Jump to content

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அரசு நட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது

இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டும், திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் பல கட்டப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஆதரவாளர்கள் மீது தடியடி தாக்குதல், கைது நடவடிக்கையும் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில் எட்டுவழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது. இதன்படி பசுமைவழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

எட்டு வழிச்சாலை

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரம் ,பூலாவரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் பொது மக்கள் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கேக் வெட்டி, இனிப்புகள் ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும் போது, பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கள் நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்றம் மூலம் தங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என்றும் இனியாவது அரசு இயற்கையையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் எந்த ஒரு காலத்திலும் எட்டு வழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறினர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசின் தீர்ப்பு குறித்து கவிதா என்னும் விவசாயி கூறும் போது, தங்களின் போராட்டத்திற்கு நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக, தங்களின் குடும்பத்தினரின் சார்பில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஆயிரக்கணக்கில் காவல்துறையை கொண்டு தங்களை கட்டுப்படுத்த முயன்றது தங்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் தீர்ப்பு தங்களை மகிழ்ச்சியுற வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் எட்டு வழிச்சாலைக்காக போடப்பட்ட எல்லைக் கற்களை பொதுமக்கள் ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தங்களை வேதனையுற செய்த, எல்லைக்கற்கள் தங்கள் நிலத்தில் இருக்கக்கூடாது என தூக்கி வீசினர் .

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

ஆனால், இந்த அரசாணையை குறித்து எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து தீர்ப்பு மகிழ்ச்சியை தந்தாலும், முழு மனநிறைவை அளிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினை ரத்து செய்வதாக அரசு அறிவிக்காமல் அரசாணை ரத்து என தெரிவித்துள்ளது தங்களின் மனநிலையை வருத்தமடைய செய்துள்ளதாக கூறினார். தற்போதைய தீர்ப்பின் படி பார்க்கும்போது மீண்டும் அரசு புது அரசாணையை கொண்டு வரவாய்ப்பு உள்ளது என்றும், அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் தங்களின் எதிர்ப்பு மிக அதிகமாக வலுக்கும் என தெரிவித்தார்.

சேலம் முதல் காஞ்சிபுரம் வரையில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பம் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கிறது. தாங்களும் தங்களின் உறவுகளும் சேர்த்து நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் தங்களின் கைகளில் உள்ளது என்றும் எட்டுவழி சாலை திட்டம் கொண்டுவராத, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே தங்களின் வாக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒருவேளை புதிய அரசாணைக்காக மேல் முறையீட்டுக்கு அரசு முறையிட்டால் தாங்கள் போராட்டம் மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.

புதிய சாலை தங்களுக்கு தேவையில்லை என்றவர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில் மேப்பாலங்கள் கட்ட அரசு முன்வரவேண்டும், அதேபோல் அரூர் வழியாக மாநில நெடுஞ்சாலை போல் இருவழியாக உள்ள அரூர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழியாக மாற்ற அரசு முயற்சியெடுக்காமல், இயற்கையை அழிக்க முற்படும் அரசுக்கு தங்களின் ஆதரவு கண்டிப்பாய் இருக்காது என்றும் ஒற்றுமையாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம் என தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-47854679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் இந்த திட்டத்தை வன்மையாக எதிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 வழிச்சாலை... அடங்க மறுக்கும் அமைச்சர்... அதிருப்தியில் மக்கள்..!

8_way_2_1200x630xt.jpg

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது.

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது.

சென்னை முதல் சேலம்யே 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டன. இதற்கான நிலம் கையப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் அத்துமீறலை எதிர்த்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து பாமக அன்புமணி, திமுக உள்பட பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்து.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி, சுற்றுச்சூழல்துறையிடம் தடையில்லா சான்று உரிய முறையில் பெற வேண்டும் திட்டம் தொடர்பாக மக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல, பாஜக தேசிய செயலாளரான இல.கணேசனும், இது தற்காலிக தடங்கல். தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என என பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக கருத்து தெரிவித்துள்ளதுன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://tamil.asianetnews.com/politics/appeal-against-8-way-road-barriers-said-minister-rajendra-balaji-ppn5p7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ராவணன் தான் முதலாவதாக வழக்கு போட்டது.
பின்னரே மற்ற கட்சிகள் வழக்கில் இணைந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வழி சாலை தீர்ப்பு எல்லாருக்கும் சொந்தம்தான்.. ஆனால் "விதை" நாம் தமிழர் போட்டது

seeman4546-1554785207.jpg

சென்னை: உண்மையிலேயே.. 8 வழிச்சாலை தீர்ப்பு யாருடைய முயற்சியால் கிடைத்தது? யாருக்கு இந்த பெயர் போய் சென்றடையும்? என்பதில் இரு பெரும் சர்ச்சைகள் வெடித்து கிளம்பி உள்ளன.சென்னை டு சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பானது, பாமக சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்துக்கும், உழவர்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல நக்கீரன் இதழில், ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் எவன் கேட்டான் எட்டுவழிச்சாலை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதனால் இந்த தீர்ப்பில் நக்கீரனின் பங்கு உள்ளது என்கிறது அந்த தரப்பு!

நக்கீரன் மட்டுமின்றி சன் நியூஸ் தொலைக்காட்சியும் விவசாயிகளின் அவலத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் பங்கேற்றது. ஆனால் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு யார்தான் காரணம்?

குரல் வளைகள்

8 வழிச்சாலை என்று கார்ப்பரேட்கள் அன்று அறிவித்த உடனேயே விவசாயிகள், தங்கள் உடம்பில், உணர்வில், உயிரில் கலந்த விளைநிலங்களில் அழுது புரண்டார்கள். கண்முன்னே குத்தி கிழிக்கப்பட்ட நிலங்களை கண்டு சுயநினைவு இருக்கும்வரை கதறினார்கள்! எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டன. போராடும் உரிமைகள் நசுக்கப்பட்டன. சொல்லக்கூடிய முடியாத வேதனையில் விவசாய கிணற்றில் உயிரை மாய்த்து கொள்ளவும், பிளேடு, கத்திகளால் தங்களை கிழித்து கொள்ளவும் விவசாயிகள் தயாரானார்கள்!

மறைக்கப்பட்ட உண்மை

எனவேதான் விஷயம் கோர்ட் வரை சென்றது. இது சம்பந்தமாக முதன்முதலில் வழக்கு தொடுத்தது நாம் தமிழர் கட்சிதான்! அதுமட்டுமல்ல.. இந்த திட்டத்தை எதிர்த்து கைதாகி சென்றது அதே கட்சியை சார்ந்த ஒரு பெண் என்பதும் அப்பட்டமாக மறைக்கப்பட்டு வரும் உண்மை ஆகும்!

நாம் தமிழர்

 நாம் தமிழர் கட்சி, தான் தொடர்ந்த வழக்கு, மற்றும் அதன் எண்ணை வெளியிட்டுள்ளது. வழக்கு எண் 16961/2018 என்றும் ஆனால் பாமக வழக்கு எண் 20014/2018 என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. இதற்கான சட்டநகல் ஆதாரங்களையும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக ட்வீட்கள் மிக வேகமாக இணையத்தில் பதிவாகி வருகின்றன.

போராளி பிரகலதா ராம்

திட்டத்தை எதிர்த்து கைதாகி முதல் முதலில் சிறைக்கு சென்றது நாம்தமிழர் கட்சிதான்....! அப்போது சிறை சென்ற 27 பேரில் ஒரே ஒரு பெண் போராளி...! அப்பெண் தான் நம் விழுப்புரம் நாடாளுமன்ற நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி பிரகலதா ராம் என்கிறது ஒரு பதிவு.

எட்டு வழிச்சாலை வழக்கில் தீர்ப்பு!

நாம்தமிழர் தொடர்ந்த வழக்கு எண் 16961/2018. அன்புமணி வழக்கு எண் 20014/2018. அன்புமணி, நாம் தமிழர் தொடர்ந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். மறப்பது மக்கள் இயல்பு... நினைவூட்டுவது நம் கடமை என்கிறது மற்றொரு பதிவு.

வழக்கறிஞர் அறிவிப்பாணை

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தொடுத்த வழக்கில் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு. என்று தெளிவுபடுத்துகிறது மற்றொரு ட்வீட்!

குரல் எழுப்பியது பாமக

ஆக மொத்தம், நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த இந்த செயலில், தன்னை இணைத்துக் கொண்ட பாமக எதற்காக தன்னை பகிரங்கப்படுத்தி கொள்கிறது என தெரியவில்லை. அன்புமணி தரப்பில் கோர்ட்டில் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான்.. மக்களுக்காக பாமகவும் குரல் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாதுதான்.

ஆனால் விதை... நாம் தமிழர் போட்டது! இப்படி நாம் தமிழர் கட்சிதான் வழக்கை முதன்முதலில் பதிவு செய்தது என்பதையும், இதற்காக அக்கட்சியின் பெண் வேட்பாளர் பிரகலதா ராம் முதன்முதலில் சிறைக்கு சென்றார் என்பதையும் நாட்டு மக்கள் உண்மை தன்மையை அறிய வேண்டியதுதான் இவர்களுக்கு செய்யும் உரிய நன்றிக் கடனாக இருக்க முடியும்! "

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-party-behind-in-eight-way-road-verdict/articlecontent-pf366122-346308.html

டிஸ்கி:

பாமக , பிஜேபி -- அதிமுக கூட்டணியில் இருப்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கினம்.. இதுதான் சமயம் எண்டு அவயளின் 6% வாக்குகளை தமிழ்த்தேசிய வாக்குகளாக மாற்ற வேண்டும்.. 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.