்பதும் கருதத் தக்கது. விருஷபத்தைத் தருமத்தின் வடிவமாகக் கூறுவது போன்று தியானத்தையும் எருதின் வடிவமாகச் சமணர் கூறுவர். இதனை, ‘தியானமெனும் நரையம் புகா வினைத் தெவ்வென்றவா’ எனவரும் திருநூற்றந்தாதி28 அடியினாலும். ‘தியானம் என்னும் இடபத்திலே புகுந்து தீவினைப் பகையை வென்றபடி. நரை - விடபம்’ என வரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம்.

இந்தக் கருத்தைச் சைவரும் கொண்டுள்ளார். ஆதிநாதர் திருவுருவத்தின்கீழ், சமணர் எருது உருவத்தை (சிறியதாக) அமைப்பதைச் சைவர் சற்றுப் பெரியதாகச் செய்து, சிவபெருமானது வாகனம் எருது என்றும், அவர் அதன்மேல் ஊர்ந்து வந்து அடியார்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகின்றனர். விருஷப வாகன சேவையைச் சிறப்பாகவும் கருதுகின்றனர். அன்றியும், தருமத்தின் உருவந்தான் எருது என்று சமணரைப் போன்றே சைவரும் கூறுகின்றனர். இதனை,

‘வானேறுரு மெனதாயுதம் அவனாயுத மழுவாள்

யானேறுவ தயிராபதம் அவனேறுவ தெருதே’

என்று இந்திரன் சிவனைப் பழித்துக் கூறியதாகக் கூறப்படும் தக்கயாகப்பரணி29த் தாழிசையினாலும், ‘எருதென்றது எருதையன்று; தருமமென்பது30, தருமம் வெளுத்திருத்தலும் வஸ்துக்களில் வலிதாதலானும் தருமத்தின்மேலல்லது ஈசுவரன் ஏறானென்று கொண்டான். இதில் தேவேந்திரன் ஈசுவரனை இகழ்ந்தவாறாவது தரும வாகனன் யுத்தஞ் செய்ய வல்ல னல்லனென்றவாறு’ எனவரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம். இதனால், சமணரைப் போன்றே சைவரும் விருஷபத்தைத் தருமத்தின் (அறத்தின்) உருவாகக் கொண்டிருப்பது உணரலாம். இவ்வொற்றுமை இச் சமயங்களின் பண்டையத் தொடர்பைக் காட்டுகிறது.

நந்தி - கோமுகயக்ஷன்: திருக்கயிலாயமலையில் வீடு பேறடைந்த ஆதிநாதராகிய விருஷப தேவருடைய பரிவார தெய்வங்களில் கோமுகயக்ஷர் முதன்மையானவர் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. (கோமுகயக்ஷன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யக்ஷன் என்பது பொருள்.

கோமுகயக்ஷன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப் படுகின்றன. சைவசமயத்தவரும் தம் சிவபெருமானுடைய பரிவாரத் தெய்வங்களில் ‘நந்தி தேவரை’ முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமணரின் கோமுக யக்ஷனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அன்றியும், சமணர்களில் நந்திகணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள்வர். அச்சநந்தி, ஆரிய நந்தி, பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்த சத்தியஞான தரிசனிகள் என்பவர் மெய்கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களில் பண்டையத் தொடர்பு அறியப்படும்.

காலனைக் கடந்தது: ஆருகதரின் அருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இயமனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் கூறுகின்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம்.

சிவபெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவாரத்திலும் இச் செய்தி பல இடங்களிற் கூறப்பட்டுள்ளது.

‘‘சாடினார் காலன் மாளச் சாய்க்காடுமேவினாரே’’

என்றும்,

‘‘காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே’’

என்றும்,

‘‘சாற்றிநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே’’

என்றும் தேவாரம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள்கள் காட்டக் கூடுமாயினும் விரிவஞ்சி விடுகின்றோம் இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுவாம்:

‘‘கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே

கூறுகிற்பது மெய்ப்பொருட் கூற்றையே’’

என்றும், ‘‘காலனை வெந் கண்ட வென்றிப் பெருமானே’’ என்றும் சமணரின் திருக்கலம்பகம் கூறுகிறது.

‘‘கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!

தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்’’

என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி கூறுகிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றாம்.

சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காகக் (மார்க்கண்டற்காக) கூற்றுவனை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் தந்தருளினார் என்பது சைவரின் புராணக் கதை. அருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவா நிலையைத் தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. காமனைக் காய்ந்தது என்னுங் கதையில், பொதுநோக்காகப் பார்க்கும்போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையன போற் காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமையுடையனவே, அஃதாவது சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லாதவர்; ஆகையால், தம் அடியவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர்களை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார். ஆனால், அருகக்கடவுள், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது,

காமனைக் காய்ந்தது: அருகப்பெருமானும் சிவபெருமானும் காமனைக் காய்ந்தவர் (வென்றவர்) என்று சமணராலும் சைவராலும் கூறப்படுகின்றனர். இவற்றையும் ஆராய்வோம்:

‘‘செற்றங் கனங்கனைத் தீவிழித்தான் தில்லை யம்பலவன்

நெற்றியிற் கண் கண்ட கண்கொண்டு மற்றினிக்

காண்பதென்னே’’

என்றும்

‘‘மகர வெல்கொடி கைந்தனைக் காய்ந்தவன்’’

என்றும்,

‘‘தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்

காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்’’

என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம். சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. அருகப்பெருமான் காமனைக் காய்ந்த செய்தியை ஆருகதமத நூல்களிற் காண்போம்.

‘‘காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு

நாம மல்லது நவிலாது என்நா.’’

என்று கவுந்தியடிகள் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப்பதிகாரத்தில்.

‘‘அல்லற் பிறவி அகன்றோய் நீ! ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!

வெல்லற்கரிய அனங்கனைமெய்,

வெண்ணீறாகவெகுண்டோய்நீ!’’

என்பது நீலகேசி.

‘‘களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த

அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப’’

என்பது சீவகசிந்தாமணி.

‘‘சிலைவயங்கு தோளனங்கள் திறலழித்த விசயமென்னோ?’’

‘‘கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்

கனன்றாய் தூய

விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்

கறமுரைத் தாய்’’

என்பது திருக்கலம்பகம். இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின்றன.

பொது நோக்காகப் பார்க்கும்போது, சிவபெருமானும் அருகப்பெருமானும் காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத்தில் வேறுபாடு உண்டு. அஃதாவது சிவபெருமான், மற்றவர் பொருட்டுக் காமனைக் காய்ந்தார். அருகப்பெருமானோ, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை நீக்குவதற்காகக் காமனைக் காய்ந்தார்.

முப்புரம் எரித்தது: சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சமண சமய நூல்கள் கூறுகின்றன.

தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு:

‘‘சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்’’

‘‘வறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும்

மந்திரத் தேர்ப்

பறவைப் புரமெரித்தார் எம்மை யாளும் பசுபதியே’’

‘‘செம்பு கொப்புளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி

அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீ ரட்டனாரே’’

முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக் கதை கூறுகிறது. ஆனால், முப்புரம் என்பது மும்மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது.

‘‘அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புர மாவன மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார் அறி வாரே’’

என்பது திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம். இதனால், முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்களிடம் பொருந்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்று தத்துவப் பொருள் கொள்ளவேண்டும்.

சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் கூறுகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். சமண சமய நூல்களில் இருந்து இதனை விளக்குவாம்.

‘‘ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்

திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா’’

என்று, கவுந்தி அடிகள் அருகப் பெருமானைப் போற்றுகிறார் (சிலப்பதிகாரம் நாடு காண் காதை). இதற்கு அடியார்க்கு நல்லார் உரை வருமாறு: ‘‘எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப்பட்ட ஞான பாதமாகிய திருமொழியைக் கேட்டற்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறப்பனவல்ல.’’

‘‘முரணவிய வென்றுலகம் மூன்றினையும், மூன்றில்

தரணிமேல் தந்தளித்த தத்துவன்தான் யாரே’’

(சிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 81)

இதற்கு நச்சினார்க்கினியர் உரை : ‘‘மூன்றுமதிலையும் அழித்து அங்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்றாகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் யார்தான்?’’

‘‘அரணங்கொடிய மதின்மூன்றும் அழியக்கனன்றீர் அன்றுள்ள

முரணம் பொன்றே நுமக்கங்கு.....................’’

என்பது திருக்கலம்பகம்.

‘‘காவலாகிய கொடுமையையுடைய ஆவரணங்களான முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கணையே உமக்கிருந்தது;’’(பழைய உரை)

குறிப்பு : சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப்பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் என்பதும் வெளிப்பார்வைக்கு ஒரே கருத்துள்ளனவாகத் தோன்றினாலும், உண்மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின் தத்துவக் கருத்தை அறிந்தவர் தாம் உணரமுடியும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை எனின்:

சைவ சமயக் கருத்துப்படி சிவபெருமான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்களை அழித்தார் என்றால் ஆன்மாக்களிடம் உள்ள இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். சிவபெருமான் தம்மிடமிருந்த இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள் அன்று. என்னை? இறைவன் இயற்கையாகவே இக்குற்றங்கள் இல்லாதவர் ஆகலின்.

ஆனால், சமணரின் அருகக்கடவுள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் குற்றங்களையும் அழித்தார் என்றால், சமண சமயக் கருத்துப்படி, தம்மிடமிருந்த இம்மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். என்னை? மற்ற உயிர்களிடமுள்ள இக்குற்றங்களை அருகக் கடவுள் அழிப்பவர் அல்லர். ஒவ்வோர் உயிரும் தம்மிடம் உள்ள குற்றங்களைத் தாமே முயன்று அழிக்க வேண்டும் என்றும் அருகக்கடவுள் பிறரிடமுள்ள இக் குற்றங்களை அழிக்கமாட்டார் என்றும் சமண சமய சாத்திரம் கூறுகின்றது.

ஆகவே, முப்புரம் எரித்த கதையில் இரண்டு சமயத்துக்கும் ஒற்றுமையுள்ளதுபோலக் காணப்பட்டாலும், அடிப்படையான தத்துவக் கருத்தில் மாறுபாடு உண்டு என்பது அறியத்தக்கது.

ஐயனார்: ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் எனும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த் தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகின்றது. இந்தத் தெய்வம் பௌத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பௌத்த மதத்திலிருந்து ‘சாஸ்தா’ என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் எமது நூலிற் காண்க. சமண சமயத்திலிருந்து இத் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஈண்டுக் கூறுவோம். சமணர்களுடைய கோவில்களில் இத் தெய்வத்தை இன்றுங் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத் தெய்வத்திற்கு ‘பிரமம் யட்சன்’ ‘சாத்தனார்’ முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். முதன் முதலாக, ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக் கோயிலைக் கண்ட போது, அங்கு இத் தெய்வத்தின் உருவமும் பூசிக்கப்படுவதைக் கண்டு வியப்படைந்தோம். பின்னர், ஏனைய சமணத் திருக்கோயில்களுக்குச் சென்றபோதும் அங்கும் இத்தெய்வத்தின் திருவுருவம் பூசிக்கப்படுவதைக் கண்டோம். இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறு தெய்வங்களில் ஒன்று. சமணராக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், பௌத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை என்பதே. சைவக் கோயில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமணக்கோயில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் தனிக் கோயிலும் பூசை முதலிய சிறப்பும் பெற்று இன்றும் விளங்குகின்றார்.

‘‘பெரியபுராணம்’’ ‘‘அறுபத்துமூன்று அடியார்’’

‘‘ஸ்ரீபுராணம்’’ ‘‘சித்தாந்தம்’’

பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைவ நூல் இப் புராணத்திற்கு முதல் நூலாக உள்ளவை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் ஆகும். இந்தத் திருத்தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்றும் வழங்குவர். இப் பெயர்கள் சமணரது ‘‘திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம்’’ என்றும் பெயரிலிருந்து அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் சமணர்களுக்குரிய நூல். இதில் 63 பெரியார்களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. திரிஸஷ்டி = அறுபத்துமூன்று; ஸலாகா புருஷர் = பெரியார். சமணருக்கு 63 பெரியார்கள் உள்ளனர். அவர்களாவன: தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதிவாசுதேவன் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவர். இவர்களுடைய சரித்திரங்களைக் கூறும் நூலுக்குத் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் என்பது பெயர்; அஃதாவது அறுபத்து மூன்று பெரியார்கள் சரித்திரம் என்பது பெயர்.

சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்படவில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள். எழுபத்திரண்டை ஏன் 63 ஆகக் குறைக்கவேண்டும்? சமணரது 63 அடியாருக்குச் சமானமாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அன்றியும் கன்னட மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றது. அவற்றிற்கும் அறுபத்து மூவர் பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். அஃதாவது, அருவத்துமூவர புராதன சரிதெ என்றும், அருவத்து மூரு புராதன சரணர சரிதெ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.31 இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அறுபத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது.

சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீபுராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவாள நடைநூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீபுராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப்ப டுகின்றன. சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கிவருவது போலவே, சைவர்களும் தமது பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக் காலத்தில் வழங்கி வந்தனர். ஆனால், இந்த வழக்கு இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை.

தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. ‘‘திருப்பங்குனி யுத்திரத்து ஆறாந்திருநாளான புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி’’.32

இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவரது 9 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவர் கி.பி. 1172 முதல் 1186 வரையில் அரசாண்ட இராசாதிராசர் II ஆவர். இந்தச் சாசனத்திலே, திருவொற்றியூர்க் கோயிலில், ஸ்ரீ புராணத்தில் ஆளுடைய நம்பி புராணம் படிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில், பெரியபுராணம் ஸ்ரீபுராணம் என்று கூறப்படுவது காண்க.

ஸ்ரீபுராணம், அறுபத்து மூவர் என்பவைகளைச் சைவரும் சமணரும் வழங்கியதுபோலவே சித்தாந்தம் என்னும் பெயரையும் இரு சமயத்தாரும் தம் சமய சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கி வருகின்றனர். சித்தாந்தம் என்பதற்கு முடிந்தமுடிபு என்பது பொருள். ஆயினும் இந்தப் பெயரைச் சமணரும் சைவரும் தம் சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கியுள்ளனர்.

‘‘ஸ்ரீகோமாறஞ் சடையற்கு யாண்டு 3. மதநெச்சுர நாட்டுத் திருச்சுரத்து திருமலைத் தேவர்க்கு குணசாகர படாரர்செயவித்த குழுவாணை நல்லூர் தும்பூர்க் கூற்றத்து காடந்தைகுடி தர்மசித்தனான தயாமாறர் திருமாலடைஞ்சிருந்து சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹாரதானமாகத் தன் முதல் குடுத்து33 என்று கழுகுமலைக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இதில் சமணருடைய சாத்திரம் சித்தாந்தம் என்று கூறப்பட்டிருப்பது காண்க. சைவரும் தமது சமய சாத்திரத்தைச் சித்தாந்தம் என்று கூறுகின்றனர்.

சித்தர் வணக்கம்

பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத் தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம் இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு. சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர். எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான் மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம் செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே, ‘‘சிததம நம’’ என்று கன்னட நாட்டினரும், ‘‘ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம’’ என்று தெழுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.34

இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர் வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக் காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப்படை.

________________________________________________________________________

24. இந்துமதம் என்று இங்குக் கூறுவது சைவவைணவ மதங்களை.

25. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதரர் என்று கூறப்படுகின்றனர்.

26. ஸ்ரீபுராணம்; நூன்முகம், பக்கம் 32.

27. P.116, Adisvara Caritra. Trisasti Salaka Purusa Carita. Vol I Gaekwad’s Oriental Series No.LI.

28. 34 ஆம் செய்யுள்.

29. காளிக்குக் கூளி கூறியது. 209

30. கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பரமேஸ்வரவர்மன் என்னும் பல்லவ அரசன், சைவ சமயத்தவனாய் எருதுக் கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக் கொடியைச் சில புராணங்கள் ‘தர்மத்துவஜம்’ என்று கூறவதும் ஈண்டுக் கருதத்தக்கது. இவன் பரம்பரையின் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.

31. P.5.6 Mys. Arch. Annual Report. 1925.

32. 371 of 1911. No. 1358 SII (Texts) Vol.V.P.494.

33. S.I.I. Vol V.

34. ஸ்ரீபுராணம், நூன்முகம், பக்கம் துதுதுடி.

Link to comment
Share on other sites

வாரணாசியில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார் நூர் பாத்திமா. வாரணாசியில் சிவன் கோவில் ஒன்றை க்ட்டி, 2005-ல் மகாசிவராத்திரி அன்று பொதுமக்கள் தரிசனத்திற்காக திறந்து விட்டார். 'என் கனவில் தோன்றிய சிவன், தனக்குக் கோவில் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதை இப்போது நிறைவு செய்து விட்டேன்!' எனும் முஸ்லிம் பெண்ணான பாத்திமா, ஒரு விதவை.

வாரணாசி கங்கேஸ்பூர் பகுதியில் அவர் கட்டியுள்ள கோவிலின் பெயர் ருத்ரேஸ்வர் மகாதேவ் கோவில்.

மதங்கள் உறவின் வளர்ச்சிக்காக இருக்கவேண்டுமே தவிர உயிர் வதைக்காக அல்ல. மதநல்லிணக்கத்திற்கு மீண்டும் ஒரு படிக்கல்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.