Jump to content

தனி­யார் காணி­யைப் பௌத்த மடத்­துக்கு வழங்­கிய வவு. வடக்கு பிர­தேச செய­ல­கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது காணி­யில் தனது அனு­மதி இல்­லா­மல் பௌத்த மடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ள பெண் ஒரு­வர் தனது காணி­யைத் தனக்கு மீளத் தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பரா­ம­ரிக்­கும் பிக்கு மற்­றும் சிலர் தங்­கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்­தக் காணி­க­ளுக்கு உரிமை கோரு­கின்­றார். அந்த இரு விடு­தி­கள்

அமைக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்­கர் காணி தனக்­குச் சொந்­த­மா­னது என்­றும், அந்­தக் காணி­யைத் துப்­பு­ர­வாக்­கச் சென்­ற­போது அரு­கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர் என்­றும் அந்­தப் பெண் கூறு­கின்­றார்.
“போரால் இடம்­பெ­யர்ந்து 2006ஆம் ஆண்டு குடும்­பத்­து­டன் இந்­தி­யா­வுக்­குச் சென்­றேன்.

2017ஆம் ஆண்டு நான் மீண்­டும் நாடு திரும்­பி­னேன். எனது காணி­யைப் பார்க்­கச் சென்­ற­போது அங்கு இரு கட்­ட­டங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. நான் எனது காணி­யைத் துப்­பு­ர­வாக்க முயன்­றேன். காணிக்கு அரு­கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் அதற்­குத் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். தற்­போது எனக்கு வீட்­டுத் திட்­டம் கிடைத்­துள்­ளது. காணிப் பிரச்­சி­னை­யால் வீட்டை அமைக்க முடி­யா­துள்­ளது.

எனது காணிக்­குப் பின்­பு­ற­மாக உள்ள காணி ஒன்­றைத் தரு­கின்­றோம் என்று வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் கூறு­கின்­றார். ஆனால் அங்கு வசிக்க முடி­யாது. அது காட்­டுப் பகு­தி­யாக உள்­ளது.”- என்று அந்­தப் பெண் தெரி­வித்­தார்.
இந்த விட­யம் தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அது தொடர்­பான விசா­ரணை நேற்­று­முன்­தி­னம் வவு­னி­யா­வில் நடை­பெற்­றது.

காணிக்கு அரு­கில் உள்ள இரா­ணுவ முகா­மின் பொறுப்­ப­தி­காரி, 56ஆவது படைப்­பி­ரி­வின் மக்­கள் தொடர்­பா­டல் அதி­காரி, பிர­தேச செய­லக அலு­வ­லர் ஆகி­யோர் ஆணைக்­கு­ழு­வால் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.
எந்த அடிப்­ப­டை­யில் காணி விட­யத்­தில் நீங்­கள் தலை­யி­டு­கி­றீர்­கள்? என விசா­ரணை அதி­கா­ரி­க­ளால் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.
தாம் அந்­தப் பெண்ணை அச்­சு­றுத்­த­வில்லை என்­றும், பிக்கு ஒரு­வர் விகாரை அமைந்த காணியை பரா­ம­ரித்­துத் தர­வேண்­டும் என்று கோரி­ய­மைக்கு அமையே அதைப் பரா­ம­ரித்­தோம். காணி தொடர்­பான அதி­கா­ரங்­கள் தமக்கு இல்­லா­த­தால் இந்த விட­யத்­தில் இருந்து முற்­றாக ஒதுக்­கிக் கொள்­கின்­றோம் என்று இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­த­து­டன், அதை எழுத்து மூல­மும் தந்­த­னர் என்று மனித உரிமை ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் க.பரந்­தா­ம­னி­டம் கேட்­ட­போது, அந்­தக் காணிப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டுள்­ளது என்­றும், கட்­ட­டம் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்­துக்­குப் பின்­பு­ற­மாக அமைத்­துள்ள காணி பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பதி­ல­ளித்­தார்.

ஆனால் தனது விருப்­பத்­துக்கு மாறாக அந்­தக் காணி தரப்­பட்­டுள்­ளது என்­றும், தனது காணியே தனக்­குத் தேவை என்­றும் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு எழுத்து மூலம் வழங்­கிய முறைப்­பாட்­டில் தெரி­வித்­துள்­ளார்.
இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் கட­மை­யில் இருந்த அதி­கா­ரி­யான சட்­டத்­த­ரணி லீனஸ் வசந்­த­ரா­ஜா­வி­டம் கேட்­ட­போது-

முறைப்­பாட்­டா­ள­ரான பெண் இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­ய­வர் என்ற ரீதி­யில் நாம் ஆழ­மான கரி­சனை கொண்­டுள்­ளோம். பிர­தேச செய­ல­கமே இந்த விட­யத்­தில் சரி­யான முடிவை வழங்க வேண்­டும். பௌத்த விகாரை அமைந்­துள்ள 7 ஏக்­கர் காணி 2010ஆம் ஆண்­ட­ள­வில் வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கத்­தால் பௌத்த விகாரை அமைக்க வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்­கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்­ட­ள­வில் மீள்­கு­டி­ய­மர்­வு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் காணி­யின் உரித்­துத் தொடர்­பாக முறை­யாக ஆரா­யாது பிர­தேச செய­ல­கத்­தால் விகாரை அமைக்­கக் காணி வழங்­கப்­ப­ட­டுள்­ளது.

இந்த விட­யத்­தில் காணியை உரிமை கோரும் பெண்­ணின் சம்­ம­தத்­து­டன், அவர் விரும்­பும் தீர்வை வழங்­கு­வ­தற்­குப் பிர­தேச செய­ல­கம் முன்­வர வேண்­டும். – என்­றார்.

https://newuthayan.com/story/10/தனியார்-காணியைப்-பௌத்த.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.