• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கிருபன்

``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்!

Recommended Posts

``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்!

பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.

பிளாக் ஹோல்லின் புகைப்படம்

இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த EHT குழு. இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் ``நாம் இப்போது பார்ப்பது நமது சூரிய குடும்பத்தைவிடப்பெரியது, சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு எடை உடையது. இதைவிடப் பெரிய பிளாக் ஹோல்லை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது'' என்றார். ``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம், பிளாக் ஹோல் ஒன்றை படம்பிடித்துவிட்டோம்." என்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்டுப் பூரித்தார் இந்தத் திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன்.

இந்தத் தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த புகைப்படம் பெட்டாபைட்டுகள் (petabytes) அளவில் இருந்தது. அது கிலோபைட்டுகளுக்கு குறைக்கப்பட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது. இதில் நடுவில் இருக்கும் பிளாக் ஹோலைச் சுற்றி அடர்ந்த பிரகாசமான வாயு பார்க்கப்பட்டது. இந்த EHT திட்டத்துக்கான செலவு 60 மில்லியன் டாலர்கள். இதில் 26 மில்லியன் டாலர்களை National Science Foundation (NSF) அமைப்பு செலவழித்துள்ளது.

ஷெப்பர்ட் டோலேமேன் தொலைநோக்கிகள் பற்றி பேசுகிறார்

திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன்

ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோல் இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இவற்றின் புவிஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவரமுடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும். இப்படி சிறிதும் ஒளி இல்லாத காரணத்தால், இவற்றைப் படம் பிடிக்கமுடியாமல் இருந்தனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இன்று தொழில்நுட்பத்தின் உதவியால் அது சாத்தியமாகியுள்ளது.

https://www.vikatan.com/news/miscellaneous/154759-first-image-of-a-black-hole-is-out.html?artfrm=home_tab1

Share this post

Link to post
Share on other sites

நிலாவில் கால்வைத்த கதைபோல்த்தான் இதுவும். 

Share this post

Link to post
Share on other sites

மனித இனத்தின் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பாராட்டுக்குரியது அதேவேளை அனைவரும் விளங்கிக்கொள்வதற்காக செய்தி சரியான முறையில்  பிரசுரிக்கப்பட வேண்டும். 

கருந்துளையில் புவியீர்ப்பு (பூமியின் ஈர்ப்பு) சக்தி இருப்பதற்கான வாய்ப்பில்லை. இங்கு புவியீர்ப்பு சக்தி என்பது ஈர்ப்பு சக்தி மட்டும்தான்.

அத்துடன் சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் என்பது நீளத்தின் அளவீடாக பூமிக்கும் கருந்துளைக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கிறது. இது 5.2 கோடி (52000000 ) ஆண்டுகளில் ஒளி பயணம்செய்யும் தூரத்திற்கு சமனான தூரம். ஒளி (வெளிச்சம்) ஒரு ஆண்டில் சுமார் 9460000000000 கி.மீ பயணம் செய்யும்.  அதாவது இந்த கருந்துளை பூமியில் இருந்து 491920000000000000000 கி.மீ தூரத்தில் உள்ளது. 

வேறுவிதமாக சொல்வதாயின் இந்த கருந்துளையை பூமியிலிருந்து படம்பிடித்த கருவியில் பதிவாகிய ஒளி இந்த கருந்துளையை விட்டு சுமார் 5.2 கோடி வருடங்களுக்கு முன்னர் (பூமியை நோக்கி) புறப்பட்டிருக்கவேண்டும். இது மிக நீண்ட காலம் என்பதால் இந்த கருந்துளை இப்போதும் உள்ளதா அல்லது அதற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. 

கருந்துளைகளின் ஈர்ப்பு சக்தி ஒளியையும் கவர்ந்திழுக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அதிலிருந்து ஒளிச்சக்தி வெளியேறாது. அதனால் அவை   இருட்டாக இருப்பதனால் கரும்துளைகள் என அழைக்கப்படும். 

Edited by vanangaamudi
 • Like 3
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள கருந்துளையை துல்லியமாக படம் பிடித்தான் ஒருவன்.  சனிக்கிரகம் தன்னைப்பிடித்துவிடும் என்ற பயத்தில் இப்போதும்  எண்ணெய் எரித்துக்கொண்டிருக்கிறான் இன்னொருவன்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிலாவில் கால்வைத்த கதைபோல்த்தான் இதுவும். 

அதென்ன கதை என்று ஒருக்காச் சொல்லுங்கோவன் சுமே, கேட்கலாம்!

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, Justin said:

அதென்ன கதை என்று ஒருக்காச் சொல்லுங்கோவன் சுமே, கேட்கலாம்!

இது கேள்வி???

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, Justin said:

அதென்ன கதை என்று ஒருக்காச் சொல்லுங்கோவன் சுமே, கேட்கலாம்!

சாப்பாடு ஊட்டும் போது நிலா காட்டிய கதையைத் தான் நிலாவில் கால்வைத்த கதை என்று மாறி சொல்லிறா போல.  

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, tulpen said:

சாப்பாடு ஊட்டும் போது நிலா காட்டிய கதையைத் தான் நிலாவில் கால்வைத்த கதை என்று மாறி சொல்லிறா போல.  

சுமே என்ன சொல்ல முனைகிறார் என்று சிறிது விளங்கி விட்டதால், கீழே preemptive ஆக இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

https://spacecentre.co.uk/blog-post/know-moon-landing-really-happened/

சில காலம் முன்பு பலருடன் பேசிக் கொண்டிருக்கையில் இந்த நிலாவில் மனிதன் கால் வைத்தது உண்மையா என்ற பேச்சு வந்தது. ஒருவர் சொன்னார், "நான் ஆம்ஸ்றோங் நிலாவில் நடக்கும் ஒரு யூரியூப் வீடியோ பார்த்தேன், பின்னணியில் "கட் கட்" என்று இயக்குனர் கத்தும் சத்தம் தெளிவாகக் கேட்கிறது, சும்மா படம் காட்டி எங்களை அமெரிக்கன் காரன் பேக்காட்டியிருக்கிறாங்கள்!". சொன்னவர் இலங்கையில் விஞ்ஞான பீடத்தில் படித்தவர்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நிலவிற்கு போன கதை எம். ஜி.ஆரின் கலாட்சேபம் 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Justin said:

அதென்ன கதை என்று ஒருக்காச் சொல்லுங்கோவன் சுமே, கேட்கலாம்!

1 hour ago, Justin said:

சுமே என்ன சொல்ல முனைகிறார் என்று சிறிது விளங்கி விட்டதால், கீழே preemptive ஆக இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

https://spacecentre.co.uk/blog-post/know-moon-landing-really-happened/

சில காலம் முன்பு பலருடன் பேசிக் கொண்டிருக்கையில் இந்த நிலாவில் மனிதன் கால் வைத்தது உண்மையா என்ற பேச்சு வந்தது. ஒருவர் சொன்னார், "நான் ஆம்ஸ்றோங் நிலாவில் நடக்கும் ஒரு யூரியூப் வீடியோ பார்த்தேன், பின்னணியில் "கட் கட்" என்று இயக்குனர் கத்தும் சத்தம் தெளிவாகக் கேட்கிறது, சும்மா படம் காட்டி எங்களை அமெரிக்கன் காரன் பேக்காட்டியிருக்கிறாங்கள்!". சொன்னவர் இலங்கையில் விஞ்ஞான பீடத்தில் படித்தவர்!

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்? : நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.

சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதி;த்ததன் பின்னர் அது உண்­மையா? பொய்யா? என்ற பட்­டி­மன்றம் நடத்­தாத குறை­யாக பல விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இக்­குற்­றச்­சாட்டு இன்­றில்லை பல கால­மா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் முற்­றுப்­புள்ளி இல்­லாமல் நீண்டு செல்லும் இந்த விட­யத்தில் அண்­மையில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வித­மாக தக­வ­லொன்று வெளி­யா­கி­யுள்­ளது.

நீல் ஆம்ஸ்ட்ரோங் உண்­மையில் சந்­தி­ர­னுக்கு செல்­ல­வில்லை எனவும் அது என் கண­வ­ரினால் பட­மாக்­கப்­பட்ட திரைப்­ப­டமே என முறைந்த முன்னாள் ஹொலிவூட் இயக்­கு­ன­ரான ஸ்டேன்லி கியூப்­ரிக்கின் மனைவி தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் கூறப்­ப­டு­கி­றது.

அதா­வது முதன் முத­லாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் போது நேரடி ஒளி­ப­ரப்பு என அமெ­ரிக்கா காண்­பித்த வீடி­யோ­வா­னது ஏற்­க­னவே படப்­பி­டிப்பு தள­மொன்று அமைத்து பட­மாக்­கப்­பட்ட காட்சி எனவும் அதில் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

விஞ்­ஞானப் புனை­க­தை­களில் அதிக ஆர்வம் கொண்ட ஹொலிவூட் திரைப்­ப­டத்­துறை கலை­ஞர்கள் குறித்த படப்­பி­டிப்பை அமெ­ரிக்க படைகள் மட்டும் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சில நாட்­க­ளாக செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட செட் ஒன்றில் வைத்து பட­மாக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் ஏமாற்­றிய அந்த நிலவில் பதிக்கும் காட்­சியில் உண்மைத் தன்மை இல்லை என ஏற்­க­னவே அமெ­ரிக்க விஞ்­ஞானி ரால்ப் ரெனி, விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர் பில் கேசிங் உள்­ளிட்ட உலகின் பல அறி­வி­ய­லா­ளர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் கியூப்­ரிக்கின் மனை­வியின் தகவல் மேலும் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

உல­கி­லேயே விண்­வெளி ஆராய்ச்­சி­க­ளுக்கு வித்­திட்டு முன்­னோ­க­ளாக திகழ்ந்­ததும் நில­வினைப் பற்­றிய ஆராய்ச்­சி­களை முதன் முதலில் ஆரம்­பித்­ததும் சோவியத் யூனி­யன்தான். அவர்கள் 1930ஆம் அண்­டி­லேயே நிலவின் மீதான ஆரா­ய்ச்­சி­களை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும் நில­விற்கு விண்­க­லத்­தினை முதன் முதலில் ஆளில்லா விண்­க­லத்­தினை அனுப்­பி­ய­துடன் இரு­ப­துக்கும் மேற்­பட்ட ஆளில்லா விண்­க­லங்­களை சந்­தி­ர­னுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.

இதன் உச்­சக்­கட்­ட­மாக 1957ஆம் ஆண்டு "லைகா" எனும் நாயை வைத்து சந்­தி­ர­னுக்கு விண்­க­ல­மொன்­றினை அனுப்­பினர். இதுவே உயி­ரி­ன­மொன்று சந்­தி­ர­னுக்கு சென்ற முதல் சந்­தர்ப்­ப­மாகும். இவர்கள் அனுப்­பிய "லைகா" நாயா­னது எது­வித ஆபத்­து­மின்றி புவிக்கு திரும்­பி­ய­த­னை­ய­டுத்து உல­கமே சோவியத் யூனியன் பக்கம் தலை நிமிர்ந்து பார்த்­தது. இந்த வெற்­றி­களைத் தொடர்ந்து மனி­த­னையும் சந்­தி­ர­னுக்கு அனுப்ப முடிவு செய்­தது.

இதற்­காக சோவியத் யூனி­யனைச் சேர்ந்த மூன்று பேரை சோதனை முயற்­சி­யாக நில­விற்கு அனுப்பும் முயற்­சியின் போது அவர்­களை ஏற்­றிச்­சென்ற ரொக்கெட் புறப்­பட்ட சில மணி நேரத்­தி­லேயே வெடித்துச் சித­றி­யது. அதில் பய­ணித்த மூவரும் உயி­ரி­ழந்­தனர். இதனால் மூன்று உயிர்­களை காவு­கொண்ட வருத்­தத்தில் சோவியத் யூனியன் மனித உரி­மைக்கு எதி­ராக செயற்­பட்­ட­தாக கூறி நில­விற்கு மனி­தர்­களை அனுப்பும் சோதனை முயற்­சி­யி­லி­ருந்து பின் வாங்­கி­யது.

இந்­நி­லையில் சோவியத் யூனி­ய­னுடன் பனிப் போரி­லி­ருந்த அமெ­ரிக்கா சந்­திரன் தொடர்­பான ஆராய்ச்­சியில் முன்­னிலை பெற முடிவு செய்து நில­வுக்கு மனி­தர்­களை அனுப்பும் திட்­டத்­தினை துரிப்­ப­டுத்­தி­யது. பின்னர் நீல் ஆம்ஸ்ட்­ரோங்கை விண்ணில் நிலவை நோக்கி அனுப்பி மண்ணில் மைந்­த­னாக பெய­ரெ­டுத்­தது அமெ­ரிக்கா.

ஆனால் அந்த பெய­ருக்கு தகுதி உடை­ய­து­தானா அமெ­ரிக்கா என கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது நீல் ஆம்ஸ்ட்­ரோங்கின் நிலவை நோக்­கிய அமெ­ரிக்­காவின் பயணம். அந்த பய­ணத்தை அன்று 1969 ஜுலை 16ஆம் திகதி நேர­டி­யாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் காட்­சியை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா. ஆனால் அந்த காட்சி ஒரு திரைப்­ப­ட­மாக்க உரு­வாக்­கிய விஞ்­ஞானப் புனைக்­கதை போன்­றது என பலரும் கூறு­கி­றார்கள்.

ஏன் அமெ­ரிக்­காவின் வீடியோ பதிவு உண்மை இல்லை என்ற பல­மான கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. வடி­வே­லுவின் பாணியில் பேய் இருக்கா? இல்­லையா? பார்த்­தி­ருங்­காய்ங்­களா? பார்க்­கல்­லையா? என்­ற­வா­றானா கேள்­விகள், நீல் ஆம்ஸ்ட்ரோங் விட­யத்­திலும் ஏற்­படக் காரணம் என்ன? அப்­படி என்ன விட­யங்கள் தவ­றான விதத்தில், அந்த நிலவில் கால் பதித்த வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளது எனக் அறி­வி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றார்கள் என பார்ப்போம்.

#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?

#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?

#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?

#அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?

#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல் ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான தர்க்க ரீதி­யான வாதங்­களும் அறி­வியல் ரீதி­யான வாதங்­களும் அறி­வி­ய­லா­ளர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த நிகழ்வு நடை­பெற்று சுமார் 44 ஆண்டுகள் நிறைவு பெறும் தறுவாயிலும் அதன் உண்மைத் தன்மை குறித்த சர்ச்சை கள் நிலவுவது துரதிர்ஷ்டமே.

ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவின் கால் பதித்த நிகழ்வு தொடர்பில் நாசாவிற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நாசா தவிர்த்து வந்ததாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உண்டு.

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்புகின்ற இவ்விடயத்திற்கு உண்மையில் யார் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்தார் என்ற விடையுடன் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதுவரை சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பதுதான் பதில் .https://www.youtube.com/watch?v=FBGAnxcIxtc

19678116_6070549047573_16285342773165424
youtube.com
 
Fake NASA Moon Landing..is it true..
 
இதை நான் சொல்லவில்லை.  http://aachariyam.blogspot.com இலிருந்து எடுத்துக் போட்டது
பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியிலும் இதுபற்றிய விவரணப் படம் ஒன்று பார்த்தேன். 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites

சுமேரியரின் வழித்தோன்றல்கள்தான் தமிழர் என்ற கதை போல ஆம்ஸ்ரோங்கும் நிலவுக்குப் போகவில்லை என்று புனைவதற்கு பலர் உள்ளனர். இப்படியான சதிக்கோட்பாடுள்ளவர்களுடன் (conspiracy theorist ) விவாதிப்பதே வெட்டிவேலை! ஆனால் அப்படியே விட்டாலும் ஆபத்துத்தான். இலகுவில் வரலாற்றையே மாற்றிவிடுவார்கள்!

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதை நான் சொல்லவில்லை.  பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியிலும் இதுபற்றிய விவரணப் படம் ஒன்று பார்த்தேன். 

சுமே, இந்த சந்தேகங்களை எழுப்பியிருப்பது அறிவியலாளர்கள் என்பது மாதிரி மேலே எழுதியிருக்கிறது! யார் அந்த அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், விண்ணியலாளர்கள் என்று தேடிப் பார்த்து எனக்குச் சொல்வீர்களா?

யூடியூப்பில் இது போல ஆயிரக்கணக்கான குப்பைகள் கிடக்கின்றன! தகவல்களின் தரக்கடுப்பாடு என்பது பற்றி எழுத்தாளரான உங்களுக்குத் தெரியாதா?

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, கிருபன் said:

சுமேரியரின் வழித்தோன்றல்கள்தான் தமிழர் என்ற கதை போல ஆம்ஸ்ரோங்கும் நிலவுக்குப் போகவில்லை என்று புனைவதற்கு பலர் உள்ளனர். இப்படியான சதிக்கோட்பாடுள்ளவர்களுடன் (conspiracy theorist ) விவாதிப்பதே வெட்டிவேலை! ஆனால் அப்படியே விட்டாலும் ஆபத்துத்தான். இலகுவில் வரலாற்றையே மாற்றிவிடுவார்கள்!

அறிவியற்கதைகள் பலவற்றுக்கு கூட ஆதாரங்கள் அற்று நாம் நம்பிக்கொண்டுதானே இருக்கிறோம். எமக்கு வேறு வழியே இல்லை.

1 minute ago, Justin said:

சுமே, இந்த சந்தேகங்களை எழுப்பியிருப்பது அறிவியலாளர்கள் என்பது மாதிரி மேலே எழுதியிருக்கிறது! யார் அந்த அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், விண்ணியலாளர்கள் என்று தேடிப் பார்த்து எனக்குச் சொல்வீர்களா?

யூடியூப்பில் இது போல ஆயிரக்கணக்கான குப்பைகள் கிடக்கின்றன! தகவல்களின் தரக்கடுப்பாடு என்பது பற்றி எழுத்தாளரான உங்களுக்குத் தெரியாதா?

இவற்றைப் பொய் என்று எப்படி நிரூபிக்க முடியாது அதுபோல் தான் விஞ்ஞானிகள் கூறுவதும் கூட. எல்லாவற்றையும் நான் பொய் என்று கூறவில்லை. ஆனால் எல்லாவற்றையும் நம்பவும் மனம் இடங்கொடுக்கவில்லை. அதற்கான அறிவு எனக்கு இல்லை என்று கூறுவீர்கள். அவ்வளவுதான்.

மருத்துவரான உங்களுக்கே தெரிந்திருக்கும் தானே மருந்துகளும் நோய்களும் யாரால் இக்காலத்தில் வியாபாரமாக்கப்படுகின்றன என்று. யார் எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கிறார்கள் என்பதும்.

அதுபோல்தான் இதுவும்.

Share this post

Link to post
Share on other sites

மனிதன் எப்போது தோன்றினான் என்பதைக்கூட யாராலும் இதுவரை அடித்துக் கூற முடியவில்லை.

Share this post

Link to post
Share on other sites
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அறிவியற்கதைகள் பலவற்றுக்கு கூட ஆதாரங்கள் அற்று நாம் நம்பிக்கொண்டுதானே இருக்கிறோம். எமக்கு வேறு வழியே இல்லை.

ஆதாரங்களை ஏற்றுக்கொண்டால் காலங்காலமாக நம்பியவை எல்லாம் தவிடுபொடியாகிவிடும் என்றால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். 

உலகம் தட்டையானது. பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பியவர்களும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருந்தார்கள். 

—-

“பிரபஞ்சத்தின் மையம் பூமியே -ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது” என்பது அக்காலத்திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவியலாளரும் அதனையே கூறியிருந்தார். “பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன்றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. கலிலியோ கோபர்னிக்கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். ஆனால் கலிலியோவின் இந்த கூற்றை சக விஞ்ஞானிகளும் கூட ஏற்க மறுத்தனர்.

கோபர்னிக்கஸின் கருத்துக்களை ஆதரித்து கலிலியோ எழுதிய ‘DIALOGO’ என்ற புத்தகம் மிகப்பிரபலமா னது. பைபிளில் கூறப்பட்டதற்கு மாறாக கலிலியோவின் கருத்துக்கள் இருந்ததால் போப் முன் ஆஜராகி விசாரணையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. கலிலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. அவரது வயோதிக காலத்தில் ‘சர்ச்சைகளில் சிக்காத’ இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட அவர் அனுமதிக்கப்பட்டார். 1638- இல் தன் இரு கண்களும் தெரியாமல் போன நிலைமையிலும் பெண்டுலத்தைப் பயன் படுத்தி கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் கலிலியோ. 1642- இல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

1992- இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து -கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளியிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அறிவியற்கதைகள் பலவற்றுக்கு கூட ஆதாரங்கள் அற்று நாம் நம்பிக்கொண்டுதானே இருக்கிறோம். எமக்கு வேறு வழியே இல்லை.

சுமே, எந்த அறிவியற் கருத்துக்கு ஆதாரம் இல்லை? மேலே நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் இணையக் குப்பையில் கண்டெடுத்த "அறிவியல் கட்டுரை"யே பொய்யால் நிரம்பிக் கிடக்கிறது! இதைக் கூட உண்மையா என்று சோதிக்காமல் இங்கே இணைத்து விட்டு, அறிவியலுக்கு ஆதாரம் இல்லை என்கிறீர்கள்! பில் கேசிங் ஆங்கிலத்தில் பி.ஏ முடித்த ஒரு எழுத்தாளர், விஞ்ஞானியோ விண்ணியலாளரோ அல்ல! அவர் தான் இந்த நிலவில் மனிதன் கால் பதித்தது பொய் என்ற சதிக் கதையையே ஆரம்பித்தவர்! சில காலம் ஒரு ரொக்கட் கம்பனியில் எழுத்தாளராக இருந்த அவருக்கு விண்ணியலாளர் பட்டமும் கொடுத்து உங்கள் காதில் சுத்தும் பூவை இங்கே நீங்கள் எல்லாருக்கும் சுத்த முயல்வது வேடிக்கை!

ஒரு தகவலைத் தேடி வாசித்து உறுதி செய்ய இந்த இணைய யுகத்தில் எவ்வளவோ வழிகள் இருக்க, எமக்கு வேறு வழியே இல்லை என்பது தேடலற்ற சோம்பேறித்தனம்!

இதில் நான் உங்கள் எல்லாருடனும் மல்லுக்கட்ட வரவில்லை. ஏனெனில் அதற்கான அறிவு என்னிடம் இல்லை. ஆனால் என் நம்பிக்கையையும் என் எண்ணத்தையும் கூறலாம் தானே.😀

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிதன் எப்போது தோன்றினான் என்பதைக்கூட யாராலும் இதுவரை அடித்துக் கூற முடியவில்லை.

எந்த மனித "இனம்" தோன்றின காலத்தைக் கேட்கிறீர்கள்? கண்டெடுக்கப் பட்ட தொல்லியல் தடயங்களின் படி, ஹோமோ ஹபிலிஸ் 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக தகவல்! இதை "அடித்து" சொல்ல முடியாது! இந்த தகவல் அடிப்படையில் இந்த முடிவு என்ற ரீதியில் தான் சொல்ல முடியும்! அது தான் விஞ்ஞான முறை!

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிதன் எப்போது தோன்றினான் என்பதைக்கூட யாராலும் இதுவரை அடித்துக் கூற முடியவில்லை.

அதற்கு தொப்புள் (கொப்பூழ்??) இல்லாத பெண் எப்போது தோன்றினார் என்று கண்டுபிடிக்கவேண்டும். அது கடினம் என்பதால் ஏடன் தோட்டத்தில் என்று இலகுவாக கதையை முடித்துவிட்டனர்!

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் நான் உங்கள் எல்லாருடனும் மல்லுக்கட்ட வரவில்லை. ஏனெனில் அதற்கான அறிவு என்னிடம் இல்லை. ஆனால் என் நம்பிக்கையையும் என் எண்ணத்தையும் கூறலாம் தானே.😀

எண்ணம் அரசியலில் கொள்கையில் இருக்கலாம்! அறிவியல் எண்ணத்தினாலா கட்டப் படுகிறது? அளவீடுகள், பௌதீக தகவல்கள் என்று யாரும் சோதித்துக் கொள்ளக் கூடிய விதத்தில் தான் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன! எழுத்தாளரான நீங்களே போலித் தகவல்களின் தரத்தைப் பார்க்காமல் உங்கள் எண்ணங்களைக் கட்டமைக்கப் பாவித்தால், மற்றையரின் நிலை என்னவென்று யோசித்துப் பாருங்கள்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Justin said:

எந்த மனித "இனம்" தோன்றின காலத்தைக் கேட்கிறீர்கள்? கண்டெடுக்கப் பட்ட தொல்லியல் தடயங்களின் படி, ஹோமோ ஹபிலிஸ் 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக தகவல்! இதை "அடித்து" சொல்ல முடியாது! இந்த தகவல் அடிப்படையில் இந்த முடிவு என்ற ரீதியில் தான் சொல்ல முடியும்! அது தான் விஞ்ஞான முறை!

அறிவற்ற பலரால் நிறைந்தது இவ் உலகம். அறிவுள்ள சிலரால் உருவாக்கப்படும் கற்பிதங்களுக்கு மறுப்பேதும் சொல்லாது பிரமிப்போடு ஏற்றுகொள்ளுவதே உலகத்து நியதி. ஏனெனில் மற்றவர்களால் நிரூபிக்க முடியாமை.

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் நான் உங்கள் எல்லாருடனும் மல்லுக்கட்ட வரவில்லை. ஏனெனில் அதற்கான அறிவு என்னிடம் இல்லை. ஆனால் என் நம்பிக்கையையும் என் எண்ணத்தையும் கூறலாம் தானே.😀

தாராளமாக உங்கள் எண்ணங்களைக் கூறலாம். கருத்தாடல் மூலம்தானே தெளிவு பிறக்கும். அதனால்தானே அந்தக் காலத்தில் அரசர்கள் தர்க்கங்களை ஊக்குவித்தார்கள். இப்போது யாழ் களம் ஊக்குவிக்கின்றது😁

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

அதற்கு தொப்புள் (கொப்பூழ்??) இல்லாத பெண் எப்போது தோன்றினார் என்று கண்டுபிடிக்கவேண்டும். அது கடினம் என்பதால் ஏடன் தோட்டத்தில் என்று இலகுவாக கதையை முடித்துவிட்டனர்!

ஆனால் அந்தக் கதையின் ஆரம்பத்துக்கு ஆண்டுக்கு கணக்கைக் கிட்டத்தட்டவாவது போட்டுக்கொள்ளலாம்

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அறிவற்ற பலரால் நிறைந்தது இவ் உலகம். அறிவுள்ள சிலரால் உருவாக்கப்படும் கற்பிதங்களுக்கு மறுப்பேதும் சொல்லாது பிரமிப்போடு ஏற்றுகொள்ளுவதே உலகத்து நியதி. ஏனெனில் மற்றவர்களால் நிரூபிக்க முடியாமை.

ஏன் பிரமிக்க வேண்டும்? ஒரு அறிவியல் உண்மைக்கு அடிப்படையான தரவுகள் என்னவென்று தேடிப் பாருங்கள், பின்னர் பிரமிப்பதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள்! ஆனால், உங்களைத் தேடி வந்து இன்பொக்சில் அல்லது வட்சப்பில் இருக்கும் தகவல் மட்டுமே நம்பத் தகுந்தது என்று நினைக்காமல் துறைசார் மூலங்களைத் தேடி அறியுங்கள்! நூலகங்கள், அவை இணையத்தில் இருந்தாலும் கல் கட்டிடத்தில் இருந்தாலும், இன்னும் நம்பிகையான மூலங்களாக இருக்கின்றன! 

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, கிருபன் said:

ஆதாரங்களை ஏற்றுக்கொண்டால் காலங்காலமாக நம்பியவை எல்லாம் தவிடுபொடியாகிவிடும் என்றால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். 

உலகம் தட்டையானது. பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பியவர்களும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருந்தார்கள். 

கிருபன்,
இன்னமும் பூமி தட்டையானது, பூமி சுத்துவதில்லை என்று ஆதரிக்கும்/நம்பும் குழுமங்கள் இன்னமும் activeஆக இருக்கிறது. இவர்கள் சில தர்க்கரீதியான கருத்துக்களை வைத்து பூமி தட்டையானது/சுத்துவதில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அமெரிக்கா/ரஷ்யா  போன்ற  அரசுகள் தங்கள் தேவைக்காக உருவாகிக்கியவையே உருண்டையான பூமி  என்பது இவர்களின் கொள்கை. இதற்கு அவரகள் ஆதாரமாக காட்டும் சில விடயங்கள்  சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் 

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.