Jump to content

“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்

 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

11.jpg

பாவனையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக் கலை தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களைமாற்றியமைக்கும் வகையில், HUAWEI P30 Pro வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான உயஅநசயவையும் கொண்டுள்ளதுடன், HUAWEIஇன் உலகின் முதலாவது SuperSpectrum சென்சர் , SuperSpectrum மற்றும் புதிய மட்டத்தில் SuperSpectrum அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் 32MP முன்புற உயஅநசய ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Huawei இன் புதிய சாதனம் அறிமுக நிகழ்வில், Huawei சாதனங்களுக்கான இலங்கைக்கான தலைமை அதிகாரி பீற்றர் லியு கருத்துத் தெரிவிக்கையில், “எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புத்தாக்கத்தினூடாக சிறந்த ஸ்மார்ட்ஃபோன் சாதனங்களை Huawei தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. Huawei P தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக Huawei P30 Pro  அமைந்துள்ளது. உலகின் முதலாவது Huawei P30 Pro சென்சர், புதிய HUAWEI Time of Flight (ToF) Camera மற்றும் மேம்படுத்தப்பட்ட optical மற்றும் AI image stabilization தொழில்நுட்பம் போன்ற பல புதிய உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த புரட்சிகரமான தொழில்நுட்பங்களுடன், optical kw;Wk; AI image stabilization இனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சிறந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொள்ள முடியும்.

1/1.7-அங்குல HUAWEI SuperSpectrum  சென்சர், வெளிச்சத்தை முற்றிலும் மாறுபட்டவிதத்தில் பார்வையிடுவதுடன், பரந்தளவு நிலைகள் மற்றும் ஒளி காணப்படும் சூழலில், மிகச்சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும். குறிப்பாக மிகவும் குறைந்த ஒளி காணப்படும் பகுதிகளில் கூட, தெளிவான, வர்ணமயமான படங்களை எடுத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.

புதிய HUAWEI SuperSpectrum  வடிவமைப்பினூடாக, HUAWEI SuperSpectrum லென்ஸ்கள், 5 மடங்கு HUAWEI SuperSpectrum 10 மடங்கு HUAWEI SuperSpectrum மற்றும் 50 மடங்கு digital zoom போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியும். HUAWEI P30 Pro இல் காணப்படும் பிரத்தியேகமான உள்ளம்சம் யாதெனில் HUAWEI ToF (Time of Flight) Camera ஆகும். இதனூடாக, ஆழமான தகவல்கள் உள்வாங்கப்பட்டு, துல்லியமான புகைப்பட வகைப்படுத்தல் வழங்கப்படுகிறது. HUAWEI ToF (Time of Flight) Camera உள்ளம்சத்தினால், கூந்தல் போன்ற மிகவும் நுண்ணியளவிலான அம்சங்களும் உள்வாங்கப்படுகின்றன. AI HDR+ ஊடாக, முன்புற மற்றும் பின்புற cameraகளுக்கு ஒன்றிணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை துரித கதியில்எடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளன. இதனூடாக அளவுக்கதிகமாக படங்கள் ஆட்டம் கண்டு தெளிவற்றிருப்பது தவிர்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்புகள் நிறைந்த வீடியோக் கலைஞர்களுக்கு உதவும் வகையில், HUAWEI SuperSpectrum சென்சர் மூலமாக குறைந்த ஒளியில் சிறந்த வீடியோக்களை எடுத்துக் கொள்ள முடியும். இதனூடாக இரவு வேளைகளில் எடுக்கப்படும் படங்கள் பிரகாசமானவையாகவும், அதிகளவு தெளிவானவையாகவும் அமைந்திருக்கும். HUAWEI AIS மற்றும் OIS அம்சத்தினூடாக சகல வீடியோ பதிவுகளுக்கும் தெளிவான அம்சம் சேர்க்கப்படுகிறது. மேலும் SuperZoom லென்ஸ் ஊடாக நெருக்கமாக படங்களை எடுக்க முடியும் என்பதுடன், AI Video Editor மூலமாக பாவனையாளர்களுக்கு தமது வீடியோக்களுக்கு பின்புல இசை மற்றும் விசேட effects போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியும். HUAWEI P30 தெரிவுகள் மொபைல் புரொடக்ஷன் ஸ்டுடியோ ஆக அமைந்துள்ளன.

P30 Pro இல் காணப்படும் HUAWEI Dual-View வீடியோ ஊடாக, ஒன்றுக்கு மேற்பட்ட கமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி, ஒரே காட்சியை இரு தோற்றங்களில் படமெடுக்க முடியும். HUAWEI P30 தெரிவுகள் காட்சியின் முழுத் தோற்றத்தையும் வழங்குவதுடன், பொருள் ஒன்றை நெருக்கமாக படமெடுத்துக் கொள்கின்றது.இதனூடாக வீடியோ அம்சத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

12.jpg

6.47 அங்குல  HUAWEI P30 Pro மற்றும் 6.1 அங்குல HUAWEI P30 ஆகியன Breathing Crystal, Aurora Blue மற்றும் கறுப்பு ஆகிய வர்ணங்களில் கிடைக்கின்றன. FHD+ (2340x1080) Dewdrop டிஸ்பிளேயில் மிகவும் சிறிய முனைவு (notch) பகுதி காணப்படுகிறது. இதனூடாக பெருமளவு காட்சி பகுதி வழங்கப்படுகிறது. பெருமளவு bezel-less முன்புற கிளாஸில் தொடுதிரை கைரேகை உணரி உள்ளடங்கியுள்ளது. இதனூடாக துரிதமாக மற்றும் பாதுகாப்பான சாதன அன்லொக் வசதி வழங்கப்படுகிறது. HUAWEI P30 Pro இல் HUAWEI Acoustic தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. இதனூடாக உயர் தரம் வாய்ந்த ஓடியோக்களை sound emitting display மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

HUAWEI P30 தெரிவுகள் 7nm Kirin 980 processor இனால் வலுவூட்டப்பட்டுள்ளன. இதனூடாக சிறந்த வினைத்திறன் வழங்கப்படுவதுடன், உயர் செயற்திறன் மற்றும் அதன் Dual-NPU AI செயற்பாட்டு வலுவினூடாக வேகமான புகைப்பட இனங்காணல் போன்றன வழங்கப்படுகின்றன. இதில் Extendable Read-Only File System (EROFS) காணப்படுகிறது. இதனூடாக, கட்டமைப்பு ஏற்புத்தன்மை (System Responsiveness) மேம்படுத்தப்படுகிறது. பிந்திய EMUI 9.1 ஊடாக, ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லப்டொப்களிடையே தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கு HUAWEI Share OneHop வழங்கப்படுகிறது.

HUAWEI P30 Pro 4200 இல் 4200mAh battery (typical value) மற்றும் 40W HUAWEI SuperCharge போன்றன அடங்கியுள்ளன. இதனூடாக சாதனத்தை 30 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். நாள் முழுவதும் கடுமையான பாவனையிலும் சாதனத்துக்கு வலுவூட்டிய வண்ணம் பேண உதவுகின்றது. இதில் காணப்படும் HUAWEI SuperCool தொழில்நுட்பத்தினூடாக, கடுமையான பாவனைகளின் போதும் தொலைபேசியை வெப்பமடையாமல் பேண முடியும். உயர் வயர்லஸ் தொடர்பாடல் ஆற்றலைக் கொண்டதாக இந்த சாதனம் அமைந்துள்ளது. இரட்டை SIM மற்றும் Dual VoLTE இணைப்புத்திறனை வழங்கக்கூடியது.

13.jpg

Huawei P30 Pro இன் விலை ரூ. 179,999 ஆக அமைந்தள்ளதுடன், இலங் கையின் பாவனையாளர்களுக்கு 8GB Ram மற்றும்  256GB ROM போன்ற அளவுகளில் கிடைக்கும். ஒருவருட உத்தரவாதம் வழங்கப்படும் என்பதுடன், நாடு முழுவதிலும் காணப்படும் சகல rfy Huawei Experience சென்ரர்களிலும், சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி போன்றவற்றினூடாகவும் நாடு முழுவதிலும் விநியோகிக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் விற்பனை நிலையங்களிலும் இந்த புதிய சாதனத்தை கொள்வனவு செய்ய முடியும்.

 

http://www.virakesari.lk/article/53272

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா..!  vil-bah.gif

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் நான் வாங்கிய ஹூவாய் P20 ப்ரோ விற்கும், இந்த ஹூவாய் P30 ப்ரோவிற்கும் அதிக வித்தியாசமில்லை..!

இதில் நான்கு கேமெராவும், மெமரி கார்ட் ஸ்லாட்டும், வயர்லெஸ் சார்ஜிங் மட்டும் கூடுதல் வசதியாக உள்ளது.

இவர்கள் கூறும் இந்த வசதிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவோமா என்பது கேள்விக்குறியே. இது சந்தைப்படுத்துதலின் உத்தி, பயனர்களை ஒவ்வொரு வருடமும் கவர்ச்சிகரமான தொழிற்நுட்ப வாசகங்களைக் கூறி தன் பக்கம் இழுக்கும் மாய யுக்தி.

இதில் மயங்கினால், காசுதான் கரியாகும்..! கைபேசிகளை சந்தையில் மறுபடியும் விற்க பெறுமதியும் (Resale Value)கிடையாது.

ஒரு கைப்பேசி வாங்கினால் குறைந்தது 7 வருடங்களாவது பயன்படுத்தும் வகையில் நம் மனதை தெளிவுடன் உறுதியாக இருந்தால் இவர்களின் சந்தை படுத்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

அட போங்கப்பா..!  vil-bah.gif

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் நான் வாங்கிய ஹூவாய் P20 ப்ரோ விற்கும், இந்த ஹூவாய் P30 ப்ரோவிற்கும் அதிக வித்தியாசமில்லை..!

இதில் நான்கு கேமெராவும், மெமரி கார்ட் ஸ்லாட்டும், வயர்லெஸ் சார்ஜிங் மட்டும் கூடுதல் வசதியாக உள்ளது.

இவர்கள் கூறும் இந்த வசதிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவோமா என்பது கேள்விக்குறியே. இது சந்தைப்படுத்துதலின் உத்தி, பயனர்களை ஒவ்வொரு வருடமும் கவர்ச்சிகரமான தொழிற்நுட்ப வாசகங்களைக் கூறி தன் பக்கம் இழுக்கும் மாய யுக்தி.

இதில் மயங்கினால், காசுதான் கரியாகும்..! கைபேசிகளை சந்தையில் மறுபடியும் விற்க பெறுமதியும் (Resale Value)கிடையாது.

ஒரு கைப்பேசி வாங்கினால் குறைந்தது 7 வருடங்களாவது பயன்படுத்தும் வகையில் நம் மனதை தெளிவுடன் உறுதியாக இருந்தால் இவர்களின் சந்தை படுத்துவிடும்.

Huawei P20 Pro வாங்குமுன் வைத்திருந்த கை தொலைபேசியை எப்போ வாங்கினீர்கள்?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

Huawei P20 Pro வாங்குமுன் வைத்திருந்த கை தொலைபேசியை எப்போ வாங்கினீர்கள்?😜

அதற்கு முன் 2002ல் நோக்கியா 8850.. 

அதன் பின்னர் சாம்சுங் கேலக்ஸி 2012  😋 

சாம்சுங் காலக்ஸி திடீரென உயிரை விட்டுவிட்டது. வேறு வழியின்றி சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றால் "இன்னமுமா இதை உபயோகப்படுதுகிறீர்கள்..? சார், நீங்கள் இப்படியிருந்தால் நாங்கள் எப்படி பொழைப்பை ஓட்டுவது..?" என சிரித்தார், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி. 

காரணம் கேட்டால், "மதர் போர்டு போச்சுது,  நீங்கள் வேறு கைப்பேசிதான் வாங்க வேண்டுமென"க் கூறிவிட்டார்.

அந்த பழுதான கைப்பேசியை இன்னமும் வைத்துள்ளேன், பொழுது போகவில்லை என்றால் அதை பிரித்து மேய்வதுதான் வேலை..!   :)

   Nokia-8855-02.jpg 41exDZBI2KL.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.