யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

சம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்

Recommended Posts

சம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக் போட்டிகளின் முடிவுகள்

upfa-sports-720x450.jpg

ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நேற்று ஆரம்பமான காலிறுதி முதல் லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம்,

இங்கிலாந்தில் உள்ள டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் போட்டியில், டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணியும், மென்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர்.

இரு அணி வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால், முற்பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முற்பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது.

இதற்கமைய, போட்டியின் 78ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணி, முதல் கோலை அடித்து இரசிகர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தியது.

இந்த கோலை டோட்டன்ஹாம் அணியின் வீரரான, சன் ஹியுங் மின்அடித்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்தினார்.

இதனையடுத்து, மென்செஸ்டர் யுனைடெட் அணியால் எவ்வளவு முயற்சித்தும், பதில் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால், போட்டியின் இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணி, வெற்றிபெற்றது.

……………

இதேபோல என்பீல்ட்  விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், போர்டோ  அணியும், லிவர்பூல் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே லிவர்பூல் அணியின் ஆதிக்கமே இருந்தது.

இதற்கமைய போட்டியின் 5ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணி, தனது முதல் கோலை பதிவு செய்யதது. இந்த கோலை லிவர்பூல் அணியின் வீரரான நெபி கெய்டா அடித்தார்.

இதனையடுத்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி, 26ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை பதிவு செய்து 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்த கோலை, ரோபர்ட் ஃபைர்மின் அடித்தார்.

லிவர்பூல் அணியின் அபார ஆட்டத்தால், முற்பாதியில் லிவர்பூல் அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர் எனினும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் போட்டியின் இறுதியில், லிவர்பூல் அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

http://athavannews.com/சம்பியன்ஸ்-லீக்-காலிறுத-3/

Share this post

Link to post
Share on other sites

சம்பியன்ஸ் லீக்கில் அதிரடியாக வெற்றிகளை பெற்று பார்சிலோனா அணி முன்னேற்றம்!

15450488362142-720x440.jpg

சம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டியில் லுக் ஷாவ்வின் அதிரடி கோல் காரணமாக பார்சிலோனா அணி மன்செஸ்டர் யுனைட்டட் அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் சவாலுடன் வெற்றி கொண்டது. நேற்றைய தினம் (புதன்கிழமை) ஓல்ட் ட்ராபோட்டியில் இடம்பெற்ற முதல் லெக் போட்டியில் இந்த வெற்றி கிடைத்தது.

முதல் 12 ஆவது நிமிடத்திற்கு பிறகு உருகுவே காற்பந்தாட்ட வீரர், லுயிஸ் சுவாரெஸ் கோல் எல்லைக்கு சென்ற பந்தை திசைதிருப்பினார். இதனையடுத்து மிகவும் சவாலான முறையில் விளையாடிய பாசிலோனா அணி தனது ஒரு கோலை பதிவு செய்து மன்செஸ்டர் அணிக்கு வாய்ப்பை வழங்காத வகையில் விளையாடியது.

இதன்போது. Ole Gunnar Solskjaer முகாமைத்துவத்தின் கீழ் விளையாடும் மன்செஸ்டர் யுனைட்டட் அணி பதிலடியை வழங்குவதற்கான யுக்திகளை பயன்படுத்த முடியாத நிலையில் தோல்வியடைந்தது.

யுனைடட் அணி, பாரிஸ் சென் ஜெர்மைன் அணிக்கு எதிரான சுற்றுப்போட்டியின் பின்னர் பார்சிலோனா அணியை எதிர்கொண்டது. இந்தநிலையில், பார்சிலோனா அணி கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது சொந்த மண்ணில் விளையாடிய 30 போட்டிகளிலும் ஒரு தோல்வியையேனும் தழுவவில்லை.

அதேவேளை, யுனைடட் அணி அதற்கு சரிசமமாக நிலைத்திருக்கின்றமை இங்கு சிறப்பம்சமாக உள்ளது. இதனிடையே, நேற்றைய தினம் இடம்பெற்ற பிறிதொரு லெக் 2 போட்டியில் ஜூவென்டஸ் மற்றும் AFC அஜாக்ஸ் அணி மோதியிருந்தன.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்ததுடன், சரிக்கு நிகரான ஆட்டத்தை வௌிப்படுத்தியிருந்தன. இறுதியாக இரு அணிகளும் ஒவ்வொரு கோலை பதிவு செய்ததுடன் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதுதவிர நேற்று மேலும் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஒன்றில், ரொட்டன்ஹெம் அணி மன்செஸ்டன் யுனைடட் அணியை ஒரு கோலால் வெற்றிகொண்டதுடன், பிறிதொரு போட்டியில் லிவர் பூல் அணி போர்ட்டோ அணியை 2 கோல்களால் வெற்றி கொண்டது.

http://athavannews.com/சம்பியன்ஸ்-லீக்கில்-அதிர/

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு