• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

வாழ்வு என்றும் வசந்தங்களே

Recommended Posts

வாழ்வு என்றும் வசந்தங்களே 

 

மல்லிகை பூ வாசனையும் 
வசந்தத்தின் புன்சிரிப்பும் 
உன் கண் வரைந்த சித்திரமும் 
கால் கொலுசு சந்தங்களும் 
இன்னும் என்னை விட்டு போகவில்லை 

 

கால்நடை கொஞ்சம் தளர்ந்து 
கட்டினிலே நான் படுத்தாலும் 
உன் பூ மணம் விட்டு போகுமோடி 
முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே 

 

உன் கன்னத்தின் குழிகளிலே 
என் கவிதைகளை புதைத்தவளே 
காலம் ஒன்று இருந்தால் 
கல்அறையிலும் வாழ்வு செய்வோம் 

 

அதன் வழியால் செல்பவன்
 எவனாக இருந்தாலும் 
எழுதிவிட்டு செல்லட்டும்   
எம் கல்லறையின் நடுவினிலே 

 

வாழும் வரை காதல் செய்த 
வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் 
காதல் கிளி இரண்டு 
கண் மூடி தூங்குதென்றும் 

 

காலத்தால் அழியாத இரு 
கவிதை தோப்பு துயலுதென்றும்  
எழுதி விட்டு செல்லுங்கள் 
எவரும் எம் தூக்கத்தை கலைக்காமல்.

 

 

பா .உதயகுமார் /Oslo

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாவ் .....சூப்பர் கவிதை ..... வயதான தாத்தாக்களின் மனங்களை சும்மா அள்ளிக்கொண்டு போகும். தொடர்ந்து எழுதுங்கள் உதயகுமார்....!  👍

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

வாவ் .....சூப்பர் கவிதை ..... வயதான தாத்தாக்களின் மனங்களை சும்மா அள்ளிக்கொண்டு போகும். தொடர்ந்து எழுதுங்கள் உதயகுமார்....!  👍

நன்றி சுவி நல்ல கருத்து .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • டிரென்டிங்கில் இடம்பிடித்த 3 தமிழர்கள் ! யார் அவர்கள்? Published by R. Kalaichelvan on 2019-12-06 15:39:18   சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில்  டிரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகின்றது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.  அதில் முதல் இடத்தில் இந்தியாவின் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார். உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் சுந்தர் பிச்சை. இவரின் பொறுப்பில் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதற்கு அடுத்த நிலையில், இந்தியாவின் திருவண்ணாமலையில் பிறந்து ஆன்மிக வாழ்க்கையில் சேவை செய்வதாக கூறி வரும் பிரபல சாமியார் நித்யானந்தா உள்ளார். இவர் வித்தியாசமான முறையில் உலக டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார். ஆசிரம பெண்களை கொடுமைப்படுத்தியது, பாலியல் புகார், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் பிரபலமான நித்தியானந்தா, சில நாட்களாக கைலாசா என்ற தனி நாடு குறித்தும் அங்குள்ள முக்கிய விடயங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்களை தெரிவித்து வருகின்றார். இதையடுத்து மூன்றாவதாக, இந்தியாவின் மதுரையை பூர்வீகமாக கொண்டு சென்னையில் பொறியியலாளராக உள்ள சண்முக சுப்பிரமணியன், நிலவில் காணாமல்போன  சந்திராயன் - 2 விக்ரம் லாண்டரின் பாகங்களை நிலவின் மேற்பரப்பில்  கண்டுபிடித்ததாக நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசப்பட்டார். இவ்வாறு குறித்த 3 தமிழர்களும் இவ்வாறு சமூகவலைத்தளங்களில் டிரென்டிங் ஆகியியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70561
  • மன்னாரில் கிராமமொன்று வெள்ளநீரில் மூழ்கியது ; 30 குடும்பங்கள் இடம்பெயர்வு Published by Daya on 2019-12-06 16:32:18 மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.     வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர்  இடம்பெயர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.     குறித்த மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.     மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 168 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/70566
  • தாடி வைத்திருந்த காரணத்திற்காக வேலை கொடுக்க மறுத்த நிறுவனம் ஒன்று, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் லண்டனில் நிகழ்ந்துள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன் சேத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனமான எலிமென்ட்ஸ் பெர்சனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேர்முக தேர்விற்கு சென்றார். லண்டனில் உள்ள சொகுசு கிளாரிட்ஜ் ஹோட்டலில் பணிபுரிய வாய்ப்பு கேட்டு சென்ற அவரை தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு எடுக்க குறிப்பிட்ட நிறுவனம் மறுத்து விட்டது. இதனை அடுத்து தொடர்ந்து ராமன் சேத்தி லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஓட்டலில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, பணிக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்க கூடாது என்றோ, தாடி வைத்திருக்க கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற வாதத்தை ஏற்றது. மேலும் மத காரணங்களுக்காக ஷேவ் செய்ய முடியாத ஒரு சீக்கியரை ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நிறுவனம் அளிக்கவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். எனவே ஓட்டல் நிர்வாகம் சீக்கியரான ராம் சேதிக்கு 7,102 பவுண்ட், அதாவது இந்திய மதிப்புபடி 6 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கிய தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்போவதாக ராமன் சேத்தி கூறியுள்ளார். https://www.polimernews.com/dnews/91663/தாடி-வைத்திருந்ததால்-வேலைமறுக்கப்பட்டசீக்கியருக்கு-ரூ.6.67-லட்சம்இழப்பீடு https://www.dailymail.co.uk/news/article-7754443/Bearded-Sikh-denied-work-Claridges-wins-7-000-compensation.html
  • பிரான்ஸ் நாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்நாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டத்தால், ஏராளமான ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே வேலை பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது பட்டாசுகளை வீச, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பெப்பர் ஸ்பிரே அடித்ததுடன், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். https://www.polimernews.com/dnews/91610/பிரான்சில்-புதிய-ஓய்வூதியதிட்டத்துக்கு-எதிரானபோராட்டத்தில்-வன்முறை      
  • தமிழனை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுசொன்னால் உங்களை மாதிரி தமிழ்  நாட்டிலுள்ள பலருக்கு நகைப்பாகத்தான் இருக்கும். ஏன் என்றால் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று அடிமையாகவே இருந்து பழகிவிட்டீர்கள். அதை மாற்ற அந்த கடவுளே வந்தாலும் முடியாது.