Jump to content

முற்றிலும் முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது.

இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பும் பாஜகவின் அறிக்கையில் இல்லை.

அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்த எந்த ஒரு அம்சத்தையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முன்வைத்திருந்தன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அது இடம் பெற்றுள்ளதா?

கோரிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அறிவிப்பு இல்லை நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
     
மாநிலப் பட்டியலில் கல்வி அறிவிப்பு இல்லை மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டுவரப்படும்
     
மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் அறிவிப்பு இல்லை அறிவிப்பு இல்லை
     
பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை அறிவிப்பு இல்லை அறிவிப்பு இல்லை

பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : ஓர் ஒப்பீடு

வேலைவாய்ப்பு

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
தொழில்நுட்பம், சுற்றுலா, தொலைதொடர்பு என 22 துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்க இதற்காக தனியே தொழில், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைக்கப்படும்.
   
தொழில் முனைவோருக்கு 50 லட்சம் வரை பிணை இல்லாத கடன் வழங்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். கல்வி மற்றும் சுகாதார துறைகளை விரிவுப்படுத்தி, அதன் மூலமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
   
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும் சில ஆண்டுகள் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்த ஆண் மற்றும் பெண்களுக்கு குறைந்த திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இலங்கை

விவசாயம்

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
   
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கடன் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் எடுக்க அனுமதிக்கப்படாது.
   
விவசாயத்துறையின் உற்பத்தியை பெருக்க 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். விவசாயத்துறையின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில், தனியே விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
   
வட்டி இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் வரை குறைந்த கால விவசாய கடன்கள் வழங்கப்படும். விவசாய மேம்பாடு மற்றும் திட்டமிடுதலுக்கு தனியே தேசிய ஆணையம் அமைக்கப்படும். இதில் விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்கள் இடம் பெறுவார்கள்.
இலங்கை

கல்வி

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
கல்வி கற்றல் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும். உயர்கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும்.
   
2024ஆம் ஆண்டிற்குள் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் திறக்கப்படும். முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்படும்.
   
மத்திய கல்வி நிறுவனங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 50 சதவீத இடங்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வி நிறுவனங்களிலும் இதனை செய்ய ஊக்குவிக்கப்படும். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று கூறும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இதற்கு பதிலாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.
இலங்கை

மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். படைப்பாற்றலின் சதந்திரத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்படும்.
   
சமஸ்கிருத மொழியை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்படுவது உறுதி செய்யப்படும். கலைத்துறையினரின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். தணிக்கை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அதனை தடுக்க நினைக்கும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
   
அழியும் நிலையில் இருக்கும் மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிப்புரிமை சட்டம் வலிமையாக்கப்படும்.
   
சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம்.  
இலங்கை

தேசிய பாதுகாப்பு

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
எந்த வகையிலும் தீவிரவாதம் பொறுத்துக் கொள்ளப்படாது. பாதுகாப்பு துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும்.
   
பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முப்படைகளின் தாக்குதல் திறனை வலிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
   
இடதுசாரி பயங்கரவாத்த்தை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தரவுகள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு, தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் வணிக வழிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த தேவையான கொள்கைகள் வகுக்கப்படும்.
இலங்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலம்

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்து அவ்வாறே நீடிக்கும். எந்த மாற்றமும் அதில் ஏற்படுத்தப்படாது.
   
அரசமைப்பு சட்டத்தின் 35A பிரிவு, காஷ்மீரில் நிரந்தரமாக குடியிருப்போர் அல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பாரபட்சமாக இருப்பதால் அதை நீக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த சட்டப் பிரிவு தடையாக உள்ளது என்று நம்புகிறோம். காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம். மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர், சம்ப் பகுதிகளில் இருந்து அகதிகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக நிதியுதவி வழங்குவோம் காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களில் துன்புறுத்தப்படுவது தொடர்பான வழக்குகள் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

https://www.bbc.com/tamil/india-47856168

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.