Jump to content

செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sfodov.jpg

செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்?

தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,500 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்ததாகவும், 67 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஊடகம் ஒன்று, அந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதனை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிலநடுக்கத்தினை சுவிட்சர்லாந்தினைச் சேர்ந்த Markus Häring என்பவரே செயற்கையாக உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

தென் கொரியாவின் Pohang பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, அப்பகுதியில் நடத்தப்பட்ட geothermal சோதனைகளின் தொடர்ச்சியே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

geothermal நிபுணர் ஆயசமரள Markus Häring ஐ பொறுத்தமட்டில், கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸல் பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்திற்கு காரணமானவர் என ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/செயற்கையாக-உருவாக்கப்பட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தாச்சே! தமக்கு பிடிக்காத நாடுகளில் பேரழிவை உருவாக்க முடியும்.

ஏற்கனவே செயற்கை சூறாவளி, செயற்கை மழை இப்ப செயற்கை நிலநடுக்கமா?!

ஈரான் மழை வெள்ளம் இப்படியான ஒன்றாயிருக்கலாமோ?

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

ஏற்கனவே செயற்கை சூறாவளி, செயற்கை மழை இப்ப செயற்கை நிலநடுக்கமா?!

புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதன் இவை அனைத்தும் செயற்கையாகக் கண்டுபிடித்தபின்பு.....!! உயிருள்ள இவை அனைத்தும் உலகில் எதற்கு....??

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.'

'அறிவும் அளவுக்கு மிஞ்சினால் அழிவுதான்.' Bildergebnis für %e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் பழைய செய்தி, ஏன் இப்போது வெளிவருகிறது எனத் தெரியவில்லை.

hydro-fracking எனப்படும் நிலத்தடி எரிவாயு/எண்ணை எடுக்கும் முறையில் பெருமளவு நீர் பூமிக்கடியில் செலுத்தப் படுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவது பல காலமாக அறியப் பட்ட உண்மை. 2011 இல் அமெரிக்காவின் ஒகலஹோமாவில் 5.7 ரிக்டர் பலமான நிலநடுக்கமும் இவ்வாறே ஏற்பட்டிருக்கலாம் என்பது கணிப்பு. இதனால் சில அமெரிக்க மாநிலங்களில் hydro-fracking தடை செய்யப் பட்டிருக்கிறது. எனவே இது செயற்கையான பேரழிவு ஆயுதமாக உருவாக்கப் படவில்லை! ஒரு சூழல் மீதான அத்துமீறிய மனித நடவடிக்கையின் விளைவாக உருவாகியிருக்கிறது.

https://science.sciencemag.org/content/360/6392/1007

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.