யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

செந்தமிழ்த்தாயி

நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி எந்தன்

நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி

ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி நாவில்

அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி.

 

மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி உன்னை

வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி

பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி புவி

போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி

 

வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி பலபேர்

வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி

அம்பா நீ அருள்புரிவாய் செந்தமிழ்தாயி- அந்த

அற்பர்களை ஒளித்திடம்மா செந்தமிழ்த்தாயி.

 

சாதி மதமொளித்துச் செந்தமிழ்த்தாயி எங்கும்

சமநீதி காணவைப்போம் செந்தமிழ்த்தாயி

ஆதியிலே இருக்கலையே செந்தமிழ்த் தாயி இந்த

அவமானச் சின்னமெல்லாம் செந்தமிழ்த்தாயி.

 

மனுநீதிப் பொய்மைக்கெல்லாம் செந்தமிழ்த்தாயி நாம்

மருவாதை காட்டலாமோ செந்தமிழ்த் தாயி

தனி நீதி எமக்கிருக்கு செந்தமிழ்த்தாயி தமிழன்

சங்ககால வாழ்விருக்கு செந்தமிழ்த் தாயி

 

சாதி பலபிரித்துச் செந்தமிழ்த்தாயி உன்னைச்

சந்தி சிரிக்க வைத்தார் செந்தமிழ்த்தாயி

பேதம் பல கொணர்ந்தார் செந்தமிழ்தாயி விழி

பிதுங்கிடவே உன்னை வைத்தார் செந்தமிழ்த்தாயி

 

 

எல்லாப் பழியுமினிச் செந்தமிழத்தாயி உனக்கு

இல்லாமல் ஆக்கிடுவோம் செந்தமிழ்தாயி

பொல்லார் புகுந்து விட்டார் செந்தமிழ்த்தாயி அவரை

பொறமுதுகிட்டோட வைப்போம் செந்தமிழ்த்தாயி.

 

ஆண்ட தமிழகத்தை செந்தமிழ்த்தாயி நாங்க

மீண்டொருகால் ஆழவைப்போம் செந்தமிழ்த்தாயி

வேண்டும் எமக்கு இனி செந்தமிழ்த்தாயி - எங்க

வெவசாயத் தொழில் வளர்ச்சி செந்தமிழ்த்தாயி.

 

நாம் தமிழராயுதித்தோம் செந்தமிழ்த்தாயி மக்கு

நல்ல வழி காட்டிடம்மா செந்தமிழ்த்தாயி

சோம்பரில்லா விவசாயி சின்னத்தத் தாயி நம்ம

தொகுதியெங்கும் வெல்ல வைப்பாய் செந்தமிழ்த்தாயி.

 

கரும்பு வெவசாயி சின்னத்தத் தாயி நீ

கருணை கூர்ந்து காத்திடம்மா செந்தமிழ்த்தாயி

இரும்புறுதியோடு எங்கும் செந்தமிழ்த்தாயி எங்கள்

இளைஞர் படை இருக்குதம்மா செந்தமிழ்தாயி

----------------------------------------------------------------.

Share this post


Link to post
Share on other sites

செந்தமிழ் தாய்க்கு ஒரு சிறப்பான பாமாலை....... நல்லாய் இருக்கு கரு........!  🌺

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Posts

    • லூசு மனுஷி வைனை குடிச்சு நித்திரை அடித்துவிட்டு  பாவம் ஒரு பிளைட் அட்டென்டன்னுக்கு வேலைக்கு ஆப்பு வைச்சு இருக்கு. இதுக்கு இவாவுக்கு செக் எழுதுவதைவிட ...  எயர்போர்ட் பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் தண்டம் கட்ட வேண்டும். 
    • காசுருந்தா ஆசைப்பட்ட அல்லாத்தையும் வாங்கலாம்... அம்புட்டுக்கும் ஆசைப்படு பாலகுமாரா...
    • 19ஆவது திருத்தத்தின் பாதிப்பை ஜனாதிபதி இப்போதே உணர்கிறார் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பாதிப்பு தனது கண்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, 19ஆவது திருத்தத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்துள்ளமைத் தொடர்பில், அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். ஹங்குராகத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் உள்ளன தேர்தலுக்கு. எனவே 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு நேரமில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/19ஆவது-திருத்தத்தின்-பாதிப்பை-ஜனாதிபதி-இப்போதே-உணர்கிறார்/175-234531
    • ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா? சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..???? கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை! கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை.  எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்!